Tamil Star |
- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் அனந்தி, ரவிகரன் பங்கேற்பு!
- வாக்குகளை மாற்றியமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது!- ஹரின் பெர்னாண்டோ
- நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். கத்திகுத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயம்!
| ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் அனந்தி, ரவிகரன் பங்கேற்பு! Posted: 17 Sep 2014 09:41 PM PDT
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 27வது கூட்டத்தொடரின் பக்க அமர்வான சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் சந்திப்பில், இலங்கையின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது அவர்கள், தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், நில அபகரிப்பு, கடல் தொழில் ஆக்கிரமிப்பு, பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறித்து ஆதாரங்களுடன் அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வாக்குகளை மாற்றியமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது!- ஹரின் பெர்னாண்டோ Posted: 17 Sep 2014 09:38 PM PDT
விருப்பு வாக்குகைள மாற்றியமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பதுளை கச்சேரியில் இதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு இம்முறை ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சி விருப்பு வாக்கு பட்டியலில் சசீந்திர மூன்றாம் இடத்தையே பிடிப்பார் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனை மாற்றியமைக்கும் நோக்கில் விருப்பு வாக்கு வேட்டையில் ஈடுபடவுள்ளனர். அரசாங்கத்தின் வீழ்ச்சி ஊவா மாகாணசபையிலிருந்து ஆரம்பமாகின்றது. அரசாங்கத்தினால் உரிய முறையில் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. தேர்தல் லஞ்சமாக அரசாங்கம், பணம் மற்றும் பொருட்களை மக்களுக்கு வழங்கி வருவதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இறுதிவாக்கு எண்ணும் வரை எதிர்க் கட்சிகள் ஒன்றாக செயற்பட வேண்டும்- ஹரின் ஊவா மாகாணசபை தேர்தல் தினத்தன்று எதிர்க்கட்சிகள் யாவும் இணைந்து வாக்குப்பெட்டிகளை பாதுகாக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ இந்தகோரிக்கையை விடுத்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தை பொறுத்தவரை வாக்கு வீழ்ச்சி ஒன்று ஏற்படுவதை ஏற்றுக்கொள்ளாது. எனவே தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை எதிர்க்கட்சிகள் விழிப்பாக செயற்பட வேண்டியது அவசியம் என்றும் ஹரின் குறிப்பிட்டார். தேர்தல் பிரசார இறுதிக் கூட்டத்தின்போது அவர் இதனை குறிப்பிட்டார். எனவே ஜேவிபி மற்றும் சரத் பொன்சேகாவின் கட்சி ஆகியன இறுதி வாக்குகள் எண்ணப்படும் வரை தமது கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று ஹரின் கேட்டுக்கொண்டார். பதுளையில் ஐக்கிய தேசியக் கட்சிக்காக பாரிய இளைஞர் அலை ஒன்று புறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 17 Sep 2014 09:26 PM PDT
ரொறன்றோவின் Keele Street and Finch Avenue West பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். அந்தப் பகுதியில் உள்ள உயர் மாடிக் குடியிருப்பொன்றின் மாடிப் படிகளில் இருபது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் நேற்று மாலை 5:15 வில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கொலை சம்மந்தமாக காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர். . இதேவேளை, நேற்று மாலை நான்கு முப்பதளவில், ஓஷவாவில் Durham College வளாகத்தில் உள்ள கோப்பி விற்பனை நிலையம் ஒன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதம், தீவிரமடைந்து, ஓருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். University of Ontario Institute of Technology யின் மாணவரான 22 வயதான ஆண், உயிராபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். அவர் மண்ணிற தோலைக் கொண்டவரெனவும், சுமார் 5 அடி 8 அங்குலம் உயரமானவரெனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


