மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கேரளாவின் புதிய மதுபான கொள்கையில் காங். கூட்டணியில் பிளவு இல்லை: சுதீரன்
- ஜனவரி மாதம் நடத்த திட்டமிட்டிருந்த காஷ்மீர் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்பு
- ஒரு வயது குழந்தைக்கு கோர்ட் சம்மன்: பெற்றோர் அதிர்ச்சி
- சிங்கப்பூர் அரசு உதவியுடன் ஆந்திர தலைநகர் அமைப்பு: வெங்கைய்யாநாயுடு ஆலோசனை
- ஐசிஐசிஐ வங்கியில் ஏ.டி.எம்.மில் கார்டு இல்லாமல் பணம் பெரும் வசதி: செல்போன் மூலம் எடுக்கலாம்
- திருப்பதி கோவிலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி: பெண் ஏஜெண்டு கைது
- திருப்பதி கோவிலில் 15–ந்தேதி முதல் பக்தர்கள் தங்கும் விடுதி டெபாசிட் கட்டணம் உயர்வு
- இந்திய கடல்சார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் உள்பட 19 பேர் மீது வழக்கு
- இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பள்ளி தேர்வில் முதலிடம் பெற்று பெங்களூர் மாணவர்கள் சாதனை
- பிரதமரான பிறகு முதன்முதலாக குஜராத் செல்லும் மோடிக்கு கோலாகல வரவேற்பு- பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
- தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்கும் எண்ணம் இல்லை: நிர்மலா சீதாராமன்
- காஷ்மீர் நிலவரம் குறித்து மோடி அவசர ஆலோசனை
- தேர்தல் ஆதாயத்துக்காக லவ் ஜிஹாத் சர்ச்சையை பரப்பும் பா.ஜ.க.: பிரித்விராஜ் சவான் கண்டனம்
- பிஸ்மில்லா கானின் ஷெனாயை காணவில்லை: இளைய மகன் போலீசில் புகார்
- போதைப்பொருள் விற்கும் நைஜீரியா கும்பல்கள் பயங்கர ஆயுதங்களுடன் டெல்லியில் மோதல்
- வெள்ளக்காடான காஷ்மீரில் ஒரே நாளில் 2 பாலங்களை கட்டி இந்திய ராணுவ வீரர்கள் சாகசம்
- சொத்து தகராறை சமரசம் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் டி.எஸ்.பி. கைது
- டெல்லியில் ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 5200 பெண்களுக்கு அபராதம்
- காஷ்மீர் வெள்ளத்தில் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை: ராணுவ வீரர்கள் மகிழ்ச்சி
- பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.20 ஆயிரம் அபராதம்?
| கேரளாவின் புதிய மதுபான கொள்கையில் காங். கூட்டணியில் பிளவு இல்லை: சுதீரன் Posted: 10 Sep 2014 11:20 PM PDT கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அடுத்த 10 ஆண்டுகளில் மதுபான விற்பனையை முழுமையாக தடை செய்ய முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக மாநிலத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல்களை தவிர அனைத்து மதுபான பார்களையும் மூட உத்தரவிடபட்டது. இந்த முடிவு நாளை முதல் அமலுக்கு வருவதாகவும் அரசு |
| ஜனவரி மாதம் நடத்த திட்டமிட்டிருந்த காஷ்மீர் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்பு Posted: 10 Sep 2014 10:59 PM PDT காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீநகர் உள்பட நூற்றுக்கணக்கான கிராமங்கள் இன்னமும் வெள்ளத்தில் மிதக்கிறது. சுமார் 10 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தில், நிலச்சரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழந்த கிராமங்களில் உள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 1 லட்சம் பேர் |
| ஒரு வயது குழந்தைக்கு கோர்ட் சம்மன்: பெற்றோர் அதிர்ச்சி Posted: 10 Sep 2014 10:49 PM PDT உத்தர பிரதேச மாநில மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள தகுர்த்வாரா பகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி வாக்களர்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடக்கூடும் என்று 28 வயதான யாசீன் மற்றும் அவரது ஒரு வயது குழந்தையான நசீம் மீது அம்மாவட்ட காவல்துறையினர் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த கோர்ட் சம்மன் ஒன்று அவர்களுக்கு |
| சிங்கப்பூர் அரசு உதவியுடன் ஆந்திர தலைநகர் அமைப்பு: வெங்கைய்யாநாயுடு ஆலோசனை Posted: 10 Sep 2014 10:45 PM PDT ஆந்திராவின் புதிய தலைநகர் விஜயவாடா அருகே அமைக்கப்படும் என்று முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு சட்ட சபையில் அறிவித்தார். சிங்கப்பூர் போல் அனைத்து வசதிகளும் கொண்டதாக புதிய தலைநகர் இருக்கும் என்றும் அவர் கூறினார். அதோடு பல மாவட்டங்களில் 'ஸ்மார்ட் நகரம்' அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். புதிய தலைநகர் அமைக்க சிங்கப்பூர் அரசின் உதவி நாடப்படும் என்றும் |
| ஐசிஐசிஐ வங்கியில் ஏ.டி.எம்.மில் கார்டு இல்லாமல் பணம் பெரும் வசதி: செல்போன் மூலம் எடுக்கலாம் Posted: 10 Sep 2014 10:34 PM PDT வங்கிகளில் எலக்ட்ரானிக் முறையில் பண பரிமாற்றம், மற்றும் பணம் எடுக்கும் வசதிகளை கொண்டு வந்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தற்போது புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏ.டி.எம். மையங்களில் இதுவரை ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதி உள்ளது. ஆனால் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி செல்போன் மூலம் பண பரிமாற்றம் செய்து பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த |
| திருப்பதி கோவிலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி: பெண் ஏஜெண்டு கைது Posted: 10 Sep 2014 10:14 PM PDT கம்மம் மாவட்டம் சத்துப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் தனது மகள் மாதுரி கங்கா, மகன் நரேன்குமார், திருப்பதியைச் சேர்ந்த உறவினர் பிரகாஷ் ரெட்டி ஆகியோருடன் சேர்ந்து திருப்பதி கோவிலில் தங்களுக்கு வேண்டப்பட்டவர் உள்ளார். அவர் மூலம் கோவிலில் வேலை வாங்கி தருகிறோம் என்று பலரிடம் பணம் பெற்றனர். இதற்கு பார்வதி என்ற பெண்ணும் உதவி செய்தார். |
| திருப்பதி கோவிலில் 15–ந்தேதி முதல் பக்தர்கள் தங்கும் விடுதி டெபாசிட் கட்டணம் உயர்வு Posted: 10 Sep 2014 09:37 PM PDT திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்கள் தங்குவதற்காக தேவஸ்தானம் சார்பில் இலவச தங்கும் விடுதிகள் உள்ளது. இது தவிர 50–ல் இருந்து ரூ.7 ஆயிரம் வரை கட்டணத்துடன் கூடிய விடுதி அறைகள் 6500 உள்ளது. இந்த அறையில் தங்க டெபாசிட் தொகை பெறப்படுகிறது. ரூ.50 வாடகை என்றால் அவர்களிடம் ரூ.100 டெபாசிட் |
| இந்திய கடல்சார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் உள்பட 19 பேர் மீது வழக்கு Posted: 10 Sep 2014 08:54 PM PDT ஊழல் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகளின் பேரில் முக்கிய அதிகாரிகள் மீது வழக்கு தொடருவதற்கான பரிந்துரையை ஒவ்வொரு மாதமும் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அறிக்கையாக தயாரித்து வெளியிட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் இதுபோல் வெளியிடப்பட்ட பரிந்துரை அறிக்கையின்படி சென்னையில் உள்ள இந்திய கடல்சார் |
| இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பள்ளி தேர்வில் முதலிடம் பெற்று பெங்களூர் மாணவர்கள் சாதனை Posted: 10 Sep 2014 08:52 PM PDT இங்கிலாந்தின் பிரபலமான கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்தும் இரண்டாம் நிலை கல்விக்கான சர்வதேச பொது சான்றிதழ் தேர்வு உலகளவிலான கல்வித்தகுதியாகக் கருதப்படுகின்றது. 14 வயதிலிருந்து 16 வயது வரையிலான மாணவர்கள் எதிர்கொள்ளும் இந்தத் தேர்வில் பெங்களூரைச் சேர்ந்த மானஸ் கோலி என்ற மாணவன் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளான். அதேபோல் வேதியல்(கெமிஸ்ட்ரி) பாடப் பிரிவில் இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளான். இவனது பெற்றோர்கள் |
| பிரதமரான பிறகு முதன்முதலாக குஜராத் செல்லும் மோடிக்கு கோலாகல வரவேற்பு- பிறந்த நாள் விழா கொண்டாட்டம் Posted: 10 Sep 2014 05:14 PM PDT குஜராத் மாநில முன்னாள் முதல் மந்திரி நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், முதன்முதலாக வரும் 16-ம் தேதி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு செல்கிறார். டெல்லியில் இருந்து குஜராத் தலைநகர் அகமதாபாத்துக்கு தனிவிமானம் மூலம் 16-ம் தேதி பிற்பகல் வந்து சேரும் மோடியை மாநில மந்திரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்று, பரிசளித்து கவுரவிக்கவுள்ளனர். இது தவிர, மாநில அரசின் சார்பிலும் பிரதமருக்கு அளிக்கப்படும் சிறப்பான வரவேற்பு வழங்கப்படும். அடுத்த நாளான 17-ம் தேதி நரேந்திர மோடியின் பிறந்த நாள் ஆகும். இதனையொட்டி, அன்று காலை காந்தி மந்திரில் நடைபெறும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பிரதமர் பங்கேற்கிறார் |
| தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்கும் எண்ணம் இல்லை: நிர்மலா சீதாராமன் Posted: 10 Sep 2014 03:39 PM PDT தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்கும் எண்ணம் தற்போது இல்லை என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். இந்தியாவில் பொருளாதார சரிவு ஏற்பட்டபோது நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைப்பதற்காக தங்கத்தின் மீதான இறக்குமதி வரி கடந்த ஆண்டு தொடக்கத்தில் 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதோடு தங்கம் இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகளையும் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கடுமையாக்கின. |
| காஷ்மீர் நிலவரம் குறித்து மோடி அவசர ஆலோசனை Posted: 10 Sep 2014 03:27 PM PDT காஷ்மீர் வெள்ள நிவாரண பணிகள் குறித்து உயர்மட்ட அவசர கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அத்தியாவசிய பொருட்களை விரைவாக அனுப்ப முன்னுரிமை அளிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். காஷ்மீர் வெள்ள நிவாரண மற்றும் மீட்பு பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உயர்மட்ட அவசர கூட்டத்தை கூட்டினார். அதற்கு அவரே தலைமை தாங்கினார். |
| தேர்தல் ஆதாயத்துக்காக லவ் ஜிஹாத் சர்ச்சையை பரப்பும் பா.ஜ.க.: பிரித்விராஜ் சவான் கண்டனம் Posted: 10 Sep 2014 02:52 PM PDT சிவசேனாவை சேர்ந்த சுவாமி ஆதித்யாநாத் என்பவர் சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், இஸ்லாமிய இளைஞர்கள் 'லவ் ஜிஹாத்' என்ற புதிய வழிமுறையின் மூலம் இந்துப் பெண்களை மயக்கி, காதலித்து, முஸ்லிமாக மதம் மாற்றி திருமணம் செய்து கொள்வதாகவும், இந்த 'லவ் ஜிஹாத்'துக்கு பழிவாங்கும் விதமாக ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றினால் பதிலுக்கு 100 முஸ்லிம் பெண்களை மதம் மாற்ற வேண்டும் என கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகின. |
| பிஸ்மில்லா கானின் ஷெனாயை காணவில்லை: இளைய மகன் போலீசில் புகார் Posted: 10 Sep 2014 02:11 PM PDT உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதையான உஸ்தாத் பிஸ்மில்லா கானின் ஷெனாய் வாத்தியத்தை காணவில்லை என அவரது இளைய மகன் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தியாவின் மிக உயரிய பாரத ரத்னா, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், சங்கீத நாடக அகாடமி விருது, மத்தியப் பிரதேச அரசின் தான்சேன் விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்ற ஷெனாய் இசை மேதையான உஸ்தாத் பிஸ்மில்லா கான் கடந்த 2006-ம் ஆண்டு தமது 90-வது வயதில் மரணம் அடைந்தார். கடந்த நூற்றாண்டில் பிறந்த இசைஅறிஞர்களுள் சிறந்தவராகக் கருதப்படும் இவர் கச்சேரி செய்ய பயன்படுத்தி வந்த வெள்ளியினால் செய்யப்பட்ட பிரத்யேக 'ஷெனாய்' வாத்தியத்த்தை காணவில்லை என்று |
| போதைப்பொருள் விற்கும் நைஜீரியா கும்பல்கள் பயங்கர ஆயுதங்களுடன் டெல்லியில் மோதல் Posted: 10 Sep 2014 01:19 PM PDT இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள ஹெராயின், பிரவுன் ஷுகர் உள்ளிட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கும் போதைப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து கடத்திவரும் நைஜீரியா நாட்டினர் தலைநகர் டெல்லியில் அவற்றை ஏராளமான விலைக்கு விற்று, கொழுத்த லாபம் சம்பாதித்து வருகின்றனர். இவ்வகையிலான, இரு கும்பல்களை சேர்ந்த சுமார் 30 பேர் தெற்கு டெல்லியில் உள்ள கிர்க்கி எக்ஸ்டென்ஷ்ன் பகுதியில் நேற்று முன்தினம் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். அப்பகுதியில் போதைப்பொருட்களை விற்பதில் எழுந்த 'நீயா..?, நானா?' போட்டிதான் இந்த மோதலுக்கு காரனம் என அப்பகுதி மக்கள் பீதியுடன் கூறுகின்றனர். |
| வெள்ளக்காடான காஷ்மீரில் ஒரே நாளில் 2 பாலங்களை கட்டி இந்திய ராணுவ வீரர்கள் சாகசம் Posted: 10 Sep 2014 12:38 PM PDT காஷ்மீரில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை காப்பாற்றி, மீட்கும் பணியில் முப்படைகளும் முழுவீச்சில் ஈடுபட்டுள்ள நிலையில், உணவு மற்றும் தண்ணீர் இன்றி 1000 ராணுவ வீரர்களும், அவர்களின் குடும்பத்தினரும் சிக்கித் தவிக்கின்றனர். தெற்கு காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகரில் உள்ள பல்வேறு ராணுவ முகாம்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 1000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அந்த இடத்தைவிட்டு வெளியேற முடியாமல், உணவு மற்றும் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். இந்த இன்னலுக்கிடையிலும் சொந்த மனைவி, மக்கள் நலனைப் பற்றி கவலைப்படாமல் உயிரினும் மேலான தாய்நாட்டுக்கும், இந்நாட்டின் மக்களுக்கு அருந்தொண்டு ஆற்றிவரும் |
| சொத்து தகராறை சமரசம் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் டி.எஸ்.பி. கைது Posted: 10 Sep 2014 12:05 PM PDT சொத்து தகராறை தீர்த்து வைப்பதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போலீஸ் டி.எஸ்.பி.யை லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர் அருகேயுள்ள தார் நகரில் அமைந்துள்ள பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் நல்வாழ்வு போலீஸ் நிலையத்தில் துணை சூப்பிரண்டாக பணியாற்றுபவர், ப்ரஜேஷ் சிங் குஷ்வாஹா. அதே பகுதியை சேர்ந்த பஞ்சாரா வகுப்பை சேர்ந்த ஒருவருக்கும், இஸ்லாமிய வகுப்பை சேர்ந்த இன்னொருவருக்கும் இடையில் சொத்து விற்பனை தொடர்பாக ஏற்பட்ட தகராறு இந்த போலீஸ் நிலையத்தில் வழக்காக பதிவு செய்யப்பட்டது. |
| டெல்லியில் ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 5200 பெண்களுக்கு அபராதம் Posted: 10 Sep 2014 11:26 AM PDT சாலை பாதுகாப்பை வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி டெல்லி போலீசார் இன்று சிறப்பு விழிப்புணர்வு நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தனர். இதன் ஒருகட்டமாக இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை டெல்லியின் பல பகுதிகளில் வாகன தணிக்கை மற்றும் பரிசோதனை நடத்திய நூற்றுக்கணக்கான போக்குவரத்து போலீசார், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய மற்றும் பின்னால் அமர்ந்திருந்த சுமார் 5200 பெண்களுக்கு அபராதம் விதித்து ரசீது வழங்கினர். |
| காஷ்மீர் வெள்ளத்தில் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை: ராணுவ வீரர்கள் மகிழ்ச்சி Posted: 10 Sep 2014 10:19 AM PDT காஷ்மீரில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் ராணுவத்தினர் பல்வேறு முகாம்களை அமைத்து செயல்படுகின்றனர். அங்கு பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்கள், இந்த முகாம்களுக்கு தொலைபேசியில் அழைத்து, 'எங்களை காப்பாற்றுங்கள்' என அபயக்குரல் எழுப்பி வருகிறார்கள். இவ்வாறு ஸ்ரீநகரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு முகாமுக்கு நேற்று வந்த அழைப்பை கேட்ட வீரர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம், 'வெள்ளம் |
| பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.20 ஆயிரம் அபராதம்? Posted: 10 Sep 2014 10:06 AM PDT பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது. அப்படி புகை பிடிப்போருக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புகை பிடிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு கமிட்டியை அமைத்தது. அக்கமிட்டி, மத்திய அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.அதில், பொது இடங்களில் புகை பிடிப்போருக்கான அபராத தொகையை ரூ.200-ல் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |