Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு சர்வதேசத்தின் மீது குற்றம் சுமத்தும் அமெரிக்கா!

Posted: 18 Sep 2014 09:54 PM PDT

USA-Srilanka-Flag

USA-Srilanka-Flagஇலங்கை உட்பட்ட சில நாடுகளில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கு சர்வதேச சமூகமே பொறுப்பாகும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் 27வது அமர்வில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அமெரிக்கா இதனை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை உட்பட்ட சில நாடுகளில் உரிய செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என்றும் அமெரிக்கா இதன்போது தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகளை தடுத்திருக்க முடியும் என்று குறிப்பிட்ட அமெரிக்கா, ருவண்டா, டார்பூர், சிரியா போன்ற நாடுகளிலும் இதேநிலையை காணக்கூடியதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனும் மனித உரிமை மீறல்களை தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்கவிற்கு சவால் விடும் ஐ.எஸ். தீவிரவாதா அமைப்பு!

Posted: 18 Sep 2014 09:35 PM PDT

isis-terrorist

isis-terroristஈராக் மற்றும் சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

வான்வழி தாக்குதல் மட்டும் நடத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. ஆனால் அமெரிக்க இணை தளபதி மார்டின் டெம்ப்சி கூறும்போது, அமெரிக்காவின் வான்வழி தாக்குதல் மட்டும் பலன் தரும் என்று நினைக்கவில்லை.

அது பலன் தராதபட்சத்தில் தரைவழி தாக்குதல் நடத்தவும் தயாராவோம் என்று கூறினார்.

இதையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

52 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவுக்கு போர் தீக்கதிர்கள் என்று பெயரிட்டுள்ளனர். அதில் பேசிய தீவிரவாதி அமெரிக்கா தரைப்படை எங்கள் மண்ணுக்கு வருவதை வரவேற்கிறோம்.

அவர்கள் இங்கு வந்தால்தான் உண்மையான போர் தொடங்கும். அவர்களை எதிர்நோக்கி நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இளைஞர்களை இழுக்கும் வகையில் புதிய வீடியோ கேம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

அதில் எதிரிகளை தலை துண்டித்து கொல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ கேம் இளைஞர்களின் உணர்ச்சிகளை தூண்டி அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்காவில் Home Depot–வில் 56-மில்லியன் அட்டைகள் பாதுகாப்பு மீறலால் பாதிப்பு!

Posted: 18 Sep 2014 09:27 PM PDT

Home-Depot

Home-Depotசில்லறை விற்பனை நிலைய மென்பொருள் திருட்டில் 56-மில்லியன்கள வரையிலான கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் கனடா யு.எஸ்.ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கணனி இயக்கத்திற்கு தடையாக செயல்படும் மென்பொருளை உபயோகித்து Home Depot -வின் புள்ளி-விற்பனை முறைமைகள் மூலம் இலக்கங்களை திருடியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த சில்லறை விற்பனை நிலையம் கனடாவில் 180 கடைகளையும் யு.எஸ்.சில் 2,200ற்கும் மேற்பட்ட கடைகளையும் கொண்டுள்ளது. ஏப்ரல் முதல் செப்ரம்பர் மாத காலப்பகுதியில் அறியப்படாத பல்வேறு பட்ட கணனி இயக்க தடை மென்பொருட்கள் இவர்களது கட்டணம் செலுத்தும் அமைப்புக்களில் இருந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. பாதுகாப்பு மேம்படுத்தல் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால் மேலதிக மீறல்கள் தடுக்கப்படலாமென நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மீறல்களினால் கிட்டத்தட்ட 4-மில்லியன் கனடியர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாமென கூறப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆடை பற்றிய கருத்துக்கு பிரஸ் மீட் வைத்து மன்னிப்பு கேட்ட தாய்லாந்து பிரதமர்!

Posted: 18 Sep 2014 10:08 AM PDT

prayuth-thailand-pm

prayuth-thailand-pmபிகினி ஆடை அணிந்தால் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும் என்று தான் கூறிய கருத்தை திரும்ப பெற்றுள்ள தாய்லாந்து பிரதமர், பிரயுத் சன்-ஒசா, தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். பிரிட்டீஷ் நாட்டை சேர்ந்த ஹன்னா விதரிட்ஜ் என்ற 23வயது பெண்ணும், டேவிட் மில்லர் என்ற 24வயது நண்பரும் தாய்லாந்து நாட்டின் கோ-டாவ் என்ற பகுதியில் கடந்த திங்கள்கிழமை மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். சுற்றுலா சென்ற இடத்தில் தங்கள் நாட்டை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பிரிட்டன் அரசு, தாய்லாந்து தூதரகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது. இதனிடையே, "அழகாக இல்லாதவர்களுக்கு பிகினி ஆடை பாதுகாப்பாக இருக்கலாமே தவிர பிறருக்கு பிகினி உடை பாதுகாப்பானதாக இருக்காது" என்று பிரயுத் சன்-ஒசா, போலீஸ் அதிகாரிகளிடம் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இதற்கு பல நாடுகளும் கண்டனம் தெரிவித்த நிலையில், இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த பிரயுத் சன்-ஒசா, தனது கருத்தை திரும்ப பெறுவதாகவும், அவ்வாறு பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார். ராணுவ தளபதியாக இருந்த பிரயுத் சன்-ஒசா, புரட்சி மூலமாக ஆட்சியை பிடித்து கடந்த மாதம்தான் பிரதமரானவர். ராணுவ புரட்சி காரணமாக தாய்லாந்தில் சுற்றுலா நலிவடைந்துவிட்டது. பிரிட்டீஷ் ஜோடி கொலையானதும், பிரதமரின் கருத்தும் தாய்லாந்தின் சுற்றுலா துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இதனிடையே பிரிட்டீஷ் ஜோடி கொலை குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் தாய்லாந்து போலீசார் திணறிவருகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை! 15 பேர் சிக்கினர்!

Posted: 18 Sep 2014 10:04 AM PDT

18-isis-terrorist2-600

18-isis-terrorist2-600ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை பிடிக்க ஆஸ்திரேலியாவில் இன்று நாள் முழுவதும் நடத்தப்பட்ட போலீசாரின் தேடுதல் வேட்டையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவில் நாசவேலைகளில் ஈடுபடும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு இந்தியா உள்பட பல நாடுகளிலும் அனுதாபிகள், ஆதரவாளர்கள் உள்ளனர் என்று கூறப்படுகிறது. மூளைச் சலவைக்கு உள்ளாகும் உலகின் பல பகுதிகளிலும் உள்ள இஸ்லாமிய அப்பாவி இளைஞர்கள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைவதற்காக உயிரை பணயம் வைத்து ஈராக்கிற்கும், சிரியாவுக்கும் சென்று கொண்டுள்ளனர். இதேபோன்று, ஆஸ்திரேலியாவில் இருந்து 60 இஸ்லாமிய இளைஞர்கள், ஈராக் மற்றும் சிரியாவுக்கு தப்பி சென்று சண்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், அதில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆஸ்திரேலிய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்டோர் மறைமுகமாக தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்துக் கொண்டுள்ளதாகவும் உளவுத்துறை கடந்த வாரம் எச்சரித்திருந்தது. ஆஸ்திரேலியாவில் நடு வீதிகளில் மக்களை கழுத்தறுத்து கொல்ல ஐஎஸ்ஐஎஸ் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஏனெனில் கடந்த பத்தாண்டுகளாகவே அமெரிக்காவின் தீவிரவாத எதிர்ப்பு போருக்கு ஆஸ்திரேலியா அளித்து வரும் ஒத்துழைப்பால், இந்த தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்திருந்தது. இநத் தகவல் வெளியானது முதல் ஆஸ்திரேலிய மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், போரிடுவதற்காக ஈராக் சென்றுள்ள இளைஞர்கள் ஆஸ்திரேலியா திரும்பினாலும் அது தங்களுக்கு ஆபத்தாக முடியும் என்று அந்த நாட்டு அரசு எண்ணுகிறது. இதையடுத்து சிட்னி மற்றும் பிரிஸ்பேன் நகரின் பல பகுதிகளில் சந்தேகத்திற்கிடமானவர்களிடம் ஆஸ்திரேலிய நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று நாள் முழுவதும் விசாரணை நடத்தினர். பல வீடுகளில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. நவீன ஆயுதங்களுடன் 800 போலீசார் இந்த ஆபரேசனில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே மிகப்பெரிய தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை இது என்று அந்த நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ரெய்டின் முடிவில் தீவிரவாதிகளுக்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™