Tamil Star |
- மகிந்தவுக்கு எதிரான போராட்டத்தில் வட அமெரிக்க தமிழர்கள் அனைவரும் இணைய வேண்டும்: கனடிய தமிழர் தேசிய அவை அறிக்கை!
- மட்டக்களப்பில் இன்னும் சில வருடங்களில் சிறுபான்மையினராகும் தமிழினம் !
- இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியூயோர்க் வந்தடைந்தார்!!
- பேஸ்புக் பயன்பாட்டிற்கு மாதக்கட்டணமா? போலி கட்டுரையால் பயனாளிகள் அதிர்ச்சியில்!
- முதல்வர் வேட்பாளர் ஜோன் ரோறி கருத்துக் கணிப்பொன்றில் தொடர்ந்து முன்னிலையில்!
| Posted: 23 Sep 2014 04:18 AM PDT
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஐ.நா. பொதுச்சபை உரையினை மையமாக கொண்டு செப்24ம் திகதி இடம்பெறுகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடாகியுள்ள பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுக்கான அழைப்பிலேயே இந்த அறைகூவலை கனடிய தமிழர் தேசிய அவை விடுத்துள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முள்ளிவாய்க்காலில் எங்கள் இனத்தை மிகக் கொடூரமாக அழித்த கொடிய இனப்படுகொலையாளர்கள் இன்று உலகில் சுதந்திரமாக பசுத்தோல் போர்த்து உலவுவதை உலகத் தமிழினம் ஒருபோதுமே அனுமதிக்க முடியாது. இன அழிப்பாளர்களின் போலியான முகத் திரைகளை உரித்து எங்கள் மண்ணில் தொடர்ச்சியான இனப்படுகொலைகளின் சூத்திரதாரிகளை அம்பலப்படுத்த இத்தகைய எதிர்ப்பு கண்டனப் போராட்டங்களை வலிமைப்படுத்தும் தேவை காலக் கடமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்றைய காலம் தமிழர்களின் வரலாற்றில் தன் இனம் அழித்த பொது எதிரிக்கு எதிராக போராடும் தளங்களில் ஒன்றாக இணைந்து போராடி மறுபடியும் வீறு கொள்ளவேண்டிய காலமாக வலிமை கொள்ள வேண்டியுள்ளது. உலகத் தமிழர்கள் கையில் எங்கள் இனத்துக்கான போராட்டங்கள் பல்முக வடிவில் பொறுப்போடு ஆற்றவேண்டிய கடனாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன அழிப்பாளருக்கு எதிரான இன விடுதலைக்கு ஆதரவான போராட்டங்களை இதய சுத்தியோடு கை கோர்க்க கனடிய தமிழர் தேசிய அவை என்றுமே முன் நிற்கும். அந்த வகையில் இந்த போராட்டத்திலும் எம் இனம் ஒற்றுமையோடு ஒன்றுபட்ட எழுச்சியின் வடிவமாக எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி எமது மக்களுக்கு நேர்ந்த அநீதிகளை அம்பலப்படுத்துவோம் என கனடிய தமிழர் தேசிய அவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மட்டக்களப்பில் இன்னும் சில வருடங்களில் சிறுபான்மையினராகும் தமிழினம் ! Posted: 23 Sep 2014 04:10 AM PDT
தமிழீழம் என வரைபடக் குறியீட்டுக்குள் உள்ள எட்டு மாவட்டங்களில் திருமலை, அம்பாறை ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள தமிழர்கள் சிறுபான்மையினராக உள்ளதுடன் கிழக்கின் பெரிய மாவட்டமான மட்டக்களப்பில் இன்னும் சில ஆண்டுகளில் தமிழர்கள் சிறுபான்மையினராகி விடுவார்கள். இவ்வாறு கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மா, லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். மட்டக்களப்பில் நாங்கள் இப்போது மத ரீதியாக சிறுபான்மையினர். தமிழர்கள் இந்து மதம், கிறிஸ்தவ மதம் என்று பிரிந்திருப்பதால் முஸ்லிம்களே மட்டக்களப்பில் மத ரீதியாக பெரும்பான்மையாக இருக்கிறார்கள். வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் தமிழர்கள் அறுதிப் பெரும்பான்மையாக இல்லை. தமிழர்களின் தொகை குறைந்து வருகிறது. மேலும், தப்போது சிங்களக் குடியேற்றங்கள் இல்லாத மாவட்டங்களும், காணி அபகரிப்பு இல்லாத மாவட்டங்களும் வட-கிழக்கில் இல்லை. எனவே இது குறித்த முயற்சிகளே, மீள் குடியேற்றத்திற்கான புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவே இதற்கு உதவும். இதனை சந்தஞ்சந்தடியில்லாம் பொதுநோக்குள்ள தமிழர்கள் நிரூபித்திருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட பல அரிய கருத்துக்களை இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியூயோர்க் வந்தடைந்தார்!! Posted: 23 Sep 2014 04:07 AM PDT
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வுகளில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியூயோர்க் வந்தடைந்துள்ளார். நியூயோர்க் வந்தடைந்த ஜனாதிபதி, அவரின் பாரியார் உட்பட்ட பிரதிநிதிகளை அங்குள்ள இலங்கை பிரதிநிதிகளான பாலித கோஹன, பிரசாத் காரியவசம் மற்றும் சவேந்திர சில்வா ஆகியோர் வரவேற்றனர். ஐக்கிய நாடுகளின் 69வது அமர்வில் பங்கேற்க சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஒரு வாரக்காலத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். நாளை அவர் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் உரையாற்றவுள்ளார். இந்தநிலையில் இன்று அவர் காலநிலை தொடர்பான அமர்வில் உரையாற்றவுள்ளார். ஜனாதிபதியுடன் இந்த பயணத்தில், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை தவிர, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் என்று 15க்கும் மேற்பட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர். எனவும் இலங்கை ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பேஸ்புக் பயன்பாட்டிற்கு மாதக்கட்டணமா? போலி கட்டுரையால் பயனாளிகள் அதிர்ச்சியில்! Posted: 23 Sep 2014 04:04 AM PDT
உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோர் தற்போது ஃபேஸ்புக் இணையதளத்திற்கு அடிமையாகி உள்ளனர். சாப்பாடு இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள் ஆனால் ஃபேஸ்புக் இல்லாமல் பலரால் இருக்க முடியாது. இந்நிலையில் நேஷனல் ரிப்போர்ட் என்ற இணையதளம் இனிமேல் ஃபேஸ்புக் பயன்படுத்தவேண்டும் என்றால் மாதம் ஒன்றுக்கு $2.99 கட்டணம் செலுத்தவேண்டும் என்றும் இந்த நடைமுறை நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக உள்ளதாகவும் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கான ஃபேஸ்புக் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த முடிவை எடுப்பதற்காக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், மிக நீண்ட நேரம் யோசனை செய்ததாகவும், அதன் பின்னர் வளர்ந்து வரும் போட்டிகள் மற்றும் செலவினங்களை சமாளிக்க கட்டணம் வசூலிப்பது அவசியம் என்று முடிவு எடுத்ததாகவும், அந்த கட்டுரை தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தகவலை ஃபேஸ்புக் மறுத்துள்ளது. ஃபேஸ்புக் பயனாளிகளிடம் கட்டணம் வசூலிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், இதுபோன்ற போலியான கட்டுரைகளையும், வதந்திகளையும் பயனாளிகள் நம்பவேண்டாம் என்றும் அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது. வருங்காலத்தில் ஃபேஸ்புக்கை இன்னும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை இருப்பதுபோன்று ஃபேஸ்புக் அக்கவுண்ட்டும் இருக்கவேண்டும் என்பதே தன்னுடைய குறிக்கோள் என மார்க் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| முதல்வர் வேட்பாளர் ஜோன் ரோறி கருத்துக் கணிப்பொன்றில் தொடர்ந்து முன்னிலையில்! Posted: 23 Sep 2014 03:43 AM PDT
கனடா ரொறன்றோ மாநகர முதல்வர் வேட்பாளர் ஜோன் ரோறிக்கு ஆதரவு தொடர்ந்து அதிகரித்துச் செல்வதைக் கருத்துக் கணிப்பொன்று காட்டுகின்றது. யாருக்கு வாக்களிப்பதென தீர்மானித்தவர்களின் மத்தியில், ஜோன் ரோறிக்கு 49 சதவீதமான ஆதரவு நிலவுகிறதெனவும், டக் ஃபோர்ட்டுக்கு 27 சதவீதமான ஆதரவு நிலவுகிறதெனவும், ஒலிவியா சௌவுக்கு 24 சதவீத ஆதரவு நிலவுகிறதெனவும் நனோஸ் நிறுவன கருத்துக் கணிப்புக் குறிப்பிடுகிறது. ரொறன்றோவின் அனைத்துப் பகுதிகளிலும் ஜோன் ரோறிக்கு அதிக அளவு ஆதரவு நிலவுகின்றது எனவும் அந்த நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




