மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- எனது அரசியல் வழிகாட்டி ஜெயலலிதா: நடிகை ரோஜா பேட்டி
- மராட்டிய சட்டசபை தேர்தல் காங். கூட்டணி உடைகிறது
- மத்திய அரசு ஊழியர்கள் வருகையை பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறை அமல்
- கிராமத்தில் செல்போன் பயன்படுத்தியதால் தாக்குதல்: இளம்பெண் தீக்குளித்து பலி
- திருப்பதி கோவில் பிரமோற்சவம் நாளை மறுநாள் தொடங்குகிறது
- ஆந்திராவில் அரசு வேலை வாய்ப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு: சந்திரபாபு நாயுடு
- மங்கள்யான் வெற்றி: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
- செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது
- 11 ஆண்டுகளாக ஆந்திராவை கலங்கடித்த சர்வதேச செம்மரக்கடத்தல் மன்னன் சென்னையில் கைது
- திருட்டு வழக்கில் பெண்களுக்கு மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை: போலீஸ் எஸ்.ஐ. சஸ்பெண்ட்
- நேற்று 4 பிரேதங்கள் கிடைத்தன: ஜம்மு-காஷ்மீர் மழை, வெள்ளத்துக்கு 284 பேர் பலி
- கணவனோ (அ) மனைவியோ தாம்பத்திய உறவுக்கு மறுத்தால் விவாகரத்து அளிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டு
- நவராத்திரியை அரக்கர்களின் திருவிழா என்று விமர்சித்த சர்ச்சைக்குரிய மதத்தலைவர் கைது
- என்கவுன்டர் நடவடிக்கையை கட்டுப்படுத்த 11 நெறிமுறைகள்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் அச்சுறுத்திய முதலையை கிராமவாசிகளே அடித்துக் கொன்றனர்
- மேகாலாயா: மலைப்பிரதேசத்தில் நிலச்சரிவு - கர்ப்பிணி உள்பட 8 பேர் பரிதாப பலி
- பழங்குடியின மாணவிகள் காப்பகத்தில் சிறுமிகளை வைத்து விபச்சாரம்: 5 பேர் கைது
- மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைவதை இஸ்ரோ மையத்தில் இருந்து பிரதமர் பார்வையிடுகிறார்
- பிரசவத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த 3 டாக்டர்களுக்கு ஜாமின் மறுப்பு
- கல்வி சுற்றுலாவாக நாசாவிற்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் அஸாம் அரசு
| எனது அரசியல் வழிகாட்டி ஜெயலலிதா: நடிகை ரோஜா பேட்டி Posted: 23 Sep 2014 10:46 PM PDT செல்வமணி இயக்கத்தில் வெளியான 'செம்பருத்தி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. ஆந்திர மாநிலம் கடப்பாவில் பிறந்த அவர் ''பிரேம தவசு' என்ற படத்தின் மூலம் தெலுங்கு படத்திலும் அறிமுகமானார். இதுவரை 105–க்கும் அதிகமான படங்களில் நடித்து உள்ளார். சினிமா, டெலிவிஷன் ஆகியவற்றில் முத்திரை பதித்த ரோஜா அரசியலிலும் நுழைந்து சாதனை படைத்து உள்ளார். |
| மராட்டிய சட்டசபை தேர்தல் காங். கூட்டணி உடைகிறது Posted: 23 Sep 2014 10:25 PM PDT மராட்டிய மாநில சட்டசபை தேர்தல் வருகிற அக்டோபர் 15–ந்தேதி நடக்கிறது. அத்துடன் மறைந்த மத்திய மந்திரி கோபிநாத் முண்டே மறைவால் காலியாக உள்ள பீட் பாராளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. சட்டசபை தேர்தலை சிவசேனா–பா.ஜனதா ஒரு அணியாகவும், காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் ஒரு அணியாகவும் சந்திக்கின்றன. இதில் சிவசேனா – பா.ஜனதா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி |
| மத்திய அரசு ஊழியர்கள் வருகையை பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறை அமல் Posted: 23 Sep 2014 10:17 PM PDT ''மத்திய அரசு ஊழியர்களின் வருகைப் பதிவை 'பயோமெட்ரிக்' முறையில் செய்ய வேண்டும்'' என்று அரசு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலைக்கு வரும் நேரத்தை 'பயோ மெட்ரிக்' முறையில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு அலுவலகங்களில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளர் ராம்சேவக் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:– |
| கிராமத்தில் செல்போன் பயன்படுத்தியதால் தாக்குதல்: இளம்பெண் தீக்குளித்து பலி Posted: 23 Sep 2014 10:07 PM PDT உத்தரபிரதேச மாநிலம் அருயய்யா மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் செல்போனை பயன்படுத்தி வந்தாள். சம்பவத்தன்று அந்த இளம்பெண் செல்போனில் பேசிக் கொண்டிருந்தாள். அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவர் உள்பட 4 பேர் அதை கவனித்து விட்டனர். அந்த பெண் வீட்டை விட்டு வெளியே வந்த போது 4 பேரும் சேர்ந்து ''நீ செல்போனை தவறான நடத்தைக்கு பயன்படுத்துகிறாய். உன்னை சும்மா விட மாட்டோம். உனக்கு பாடம் கற்பிப்போம் என்று மிரட்டினார்கள். இனி போன் பேசினால் தொலைத்து விடுவோம் என்று கூறி அடித்து |
| திருப்பதி கோவில் பிரமோற்சவம் நாளை மறுநாள் தொடங்குகிறது Posted: 23 Sep 2014 10:04 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் நாளை மறுநாள் (26–ந்தேதி) தொடங்குகிறது. அடுத்த வாரம் 4–ந்தேதி வரை 9 நாட்கள் பிரமோற்சவம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வுக்கான கருடசேவை வருகிற 30–ந்தேதி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நாளை அங்குரார்பணம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏழுமலையானின் படை தளபதியான விஸ்வச்சேனா ஊர்வலம் |
| ஆந்திராவில் அரசு வேலை வாய்ப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு: சந்திரபாபு நாயுடு Posted: 23 Sep 2014 09:58 PM PDT ஆந்திராவில் அரசு வேலை வாய்ப்புக்கான வயது வரம்பு தற்போது 34 வயதாக உள்ளது. இதனை 40 ஆக உயர்த்தி சந்திரபாபுநாயுடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு மேலும் 5 ஆண்டுகள் அதிகரித்து வயது வரம்பு 45 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. |
| மங்கள்யான் வெற்றி: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு Posted: 23 Sep 2014 08:06 PM PDT மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தும பணி வெற்றிகரமாக நடந்தது. இந்த நிகழ்வை பிரதமர் நரேந்திரமோடி நேரில் பார்வையிட்டார். முதல் முயற்சியிலேயே மங்கயான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். |
| செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது Posted: 23 Sep 2014 07:48 PM PDT செவ்வாய் கிரகத்தில் ஏராளமான கனிம வளங்கள் உள்ளன. மேலும் அங்கு தண்ணீரும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் உள்ள கனிம வளங்கள் பற்றி ஆய்வு செய்யவும் அவற்றை சொந்தமாக்கிக் கொள்ளவும் உலகின் முன்னணி நாடுகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மங்கள்யானை ஆய்வு செய்வதற்கான தொடக்க முயற்சிகளில் இதுவரை அமெரிக்காவின் நாசா நிறுவனம், ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சிக்கழகம் ஆகிய இரண்டு மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. சீனா, |
| 11 ஆண்டுகளாக ஆந்திராவை கலங்கடித்த சர்வதேச செம்மரக்கடத்தல் மன்னன் சென்னையில் கைது Posted: 23 Sep 2014 04:17 PM PDT ஆந்திர மாநில வனப்பகுதிகளில் சமீப காலமாக செம்மரங்களை வெட்டி கடத்தும் செயல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தை சேர்ந்த அப்பாவி தொழிலாளர்களை பண ஆசை காட்டி செம்மரங்களை கடத்தி வருகின்றனர். கடந்த 11 ஆண்டுகளாக செம்மரக்கடத்தலால் ஆந்திர மாநிலத்தை கலங்கடித்து வந்தவர் மலியக்கல் மூசா. தமிழகத்தை சேர்ந்த இவர் |
| திருட்டு வழக்கில் பெண்களுக்கு மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை: போலீஸ் எஸ்.ஐ. சஸ்பெண்ட் Posted: 23 Sep 2014 03:35 PM PDT பஞ்சாப் மாநிலம், கபுர்தலா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திரூட்டு வழக்கு தொடர்பாக அங்குள்ள லக்கான் கோலே கிராமத்தை சேர்ந்த 2 பெண்களை சந்தேகத்தின்பேரில் போலாத் பகுதி போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களை விடுவித்து அழைத்து செலவதற்காக அங்கு வந்த முன்னாள் ஊர் பஞ்சாயத்து தலைவர், அந்த இரு பெண்களும் மயங்கிய நிலையில் சுருண்டு விழுந்துக் கிடந்ததைக் கண்டு, |
| நேற்று 4 பிரேதங்கள் கிடைத்தன: ஜம்மு-காஷ்மீர் மழை, வெள்ளத்துக்கு 284 பேர் பலி Posted: 23 Sep 2014 02:34 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு கடுமையான வெள்ளச் சேதம் ஏற்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் முழுமையாக பாதிக்கப்பட்டது. ஜீலம், தாவி உள்பட முக்கிய நதிகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடியது. கடந்த சில தினங்களாக வெள்ளம் வடிந்த நிலையில் அங்கு மீட்பு பணிகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன |
| கணவனோ (அ) மனைவியோ தாம்பத்திய உறவுக்கு மறுத்தால் விவாகரத்து அளிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டு Posted: 23 Sep 2014 02:32 PM PDT தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணும், அவருடைய கணவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அவருடைய கணவர், லண்டனில் வசித்து வருகிறார். அவர் மனைவியிடம் விவாகரத்து கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், தாம்பத்திய உறவுக்கு உடன்பட மறுப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில், தன் மனைவி தன்னை மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார். |
| நவராத்திரியை அரக்கர்களின் திருவிழா என்று விமர்சித்த சர்ச்சைக்குரிய மதத்தலைவர் கைது Posted: 23 Sep 2014 02:10 PM PDT குஜராத் மாநிலத்தின் சர்ச்சைக்குரிய முஸ்லிம் மதத்தலைவர், மவுலானா மெஹ்தி ஹஸன். கடந்த 2011-ம் ஆண்டு, அந்நாள் குஜராத் முதல்மந்திரி நரேந்திர மோடி 'சத்பாவனா' என்ற பெயரில் உண்ணாவிரதம் இருந்தபோது, உண்ணாவிரத மேடையின் மீது ஏறிய மவுலானா மெஹ்தி ஹஸன், அவரது தலையில் குல்லா ஒன்றினை அணிவிக்க முயன்றார். அதனை, அணிந்துக் கொள்ள மோடி மறுத்து விட்டார். இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் ஊடகங்களில் மவுலானா மெஹ்தி ஹஸனின் பெயர் |
| என்கவுன்டர் நடவடிக்கையை கட்டுப்படுத்த 11 நெறிமுறைகள்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 23 Sep 2014 01:45 PM PDT மக்கள் உரிமைக் கழகம் அமைப்பின் சார்பில், 'என்கவுன்டர்' நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் நெறிமுறைகளை வகுக்குமாறு கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில் 1995-ம் ஆண்டில் இருந்து 1997 வரை மும்பை போலீசாருக்கும், கிரிமினல்களுக்கும் இடையில் நடைபெற்ற 99 'என்கவுன்டர்'களில் 135 பேர் கொல்லப்பட்டுள்ளதாக |
| வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் அச்சுறுத்திய முதலையை கிராமவாசிகளே அடித்துக் கொன்றனர் Posted: 23 Sep 2014 01:23 PM PDT பீகார் மாநிலம், மாதேபுரா மாவட்டத்தின் வழியாக பாயும் ஹராய்லி ஆற்றில் கடந்த வெள்ளிக்கிழமை முதலை ஒன்று தென்பட்டதைக் கண்ட உடா கிராமவாசிகள், இது தொடர்பாக அப்பகுதி வனத்துறையினருக்கு புகார் அளித்தனர். உடா கிராமத்தையொட்டி, ஆற்றங்கரையோரமாக ஊர்ந்துக் கொண்டிருந்த அந்த முதலையைக் கண்டு அஞ்சி நடுங்கிய மக்கள், கடந்த நான்கு நாட்களாக குளிக்கவோ, குடிநீர் எடுக்கவோ ஆற்றுக்கு செல்ல முடியாத சூழ்நிலை நிலவியது. |
| மேகாலாயா: மலைப்பிரதேசத்தில் நிலச்சரிவு - கர்ப்பிணி உள்பட 8 பேர் பரிதாப பலி Posted: 23 Sep 2014 12:52 PM PDT வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மேகாலயாவில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. மேகாலயாவின் மலைப்பிரதேச மாவட்டமான கிழக்கு காசி மலையின் மாவ்பிரேம் பகுதியில் பெய்த தொடர் மழையால் அங்கிருக்கும் ஊர்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்தோடுகின்றது. மாவ்பா என்ற ஊரில் வெள்ள நீர் மண்ணை அரித்துக் கொண்டு ஓடியதால், அப்பகுதியில் நேற்று பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. |
| பழங்குடியின மாணவிகள் காப்பகத்தில் சிறுமிகளை வைத்து விபச்சாரம்: 5 பேர் கைது Posted: 23 Sep 2014 12:25 PM PDT ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், புட்டைய்யாகுடெம் கிராமத்தில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவிகள் தங்கும் அரசு காப்பகம் ஒன்று இயங்கி வருகின்றது. இந்த காப்பகத்தில் சிறுவயது மாணவிகளை வைத்து சிலர் விபச்சார தொழில் செய்து வருவதாக மாவட்ட கலெக்டருக்கு சமீபத்தில் ஒரு மொட்டைக் கடிதம் வந்தது. இதனையடுத்து, இதுபற்றி விரைவாக விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்டுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். |
| மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைவதை இஸ்ரோ மையத்தில் இருந்து பிரதமர் பார்வையிடுகிறார் Posted: 23 Sep 2014 12:08 PM PDT இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய 'மங்கள்யான்' விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ரூ.460 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் 300 நாட்களுக்கும் அதிகமாக விண்ணில் பயணம் செய்து திட்டமிட்டப்படி இன்று |
| பிரசவத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த 3 டாக்டர்களுக்கு ஜாமின் மறுப்பு Posted: 23 Sep 2014 11:50 AM PDT ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை ஈன்றெடுத்த பெண்ணின் பிரசவக் காட்சியை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட 3 டாக்டர்கள் தாக்கல் செய்த இடைக்கால ஜாமின் மனுவை கேரள ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், பிரசவத்துக்காக அங்குள்ள தாலுகா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 'சிசேரியன்' ஆபரேஷன் மூலம் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. |
| கல்வி சுற்றுலாவாக நாசாவிற்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் அஸாம் அரசு Posted: 23 Sep 2014 11:37 AM PDT 2014-ஆம் ஆண்டு தேப குமார் போரா நினைவு கல்வி சுற்றுலாவிற்கு ஸ்பான்சர் விசிட்டாக 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவுகளில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை தேர்ந்தெடுத்து நாசாவிற்கு அனுப்புகிறது அஸாம் அரசு. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |