Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


3 மாநில சட்டசபை தேர்தல்: ராகுல் தலைமையில் காங்கிரஸ் பிரசாரம்

Posted: 09 Aug 2014 10:36 PM PDT

மராட்டியம், அரியானா, காஷ்மீர் ஆகிய 3 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான வேலைகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளனர். மராட்டியத்திலும், அரியானாவிலும் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ், சட்டசபை தேர்தலில் முழுவீச்சில் களம் இறங்கி வெற்றியை ஈட்ட திட்டமிட்டுள்ளது.

பெங்களூரில் வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய கணவன்–மனைவி கைது

Posted: 09 Aug 2014 10:11 PM PDT

பெங்களூரில் வசிக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த கணவன்–மனைவி தங்கள் வீட்டில் வேலைகள் செய்ய ஒரு சிறுமியை வேலைக்கு அமர்த்தி இருந்தனர். அந்த சிறுமிக்கு 13 வயது ஆகிறது. சிறுமியின் பெற்றோர் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலீங்கில் வசிக்கிறார்கள். அங்கிருந்து வேலைக்காக சிறுமியை மட்டும் பெங்களூர் அழைத்து வந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆண்டு வருமானம் ரூ.700 கோடி

Posted: 09 Aug 2014 10:08 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகிறார்கள். இருந்த போதிலும் தினமும் 45 ஆயிரம் முதல் 65 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க முடிகிறது. ஏழுமலையான் கோவில் உண்டியலில் பக்தர்கள் பணத்துடன் தங்கம், வெள்ளி நகைகளையும் காணிக்கையாக செலுத்துகிறார்கள். இதன் மூலம் தினமும் 1½ கோடி முதல் ரூ.2½ கோடி வரை வருமானம்

கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த 3 பேர் கைது

Posted: 09 Aug 2014 10:00 PM PDT

திருவனந்தபுரம் அருகே ஆரியநாடு பகுதி வேங்கோடில் ஒரு தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் ரவீந்திரன். இவரது மனைவி சரளா, மற்றும் மகன்கள் அனு, அஜூ ஆகியோர் இந்த நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து கவனித்து வந்தனர். இந்த நிதி நிறுவனத்தின் 26 கிளை நிறுவனங்கள் திருவனந்தபுரம் மற்றும் சுற்று வட்டாரங்களில் செயல்பட்டு வந்தது. இவர்கள் தங்கள் நிதி நிறுவனம்

கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் சந்திரபாபு நாயுடு அரசுக்கு எதிராக போராட்டம்: நடிகை ரோஜா

Posted: 09 Aug 2014 09:43 PM PDT

ஆந்திர மாநிலம் புத்தூரில் திரவுபதி அம்மன் சமேத தர்மராஜா கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. நேற்று ரத உற்சவம் நடந்தது. இதையொட்டி கோவிலுக்கு நகரி தொகுதி எம்.எல். ஏ.வும் நடிகையுமான ரோஜாபட்டு வஸ்திரம் வழங்கினார். முன்னதாக வஸ்திரத்தை தாம்பழ தட்டில் வைத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். கோவிலில் நடந்த பூஜையில் கலந்து கொண்டார். அவருக்கு கோவில் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

ஜார்கண்டில் 2 தீவிரவாத குழுக்கள் மோதல்: 14 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Posted: 09 Aug 2014 09:00 PM PDT

ஜார்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் உள்ள கொடியா கிராமத்தில் நேற்று உள்ளூர் தீவிரவாத அமைப்பான திரித்யா பராதுதி கமிட்டியினருக்கும் (டி.பி.சி.) மாவோயிஸ்டுகளுக்கும் (சி.பி.ஐ.) இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. நள்ளிரவில் நடந்த இந்த துப்பாக்கி சண்டையின் போது இருதரப்பினரும் துப்பாக்கிகளால் ஒருவரை நோக்கி ஒருவர் சரமாரியாக சுட்டுக் கொண்டனர். இந்த சண்டையின் இறுதியில் மாவோயிஸ்டுகள் கையே ஒங்கியது. அவர்களது துப்பாக்கிக்கு டி.பி.சி. தீவிரவாத அமை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா?

Posted: 09 Aug 2014 08:20 PM PDT

சுதந்திர இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த மிகச்சிறந்த குடிமகன்களுக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்கப்படுகிறது. இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா, முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நோபல் பரிசு விஞ்ஞானி சி.வி.ராமன், ராதாகிருஷ்ணன், ராஜாஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கடைசியாக இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் ஆகியோருக்கு கடந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்திய ஆக்கி ஜாம்பவான் தியா

சட்டத்துக்கு உட்பட்டே அனைத்தையும் செய்துள்ளேன்: ராஜஸ்தானில் கமலா பெனிவால் பேட்டி

Posted: 09 Aug 2014 05:17 PM PDT

மிசோரம் கவர்னராக இருந்த கமலா பெனிவால் அதிரடியாக அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டதால் அவர் நீக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. குஜராத் மாநில கவர்னராக இருக்கும்போது மோடி அரசின் முக்கிய மசோதாக்களுக்கு தாமதமாக கையெழுத்திட்டார். இதனால், பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று கமலா பெனிவால் மீது

கவர்னரின் கையில் ராக்கி கட்டி வாழ்த்திய மம்தா பானர்ஜி

Posted: 09 Aug 2014 04:54 PM PDT

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ராக்கி திருநாளையொட்டி மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, அம்மாநிலத்தின் கவர்னர் கேசரி நாத் திரிபாதியின் கையில் நேற்று ராக்கி கயிற்றை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

மம்தாவுடன் ஒடிசா முதல் மந்திரி பேசியதையடுத்து உருளைக்கிழங்கு பிரச்சனை தீர்ந்தது

Posted: 09 Aug 2014 04:07 PM PDT

வட மாநிலத்தவர் அதிகமாக விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கின் விளைச்சல் இந்த ஆண்டு சில மாநிலங்களில் கணிசமாக குறைந்தது. இதனையடுத்து, விளைச்சல் அதிகமாக உள்ள மேற்கு வங்காளத்தில் இருந்து அண்டை மாநிலமான ஒடிசாவை சேர்ந்த வியாபாரிகள் உருளைக்கிழங்கை வரவழைத்து ஒடிசாவில் விற்க தொடங்கினர். இதனால்,

பாராளுமன்ற தேர்தலில் அற்புதமான வெற்றி: மோடிக்கு அத்வானி பாராட்டு

Posted: 09 Aug 2014 03:44 PM PDT

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று புது டெல்லியில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து மூத்த தலைவர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், கட்சியின் புதிய தேசியத் தலைவராக அமித் ஷாவை தேர்வு செய்ததற்கு கட்சியின் தேசிய குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர். இந்த கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கூறியதாவது;-

கவலைக்கிடமாக உள்ள ஜஸ்வந்த் சிங்கை மன்மோகன் சிங் சென்று பார்த்தார்

Posted: 09 Aug 2014 03:30 PM PDT

முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் நேற்று முன்தினம் அவரது வீட்டில் தவறி விழுந்தார். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் ஜப்பான் மூளையழற்சி நோய் பலி எண்ணிக்கை 210 ஆக உயர்வு

Posted: 09 Aug 2014 02:17 PM PDT

மூளையழற்சி மற்றும் 'ஜப்பான் மூளையழற்சி' எனப்படும் புதிய வகை நோய்க்கு மேற்கு வங்காளம் மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது. பாக்டீரியா கிருமிகளின் தொற்றால் ஏற்படும் ஜப்பான் மூளையழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் தலைவலி, காய்ச்சல், சோர்வு, களைப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும். இந்த நோய் பரவுவதற்கு

ஏ.கே.47 துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு சிறப்புக் காவல் படை வீரர் தற்கொலை

Posted: 09 Aug 2014 01:48 PM PDT

ஒடிசா மாநிலத்தில் மத்திய சிறப்புக் காவல் படையை சேர்ந்த வீரர் 'ஏ.கே.47' ரக துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள பார்கர் மாவட்டத்தில் தீவிரவாதிகளை வேட்டையாடும் சிறப்புக் காவல் படையில் பணியாற்றி வந்த வீரரான

டெல்லியில் 17 வயது சிறுவன் கழுத்தையறுத்து படுகொலை

Posted: 09 Aug 2014 12:44 PM PDT

பீகாரை சேர்ந்த இடு(17) என்பவன் டெல்லியில் உள்ள சடார் பஜார் அருகே இருக்கும் கும்ஹரோன் வாலி கலியில் தனது உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்தான். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 'வாட்டர் கூலர்' அருகே தண்ணீர் குடிக்க சென்ற போது

2 குழந்தைகளுடன் ரெயிலின் முன் பாய்ந்து தாய் தற்கொலை

Posted: 09 Aug 2014 11:51 AM PDT

மேற்கு வங்காளம் மாநிலம், ஹவுரா மாவட்டத்தில் உள்ள முன்சிர்ஹட் பகுதியில் 2 குழந்தைகளுடன் ஒரு பெண் ரெயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 7 வயது மற்றும் 6 மாத கைக்குழந்தையுடன் ஹவுரா- அம்டா பகுதிகளுக்கு இடையில் ஓடும் ரெயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு செல்போன் அன்பளிப்பு: ஜனாதிபதி வழங்கினார்

Posted: 09 Aug 2014 11:02 AM PDT

இந்திய விடுதலைக்கு வித்திட்ட 'வெள்ளையனே.., வெளியேறு..!' இயக்கம் தோன்றிய 72-வது ஆண்டினை நினைவு கூரும் விதமாக தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளுடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கவலைக்கிடமாக உள்ள ஜஸ்வந்த் சிங்கை பிரதமர் மோடி சென்று பார்த்தார்

Posted: 09 Aug 2014 10:42 AM PDT

முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் நேற்று முன்தினம் அவரது வீட்டில் தவறி விழுந்தார். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி கோமா

மக்களவைத் தேர்தலில் அமித் ஷா ஆட்டநாயகன்: மோடி பாராட்டு

Posted: 09 Aug 2014 09:02 AM PDT

பா.ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து மூத்த தலைவர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், கட்சியின் புதிய தேசியத் தலைவராக அமித் ஷா தேர்வு செய்ததற்கு ஒப்புதல் அளித்தது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், உத்தர பிரதேசத்தில் பா.ஜனதா வெற்றிக்காக கடுமையாக உழைத்த அமித் ஷாவை வெகுவாகப் பாராட்டினார். "தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேசியக் கவுன்சில் கூட்டம் இது. இந்த வெற்றிக்காக கோடிக்கணக்கான தொண்டர்கள் உழைத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் தான் டீ விற்றவரெல்லாம் தலைமை பொறுப்புக்கு வர முடியும்: அமெரிக்க பாதுகாப்பு மந்திரி

Posted: 09 Aug 2014 06:18 AM PDT

இந்தியாவில் மட்டுமே டீ விற்றவரெல்லாம் நாட்டின் தலைவராக வரமுடியும் என அமெரிக்க பாதுகாப்பு மந்திரியான சக் ஹாகல் கூறியுள்ளார். அப்சர்வர் ஆராய்ச்சி அரக்கட்டளையின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஹாகல், "இந்தியாவில் சாதாரண டீ விற்பவரின் மகனான நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக முடிந்தது. அது போலத்தான் கென்ய தந்தைக்கு பிறந்த பராக் ஒபாமா அமெரிக்காவின் அதிபராக பதவியேற்க முடிந்தது" என்றார். அரசியலுக்கு வருவதற்கு முன் மோடி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™