Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சாலக்குடி தொகுதி எம்.பி. இன்னசென்ட் அலுவலக மின் இணைப்பு துண்டிப்பு

Posted: 18 Sep 2014 11:25 PM PDT

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இன்னசென்ட். கடந்த பாராளுமன்ற தேர்தலில் சாலக்குடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்பு சாலக்குடியில் அலுவலகம் அமைத்து பொதுமக்களின் குறைகள் மற்றும் மனுக்களை வாங்கி வந்தார். இந்த அலுவலக

மராட்டிய தேர்தல் தொகுதி பங்கீடு சிக்கல்: சிவசேனாவுக்கு பாஜக 12 மணி நேரம் கெடு

Posted: 18 Sep 2014 11:18 PM PDT

மராட்டிய மாநிலத்தில் பா.ஜனதா– சிவசேனா இடையே 25 ஆண்டுகளாக நட்பு இருந்து வருகிறது. தேர்தல் சமயங்களில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகின்றன. மராட்டியத்தில் பா.ஜனதாவை விட சிவசேனா தனிப்பட்ட செல்வாக்கு மிக்க கட்சியாக விளங்குவதால் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் சிவசேனா தான் கூட்டணிக்கு தலைமை வகித்து வந்தது. சிவசேனா அதிக

நிலம் விற்று கிடைத்த பணத்தை மோசடி செய்த உதவியாளர்கள்: விரக்தியில் பெண் தொழிலதிபர் தற்கொலை

Posted: 18 Sep 2014 11:16 PM PDT

களியக்காவிளையை அடுத்த நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர் நூர்ஜகான். கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இவர் நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனை அருகே மருந்து கடை நடத்தி வந்தார். அதன் அருகில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 2 நாட்களாக வீடு திறக்கப்படவில்லை.

காஷ்மீர் வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 277 ஆக உயர்வு: உமர் அப்துல்லா

Posted: 18 Sep 2014 11:15 PM PDT

காஷ்மீரில் பெய்த கனமழையால் காஷ்மீரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தேசிய பேரழிவு ஏற்பட்டது. இதனால் காஷ்மீர் பலத்த சேதம் அடைந்தது. ராணுவ வீரர்கள் தவிர மற்ற யாரும் மீட்பு பணியில் ஈடுபடாத நிலைமை ஏற்பட்டது. தற்போது வெள்ளம் வடிந்து வருவதால் மீட்புப் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த வெள்ளத்தில் 200-க்கும் மேற்பட்டோர்

காங்கிரஸ் கூட்டணியிலும் இழுபறி: சோனியாவுடன் பேச சரத்பவார் முடிவு

Posted: 18 Sep 2014 10:47 PM PDT

மராட்டியத்தில் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில் காங்கிரசை சேர்ந்த பிரிதிவிராஜ் சவான் முதல் – மந்திரியாகவும், தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் துணை முதல் – மந்திரியாகவும் இருக்கிறார்கள். வருகிற சட்டசபை தேர்தலிலும் இந்த கூட்டணி நீடிக்கிறது. தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.

பதவி ஆசை குறைந்து விட்டது: இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் - தேவே கவுடா அறிவிப்பு

Posted: 18 Sep 2014 10:25 PM PDT

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் நிரூகட்டா கிராமத்தில் ஜனதா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா கலந்து கொண்டு மக்களிடம் குறை கேட்டார். பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:– இந்த பகுதியில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பிரதான சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதை மாநில அரசு விரைவில்

மராட்டிய சட்டசபை தேர்தல்: உத்தவ் தாக்கரே 2 தொகுதியில் போட்டி

Posted: 18 Sep 2014 10:17 PM PDT

மராட்டிய மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சு வார்த்தைகளும் நடைபெறுகின்றன. மராட்டிய மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பாரதீய ஜனதாவும், சிவசேனா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகின்றன. இதுவரை இந்த மாநிலத்தில் சிவசேனா கட்சிதான் அதிக இடங்களில்

திருப்பதி கோவில் பிரமோற்சவம்: பக்தர்களுக்கு கோவிலுக்குள் லட்டு வழங்க ஏற்பாடு

Posted: 18 Sep 2014 10:02 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் வருகிற 26–ந்தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் 4–ந்தேதி வரை விழா நடைபெறுகிறது. பிரமோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், இரவு 9 மணி முதல் 11 மணி வரையும் வாகன வீதி உலா நடக்கிறது. இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.

திருப்பதியில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி ரூ.64 கோடிக்கு ஏலம்

Posted: 18 Sep 2014 09:50 PM PDT

திருப்பதி ஏழுமலையான் அருள் வேண்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். பக்தர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட காணிக்கை தலைமுடி விற்பனையின் மூலம் திருமலை–திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆகஸ்டு மாதம் 31–ந் தேதி

சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் பற்றி சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை: சுப்ரீம் கோர்ட்டு

Posted: 18 Sep 2014 05:05 PM PDT

உலக மனித உரிமை ஆணையம் மற்றும் மீட்பு மையம் சார்பில் சரவணன் கருப்பசாமி மற்றும் எஸ்.பிரபாவதி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறுப்பட்டு இருந்ததாவது:- சென்னை அம்பேத்கார் அரசினர் சட்டக்கல்லூரியில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 12-ந் தேதி நடைபெற்ற சம்பவத்தில் தேர்வு எழுதச் சென்ற 3

இந்துக்களின் புனித தலமான கைலாய மலை, மானசரோவர் ஏரி புதிய பாதைக்கு சீனா அனுமதி

Posted: 18 Sep 2014 05:01 PM PDT

இந்துக்களின் புனித தலமான கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரி சீன எல்லையில் திபெத் பகுதியில் அமைந்துள்ளது. 19 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ள கைலாய மலைக்கும், மானசரோவர் ஏரிக்கும் இந்துக்கள் சென்று வருவதை மிகப்பெரும் புண்ணியமாக கருதி வருகிறார்கள். இந்த பகுதிக்கு இதுவரை உத்தரகாண்ட் மாநிலம் வழியாக பக்தர்கள் சென்று வந்தனர். இந்த பாதையில் செல்வதற்கு பக்தர்கள்

பாகிஸ்தான் நாட்டின் முக்கிய தீவிரவாத இயக்க தலைவன் உ.பி.யில் அதிரடி கைது

Posted: 18 Sep 2014 03:56 PM PDT

பாகிஸ்தான் நாட்டின் முக்கிய தீவிரவாத இயக்க தலைவனும், அந்நாட்டு உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ.யின் கூட்டாளியுமான ரத்தன் தீப் சிங் உத்தரப்பிரதேசத்தில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டான். ஆரம்பத்தில் இந்தியாவிற்கு எதிரான காலிஸ்தான் கமாண்டோ படையின் முக்கிய தலைவனாக செயல்பட்ட சிங் பின்னர் பப்பர் கல்சா இண்டர்நேஷனல் என்ற இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டான்.

அசாம்–நாகாலாந்து கலவரம்: உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு அசாம் முதல்–மந்திரி கடிதம்

Posted: 18 Sep 2014 03:34 PM PDT

அசாம்–நாகாலாந்து எல்லைப் பகுதியில் உள்ள கிராம மக்களிடையே கடந்த ஆகஸ்டு மாதம் கலவரம் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிர் இழந்தனர். கலவரத்தில் காயம் அடைந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கலவரம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு படையினரை நிறுத்த வலியுறுத்தி, அசாம் முதல்–மந்திரி தருண் கோகோய்,

இந்தியா– சீனா எல்லை பிரச்சினையை தீர்ப்பது குறித்து தலாய்லாமா பேட்டி

Posted: 18 Sep 2014 02:44 PM PDT

மும்பை வந்த புத்தமத தலைவர் தலாய் லாமா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– பரஸ்பர நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட இந்தியா–சீனா உறவினால் ஆசிய கண்டம் மட்டும் அல்லாமல் மொத்த உலகமே பயன்பெறும். இரு நாட்டு உறவும் மிக முக்கியமானது. நல்லிணக்கம் என்பது நம்பிக்கையினால் வருமே தவிர பயத்தினால் அல்ல. இந்த புதிய தலைமைத்துவத்தில் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். சீன அதிபர் ஜின் பிங் திறந்த மனநிலை கொண்டவர். அவரது பணித்திறமை எப்போதும் யதார்த்தத்தை பறைசாற்றும்.

சென்செக்ஸ் 481 புள்ளிகள் உயர்வு: நிப்டி 139.25 புள்ளிகள் உயர்வு

Posted: 18 Sep 2014 02:22 PM PDT

மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கப்பட்டதில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்தது. காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 26641.28 என்ற நிலையில் இருந்த பங்குகளின் மதிப்பு மாலையில் 481 புள்ளிகள் வரை உயர்ந்து 27112.21 என்ற புள்ளிகளில் நிறைவு பெற்றது. தேசிய பங்கு சந்தை நிப்டியும் 139.25 புள்ளிகள் உயர்ந்து 8114.75 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.

லடாக் பகுதியில் இருந்து சீன படைகள் வாபஸ்

Posted: 18 Sep 2014 02:22 PM PDT

காஷ்மீர் மாநிலம் வடகிழக்கு லடாக் பிராந்தியத்தில் சுமர் கிராமம் உள்ளது. இமாசலபிரதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமத்துக்குள் சீன ராணுவத்தினர் கடந்த 4 நாட்களாக அத்துமீறி முகாமிட்டு இருந்தனர். இதனால் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், நேற்று இரவு சீன ராணுவத்தினர் வாபஸ் பெறத் தொடங்கினர். இரவு 9.45 மணிக்கு அவர்களது எல்லைக்குட்பட்ட பகுதிக்கு திரும்பிச் செல்ல தொடங்கினர்.

ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய பிரிட்டன் பத்திரிகையாளர்: உருக்கமான வீடியோ காட்சி வெளியீடு

Posted: 18 Sep 2014 12:51 PM PDT

ஈராக்கில் சதாம் உசேன் ஆதரவு படையான ஐ.எஸ்.தீவிரவாத இயக்கம் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி, சிரியாவில் கைப்பற்றப்பட்ட பகுதியையும் ஒருங்கிணைத்து "இஸ்லாமிய நாடு" என்ற பெயரில் தனி அரசை நடத்தி வருகிறது. குர்திஷ் படையினர் இழந்த பகுதிகளை மீட்கும் வகையில் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தியா-சீனா எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண சீன அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

Posted: 18 Sep 2014 12:32 PM PDT

சீன அதிபர் ஜின் பிங், இந்தியாவில் முதல் முறையாக 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு புதன்கிழமை தனி விமானத்தில் வந்தார். அவருடன் அவரது மனைவி பெங் லியுயான் மற்றும் வெளியுறவு மந்திரி வாங் யி, வர்த்தக மந்திரி காவ் ஹூசெங் உள்பட 150 பேரை கொண்ட உயர் மட்ட தூதுக்குழுவினரும் வந்தனர்.

காஷ்மீர் வெள்ள இழப்பு 60000 கோடி ரூபாயை தாண்டும்: வர்த்தக கூட்டமைப்பு அறிக்கை

Posted: 18 Sep 2014 11:42 AM PDT

ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின. ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கி பலியாகினர். ஸ்ரீ நகரின் பல பகுதிகள் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்தியை முதன்மை மொழியாக கற்பிக்கும் யுஜிசி அறிவிப்பு வாபஸ்

Posted: 18 Sep 2014 09:28 AM PDT

இந்தியை முதன்மை மொழியாக கற்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது. பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்துடன் இந்தியை முதன்மை மொழியாக்க கற்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™