Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மேகாலயம்: 6 தீவிரவாதிகள் சாவு

Posted: 14 Sep 2014 01:18 PM PDT

மேகாலய மாநிலத்தில் பல்வேறு சம்பவங்களில் 6 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

சட்டவிரோத இறைச்சி விற்பனை வருவாய் தீவிரவாதத்துக்கு பயன்படுத்தப்படுகிறது: மேனகா காந்தி

Posted: 14 Sep 2014 01:16 PM PDT

""சட்டவிரோத இறைச்சி விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், தீவிரவாதத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் மீது குற்றம் சுமத்தக் கூடாது'' என்று பெண்கள், குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.

போலவரம் திட்டம்: நவீனை சந்திக்க ஒடிஸா வருகிறார் ஆந்திர முதல்வர்

Posted: 14 Sep 2014 01:11 PM PDT

போலவரம் அணைத் திட்டத்தை சுமூகமாக நிறைவேற்ற, அதில் இருக்கும் பிரச்னைகள் குறித்து ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் விவாதிக்க ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு இந்த வாரம் ஒடிஸா வரவிருக்கிறார்.

"உலக வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் சிக்கல் நீங்கும்'

Posted: 14 Sep 2014 01:09 PM PDT

உலக நாடுகளிடையே வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தம் ஏற்படுவதில் உள்ள சிக்கல் விரைவில் நீங்கும் என உலக வர்த்தக அமைப்பு (டபுள்யூ.டி.ஓ.) நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கத்தியால் குத்தி இளைஞர் கொலை

Posted: 14 Sep 2014 12:55 PM PDT

பெங்களூரு கே.ஜி.ஹள்ளி காவல் சரகத்தில் கத்தியால் குத்தி இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 912 பேர் மீது வழக்குப் பதிவு

Posted: 14 Sep 2014 12:55 PM PDT

பெங்களூருவில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 912 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

கர்நாடகத்தை குடிசையில்லா மாநிலமாக்க நடவடிக்கை

Posted: 14 Sep 2014 12:55 PM PDT

கர்நாடகத்தை குடிசையில்லாத மாநிலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அந்த மாநில வீட்டு வசதித் துறை அமைச்சர் அம்பரீஷ் தெரிவித்தார்.

தொலைநோக்குச் சிந்தனை கொண்டவர் விஸ்வேஸ்வரய்யா

Posted: 14 Sep 2014 12:54 PM PDT

தொலைநோக்குச் சிந்தனையோடு கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் விஸ்வேஸ்வரய்யா என்று, அந்த மாநில உணவு, பொது வழங்கல் துறை அமைச்சர் திணேஷ் குண்டுராவ் புகழாரம் சூட்டினார்.

ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யத் திட்டம்

Posted: 14 Sep 2014 12:54 PM PDT

கர்நாடகத்தில் ஆளுநர் ஒப்புதலுடன் மகாத்மா காந்தி பிறந்த நாளில் (அக்.2) ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக அந்த மாநில சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா தெரிவித்தார்.

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 14 Sep 2014 12:54 PM PDT

பெங்களூருவில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆராய்ச்சி பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 14 Sep 2014 12:54 PM PDT

பெங்களூரு பல்கலைக்கழகம் வழங்கும் ஆராய்ச்சி (பி.எச்டி.) பட்டப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஹொசஹள்ளியில் இன்று குடிநீர் குறைதீர் முகாம்

Posted: 14 Sep 2014 12:53 PM PDT

பெங்களூரு ஹொசஹள்ளி உள்ளிட்ட மேற்கு முதலாம் துணை மண்டலத்தில் திங்கள்கிழமை குடிநீர் குறைதீர்வு முகாம் நடைபெறுகிறது.

விநாடி- வினாப் போட்டி: திருச்சூர் அரசு பொறியியல் கல்லூரி சிறப்பிடம்

Posted: 14 Sep 2014 12:53 PM PDT

பெங்களூருவில் நடைபெற்ற சுவீடன்- இந்தியா நினைவு விநாடி- வினாப் போட்டியில் கேரள மாநிலம்

பெங்களூருவில் இன்று அண்ணா பிறந்த நாள் விழா

Posted: 14 Sep 2014 12:53 PM PDT

பெங்களூருவில் அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 106-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை (செப்.15) கொண்டாடப்படுகிறது.

அரசுப் பேருந்து மோதியதில் பெண் சாவு

Posted: 14 Sep 2014 12:52 PM PDT

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே அரசு நகரப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தார். ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டி பகுதியைச் சேர்ந்த பூபதி மனைவி பத்மாவதி (35). இவர்

கோயில் மரத்தை வெட்டிக் கடத்த முயற்சி: போலீஸார் விசாரணை

Posted: 14 Sep 2014 12:52 PM PDT

சேலத்தில் கோயில் வளாகத்தில் இருந்த ஆல மரத்தை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்த முயன்ற சம்பவம் குறித்து வருவாய்த் துறை சார்பில் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

ஓமலூர் அருகே தனியார் நூற்பாலையில் தீ விபத்து

Posted: 14 Sep 2014 12:52 PM PDT

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தனியார் நூற்பாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த தீ விபத்தில் பஞ்சு பொதிகள், இயந்திரங்கள் எரிந்து நாசமாகின.

பழங்குடி இனத்தவர் தொழில் தொடங்க தாட்கோவுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 14 Sep 2014 12:51 PM PDT

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தகுதியுள்ள பழங்குடி இனத்தவர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் தெரிவித்தார்.

சேலத்தில் தொடர் நகை பறிப்பு: வடமாநில இளைஞர்களைப் பிடித்து விசாரணை

Posted: 14 Sep 2014 12:51 PM PDT

சேலம் மாநகரில் தொடர்ந்து நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், இவற்றில் தொடர்புடையதாகக் கருதப்படும், வட மாநில இளைஞர்கள் இருவரைப் பிடித்து போலீஸார் விசாரித்து

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி காயம்

Posted: 14 Sep 2014 12:51 PM PDT

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி காயமடைந்தார். ஏற்காடு காக்கம்பாடி கிராமத்தில் சாலைப் பணிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக

சாவிலும் பிரியாத தம்பதி

Posted: 14 Sep 2014 12:51 PM PDT

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே கணவர் இறந்த செய்தி கேட்டு, மனைவியும் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். சங்ககிரி வட்டம், மோரூர் மேற்கு ஊராட்சிக்குள்பட்ட சென்னாயக்கன்காடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி

தனியார் மகளிர் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

Posted: 14 Sep 2014 12:51 PM PDT

சேலம் மாவட்டம், ஆத்தூர் தேவியாக்குறிச்சியில் உள்ள பாரதியார் மகளிர் பொறியியல் கல்லூரி கணிப் பொறியியல் துறை சார்பில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

"மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வி அளிக்க வேண்டும்'

Posted: 14 Sep 2014 12:50 PM PDT

ஆசிரியர்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சுவாமிநாதன் கேட்டுக்கொண்டார்.

மகன், மகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை

Posted: 14 Sep 2014 12:50 PM PDT

பரமத்திவேலூர் அருகே உள்ள கொந்தளத்தில் மகன், மகளுக்கு விஷம் கொடுத்து தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.

பத்ரா மேலணைத் திட்டம் நிறைவேற்றப்படும்

Posted: 14 Sep 2014 12:50 PM PDT

பத்ரா மேலணைத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று, கர்நாடக சமூக நலத் துறை அமைச்சர் எச்.ஆஞ்சநேயா தெரிவித்தார்.

நவீன முறையில் ஆடுகள் வளர்ப்பு: விவசாயிகள், வல்லுநர்கள் கலந்துரையாடல்

Posted: 14 Sep 2014 12:49 PM PDT

நவீன முறையில் ஆடுகள் வளர்ப்பு குறித்து விவசாயிகள், வல்லுநர்கள் கலந்துரையாடல் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.

சிறுநீரக வியாதிகளுக்கான இலவச பரிசோதனை முகாம்

Posted: 14 Sep 2014 12:49 PM PDT

சிறுநீரக வியாதிகளுக்கான இலவச பரிசோதனை முகாம் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெங்களூரு

Posted: 14 Sep 2014 12:48 PM PDT

கல்லூரியில் இளைஞர்களின் எழுச்சி நாள் விழா

Posted: 14 Sep 2014 12:42 PM PDT

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில், இளைஞர்களின் எழுச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

கல்லூரியில் எதிர்கால வழிகாட்டுதல் கருத்தரங்கு

Posted: 14 Sep 2014 12:42 PM PDT

திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவியருக்கான எதிர்கால வழிகாட்டுதல் கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியில் முப்பெரும் விழா

Posted: 14 Sep 2014 12:42 PM PDT

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

பைக் பெட்டியை உடைத்து பணம் திருடியதாக சிறுவன் கைது

Posted: 14 Sep 2014 12:41 PM PDT

வந்தவாசி சன்னிதி தெருவில் உள்ள தனியார் வங்கி எதிரில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கின் பெட்டியை ஒருவர் சனிக்கிழமை உடைக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த வந்தவாசி தெற்கு

அறிவியல் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி

Posted: 14 Sep 2014 12:41 PM PDT

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி மூன்று நாள்கள் நடைபெற்றது.

செப்டம்பர் 15 மின் தடை

Posted: 14 Sep 2014 12:41 PM PDT

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு கோட்டத்துக்கு உள்பட்ட மழையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செய்ய இருப்பதால் திங்கள்கிழமை (15-9-2014) காலை 9 மணி முதல் மாலை

தொழிலாளி மீது தாக்குதல்:இளைஞர் கைது

Posted: 14 Sep 2014 12:41 PM PDT

திருவண்ணாமலையை அடுத்த வெறையூர், டி.வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (44). இவர் சில நாள்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (29) என்பவரது நிலத்தில் கூலி வேலைக்குச் சென்றாராம். இதற்கான கூலித் தொகை ரூ.1200-ஐ சுரேஷ் தரவில்லையாம்.

இலவச சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 14 Sep 2014 12:40 PM PDT

திருவண்ணாமலை, தாமரை நகர், நகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை கல்லூரி மாணவருக்கு மத்திய அரசு நிறுவனம் விருது

Posted: 14 Sep 2014 12:40 PM PDT

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி மாணவருக்கு, மத்திய அரசு நிறுவனம் சிறந்த மாணவன் விருதை வழங்கியுள்ளது.

பள்ளி ஆசிரியர்களுக்கான படைப்பாற்றல் கற்றல் பயிற்சி

Posted: 14 Sep 2014 12:40 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், ஆசிரிய பயிற்றுநர்களுக்கான படைப்பாற்றல் கற்றலில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு வலுவூட்டல் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முதியவர் சடலம் கண்டெடுப்பு

Posted: 14 Sep 2014 12:40 PM PDT

வந்தவாசி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் ஒன்று சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

Posted: 14 Sep 2014 12:39 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட தமிழ் மாநில கட்டடத் தொழிலாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்

Posted: 14 Sep 2014 12:39 PM PDT

செங்கம் ரோட்டரி சங்கம் சார்பில் இறையூர் கிராமத்தில் ஆயுர்வேத இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சைக்கிள் போட்டியில் சிறப்பிடம்: மாணவர்களுக்குப் பாராட்டு

Posted: 14 Sep 2014 12:39 PM PDT

திருவண்ணாமலையில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா சைக்கிள் போட்டியில் வென்ற சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

தேமுதிக 10ஆம் ஆண்டு துவக்க விழா

Posted: 14 Sep 2014 12:39 PM PDT

தேமுதிக 10 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, ஆரணி அலுவலக வளாகத்தில் ஆர்.எம்.பாபுமுருகவேல் எம்.எல்.ஏ. தேமுதிக கொடியை ஞாயிற்றுக்கிழமை ஏற்றினார்.

செப்டம்பர் 16 மின் தடை

Posted: 14 Sep 2014 12:38 PM PDT

திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை மின்சார விநியோகம்

"பொருளாதாரத்தை உயர்த்த இளைஞர்கள் பாடுபட வேண்டும்'

Posted: 14 Sep 2014 12:38 PM PDT

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இளைஞர்கள் பாடுபட வேண்டும் என்று ஆரணி டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக்கல்லூரியில் நடைபெற்ற 14 வது பட்டமளிப்பு விழாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.குணசேகரன் பேசினார்.

காலமானார்:ஆர். விஸ்வநாதன்

Posted: 14 Sep 2014 12:37 PM PDT

தமிழ் இலக்கிய ஆர்வலரும், மூத்த பத்திரிக்கையாளருமான மன்னார்குடி ஆர். விஸ்வநாதன் (74) சனிக்கிழமை (செப்டம்பர் 13) இரவு காலமானார்.

திருவண்ணாமலை

Posted: 14 Sep 2014 12:37 PM PDT

கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம்

Posted: 14 Sep 2014 12:32 PM PDT

அரியலூர் மாவட்டம், தூத்தூர் அருகே குருவாடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே அழுகிய நிலையில் சுமார் ஐம்பது வயதுள்ள ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து குருவாடி விஏஓ பரசுராமன் அளித்த

அரியலூரில் நடந்த கொலைகளில் தொடர்புடையவர் சேலத்தில் கைது

Posted: 14 Sep 2014 12:32 PM PDT

அரியலூரில் தம்பதி கொலை உள்ளிட்ட பல்வேறு கொலைகளில் தொடர்புடையவர் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அரியலூர் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

செப்டம்பர் 16 மின் தடை

Posted: 14 Sep 2014 12:32 PM PDT

கரூர் மின்பகிர்மான வட்டம் குளித்தலை கோட்டத்துக்குள்பட்ட அய்யர்மலை, சிந்தாமணிப்பட்டி, தோகைமலை, வல்லம், நச்சலூர், பஞ்சப்பட்டி மற்றும் மாயனூர் துணை மின் நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.16) மின்சாரம் இருக்காது.

வேன் மோதி தொழிலாளி சாவு

Posted: 14 Sep 2014 12:31 PM PDT

கரூர் அருகே மொபெட்டில் சென்ற கூலித் தொழிலாளி சனிக்கிழமை வேன் மோதி இறந்தார். கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகேயுள்ள புதுகஞ்சமனூர் காலனியை சேர்ந்தவர் குப்புசாமி (60)

புதைசாக்கடை கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசடைவதாகப் புகார்

Posted: 14 Sep 2014 12:31 PM PDT

பெரம்பலூர் நகராட்சியில் செயல்படுத்தப்படும் புதை சாக்கடை கழிவுநீரால் நெடுவாசல் கிராம மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாகப் புகார்

கொன்று புதைக்கப்பட்ட குழந்தை தோண்டியெடுப்பு

Posted: 14 Sep 2014 12:31 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே பிறந்து சில நாள்களே ஆன நிலையில் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் ஞாயிற்றுக்கிழமை தோண்டியெடுக்கப்பட்டது.

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

Posted: 14 Sep 2014 12:31 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்த முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

பூவைமாநகர் அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

Posted: 14 Sep 2014 12:30 PM PDT

அறந்தாங்கி அருகே பூவைமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 4 லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை தொழிலதிபர் கே. ரெத்தினம் சனிக்கிழமை வழங்கினார்.

கறம்பக்குடி பள்ளி ஆசிரியைக்கு விருது

Posted: 14 Sep 2014 12:30 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி ஆசிரியைக்கு சனிக்கிழமை விருது வழங்கப்பட்டது.

தேமுதிக கொடியேற்று விழா

Posted: 14 Sep 2014 12:30 PM PDT

பொன்னமராவதி ஒன்றிய, நகர தேமுதிக சார்பில் அக்கட்சியின் 10-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சிக் கொடியேற்றும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அன்னவாசல் அருகே கல்குவாரியில் விபத்து: தொழிலாளி சாவு

Posted: 14 Sep 2014 12:29 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள இரும்பாளி தனியார் கல்குவாரியில் சனிக்கிழமை நேரிட்ட விபத்தில் கல் அறுக்கும் தொழிலாளி உயிரிழந்தார்.

செப்டம்பர் 15 மின் தடை

Posted: 14 Sep 2014 12:29 PM PDT

பொன்னமராவதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை (செப். 15) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் அழகப்பன் தெரிவித்துள்ளார்.

போட்டி நிறைந்த உலகில் வாழ வெறும் பட்டம் மட்டும் போதாது

Posted: 14 Sep 2014 12:28 PM PDT

போட்டி நிறைந்த உலகில் வாழ வெறும் பட்டங்கள் மட்டும் போதாது என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார்.

"இந்தியாவில் ஆண்டுதோறும் 7 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு

Posted: 14 Sep 2014 12:28 PM PDT

இந்தியாவில் ஆண்டுதோறும் 7 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றார் தஞ்சாவூர் மாவட்ட அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் சங்கத் தலைவர் சாத்தப்பன். தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் அவர் பேசியது:

பட்டுக்கோட்டையில் வீடுபுகுந்து 12 பவுன் நகை திருட்டு

Posted: 14 Sep 2014 12:28 PM PDT

பட்டுக்கோட்டை, மயில்பாளையம் பகுதியில் எல்ஐசி அலுவலகம் அருகே வசிப்பவர் எம். கலியமூர்த்தி (65). ஓய்வு பெற்ற சர்வேயர். சனிக்கிழமை இரவு வீட்டு வாசல் கதவை பூட்டாமல் வெறுமனே சாத்தி வைத்துவிட்டு, வரண்டாவில் கலியமூர்த்தியும், அவரது மனைவியும் தூங்கிக் கொண்டிருந்தனராம்.

போட்டி நிறைந்த உலகில் வாழ வெறும் பட்டம் மட்டும் போதாது

Posted: 14 Sep 2014 12:28 PM PDT

போட்டி நிறைந்த உலகில் வாழ வெறும் பட்டங்கள் மட்டும் போதாது என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார்.

தஞ்சையில் அகழி நீரை சுத்தப்படுத்த மீன்குஞ்சு வளர்ப்பு

Posted: 14 Sep 2014 12:27 PM PDT

தஞ்சாவூர் பெரியக்கோட்டை அகழியில் நீரைச் சுத்தப்படுத்தவும், கொசுக்களை ஒழிக்கவும் அதில் மீன்களை வளர்க்கும் விதமாக அகழியில் ஞாயிற்றுக்கிழமை மீன்குஞ்சுகள் விடப்பட்டன.

குடந்தை மகாமக மின் விரிவாக்கப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க ஏஐடியுசி கோரிக்கை

Posted: 14 Sep 2014 12:27 PM PDT

கும்பகோணம் மகாமகத்தை முன்னிட்டு, நடைபெறவுள்ள மின்சார விரிவாக்கப் பணிகளுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஏஐடியுசி கோரிக்கை விடுத்துள்ளது.

சீர்காழி அருகே இரு கிராமத்தினரிடையே மோதல்

Posted: 14 Sep 2014 12:27 PM PDT

நாகை மாவட்டம், சீர்காழி அருகே கோயில் திருவிழா கலை நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக 2 கிராமத்தினரிடையே ஞாயிற்றுக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில், திருவெண்காடு காவல் சார்பு ஆய்வாளர் உள்பட 12 பேர் காயமடைந்தனர்.

கூட்டுறவு ஊழியர்களுக்குஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

Posted: 14 Sep 2014 12:26 PM PDT

கூட்டுறவு ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. திருவாரூரில் அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்க கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அலட்சியம் காட்டும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள்

Posted: 14 Sep 2014 12:26 PM PDT

அளவுக்கு அதிகமாக குழந்தைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்வது தொடர்வதாகவும், இதனால் ஆங்காங்கே விபத்து ஏற்படுவதாகவும், இதை கண்காணிக்க வேண்டிய காரைக்கால் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று புகார் கூறப்படுகிறது.

லாரி மோதி முதியவர் சாவு

Posted: 14 Sep 2014 12:26 PM PDT

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே சைக்கிள் மீது லாரி மோதியதில் முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

"தனி நபர் கழிப்பறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

Posted: 14 Sep 2014 12:26 PM PDT

தனி நபர் கழிப்பறையின் அவசியம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த அரசுத் துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி.

குறு வட்ட விளையாட்டுப் போட்டிகளில் தில்லையாடி அரசுப் பள்ளி சாதனை

Posted: 14 Sep 2014 12:25 PM PDT

பள்ளிக் கல்வி துறை சார்பில் தரங்கம்பாடி வட்டார அளவிலான தடகள மற்றும் விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நாகை மாவட்டம் காட்டுச்சேரியில் இரண்டு நாட்கள் நடைபெற்றன. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 220 மாணவிகளும், 350 மாணவர்களும் கலந்து கொண்டனர்.

திருமண விழாவில் நூல் வெளியீடு

Posted: 14 Sep 2014 12:25 PM PDT

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. மயிலாடுதுறையில் உள்ள புனுகீஸ்வரர் கோயிலில் கூறைநாடு பகுதியைச் சேர்ந்த ஐ. ஆனந்தகுமாரன் - தி.

தமிழக பூப்பந்து அணிக்கு டிஎன்பிஎல் மாணவிகள் தேர்வு

Posted: 14 Sep 2014 12:25 PM PDT

தமிழக பூப்பந்து அணிக்கு டிஎன்பிஎல் பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கரூர் அருகே சிறப்பு குறைதீர் முகாம்

Posted: 14 Sep 2014 12:24 PM PDT

கரூர் அருகே நடைபெற்ற சிறப்பு குறைதீர் முகாமில் 83 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.

ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம்

Posted: 14 Sep 2014 12:24 PM PDT

கரூரில் ஆதிபராசக்தி சித்தர் வழிபாட்டு மன்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர கஞ்சி கலய, அக்னிச்சட்டி மற்றும் முளைப்பாரி ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மழைக்கு முன் ஏரி, குளம் தூர்வாரப்படுமா?

Posted: 14 Sep 2014 12:24 PM PDT

வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களைத் தூர்வார வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தொழிலாளர்கள் ஓய்வூதியத்தை உயர்த்த வலியுறுத்தல்

Posted: 14 Sep 2014 12:24 PM PDT

தொழிலாளர்கள் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக அமைப்பு சாரா அணி நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அரியலூரில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்

Posted: 14 Sep 2014 12:23 PM PDT

அரியலூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப்.16) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பேருந்து நிலைய சமுதாயக்கூடம் சீரமைக்கப்படுமா?

Posted: 14 Sep 2014 12:23 PM PDT

அரியலூர் பேருந்து நிலையத்தில் பயனற்ற நிலையில் இருக்கும் சமுதாயக்கூடத்தை சீரமைத்துப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

கேந்திரிய வித்யாலயா அமையும் இடத்தில் ஆய்வு

Posted: 14 Sep 2014 12:23 PM PDT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளி அமையவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

செப். 21 வரை கால்நடை தடுப்பூசி முகாம்

Posted: 14 Sep 2014 12:22 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் செப். 21 வரை கால், வாய் நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கால், வாய் நோய்களைத் தடுக்க செப். 1 வரை தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

பெரம்பலூரில் நூல் வெளியீட்டு விழா

Posted: 14 Sep 2014 12:22 PM PDT

பெரம்பலூர் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில், அரும்பாவூரை சேர்ந்த ராஜு எழுதிய கூம்பு வடிவ மேகமும்- மழையும், மழையை முன்னறிவோம் ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரளி பள்ளியில் புகைப்படக் கண்காட்சி

Posted: 14 Sep 2014 12:22 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பேரளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் திட்டங்களை அறியும் வகையிலான புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை

புதுக்கோட்டை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிபொருள்கள் பறிமுதல்

Posted: 14 Sep 2014 12:21 PM PDT

புதுக்கோட்டை அருகே அனுமதியின்றி வீட்டில் வைத்திருந்த வெடிபொருள்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

ரோட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

Posted: 14 Sep 2014 12:21 PM PDT

அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேனிமலை பாலிடெக்னிக் கல்லூரியில் தலைமைப் பண்பு பயிற்சி பயிலரங்கம்

Posted: 14 Sep 2014 12:21 PM PDT

பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை எஸ்எஸ்ஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான தலைமைப்பண்பு பயிற்சி பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

அனுமதியின்றி சுவரொட்டி: 6 பேர் மீது வழக்கு

Posted: 14 Sep 2014 12:21 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் போலீஸாரைக் கண்டித்து அரசு சுவரில் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டியதாக 6 பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கீரனூர் அருகே பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

Posted: 14 Sep 2014 12:20 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகேயுள்ள புலியூரைச் சேர்ந்தவர் சைவராசு. இவரது மனைவி ஜெயா (45). இவர் புலியூரில் கடைவீதியில் உள்ள தனது டீ கடையில் இருந்து சனிக்கிழமை இரவு வீட்டுக்கு நடந்து

முன்விரோதம் காரணமாக குடிசை வீட்டுக்கு தீ: இளைஞர் கைது

Posted: 14 Sep 2014 12:20 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள வி. கொல்லைகல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் சு. ஆறுமுகம் (45). அதே பகுதியைச் சேர்ந்தவர் சேது மகன் பாண்டி (30). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம்

ரூ. 1.50 கோடியில் திறந்தவெளி கலையரங்கத்துக்கு இடம் ஆய்வு

Posted: 14 Sep 2014 12:20 PM PDT

தஞ்சாவூரில் ரூ. 1.50 கோடியில் திறந்தவெளி கலையரங்கம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் கண்ணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

தஞ்சையில் மனைவி நல வேட்பு விழா: 165 தம்பதிகள் பங்கேற்பு

Posted: 14 Sep 2014 12:19 PM PDT

குடும்பப் பொறுப்புகளில் உறுதுணையாக இருக்கும் மனைவியை கௌரவப்படுத்தும் வகையில், தஞ்சாவூரில் மனைவி நல வேட்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

"இந்தியாவில் ஆண்டுதோறும் 7 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு

Posted: 14 Sep 2014 12:19 PM PDT

இந்தியாவில் ஆண்டுதோறும் 7 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றார் தஞ்சாவூர் மாவட்ட அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் சங்கத் தலைவர் சாத்தப்பன்.

தொடர் உண்ணாவிரதம் வாபஸ்

Posted: 14 Sep 2014 12:19 PM PDT

கும்பகோணம் நாச்சியார்கோவில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மதுக்கடையை இடம் மாற்ற ஒப்புக்கொள்ளப்பட்டதை அடுத்து காலவரையற்று நடைபெற்ற உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

சீர்காழி அருகே இரு கிராமத்தினரிடையே மோதல்

Posted: 14 Sep 2014 12:19 PM PDT

நாகை மாவட்டம், சீர்காழி அருகே கோயில் திருவிழா கலை நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக 2 கிராமத்தினரிடையே ஞாயிற்றுக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில், திருவெண்காடு காவல் சார்பு ஆய்வாளர்

ஓய்வூதியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க வலியுறுத்தல்

Posted: 14 Sep 2014 12:18 PM PDT

ஓய்வூதியர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு

Posted: 14 Sep 2014 12:18 PM PDT

நாகை மாவட்டம், மயிலாடுதுறை பெசன்ட் நகரில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது.

2ஜி: மன்மோகனுக்கு கட்டளையிட்டவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

Posted: 14 Sep 2014 12:02 PM PDT

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கவனத்துக்கு உள்பட்டுத்தான் 2ஜி அலைக்கற்றை ஊழல்கள் நிகழ்ந்ததாக முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) வினோத்ராய் கூறிய குற்றச்சாட்டு உண்மையென்றால், மன்மோகனுக்கு கட்டளையிட்டவர்கள் மீதும் விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்று பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

இந்தியா - ஜப்பான் இடையே அதிகரித்து வரும் வர்த்தக வாய்ப்புகள்

Posted: 14 Sep 2014 12:00 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்று வந்ததை அடுத்து, இந்தியா-ஜப்பான் இடையேயான வர்த்தகம் குறித்து தகவல்களைக் கோருவது அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாகர்கோவிலில் பாஜகவினர் வாக்கு சேகரிப்பு

Posted: 14 Sep 2014 12:00 PM PDT

நாகர்கோவில் நகராட்சி 37ஆவது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தனர்.

பத்மநாபபுரத்தில் அதிமுக, பாஜகவினர் வாக்கு சேகரிப்பு

Posted: 14 Sep 2014 12:00 PM PDT

பத்மநாபபுரம் நகராட்சி 11ஆவது வார்டில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, அதிமுகவினர் ஞாயிற்றுகிழமை மேட்டுகடை பகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™