Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இன்று திருமண நாளைக் கொண்டாடும் திரு ராஜசேகரன் அர்ச்சனா தம்பதிகளை வாழ்த்தலாம் வாங்க

Posted: 04 Sep 2014 02:26 PM PDT

இன்று திருமண நாளைக் கொண்டாடும் ஈகரையின் தலைமை நடத்துனர் திரு ராஜசேகரன், அர்ச்சனா தம்பதிகள் வாழ்வில் அனைத்துச் செல்வங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்

4000 மதிப்பீடுகள் பெற்ற நம் ஈகரை சமையல் அரசி கிருஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாங்க

Posted: 04 Sep 2014 02:23 PM PDT



வாழ்த்துக்கள் அம்மா.. இன்னும் இன்னும் பதியுங்கள்.. உங்களால் ஈகரை சிறக்கட்டும்.

நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி?

Posted: 04 Sep 2014 12:07 PM PDT

செப்டம்பர் 5 - டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர் விருது) தரப்படும். அது ஒரு மெல்லிய நகைச்சுவை. அப்போதும் எப்போதும் ஆசிரியர்களுக்கிடையில் "நல்லாசிரியர் விருது" பற்றி கேலியான பேச்சு நிகழும். அப்போதெல்லாம் ஓர் உரையாடலைப் பேசிப் பாரத்துக்கொள்வோம். அது என்ன உரையாடல் என்று கேட்கிறீர்களா? இதோ... "சார், எனக்கு நல்லாசிரியர் விருது வேணும்." "அதற்கென்ன வாங்கிட்டாபோது." "கையில காசு இருக்கா. அவர பார்த்தாப்போச்சு. உனக்கென்ன! இந்த வருஷம் வாங்கிடலாம்." மத்திய, மாநில அரசு தரும் "நல்லாசிரியர் ...

கற்பித்தல் வெறும் பணி அல்ல... அது வாழ்வியல் முறை: பிரதமர் மோடி

Posted: 04 Sep 2014 12:06 PM PDT

கல்வி கற்பித்தல் வெறும் பணி அல்ல, அது வாழ்வியல் முறை என ஆசிரியர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். ஆசிரியர் தினத்தையொட்டி தேசிய விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 350 ஆசிரியர்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். மோடி பேசியதாவது: "கல்வி கற்பித்தல் வெறும் பணி அல்ல, அது வாழ்வியல் முறை. மாறிவரும் சர்வதேச சூழலை கருத்தில் கொண்டு புதிய தலைமுறையினரை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். அவர்களது நாட்டத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை உருவாக்க வேண்டும். ஆசிரியர்கள் எப்போதும் ...

16 வருடமாக சொத்து குவிப்பு வழக்கை சந்திக்கும் ஜெ. முதல்வராக தொடரலாமா?: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Posted: 04 Sep 2014 12:06 PM PDT

16 ஆண்டுகளாக சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை சந்தித்து வரும் ஜெயலலிதா, முதல்வர் பதவியில் தொடர முடியுமா என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, குற்ற வழக்குகளில் சிக்கிய எம்.பி., எம்.எல்.ஏ.க்களை அமைச்சராக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் கூறியிருந்தது. இதேபோல் ஊழல் வழக்கில் சிக்கியவர் ...

வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம்

Posted: 04 Sep 2014 12:00 PM PDT

வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் முதல் நாள் கூடங்குளம்... அடுத்த நாள் சென்னை... மறுநாள் டெல்லி... அது, நாடாளுமன்றமோ, நான்கு பேர் சந்திப்போ... வைகோ வைகோதான். மனிதருக்கு இப்போது வயது 68. ஆனால், நீங்கள் முதல் முதலில் பார்த்தபோது வைகோ எப்படி இருந்தார் என்று யோசித்துப் பாருங்கள். அப்படியேதான் இருக்கிறார் இப்போதும். அதிகாலை நடைப்பயிற்சி முடித்துவிட்டு, ஆசுவாசமாக செய்தித்தாள்களைப் புரட்டியபடி இருந்த வைகோவை அவருடைய இல்லத்தில் சந்தித்தோம். ''மனித உடல் இயற்கை கொடுத்த அற்புதமான ஒரு கருவி; கற்பனை செய்ய ...

நம் ஆசிரியர்களை வாழ்த்தலாம் வாங்க :)

Posted: 04 Sep 2014 11:30 AM PDT

நம் தளத்தில் உள்ள எல்லா ஆசிரிய பெருமக்களுக்கும் என் அன்பான 'ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்'  

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:

Posted: 04 Sep 2014 11:27 AM PDT

Posted Date : 13:02 (04/09/2014)Last updated : 13:09 (04/09/2014) நீதிபதி முடிகவுடரின் கண்டிப்பு! 18 வருடங்களாக நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20 ஆம் தேதி தீர்ப்பு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை ஒட்டுமொத்த இந்தியாவே உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் களத்திலும் ஏக எதிர்பார்ப்பு. அந்த நீண்ட நெடிய வழக்கை ஆரம்பத்தில் இருந்து அலசுவோமா..? 21.6.96 ல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி ஒரு வழக்கு ...

''பூச்சி கடித்த காய்கறிகளையே சாப்பிடுங்கள்!'' - இப்படியும் ஓர் எளிய வழி

Posted: 04 Sep 2014 11:27 AM PDT

''பூச்சி கடித்த காய்கறிகளையே சாப்பிடுங்கள்!'' - இப்படியும் ஓர் எளிய வழி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல உணவுதான் முக்கியம்! ஆனால், ஆரோக்கியம் தரும் என்று நம்புகிற உணவே ஆபத்தாக இருந்தால்? 'பூச்சிக்கொல்லிகளும் ரசாயன உரங்களும், பூச்சிகளுடன் மனிதர்களையும் சேர்த்தே கொல்கின்றன' என இயற்கை ஆர்வலர்கள் பலரும் குரல் எழுப்பும் நிலையில், நமக்கான நல்ல காய்கறிகளையும் பழங்களையும் எப்படி அடையாளம் கண்டுகொள்வது? மருத்துவம், உணவு, இயற்கை எனப் பலதரப்பட்ட பிரபலங்களிடமும் பேசினோம். ''குறுகிய காலத்தில் லாபம் ...

வண்ணங்களை காணவில்லை!

Posted: 04 Sep 2014 11:20 AM PDT

ஹைலைட் செய்யலாம் என்று பார்த்தால் கலர் ஐகான் - ஐ காணவில்லை. நம் தளத்தில் மாற்றங்கள் ஏதேனும் நிகழ்ந்து கொண்டிருக்கிறதா?

சிவக்குமாரின் ஆரோக்கிய ஆசனங்கள்

Posted: 04 Sep 2014 11:16 AM PDT

''மூளைக்கு சிரசாசனம்... முதுகுக்கு புஜங்காசனம்!'' சிவக்குமாரின் ஆரோக்கிய ஆசனங்கள் 'சிந்து பைரவி' வந்து கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால், தோற்றத்தில் இன்னமும் அந்தக் காலகட்டத்தைத் தாண்டவில்லை சிவக்குமார். நடிப்பு, ஓவியத்தைத் தாண்டி சமீப காலமாக இலக்கிய மேடைகளிலும் சிவக்குமாரின் கம்பீரக் குரல் ஒலிக்கிறது. சுறுசுறுப்பான சிவக்குமாரின் ஆரோக்கிய ரகசியம் என்ன? அவரே சொல்கிறார். ''என் உடலாகிய வண்டிக்கு நான்தான் டிரைவர். கரடுமுரடான பாதைகளில் வண்டியை ஓட்ட நேரிடலாம். எப்படிச் சாமர்த்தியமாக ஓட்டுகிறோம் ...

எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது?

Posted: 04 Sep 2014 10:42 AM PDT

எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? ஒரு காட்டில் காட்டாறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையினிலே ஒரு மாமரம் ஒன்று கிளைபரப்பி நின்றிருந்தது. அதில் அண்ணன், தம்பி என இரண்டு கிளைகளும் இருந்தன. அண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும். தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடிக் காற்றை வரவழைக்கும். ஒரு நாள் பயங்கர மழை பொழிய ஆரம்பித்தது. கூடவே கடும்புயல் வேறு. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. அண்ணன் கிளை வழக்கம்போல், நடப்பதை ...

ration shop "ஸ்டாக் இல்லை" இனிமே யாரையும் ஏமாத்தமுடியாது...

Posted: 04 Sep 2014 10:40 AM PDT

ரெண்டு நிமிடம் ஒதுக்கி இதை படியுங்கள் நண்பர்களே இதை ஷேர் பண்ணுங்க இனிமே யாரையும் ஏமாத்தமுடியாது... இதை உங்களுக்கு தெரிஞ்சவங்க மற்றும் படிக்கதேரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க நண்பர்களே !!.... ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு ...

நலமுடன் வாழ்வோம்

Posted: 04 Sep 2014 10:30 AM PDT

அடிக்கடி வாய்ப்புண் வருவதை தடுப்பது எப்படி? 'சாலையோர கடைகளில் சாப்பிடுவோருக்கு, உணவுக்குழாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. பழைய உணவு சாப்பிடுவதாலும், இந்த பாதிப்பு வரும். காலை உணவை தவிர்த்தால் சர்க்கரை நோய் வரும்' என, டாக்டர்கள் எச்சரித்தனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, குடல், இரைப்பை பிரிவு சார்பில், 'உணவு பழக்கமும், உடல் ஆரோக்கியமும்' என்ற தலைப்பில், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. குடல் இரைப்பை சிகிச்சைத் துறைத் தலைவர் ...

உன்னை வர்ணிக்க தமிழில் வார்த்தை இல்லை...!

Posted: 04 Sep 2014 10:26 AM PDT


-

ஒரு ரூபாயில் ஒரு உயிர்…..

Posted: 04 Sep 2014 10:25 AM PDT

ஒரு ரூபாயில் ஒரு உயிர்….. இருபத்தி நான்கு மணி நேர மருத்துவமனையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், தனியொரு நபராக இருபத்தி நான்கு மணி நேர மருத்துவச் சேவை புரியும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இத்தனைக்கும் அவர் ஒரு டாக்டரோ, நர்ஸோ கிடையாது. பள்ளியில் வெறும் எட்டாம் வகுப்பை மட்டும் முடித்திருக்கும் அவர், அப்படியென்ன மருத்துவச் சேவை செய்துவருகிறார்? தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசிக்கும் காஜா மொய்தீன், கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் சொந்தமாக ஒரு காலணிக் ...

அப்புசாமி - சீதாப்பாட்டி!

Posted: 04 Sep 2014 10:21 AM PDT

அப்புசாமி மட்டும் தீவிர கட்சி தொண்டனாக இருந்திருந்தால், நிச்சயமாக மனைவி சீதாவின் புகைப்படத்தை எல்லா செய்தித்தாள்களிலும் குறைந்தபட்சம் அரை பக்கத்துக்காவது போட்டு, 'ஒலி கொடுத்த தெய்வமே... ஒப்பில்லா மணியே... மொபைல் கொடுத்த ஜெகதீஸ்வரியே... நீயே என் இல்லத்தரசி; நீயே என் மொபைலரசி...'என்று வாழ்த்துப்பா பாடி, இவண், உன் ஊழியனும், கணவனுமான மொபைல்சாமி என்று புகழ்மாலை சூட்டியிருப்பார். பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கிற அளவுக்கு அவருக்கு வசதி இல்லாததால், பூசலார் நாயனார் மனசுக்குள்ளேயே இறைவனுக்கு கோவில் ...

பெங்களூரில் பெண் மூளைச்சாவு: இதயம் விமானத்தில் கொண்டுவரப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது!

Posted: 04 Sep 2014 10:19 AM PDT

(04/09/2014) சென்னை: பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. கர்நாடக மாநில எல்லையில் வசித்த தமிழகத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பெண் கடந்த 1 ஆம் தேதி ஓசூர் மெயின் ரோட்டில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் கெங்கேரியில் உள்ள பி.ஜி.எஸ். குளோபல் ஆஸ்பத்திரியில் தீவிர ...

பட்டம்மாள் நினைவு தபால் தலை !

Posted: 04 Sep 2014 10:18 AM PDT

புதுடில்லி : கர்நாடக இசை மேதையான, மறைந்த டி.கே.பட்டம்மாள் உட்பட, எட்டு இசைக்கலைஞர்களின் நினைவு தபால் தலையை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று வெளியிட்டார். நாட்டின் தலைசிறந்த இசைக்கலைஞர்களையும், இசை மேதைகளையும் நினைவுகூரும் வகையிலும், கவுரவிக்கும் வகையிலும், அவர்களின் உருவம் பொறித்த நினைவு தபால் தலை, இந்திய தபால் துறை சார்பில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. இதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசை மேதை, டி.கே.பட்டம்மாள், சிதார் இசை கலைஞர், பண்டிட் ரவிசங்கர் மற்றும் பீம்சேன் ஜோஷி, பண்டிட் ...

எனி டைம் MONEY மர்டர் - ராஜேஷ்குமார் நாவல் .

Posted: 04 Sep 2014 10:17 AM PDT

"ஜொள்' விட வைக்கும் சாக்லேட் : இன்று உலக சாக்லேட் தினம் !

Posted: 04 Sep 2014 10:17 AM PDT

"சாக்லேட்' -- இந்த வார்த்தையை கேட்டவுடன், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை குதுகலிப்பர். இது வாய், மனது மற்றும் இருதயத்தை புத்துணர்வு ஆக்குகிறது. எந்த ஒரு மகிழ்ச்சியான தருணத்திலும் முதலிடம் பிடிப்பது இதுவாகத் தான் இருக்கும். உலகளவில் சாக்லேட் தினம், வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் செப்., 4ம் தேதி உலக சாக்லேட் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சாக்லேட் சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் சீராகும், பக்கவாதத்தை தடுக்கும், இருதயம் தொடர்பான நோய்களை குறைக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ...

மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவி

Posted: 04 Sep 2014 10:09 AM PDT

மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவி !! மூச்சுத் திணறல் ஏற்பட்டவர்களுக்கு 'ஹெய்ம்லீக் மேன்யூவர்' என்னும் முதல் உதவியைச் செய்ய வேண்டும். மூச்சுத் திணறலுக்கு ஆளானவரின் பின்பக்கமாக நின்று அவரது விலா எலும்புகளுக்குக் கீழாக, அதாவது வயிற்றின் மத்தியில் இரண்டு கைகளாலும் உள்நோக்கி அழுத்தியவாறு மேலே தூக்கவேண்டும். இப்படிச் சில முறைகள் செய்ய வேண்டும். இதனால், வயிற்றுப் பகுதியில் இருந்து கிளம்பும் வாயு, தொண்டையில் சிக்கியுள்ள உணவை வாய் வழியாக வெளியேத் தள்ளிவிடும். அந்நிலையிலேயே அவரைத் ...

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்-தமிழருவி மணியன்

Posted: 04 Sep 2014 10:07 AM PDT

ஒழுக்க வாழ்வை வலியுறுத்தும் நாடு நம் பாரத நாடு. தர்ம நெறி நடந்து, இந்த உலகிலேயே அமைதியும் அன்பும் நிரம்பிய சொர்க்க லோக வாழ்வை அனுபவிக்க நம் முன்னோர்கள் காட்டியிருக்கும் வழிமுறைகள் ஏராளம். இங்கேதான், ஆசைகளைத் துறக்கச் சொன்ன புத்தர்பிரான், மனித குலத்துக்கு வழி காட்டினார். வேத உபநிடதங்களும், இதிகாச புராணங்களும், சான்றோர் வாக்குகளும் மாமருந்தாகத் திகழ்ந்து, மனித குலத்தை முன்னேற்றப் பாதையில் வழி நடத்திச் செல்கின்றன. இவ்வளவு இருந்தும் இன்றைய மனித வாழ்வில்தான் எத்தனை துக்கங்கள்; மனத் துயரங்கள்? வெறுப்பு, ...

வேண்டாம் இந்த தீவிரவாதம்

Posted: 04 Sep 2014 10:06 AM PDT

கேட்டோர் நெஞ்சம் பதற பார்த்தோர் உள்ளம் கதற அகப்பட்டோர் குருதி உதிர நிகழிடம் மயானம் ஆக உறவை இழந்தோர் துடிக்க உறவினர் கண்கள் கசிய கைப்பொருள் தொலைத்தோர் கலங்க தினசரி அலுவல் தடைபட காவலர் உறக்கம் தொலைக்க ஆளும் அரசுகள் திகைக்க பகை நாடுகள் மகிழ செய்தோர் உள்ளம் கொக்கரிக்க வேண்டாம் இந்த தீவிரவாதம் காந்தி பிறந்த மண்ணில் வள்ளுவம் உதித்த தாரணியில் முன்னோர் நெறி பற்றி உலகை காப்போம் என்றும் நம் கடமை எந்நாளும் அமைதி சோலையை உருவாக்குவதே !!!

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு

Posted: 04 Sep 2014 10:05 AM PDT

குளிர்காலத்தில் நாம் பகல்பொழுதிலேயே தண்ணீரில் குளிக்க கஷ்டப்படுவோம். அதுவும் இந்த ஐயப்ப பக்தர்கள் விடியற்காலையில் கிராமப்புறங்களில் குளத்தில் குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் குளிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதை வைத்துதான் இந்த ஹைக்கூ பிறந்திருக்கிறது. குளத்தில் இருக்கும் தண்ணீர் விடியற்காலையில் வெதுவெதுப்பாகத்தான் இருக்குமாம். சரி குளிர் காலத்தில்தானே பனியும் வருகிறது. அதனால், மார்கழிப் பனி வெதுவெதுப்பாய் குளம் என்று முதலிரண்டு அடிகளை எழுதி முடித்து மூன்றாம் அடியில் "ஐயப்ப பக்தர்கள்" ...

மர்ம தீவு - சங்கர்லால் துப்பறியும் காமிக்ஸ் .

Posted: 04 Sep 2014 09:53 AM PDT

ஓவியம் புஜ்ஜாய் : இவரின் ஓவியம் மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும் , இவர் வரைந்த மேலும் சில காமிக்ஸ்கள் எனக்கு தெரிந்து . பழைய பங்களா (ஆனந்த விகடன்), ஒற்றன் 4ஒ-1 (கல்கி), நான் அவனில்லை (தினமணிக் கதிர்), பைரவன் (தினமணிக் கதிர்), விஷமக் கொடுக்கு ரங்கு (தினமணிக் கதிர்), தங்கப் பட்டிணம் உள்ளிட்ட பல சித்திரக்கதைகள் (ரத்னபாலா) http://www.mediafire.com/download/mfxnw257x444o04/Sankerlal+comics.pdf

இரும்புக் கை மனிதன் - தமிழ்வாணன் நாவல் .

Posted: 04 Sep 2014 09:52 AM PDT

காதலா இது காதலா - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .

Posted: 04 Sep 2014 09:51 AM PDT

சந்திரவதனா - எஸ்.பாலசுப்ரமணியன் நாவல் .

Posted: 04 Sep 2014 09:50 AM PDT

இங்கேதான் இறப்பார்கள் - ராஜேஷ்குமார் நாவல் .

Posted: 04 Sep 2014 09:49 AM PDT

மூவரை வென்றான் - நா.பார்த்தசாரதி நாவல் .

Posted: 04 Sep 2014 09:48 AM PDT

பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது !

Posted: 04 Sep 2014 09:29 AM PDT

பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன். எனவே, எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும் ...

பாட்டி வைத்தியம்

Posted: 04 Sep 2014 08:06 AM PDT

சாதரணமாக நாம் எதுக் கெடுத்தாலும் டாக்டரிடம் ஓட முடியாது, சில பல கைவைத்தியங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம் நண்பர்களே ! அது அமையா சமையத்தில் கை கொடுக்கும்.................நமக்கும் மற்றும் பிறருக்கும். இந்த திரி இல் நாம் சில ' பாட்டி வைத்தியம்' என்று சொல்லப்படுகிற 'கை வைத்தியம்' பற்றி சிலது அறிந்துகொள்வோம் நண்பர்களே ! நான் எப்போதும் சொல்வது தான், பிளீஸ் உங்கள் கருத்துகளையும் பகிருங்கள்.

இந்தியாவில் அல் கய்தா கிளை: மாநிலங்களுக்கு உளவுத் துறை உஷார்!

Posted: 04 Sep 2014 06:55 AM PDT

(04/09/2014) புதுடெல்லி: அல் கய்தா பயங்கரவாத அமைப்பின் கிளை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாக வெளியான வீடியோ தகவலை தொடர்ந்து அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி உள்ள மத்திய உளவுத் துறை அமைச்சகம், வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆராயுமாறு புலனாய்வுத் துறையை கேட்டுக்கொண்டுள்ளது. ஜிஹாதிஸ்டுகளுக்கான இணையதளத்தில் இது தொடர்பாக வெளியாகி உள்ள 55 நிமிடங்கள் ஓடும் வீடியோ ஒன்றில் பேசியுள்ள அல்கய்தா தலைவர் அய்மான் அல் ஜவஹிரி, அல் கய்தா அமைப்பின் கிளை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் ...

டாக்டர் ஜோக்ஸ்

Posted: 04 Sep 2014 05:47 AM PDT

ஓவரா குடிச்சா உங்க கிட்னி கெட்டுப் போயிடும்!! நல்லா இருந்தா மட்டும் நீங்க விட்டு வைக்கவா போறீங்க டாக்டர்?? அந்த பேஷன்ட்டுக்கு 3 மணி நேரத்துக்கு ஒருமுறை மயக்க மருந்து கொடுக்க சொல்றீங்களே!! ஏன் டாக்டர்?? எந்த யுனிவர்சிட்டியில மெடிக்கல் படிச்சீங்கனு குடைஞ்சிக்கிட்டே இருக்காரு!! சாப்பிட முடியாம கஷ்டப்பட்தால ஆறு மாசம் அந்த டாக்டர்கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்தியே இப்ப எப்படி இருக்கு?? இப்போ ஒரு வேளை சாப்பாடுக்கு கஷ்டப் படுகிறேன்டா!

ஒரே பக்கத்தில் சொந்த பதிவுகள் பார்வையிட

Posted: 04 Sep 2014 05:44 AM PDT

நான் பதிவிட்ட பதிவுகளை ஒரே பக்கத்தில் பார்வையிட ஏதேனும் வழிகள் உள்ளதா..உறவுகள் உதவுவார்கள் என காத்திருக்கிறேன் புன்னகை தமிழ்நேசன்

தொடத் தொடத் தொல்காப்பியம் (310)

Posted: 04 Sep 2014 05:34 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

அறிந்தும் அறியாமலும்-ஞாநி மின்நூல்

Posted: 04 Sep 2014 04:43 AM PDT

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Posted: 04 Sep 2014 04:17 AM PDT

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா ! அன்பு  நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  ! இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™