Tamil Star |
- விமானத்தை தனியாளாக இழுத்து சாதனை படைத்த மனிதர்
- கோழி குஞ்சுகள் எப்படி உற்பத்தி செய்றாங்கனு தெரிஞ்சிக்கனுமா?
- ஐ போன்-6 இந்தியாவில் அக்டோபர் 17-ல் விற்பனைக்கு வருகிறது!
- ஓபன் டென்னிஸ் : மரின் சிலிச் சாம்பியன்!
- சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் ரோஹித் இல்லை!
- இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்காது!
- மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய மைக்கேல் ஷூமாக்கர்!
- பிரிவினையில் தலையிட மாட்டேன் – இங்கிலாந்து ராணி எலிசபெத்!
- அமெரிக்காவின் நிலை மாறவில்லை: பாலித ஹோகன்ன
- அவதூறு வழக்கு: சுப்பிரமணியன் சுவாமிக்கு நீதிமன்றம் அழைப்பாணை!
- ஒருவர் எத்தனை தடவையும் போட்டியிடலாம்? கருத்து வெளியிடத் தயங்கும் அங்கத்துவ கட்சிகள்!
- அமெரிக்காவில் அழகியை மணப்பதில் அழகிக்கு சிக்கல்…
- டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷின் ‘காக்கா முட்டை’
- தேவையறற வகையில், ஆத்திரமூட்டும் ரஷ்யா!
| விமானத்தை தனியாளாக இழுத்து சாதனை படைத்த மனிதர் Posted: 10 Sep 2014 04:58 AM PDT |
| கோழி குஞ்சுகள் எப்படி உற்பத்தி செய்றாங்கனு தெரிஞ்சிக்கனுமா? Posted: 10 Sep 2014 04:53 AM PDT |
| ஐ போன்-6 இந்தியாவில் அக்டோபர் 17-ல் விற்பனைக்கு வருகிறது! Posted: 10 Sep 2014 04:44 AM PDT
ஆசியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகச் சந்தையான இந்தியாவில் ஆப்பிளின் ஐபோன் 6- அக்டோபர் 17-ல் வெளி வர உள்ளது. இது குறித்து ஆப்பிளின் இந்திய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் மேற்கத்திய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் போன் இந்தியாவில் அக்டோபர் 17-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் போன்களில் அதன் மின்கலன்களின் திறனிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஐபோன் 5 மற்றும் 5எஸ் காட்டிலும் ஐபோன் 6 மின்கல திறன் பன்மடங்கு அதிகமாக இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. ஐபோன் 6 திறன்பேசிகள் எ8 செயலிகள் மூலம் இயக்கப்படுவதால் 50 சதவீதம் அளவிற்கு கூடுதல் திறன்மிக்க தாக இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஐபோன் 6ன் விலை சுமார் ரூ.39 ஆயிரத்து ஐநூறுலிருந்தும் ஐபோன்6 பிளஸ்ன் விலை சுமார் ரூ.45 ஆயிரத்து 500லிருந்து தொடங்கும் என தெரிகிறது. இந்த போன்கள் விற்பனையில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஓபன் டென்னிஸ் : மரின் சிலிச் சாம்பியன்! Posted: 10 Sep 2014 04:36 AM PDT
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், குரோஷியாவின் மரின் சிலிச் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ஜப்பானின் கெய் நிஷிகோரியுடன் நேற்று மோதிய சிலிச் 63, 63, 63 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று கோப்பையை கைப்பற்றினார். இது அவர் பெறும் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். குரோஷியாவின் கோரன் இவானிசெவிச் 2001 விம்பிள்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அதன் பிறகு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் குரோஷிய வீரர் என்ற பெருமை சிலிச்சுக்கு கிடைத்துள்ளது. சிலிச்சின் பயிற்சியாளராக இவானிசெவிச் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 2002ல் அமெரிக்காவின் பீட் சாம்பிராஸ் 17வது ரேங்க் வீரராக பங்கேற்று யுஎஸ் ஓபன் பட்டம் வென்றதே முந்தைய சாதனையாக இருந்தது. அதன் பிறகு டாப் 10ல் இல்லாத வீரர் யுஎஸ் ஓபன் கோப்பையை கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும். சிலிச் 14வது நிலை வீரராக இந்த தொடரில் பங்கேற்றார். கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டதாக பரிசோதனையில் தெரியவந்ததால், சிலிச்சுக்கு 4 மாத தடைவிதிக்கப்பட்டது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தவறான சத்துணவை சாப்பிட்டதால் அவர் சர்ச்சையில் சிக்க நேரிட்டது. இதைத் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வந்த அவர். தடைக்காலம் முடிந்த பிறகு தீவிரமாக பயிற்சி செய்து கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். சிலிச்சுடன் மோதிய கெய் நிஷிகோரி (10வது ரேங்க்), இந்த தொடரில் பலம் வாய்ந்த மிலோஸ் ரயோனிக் (5, கனடா), ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா (3, சுவிஸ்), நோவாக் ஜோகோவிச் (1, செர்பியா) ஆகியோரை வெளியேற்றி அதிர்ச்சி அளித்திருந்தார். எனினும், இறுதிப் போட்டியில் சிலிச்சின் உறுதியான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நேர் செட்களில் தோற்று 2வது இடத்துடன் திருப்தி அடைந்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் ரோஹித் இல்லை! Posted: 10 Sep 2014 04:28 AM PDT
கையில் ஏற்பட்ட காயம் காரணமாக எதிர்வரும் சாம்பியன்ஸ் லீக் டி 20 போட்டிகளில் ரோஹித் சர்மா இடம்பெற மாட்டார் என்று தெரிகிறது. இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது 2வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் ஓய்வில் இருந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார் ரோஹித். அப்போது மேலும் 4 வாரங்கள் ஓய்வெடுக்குமாறு ரோஹித் சர்மா அறிவுறுத்தப்பட்டார். இதனால் செப்டம்பர் 13-ந் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் லீக் டி 20 போட்டிகளில் ரோஹித் சர்மா மும்பை அணியின் கேப்டனாக களம் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 8-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடரிலும் ரோஹித் சர்மா பங்கேற்பாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்காது! Posted: 10 Sep 2014 04:24 AM PDT
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளதாக இலங்கை பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது, இந்திய பிரதிநிதி இந்த கருத்தை முன்வைத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போர் குற்றச் செயல் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இந்திய பிரதிநிதி அறிவித்துள்ளார். போர்க்குற்றச் செயல்கள் தொடர்பாக உள்ளக ரீதியான விசாரணைகளே நடத்தப்பட வேண்டும் என்றும், அந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் இந்திய பிரதிநிதி தெரிவித்துள்ளார். கடந்த கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தின் அடிப்படையில் புதிய ஆணையாளர் செயட் அல் ஹூசெய்ன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய பிரதிநிதி கோரியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய மைக்கேல் ஷூமாக்கர்! Posted: 10 Sep 2014 04:15 AM PDT
பனிச்சறுக்கு விளையாட்டின்போது தலையில் படுகாயம் அடைந்து கோமாவில் இருந்த முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி பிரான்ஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து கிரனோபல் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 6 மாதங்களாக கோமாவில் இருந்தார். கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி கோமாவில் இருந்து மீண்ட அவரை சுவிட்சர்லாந்துக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். அவர் சுவிட்சர்லாந்தில் இருக்கும் லூசியான் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லூசியான் மருத்துவமனையில் 3 மாதங்களாக சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பியுள்ளார். அவருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். ஆனால் ஷூமாக்கர் தற்போது எப்படி உள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆறு மாதங்களாக கோமாவில் இருந்த அவருக்கு சாப்பிட, கை, கால்களை அசைக்க, நடக்க கற்றுக் கொடுக்கவே பல மாதங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் முன்பு தெரிவித்திருந்தனர் .This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரிவினையில் தலையிட மாட்டேன் – இங்கிலாந்து ராணி எலிசபெத்! Posted: 10 Sep 2014 04:13 AM PDT
ஸ்காட்லாந்து பிரிவினை தொடர்பான பொது வாக்கெடுப்பு விவகாரத்தில் தான் தலையிடப் போவதில்லை என்று பிரிட்டிஷ் ராணி எலிசபெத் கூறியுள்ளார். ராணி எலிசபெத் முன்பு போல அதிகம் பேசுவதில்லை. எப்போதாவது, மிக மிக அரிதாகத்தான் அறிக்கை விடுவார். அந்த வகையில் தற்போது ஸ்காட்லாந்து குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பில் நான் தலையிட மாட்டேன். தலையிடுமாறு காோரி எத்தரப்பிலிருந்தும் என்னை யாரும் கேட்டுக் கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் நான் நடுநிலையுடன் இருக்க முடிவு செய்துள்ளேன் என்று பர்மிங்காம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் ராணி எலிசபெத் கூறியுள்ளார். முன்னதாக ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அமைச்சர் அலெக்ஸ் சல்மான்ட், தான் ராணியை சமீபத்தில் பார்த்துப் பேசியதாகவும், ஸ்காட்லாந்து பிரிவினையைத் தடுக்க அவர் முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் கூறி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் எலிசபெத் தரப்புதிட்டவட்டமாக மறுத்துள்ளது. ராணி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ராணி அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அதை காக்கும் வகையில் அரசியலில் உள்ளவர்கள் செயல்பட வேண்டும் என்று சல்மான்ட் பேச்சுக்கு குட்டு வைக்கப்பட்டிருந்தது. மேலும் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள செப்டம்பர் 18ம் தேதி ஒரு நிகழ்ச்சி ஒன்றில் ராணி எலிசபெத் பிசியாக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஸ்காட்லாந்து பிரிவு எலிசபெத்துக்குள் நிச்சயம் மன வேதனையை ஏற்படுத்தியிருப்பதாக கூறுகிறார்கள். முன்பு 1977ம் ஆண்டு அவர் முடிசூடியதன் 25வது ஆண்டு தினத்தின்போது அவர் பேசுகையில், நான் யுனைட்டெட் கிங்டத்தின் கிரேட் பிரிட்டன் - வடக்கு அயர்லாந்தின் ராணியாக முடி சூட்டப்பட்டதை மறக்கவில்லை. மறக்க மாட்டேன். இந்த சமயத்தில் நாம் அனைவரும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தையும், பலன்களையும் நாம் உணர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார் .This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்காவின் நிலை மாறவில்லை: பாலித ஹோகன்ன Posted: 10 Sep 2014 04:05 AM PDT
இலங்கையில் இருந்து தொலை தூரத்தில் அமெரிக்கா இருப்பதாலும், இலங்கை குறித்த அதிக கவனத்தை அந்த நாட்டு மக்கள் செலுத்தாததாலும் தற்போதும் அவர்களது நிலைப்பாடு மாறவில்லை என ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித ஹோகன்ன தெரிவித்துள்ளார். பத்திரிகைகள் வாயிலாக அறியும் விடயங்களை மட்டும் வைத்துக் கொண்டு இலங்கை குறித்த தமது வெளிப்பாட்டையே அமெரிக்கா கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கையில் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நிகழ்வொன்று அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு, இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள நிலைப்பாட்டில் இன்றுவரை மாற்றம் ஏற்படவில்லை. இதற்கான காரணங்களாக, இலங்கை அமெரிக்காவிலிருந்து வெகுதொலைவில் இருப்பதும், மக்கள் அந்த நாடு குறித்து அதிக கவனம் செலுத்தாததும் முக்கியமாகின்றன. குறிப்பாக இலங்கை தொடர்பில் அறிந்துகொள்ள பெருமளவு அமெரிக்க மக்கள் பத்திரிகைகளையே நம்பியுள்ளனர். அத்துடன் தனிப்பட்ட நலனை அடிப்படையாக கொண்டு செயற்படும் சக்திகள், பயங்கரவாத நடவடிக்கைகளை அடிப்படையாக வைத்து இலங்கை குறித்து எதிர்மறையான அபிப்பிராயத்தை உருவாக்கியுள்ளன. இதன் காரணமாக அமெரிக்காவின் இலங்கை குறித்த நிலைப்பாடுகள் மாற்றமடைவதற்கு சில காலம் எடுக்கலாம். ஆனால் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகள் இலங்கை குறித்து சாதகமான அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளன. யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் ஒரு சிறிய சம்பவம் கூட இடம்பெறவில்லை என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல என தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அவதூறு வழக்கு: சுப்பிரமணியன் சுவாமிக்கு நீதிமன்றம் அழைப்பாணை! Posted: 10 Sep 2014 03:40 AM PDT
இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில்: பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு தமிழ்நாடு நீதிமன்றம் இன்று புதன்கிழமை அழைப்பாணை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் அக்டோபர் 10ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு சுப்பிரமணியன் சுவாமிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. மீனவர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல், கடிதம் மட்டும் எழுதுவதாக தமிழக முதலமைச்சரை விமர்சித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சுப்பிரமணியன் சுவாமி பேட்டி அளித்திருந்தார். அதில் தமிழக மீனவர்களின் படகுகள் ஜெயலலிதாவுடன் இருக்கும் சசிகலா நடராஜன் மற்றும் திமுக தலைவர் .ஆர். பாலு ஆகியோருக்குச் சொந்தமானதென சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒருவர் எத்தனை தடவையும் போட்டியிடலாம்? கருத்து வெளியிடத் தயங்கும் அங்கத்துவ கட்சிகள்! Posted: 10 Sep 2014 03:24 AM PDT
18வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர் எத்தனை முறையில் தேர்தலில் போட்டியிடலாம் என்ற விடயத்தில் ஆளும் கட்சியின் அங்கத்துவ கட்சிகள் தீர்மானமற்ற போக்கை வெளிக்காட்டியுள்ளன. இந்த சட்டமூலத்தின்படி இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் எத்தனை தடவைகளும் போட்டியிடலாம் என்றுள்ளது. எனினும் அந்த சட்டமூலத்தில் உள்ள சில விடயங்களின் அடிப்படையில் மூன்றாவது முறையாக ஒரு ஜனாதிபதிக்கு போடடியிட முடியாது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரன் என் சில்வா உட்பட்ட பலர் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில் இது தொடர்பில் ஆளும் கட்சியின் அங்கத்துவ கட்சிகள் தமது நிலைப்பாட்டை வெளியிட தயக்கம் தெரிவித்துள்ளன. அமைச்சர்களான திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் தமது கட்சி எவ்வித தீர்மானத்துக்கும் வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்காவில் அழகியை மணப்பதில் அழகிக்கு சிக்கல்… Posted: 10 Sep 2014 03:19 AM PDT
மகளிர் டென்னிஸ் ஜாம்பவானாக திகழ்ந்த மார்டினா நவ்ரத்திலோவா ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் அழகியை திருமணம் செய்துகொள்ள உள்ளார். 57 வயதாகும் நவ்ரத்திலோவா எடுத்துள்ள இந்த முடிவு சிலரை ஆச்சரியத்திலும், சிலரை ஆத்திரத்திலும் ஆழ்த்தியுள்ளது. மகளிர் டென்னிசில் உலகின் நம்பர்-1 வீராங்கனையாக விளங்கிய மார்டினா நவ்ரத்திலோவா, ஓரினச்சேர்க்கை பிரியையாவார். ஜூடி நெல்சன் என்ற பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட மார்டினா நவ்ரத்திலோவா, 1991இல் அவரை விட்டு பிரிந்தார். தற்போது மார்டினா நவ்ரத்திலோவாவுக்கு 57 வயதாகின்றது. மீசை நரைத்தாலும், ஆசை நரைக்காது என்ற கதையாக, மீண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்ய மார்டினா நவ்ரத்திலோவா முடிவு செய்துள்ளார். ரஷ்யாவின் முன்னாள் அழகியான ஜூலியா லெமிகோவை, மார்டினா நவ்ரத்திலோவா திருமணம் செய்ய போவதாக அறிவித்துள்ளார். ஜூலியாவுக்கு தற்போது 42 வயதாகிறது, தொழிலதிபராகவும் உள்ளார். இவ்விருவரும் கடந்த 6 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருகிறார்கள். இவர்களது நிச்சயதார்த்தம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் அரை இறுதி ஆட்டத்தின் போது ஸ்டேடியத்தில் வைத்து நடத்தப்பட்டது. டென்னிஸ் போட்டி நடந்து கொண்டிருந்தபோது, நான் ஜூலியாவை திருமணம் செய்ய போகின்றேன். இதில் உனக்கு விருப்பமா என்று, நவ்ரத்திலோவா பொது இடத்தில் வைத்து கேட்க வெட்கப்பட்டுக் கொண்டே ஜூலியாவும் சம்மதம் என்று தெரிவித்தார். இதையடுத்து வைர மோதிரத்தை நிச்சயதார்த்த அடையாளமாக ஜூலியாவின் விரலில் அணிவித்தார் நவ்ரத்திலோவா. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி கிடையாது. இதனால் இருவரும் மியாமியில் தங்கள் திருமணத்தை விரைவில் நடத்தலாம் என்று முடிவு செய்து இருக்கின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷின் ‘காக்கா முட்டை’ Posted: 10 Sep 2014 03:13 AM PDT
டொரண்டோவில் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெறும் ஒரே ஒரு தமிழ்ப்படம் தனுஷ் தயாரிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் 'காக்கா முட்டை' என்ற படத்திற்கு கிடைத்துள்ளது. இதனால் தனுஷ் உள்பட படக்குழுவினர் பெருமை அடைந்துள்ளனர். இயக்குனர் வெற்றி மாறனின் உதவியாளராக இருந்த மணிகண்டன் இயக்கிய 'காக்கா முட்டை' என்ற திரைப்படம் சேரியில் உள்ள சிறுவர்களின் கதையை கொண்டது. சேரியில் வாழும் சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஆசைப்பட்டு சிறிது சிறிதாக பணம் சேர்த்து வைக்கின்றனர். இறுதியில் அவரக்ள் ஆசை நிறைவேறியதா? என்பதுதான் கதை. இந்த திரைப்படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட பட உள்ளது. இதற்கு முன்னர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது பெற்று தந்த ஸ்லம் டாக் மில்லியனர், மணிரத்னம் இயக்கிய இருவர், சுசீந்திரனின் அழகர் சாமியின் குதிரை ஆகியதிரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டு உள்ளன. இந்த விழாவில் பிரியங்கா சோப்ராவின் 'மேரி கோம்' திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தேவையறற வகையில், ஆத்திரமூட்டும் ரஷ்யா! Posted: 10 Sep 2014 03:01 AM PDT
யுக்றெய்னின் தென் கரைக்கு அப்பால், நேட்டோ அமைப்பின் பயிற்சி ஒன்றில் பங்கெடுத்த கனேடியப் படைக் கப்பல் ஒன்றுக்கு மிக நெருக்கமாக ரஷ்யப் போர் விமானங்கள் பறந்தமைக்கு கனேடிய அரசு கண்டனம் வெளியிட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை HMCS Toronto படைக் கப்பலுக்கு அருகில் இரண்டு போர் விமானங்களும் ஒரு கண்காணிப்பு விமானமும் பறந்து சென்றன. ரஷ்ய விமானங்கள் தேவையற்ற வகையில், ஆத்திரமூட்டும் முறையில் நடந்து கொண்டதாக பாதுகாப்பு அமைச்சர் றொப் நிக்கல்சன் கூறினார். யுக்றெய்னில் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்த நிலையில், பதட்டத்தை அதிகரிக்கும் வகையில் ரஷ்யா நடந்து கொண்டதென அவர் தெரிவித்தார் . இருந்தபோதிலும் கனேடியக் கப்பலுக்கு ஆபத்து இருக்கவில்லையெனவும் அவர் கூறினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |















