Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தமிழர் பேரவை முன்னெடுத்த 6ஆவது ஆண்டு தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை மூலம் இதய மற்றும் மாரடைப்பு அமைப்புக்கு 32,000 டொலர்கள்!

Posted: 24 Sep 2014 10:33 PM PDT

a

aசெப்டெம்பர் மாதம் 14ஆம் நாள் இசுகாபரோ தொம்சன் பூங்காவில் இடம்பெற்ற 6ஆவது ஆண்டு தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை இதய மற்றும் மாரடைப்பு அமைப்பின் ( Heart and Stroke Foundation) நலமான இதயம் செயற் திட்டத்திற்கு நிதி சேகரிக்கும் நோக்கில் நடைபெறுகிறது. 700 இற்கும் அதிகமானோர் பங்கேற்ற நிதி சேர் நடையில் அரசியற் தலைவர்கள், குமுக ஆர்வலர், வணிகர், முது தமிழர், தன்னார்வத் தொண்டர், மாணவரென அனைத்து வகையான மக்களும் பங்கேற்றனர். கனடாவில் ஏழு மணித்துளிக்கு ஒருவர் என்ற வகையில் மாரடைப்பால் மரணம் அடைகின்றனர். பிற தெற்காசியரைப் போலவே தமிழ்க் கனடியரும் ஏனைய கனடியரைப் பார்க்கிலும் மும்மடங்கு அதிகமாக இதயம் தொடர்பான நோய்களுக்கு இளம் அகவையிலேயே ஆளாகும் அபாயம் உள்ளது. மரபணுக்கள் மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இந்த அபாயம் அதிகமாகிறது. நலமான இதயம் செற்திட்டமானது தங்கள் குடும்பத்தார், நண்பர் மற்றும் குமுகத்தோடு நலமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கும் தங்களின் அனுபவத்தையும் விருப்பையும் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இந் நிதி சேர் நடை நிகழ்விற் கலந்து கொண்டு 32 000 டொலர் நிதியைத் திரட்டியதன் மூலம் உயிர் காக்கும் இதய நோய் ஆராய்ச்சி மற்றும் அறிவூட்டலுக்குத் தங்கள் பங்களிப்பைக் கனடியத் தமிழர் வழங்கினர். இந் நிதி சேர் நடையின் இலக்கான 50 000 டொலர்களை எட்டத் தொடர்ந்தும் நிதி அன்பளிப்புச் செய்ய முடியும். கனடிய எதிர்க்கட்சித் தலைவர் மதிப்புக்குரிய ரொம் மூகிளயர் அவர்களின் செய்தியைப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி இராதிகா சிற்சபைஈசன் அவர்களும், லிபரல் கட்சியின் தலைவர் யசுரின் ரூடோ அவர்களின் செய்தியை இசுகாபரோ ரூச் பார்க் தொகுதியின் வேட்பாளர் திரு கரி ஆனந்தசங்கரி அவர்களும், ஒன்ராறியோ மாகாண முதல்வர் மதிப்புக்குரிய கத்தலின் வின் அவர்களின் செய்தியை மதிப்புக்குரிய அமைச்சர் மிற்சி கன்ரர் அவர்களும் எடுத்து வந்தனர். ரோறன்ரோ நகர சபை சார்பில் திரு மைக்கல் தொம்சன் அவர்களும் மார்க்கம் நகரசபை சார்பில் திரு லோகன் கணபதி அவர்களும் மார்க்கம் கல்விச் சபை உறுப்பினர் செல்வி வனிதா நாதன் அவர்களும் வாழ்த்துச் செய்திகளை வழங்கினர். புரவலர் மற்றும் இணை அமைப்புக்களுக்கான மதிப்பளிப்பு, அதிக நிதி சேகரித்தோருக்கான சான்றிதழ் வழங்கல் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளோடு நிதி சேர் நடை நிகழ்வு முடிவுக்கு வந்தது.

This posting includes an audio/video/photo media file: Download Now

லெகோவை உபயோகித்து வடிவமைக்கப்பட்ட புதிய சுகாதார பராமரிப்பு மையம்!

Posted: 24 Sep 2014 09:56 PM PDT

canada logo

 canada logoகனடா-சஸ்கற்சுவான கிராமப்புறம் ஒன்றில் புதிதாக 12-மில்லியன் டொலர்களில் ஒரு சுகாதார பராமரிப்பு நிலையம் ஆரம்பிக்கப் படவுள்ளது. இதற்கான வடிவமைப்பு லேகோவின் உதவியுடன் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தை லீடர் என்ற இடத்தில் அமைப்பதற்கு நிபுணர்கள் உதவுகின்றனர். தற்சமயம் 4-வேறு கட்டிடங்களில் அமைந்திருக்கும் இந்த பராமரிப்பு நிலையத்தை ஒன்றாக சேர்க்க கூடியதாக புதிய கட்டிடம் அமையும்.

லேகோ துண்டுகளின் உதவியுடன் வைத்தியசாலை எப்படி இருக்க வேண்டும் என்பதை வடிவமைத்தனர்.

இது ஒரு சிறுபிள்ளைத்தனமாக தோன்றிய போதிலும் இந்த வீடியோ இணையத்தில் பதியப்பட்ட போது விரைவாகக மக்கள் மத்தியில் பரவி தங்கள் புதிய வைத்தியசாலை சம்பந்தமாக விவாதித்தனர் என கூறப்பட்டுள்ளது.

எவரும் இதுவரை சிந்தித்துப் பார்க்காத முற்றிலும் புதிய ஒரு ஆற்றல் மிக்க செயல் என கூறப்பட்டுள்ளது. இப்புதிய ஒருங்கிணைக்கப் பட்ட பராமரிப்பு நிலைய கட்டிட வேலைகள் அடுத்த வசந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு 2017-ல் திறந்து வைக்கப்படும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்னாப்ட்ராகன் 410 SOC கொண்ட ஹவாய் ஹானர் 4 ப்ளே ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

Posted: 24 Sep 2014 06:42 AM PDT

samsung

samsungஹவாய் நிறுவனம் ஹவாய் ஹானர் 4 ப்ளே புதிய ஸ்மார்ட்போனை CNY 799 (சுமார் ரூ. 7,921) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது சீனாவில் மட்டும் கிடைக்கும், அதன் உலக வெளியீடு தொடர்பாக எவ்விதமான வார்த்தையும் இல்லை. ஹவாய் ஹானர் 4 ப்ளே ஸ்மார்ட்போன் Adreno 306 ஜி.பீ.யூ (320MHz) மற்றும் ரேம் 1GB உடன் இணைந்து 64 பிட் 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 410 (MSM8916) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஹானர் 4 ப்ளே ஸ்மார்ட்ஃபோனில் இரட்டை சிம் ஆதரவை வழங்குகிறது மற்றும் 720x1280 பிக்சல் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் ஒரு 10 பாயின்ட் தொடு ஆதரவு டிஸ்ப்ளே வருகிறது. ஸ்மார்ட்ஃபோனில் எமோசன் UI 2.3 இணைசேர்க்கப்பட்ட ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. ஹவாய் ஹானர் 4 ப்ளே ஸ்மார்ட்ஃபோனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பேக் இலுமினேடட்(back illuminated) CMOS பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. இதில் மைக்ரோ SD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. ஹவாய் ஹானர் 4 ப்ளே ஸ்மார்ட்ஃபோனில் ப்ளூடூத் 4.0 ஆதரவு, Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ்/ எ-ஜிபிஎஸ், 3ஜி மற்றும் 4G LTE இணைப்பு விருப்பங்கள் வழங்குகிறது. இது ஒரு 2000mAh Li அயன் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது 142.95x72x8.5mm அளவிடுகிறது, சுமார் 160 கிராம் எடையுடையது மற்றும் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வருகிறது. ஹவாய் ஹானர் 4 ப்ளே ஸ்மார்ட்போன் குறிப்புகள்: 720x1280 பிக்சல் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே, இரட்டை சிம், 64 பிட் 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 410 (MSM8916) ப்ராசசர், Adreno 306 ஜி.பீ.யூ, ரேம் 1GB, 8 மெகாபிக்சல் பின்புற கேமரா, 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, மைக்ரோ SD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, ப்ளூடூத் 4.0 ஆதரவு, Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ்/ எ-ஜிபிஎஸ், 3ஜி, 4G LTE, ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட், 2000mAh Li அயன் பேட்டரி, 160 கிராம் எடை..  

This posting includes an audio/video/photo media file: Download Now

உலக கோப்பையோடு கிரிக்கெட்டுக்கு ஓய்வு: 'இந்திய மருமகன்' சோயிப் மாலிக் அறிவிப்பு!

Posted: 24 Sep 2014 06:28 AM PDT

shoaib-malik

shoaib-malikஅடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியோடு ஓய்வு பெற உள்ளார் பாகிஸ்தான் ஆல்-ரவுண்டரும், இந்தியாவின் மருமகனுமான சோயிப் மாலிக். 34 வயதான பாகிஸ்தான் நாட்டு ஆல்-ரவுண்டர் சோயிப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணந்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் அணியான ஹோபர்ட் ஹரிகேன்ஸ் சார்பில் விளையாடிவருகிறார். நேற்றிரவு நடந்த நார்தன் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி காண்பித்த சோயிப், 22 பந்துகளில் 45 ரன்களை குவித்தார். அணியின் வெற்றிக்கு இவரது அதிரடியும் ஒரு வகையில் உதவி செய்தது. இந்நிலையில், சிறிது காலமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படாமல் இருக்கும் தனக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று சோயிப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐம்பது ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிவிட்டு அதன்பிறகு ஓய்வு பெறப்போவதாகவும் சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் எனக்கு உயிர்நாடி. ஆட்டம் சரியாக வராவிட்டால் அறையில் சென்று ஒதுங்கிக்கொள்ளும் ஆள் நான் கிடையாது. மீண்டும் ஆட்டத்தில் கவனத்தை குவிப்பதற்காக, இசையை கேட்பது, நீச்சல் அடிப்பது, குடும்பத்தாருடன் பேசுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

86 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் ஹரிகேன்ஸ்!

Posted: 24 Sep 2014 06:24 AM PDT

hobart-hurricanes

hobart-hurricanesசாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் நேற்று, பலம் வாய்ந்த நார்தன் டிஸ்ட்ரிக்சை வீழ்த்தியது ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் ஹரிகேன்ஸ்.

ராய்ப்பூரில் நேற்றிரவு நடந்த 9வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹோபர்ட் ஹரிகேன்சும், நியூசிலாந்தின் நார்தன் டிஸ்ட்ரிக்சும் சந்தித்தன.

டாசில் வெற்றி பெற்ற நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஹோபர்ட் அணியின் ரன்வேகம் முதல்பாதியில் சற்று சுமாராகவே நகர்ந்தது.

9 ஒவர்களில் தான் 50 ரன்களை தொட்டது. பென் டங் 12 ரன்னிலும், கேப்டன் டிம் பெய்ன் 43 ரன்களிலும் (34 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்கள்.

இதன் பின்னர் சோயிப் மாலிக்கும், எய்டன் பிளிஸ்சாட்டும் ஜோடி சேர்ந்து, நார்தன் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். இதனால் ரன்ரேட் விகிதம் மளமளவென உயர்ந்தது.

டிரென்ட் பவுல்ட்டின் ஒரே ஓவரில் இந்த ஜோடி 5 பவுண்டரிகளை ஓட விட்டது. 3வது விக்கெட்டுக்கு இவர்கள் 100 ரன் திரட்டிய நிலையில் கடைசி ஓவரில் பிரிந்தனர்.

பிளிஸ்சாட் 62 ரன்களில் (43 பந்து, 8 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹோபர்ட் அணி 3 விக்கெட்டுக்கு 178 ரன்கள் குவித்தது. சோயிப் மாலிக் 45 ரன்களுடன் (22 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் நின்றார்.

கடைசி 5 ஓவர்களில் மட்டும் ஹோபர்ட் அணி 76 ரன்களை சேகரித்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் 179 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நார்தன் அணி ஹோபர்ட்டின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மிரண்டது.

கனே வில்லியம்சன் (3 ரன்), கேப்டன் பிளைன் (0), வாட்லிங் (9 ரன்) ஆகிய முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கில் வெளியேற, நார்தன் அணியால் இலக்கை நெருங்க கூட முடியவில்லை.

16.4 ஓவர்களில் 92 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் 86 ரன்கள் வித்தியாசத்தில் ஹோபர்ட் அணி அபார வெற்றி பெற்றது.

ஹோபர்ட் தரப்பில் ல்பனாஸ், போலிஞ்சர் தலா 3 விக்கெட்டுகளும், மென்னி, டோஹர்த்தி தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

3வது ஆட்டத்தில் விளையாடிய ஹோபர்ட் அணிக்கு இது 2வது வெற்றியாகும். 2வது ஆட்டத்தில் ஆடிய நார்தனுக்கு இது முதலாவது தோல்வியாகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

எபோலாவால் தாக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிக்கும்: பகீர் எச்சரிக்கை!

Posted: 24 Sep 2014 03:05 AM PDT

ebola-test

ebola-testஎபோலா வைரஸை கட்டுப்படுத்தாவிட்டால் அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நவம்பர் மாதத்திற்குள் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, கினியா, சியர்ரா லியோனில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இதுவரை 5 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர். அதில் 2 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில்,

எபோலா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் மாதங்களில் வைரஸால் தாக்கப்படுவோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்கை வாரத்திற்கு மட்டும் நூறில் இருந்து ஆயிரங்களாக அதிகரிக்கும்.

போதிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் வரும் நவம்பருக்குள் எபோலாவால் தாக்கப்படுவோரின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வைரஸால் பாதிக்கப்படுவார்கள்.

எபோலா காய்ச்சல் ஏற்பட்டால் அந்த நபர் சில நாட்களிலேயே இறந்துவிடுவார். எபோலா காய்ச்சல் ஏற்பட்டால் உடம்பு வலி, வாந்தி, பேதி, ரத்தப் போக்கு உள்ளிட்டவை ஏற்படும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெற்கு கினியாவில் பரவத் துவங்கிய எபோலா வைரஸ் ஆயிரக்கணக்கானோரை தாக்கியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்காவின் அதிரடி குண்டு மழை.. ஒரே நாளில் 70 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் காலி!

Posted: 24 Sep 2014 02:40 AM PDT

us-attack

us-attackஅமெரிக்க விமானப்படையினர் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது நடத்திய அதிரடி குண்டு வீச்சில் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவில் செவ்வாய்க்கிழமை அமெரிக்க விமானப்படையினர் அதிரடித் தாக்குதலை மேற்கொண்டனர்.

இதில்தான் இத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த செய்தியை சிரியா போர் குறித்த தகவல்களை கவனித்து வரும் மனித உரிமை அமைப்பான சிரியா அப்சர்வேட்டரி பார் ஹியூமன் ரைட்ஸ் என்ற அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் ரமி அப்துல் ரஹ்மான் கூறுகையில், உயிர்ப்பலி மேலும் அதிகமாக இருக்கும் என்றே கருதுகிறோம்.

70 என்பது குறைந்ததுதான், உண்மையில் இதை விட அதிக அளவிலான தீவிரவாதிகள் பலியாகியிருப்பார்கள் என்று கருதுகிறோம் என்றார்.

ரக்கா, டெயர் அல் ஸோர், ஹஸகா ஆகிய பகுதிகளில்தான் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளை தீவரவாதிகள் தான் தங்களது வசம் வைத்துள்ளனர்.

மேலும் காயமடைந்தோர் எண்ணிக்கை 300க்கு மேல் இருக்கும் என்றும் ரமி கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பின் லேடனின் மருமகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய அமெரிக்க கோர்ட்!

Posted: 24 Sep 2014 02:36 AM PDT

osama-bin-laden

osama-bin-ladenஅமெரிக்கர்களை கொல்ல திட்டமிட்டது, தீவிரவாதிகளுக்கு உதவியது உள்ளிட்ட குற்றங்களுக்காக அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் மருமகன் சுலைமான் அபு கெய்துக்கு நியூயார்க் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. அமெரிக்க படையால் சுட்டுக் கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் மருமகன் சுலைமான் அபு கெய்த்(48). அமெரிக்காவில் வசித்து வரும் அவர் அமெரிக்கர்களை கொலை செய்ய திட்டமிட்டது, தீவிரவாதிகளுக்கு உதவியது உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு நியூயார்க் நகரின் மான்ஹாட்டனில் இருக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிமன்றம் சுலைமானுக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. முன்னதாக நீதிமன்றத்தில் சுலைமான் கூறுகையில், நான் ஆண்டவனைத் தவிர வேறு யாரிடமும் கருணையை எதிர்பார்க்க மாட்டேன் என்றார். அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தை அல் கொய்தா தீவிரவாதிகள் விமானம் மூலம் தாக்கியதில் சுமார் 3 ஆயிரம் பேர் பலியான வீடியோவை பார்த்து சுலைமான் மகிழ்ச்சி அடைந்தது நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த தாக்குதல் நடந்த அன்று மாலை சுலைமான் ஆப்கானிஸ்தானில் உள்ள குகையில் ஒசாமாவை சந்தித்துள்ளார். அப்போது இந்த தாக்குதல்களை நாம் தான் நடத்தினோம் என்று ஒசாமா சுலைமானிடம் தெரிவித்துள்ளார். அல் கொய்தா சார்பில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் செய்த சுலைமான் ஒசாமாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆளில்லா உளவு விமானத்தாக்குதல்! ஜெனீவாவில் எதிர்ப்பு தெரிவித்த இலங்கை

Posted: 24 Sep 2014 02:25 AM PDT

jeneeva_srilanka

jeneeva_srilankaபயங்கரவாதிகள் மீதான ஆளில்லா உளவு விமானத் தாக்குதல்கள் சர்வதேச மனித உரிமைகளை மீறும் வகையில் அமைந்திருப்பதாக இலங்கை குற்றம் சாட்டியுள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் அமர்வில் கலந்து கொண்ட இலங்கையின் பிரதிநிதி இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆளில்லா உளவு விமானத் தாக்குதல்கள் மனித உரிமைகளை மீறுவதாக மட்டுமன்றி, மனிதாபினமானத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளன. இலங்கை பயங்கரவாத்தை எதிர்கொண்டு வெற்றிகண்ட நாடு. பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் மனித உரிமைகள் மீறப்படக் கூடாது. உலகின் பல்வேறு நாடுகள் ஆளில்லா உளவு விமானங்களை கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றன. ஒரு சில நாடுகள் தான் இவற்றில் ஆயுதங்களைப் பொருத்தி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இது கண்டிக்கப்பட வேண்டிய விடயம். இதற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இலங்கை வலியுறுத்தியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐ.நா.வில் இன்று வாய்மூல அறிக்கை சமர்ப்பிப்பு: பதிலளிக்க தயாராகிறது இலங்கை

Posted: 24 Sep 2014 01:40 AM PDT

jeneeva

jeneevaஜெனீவாவில் யுத்தக் குற்றம் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சர்வதேச விசாரணைகள் தொடர்பான இடைக்கால வாய்மூல அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்படவுள்ளது. மனித உரிமைகள் ஆணையாளர் சயீட் அல் ஹுசைன் இன்று இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகளின் 27வது மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கிறார். 'ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் பிரதி ஆணையாளர் ப்ளாவியா அல்லது ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் விசாரணைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சன்ட்ரா பெய்டா ஆகியோரில் ஒருவர் இலங்கை குறித்த வாய்மூல அறிக்கயை வெளியிடவுள்ளனர். இந்நிலையில், இலங்கை குறித்த வாய்மூல அறிக்கைக்கு உடனடியாகவே இலங்கை தரப்பில் பதிலளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜெனீவாவில் உள்ள இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க வாய்மூல அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் இலங்கையின் சார்பில் பதிலளிப்பார். அதுமட்டுமன்றி அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வாய்மூல அறிக்கை குறித்து மனித உரிமைகள் பேரவையில் இன்றைய தினம் உரையாற்றவுள்ளன. ஏற்கனவே நேற்றுமுன்தினம் இலங்கை குறித்த வாய்மூல அறிக்கைகவுன்ஸிலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அறிக்கையின் ஊடாக அனைத்து இலங்கையினரதும் நலனுக்காக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் விசாரணை செயற்பாட்டுடனும் ஐ.நாவின் விசேட ஆணையாளர்களுடனும் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்படுமாறு இலங்கையிடம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் - ஹுசைன் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™