ஈகரை தமிழ் களஞ்சியம் |
- tamil audio books தந்துதவ முடியுமா?
- நதியின் வேகத்தோடு - சிவசங்கரி மின்னூல்
- தொப்பை நீக்கி விடப்படும்
- கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
- ஜாலிக்காக குடிப்பது தப்பா?
- ஜி-மெயில் கணக்கு பாதுகாப்பாக இருக்கிறதா?
- கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை !
- சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்!
- 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம்ம T.N.Balasubramanian ஐயா...
- வீட்டு மகிழ்ச்சி விலகிப் போனது...!
- எல்லா நதிகளுமே கங்கைதான்!
- விண்டோஸ் ஓபன்
- நகைச்சுவை - கொஞ்சம் பழசு
- ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்டு
- கவி கா.மு. ஷெரீப் நூற்றாண்டு: உலவும் தென்றல் காற்றினிலே...
- குப்பைத்தொட்டி'ல்'!
- மனம் இருந்தால் சிகரெட்டை மறக்கலாம்! புற்றுநோயை வென்ற இயக்குனர் ரமணா!
- செப்டம்பர் 11 வினோபாவின் 119-வது பிறந்த நாள்
- 17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014
- எண்களில் மருத்துவம்
- கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு குட்பை!
- ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம்
- உணவுகளின் போட்டோகள் !
- உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா
- சாப்பிட்டு சும்மா இருங்க
- உதவுங்கள் உறவுகளே
- ஐபோன்6, ஐபோன்6+, ஐவாச், வெளியீட்டு வீடியோ
- பூமியை தாக்கும் சூரிய புயல்; தகவல் தொடர்பு பாதிக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
- இந்திய பெருங்கடலில் சுனாமி வர அதிக வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
- பெண்களைத் தாக்கும் புது ஆபத்து
- பேய் -அமானுசியங்கள் நிறைந்த திகில் பயணம் .
- அழகிய ஆபத்து - ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும் காமிக்ஸ் .
- முதல் மனைவி - சுஜாதா
- அன்றே சொன்ன அண்ணாவும் அதன்படியே நடக்கும் கருணாநிதியும்
- Silk road - இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
- பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை
- அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் -
- சில தகவல்கள் வேண்டி வந்துள்ளேன்...
- மீசாட்-3பி மலேசியாவின் அதி நவீன செயற்கைக்கோள்!
- செப். 12, 1857 - SS Central America என்ற கப்பல் 10 டன் தங்கத்துடன் மூழ்கி 425 பேர் பலி
- லிட்டில் ஜான்..!
- பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா
- கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்
- தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது...விலையில் இன்னும் வீழ்ச்சி ஏற்படுமா?
- தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது
| tamil audio books தந்துதவ முடியுமா? Posted: 12 Sep 2014 02:33 PM PDT யாரிடமாவது தமிழ் ஆடியோ புக்ஸ் இருந்தால் தந்துதவமுடியுமா நண்பர்களே ? |
| நதியின் வேகத்தோடு - சிவசங்கரி மின்னூல் Posted: 12 Sep 2014 12:18 PM PDT |
| Posted: 12 Sep 2014 12:17 PM PDT ![]() தொப்பை நீக்கி விடப்படுமென்றால், அப்படியே வெட்டி எடுத்துவிடுவார்களோ! |
| கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! Posted: 12 Sep 2014 11:44 AM PDT
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்! |
| Posted: 12 Sep 2014 11:40 AM PDT கேள்வி: தினம்தோறும் சிறிது மது அருந்தி வந்தால், இதய நோய் வராது என்று டாக்டர்கள் சொல்லி இருப்பதாகப் படித்தேன். மது அருந்தும்போது படபடப்பு குறைந்து, கவலைகள் மறந்து அமைதியாகத் தூங்குகிறேனே, அதனால்தானா? சத்குரு: தினம் ஓர் ஆப்பிள் என்று சொன்னவர்கள், இப்போது அதை மது என்று மாற்றி விட்டார்களா? மது அருந்தும் போது என்ன நடக்கிறது? உங்களுக்குள் ஒருவித ரசாயன மாற்றம் நிகழ்ந்து, உங்களின் பரபரப்பைக் குறைக்கிறது. அதை அமைதி என்று நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள். ஒரு கோப்பை மது அருந்துவதால் இவ்வளவு அமைதி ... |
| ஜி-மெயில் கணக்கு பாதுகாப்பாக இருக்கிறதா? Posted: 12 Sep 2014 11:38 AM PDT சுமார் 50 லட்சம் ஜி-மெயில் கணக்காளர்களின் பயனர் பெயர், பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் இணையத்தில் வெளியிட்டது தொடர்பாக கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-கிளவுட் மூலம் சேகரிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகைகளின் நூற்றுக்கணக்கான அந்தரங்க படங்கள், ஹேக்கர்களால் கடந்த வாரம் இணையத்தில் கசியவிடப்பட்டது, தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இன்னும் தீர்வு ஏற்படாத நிலையில், கூகுள் கணக்குகளின் இ-மெயில் சேவையான ஜி- மெயில் வாடிக்கையாளர்களில் சுமார் 50 லட்சம் கணக்குகளின் ... |
| கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Posted: 12 Sep 2014 11:37 AM PDT சமுதாயத்தில் ஆண் ஒரு காரியத்தை செய்து விட்டால், அதை ஒரு சம்பவமாக நினைத்து தாண்டி போகும் பட்சத்தில், ஒரு பெண் செய்யும் சின்ன தவறான காரியம் கூட, ஒரு வரலாறாக, ஒரு தலைமுறையின் பதிவாக பார்க்கும் சூழ்நிலை உள்ளது. ஒரு குடும்பத்தின் வேரும், அந்த குடும்பம் என்ற வாகனத்தை, சரியான பாதையில் நடத்திச் செல்லும் ஓட்டுனரும் பெண் தான். படிப்பறிவு இல்லாத காலத்திலேயே, பெண்கள் தங்கள் குடும்பத்தை திறம்பட நடத்தி, தங்கள் திறமையை நிலை நாட்டினர். ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு பிரச்னைக்கான தீர்வையும், அவர்கள் குடும்பத்தை ... |
| சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Posted: 12 Sep 2014 11:22 AM PDT சேமிப்புதான் ஒரு மனிதனையும், அவனைச் சார்ந்திருப்பவர்களையும் நிம்மதியாக வாழவைக்கும். ஆனால், இன்றைய நிலையில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில், சேமிப்பு என்பது இல்லாமலேயே போகிறது. இதனால் அவர்களின் எதிர்காலம் என்பது பெரிய கேள்விக்குறியாக மாறி வருகிறது. சேமிப்பை செம்மையாகச் செய்யவும், இன்னும் அதிகமான பணத்தைச் சேமிக்கவும் என்ன வழி? இதோ இந்த ஐந்து வழிமுறைகளைக் கடைப்பிடித்துப் பாருங்களேன்... 1 சேமிப்புக்கென தனியாக வங்கிக் கணக்கு! சம்பளதாரர், சுயதொழில் செய்வோர் யாராக இருந்தாலும் முதலில் சேமிப்புக்கு ... |
| 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம்ம T.N.Balasubramanian ஐயா... Posted: 12 Sep 2014 09:45 AM PDT அழகான தமிழில் சிலேடையாக பேசும் திறனும் கொண்ட நம் ஈகரையின் முன்னால் கவிஞர் இன்னாள் நிர்வாகக்குழுவில் இருக்கும் T.N.பாலசுப்ரமணியன் ஐயாவை மனமார வாழ்த்தலாம் வாங்க ... தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும் ஐயா இதே போல என்றும் எங்களுடன் தொடர்ந்து இணைந்திருந்து எங்களுக்கு வழிகாட்டியாக பல ஆயிரம் பதிவுகள் தொட வாழ்த்துகள் ஐயா... |
| வீட்டு மகிழ்ச்சி விலகிப் போனது...! Posted: 12 Sep 2014 09:39 AM PDT - |
| Posted: 12 Sep 2014 09:21 AM PDT கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவது சாத்தியமா என்று மக்களும் அரசியல் கட்சிகளும் கேட்டதுபோக, உச்ச நீதிமன்றமே கேட்டிருக்கிறது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கங்கையைப் பொறுத்தவரை அரைகுறையாகவும், முறையான திட்டமிடல் இல்லாமலும், போதிய அக்கறை இல்லாமலும்தான் இதுவரை செயல்பட்டிருக்கிறார்கள். இப்போது மட்டும் எப்படி வேறு விதமாகச் செயல்பட்டுவிடுவார்கள் என்பதுதான் உச்ச நீதிமன்றக் கேள்வியின் உண்மையான தொனி. கங்கோத்ரி தொடங்கி மேற்கு வங்கத்தின் டயமண்ட் ஹார்பர் வரையில் கங்கை நீரில் கலந்திருக்கும் கிருமிகளின் ... |
| Posted: 12 Sep 2014 09:08 AM PDT எப் 1 பூட் அழுத்தியதும் விண்டோஸ் ஓபன் ஆகிறது அதை சரி செய்வது எப்படி |
| Posted: 12 Sep 2014 08:45 AM PDT - |
| Posted: 12 Sep 2014 08:40 AM PDT ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு, எப்போதும் இந்திய வாடிக்கையாளர்கள் மனதில் தனி இடம் உண்டு. 50 ஆண்டுகளையும் தாண்டி இந்தியாவில் வெற்றிகரமான மோட்டார் சைக்கிள் நிறுவனமாக ராயல் என்ஃபீல்டு இருப்பதற்குக் காரணம், அதன் மீது இருக்கும் 'லைஃப் ஸ்டைல்' இமேஜ்தான்! அன்றாடப் போக்குவரத்துக்கான பைக்குகள் சூழ்ந்திருக்கும் இந்திய மார்க்கெட்டில், தனித்துவத்தோடு தெரிய விரும்புவர்களுக்கான சாய்ஸாக தொடர்ந்து இருந்து வருகிறது ராயல் என்ஃபீல்டு. ஒவ்வொரு மோட்டார் சைக்கிள் நிறுவனமும், சின்னச் சின்ன மாற்றங்களுடன் ஒன்று ... |
| கவி கா.மு. ஷெரீப் நூற்றாண்டு: உலவும் தென்றல் காற்றினிலே... Posted: 12 Sep 2014 08:33 AM PDT "ஷெரீப் பல நற்பண்புகளின் உறைவிடமாய் இருந்தார். திரையுலகத் தொடர்பிருந்தும் அதன் சீரழிவுகளில் சிக்கிக் கொள்ளாத உயர்பண்பு கவிஞர் கா.மு. ஷெரீப்பிடம் இருந்தது. ஒரு கவிஞன் வறுமையிலும் செம்மையாக எப்படி வாழ்வதென்பதை அவரிடமிருந்து நான் பயின்றேன். கவிஞர் ஷெரீப் ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் தீவிரமான சைவர். அதுகுறித்து அவரை நாங்கள் பரிகாசம் செய்வதுண்டு. கள் வியாபாரம் செய்பவன் கள் அருந்த மாட்டான். அதுபோல் கசாப்பு வியாபாரம் செய்பவன் கறி சாப்பிட மாட்டானா? கவிஞர் ஷெரீப் கறி வியாபாரம் செய்பவராக இருந்தாலும் ... |
| Posted: 12 Sep 2014 08:32 AM PDT வெளியுலகம் கண்களுக்குப் புலப்படாவண்ணம் புழுதித்துகள்களால் புடை சூழ்ந்த அந்த மகிழ்வுந்தின் பக்கவாட்டுக்கதவின் கண்ணாடியை பிஞ்சுக் கரமொன்று கவனமாய்த் துடைத்துத் தூய்மைப்படுத்த, பின்னதன் மறுபக்கம் வெளிப்பட்டது புன்னகைக்கும் சிறுவனின் பொன்முகம். ஆலமரத்தின் கிளைநுனிகள், கோணத்திற்கொன்றாய் திசையனைத்தும் வியாபித்திருப்பதைப் போன்று, சூரியனின் கிரணங்கள் கிஞ்சித்தும் பாகுபாடின்றி எண்திசையும் பாய்ந்தோடிப் பரவுதற்போன்று, அவன் பரட்டைத் தலைமயிர்க்கால்கள் முரட்டுத்தனமாய் அனைத்துப்பக்கமும் துளைத்துக் ... |
| மனம் இருந்தால் சிகரெட்டை மறக்கலாம்! புற்றுநோயை வென்ற இயக்குனர் ரமணா! Posted: 12 Sep 2014 08:26 AM PDT பிரச்னை இல்லாத மனுஷனும் இல்லை, பிரச்னை இல்லாதவன் மனுஷனே இல்லை...' என்று நடிகர் விஜய்யை, 'ஆதி' படத்தில் பேச வைத்தவர் இயக்குனர் ரமணா. அவர் தொண்டைப் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு எழுந்துள்ள கதை இந்த நோயால் போராடிக்கொண்டிருக்கும் அனைவரையும் எழுந்து நிற்கவைக்கும் தூண்டு கோல். 'திருமலை', 'ஆதி', 'சுள்ளான்' போன்ற ஆக்ஷன் படங்களின் மூலம் கோலிவுட்டில் கவனத்தை ஈர்த்த ரமணா, சுறுசுறுப்புக்கும், குறுகிய காலத்தில் படங்களை எடுப்பதற்கும் பெயர் பெற்றவர். தொண்டைப் புற்றுநோயைத் தூர எறிந்து விட்டு, சளைக்காமல் ... |
| செப்டம்பர் 11 வினோபாவின் 119-வது பிறந்த நாள் Posted: 12 Sep 2014 08:25 AM PDT வினோபா பாவேகாந்தியம் என்பது சாத்தியமான நடைமுறையே என்பதை நிரூபித்துக் காட்டியவர்களில் முதன்மையானவர் 'பூதான இயக்க'த்தின் தந்தை ஆசார்ய வினோபா பாவே. "காந்தியத்தை என்னைவிட நன்கு புரிந்துகொண்டவர்" என்று காந்தியாலேயே பாராட்டப்பட்டவர் வினோபாஜி. வினோபா பாவே, மகாராஷ்டிரத்தின் கொலாபா மாவட்டத்து ககோடா கிராமத்தில் 11.9.1895-ல் பிறந்தார். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் விநாயக். இளம் வயதிலேயே மகாராஷ்டிர சித்தர்கள், சிந்தனாவாதிகளின் நூல்களைப் படித்து அறிவைப் பெருக்கிக்கொண்ட விநாயக்குக்குக் கணிதம் மிகவும் ... |
| 17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014 Posted: 12 Sep 2014 08:21 AM PDT நகரம்: இஞ்சியோன், தென் கொரியா குறிக்கோள் வசனம்: பன்மயம் இங்கே ஒளிர்கிறது நிகழ்வுகள்: 36 விளையாட்டுகளில் 439 போட்டிகள் துவக்க விழா : செப்டம்பர் 19 நிறைவு விழா : அக்டோபர் 4 முதன்மை அரங்கம் : இஞ்சியோன் ஆசியட் முதன்மை விளையாட்டரங்கம் 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக XVII ஆசியட், செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4, வரை தென் கொரியாவில் இஞ்சியோனில் நடைபெறுகிறது. ஆசியாவில் ஆசிய ஒலிம்பிக் மன்றத்தால் (OCA) கட்டுப்படுத்தப்படும் மிகப்பெரும் பல்விளையாட்டுப் போட்டியாகும். 36 விளையாட்டுகளில் ... |
| Posted: 12 Sep 2014 08:14 AM PDT எண்களுக்கும் மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு சோதிடத்தில் மட்டுமல்லைங்க உடல்நலத்திலும்தான் என்ன தொடர்புன்னு இந்த திரியில பிரிச்சி மேய்வோமா.. வாங்க போகலாம்... |
| கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு குட்பை! Posted: 12 Sep 2014 08:13 AM PDT புற்றுநோய்', மனிதர்களை ஒரு கணம் உறைய வைக்கும் வார்த்தை. இதில், பலவகைகள் இருந்தாலும், உடல் ஆரோக்கியமாக வைத்திருந்தால் சில வகை புற்றுநோய்களை நெருங்கவிடாமல் செய்யலாம் என்பது மருத்துவர்களின் கணிப்பு. பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயில் 15 சதவிகிதம் பேருக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோயாக தான் உள்ளது. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 70 ஆயிரம் பெண்கள் கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். அவ்வளவு கொடுமையானதா கர்ப்பப்பைவாய் புற்று நோய்? 'இல்லை, தவிர்க்கக்கூடியதுதான்' என்கிறார் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் ... |
| ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம் Posted: 12 Sep 2014 08:09 AM PDT மின்னூல் என்று நினைவுக்கு வந்தால் அடுத்து நினைவுக்கு வருவது ஒரத்தநாடு கார்த்திக் என்ற பெயர்தான். எந்த வருமானத்திற்கும் ஆசைப்படாமல் மற்றவர்களுக்கு உதவுவதே தனது பணி என்ற உயரிய நோக்கத்துடன் செயல்பட்டுவரும் இவரைப் பாராட்டவும், வாழ்த்துகளைக் கூறவும் இத்திரியைத் துவங்கியுள்ளேன்! ஒன்றா இரண்டா? ஆயிரக்கணக்ககில் மின்னூல்களை இணையம் முழுதும் பரவச் செய்து, இணைய வாசகர்களின் அன்புக்கு உரித்தானவர். இவரது கூகிள்+ பக்கத்தை இதுவரை பார்வையிட்டுள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 12,974,622 views ... |
| Posted: 12 Sep 2014 08:08 AM PDT நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ... |
| உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா Posted: 12 Sep 2014 07:50 AM PDT இன்று (11.09.2014) பாரதியாரின் நினைவுநாள். இந்த நாளில் சென்னை பாரதியார் சங்கம் நடத்திய பாரதி விழாவில் உங்கள் ஆதிராவுக்கும் " பாரதி கண்ட கல்வியாளர் விருது" வழங்கியுள்ளார்கள். சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர். தாண்டவன் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார். பேரா. தெ.ஞானசுந்தரம், பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன், பத்திரிகையாளர். மு. தருமராசன், இயக்குநர். எஸ்.பி. முத்துராமன் இவர்களுடன் நான் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி எல்லாவற்றையும் இதுவரை உங்களிடமே பகிர்ந்து வந்துள்ளேன். இனியும் ... |
| Posted: 12 Sep 2014 07:29 AM PDT ஒருவர் நலமாக இருப்பதற்கு உணவு, உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள் என ஆயிரம் காரணங்கள் கூறினாலும், அனைத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது நம்முடைய உணவுப் பழக்கம்தான். சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடுவது சரியா? என நம் மனதில் பல்வேறு கேள்விகள் எழும். உணவு உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி, ஊட்டச் சத்து நிபுணர் திவ்யா கிருஷ்ணமூர்த்தி மிகத் தெளிவாக விளக்கினார். நம்முடைய உடலின் ஒவ்வொரு உறுப்பும் இயங்கத் தேவையான ஆற்றல் மற்றும் ஆக்ஸிஜனை ரத்தம் கொண்டு ... |
| Posted: 12 Sep 2014 06:26 AM PDT எனது நினைவக அட்டையில் கடவுற்ச்சொல்லை மறந்துவிட்டேன் அந்த நினைவு அட்டையை எப்படி மிட்பது உதவி தேவை.... |
| ஐபோன்6, ஐபோன்6+, ஐவாச், வெளியீட்டு வீடியோ Posted: 12 Sep 2014 06:23 AM PDT ஐபோன்6, ஐபோன்6+, ஐவாச், வெளியீட்டு வீடியோ This posting includes an audio/video/photo media file: Download Now |
| பூமியை தாக்கும் சூரிய புயல்; தகவல் தொடர்பு பாதிக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை! Posted: 12 Sep 2014 06:22 AM PDT ஃபுளோரிடா: : மிகவும் அரிதான சூரிய புயல், பூமியை இன்று எந்த நேரத்திலும் தாக்கலாம் என்றும், இதனால் ஜி.பி.எஸ் சிக்னல்கள், ரேடியோ தகவல் தொடர்புகள் மற்றும் மின்சார பரிமாற்றங்கள் பாதிக்கப்படக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். . சூரியனில் இருந்து அதிசக்தி வாய்ந்த வெப்பம் வெளிப்படும் போது புயலாக மாறி அண்ட வெளியில் அவ்வப்போது பரவி வருகிறது. இதனால் பூமிக்கு ஆபத்து என்று பல முறை கூறப்பட்டது. எனினும், இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. சூரியனில் ஏற்படும் வெடிப்புகளினால் இந்த சூரிய புயல் உருவாகிறது. ... |
| இந்திய பெருங்கடலில் சுனாமி வர அதிக வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல் Posted: 12 Sep 2014 06:12 AM PDT கொழும்பு: இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மியாமி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இலங்கையின் பெரடேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இதுவரை இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கூறுகையில், இலங்கையின் தென்கிழக்கில் உள்ள லகோன் கடல்பகுதியில் 22 வகையான படிமங்கள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். இவை இந்திய- ஆஸ்திரேலிய நிலத்தட்டுகள் ... |
| பெண்களைத் தாக்கும் புது ஆபத்து Posted: 12 Sep 2014 06:11 AM PDT ''அடடா, பத்தாங்கிளாஸ் படிக்குதுன்னாங்க... ஆனா, அந்த ஹீரோயின் தளதளன்னு காலேஜ் பொண்ணு மாதிரி இருக்குப்பா!'' - இப்போதெல்லாம் நம்மிடையே அடிக்கடி எழுகிறது இந்த கமென்ட். நடிகைகள் மட்டுமல்ல... பதின்ம வயதின் தொடக்கத்தில் உள்ள பள்ளிக்கூட மாணவிகள் பலரும் இப்போது இருபதுக்கு மேல் வயதைச் சொல்லும்படி இருக்கிறார்கள். அப்போதைக்கு அந்த அதீத வளர்ச்சி சுற்றியிருப்பவர்களால் பாராட்டப்படுகிறது. இதனால் அந்தந்த பெண்களுக்கும் அதில் பெருமை வந்துவிடுகிறது. ஆனால், ''நிஜத்தில் இப்படிப்பட்ட வளர்ச்சி, பெண்களின் ஆரோக்கியத்தைக் ... |
| பேய் -அமானுசியங்கள் நிறைந்த திகில் பயணம் . Posted: 12 Sep 2014 06:09 AM PDT அமானுசியங்கள் நிறைந்த திகில் பயணம் .ஆசிரியர் சஞ்சீவி தொடராக எழுதியது மின்னூல் வடிவில் உங்கள் பார்வைக்கு .. டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/ddk13fafyfal3kb/pei.pdf |
| அழகிய ஆபத்து - ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும் காமிக்ஸ் . Posted: 12 Sep 2014 06:05 AM PDT |
| Posted: 12 Sep 2014 05:56 AM PDT கல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி, கடைசி பர்லாங்கில் ராஜலட்சுமி நனைந்துவிட்டாள். போதாக்குறைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக சகதியையும் சேற்று நீரையும் அவள் மேல் வாரி இறைத்துவிட, வீட்டு வாசலை அடையும்போது கோபம் மூக்கு நுனியில் துவங்கியிருந்தது. பால்காரன் வரவில்லை. மேனகா சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள். பூட்டின வீட்டுக்குள் டெலிபோன் பிடிவாதமாக ஒலித்துக்கொண்டு இருந்தது. கோபம் இப்போது அவள் பார்வையை மறைத்தது. கைகளை இறுக்க அழுத்திக்கொண்டதால், ரத்தம் செத்து மணிக்கட்டு வெளுப்பாகி இருந்தது. ... |
| அன்றே சொன்ன அண்ணாவும் அதன்படியே நடக்கும் கருணாநிதியும் Posted: 12 Sep 2014 05:40 AM PDT அன்றே சொன்ன அண்ணாவும் அதன்படியே நடக்கும் கருணாநிதியும் 'கருணாநிதி' என்ற வடமொழி பெயரை மாற்றிக்கொள்ளாதது குறித்து நிகழ்ச்சி ஒன்றில், திமுக தலைவர் கருணாநிதி பேசினார். தென்சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியது: "திராவிட முன்னேற்றக் கழகத்தை நடத்துவதற்கு தன்னுடைய பகுதியை மேலும் மேலும் வளர்ப்பதற்கு நம்முடைய அன்பழகனைப் போன்றவர்கள் இந்த இயக்கத்திலே நிறைய பெயர் பெற்றிருக்கிறார்கள். என் அருகில் அமர்ந்திருக்கின்ற கழகத்தின் பொதுச் செயலாளர் 'அன்பழகன்' ... |
| Silk road - இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? Posted: 12 Sep 2014 05:18 AM PDT silk road anonymous marketplace சில்க் ரோட்டில் பயணம் செய்வதற்கு முன், சில அடிப்படைத் தகவல்கள். பயனீட்டாளர்களாக நமக்கெல்லாம் தெரிந்த வலைத்தளங்களையும், அலை மென்பொருட்களையும், இணைக்கப்பட்ட சாதனங்களையும்கொண்ட இணையத்தைத் தாண்டி 'இருண்ட இணையம்' ஒன்று இருக்கிறது. இந்த இணையத்தில் இருக்கும் தளங்களை கூகுள், யாஹூ, பிங்... போன்ற தேடல் பொறிகளைக் கொண்டு கண்டுபிடிக்க இயலாது. 'ஆழ் இணையம்' (Deep Web) என்ற பெயரில் இது அழைக்கப்பட காரணம் இருக்கிறது. கடலின் மேற்பரப்பில் வலை ஒன்றை இழுத்துக்கொண்டே சென்றால், ... |
| பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை Posted: 12 Sep 2014 04:57 AM PDT தைராய்டு பாதிப்பு : பெண்களின் உடலில் தைராய்டு சுரப்பி குறையும். குறைந்தால் உடல் பருமன் ஏற்படும், தலைமுடி கொட்டும். சிலருக்கு தைராய்டு சுரப்பு அதிகமாகும். அதிகமானால் உடல் இளைக்கும், படபடப்பு, வயிற்றுபோக்கு ஏற்படும். இவற்றை தவிர்க்க தைராய்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தைராய்டு பாதிப்புகளை மருந்து, மாத்திரைகளால் 100 சதவீதம் குணப்படுத்தலாம். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் : உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. வைரஸ் தொற்று நோய் கிருமியால் ... |
| அண்ணலின் அழகு - பாடல் சொல்லும் பாடம் - Posted: 12 Sep 2014 04:54 AM PDT இறைவனை அறிவதும் அடைவதும் ஒரு சிலராலேயே முடியும். அப்படி அறிந்தவர்களில், எல்லோராலும் இறைவனைப் பற்றிச் சொல்லிவிட முடியாது. ஒரு சிலரால் மட்டுமே சொல்ல முடியும். அப்படியே சொன்னாலும் இறைவன் குறித்து முழுமையாகச் சொல்லுதல் என்பது அரிதான ஒன்று! - மிகுந்த அனுபவமும், பக்குவமும், தெளிவும், பாண்டித்தியமும், கவித்துவமும், ஞானமும் பெற்றவர்களால் மட்டுமே, தாங்கள் அனுபவித்த தெய்விகத்தை, நமக்குத் தெரிந்த சிலவற்றின் மூலம் கோடிட்டுக் காட்ட முடியும். அதை உணர்ந்து, புரிந்துகொள்ள வேண் டியது நமது பொறுப்பு. - அப்படித்தான்... ... |
| சில தகவல்கள் வேண்டி வந்துள்ளேன்... Posted: 12 Sep 2014 04:52 AM PDT DOWNLOAD இற்கு பதில் தரவிறக்கம் என மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்? பதிவின் தலைப்பை நிறம் மாற்றுவது எப்படி? செல்லா எழுத்துரு அளவை (பெரிதாக) மாற்றமுடியுமா? நன்றி. |
| மீசாட்-3பி மலேசியாவின் அதி நவீன செயற்கைக்கோள்! Posted: 12 Sep 2014 04:50 AM PDT கோலாலம்பூர், செப்டம்பர் 12 – நாட்டின் அதிநவீன செயற்கைக்கோளாக கருதப்படும் மீசேட்-3பி, இன்று காலை சரியாக 6.05 மணிக்கு பிரெஞ்சு கயானாவின் உள்ள கயானா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. முதல் மூன்று முறை ஏற்பட்ட சிறிய தாமதங்கள் காரணமாக சற்றே பதட்டமான சூழல் நிலவினாலும், இறுதியாக செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்ததும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட மீசாட்-3பி கனவுத் திட்டம், சுமார் மூன்றாண்டு கால கடின முயற்சிகளுக்கு ... |
| செப். 12, 1857 - SS Central America என்ற கப்பல் 10 டன் தங்கத்துடன் மூழ்கி 425 பேர் பலி Posted: 12 Sep 2014 04:47 AM PDT மத்திய அமெரிக்காவிற்கும் அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதிகளுக்குமிடையில், நீராவியால் இயங்கக்கூடிய SS Central America என்ற பயணிகள் கப்பல் 1850களில் இயக்கப்பட்டு வந்தது. 1857-ம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி 477 பயணிகள், 101 ஊழியர்களுடன் இந்தக் கப்பல் கலோனில் உள்ள பானமேனியன் துறைமுகத்தில் இருந்து, நியூயார்க் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இந்தக் கப்பலில் 10 டன் தங்கமும் கொண்டு செல்லப்பட்டது. செப்டம்பர் 9-ம் தேதி வடகரோலினா கடற்பகுதியில் சென்போது கடும் சூறாவளியில் இந்தக் கப்பல் சிக்கி திசைமாறியது. ... |
| Posted: 12 Sep 2014 04:36 AM PDT -- நன்றி: விகடன் |
| பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா Posted: 12 Sep 2014 04:15 AM PDT ஒற்றைப்படையாக பாகிஸ்தானை உருவாக்கியவர் என்று மட்டுமே நம்மால் அறியப்படுகிற ஜின்னா சுவையான முரண்பாடுகளின் ஒட்டுமொத்த கலவை. இஸ்லாம் என்கிற மதத்தின் பெயரால்ஒரு நாட்டை கட்டமைத்த அவர் மதப்பற்றாளர் எல்லாம் இல்லை. மது அருந்துவார்,உருது ஒழுங்காக பேச வராது அவரே உண்மையில் குஜராத்தி ! காந்தி படித்த அதே சட்டக்கல்லூரியில் தான் அவரும் படித்தார். பன்றிக்கறியும் சாப்பிடுவார் என்பார்கள்; ''தொழுகை எல்லாம் பெரும்பாலும் செய்யவே மாட்டார்."குரானில் ஜின்னாவை விட எனக்கு அதிகமான வாசகங்கள் தெரியும் !" என்று காந்தி சொல்கிற ... |
| கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் Posted: 12 Sep 2014 04:14 AM PDT அகந்தை அழிந்தது எப்படி? - தென்கச்சி சுவாமிநாதன் அ து மிகவும் பழைமையான ஒரு கோயில். அங்கே அர்ச்சகர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். எல்லோருமே பிரம்மச் சாரிகள். ஆகவே, அவர்கள் உடலில் வலிவு இருந்தது. முகத்தில் பொலிவு இருந்தது. ஒரு நாள் - அந்த ஆலயத்தின் முன்னால் சில குதி ரைகள் வந்து நின்றன. அவற்றிலிருந்து சில வீரர்கள் கீழே இறங்கினார்கள். உள்ளே வந் தார்கள். ''நாங்கள் அரண்மனையிலிருந்து வருகி றோம்'' என்றார்கள் அந்த வீரர்கள். ''வாருங்கள்'' என்றனர் அர்ச்சகர்கள். ''மன்னர் எங்களை அனுப்பி வைத்தார்!'' ... |
| தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது...விலையில் இன்னும் வீழ்ச்சி ஏற்படுமா? Posted: 12 Sep 2014 04:04 AM PDT தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்துள்ளது. அதாவது ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 2570 ஆக குறைந்துள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டும் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை சுமார் 200 ரூபாய் குறைந்துள்ளது. உலக அளவில் தங்கத்தை அதிகமாக வாங்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில், தங்கத்தின் மீதான இந்தியர்களின் மோகம் குறையத் தொடங்கி உள்ளதையே இந்த விலை வீழ்ச்சி உணர்த்துவதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த ஒராண்டு காலமாகவே தங்கத்தின் விலையில் ஒருவிதமான தேக்க நிலை நிலவுகிறது. ... |
| தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது Posted: 12 Sep 2014 04:04 AM PDT தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது: மத்திய அரசு குற்றச்சாட்டு! புதுடெல்லி: தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் அதிக அளவில் வாங்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2011 முதல் தமிழகத்துக்கான மண்எண்ணெய்யை 27 ஆயிரம் கிலோ லிட்டராக குறைத்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், மத்திய அரசு 62,140 கிலோ லிட்டர் மண்எண்ணெய் கூடுதலாக ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
