Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஒரே நாளில் 19 நாடுகளில் பயணித்து நார்வே மூவர் குழு புதிய உலக சாதனை

Posted: 24 Sep 2014 11:06 PM PDT

ஸ்காண்டினேவிய நாடுகளில் ஒன்றான நார்வேயைச் சேர்ந்த குன்னார் கர்போர்ஸ்(39), டே யங் பக்(42) மற்றும் ஒய்வின்ட் ஜுப்விக்(38) ஆகிய மூவரும் இணைந்து கடந்த சனிக்கிழமை அன்று இரவு ஒரு புதிய உலக சாதனையை நிகழ்த்த புறப்பட்டனர். 24 மணி நேரத்தில் 17 நாடுகளைக் கடந்த முந்தைய சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் கிரீஸ் மற்றும் பல்கேரியாவைப் பிரிக்கும் எல்லைப்பகுதியிலிருந்து சனிக்கிழமை அன்று இரவு புறப்பட்டனர்.

கேரளாவில் குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் உயர்வு

Posted: 24 Sep 2014 10:52 PM PDT

கேரளாவில் ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்தக் கோரி இன்று முதல் ஸ்டிரைக் நடத்தப்படும் என்று ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் (1.5 கிலோ மீட்டர்) ரூ.15–ல் இருந்து 20 ஆகவும், டாக்சிகளுக்கான குறைந்த பட்ச கட்டணம் ரூ.100–ல் இருந்து ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பாஜக அலுவலகம்- கோவில்களில் நாசவேலைக்கு அல்-கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் சதி

Posted: 24 Sep 2014 10:40 PM PDT

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ போவதாக கூறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான அய்மான்– அல் – ஜவாஹரி சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில் இந்திய துணைக் கண்டத்தில் அல்கொய்தாவின் கிளை தொடங்கப்பட்டு பாதிக்கப்பட்ட

பிரதமர் நரேந்திரமோடி இன்று அமெரிக்கா பயணம்

Posted: 24 Sep 2014 10:27 PM PDT

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்தார். அமெரிக்கா – இந்தியா இடையிலான உறவை மேம்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக ஒபாமா அழைப்பை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து மோடியின் அமெரிக்க பயணத் திட்டம் வகுக்கப்பட்டது. அமெரிக்காவில் மொத்தம் 5 நாட்கள் பிரதமர் நரேந்திர மோடி தங்கி இருந்து

பிரதமர் மோடி விஞ்ஞானிகளை ஆர தழுவியது சிலிர்ப்பை ஏற்படுத்தியது: ஆய்வு மைய இயக்குனர்

Posted: 24 Sep 2014 09:44 PM PDT

செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் இந்தியாவின் மங்கள்யான் நிலை நிறுத்தப்படுவதை காண திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர் இயக்குனர் சந்திரதவான் பெங்களூர் சென்றிருந்தார். அங்கு நடந்த வரலாற்று நிகழ்வில் பங்கேற்ற பின்பு நேற்று அவர், திருவனந்தபுரம் திரும்பினார். விமான நிலையத்தில் அவரை விஞ்ஞானிகள் உற்சாகத்துடன்

ராகுல் என் மகனை தத்து எடுக்கவில்லை: வழக்கு தொடரப் போவதாக பிரியங்கா அறிவிப்பு

Posted: 24 Sep 2014 09:42 PM PDT

ராகுல்காந்தி என் மகனை தத்து எடுக்கவில்லை என்று பிரியங்காகாந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா காந்தி – தொழில் அதிபர் ராபர்ட் வதேரா தம்பதிக்கு ரெய்கான் என்ற

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்: 2500 போலீசார் பாதுகாப்பு

Posted: 24 Sep 2014 09:06 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த (அக்டோபர்) மாதம் 4–ந் தேதி வரை 9 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் கோவில் வளாகத்தில் கொடியேற்று விழா நடக்கிறது. அன்று இரவு 8 மணியில் இருந்து 9 மணி

2ஜி முறைகேடு வழக்கு: விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

Posted: 24 Sep 2014 07:58 PM PDT

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி கனிமொழி, சாகித் பல்வா, சுரேந்திர பிபாரா, கவுதம் தோஷி, ஹரி நாயர், அன்சுமான் எஸ்.ருயா, ரவி என்.ருயா ஆகிய தனிநபர்களும்,

டெல்லியில் வக்கீலின் கழுத்தை அறுத்துவிட்டு நைஜீரிய வாலிபர் தப்பியோட்டம்

Posted: 24 Sep 2014 05:23 PM PDT

தெற்கு டெல்லியில் உள்ள கிர்கி விரிவாக்கம் பகுதியில் முஹம்மது ஷாகித் உசேன் என்ற வக்கீல் வசித்து வருகிறார். நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் ஒரு வழக்கு தொடர்பாக இவரை நைஜீரிய நாட்டை சேர்ந்த இருவர் சந்திக்க வந்தனர். அப்போது, வழக்கு தொடர்பாக ஆலோசனை பெற வந்தவர்களுக்கும் வக்கீலுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நைஜீரிய நபர்களில் ஒருவன் கத்தியால் வக்கீலின் கழுத்தை அறுத்தான். ரத்தம் சொட்டச் சொட்ட வக்கீல் அலறியதை பொருட்படுத்தாத நைஜீரிய நபர்கள் அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.

ஆந்திரா மாநிலத்தில் மர்ம நபர்களால் 3 பேர் சுட்டுக்கொலை

Posted: 24 Sep 2014 05:09 PM PDT

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பினகாமிடி கிராமத்தை சேர்ந்த 3 பேர் நேற்று காலை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் எலூரு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். பெடவுடபள்ளி அருகில் சென்ற போது, மற்றொரு வாகனம் அவர்களது கார் மீது மோதியது. இதனால் அவர்கள் காரை நிறுத்தினர். உடனே அந்த வாகனத்தில் வந்த சிலர் 3 பேரையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

21-ம் நூற்றாண்டிலும் மாறாத சித்திக் கொடுமை: சிறுமியை உயிருடன் புதைத்த சிற்றன்னை கைது

Posted: 24 Sep 2014 05:03 PM PDT

உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் இருந்து மேற்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கும் அழகிய ஆக்ரா நகரம் யமுனை நதியின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள சாஸ்திரிபுரம் பகுதியில் வசித்த தாயை இழந்த சுமிக்‌ஷா என்ற 6 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து காணாமால் போனாள். இது குறித்து சிறுமியின் தந்தை தனது இரண்டாவது மனைவி அர்ச்சனாவிடம் கேட்டபோது

கிரிக்கெட் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது மங்கள்யான் வெற்றி: மோடி பாராட்டு

Posted: 24 Sep 2014 04:21 PM PDT

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதை அறிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்தார். இந்த வரலாற்று சாதனை குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:– 1. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பியதன் மூலம் இந்தியா வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது. இந்த சாதனையை நிகழ்த்திய விஞ்ஞானிகளுக்கு எனது

மராட்டிய சட்டசபை தேர்தல்: பிரிதிவிராஜ் சவான் உள்பட 118 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது

Posted: 24 Sep 2014 04:15 PM PDT

288 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட மராட்டிய மாநில சட்டசபைக்கு வரும் அக்டோபர் மாதம் 15-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மாநிலத்தை ஆளும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி-தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி பா.ஜ.க.-சிவசேனா கூட்டணியை எதிர்த்து களமிறங்குகின்றது. பா.ஜ.க.-சிவசேனா கூட்டணிக்கிடையிலான தொகுதி பங்கீடு நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில் வேட்பாளர்கள் தேர்வில் அக்கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தூரில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலி

Posted: 24 Sep 2014 03:44 PM PDT

மத்தியப்பிரதேச மாநிலத்தின் பெருநகரமான இந்தூரில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. இது வரை பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இருவர் பலியாகியுள்ள நிலையில், இந்த நோயால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, இந்தூரில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6 பேர் இந்நோயின் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்

ஆபரேஷனுக்கு பின்னர் சிகிச்சை பெறும் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பிரதமர் சென்று பார்த்தார்

Posted: 24 Sep 2014 12:33 PM PDT

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ஆபரேஷனுக்கு பின்னர் டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை நேற்றிரவு சந்தித்தார். நீரிழிவு நோய் சிகிச்சைக்காக கடந்த 1-ம் தேதி டெல்லி சாக்கெட் பகுதியில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அருண் ஜெட்லிக்கு, சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 10-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சுய உதவிக் குழுவுக்கு கடன் வழங்க லஞ்சம்: வங்கி மேனேஜர் கைது

Posted: 24 Sep 2014 12:02 PM PDT

பீகார் மாநிலம், கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையின் மேனேஜராக பணியாற்றுபவர், ஓம் பிரகாஷ். கிஷன்கஞ்ச் பகுதியில் வசிக்கும் சுய உதவிக் குழுவினருக்கு வங்கிக் கடன் வாங்கித்தர ஏற்பாடு செய்த ஏஜெண்ட் மம்தா ஜெயின் என்பவர், வங்கியின் மேனேஜருக்கு லஞ்சம் கொடுத்தல்தான் கடன் பெற முடியும் என்று பயனாளிகளிடம் கூறியுள்ளார். அந்தக் குழுவைச் சேர்ந்த ஒருவர் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்ததையடுத்து

ஜம்மு-காஷ்மீரில் இருள் சூழ்ந்த பகுதியில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் 6 பேருக்கு பிரசவம்

Posted: 24 Sep 2014 11:48 AM PDT

ஜம்மு-காஷ்மீரில் பெய்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் நகரில் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்தன. பலர் வீடுகளை இழந்துள்ளனர். சாலைகள் சேதமடைந்ததுடன் பல்வேறு பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நகரின் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு இன்றி இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது. இந்நிலையில் மின் இணைப்பு இல்லாத நிலையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அங்கு உள்ள மருத்துவர்கள் 6 பிரசவங்களை பார்த்துள்ளார்.

அசாமில் மழை-வெள்ளத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

Posted: 24 Sep 2014 11:43 AM PDT

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அசாம், மேகாலயா, மாநிலங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அசாமில் நல்பாரா, கோல்பரா, துப்ரி, தெமாஜி, பார்பேட்டா, உடல்குரி, போங்கைகான், கோக்ரஜார், சோனிட்பூர், லக்கிம்பூர், கம்ரப் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

முசாபர் நகரில் தாக்குதல் நடத்த இந்தியன் முஜாகீதின் தீவிரவாதிகள் திட்டம்: டெல்லி போலீஸார் தகவல்

Posted: 24 Sep 2014 10:29 AM PDT

உள்நாட்டு பயங்கரவாத குழுவான இந்தியன் முஜாகீதீன், முசாபர்நகரில் பரவலாக நடைபெற்ற மதக்கலவரங்களுக்கு பழி வாங்கும் விதமாக அங்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டுருப்பது, அண்மையில் இந்தியன் முஜாகீதின் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் அஜாஷ் ஷேக்கின் மடிக்கணினியை சோதனை செய்ததில் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எண்ணெய் நிறுவனங்களுக்கு விவசாயிகள் ஒரு கோடி லிட்டர் எத்தனால் சப்ளை - கட்காரி

Posted: 24 Sep 2014 07:25 AM PDT

விவசாயிகள் மூலம் ஒரு கோடி லிட்டர் எத்தனால் கிடைக்கிறது. இதன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் எண்ணெய் இறக்குமதிக்கு ஆகும் செலவை குறைக்கலாம் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்காரி இதுபற்றி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™