Tamil News | Online Tamil News |
- தமிழக அரசின் அப்பீல் சுப்ரீம் கோர்ட்டில்... தள்ளுபடி!:சகாயம் விசாரணை நடத்த இனி தடையில்லை
- மோடி: நீங்க வந்திருக்கும்போதே எல்லை மீறுறாங்களே...? கேள்வி, பதில்
- சி.வி.சி., நியமனத்தில் வெளிப்படை தன்மை இல்லாதது ஏன்? : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
- கூட்டணிக்காக சுயமரியாதையை விட முடியாது : சிவசேனா மீது அமித் ஷா கோபம்
- வருமான வரி கணக்கு தாக்கல் வழக்குஜெ., சசிகலா அக்.,1ல் ஆஜராக உத்தரவு
- ஆளுங்கட்சியின் 'இமேஜ்' சரிவு?: சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் தி.மு.க.!
- உள்ளாட்சி இடைத்தேர்தலில் வன்முறை! மாநில தேர்தல் கமிஷன் மீது பா.ஜ., அவமதிப்பு வழக்கு
- தகவல் கோரும் நோக்கத்தை தெரியப்படுத்த வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு
- இதுதான் பதிலடியா?கோவையை புறக்கணித்த அரசு... :தேர்தலை புறக்கணித்த மக்கள்!
- ஸ்காட்லாந்து தனி நாடு ஆகுமா? விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
| தமிழக அரசின் அப்பீல் சுப்ரீம் கோர்ட்டில்... தள்ளுபடி!:சகாயம் விசாரணை நடத்த இனி தடையில்லை Posted: கிரானைட் உள்ளிட்ட கனிமங்கள் முறைகேடு குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை சிறப்பு அதிகாரியாக நியமித்ததை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை, சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. மேலும், 'சிறப்பு அதிகாரியை நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது சரியே' என, சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பதால், சகாயம் விசாரணை நடத்த இனி தடை ஏதும் இல்லை என்ற சூழல் உருவாகி உள்ளது.தமிழகத்தில் உள்ள, கிரானைட் மற்றும் கனிம குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளை விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை நியமிக்கக் கோரி, சமூக ... |
| மோடி: நீங்க வந்திருக்கும்போதே எல்லை மீறுறாங்களே...? கேள்வி, பதில் Posted: புதுடில்லி: சீன அதிபர், ஜி ஜின்பிங் இந்தியா வந்துள்ள நிலையிலும், எல்லையில், சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டது குறித்து, அவரிடம், பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார். அதற்கு பதிலளித்த அதிபர் ஜின்பிங், ''எல்லை இன்னும் சரிவர நிர்ணயிக்கப்படாததால் தான் இந்த பிரச்னை; இதை தீர்க்க விரைவில் ஏற்பாடு செய்யப்படும்,'' என உறுதிஅளித்தார்.மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம், குஜராத் மாநிலம் ஆமதாபாத் வந்த சீன அதிபர், நேற்று முன்தினம் இரவில் டில்லி திரும்பினார். நேற்று காலை டில்லி, ராஷ்டிரபதி பவன் வளாகத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்று, பாரம்பரிய ... |
| சி.வி.சி., நியமனத்தில் வெளிப்படை தன்மை இல்லாதது ஏன்? : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி Posted: புதுடில்லி: 'மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையமான, சி.வி.சி.,யின், தலைமை ஆணையர் மற்றும் இதர ஆணையர்கள் நியமனத்தில், ஒளிவுமறைவற்ற தன்மை பின்பற்றப்படவில்லை' என, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று கண்டனம் தெரிவித்தது. அதனால், 'நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், இறுதி முடிவு எடுக்கப்படாது' என, மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.தலைமை கண்காணிப்பு ஆணையர்டில்லியைச் சேர்ந்த பொதுநல அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில், மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: சி.வி.சி., யின் தலைமை கண்காணிப்பு ஆணையர், பிரதீப் குமாரின் பதவிக் ... |
| கூட்டணிக்காக சுயமரியாதையை விட முடியாது : சிவசேனா மீது அமித் ஷா கோபம் Posted: கோல்காபூர் :''சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு, சிவசேனா விரைவில் தீர்வு காண வேண்டும். அதே நேரத்தில், கூட்டணிக்காக சுயமரியாதையை விட்டுக் கொடுக்க முடியாது,'' என, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிராவில், அடுத்த மாதம், 15ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஓர் அணியாகவும், பா.ஜ., - சிவசேனா மற்றொரு அணியாகவும் சந்திக்க உள்ளன. ஆனாலும், பா.ஜ., - சிவசேனா இடையே, தொகுதிப் பங்கீட்டு விஷயத்தில், இழுபறி நீடிக்கிறது. பா.ஜ., கேட்கும், 135 தொகுதிகளை தர முடியாது என, சிவசேனா ... |
| வருமான வரி கணக்கு தாக்கல் வழக்குஜெ., சசிகலா அக்.,1ல் ஆஜராக உத்தரவு Posted: சென்னை :'வருமான வரி கணக்கு விவரங்களை, தாக்கல் செய்ய தவறியதாக தொடரப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க, முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, அக்., 1ம் தேதி, தவறாமல் ஆஜராக வேண்டும்' என, சென்னை, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் பங்குதாரர்களாக இருந்த, சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, சென்னை, எழும்பூர் பொருளாதார நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த வழக்கை, ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது.வழக்கில் அதிரடி ... |
| ஆளுங்கட்சியின் 'இமேஜ்' சரிவு?: சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் தி.மு.க.! Posted: உள்ளாட்சி இடைத்தேர்தலில், ஆங்காங்கே நடந்த களேபரங்களால், ஆளும் அ.தி.மு.க.,வுக்கு கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளதாக, தி.மு.க., தரப்பில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதை சரியாகப் பயன்படுத்தி சட்டசபை தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்த வேண்டும் என்றும், கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு, தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளதாக, தகவல் பரவி இருக்கிறது.கட்சியை சீரமைக்க:கடந்த சட்டசபை, உள்ளாட்சி, லோக்சபா தேர்தல்களில், தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வரும் தி.மு.க.,வை, கட்சி ரீதியாக சீரமைக்க வேண்டும் என்று, சமீபத்தில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, வழக்கறிஞர் ... |
| உள்ளாட்சி இடைத்தேர்தலில் வன்முறை! மாநில தேர்தல் கமிஷன் மீது பா.ஜ., அவமதிப்பு வழக்கு Posted: நேற்று, தமிழகம் முழுவதும் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில், கள்ள ஓட்டு போடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.,வினர், அடித்து விரட்டப்பட்டனர். பல இடங்களில் வன்முறை வெடித்து, மக்கள் ஓட்டுப் போட முடியாமல் திரும்பி உள்ளனர்' என, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.இது தொடர்பாக, அவர் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:துாத்துக்குடியிலும், கோவை யிலும் நடந்த மாநகராட்சி தேர்தலில், பா.ஜ., வேட்பாளர்களுக்கு, குறைந்த எண்ணிக்கையில் கூட, ஓட்டுகள் விழுந்து விடக் கூடாது என, முடிவெடுத்து, கள்ள ஓட்டு போட்டிருக்கின்றனர், ... |
| தகவல் கோரும் நோக்கத்தை தெரியப்படுத்த வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: சென்னை :'தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் கோருபவர், அந்த தகவல்கள், தனிப்பட்ட நலனுக்காகவா அல்லது பொது நலனுக்காகவா என்பதை வெளிப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச விவரங்களையாவது தெரிவிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.புதுச்சேரியை சேர்ந்தவர் பாரதி. இவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், சில தகவல்களை அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்திடம் கோரினார்.ஆறு தகவல்கள் சென்னை, எழும்பூர் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டுக்கு எதிராக அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பதவிக்கான தேர்வு ... |
| இதுதான் பதிலடியா?கோவையை புறக்கணித்த அரசு... :தேர்தலை புறக்கணித்த மக்கள்! Posted: கோவைக்கு என, ஏராளமான திட்டங்களை தமிழக அரசு அறிவித்த பின்னும், மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலை 50 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் புறக்கணித்திருப்பது, அரசின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.நேற்று நடந்த கோவை மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவில், 46.53 சதவீதம் மட்டுமே ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன; நகரிலுள்ள 12 லட்சத்து 90 ஆயிரத்து 652 வாக்காளர்களில், 6 லட்சத்து 580 பேர் மட்டுமே, தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அதாவது, 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள், இந்த தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.வெளிமாவட்டத்தினரைக் கொண்டு வந்து தேர்தல் ... |
| ஸ்காட்லாந்து தனி நாடு ஆகுமா? விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு Posted: எடின்பர்க்:பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து பிரிய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தநிலையில்,அதற்கான ஓட்டெடுப்பு தொடங்கியுள்ளது.பிரிட்டனிலிருந்து பிரியவேண்டாம் என என இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கேட்டுகொண்டார். அதற்குபதிலாக அதிகமாக உரிமைகளை வழங்குவதாக தெரிவித்தார்.ஆனால் ஸ்காட்லாந்து ஏற்கவே இல்லை.இந்நிலையில், இந்திய நேரப்படி காலை 11.30 மணிமுதல் நள்ளிரவு 2.30 மணி வரை ஓட்டளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.40 லட்சத்திற்கும் அதிகமானோர் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். அதற்காக 2,600 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.ஸ்காட்லாந்து பிரிய வேண்டும் என்றால் எஸ்., ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 19,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |