Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கேரளாவில் வெளிநாட்டு மதுபானங்களுக்கு வரி உயர்வு: உம்மன்சாண்டி பேட்டி

Posted: 17 Sep 2014 11:27 PM PDT

கேரளாவை மதுவில்லாத மாநிலமாக்க போவதாக உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு அறிவித்துள்ளது. அதன் முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான பார்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மதுபான பார்கள் மூடப்படுவதால் அரசுக்கு சுமார் ரூ.8 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்டது. இதனை சரி கட்டுவது எப்படி? என்பது பற்றி ஆலோசிக்க கேரள மந்திரிசபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு முதல்– மந்திரி உம்மன்சாண்டி நிருபர்களிடம் கூறியதாவது:–

கணவருக்கு பாரத ரத்னா விருது கோரி என்.டி.ராமராவ் மனைவி லட்சுமி சிவபார்வதி தர்ணா

Posted: 17 Sep 2014 11:11 PM PDT

ஆந்திர முன்னாள் முதல்–மந்திரி என்.டி.ராமராவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவும் சட்டசபையில் இதுகுறித்து முன்பு பேசினார். ஆனால் தற்போது பாரதீய ஜனதாவுடன் நெருக்கமாக இருக்கும் சந்திரபாபு நாயுடு என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரை

காஷ்மீரில் 11 நாட்களுக்கு பின் தலைமை செயலகம் செயல்பட தொடங்கியது

Posted: 17 Sep 2014 11:11 PM PDT

காஷ்மீரில் 100 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத மழை வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பேரிழிவு ஏற்பட்டது. நிலச்சரிவால் சாலைகள், பாலங்கள், குடியிருப்புகள் கடும் சேதம் அடைந்தன. வெள்ளத்தில் சிக்கித்தவித்த லட்சக்கணக்கான மக்களை ராணுவ வீரர்கள் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். தலைநகர் ஸ்ரீநகருக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. சாலைகள், வீடுகள், அரசு அலுவலங்கள் வெள்ளக்காடாக மாறியது. மழை

நடிகை ரோஜா உயிருக்கு ஆபத்து: செல்வமணி கவலை

Posted: 17 Sep 2014 10:33 PM PDT

ஆந்திர மாநிலம் நகரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாத்திரை திரு விழா நடந்தது. இதில் தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா கலந்து கொண்டார். ஆரத்தி கொடுப்பதில் அவருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் யாரோ ஒருவர் ரோஜா கையில் கத்தியால் கிழித்தார். இதில் அவரது வலது கையில் காயம் ஏற்பட்டது. அதோடு அவரது ஆரத்தி

வருண் காந்திக்கு மீண்டும் கட்சி பொறுப்பு வழங்கவேண்டும்: மேனகாகாந்தி

Posted: 17 Sep 2014 10:25 PM PDT

உத்தரபிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி அடைந்தது. 11 சட்டசபை தொகுதிகளில் 2 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த 11 தொகுதிகளும் 2012 தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்ற தொகுதிகள் ஆகும். மத்தியில் ஆட்சியைப் பிடித்த சில மாதங்களிலேயே பா.ஜனதா இந்த அளவுக்கு மோசமான தோல்வியை சந்தித்தது கட்சியினரிடையே

மராட்டியத்தில் பா.ஜ.க.–சிவசேனா உடன்பாடு ஏற்பட்டது: பா.ஜ.க. 119 தொகுதிகளில் போட்டி

Posted: 17 Sep 2014 10:17 PM PDT

288 இடங்களை கொண்ட மராட்டிய மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.– சிவசேனா கூட்டணிக்கும் காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. மராட்டியத்தில் பா.ஜ.க.– சிவசேனா கூட்டணி கடந்த 25 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அந்த மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலின்போது பா

டீசல் விலை 50 காசு குறைகிறது: சட்டசபை தேர்தல் வருவதால் நடவடிக்கை

Posted: 17 Sep 2014 10:07 PM PDT

டீசலை கடந்த காலங்களில் மிகவும் குறைந்த விலைக்கு விற்றதால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. இது மத்திய அரசுக்கு கடும் மானியச் சுமையையும் உண்டாக்கியது. இந்த மானிய சுமையை நிவர்த்தி செய்யும் வகையில் டீசல் விலை மாதந்தோறும் 50 காசு உயர்த்தப்பட்டது. தற்போது டீசல் விற்பனை மீதான மானியச்சுமை முற்றிலும் நீங்கி விட்டது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தற்போது டீசல் விற்பனை மூலம் கணிசமாக லாபம் கிடைக்கிறது,

நதிக்கரையில் உலாவிய நண்பர்கள்: மாலைப்பொழுதில் மகிழ்ச்சியில் திளைத்த மோடி-க்சீ ஜின்பிங்

Posted: 17 Sep 2014 05:33 PM PDT

மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள சீன பிரதமர் க்சீ ஜின்பிங்கிற்கு குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நேற்று சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு தலைவர்களும் இன்று வர்த்தகம் மற்றும் தொழில் முதலீடு பற்றி பேச உள்ள நிலையில் நேற்றைய மாலைப்பொழுதில் மோடியும் ஜின்பிங்கும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

கறுப்பு பண விவகாரம்: பாராளுமன்ற குழு ஆய்வு

Posted: 17 Sep 2014 05:24 PM PDT

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து உள்ளது. இந்த குழு கணக்கில் வராத பணம் தொடர்பாக விசாரணை குழுவுக்கு ஏற்கனவே சில சிபாரிசுகளை வழங்கி இருக்கிறது.

கிரானைட் குவாரி வழக்கு: சகாயம் நியமனத்துக்கு எதிரான அப்பீல் மனு மீது இன்று விசாரணை

Posted: 17 Sep 2014 03:55 PM PDT

தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்பட்ட கிரானைட் குவாரிகள், மணல், கல் குவாரிகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

உனக்கு 135-எனக்கு 153: தொகுதிகளை பிரிப்பதில் பா.ஜ.க.வுக்கு இறுதி வாய்ப்பு வழங்கிய சிவசேனா

Posted: 17 Sep 2014 03:50 PM PDT

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு பா.ஜ.க கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வருகிறது. இச்சிக்கலை தீர்ப்பதற்காக பா.ஜ.க தேசிய தலைவரான அமித் ஷா மும்பையில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் தொகுதி பங்கீட்டிற்கான புதிய யோசனையை சிவசேனா முன் வைத்துள்ளது. அதில் தங்களுக்கு 153 தொகுதிகளை நிறுத்திக்கொண்ட சிவசேனா, பா.ஜ.க.வுக்கு 135 தொகுதிகளை வழங்குவதாக கூறியது.

மாநில மனித உரிமை ஆணைய தலைவரை உடனே நியமிக்கவேண்டும்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Posted: 17 Sep 2014 03:22 PM PDT

தமிழ்நாட்டில் மூன்று வருட காலமாக காலியாக உள்ள மாநில மனித உரிமை ஆணைய தலைவரை ஏன் இது வரை நியமிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் அப்பதவிக்கு உடனடியாக புதிய தலைவரை நியமனம் செய்யவேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாணவர்கள் தாக்கப்பட்டனர்.

பாராளுமன்ற ஒழுக்க நெறி குழுவின் புதிய தலைவராக அத்வானி நியமனம்

Posted: 17 Sep 2014 03:08 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த மே மாதம் மத்திய மந்திரி சபை அமைந்தபோது பா.ஜனதாவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானிக்கு மந்திரி சபையில் இடம் கிடைக்கவில்லை. 75 வயதுக்கு மேற்பட்டவர்களை மந்திரிகளாக நியமிப்பதில்லை என்ற முடிவை பா.ஜனதா எடுத்ததே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

4 நாட்கள் வியட்நாம் சுற்றுப்பயணம் முடிந்து ஜனாதிபதி டெல்லி திரும்பினார்

Posted: 17 Sep 2014 02:40 PM PDT

ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கடந்த 14-ந் தேதி முதல் 4 நாள் அரசுமுறை பயணமாக வியட்நாமுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜனாதிபதி சுற்றுப்பயணத்தின் போது இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

டெல்லியில் ஓடும் காரில் 23 வயது இளம்பெண் கற்பழிப்பு

Posted: 17 Sep 2014 12:25 PM PDT

இந்திய தலைநகர் டெல்லியில் 23 வயது பெண் ஒருவர் தனது ஆண் நண்பர் மற்றும் வேறு இரு நபர்களால் ஓடும் காரில் வைத்து கற்பழிக்கப்பட்டார். தங்கள் வெறியை தீர்த்துக்கொண்ட மூன்று வெறி நாய்களும் பின் அப்பெண்ணை தெற்கு டெல்லியில் உள்ள நேரு பேலஸ் பகுதியில் தூக்கி வீசி விட்டு சென்றுவிட்டனர். டெல்லி காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவரின் மகளான அப்பெண்ணுக்கு நேற்றிரவு குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து அவரை கற்பழித்துள்ளது தெரிய வந்துள்ளளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவி: திரிபுரா அரசு அறிவிப்பு

Posted: 17 Sep 2014 11:59 AM PDT

ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியது. ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். ஸ்ரீ நகரின் பல பகுதிகள் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டது. ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இது தேசிய அளவிலான பேரிழப்பு என பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

சீன பிரதமர் வந்துள்ள நிலையில் 1000 சீன வீரர்கள் காஷ்மீருக்குள் ஊடுருவல்

Posted: 17 Sep 2014 11:55 AM PDT

சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். முதல் நாளான நேற்று குஜராத் மாநிலத்துக்கு சென்ற அவருக்கு பிரதமர் நரேந்திரமோடி விருந்து கொடுத்தார். இரண்டாம் நாளான இன்று (வியாழக்கிழமை) சீன அதிபர் ஜின்பிங் டெல்லி சென்றார். ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து சின அதிபரை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்தித்துப் பேசினார். இதன் தொடர்ச்சியாக

பா.ஜ.க.வின் 100 நாள் ஆட்சி புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்

Posted: 17 Sep 2014 10:58 AM PDT

மத்தியில் பா.ஜ.க.வின் 100 நாட்கள் ஆட்சி குறித்து புத்தகம் வெளியிட்டுள்ளது காங்கிரஸ். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தோல்வியுற்றதற்கு கொடுத்த வாக்குறுதிகளை சிறிதளவும் நிறைவேற்றாத பா.ஜ.க.வின் மீது மக்களுக்கு எழுந்துள்ள கோபமே காரணம் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

விசா விலக்கு திட்டங்கள் குறித்து சார்க் அதிகாரிகள் ஆலோசனை

Posted: 17 Sep 2014 10:28 AM PDT

சார்க் நாடுகளின் குடியேற்ற அதிகாரிகள் இன்று விசா விலக்கு திட்டங்கள் உள்ளிட்ட குடியேற்ற நடைமுறைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். நேபாள தலைநகர் காத்மண்டில் நடைபெற உள்ள சார்க் உள்துறை மந்திரிகள் மாநாட்டையொட்டி இன்று குடியேற்ற அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பங்கேற்ற அதிகாரிகள், சார்க் விசா விலக்கு திட்டம்

டூப்ளிகெட் மெமரி கார்டுகளை களையெடுக்க களமிறங்கும் சான்டிஸ்க்

Posted: 17 Sep 2014 10:27 AM PDT

உலக அளவில் பிரபலமான மெமரி கார்டு, பென் டிரைவ் தயாரிக்கும் சான்டிஸ்க் நிறுவனத்திற்கு சந்தைகளில் விற்கும் டூப்ளிகெட் மெமரி கார்டுகள் பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் 512 எம்.பி அளவில் இருந்து 512 ஜி.பி வரை 1000 மடங்கு கொள்ளளவை அதிகரித்து சாதனை படைத்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™