Tamil Star |
- செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!!!
- கடைசி ஒருநாள் போட்டி மாற்று வீரர்களுக்கு வாய்ப்பு?
- ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் ஜோகோவிச்!
- இந்திய கிளையால் ஆபத்து இல்லை: அமெரிக்கா
- நபிகள் நாயகத்தின் கல்லறையை இடிக்க சவுதி அரேபிய அரசு திட்டம்?
- சவுதியில் தங்கையை கத்தியால் உரித்த 5வயது அண்ணனின் அறியாச் செயல்!
- ரணில் விக்ரமசிங்க பூஜை வழிபாடுகளுக்காக இந்தியா விஜயம்: வடக்கு தெற்கு மக்களுக்கிடையில் நட்புறவு ஏற்படுத்தப்படவில்லை!
- இந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டுமாயின் ஆளுனரின் அனுமதி அவசியம்!
| செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!!! Posted: 05 Sep 2014 05:32 AM PDT
உடலிலேயே செரிமான மண்டலம் மிகவும் முக்கியமான உறுப்பு. செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், உடலில் உள்ள மற்ற உறுப்புகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சீராக இயங்கும். அதிலும் உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்க வேண்டுமானால், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடாதீங்க... புற்றுநோய் சீக்கிரம் வந்துடும்... அதற்கு செரிமான மண்டலத்திற்கு கஷ்டத்தைக் கொடுக்கும் அளவிலான உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி சேர்த்து வந்தால், ஆபத்தான நோய்களான புற்றுநோய், நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். மேலும் செரிமான மண்டலமானது சுத்தமாக இருந்தால், அவை மூளை, பாலுறுப்புகள் மற்றும் இதர சுரப்பிகளை ஆரோக்கியமாக செயல்பட உதவும். எளிதில் செரிமானம் அடையாமல் தொந்தரவு கொடுக்கும் உணவுகள்!!! தக்காளியை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அதில் உள்ள லைகோபைன் செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் தினமும் 2 கேரட்டை உட்கொண்டு வந்தால், அவை வாழ்நாளில் 10 வருடத்தை அதிகரிக்கும். எனவே இதனை உட்கொண்டு வாழ்நாளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் இவை செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். தயிரில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் இருப்பதால், அதனை அன்றாடம் உட்கொண்டு வந்தால், வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்து, செரிமானம் சீராக நடைபெறும். தினமும் இளநீர் குடித்து வந்தால், உடல் வெப்பமானது தணியும். மேலும் இவை குடல் மற்றும் வயிற்றை திறம்பட செயல்படத் தூண்டும். தினமும் நட்ஸ் சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலமானது சீராக செயல்படும். இஞ்சியின் அற்புதத்தைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. எனவே முடிந்த அளவில் தினமும் உணவில் இஞ்சியை தவறாமல் சேர்த்து வாருங்கள். உங்கள் செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். பூண்டும் ஒரு அட்டகாசமான செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருள். அதிலும் இதில் அல்லிசின் என்னும் பொருள் இருப்பதால், இவை நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும் அதிகரிக்கும். சர்க்கரைவள்ளிக் கிழங்கிலும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே இவற்றை உட்கொண்டு வந்தாலும், செரிமான மண்டலம் சுத்தமாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் செயல்படும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கடைசி ஒருநாள் போட்டி மாற்று வீரர்களுக்கு வாய்ப்பு? Posted: 05 Sep 2014 05:02 AM PDT
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்ட நிலையில், இன்று நடைபெறும் சம்பிரதாயமான கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் மாற்று வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக ரத்தான நிலையில், அடுத்த 3 போட்டிகளிலும் அபாரமாக வென்ற இந்தியா 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டித் தொடரை வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணி, தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் உள்ளது. லீட்ஸ், ஹெடிங்லி மைதானத்தில் இன்று மாலை 3.00 மணிக்கு தொடங்கும் 5வது ஒருநாள் போட்டியில், நடப்பு தொடரில் இதுவரை களமிறங்காத கரண் ஷர்மா, சஞ்சு சாம்சன், ஸ்டூவர்ட் பின்னி, உமேஷ் யாதவ், முரளி விஜய் ஆகியோருக்கு வாய்ப்பு அளிப்பது பற்றி அணி நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதே சமயம், உலக கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் சொந்த மண்ணில் மோசமான தோல்வியை சந்தித்துள்ள இங்கிலாந்து அணி, இந்த போட்டியில் ஆறுதல் வெற்றிக்காக போராடும் உறுதியுடன் களமிறங்குகிறது. இந்தியா: டோனி (கேப்டன்), ஷிகர் தவான், முரளி விஜய், விராத் கோஹ்லி, அஜிங்க்யா ரகானே, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, சஞ்சு சாம்சன், ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, கரண் ஷர்மா, மோகித் ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, தவால் குல்கர்னி, புவனேஷ்வர் குமார். இங்கிலாந்து: அலஸ்டர் குக் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், கேரி பேலன்ஸ், இயான் பெல், ஜோஸ் பட்லர், ஸ்டீவன் பின், ஹாரி கர்னி, ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், இயான் மார்கன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் டிரெட்வெல், கிறிஸ் வோக்ஸ்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் ஜோகோவிச்! Posted: 05 Sep 2014 04:50 AM PDT
யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) தகுதி பெற்றார். கால் இறுதியில் இங்கிலாந்தின் ஆண்டி மர்ரேவுடன் (8வது ரேங்க்) நேற்று மோதிய ஜோகோவிச் 7-6 (7-1) என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த செட்டில் கடுமையாகப் போராடிய மர்ரே 7-6 (7-1) என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.மூன்றாவது மற்றும் நான்காவது செட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 7-6 (7-1), 6-7 (1-7), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். வாவ்ரின்கா ஏமாற்றம்: மற்றொரு கால் இறுதியில் சென்னை ஓபன் சாம்பியன் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா (சுவிஸ்), ஜப்பானின் கெய் நிஷிகோரியை எதிர்கொண்டார். நான்கு மணி, 15 நிமிட கடும் போராட்டமாக அமைந்த இப்போட்டியில் நிஷிகோரி 3-6, 7-5, 7-6 (9-7), 6-7 (5-7), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் நம்பர் 1 வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-2 என்ற நேர் செட்களில் இத்தாலியின் பிளாவியா பென்னட்டாவை எளிதில் வீழ்த்தினார். மற்றொரு கால் இறுதியில் முன்னணி வீராங்கனை விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்) 4-6, 2-6 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் எகடரினா மகரோவாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். கலப்பு இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா - புரூனோ சோரஸ் (பிரேசில்) ஜோடி 7-5, 4-6, 10-7 என்ற செட் கணக்கில் யுங் ஜன் சான் (தைபே) - ராஸ் ஹட்சின்ஸ் (இங்கிலாந்து) ஜோடியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்திய கிளையால் ஆபத்து இல்லை: அமெரிக்கா Posted: 05 Sep 2014 04:25 AM PDT
அல்கொய்தா தீவிரவாத இயக்கம் இந்தியாவில் தனது கிளையை தொடங்கினாலும்கூட, அமெரிக்காவுக்கு அதனால் பாதிப்பு இல்லை என்று அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் கைட்லின் ஹைடன் தெரிவித்தார். அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவராக பதவி வகிப்பவர் அய்மான் அல் ஜவாஹிரி (வயது 63). இவர், அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின், இந்திய கிளை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் இந்திய துணைக்கண்டத்தில் காயிதத் அல் - ஜிஹாத் என்று அல் கொய்தா அழைக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். இந் நிலையில், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் கைட்லின் ஹைடன் கூறுகையில், அல்கொய்தாவின் இந்த அறிவிப்பின் மூலம் அவர்கள் புதிய சக்தியை பெற்றுள்ளதற்கான அறிகுறியாக நாங்கள் கருதவில்லை. அந்த பகுதிகளில் அவர்கள் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அல் கொய்தாவை அழித்துகட்டுவதில் அமெரிக்கா தொடர்ந்து உறுதியாக உள்ளது. எனவே மீண்டும் அமெரிக்க மக்களுக்கு அந்த அமைப்பு அச்சுறுத்தலாக அமையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நபிகள் நாயகத்தின் கல்லறையை இடிக்க சவுதி அரேபிய அரசு திட்டம்? Posted: 05 Sep 2014 04:13 AM PDT
மதினாவில் உள்ள நபிகள் நாயகத்தின் கல்லறையை இடித்துவிட்டு அவரது எலும்புகளை யாருக்கும் தெரியாத இடத்தில் புதைக்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த இன்டிபென்டன்ட் என்ற செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மதினாவில் இருக்கும் அல் மஸ்ஜித் அல் நவாபி பள்ளிவாசலில் நபிகள் நாயகத்தின் கல்லறை உள்ளது. இந்த கல்லறையை இடித்துவிட்டு நபிகள் நாயகத்தின் எலும்புகளை எடுத்துச் சென்று யாருக்கும் தெரியாத இடத்தில் புதைக்க சவுதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த இன்டிபென்டன்ட் என்ற செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. நபிகள் நாயகத்தின் கல்லறையை இடிப்பது குறித்த 61 பக்க ஆவணம் அல் மஸ்ஜித் அல் நவாபி பள்ளிவாசல் மேற்பார்வையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். தான் இறந்த பிறகு தன்னை புதைக்கும் இடத்தில் கல்லறை எதுவும் கட்டக் கூடாது, யாரும் அங்கு வணங்கக் கூடாது என்று நபிகள் நாயகமே கூறியுள்ளார். இது வதந்தியாகக் கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தியை சவுதி அரசு ஒப்புக் கொள்ளவும் இல்லை மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சவுதியில் தங்கையை கத்தியால் உரித்த 5வயது அண்ணனின் அறியாச் செயல்! Posted: 05 Sep 2014 04:00 AM PDT
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் வசித்து வருபவர் அப்துல்லா இவருக்கு ஐந்து வயதில் ஒரு மகனும் ஒன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளனர். தனது வீட்டிற்கு உறவினர்கள் விருந்துக்கு வரவே அவர்களுக்கு சிறப்பான விருந்து படைத்து உபசரிப்பதற்காக ஆடுகளை அறுத்து உரித்து பதனிடும் அந்த இடத்திற்கு இறச்சி வாங்க செல்கிறார். உடன் தனது ஐந்து வயது மகனையும் அழைத்து செல்கிறார் அங்கு சென்று தமக்கு தேவையான இறச்சியை தயார் செய்ய சொல்லி விட்டு அங்கேயே காத்திருக்கிறார். இடைபட்ட நேரத்தில் அங்கு ஆடுகள் அறுக்க படுவதையும் அதன் தோல்கள் உரிக்க படுவதையும் வெட்ட படுவதையும் கொத்த படுவதையும் அந்து ஐந்து வயது சிறுவன் ரசித்து பார்க்கிறான். அங்கு நடை பெற்ற காட்சிகள் அவனது உள்ளத்தில் பதிந்த நிலையில் இல்லத்திற்கு வருகிறான். அங்கு தனிமையில் இருக்கும் தனது இளைய சகோதரனை பார்த்ததும் கசாப் கடையில் கண்ட காட்சியை நேரடியாக நாமே செய்து பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு சமையல் அறைக்கு சென்று அங்கு இருந்த கத்தியை எடுத்து வந்து ஒன்றும் அறியா அந்த ஒன்றரை வயது பாலகனின் நெஞ்சிலும் முதுகிலும் குத்தி அந்த குழந்தையின் தோலை உரிக்க முயன்றுள்ளான். திடீர் என்று அவனின் தந்தை அங்கு வரவே அங்கு நடக்கும் நிகழ்வை கண்டு அதிர்ச்சி அடைந்து அந்த ஒன்றரை வயது சிறுவனை அள்ளி கொண்டு மருத்துவ மனை விரைந்தார் மருத்துவ மனையில் நீண்ட போராட்டத்திர்கு பிறகு அந்த குழந்தை அபாய கட்டத்தை கடந்து இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மயிரிழையில் உயிர் தப்பிய குழந்தையின் படத்தை தான் நீங்கள் பார்க்கின்றீர்கள் இதில் நமக்கு பல படிப்பினைகளும் பாடங்களும் உள்ளன. குறிப்பாக குழந்தைகளை தனியாக விடுவதை தவிர்ப்பதோடு குழந்தைகளின் மீது எப்போதும் பெற்றோர்களின் கண்காணிப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் சிறு குழந்தைகளின் மனங்களில் முரட்டு தனங்களையும் வெறி தனங்களையும் வளர்க்கும் காட்சிகளை காண்பதில் இருந்து அவர்களை விலக்கி வைக்க வேண்டும் என்பதையும் இந்த நிகழ்வு நமக்கு கற்று தருகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 05 Sep 2014 03:50 AM PDT
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பூஜை வழிபாடுகளுக்காக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். நேற்று முன்தினம் அவசரமாக ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்ததாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்ரமசிங்கவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதனும் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். விசேட பூஜை வழிபாடு ஒன்றிற்காக ரணில் விக்ரமசிங்க இந்தியா விஜயம் செய்துள்ளதாகவும்ääநேற்றிரவு நாடு திரும்பத் திட்டமிட்டிருந்ததாகவும் சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு தெற்கு மக்களுக்கு இடையில் மெய்யான நட்புறவு ஏற்படுத்தப்படவில்லை – ஐ.தே.க வடக்கு தெற்கு மக்களுக்கு இடையில் மெய்யான நட்புறவு இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற கூட்மொன்றில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மக்கள் தெற்கு மக்களுடன் இன்னமும் கைகோர்த்துக் கொள்ளவில்லை. இரு தரப்பினருக்கு இடையில் மெய்யான நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் வெளிநாடுகளுக்கு வழங்கிய வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையே ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்தக் காரணமாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு சர்வதேச சமூகம் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வர விரும்புவதில்லை, சட்டம் ஒழுங்கு நிலைமையே இதற்கான காரணம். முதலீட்டாளர்களின் சொத்துக்களை பாதுகாக்க சுயாதீன நீதிமன்றக் கட்டமைப்பு ஒன்றின் அவசியம் எழுந்துள்ளது. நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது. நீதியின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் ஊழல் மோசடிகள் பற்றி ஆளும் கட்சியின் அமைச்சர்களே பகிரங்க விமர்சனங்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர். சிலர் அராசங்கத்தின் ஊழல் மோசடிகள் குறித்து நூல் வெளியிடுகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதில்லை. ஏனெனில், பேசுவதற்கு மட்டுமே நாடாளுமன்றம் செல்ல வேண்டியுள்ளது. எந்தவொரு நாடாளுமன்றக் குழுவிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கசள் உள்வாங்கப்படுவதில்லை. ஆளும் கட்சிக்கு ஆதரவானர்கள் எந்தக் குற்றம் செய்தாலும் நீதியின் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டுமாயின் ஆளுனரின் அனுமதி அவசியம்! Posted: 05 Sep 2014 03:46 AM PDT
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், இந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டுமாயின் அவர், வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என அரசாங்கப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளும் போது உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். எந்தவொரு அதிகாரியும் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் போது அவரை விடவும் உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். அனுமதியின்றி வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு எதிராக எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என அமைச்சர் கெஹலிய தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு அமைய வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்படுமா என செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எனினும், விக்னேஸ்வரனின் இந்திய விஜயத்திற்கு அரசாங்கம் அனுமதியளிக்குமா இல்லையா என்பது பற்றி கெஹலிய எதனையும் குறிப்பிடவில்லை.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |








