Tamil Star |
- விஷால், சித்தார்த்திடம் பாராட்டுப் பெற்ற சௌந்தரராஜா!
- பேங்க் வேலைய விடப்போறேன்: லொள்ளு சபா’ மனோகர்!
- போன வருஷம் சிம்புவுடன்… இந்த வருஷம் அம்மாவுடன்!
- டூயல் சிம் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்!
- சதம் விளாசினார் சங்கக்கரா: இலங்கை அணி ரன் குவிப்பு!
- ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் : கால் இறுதியில் ரோஜர் பெடரர்
- மனிதர்கள் போன்று நடக்கும் விலங்கு…
- இந்த பிஞ்சு வயசுல எம்புட்டு கொலைவெறினு பார்த்தீங்களா?
- பார்ப்பவர்களை பயமுறுத்தும் வகையில் பறந்த விமானம்!
- குடத்தினுள் தலையை விட்டு சிக்கித்தவிக்கும் நாயின் பரிதாபக்காட்சி..
- மனங்களை கொள்ளை கொள்ளும் இலங்கையின் ரம்மியமான காட்சி!
- ஆரோக்கியமாய் வாழ அவரைக்காய் சாப்பிடுங்கள்!!!
- அச்சத்தின் பிடியில் 4 லட்சம் குழந்தைகள்- உளவியல் பாதிப்பு!
- ஐரோப்பிய உணவுப் பொருட்களுக்கு ரஷ்யா அதிரடி தடை!
- மாணவன் தனக்குத் தானே காயம் ஏற்படுத்தினாராம்: உயர்கல்வி அமைச்சரின் கண்டுபிடிப்பு!
- ஐ.நா.விசாரணைக்குழுவினர் சிறப்பாக செயற்படுவர்!- பிரித்தானியத் தூதுவர் பேட்டி
- அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
- தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கம் திரைப்பட பிரசாரம்!
- கனடா-பிரம்ரனில் Ebola வைரஸ் அச்சுறுத்தல்?
| விஷால், சித்தார்த்திடம் பாராட்டுப் பெற்ற சௌந்தரராஜா! Posted: 09 Aug 2014 04:44 AM PDT
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜிகர்தண்டா படத்தில் வளர்ந்து வரும் நடிகர் சௌந்தரராஜா 'திண்டுக்கல் பொன்ராம்' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் பிரமாண்ட வெற்றிபெற்ற சந்தோசத்தோடு, கூடவே விஷால், சித்தார்த் பாராட்டிய சந்தோசமும் சேர்ந்து கொண்டிருக்கிறது சௌந்தரராஜாவிற்கு. இதுபற்றி சௌந்தரராஜா கூறுகையில், "ஜிகர்தண்டா படத்தையும், அதில் என் கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டு பாராட்டி கௌரவித்த அத்தனை மீடியா நண்பர்களுக்கும், அத்தனை மீடியாக்களுக்கும் ஜிகர்தண்டா குழுவில் ஒருவனாக நன்றிகளைத் தெரிவிக்கிறேன். ஜிகர்தண்டா படம் பிரிமியர் ஷோவில் என்னைக் கட்டிப்பிடித்து பாராட்டினார் படத்தின் ஹீரோ, சித்தார்த். ஹைதராபாத்தில் படம் பார்த்துவிட்டு, சௌந்தர் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு, நீங்க ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்க என்று வாட்ஸ்ஆப்பில் மெசெஜ் பண்ணார் விஷால். வளர்ந்து வரும் நடிகனை பெருந்தன்மையோடு பாராட்டிய விஷால், சித்தார்த்துக்கு என் சந்தோசம் நிறைந்த நன்றிகள். எப்போதும் எனக்கு பக்கபலமாக இருக்கும் அண்ணன், இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், நண்பர்கள் விஜய்சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ், பாடலாசிரியர் முருகன் மந்திரம் உள்பட அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பின் நன்றிகள். சுந்தர பாண்டியனில் ஆரம்பித்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், அதிதி, என்று தொடர்ந்த என் பயணத்தில் ஜிகர்தண்டா முக்கியமான படம். இப்போ, எல்.ஜி.ரவிச்சந்தர் இயக்கும் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தில் பரத்தின் நண்பனாகவும், ஹரி இயக்கும் பூஜை படத்தில் விஷால் நண்பனாகவும் நடித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் மலையாளத்தில் அறிமுகமாக இருக்கிறேன். என் வளர்ச்சியில் உறுதுணையாக இருக்கும் அனைத்து மீடியா நண்பர்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்," என்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பேங்க் வேலைய விடப்போறேன்: லொள்ளு சபா’ மனோகர்! Posted: 09 Aug 2014 04:34 AM PDT
லொள்ளுசபா நிகழ்ச்சியில் நீட்டி முழக்கி பேசி தனி பேச்சுவழக்கை ஏற்படுத்தியவர் மனோகர். இன்றைய இளசுகளில் பெரும்பாலானவர்கள் மனோகர் போல பேசி அடுத்தவர்களை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். நிறைய சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடித்துக் கொண்டிருந்த மனோகர், பிறகு மாஞ்சா வேலு, வேலாயுதம், என்றென்றும் புன்னகை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். காமெடி நடிப்பில் கலந்து கட்டி அடிக்கும் மனோகர் மத்திய அரசு வங்கி ஒன்றில் அதிகாரியாக பணிபுரிகிறார் என்பது அநேகம் பேருக்கு தெரியாது. நிறைய படங்களில் நடிப்பதற்காக வங்கிப் பணியை விடப்போவதாக கூறுகிறார் சந்தானம். லீவ் கிடைக்கலையே... தற்போது சின்னத்திரை, பெரியதிரையில் ஏன் பிரேக் விட்டிருக்கிறீர்கள் என்று கேட்டால், நான் வெறும் காமெடியன் இல்லங்க. நான் ஒரு மத்திய அரசு ஊழியன். கார்ப்ப ரேஷன் பேங்குல வேலை பார்க்கிறேன். அதுனால அடிக்கடி லீவ், பெர்மிஷன்னு போட முடியல. ஜில்லாவில் நடிச்சேன் உதயநிதி, சந்தானம் காம்பினேஷன்ல 'நண்பேன்டா' பண்ணிகிட்டிருக்கேன். 'ஜில்லா' படத்துல கூட நடிச்சிருந்தேன். படம் ரொம்ப நீளமா இருக்குன்னு என்னோட போர்ஷன கட் பண்ணிட்டாங்க. 20 படங்கள் ரிலீஸ் ஆகல இன்னும் நான் நடிச்ச 20 படம் ரிலீசாகாம இருக்கு. வர்ற அக்டோபர் மாசத்தோடு பேங்க் வேலைய ராஜினாமா பண்ணிட்டு முழுநேரமா சினிமாவுல நடிக்கப்போறேன். இனிமே என்னைய நெறைய படங்கள்ல பாக்கலாம். தயங்கும் தயாரிப்பாளர்கள் நான் பேங்குல வேலை பாக்குறதால ஒவ்வொரு தயாரிப்பாளரும் என்ன புக் பண்ண தயங்குறாங்கன்னு கேள்விப்பட்டேன். அதான் இந்த முடிவு. நண்பன் சந்தானம் சந்தானம் என்னோட பெஸ்ட் பிரண்ட். இன்னைக்கு தேதி கொடுக்க முடியாத அளவுக்கு பெரிய நடிகனா வளந்துருக்கான். ஆனால் லொள்ளு சபாவுல இருந்தப்ப இருந்த அதே சந்தானமாதான் இன்னைக்கும் எங்கக்கூட பழகுறான் என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் லொள்ளுமனோகர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| போன வருஷம் சிம்புவுடன்… இந்த வருஷம் அம்மாவுடன்! Posted: 09 Aug 2014 04:29 AM PDT
கடந்த ஆண்டு தன் காதலன் சிம்புவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகை ஹன்சிகா, இந்த ஆண்டு தன் அம்மாவுடன் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார். குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் பரபரப்பான நடிகையானவர் ஹன்சிகா. இத்தனைக்கும் இவர் நடித்த முதல் இரு படங்கள் பாக்ஸ் ஆபீஸில் புஸ்வானமானவைதான். ஆனால் ஒருவழியாக முன்னணி கதாநாயகன்களின் படங்களில் இடம் பெற்றார். இன்று முன்னணி நாயகியாகவும் வலம் வருகிறார். சிம்புவுடன் வாலு, வேட்டை மன்னன் என இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் ஹன்சிகா. அப்போதே, இது நிச்சயம் காதலில் வந்து நிற்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதே போல ஒருவரையொருவர் காதலிப்பதாக சிம்புவும் ஹன்சிகாவும் ட்விட்டரில் செய்தி வெளியிட்டனர். ஆனால் அந்த உறவு ஆறு மாதங்கள் கூட நிலைக்காது என்று மீடியாக்களில் எழுத ஆரம்பித்தனர். அப்படியேதான் நடந்தது. ஒரு நாள் திடீரென நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம் என அறிவித்தார் சிம்பு. இந்தப் பிரிவுக்குக் காரணம் சிம்பு, தன் பழைய காதலி நயன்தாராவுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்ததுதான் என்றார்கள். கடந்த ஆண்டு இதே நாளில் ஹன்சிகா தன் பிறந்த நாளை முன்னாள் காதலன் சிம்புவுடன் கொண்டாடி மகிழ்ந்தார். நாளை என் டார்லிங் பிறந்த நாள்.. என்ன கிப்ட் தர்றதுன்னு தெரியலியே என்று சமூக வலைத்தளங்களில் காதல் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருந்தார் சிம்பு. அடுத்த நாள் பிறந்த நாள் கொண்டாட்ட காட்சிகளை வெளியிட்டனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| டூயல் சிம் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்! Posted: 09 Aug 2014 04:21 AM PDT
பிலிப்ஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்திய சந்தையில் பிலிப்ஸ் S388 மற்றும் பிலிப்ஸ் I928 ஆகிய இரண்டு புதிய கைபேசிகள் தொடங்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.38,538 மற்றும் ரூ.13,694 ஆகும். இரண்டு பிலிப்ஸ் I928 மற்றும் S388 ஸ்மார்ட்போன்கள் இரட்டை சிம் மற்றும் 3G இணைப்பு ஆதரவு கொண்டிருக்கின்றன. பிலிப்ஸ் I928: பிலிப்ஸ் I928 ஸ்மார்ட்போன், டூயல் சிம் செயல்பாடு உடன் இப்போது தேதியில் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது. இது ரேம் 2GB உடன் ஒரு 1.7GHz அக்டா கோர் ப்ராசசர் மூலம் இயங்குகிறது. கைபேசியில் முழு HD வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. I928 ஸ்மார்ட்போன், பின்புற கேமராவில் ஆட்டோஃபோகஸ் செயல்பாடு, f/ 2.0 லென்ஸ் மற்றும் டூயல் LED ஃப்ளாஷ் கொண்டு வருகிறது. பிலிப்ஸ் I928 ஸ்மார்ட்போனில் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உள்ளது. ஸ்மார்ட்போனில் 3300mAh லி அயன் பேட்டரி வருகிறது. I928 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் இணைப்பு விருப்பங்கள் ப்ளூடூத் 3.0, Wi-Fi, ஜிபிஆர்எஸ் மற்றும் 3ஜி ஆகியவை அடங்கும். கைபேசியில் 160.1x81.8x8.2mm மெஷர்ஸ், 168g எடை மற்றும் கருப்பு நிற மாறுபாடு உள்ளது. பிலிப்ஸ் S388: பிலிப்ஸ் S388 ஸ்மார்ட்போன், 540x960 பிக்சல் தீர்மானம் கொண்ட 4.5 இன்ஞ் qHD ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இப்போது தேதியில் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது. இதில் 1.3GHz குவாட் கோர் ப்ராசசர் உள்ளது. சிஸ்டம் மெமரி பற்றி உத்தியோகபூர்வ தளத்தில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், ரேம் 1GB இடம்பெறுவதாக கூறப்படுகிறது. பிலிப்ஸ் S388 ஒரு உள்ளமைக்கப்பட்ட ஃபிளாஷ் உடன் இணைந்து 5 மெகாபிக்சல் பின்புற கேமரா வருகிறது. இருப்பினும், நிறுவனம் முன் எதிர்கொள்ளும் கேமரா இருப்பதை பற்றி விரிவாக்கப்படவில்லை. உள்ளடிக்கிய சேமிப்பு திறன் தெரியவில்லை என்றாலும், microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு துணைபுரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். பிலிப்ஸ் S388 வயர்லெஸ் இணைப்பு விருப்பங்கள் ப்ளூடூத் 3.0, Wi-Fi, ஜிபிஆர்எஸ் மற்றும் 3 ஜி உள்ளிட்டவை அடங்கும். பிலிப்ஸ் S388 131x67.1x9.1mm மெஷர்ஸ், 136.5 கிராம் எடை மற்றும் கருப்பு நிற மாறுபாடு வருகிறது. ஸ்மார்ட்ஃபோனில் 1700mAh லி அயன் பேட்டரி ஆதரிக்கிறது. பிலிப்ஸ் I928 ஸ்மார்ட்போன் குறிப்புகள்: டூயல் சிம், ரேம் 2GB, 1.7GHz அக்டா கோர் ப்ராசசர், 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, ப்ளூடூத் 3.0, Wi-Fi, ஜிபிஆர்எஸ், 3ஜி, ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன், 3300mAh லி அயன் பேட்டரி, 168g எடை. பிலிப்ஸ் S388 ஸ்மார்ட்போன் குறிப்புகள்: டூயல் சிம், 540x960 பிக்சல் தீர்மானம் கொண்ட 4.5 இன்ஞ் qHD ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.3GHz குவாட் கோர் ப்ராசசர், ரேம் 1GB, உள்ளமைக்கப்பட்ட ஃபிளாஷ் உடன் இணைந்து 5 மெகாபிக்சல் பின்புற கேமரா, microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு, ப்ளூடூத் 3.0, Wi-Fi, ஜிபிஆர்எஸ், 3ஜி, ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன், 1700mAh லி அயன் பேட்டரி, 136.5 கிராம் எடை. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சதம் விளாசினார் சங்கக்கரா: இலங்கை அணி ரன் குவிப்பு! Posted: 09 Aug 2014 04:09 AM PDT
பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், இலங்கை முதல் இன்னிங்சில் அனுபவ வீரர் சங்கக்கரா அபாரமாக விளையாடி சதம் விளாசினார். காலே, சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 451 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. யூனிஸ் கான் அதிகபட்சமாக 177 ரன் அடித்தார். இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்திருந்தது. கவுஷல் சில்சா 38, சங்கக்கரா 36 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 120 ரன் சேர்த்தது. சில்வா 64 ரன் எடுத்து தல்ஹா பந்துவீச்சில் சர்பராஸ் அகமது வசம் பிடிபட்டார். அடுத்து சங்கக்கராவுடன் ஜெயவர்தனே ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். இவர்களைப் பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் திணறினர். டெஸ்ட் போட்டிகளில் தனது 37வது சதத்தை பதிவு செய்து அசத்தினார் சங்கக்கரா. மறு முனையில் ஜெயவர்தனே அரை சதம் அடித்தார். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 252 ரன் எடுத்துள்ளது. சங்கக்கரா 102 ரன், ஜெயவர்தனே 55 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் : கால் இறுதியில் ரோஜர் பெடரர் Posted: 09 Aug 2014 04:02 AM PDT
மூன்றாவது சுற்றில் குரோஷியாவின் மரின் சிலிச்சுடன் நேற்று மோதிய பெடரர் 7-6 (7-5), 6-7 (3-7), 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு 3வது சுற்று போட்டியில் பிரான்ஸ் வீரர் ஜோ வில்பிரைடு சோங்காவுடன் மோதிய நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 2-6, 2-6 என்ற நேர் செட்களில் பரிதாபமாக தோற்று வெளியேறினார். சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்காவும் 6-7 (8-10), 5-7 என்ற நேர் செட்களில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். முன்னணி வீரர்கள் ஆண்டி மர்ரே (இங்கிலாந்து), கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா), டேவிட் பெர்ரர், பெலிசியானோ லோபஸ் (ஸ்பெயின்) ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா 2-6, 6-4, 2-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் கர்லா சுவாரெஸ் நவரோவிடம் தோற்று வெளியேறினார். நம்பர் 1 வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 7-5, 6-4 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் லூசி சபரோவாவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். முன்னணி வீராங்கனைகள் ஜெலினா ஜன்கோவிச் (செர்பியா), பெத்ரா குவித்தோவா (செக்.), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஆகியோர் 3வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினர். அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா (போலந்து), விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்) ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மனிதர்கள் போன்று நடக்கும் விலங்கு… Posted: 09 Aug 2014 03:51 AM PDT |
| இந்த பிஞ்சு வயசுல எம்புட்டு கொலைவெறினு பார்த்தீங்களா? Posted: 09 Aug 2014 03:46 AM PDT |
| பார்ப்பவர்களை பயமுறுத்தும் வகையில் பறந்த விமானம்! Posted: 09 Aug 2014 03:42 AM PDT |
| குடத்தினுள் தலையை விட்டு சிக்கித்தவிக்கும் நாயின் பரிதாபக்காட்சி.. Posted: 09 Aug 2014 03:34 AM PDT |
| மனங்களை கொள்ளை கொள்ளும் இலங்கையின் ரம்மியமான காட்சி! Posted: 09 Aug 2014 03:24 AM PDT |
| ஆரோக்கியமாய் வாழ அவரைக்காய் சாப்பிடுங்கள்!!! Posted: 09 Aug 2014 02:55 AM PDT
நாம் அவரைக்காய் என்று அழைத்தாலும், அது உண்மையிலேயே ஒரு பீன்ஸ்/பட்டாணி வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். மனிதன் முதன் முதலாகப் பயிரிட்ட தாவரங்களில் அவரைக்காயும் ஒன்று என்று கூறப்படுகிறது. கிரீஸ் மற்றும் ரோம் நகர மக்கள் அந்தக் காலத்திலேயே இதைத் தங்கள் உணவில் சேர்த்திருந்ததாகவும் தெரிகிறது. கோடைக்காலப் பயிராகக் கருதப்படும் அவரைக்காயின் சீசன் பிப்ரவரி முதல் ஜூலை வரை ஆகும். ஆனாலும் அதைக் காய வைத்து, குளிர்காலத்திலும் பயன்படுத்துவார்கள். ஒரு அவரைக்காயில் 25 முதல் 50 விதைகள் வரை இருக்கும். கிட்னி வடிவத்தில் இருக்கும் ஒவ்வொரு விதையின் மேற்புறம் பஞ்சு போல மென்மையாக இருக்கும். அவரைக்காய் ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, ஏராளமான மருத்துவ நன்மைகளையும் கொண்டது. நிறையப் புரதச்சத்து, குறைவான கொழுப்பு, தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அவரையில் உள்ளன. கால் கப் அவரையில் 9 கிராம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன. இதனால் நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதனால் நம் இதயத்திற்கும் மிகவும் நல்லது. அவரைக்காயில் வைட்டமின் பி1, இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், ஃபோலியேட், மாங்கனீசு என்று பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்தச் சத்துக்களால் சீரான இரத்த ஓட்டம் முதல் எலும்புகள் வலுவாவது வரை பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. அவரைக்காயில் கலோரிகளை எரிக்கும் சக்தி அதிகம் உள்ளது. மேலும் அதில் உள்ள புரதச்சத்தும் சேர்வதால், இந்த உணவைச் சாப்பிடும் போது நம் வயிறு நிறைந்த உணர்வு நமக்குக் கிடைக்கும். நம் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியச் சத்தும் அவரைக்காயில் கணிசமான அளவில் உள்ளது. அவரைக்காயில் உள்ள நார்ச்சத்து, நாம் சாப்பிட்ட உணவுகளைச் சீராக நம் குடல்களின் வழியாகப் பயணிக்கச் செய்து, நன்றாகச் செரிமானம் செய்து, மலச்சிக்கலே இல்லாமல் செய்கிறது. நம் உடலில் உள்ள நுரையீரலிலிருந்து மற்ற செல்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கு இரும்புச் சத்து மிகுந்த ஹீமோகுளோபின் உதவுகிறது. அவரையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அச்சத்தின் பிடியில் 4 லட்சம் குழந்தைகள்- உளவியல் பாதிப்பு! Posted: 09 Aug 2014 02:47 AM PDT
காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, கடந்த மாதம் மட்டும் கிட்டதட்ட 429 குழந்தைகள் உயிரிழந்தனர். அங்கு மொத்தமுள்ள 18 லட்சம் மக்களில் பாதி பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். தற்போது அங்குள்ள 4 லட்சம் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல், பெற்றோருடன் ஒட்டிக்கொள்ளுதல், அச்சுறுத்தும் கனவால் திடுக்கிட்டு விழித்துக்கொள்ளுதல் என உளவியல் ரீதியில் பெரும் பாதிப்படைந்துள்ளதாக யுனிசெஃப் கூறியுள்ளது. இது குறித்து யுனிசெஃப் அமைப்பின் பாலஸ்தீன அதிகாரி ஜூனே குனுகி கூறும்போது, "காஸாவில் நடந்த கடந்த மூன்று போர்களில் இதுதான் மிகவும் நீளமான, பயங்கரமான, அழிவுக்கான போராட்டமாக உள்ளது. மனித இறப்பும், பொருள் இழப்பும் வார்த்தைகளால் சொல்ல முடியாதது. குழந்தைகளின் உடல் நலம் மற்றும் மனநலத்தில் ஏற்பட்டுள்ள காயங்களை ஆற்றுவது மிகக் கடினமான செயல். 4 லட்சம் குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் வெளியில் சென்று மருத்துவம் பார்க்கும் கட்டாய நிலையில் உள்ளனர் என்பது வேதனைக்குரிய விஷயம். காஸாவில் பொதுமக்களுக்குக் கிடைக்கவேண்டிய அடிப்படை வசதிகளில் மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வசதி, மருத்துவ வசதி, சுகாதார வசதி ஆகியவை மின் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் யுனிசெஃப் குறிப்பிட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐரோப்பிய உணவுப் பொருட்களுக்கு ரஷ்யா அதிரடி தடை! Posted: 09 Aug 2014 02:34 AM PDT
அமெரிக்காவிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படும் கறிக் கோழிகள், பிற உணவுப் பொருட்கள், ஐரோப்பிய யூனியன் நாடுகளின் உணவுப் பொருட்களை ஒரு வருடத்திற்கு ரஷ்யாவுக்கு இறக்குமதி செய்ய அந்த நாடு அதிரடியாக தடை விதித்துள்ளது. இதனால் ரஷ்யாவை நம்பி பிழைப்பை ஓட்டி வரும் பல ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இந்தத் தடையால் தங்களுக்கு பெரும் பொருள் இழப்புஏற்படும் என அவை அஞ்சிக் கொண்டுள்ளன. ஆனால் தனது நாட்டுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக இந்த தடையை அதிபர் விலாடிமிர் புடின் எடுத்துள்ளார். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தலையிட்டு புரட்சிப் படையினருக்கு ஆதரவாக இருப்பதால் கோபமடைந்துள்ள அமெரிக்கவும், ஐரோப்பிய யூனியனும் ரஷ்யா மீது பல தடைகளை விதித்து வருகிறது. இதையடுத்தே புடின் இப்படி இறக்குமதி தடையை அறிவித்துள்ளார். இந்தத் தடை காரணமாக காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மீன், பால், பால் வளப் பொருட்கள் ரஷ்யாவுக்கு இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் தள்ளப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளிலிருந்து கடந்த 2011ம் ஆண்டு கிட்டத்தட்ட 21.5 சதவீத காய்கறிகளை ரஷ்யா இறக்குமதி செய்தது. அதேபோல 28 சதவீத பழங்களையும் அது இறக்குமதி செய்தது. மேலும் உணவுப் பொருட்கள், மது பானங்களுக்கும் ஐரோப்பிய நாடுகள்தான் ரஷ்யாவின் முக்கியச் சந்தையாக உள்ளது. அதேசமயம், அமெரிக்காவிலிருந்து கோழி மட்டும்தான் அதிக அளவில் இறக்குமதி செயய்ப்படுகிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவிலிருந்து 2 லட்சத்து 76 ஆயிரத்து 100 டன் கறிக் கோழிகள் இறக்குமதி செய்யப்பட்டன. உக்ரைனிலிருந்து பிரிந்த கிரீமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் அமெரிக்கவும், ஐரோப்பிய யூனியனும் ரஷ்யா மீது தடை விதித்தன. தற்போது கிழக்கு உக்ரைனும் பிரியத் துடிக்கிறது. அத ரஷ்யா ஆதரிக்கிறது. சமீபத்தில், மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கிழக்கு உக்ரைன் போராளிகள் சுட்டு வீழ்த்தினர். இதற்கான ஏவுகணையை ரஷ்யாதான் கொடுத்தது என்று குற்றச்சாட்டு உள்ளது. இதையடுத்து மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவை நெருக்கி வருகின்றன. இந்த நிலையில்தான் இந்தத் தடையை அறிவித்துள்ளது ரஷ்யா. ஆனால் இதனால் பாதிக்கப்படப் போவது ரஷ்யாதான் என்று அமெரிக்கா கூறியுள்ளது. அதேசமயம், ரஷ்ய மார்க்கெட்டை நம்பி உள்ள பல சிறிய ஐரோப்பிய நாடுகள் தற்போது பெரும் கவலை அடைந்துள்ளன. ரஷ்யாவின் முடிவால் அந்த நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. எனவே அவர்கள் ஐரோப்பிய யூனியனிடம் முறையிட்டு ரஷ்யா மீதான தடைகளை விலக்கச் சொல்லி நிர்ப்பந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மாணவன் தனக்குத் தானே காயம் ஏற்படுத்தினாராம்: உயர்கல்வி அமைச்சரின் கண்டுபிடிப்பு! Posted: 09 Aug 2014 02:13 AM PDT
இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும் நெருக்கடிகளை தோற்றுவித்து அதனை இனவாத மோதலாக மாற்றும் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினராக செயற்பட்டதாக கூறப்படும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்த மாணவர் பற்றிய தகவல்கள் அறியப்பட்டிருந்த போதிலும் பரீட்சைகள் முடியும் வரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் தனக்கு தானே காயத்தை ஏற்படுத்தி கொண்டு அதனை தாக்குதலாக காட்ட முயற்சித்துள்ளார். இதன் மூலமாக இனவாத மோதல் ஒன்றை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர் எனவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ள போதிலும் விடுதியில் தங்கியிருந்த மாணவரை வெளியில் இருந்து வந்த குண்டர்கள் சிலர் தாக்கியுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியிருந்தது. அரசாங்கத்தின் குண்டர்களே மாணவரை தாக்கியதாகவும் விடுதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு தரப்பினரின் உதவியின்றி எவரும் பல்கலைக்கழக விடுதிகளுக்குள் பிரவேசிக்க முடியாது எனவும் பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடனேயே மாணவர் தாக்கப்பட்டதாகவும் மாணவர் ஒன்றியம் கூறியிருந்தது. அரசாங்கம் மாணவர்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி பிரச்சினைகளை வேறு பக்கம் திசை திருப்ப முயற்சித்து வருவதாகவும் ஒன்றியம் குற்றம் சுமத்தியிருந்தது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐ.நா.விசாரணைக்குழுவினர் சிறப்பாக செயற்படுவர்!- பிரித்தானியத் தூதுவர் பேட்டி Posted: 09 Aug 2014 01:56 AM PDT
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எமது நோக்கமல்ல, இலங்கை அரசாங்கமும் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டது. நாம் நீண்ட கால ஸ்திரத்தன்மைக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறே கூறுகின்றோம் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் தெரிவித்தார். கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாற கூறினார். அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் விசாரணை செயற்பாடுகளுடன் இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்கும் என்று நாங்கள் தொடர்ச்சியாக நம்புகின்றோம். எனினும் அவர்கள் ஒத்துழைக்காவிடினும் ஐக்கிய நாடுகளின் விசாரணை முன்னெடுக்கப்படும், இந்த விசாரணைக் குழுவானது அனுபவம் கொண்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் குழுவொன்றையும் கொண்டுள்ளது. அவர்கள் சிறப்பான செயற்பாட்டை முன்னெடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் தெரிவித்தார். காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஆணை விரிவுபடுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக அவதானித்துள்ளோம். அத்துடன் மூன்று நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு வும் நியமிக்கப்பட்டுள்ளது. இவற்றை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். அந்த செயற்பாடு நம்பகரமாகவும் சுயாதீனமாகவும் வெளிப்படையாகவும் இருந்தால் அதனை நாங்கள் வரவேற்போம். இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எமது நோக்கமல்ல, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டவர். இலங்கை அரசாங்கமும் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டது. நாம் நீண்ட கால ஸ்திரத்தன்மைக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறே கூறுகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர்கள் தமிழகத்தில் கைது! Posted: 09 Aug 2014 01:51 AM PDT
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கியூ பிரிவு காவல்துறையினரால் படகு மூலம் பயணிக்கவிருந்த இந்த இலங்கை அகதிகள் ஒரியூர் என்ற இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஆண்களாவர். இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக அறை ஒன்றில் கடந்த இரண்டு நாட்களாக தங்கியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் வருவதை அறிந்த அவர்கள் அறையில் இருந்து வேறு இடம் ஒன்றுக்கு செல்ல முயன்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவித்துக் கொள்ள இரு நாடுகளும் இணக்கம்- இந்தியா இரண்டு நாட்டு எல்லைகளையும் அத்துமீறிய மீனவர்களை விரைவில் விடுவித்துக் கொள்வது என்று இந்திய மற்றும் இலங்கை கரையோர காவல்படையினர் இணக்கம் கண்டுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இரண்டு தரப்புக்களும் இணங்கியுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி இதனை லோக்சபாவில் நேற்று தெரிவித்தார். கடந்த ஜூன் 25ஆம் திகதியன்று புதுடெல்லியில் சந்தித்த இரண்டு நாட்டு கரையோர படையினரும் கரையோர பாதுகாப்பு உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாக அமைச்சர் கூறினார். ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாகிஸ்தான் விஜயத்திற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் நோக்கில் அதிகாரிகள் குழுவொன்று தற்போது பாகிஸ்தான் விஜயம் செய்துள்ளது. ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளினதும் அதிகாரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் சேனுகா செனவிரட்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாரட்ன உள்ளிட்ட பிரதிநிதிகள் தற்போது பாகிஸ்தான் விஜயம் செய்துள்ளனர். பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அய்ராஸ் அஹம் சோத்ரி உள்ளிட்ட பலருடன் இவ்வாறு இலங்கைப் பிரதிநிதிகள் சந்திப்புக்களை நடத்தியுள்ளனர். எதிர்வரும் 20ம் திகதி முதல் 22ம் திகதி வரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாகிஸ்தானில் தங்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. விமல் வீரவன்சவிற்கு அரசாங்கத்தை விட்டு விலகிச்செல்ல இடமில்லை- லால்காந்த வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்ல இடமில்லை என ஜே.வி.பியின் மாகாணசபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். விமல் வீரவன்சவிற்கு ஓணான் என்றொரு புனைபெயர் காணப்பட்டது. நான் நினைக்கின்றேன் அந்தப் பெயரின் குணாதிசயங்களையே அமைச்சர் தற்போது வெளிப்படுத்தி வருகின்றார். ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதனால், பத்து வாக்குகளும் ஜனாதிபதிக்கு முக்கியமானது. இதன் காரணமாகத்தான் ஜனாதிபதி, விமல் வீரவன்சவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். வெளியே செல்லப் போவதாக விமல் எச்சரித்த போதிலும், வெளியே இறங்கிச் செல்ல அவருக்கு இடமில்லை. இரண்டு தரப்பினரும் தங்களது நோக்கங்களை அடைந்து கொள்ள இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளதாகவே நாம் கருதுகின்றோம் என லால்காந்த சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கம் திரைப்பட பிரசாரம்! Posted: 09 Aug 2014 01:40 AM PDT
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கம் திரைப்படம் ஒன்றை வெளியிட உள்ளது. அரசாங்கத்தின் தேர்தல் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக இவ்வாறு திரைப்படமொன்று காட்சிப்படுத்தப்பட உள்ளது. "உடைந்த தேசத்திலிருந்து ஆசியாவின் ஆச்சரியம் நோக்கி" என்ற பெயரில் இந்தத் திரைப்படம் வெளியிடப்பட உள்ளது. அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள், வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த திரைப்படத்தில் விபரிக்கப்பட உள்ளது. 30 ஆண்டு கால போரை முடிவுக்குக்கொண்டு வர தடையாக அமைந்த காரணிகள் தொடர்பில் திரைப்படத்தில் சுட்டிக்காட்டப்பட உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்குதல், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடல், ரணில் விக்ரமசிங்க அமெரிக்கா சென்று புலம்பெயர் சமூகத்துடன் இணைந்து இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் நடாத்த நடவடிக்கை எடுத்தமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலான காட்சிகள் இந்த திரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் காலத்தில் நாடு முழுவதிலும் இந்த திரைப்படம் காண்பிக்கப்பட உள்ளது. நாடு முழுவதிலும் ஆயிரம் கருத்தரங்குகளை நடாத்தவும் அதில் திரைப்படங்களை காட்சிப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடா-பிரம்ரனில் Ebola வைரஸ் அச்சுறுத்தல்? Posted: 09 Aug 2014 12:34 AM PDT
தற்போது ஏற்பட்டுள்ள Ebola வைரஸ் வெளிப்பாட்டை கையாளும் பல மேற்கு ஆபிரிக்க நாடுகளில் நைஜீரியாவும் ஒன்றாகும். Brampton Civic Hospital –ல் உள்ள நோயாளிக்கு காய்ச்சல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றியுள்ளதாக பீல் பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி Dr. Eileen de Villa, தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த நோயாளி வைத்தியசாலையில் தனிமை படுத்தப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


















