Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மகாராஷ்டிரா, அரியானா மாநில காங்., ஆட்சிக்கு சோதனை: இரு மாநிலங்களிலும் அக்., 15ல் சட்டசபை தேர்தல்

Posted:

புதுடில்லி: காங்., ஆட்சி நடந்து வரும், மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களில், அடுத்த மாதம், 15ல், சட்டசபை தேர்தல் நடத்தப் போவதாக, மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது, மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இந்த தேர்தல் அறிவிப்பு, காங்., ஆட்சிக்கு சோதனையாகவே கருதப்படுகிறது.மகாராஷ்டிர மாநிலத்தில், கடந்த, 15 ஆண்டுகளாக, காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரசின் பிரித்விராஜ் சவான், முதல்வராக உள்ளார். முந்தைய தேர்தல்களில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி, கடுமையான போட்டியை ஏற்படுத்தவில்லை என்பதால், ...

கல்லூரி மாணவியர் மீது அமிலம் வீச்சு : வாலிபர் ஓட்டம்; 'சைக்கோ' நபரா?

Posted:

திருமங்கலம்:மதுரை, திருமங்கலம் காமராஜ் பல்கலை உறுப்புக் கலைக் கல்லூரி மாணவிகள் இருவர் மீது வாலிபர் ஒருவர் 'ஆசிட்' ஊற்றிவிட்டு தப்பினார். 'சைக்கோ' போன்ற தோற்றத்தில் இருந்த அவரை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை, பேரையூர் சின்னபூலாம்பட்டியை சேர்ந்த உதயசூரியன் மகள் மீனா, 17. பி.ஏ., ஆங்கிலம் முதல் ஆண்டு படிக்கிறார். நேற்று மதியம் 1:30 மணிக்கு கல்லூரி முடிந்ததும், வளாகத்தில் சக மாணவியருடன் சாப்பிட்டார். பின், டவுன் பஸ் ஸ்டாண்ட் செல்ல, பெருமாள் கோயில் அருகே குறுகிய சந்தில் தோழிகளுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.எதிரே நடந்து வந்த 35 வயது நபர், மதுபாட்டிலில் ...

மன்மோகனுக்கு நெருக்கடி முற்றுகிறது: காங்., மூத்த தலைவர் கமல்நாத்தும் தாக்கு

Posted:

புதுடில்லி:'2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு விவகாரத்தில், முன்னாள் தலைமை தணிக்கை அதிகாரி, வினோத் ராயை தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, கமல்நாத்தும், பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்து உள்ளார். இதனால், அவருக்கு நெருக்கடி முற்றியுள்ளது.புத்தகம்:கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த, மன்மோகன் சிங் அரசின் பல ஊழல்களை அம்பலப்படுத்தியவர், வினோத் ராய். இவர், 'தி டைரி ஆப் தி நேஷன்ஸ் கான்சயின்ஸ் - நாட் ஜஸ்ட் அன் அக்கவுன்டன்ட்' என்ற பெயரில், புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.'நேற்று முன்தினம், தனியார், 'டிவி' ஒன்றுக்கு, அவர் ...

உள்கட்டமைப்பு திட்டங்களை எலக்ட்ரானிக் முறையில் கண்காணியுங்கள்: அமைச்சர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு

Posted:

புதுடில்லி:நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்தும், உள்கட்டமைப்பு பணிகளை செயல்படுத்தும், பல துறைகளின் அமைச்சர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், 'திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் நிலையில், அந்த திட்டங்கள் எவ்வாறு வளர்ந்து வருகின்றன என்பதை, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, அவற்றை, எலக்ட்ரானிக் முறையில் கண்காணிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தலைமையிலான, மத்தியில் ஆளும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ...

இளைஞர்களை அடித்து துவைத்த தீவிரவாதிகள்: அதிர்ச்சிகரமான வீடியோவால் பெரும் பரபரப்பு

Posted:

ஷில்லாங்:வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில், போலீசாருக்கு துப்பு கொடுத்ததாகக் கூறி, இளைஞர்களை, சுய நினைவு இழக்கும் வரை, தீவிரவாதிகள், தடிகளால் தாக்கிய அதிர்ச்சிகரமான வீடியோ வெளியாகியுள்ளது.மேகாலயாவில், முதல்வர் முகுல் சங்மா தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, கரோ தேசிய விடுதலை ராணுவம் என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், சமீபத்தில், ஒரு கிராமத்துக்குள் புகுந்தனர். அங்குள்ள இளைஞர்களை வரிசையாக நிற்க வைத்து, 'நீங்கள் தானே, எங்களைப் பற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கிறீர்கள்' என, கூறியபடி, அவர்களை கொலைவெறியுடன், ...

வழக்கை விரைந்து முடிக்க ஆர்வம் காட்டுவது ஏன்?சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

Posted:

புதுடில்லி:'நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு குறித்த விவகாரத்தில், பிர்லா நிறுவனத்தின் மீதான வழக்கை மட்டும் விரைந்து முடிக்க ஆர்வம் காட்டுவது ஏன்?' என, சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது.முந்தைய காங்., ஆட்சியில், தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில், பெரும் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட், இதை கண்காணித்து வருகிறது.இந்நிலையில், குமார் மங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான, ஹிண்டல்கோ நிறுவனத்தின் மீதான வழக்கை விரைந்து முடிப்பதற்காக, சி.பி.ஐ.,யின் விசாரணை ...

தி.மு.க.,வை யாராலும்வீழ்த்த முடியாது: கருணாநிதி

Posted:

சென்னை:'குடும்பமாக, கட்சியை நடத்தி வருகிறோம். யார் கலகம் மூட்டினாலும், தி.மு.க.,வை வீழ்த்த முடியாது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.தென் சென்னை மாவட்ட தி.மு.க., செயலர் ஜெ.அன்பழகன் இல்லத் திருமண விழாவில், கருணாநிதி பேசியதாவது:தி.மு.க.,வை குடும்பமாக, நடத்திக் கொண்டிருக்கிறோம். அரசியல் கட்சியாகவோ அல்லது சமுதாய இயக்கமாகவோ மாத்திரமல்ல; சமுதாயப் புரட்சியை உருவாக்குகிற ஒரு இயக்கமாக, தி.மு.க.,வை இன்றைக்கும் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தக் கட்சியில், யார் என்ன சொன்ன போதிலும், யார் கலகமூட்டி, தங்களுடைய திருவிளையாடல்களை நடத்திய போதிலும், இந்த கட்சியை ...

கோவையில் தேர்தல் விதிமீறல்கள் கொடி கட்டி பறக்குது: இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு இல்லை!

Posted:

கோவை மேயர் இடைத்தேர்தலில், தேர்தல் விதிகள் காலில் போட்டு மிதிக்கப்பட்டு வரும் நிலையில், தேர்தல்விதிமீறலுக்காக இதுவரைஒரு வழக்கு கூட பதிவுசெய்யப்படவில்லை.இடைத்தேர்தல் என்றாலே, ஆளும்கட்சியின் அத்துமீறலும், தேர்தல் விதிமீறலும் சாதாரணமாகி விடுவது சகஜம் தான். அதிலும், மாநில தேர்தல் கமிஷனால் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல்களில், இந்த விதிமீறல்கள் எப்படியிருக்குமென்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.கடந்த 3ம் தேதியன்று, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலேயே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததோடு, அன்றே வேட்புமனு தாக்கலும் துவங்கி ...

காவிரி நீருக்காக ஏங்கும் 'கடைமடை': கேள்விக்குறியாகும் சம்பா சாகுபடி

Posted:

நாகப்பட்டினம் : நாகை மாவட்டத்தில் நம்பிக்கையோடு சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்ட, காவிரி கடைமடை பாசன விவசாயிகள், இதுவரை தண்ணீர் வராததால், கவலையில் ஆழ்ந்துள்ளனர்.நாகை மாவட்ட விவசாயிகள் சம்பா பருவத்திற்குரிய பணிகளை துவங்கிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு குறைந்தளவு நீர்வரத்து கிடைத்தது. நீர்வரத்து தொடரும் என்ற நம்பிக்கையில் நாற்றங்கால் விட்டு, நாற்றுகளும் நடவு செய்வதற்கு பக்குவமாகிவிட்ட நிலையில், நடவுப்பணிக்கான ஆற்றுப்பாசனம் கடைமடை பகுதி விவசாயிகளை காலை வாரிவிட்டது.பல மாதங்களாக நாகை மாவட்டத்தில் மழையின்றி, கடுமையாக வெயில் வாட்டி ...

ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிப்பு: கவர்னரின் அதிகாரத்தை பறித்தது காங்., அரசு

Posted:

பெங்களூரு: ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் கவர்னரின் அதிகாரத்தை திரும்ப பெற்றுக் கொள்ள, கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த, கர்நாடகா அமைச்சரவை கூட்டத்தில், இது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானத்தின்படி, சி.ஆர்.பி.சி., 432ன் கீழ், 2014 ஜன.,7ல், வெளியிட்ட விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை இருந்த விதிமுறையின்படி, நன்னடத்தை உள்ள ஆயுள்தண்டனை கைதிகளை விடுவிக்க, மூன்று, நான்கு கட்டங்களில் செயல்பாடுகள் நடத்த வேண்டியிருந்தது. சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., விசாரணை ...

இந்தியாவில் குழந்தை திருமணம் அதிகம் : குழந்தை பிறப்பு பதிவு குறைவு

Posted:

ஐக்கிய நாடுகள் : குழந்தைகள் பிறப்பை பதிவு செய்வது மற்றும் குழந்தை திருமணத்தில், இந்தியா மிகவும் பின்தங்கி இருப்பதாக, ஐ.நா.,வின், 'யுனிசெப்' அறிக்கை தெரிவித்துள்ளது.'தெற்காசியாவில் குழந்தைகள் உரிமை' என்ற தலைப்பில், சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம், 'யுனிசெப்' வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த, 2000 2012 வரை, தெற்காசிய நாடுகளில், 5 வயது வரையிலான, 7 கோடி குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படவில்லை. இந்த நாடுகளில், குழந்தைகள் பிறப்பு பதிவு, 2000த்திற்கு பின் அதிகரித்த போதிலும், குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் அடையவில்லை. இந்தியாவுடன், ஆப்கன், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™