Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மூன்றாவது முறையாக கைகோர்க்கும் விஜய் – பிரபுதேவா!

Posted: 26 Aug 2014 03:46 AM PDT

Vijay

Vijayவிஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து அவரது பி.ஆர்.ஓ. தயாரிக்க, சிம்புதேவன் இயக்க உள்ள படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இதனையடுத்து, பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஜய். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே தன்னை வைத்து படம் இயக்கி ஹிட் கொடுத்த இயக்குநர்களுக்கு ஒரு படம், புதிய காம்பினேஷனில் ஒரு படம் என்று புதிய ஃபார்முலாவில் படங்களில் நடிப்பது என திட்மிட்டிருக்கிறார் விஜய். அதன்படி நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடித்தார். தற்போது ஏற்கனவே தன்னை வைத்து ஹிட் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் உடன் கத்தி படத்தில் இணைந்துள்ளார். அடுத்து சிம்புதேவன் என்ற புது காம்பினேஷன். அதன் பிறகு ஏற்கனவே தன்னை வைத்து ஹிட் கொடுத்த பிரபுதேவா உடன் இணைகிறார். 2007 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு போக்கிரி படத்தின் மூலம் விஜய்க்கு சூப்பர்ஹிட் வெற்றியைத் தேடிக்கொடுத்தார் இயக்குனர் பிரபுதேவா. இப்படத்தைத் தொடர்ந்து விஜய்யை மீண்டும் ஹீரோவாக வைத்து 2009 ல் வில்லு படத்தை இயக்கினார் பிரபுதேவா. ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதன்பிறகு பிரபுதேவாவின் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த எங்கேயும் காதல், வெடி படங்களும் ஓடவில்லை. எனவே, ஹிந்தியில் பிஸியாகிவிட்டார் பிரபுதேவா. தற்போது ஆக்ஷன் ஜாக்சன், சிங் இஸ் பிலிங் ஆகிய ஹிந்திப் படங்களை இயக்கி வரும் பிரபுதேவா, இப்படங்களை முடித்துவிட்டு மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க உள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கத்தி இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

Posted: 26 Aug 2014 03:44 AM PDT

Kaththi

Kaththiஇந்தப்படம் திரைக்கு வருமா…?? வராதா…???? என பல பிரச்சனைக்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் கத்தியை வேகமாக தீட்டி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய், சமந்தா முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு முதல் முறையாக அனிருத் இசை அமைக்கிறார். கத்தி படத்தின் பாடல்கள் இன்னும் தயாராகவில்லை என பல வதந்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் அவை அனைத்திற்க்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கத்தி இசை வெளியீட்டு விழா தேதியை அறிவித்துள்ளது படக்குழு. வரும் செப்டம்பர் 18ம் தேதி மாலை 6 மணியளவில் ஹோட்டல் லீலா பேலசில் இசை வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த விழாவை மிகவும் வித்தியாசமான முறையில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருகிறது, லண்டனில் நடப்பதாக இருந்த இசை வெளியீட்டு விழா ரசிகர்களுக்காகவே இங்கு நடத்தப்படுகிறதா…இல்லை இந்த பிரச்சனைகளை சமாளிக்க இங்கு நடத்தப்படுகிறாதா என்பது இன்னும் சரியாக தெரியவில்லை. கொலைவெறி புகழ் அனிருத் முதல் முறையாக ஒரு மாஸ் ஹீரோவுக்கு இசை அமைத்திருக்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சோனாக்க்ஷி சின்ஹாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு! 1

Posted: 25 Aug 2014 11:17 PM PDT

Sonakshi

Sonakshiஇந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. இவர் தற்போது ரஜினி நடித்து வரும் லிங்காவில் இளவட்ட ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது உங்களுடன் நடிப்பது எனக்கு பதட்டமாக உள்ளது என்று சோனாக்க்ஷி சொன்னபோது, உன்னை விட எனக்குத்தான் அதிக பதட்டமாக உள்ளது என்றாராம் ரஜினி. காரணம், நீ எனது நண்பர் சத்ருகன் சின்ஹாவின் மகள். அந்த வகையில் எனக்கும் மகள் போன்றவள். அதனால் நான்தான் மனதளவில் பதட்டத்துடன் இருக்கிறேன் என்று தனது நிலையை கூறியிருக்கிறார். அதையடுத்து,சோனாக்ஷியை தனது மகள் இடத்தில் வைத்து பேசி வந்த ரஜினி, மதிய இடைவேளை நேரங்களில் ஓய்வாக பேசிக்கொண்டிருக்கும்போது, அவருக்கு தான் இமயமலை சென்று வந்ததில் இருந்து ஏராளமான ஆன்மீக கதைகளை சொல்லி வந்திருக்கிறார். அதோடு, தனக்குத் தெரிந்த சில முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீக புத்தகங்களையும் சோனாக்ஷிக்கு பரிசாக கொடுத்திருக்கிறாராம் ரஜினி. அதனால் இப்போது தனக்கு கிடைக்கும் நேரங்களை கொஞ்சமும் வீணடிக்காமல் அந்த புத்தகங்களை படிப்பதிலேயே செலவிட்டு வரும் சோனாக்ஷி, ரஜினியுடன் நடித்தபோது ஒரு மகானுடன் நடிப்பது போன்று நான் உணர்ந்தேன் என்று முன்பு குறிப்பிட்டிருந்தவர், இப்போது அந்த ஆன்மீக புத்தகங்களை படிப்பதால் எனது மனம் இன்னும் தூய்மை அடைந்திருக்கிறது. உலக வாழ்க்கை என்னவென்று தெரிந்திருக்கிறது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக நானும் பக்குவப்பட்ட பெண்ணாக மாறி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ராய்லட்சுமியை வெறுப்பேத்திய ஹன்சிகா!

Posted: 25 Aug 2014 11:16 PM PDT

Hanshika

Hanshikaகாஞ்சனா படத்திற்கு முன்பு பல படங்களில் பல ஹீரோயினிகளில் ஒருவராக நடித்திருக்கிறார் ராய் லட்சுமி. அந்த படங்களில் மற்ற ஹீரோயினிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு, ராய் லட்சுமியை டம்மி பண்ணிய சம்பவங்களும் நடந்திருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் அதற்கு எதிராக போர்க்கொடி பிக்காத அவர் இப்போது, அரண்மனை பட விவகாரத்தில் மட்டும் எதிர்ப்புக்குரல் கொடுத்து வருகிறார் இதற்கு காரணம், ஹன்சிகா தானாம். அந்த படத்தில் ஹன்சிகாதான் முக்கிய ஹீரோயினி என்றபோதும், ராய்லட்சுமிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கதையில் கூடுதல் பங்களிப்பு இருந்ததாம். அதனால், என்னதான் ஹன்சிகா, ஆண்ட்ரியா என மேலும இரண்டு ஹீரேயினிகள் இருந்தபோதும் தனது ரோலும் பேசப்படும் என்று நினைத்திருந்தாராம். அதோடு, லட்சுமிராயில் இருந்து ராய் லட்சுமியாக பெயரை மாற்றிய நேரம் என்பதால், இந்த நேரத்தில் உஷாராக இருக்க வேண்டும். டம்மியான வேடங்களில் நடித்து பெயரை கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பதில் உஷாராக இருக்கும் ராய்லட்சுமியை ஒருநாள் எதேச்சையாக சந்தித்த ஹன்சிகா, பேச்சுவாக்கில், நான் அரண்மனை படம் பார்த்தேன். என்னைச்சுற்றித்தான் மொத்த கதையும் நகர்கிறது. நீங்களெல்லாம் சைடு ரோலில் நடித்தது போல்தான் அவ்வப்போது வந்து விட்டு செல்கிறீர்கள் என்று பேச்சுவாக்கில் சொன்னாராம். விளைவு, அது ராய்லட்சுமிக்கு பெரிய அதிர்ச்சியானதோடு, மானப்பிரச்சினையும் ஆகி விட்டதாம். அதனால், என்னை புக் பண்ணும் எல்லாருமே இப்படித்தான், பெரிய ரோல் என்று சொல்லி பின்னர் புட்டேஜ் ப்ராபளம் என எனது காட்சிகளை பெரும்பாலும் கத்தரித்து விடுகிறார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய் படத்தில் காவ்யா ஷெட்டி!

Posted: 25 Aug 2014 11:16 PM PDT

Kavya

Kavyaசைவம் படத்திற்கு பிறகு ஏ.எல்.விஜய் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். இதில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் முன்னாள் ஹீரோயின் மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். இன்னொரு நாயகியாக காவ்யா ஷெட்டி நடிக்கிறார். காவ்யா ஷெட்டி ஏற்கெனவே தெலுங்கில் நடித்த ஷிவானி படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது. நம் துனியா நம் ஸ்டைல் என்ற கன்னடப் படத்தில் நடித்துள்ளார். வாராயோ வெண்ணிலாவே படத்தில் நடித்தார். தற்போது அவம் என்ற படத்தில் நடித்த வருகிறார். விஜய் படத்தில் நடிப்பது பற்றி காவ்யா ஷெட்டி கூறியதாவது: எனது முந்தைய படங்களை பார்த்து விட்டு விஜய் என்னை அழைத்து பேசினார். இரண்டு முறை அவரை சந்தித்தேன் எனது கேரக்டர் பற்றிச் சொன்னார். ஹீரோ விக்ரம் பிரபுவின் பிளாஷ் பேக்கில் அவரது காதலியாகவும், கல்லூரி மாணவியாகவும் நடிக்கிறேன். இதற்கான போட்டோ ஷூட் நடந்தது. அதைத் தொடர்ந்து ஒர்க்ஷாப்பும் நடந்தது. தற்போது கொச்சியில் நடக்கும் படப்பிடிப்பில் விக்ரம் பிரபுவுடன் நடித்து வருகிறேன் என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™