Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மீண்டும் சந்திப்போம் நாளை

Posted: 18 Sep 2014 01:00 PM PDT

மீண்டும் சந்திப்போம் நாளை . ரமணியன்

இலக்கியச் செல்வர் மற்றும் கவிஞர் பொன்னடியாருக்கு விருது

Posted: 18 Sep 2014 12:58 PM PDT

இன்று (18.09.14) இலக்கியச் செல்வர். குமரி அனந்தன் அவர்களுக்கு செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. விருது, கவிஞர் பொன்னடி அவர்களுக்கு அண்ணா விருது வழங்கும் விழா உமாபதி கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்புரை ஆற்றினேன். விழா தொடங்கும் முன் ஐயா குமரி அனந்தன் மற்றும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் ச. மோகன் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த போது. விழா முடிந்த பின்பு கவிஞர் பொன்னடியான் அவர்ளுடன்.

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”

Posted: 18 Sep 2014 09:28 AM PDT

"என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?" "என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?" பனை ஏறும் தந்தை தொழிலில் இருந்து தப்பித்து தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்! "பெரியாரின் முரட்டுத்தனமான அணுகுமுறை அதெல்லாம் சரிபட்டு வராதுங்க" இதுமுடி வெட்டும் தோழரின் மகனான எலக்ட்ரிக்கல் என்ஜினியர்! "என்னங்க பெரியார் சொல்லிட்டா சரியா? திராவிட இயக்கம் இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது? இப்படி 'இந்தியா டுடே' பாணியில்கேட்டவர் அப்பன் இன்னும் பிணம் எரித்துக் கொண்டிருக்க இங்கே ...

துப்பாக்கி முனையில் 2 பெண்களால் இளைஞர் கற்பழிப்பு!

Posted: 18 Sep 2014 09:05 AM PDT

தென் ஆப்பிரிக்கா கெட்ல்ஹாங்கை சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் சாலை வழியாக நடந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கார் ஒன்று அவர் அருகில் நிறுத்தப்பட்டு அதிலிருந்து பெண் ஒருவர் வழி கேட்டுள்ளார் .அப்போது எதிர்பாராத வகையில் காரின் பின்கதவு திறக்கப்பட்டு உள்ளே இழுத்து போடப்பட்டார். பின்னர் கார் பூங்கா அருகில் நிறுத்தப்பட்டு 2 பெண்களால் கற்பழிக்கபட்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் கூறுகையில் , காரினுல் 30 வயதுக்குட்பட்ட 3 பெண்கள் இருந்தனர் அதில் ஒருவர் துப்பாக்கியுடன் ...

அபுதாபியில் அமைந்துள்ள வட்ட வடிவிலான கண் கவர் 'காயின்' பில்டிங் !

Posted: 18 Sep 2014 09:03 AM PDT



துபாய். உலகில் வித விதமான வடிவமைப்புகளில் கட்டிடங்கள் வடிவமைக்கப்படுகிறது. உலகின் வித்தியாச வடிவமைப்பில் அமைந்த கட்டிடங்களில் யுஏஇ தலைநகரான அபுதாபி ,அல் ரஹா பகுதியில் அமைந்துள்ள காயின் பில்டிங்கும் ஒன்றாகும்.

2010ல் அமைக்கப்பட்ட உலகின் முதல் வட்ட வடிவிலான இந்த வர்த்தக கட்டிடத்தில் அலுவலகங்கள் , ஹோட்டல்கள் உள்ளது. இக்கட்டிடம் 110 மீட்டர் உயரமுடையதாகும்

25000 பதிவுகள் கடந்த கிருஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாங்க :)

Posted: 18 Sep 2014 08:57 AM PDT

25000 பதிவுகள் கடந்த கிருஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாங்க பல்லாயிரம் பதிவுகள் அவை அனைத்தும் சுவைக்கும் பதிவுகள், ஏனெனில் சமையர் கலையிலே கைதேர்ந்த கிருஷ்னாம்மாவின் பதிவுகளாச்சே வாழ்த்துகிறோம் தங்கள் சிறப்பினை - தொடர்ந்து பதிவிட்டு சுவை ஊட்டுங்கள் என்றென்றும் கிருஷ்ணாம்மா - வாழ்த்துகள் பல்லாயிரம்.

26000 பதிவுகள் கடந்த, எல்லோருக்கும் இனியவரான 'இனியவனை' வாழ்த்தலாம் வாருங்கள் :)

Posted: 18 Sep 2014 08:48 AM PDT

வாவ் ! மனமார்ந்த வாழ்த்துகள் இனியவன்..............இதுபோல பல்லாயிரம் பதிய வாழ்த்துகள் !

எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்!

Posted: 18 Sep 2014 08:17 AM PDT

நம்மில் பலர், வீட்டுக்குத் தேவையான பொருள் வாங்குவதாக இருந்தாலும் சரி, இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதாக இருந்தாலும் சரி, ரியஸ் எஸ்டேட்டில் முதலீடு செய்வதாக இருந்தாலும் சரி, அனைத்திலும் உணர்ச்சிவசப்பட்டு (Emotional) முடிவெடுப்பது அதிகரித்து வருகிறது. இதனால் பல பிரச்னைகள் உருவாகி, அதைத் தீர்ப்பதிலேயே பாதி வாழ்நாளை கழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறோம். உணர்ச்சிவசப்படுவது நமது அடிப்படையான உணர்ச்சிதான். இருப்பினும் உணர்ச்சிவசப்பட்டு நாம் செய்யும் முதலீட்டு முடிவுகள் நமக்கு இக்கட்டான சூழ்நிலையையே ...

இந்த கடிகாரம் புதுமையாக இருக்கிறது அல்லவா ?

Posted: 18 Sep 2014 08:16 AM PDT

இந்த கடிகாரம் புதுமையாக இருக்கிறது அல்லவா?

என்ன நினைக்கிறீர்கள் ?




ரமணியன்

நன்றி :தமிழ்வெளி

முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்

Posted: 18 Sep 2014 07:57 AM PDT

முதலில் ஈகரை வருகை பதிவேடு    -என்ற திரியில் பதிவிடுங்கள் அதிகம் பார்வை இடும்  திரியில் " ஈகரை வருகை பதிவேடு  " முதலில்  இருந்தாலும் , அதில் பதிவிட  அன்பர்கள் , மிகவும் தயங்குவது போல் தெரிகிறது . வரும் நேரத்திற்கேற்றார் போல் வணக்கம்  கூறி சேருவது நல்லதோர் வழிமுறை ஆகாதா ? பெருமைக்காக சொல்லவில்லை , காலையில் நான் நடை பயிற்சி செய்யும் போது, ( US இல் ) நான் அறியா பல முகங்கள் , good morning என்றோ , "hai ' என்றோ புன்னகையுடன் வாழ்த்தும் போது , மனதில் ஒரு புத்துணர்ச்சி பெருகிகிறது . நம் ஈகரையில் ...

புரட்டாசியில் சைவம் ஏன்?

Posted: 18 Sep 2014 07:09 AM PDT

ஜோதிடத்தில் 6-வது ராசி கன்னி.கன்னியா ராசியின் மாதம் புரட்டாசி.இந்த மாதத்தின் அதிபதி புதன்.புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம பெருமாளின் மாதம்.புதன் சைவத்திற்குறிய கிரகம் ஆதாலல் அசைவம் சாப்பிடக்கூடாது பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது. புரட்டாசி மாதம் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும் மேலும் பூமியின் இயக்கத்து படி நமக்கு செரிமானக்குறைவும்,வயிறு பிரச்சினைகளும் ஏற்பட்டு கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும் ஆதலால் அசைவ ...

கோபம்

Posted: 18 Sep 2014 07:07 AM PDT

அன்பை உணராதவர்களிடம்
உன் கோபத்தை காட்டி வீணாக
வெருப்பை சம்பாதிக்காதே
ஏனெனில்
அவர்களுக்கு தெரியுமா
அதீத அன்பின் வெளிப்பாடே
கோபம் என்று

ஆண்களுடன் பெண்கள் மனம் விட்டு பேசலாமா

Posted: 18 Sep 2014 07:02 AM PDT

தினமும் நாம் செல்லும் இடங்கள், சந்திக்கும் நபர்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களை மட்டுமே காண முடியாது. ஆண்களும்தான் இருப்பார்கள். எனவே அவர்களிடம் எப்படி அணுக வேண்டும், எப்படி பழக வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள சில டிப்ஸ்கள் இதோ…. • ஆண்களின் மத்தியில் நம்முடைய நடையும், நிற்கும் ஸ்டைலும், எந்த அளவிற்கு நாம் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம் என்பதைக் வெளிக்காட்டும். எனவே எப்பொழுதும் முதுகை நிமிர்த்தி, கழுத்தை நேராக வைத்து இருந்தால், அது தன்னம்பிக்கையுடன் இருக்கும் தோற்றத்தைத் தரும். • ஆண்களை ...

கடி ஜோக்ஸ்

Posted: 18 Sep 2014 06:56 AM PDT

உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே! உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்! ---------------------------------- மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்... நல்லவேளை… நான் கொழந்தையாத் தான் பொறந்தேன். ----------------------------------- நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்.... சரி ... அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க? ------------------------------------ காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...? ...

இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை!

Posted: 18 Sep 2014 06:22 AM PDT

'மும்பையின் இரவு நேர விடுதி ஒன்றிலிருந்து, ஒரு பெண்ணைக் கடத்திச் சென்ற 5 குண்டர்கள், அவளை பாலியல் பலாத்காரம் செய்து வீதியில் வீசிச் சென்றுவிட்டனர்' என்று சமீபத்தில் ஒரு வழக்கு பதிவானது. பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரித்தபோது, 'என்ன நடந்தது என்பது சிறிதளவுகூட என் நினைவில் இல்லை' என்றார். ஆனால், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானது. 'அந்தப் பெண்ணுக்கே தெரியாமல், இது எப்படி நடந்திருக்க முடியும்? என்று அதிர்ந்த மருத்துவர்கள்... மேற்கொண்டு அந்தப் பெண்ணை ...

பாட்டி வைத்தியம்

Posted: 18 Sep 2014 06:12 AM PDT

சாதரணமாக நாம் எதுக் கெடுத்தாலும் டாக்டரிடம் ஓட முடியாது, சில பல கைவைத்தியங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம் நண்பர்களே ! அது அமையா சமையத்தில் கை கொடுக்கும்.................நமக்கும் மற்றும் பிறருக்கும். இந்த திரி இல் நாம் சில ' பாட்டி வைத்தியம்' என்று சொல்லப்படுகிற 'கை வைத்தியம்' பற்றி சிலது அறிந்துகொள்வோம் நண்பர்களே ! நான் எப்போதும் சொல்வது தான், பிளீஸ் உங்கள் கருத்துகளையும் பகிருங்கள்.

விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி?

Posted: 18 Sep 2014 06:09 AM PDT

தமிழ்ப் படங்களில், கதாநாயகிகள் 'வயதுக்கு வருவதாக' அமைக்கப்படும் காட்சி களைப் பார்க்கும்போது, இயக்குநருக்கு உண்மையிலே இந்த விஷயம் தெரியாதா அல்லது ஒரு பெண்ணிடமாவது கேட்டு இந்த மாதிரி காட்சிகளை எடுக்க மாட்டார்களா என்றும் தோன்றும். திரைப்படத்தில் காட்டுவதைப் போல் நட்டநடு சாலையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கதாநாயகி கத்துவது, வலி வந்தவுடன் நாயகனின் முகம் அவள் நினைவுக்கு வருவது எல்லாம் உண்மையில் எங்கும் நடப்பதில்லை. பெரும்பாலான பெண்கள், பருவ வயதை நெருங்கியவுடனே, வயதுக்கு வந்தவுடனே உடம்பில் என்ன ...

வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்!

Posted: 18 Sep 2014 05:54 AM PDT

டாலர் சிட்டியான திருப்பூருக்கு, 2011-ம் ஆண்டு கறுப்பு ஆண்டு. சாயக்கழிவு நீரை முறையாக சுத்திகரித்து வெளியேற்றாததைக் கண்டித்து, 700-க்கும் அதிகமான சாய, சலவை ஆலைகளை மூட உத்தரவிட்டது அந்த ஆண்டில்தான். 'சாயமேற்றும் அவசரத்தில் சில சாயப்பட்டறைகள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நொய்யல் ஆற்றில் திறந்துவிடுகிறார்கள். இதனால் விளைநிலங்களும், நாங்களும் பாதிக்கப்படுகிறோம்' என்று விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ச்சியாகப் போராடியதன் விளைவாக அப்போது சாய, சலவை ஆலைகள் மூடப்பட்டன. சாயக் கழிவுகளை முழுமையாக சுத்திகரிக்கும் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (65)

Posted: 18 Sep 2014 05:53 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது !

Posted: 18 Sep 2014 05:52 AM PDT

பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன். எனவே,  எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும் ...

பாவம் தாத்தா

Posted: 18 Sep 2014 05:51 AM PDT

(((((((((((((((((((((((((((((((((((((((பாவம் தாத்தா)))))))))))))))))))))))))))))))))) எங்க தெருவுல ஒரு பெரியவருக்கு 60 ஆம் கல்யாணத்துக்கு, அவரோட புள்ளைங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. ஆனா, அந்த பெரியவர் முகத்துல அதுக்கான சந்தோசம் எதுவும் தென்படுறதா எனக்குத் தெரியல. "ஏன் தாத்தா... விடிஞ்சா கல்யாணம் ... இப்படி சோகமா இருக்கீங்களே"ன்னு கேட்டேன். அதுக்கு அவர் சொன்னார், "பாவிப்பயலுக ... வாழ்க்கையில இவ்ளோ அடிபட்ட பிறகும். இப்பகூட பொண்ணை புடிச்சிருக்கான்னு ஒருத்தரும் கேட்க மாட்டேங்குறாங்களே"

ஸ்ரீராகவேந்திரர் குவலயத்திற்கு வழிகாட்டியவர்

Posted: 18 Sep 2014 05:49 AM PDT

மனைவி மற்றும் மகனின் மீது, முழுமையான அன்பும் கனிவும் கொண்டிருந்த சம்சாரியான அவருக்கு, புகழ்பெற்ற மடத்தின் தலைவரிடமிருந்து, துறவறம் பூணச் சொல்லி அழைப்பு; அறிவுறுத்தல்! 'துறவறம் சென்றால், மனைவியும் குழந்தையும் உணவுக்கு வழியின்றி தவிப்பார்களே' என்று நினைத்து, அந்த சம்சாரி மறுத்தார். ஆனாலும் அழைப்பு தொடர்ந்தபடியே இருந்தது. செய்வதறியாமல் தவித்து மருகினார்; தூக்கம் வராமல் புரண்டு படுத்த நள்ளிரவு வேளையில், அவரது அறை முழுவதும் கண்களை கூசச் செய்கிற பேரொளி; கலைவாணி அவருக்குக் காட்சி தந்தாள். ''மகனே, ...

என்னை பற்றிய சுய விவரம்

Posted: 18 Sep 2014 05:37 AM PDT

பெயர்: மணிவேந்தன்.து
சொந்த ஊர்: மதிலுக்கு புகழ் பெற்ற மன்னார்குடி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையதளத்தில் தேடியது
பொழுதுபோக்கு: புத்தகம் படிப்பது,இணையதளம்,
தொழில்: ஆராய்ச்சி மாணவர்
மேலும் என்னைப் பற்றி: அதிகமான முறையில் படிக்க வேண்டும்

கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1

Posted: 18 Sep 2014 05:36 AM PDT

கரிசல் மண்ணில் ஒரு காவியம் அத்தியாயம்--1 பள்ளிப் பருவம் துள்ளித் திரிந்த காலம்,பள்ளி முடிந்து வந்தததும் அவளும் நானும்தான் விளையாடுவோம்.எங்களுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டே அப்பா அம்மா விளையாட்டுத்தான்.அப்போதே அதன் அர்த்தங்கள் புரிந்துதான் இருந்தது.ஆனாலும் அதை விளையாட்டாகத்தான் விளையாடினோம்.ஓடிப்பிடிப்போம் கட்டித்தழுவுவோம்.ஆனாலும் அப்போது ஆணென்ன பெண்ணென்ன பால் வேற்றுமை புரியவில்லை. வேறு யாரையும் விளையாட்டுக்குச் ...

என்னைப் பற்றிய தகவல் -கருமலைத்தமிழாழன்

Posted: 18 Sep 2014 05:13 AM PDT

பெயர்:கருமலைத்தமிழாழன் சொந்த ஊர்:ஒசூர், கிருட்டினகிரி மாவட்டம்,தமிழ்நாடு, இந்தியா. ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:மதுரை கவிஞர் இரவி அவர்கள்  வாயிலாக பொழுதுபோக்கு:கவிதைகள் பற்றி  விவாதித்தல் தொழில்: அரசு மேல் நிலைப்பள்ளியில்  தலைமையாசிரியராகப்  பணியாற்றி   பணிநிறைவு பெற்றவர். மேலும் என்னைப் பற்றி:என்னுடைய முதல் கவிதை  பாவேந்தர்  பாரதிதாசனாரால்  தொடங்கப்பட்ட  குயில் ஏட்டில்1969 இல் வெளிவந்தது. இது வரை 21 கவிதை நூல்கள்  வெளிவந்துள்ளன. ஐம்பதிற்கும் மேற்பட்ட  நாள்,வார,திங்கள் ஏடுகளில் இது ...

அமைதியினை முகிழவைப்போம்

Posted: 18 Sep 2014 04:07 AM PDT

    அமைதியினை   முகிழவைப்போம்                                    பாவலர்  கருமலைத்தமிழாழன்                 வீதிகோர்   தெய்வமென்று   வைத்துக்   கொண்டு                         வீரத்தைக்   காட்டியின்று   வேறு   பட்டார்             சாதிகோர்  தெய்வமென்று    வைத்துக்   கொண்டு                         சச்சரவைப்   பெருக்கியின்று    பகைவ   ரானார்             சாதிக்கும்   சாதனையாய்க்   கோயில்  முன்பு                         சண்டையிட்டு   மண்டைகளை   உடைத்துக்   கொண்டு             நீதிமன்றப்   படிகளிலே   ...

எதிலும் எதிரி

Posted: 18 Sep 2014 03:34 AM PDT

நண்பர்கள் என்றால் நல்லவன் என்று கூறலாம் எனது பார்வையில். ஆனால் இரண்டு நண்பர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டவர்கள் போல் இருந்தனார். ஒரு நாள் ஒரு வேலை அதில் ஒரு இடம் தான் இருக்கிறது. ஆனால் இருவரும் சேர்ந்து வேலைக்கு போக வேண்டும் எண்ணத்தில் இருந்தனார். ஆனால் ஒருவருக்கு தெரியமால் அந்த இடத்தில் சந்த்திக் கொண்டணார். இருவருக்கும் கோவம் ஆனால் இருவருக்கும் வேலை கிடைக்க வில்லை.

காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்

Posted: 18 Sep 2014 02:30 AM PDT

படு­கொலைக் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளாகி பிணையில் விடு­த­லை­யான நப­ரொ­ருவர் தனது காத­லியின் வீட்­டுக்குள் அத்து மீறி பிர­வே­சித்து காத­லியை கொன்று அவ­ரது இரு­தயம், நுரை­யீ­ரல்கள், மூளை என்­ப­வற்றை சமைத்து உண்ட சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. இன்­டி­யானா மாநி­லத்­தி­லுள்ள ஜெப்­பெர்ஸோன்­வில்லே நகரில் கடந்த வாரம் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. ஜோசப் ஒபெர்­ஹன்ஸ்லி (33 வயது) என்ற மேற்­படி நபர், ...

மைக்ரோசாப்ட் நிறுவனம்

Posted: 18 Sep 2014 01:30 AM PDT

● உருவாக்கப்பட்ட திகதி: April 4, 1975
● நிருவுனர்கள்: Bill Gates, Paul Allen
● தலைமை காரியாலயம்: Redmond, WA, United States of America
● தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி: Satya Nadella (India)

● படத்தில் இருப்பது Microsoft நிறுவனத்தின் முதல் 11 ஊழியர்கள் ஆகும்.

இளமைச்சிறை

Posted: 18 Sep 2014 12:17 AM PDT

இளமைச்சிறை                                                             பாவலர் கருமலைத்தமிழாழன்                                       பனிகொட்டும்   இளங்காலை                                                 பாடங்கள்   படியென்றே                                     கனவுகளைக்   கலைக்கின்ற                                                 கசப்பான   அதட்டல்கள் !                                       நான்குசுவர்   வகுப்பறைக்குள்                                                 நாளெல்லாம்   அமரவைத்துக்                                     ...

கவின் சேர்க்கும் காலம்

Posted: 18 Sep 2014 12:16 AM PDT

[size=32]கவின்  சேர்க்கும்   காலம்[/size]                              பாவலர்  கருமலைத்தமிழாழன்   காலத்தை   மதியானை    இந்த   ஞாலம்             கண்ணெடுத்தும்   பார்க்காது ;   வாழ்க்கை   என்னும் கோலத்தை   மாற்றுவதும்   ஏற்றத்    தாழ்வைக்             கோடிட்டுக்   காட்டுவதும்   காலம்   ஒன்றே ! காலந்தான்   போதவில்லை   என்று   சொல்லிக்             கடமையினைச்   செய்பவனோ    உயரு    கின்றான் காலந்தான்   போகவில்லை   என்று    வீணே             கழிப்பவனோ   ஏதுமின்றித்    தாழு   கின்றான் !   கழிகின்ற   ...

பெருமை சேர்த்த பேரழகி

Posted: 18 Sep 2014 12:13 AM PDT

பெருமை சேர்த்த  பேரழகி                        பாவலர் கருமலைத்தமிழாழன்   எங்கிருந்தோ   வந்தவள்தான்   என்னுள்   ஒன்றி      என்னவளாய்   ஆகிவிட்டாள்  ;  தன்னை  ஈன்ற தங்கநிகர்  பெற்றோரைப்   பிரிந்து   வந்த      தனிமையெனும்   துயர்வாட்டி   வதைத்த  போதும் மங்கலமாம்   புதுவாழ்வு    மனையோர்   தம்மின்      மனம்மகிழத்   தன்முகத்தில்  நகையைக்   காட்டிச் சங்கீத  மெட்டியொலி   காதில்  வீழச்      சந்தனமாய்  வலம்வந்தாள்   மணத்தை   வீசி !   பாவலனாம்   எனைமணந்த   கார   ணத்தால்      பாவமவள்   என்தனிமைக்   ...

சொத்து குவிப்பு வழக்கில் ஜெ., விடுதலையா????

Posted: 18 Sep 2014 12:01 AM PDT

சொத்து குவிப்பு வழக்கில் ஜெ., விடுதலையா? காஞ்சியில் வைத்த பதாகையால் பரபரப்பு ! காஞ்சிபுரம்: 'பெங்களூரில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை' என, அ.தி.மு.க., கவுன்சிலர், காஞ்சிபுரத்தில் நேற்று காலை பதாகை வைத்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தரக்குறைவாக...: கடந்த, 1991 - 1996 காலத்தில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போது, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து ...

ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் !

Posted: 17 Sep 2014 10:45 PM PDT

ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் : மோடி அளித்த எளிய குறிப்புகள் ! குஜராத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் உள்ள ராட்டையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் நூல் நூற்றார். அப்போது அவருடன் இருந்த மோடி, அவருக்கு நூல் நூற்க சில எளிய குறிப்புகளை அளித்தார். இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஜீ ஜின்பிங், குஜராத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு புதன்கிழமை வருகை தந்தார். குஜராத் மாநிலம், ஆமதாபாதின் புறநகர்ப் பகுதியான சபர்மதியில் மகாத்மா காந்தியின் ...

சீன அதிபரைக் கவர்ந்த கத்திரிக்காய், வெண்டைக்காய் பொறியல், உருளைக்கிழங்கு குருமா,குஜராத் மிக்சர்!

Posted: 17 Sep 2014 10:19 PM PDT

ஆமதாபாத்: ஒரு நாட்டின் அதிபருக்கே உரித்தான, வழக்கமான படோடாபம் இல்லாமல் சாதாரண குடிமகன் போல் ஆமதாபாத் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங், நமது பிரதமர் நரேந்திரமோடி அளித்த விருந்தில் பாரம்பரிய குஜராத் உணவு வகைகளை விரும்பி உண்டார். விருந்தில் பரிமாறப்பட்ட சிற்றுண்டி வகைகள்: சீரகம் கலந்த மோர், குஜராத்தி மிக்சர், கடலை மாவு மற்றும் ரவை கலந்து செய்யப்பட்ட பலகாரம், அரிசி மாவு மற்றும் பாசிப்பருப்பு மாவு கலந்த பலகாரம், கடலை மாவு, ரவை கலந்து தயாரிக்கப்பட்ட கேக்கை உதிர்த்து விட்டு, எலுமிச்சை சாறு பிழிந்து ...

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Posted: 17 Sep 2014 10:01 PM PDT

இன்றைய சிந்தனைத் துளிகள்

பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்

துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.

இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.

நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.

கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™