Tamil Star |
- கோமாவில் இருக்கும் தமிழருக்கு ஜெ. அரசு உதவி: புதுவைக்கு கொண்டு வரப்படுகிறார்!
- ரூ. 606 கோடி பணம் கேட்ட தீவிரவாதிகள்.. அமெரிக்கா மறுத்ததால் கொலை!
- ஐ.நா விசாரணையை செயலிழக்கச் செய்ய மஹிந்த முயற்சி: பாக்கியசோதி குற்றச்சாட்டு!
- மிதக்கும் வர்த்தக நிலையங்கள்: கோத்தாவின் சிந்தனை!
- நாய் கிட்ட மாட்டிகிட்டு அவஸ்தைபடும் சிபிராஜ்!
- கோலாகலமாக நடைபெற்ற நஸ்ரியா, பகத் பாசில் திருமணம்!
- ஆமீர் கான் விடுத்த சவால்: ஏற்பாரா சல்மான் கான்?
- ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் கொண்ட Xolo Q610s ரூ.7,499 விலையில் அறிமுகம்!
- குறைத்த உடல் எடையை பராமரிக்க சில வழிகள்!!!
- பொறுமைக்கு கிடைத்த பரிசைப் பார்த்தீர்களா?….
- வாவ்!… உலகத்துல இப்படியொரு லக்கி மனிதரா?
- மெமரி கார்டு தயாரிக்கும் முறை எப்படினு பார்ப்போமா?
- டோணியின் கேப்டன்ஷிப்: இங். முன்னாள் வீரர் மைக் பிரியர்லி
- இஸ்ரேலின் அட்டூழியம்! தொடரும் தாக்குலில் 18 பாலஸ்தீனர்கள் பலி!
- உணவகங்களை இழுத்து மூடிய ரஷ்யா- அமெரிக்காவுக்கு பதிலடி!
- ஆக்ஸிஜன் சப்ளையை துண்டித்து, பயணிகளை கொன்று கடலில் மூழ்கடித்த விமானி!
- விருப்புத் தெரிவை நடத்தாமல் மஹிந்த பதவியை நீடித்து கொள்ள முடியும்!
- இலங்கை அகதிகள் 157 பேர் விடயத்தில் ஐ.நா தலையிடும் நிலை!
| கோமாவில் இருக்கும் தமிழருக்கு ஜெ. அரசு உதவி: புதுவைக்கு கொண்டு வரப்படுகிறார்! Posted: 21 Aug 2014 09:07 PM PDT
துபாய் மருத்துவமனையில் கடந்த 12 மாதங்களாக கோமாவில் உள்ள தமிழக தொழிலாளி ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு அதிமுக அரசின் உதவியோடு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். துபாய் மருத்துவமனையில் கடந்த 2013ம் ஆண்டு ஜுன் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்ட நடராஜன் ராமலிங்கம் (41) தற்பொழுது கோமாவில் உள்ளார். அவர் சிதம்பரத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளார். மற்றொரு மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும் போது இறந்துவிட்டார். மருத்துவ நிர்வாகம் முயற்சிகள் பல மேற்கொண்டும் நடராஜன் ராமலிங்கம் கோமாவில் இருந்து திரும்பவே இல்லை. எனவே மருத்துவமனை நிர்வாகம் அவரை தாயகம் அனுப்பி வைக்குமாறு அவரது கம்பெனிக்கு அறிவுறுத்தியுள்ளது. அந்த கம்பெனி துபாயில் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சமுதாயப் பணியில் ஈடுபட்டு வரும் ஈமான் அமைப்பினை அணுகியது. அவரது குடும்பம் ஏழ்மையின் காரணமாக வாடகை கொடுக்கக் கூட வசதியின்றி தெரிந்தவர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவரை வீட்டுக்கு கூட்டிச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் அவரது குடும்பத்தினர் இருந்து வருகின்றனர். எனவே தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தமிழக மருத்துவமனையில் அவரை அனுமதிக்க உதவிட துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு மறுவாழ்வுத்துறை கமிஷனர் அலுவலக கடிதம் எண் E1 / 3703 /2014 dt. 02.05.2014 துபாய் இந்திய துணைத் தூதரகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இப்பணிகளுக்கு மறுவாழ்வுத்துறை இயக்குநரகத்தின் கமிஷனர் ஆனந்த் ( 044-28515288 ), துணை ரிஜிஸ்டர் மோகன்ராஜ் ( 044-28525648 ) மற்றும் அவரது அலுவலக நலத்துறை அலுவலர் உள்ளிட்டோர் மனிதாபிமான அடிப்படையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்க அனுமதி பெற்றுள்ளனர். நடராஜனின் குடும்பத்தினர் புதுச்சேரியில் இருப்பதால் அவரை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். இதனையடுத்து நடராஜன் இன்று இரவு ஏர் இந்தியா விமானம் ஏஐ 906 மூலம் புறப்பட்டு நாலை காலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்தை அடைகிறார். அதன் பின்னர் தமிழக அரசின் 108 அவசர ஊர்தி சேவை மூலம் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார். அவருடன் ஈமான் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா, மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், பவர் குரூப் அலுவலர் கோவை தேவராஜ், துபாய் மருத்துவமனையின் செவிலியர் உள்ளிட்டோர் வருகின்றனர். ஜிப்மர் மருத்துவமனைக்கு காலை 10 மணியளவில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரூ. 606 கோடி பணம் கேட்ட தீவிரவாதிகள்.. அமெரிக்கா மறுத்ததால் கொலை! Posted: 21 Aug 2014 08:54 PM PDT
அமெரிக்க செய்தியாளர் ஜேம்ஸ் போலியை விடுவிக்க ரூ. 606 கோடி பணத்தை பிணையத் தொகையாக கேட்டுள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். ஆனால் அதைக் கொடுக்க அமெரிக்க அரசு மறுத்து விட்டது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால்தான் போலியை தீவிரவாதிகள் கொடூரமாகக் கொன்று விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அமெரிக்க அரசுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த பேரம் குறித்த முழுவிவரமும் தெரியவில்லை. பல ஐரோப்பிய நாடுகள் தங்களது பிணையாளிகளை இந்தத் தீவிரவாத அமைப்பிடமிருந்து மீட்க பெருமளவு பணத்தைக் கொடுத்து உயிரைக் காப்பாற்றியுள்ளன. ஆனால் அமெரிக்கா பணம் தர மறுத்து விட்டதால் தீவிரவாதிகள் போலியைக் கொன்று விட்டனர். போலி மீட்பு விவகாரம் அமெரிக்க அரசுக்கு பெரும் சிக்கலாக இருந்து வந்துள்ளது. காரணம், போலி மட்டுமல்லாமல் மேலும் பல அமெரிக்கர்களையும் தீவிரவாதிகளைப் பிடித்து வைத்துள்ளனர். பணம் தராவிட்டால், தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் ஒவ்வொருவராக கொல்வோம் என்றும் அவர்கள் மிரட்டி வருகின்றனர். தற்போது தீவிரவாதிகள் பிடியில் 3 அமெரிக்கர்கள் தவிர இங்கிலாந்தைச் சேர்ந்த சிலரும் உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தும் கூட தனது நாட்டவரை மீட்க பணம் கொடுப்பதில்லை என்ற உறுதியுடன் உள்ளது. பணம் தான் என்றில்லாமல் தங்களுக்குத் தேவையான கைதிகளை விடுவிக்கவும் கூட ஐஎஸ்ஐஎஸ் பேரம் பேசுகிறதாம். இப்படித்தான் அல் கொய்தாவுடன் தொடர்புடைய, பாகிஸ்தானைச் சேர்ந்த அணு விஞ்ஞான ஆபியா சித்திக்கியை சிறையிலிருந்து பேரம் பேசி விடுவித்ததாம் ஐஎஸ்ஐஎஸ்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐ.நா விசாரணையை செயலிழக்கச் செய்ய மஹிந்த முயற்சி: பாக்கியசோதி குற்றச்சாட்டு! Posted: 21 Aug 2014 08:33 PM PDT
நம்பகத்தன்மையான ஐக்கிய நாடுகளின் விசாரணையை செயலிழக்கச் செய்யும் நோக்கத்தை கொண்டது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான நிறுவன பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து இந்தக்குற்றச்சாட்டை இன்று சுமத்தியுள்ளார். இலங்கைக்கு வெளியில் போர்க்குற்றங்கள் தொடர்பில் அதிகளவான சாட்சியங்கள் உள்ளமையால் இலங்கைக்குள் உள்ள சாட்சியங்களை வீடியோ கொன்பெரன்ஸ் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இந்தநிலையில் மஹிந்த ராஜபக்சவின் கருத்து ஐக்கிய நாடுகளின் விசாரணையை பாதிக்க செய்யும் முயற்சிகளில் ஒன்றாகும் என்று பாக்கியசோதி குறிப்பிட்டுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மிதக்கும் வர்த்தக நிலையங்கள்: கோத்தாவின் சிந்தனை! Posted: 21 Aug 2014 08:30 PM PDT
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வழிகாட்டலின் கீழ் கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் வர்த்தக நிலையங்கள் இன்று திறந்துவைக்கப்படவுள்ளது. கொழும்பு பஸ்தியன் மாவத்தையை அண்மித்த பகுதியில் பேரை வாவியின் மேலாக இந்த மிதக்கும் வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பை அழகுபடுத்தும் கோத்தபாயவின் சிந்தனைக்கமைவாக இந்த வர்த்தகத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 150 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் வர்த்தகத் தொகுதி நிர்மாணப் பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்திருந்தனர். கொழும்பு, பஸ்தியான் மாவத்தையை அண்மித்த பகுதியில் ஒழுங்கற்ற முறையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த வர்த்தகர்களுக்கும் இதில் கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக ஆயுர்வேத சிகிச்சை நிலையம், உணவு விடுதிகள் என்பனவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த மிதக்கும் வர்த்தகத் தொகுதியை இன்று மாலை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன திறந்து வைக்கவுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நாய் கிட்ட மாட்டிகிட்டு அவஸ்தைபடும் சிபிராஜ்! Posted: 21 Aug 2014 07:34 AM PDT
நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் பல படங்களில் நடித்தலும் அவருக்கு சரியான தீனி போடும் வகையில் எந்த படமும் அமையவில்லை. அவர் நடித்த அணைத்து படங்களும் தோல்வியே தழுவின. ஆனால் வில்லனாக அவதாரம் எடுத்த நாணயம் படத்தில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இனி நடித்தால் நல்ல தரமான படங்களில்மட்டுமே நடிப்பேன் என்று பொறுமையாக இருந்த நாய்கள் ஜாக்கிரதை என்று வித்தியாசமான படத்தில் நடித்து உள்ளார். இப்படம் ஒரு நாய்யை மையபடுத்தி வருகிறது, இதில் நாய் வளப்பரவராக சிபிராஜ் நடித்து உள்ளார்,அவர் அந்த நாய் கிட்ட மாட்டிகிட்டு படு அவஸ்தையும் அதில் சில பல திருப்பமான விஷயங்களையும் சேர்த்து ஜனரஞ்சகமான தயாராகியுள்ளது. அவர் படத்தில் நடிக்கும் அந்த நாய் கிட்ட பல கடிகள் வங்கி நடித்து உள்ளேன் ,சொல்லபோன என் உயிரை பண்ணையம் வைத்து நடித்து இருக்கிறேன் என்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கோலாகலமாக நடைபெற்ற நஸ்ரியா, பகத் பாசில் திருமணம்! Posted: 21 Aug 2014 07:27 AM PDT
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நஸ்ரியா. இவருக்கும் மலையாள நடிகர் ஃபகத் பாசிலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக நாம் ஏற்கெனவே அறிவித்திருந்தோம். அதன்படி இன்று திருவனந்தபுரம் கழக் கூட்டத்தில் உள்ள அல்ஹாஜ் திருமண மண்டபத்தில் இருவருக்கம் திருமணம் நடைபெற்று. 2 பேரும் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முஸ்லீம் மத வழக்கப்படியே சடங்குகள் செய்யப்பட்டு திருமணம் நடந்தது. இதில் சினிமா துறையினர், அரசியல் தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.திருமணம் மண்டபம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆலப்புழாவில் நடக்கிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆமீர் கான் விடுத்த சவால்: ஏற்பாரா சல்மான் கான்? Posted: 21 Aug 2014 06:47 AM PDT
தான் பி.கே. பட போஸ்டருக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தது போன்று தனது நண்பன் சல்மான் கானும் போஸ் கொடுப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆமீர் கான். ஆமீர் கான் பி.கே. படத்தில் நடித்து வருவது பலருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் தான் ஒரு நாள் பி.கே. படத்தின் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் ஆமீர் கான் நிர்வாணமாக நின்றது நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது. அது எப்படி ஆமீர் இப்படி நிர்வாணமாக போஸ் கொடுக்கலாம் என்று எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் ஆமீரோ தான் நிர்வாணமாக போஸ் கொடுத்ததை கலை என்று கூறி நியாயப்படுத்துவிட்டு அவர் வேலையை பார்க்கச் சென்றுவிட்டார். முதல் போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் ஆமீர் நேற்று 2வது போஸ்டரை வெளியிட்டார். நல்ல வேளை இதில் முழுதாக ஆடை அணிந்திருந்தார். நான் தூம் 3 படத்தில் அணிந்திருந்த தொப்பி மக்களை மட்டும் அல்லாமல் சல்மான் கானையும் கவர்ந்தது. அவர் அதே போன்ற தொப்பியை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அணிந்திருந்தார் என்றார் ஆமீர். சல்மான் என்னை பார்த்து தொப்பி அணிந்தார். அவர் படங்களில் சட்டை இல்லாமல் வந்துள்ளார். பேண்ட்டும் இல்லாமல் வருவாரா என்று பார்ப்போம் என்று கூறி சிரித்தார் ஆமீர். பி.கே. போஸ்டரில் ஆபாசம் இலல்லை. ஆபாசம் என்பது ஆடையில் இல்லை, நம் சிந்தனையில், பேசுவதில் தான் உள்ளது என்று தெரிவித்தார் ஆமீர் கான். பி.கே. படத்தில் ஆமீர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை பற்றி யாரும் கவலைப்படவில்லை. போஸ்டரில் அவர் கொடுத்த அதிர்ச்சி தான் அனைவருக்கும் பெரிதாக தெரிகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் கொண்ட Xolo Q610s ரூ.7,499 விலையில் அறிமுகம்! Posted: 21 Aug 2014 06:33 AM PDT
Xolo நிறுவனம் Q510s ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய பின்னர், தற்போது அதன் வளைதளத்தில் Q610s ஸ்மார்ட்போன் ரூ.7,499 விலையில் தொடங்கப்படும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. Xolo Q610s ஸ்மார்ட்போன் கிடைக்கும் விவரங்கள் பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த வார்த்தையும் அறிவிக்கப்படவல்லை. எனினும் நிறுவனம், வரும் நாட்களில் ஸ்மார்ட்போன் கிடைப்பது பற்றி அறிவிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. Xolo Q610s ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்கும் ஒரு இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) சாதனம் ஆகும். Xolo நிறுவனம், சமீபத்தில் அதன் ஸ்மார்ட்போன்களான Xolo Q700S, Xolo Q1010 மற்றும் Xolo Q1010i போன்ற ஸ்மார்ட்போன்களை கிட்கேட் மேம்படுத்துதல் உடன் வெளியே விடுகின்றது. Q610s ஸ்மார்ட்போனில், 218ppi ஒரு பிக்சல் அடர்த்தி உடன் 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 4.5 அங்குல FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே வருகிறது. ஸ்மார்ட்போனில், ரேம் 1GB மற்றும் மாலி 400 MP2 ஜி.பீ.யூ உடன் இணைந்து ஒரு 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் (MTK6582M) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. இதில் LED ஃபிளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. Xolo Q610s ஸ்மார்ட்போன் பின்புற கேமராவில் சீன் டிடெக்ஷன், ஃபேஸ் ரேகோக்னைசேசன், பனோரமா, ஜியோ டேக்கிங், பெஸ்ட் ஷாட், ஸ்மைல் ஷாட் மற்றும் HDR விருப்பங்களை கொண்டுள்ளது. Xolo Q610s ஸ்மார்ட்போன், 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ-USB, மற்றும் ப்ளூடூத் போன்ற இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1700mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. Xolo Q610s, 128x64.3x9.3mm நடவடிக்கைகள் மற்றும் கருப்பு வண்ணத்தில் வரும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், Xolo Q610s ஸ்மார்ட்போன் ஒரு லெதர் பேக் உடன் வருகிறது. Xolo Q610s ஸ்மார்ட்போன் குறிப்புகள்: இரட்டை சிம், 218ppi ஒரு பிக்சல் அடர்த்தி, 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 4.5 அங்குல FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ரேம் 1GB , மாலி 400 MP2 ஜி.பீ.யூ, 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் (MTK6582M) ப்ராசசர், microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடங்கிய சேமிப்பு, LED ஃபிளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா, 0.3-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ-USB, ப்ளூடூத், ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட், 1700mAh பேட்டரி.This posting includes an audio/video/photo media file: Download Now |
| குறைத்த உடல் எடையை பராமரிக்க சில வழிகள்!!! Posted: 21 Aug 2014 02:24 AM PDT
உலகத்தில் உள்ள மிகவும் கடினமான விஷயம் உடல் எடையை குறைப்பது தான் என பலரும் ஒப்புக் கொள்வார்கள். இருப்பினும் மிகவும் கஷ்டப்பட்டு குறைத்த உடல் எடையை அதற்கு பிறகு பராமரிப்பது தான் அதை விட கஷ்டமான விஷயமாகும். உடல் எடையை குறைக்கும் இலக்கை நீங்கள் வைத்திருந்தால், அதன் படி நடக்க அதற்கு ஒரு திட்டத்தை பின்பற்றுவீர்கள். ஆனால் உடல் எடையை குறைத்த பின் அந்த அக்கறை நம்மை விட்டு போய் விடுகிறது. அதனால் தான், உடல் எடை குறைப்பிற்கு பிறகு, குறிப்பிட்ட காலத்திற்கு அதனை பராமரிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். ஜிம்மில் மணிக்கணக்கில் நேரத்தை செலவழிக்காமல் உடல் எடையை குறைப்பது எப்படி? முதல் கட்ட உடல் எடை குறைப்பிற்கு பின், அதனை பராமரிப்பதற்கான வழிகளை தெரிந்து கொள்ள வேண்டுமானால், உங்கள் வாழ்க்கை முறையின் மீது உங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். உடல் எடை குறைப்பிற்கு பின் அதனை பராமரிப்பதற்கான வழிகள், உடல் எடையை குறைக்கும் வழிகளை விட நிரந்தரமானதாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டும். ஜிம்மில் மணிக்கணக்கான நேரத்தை செலவிடுவதற்கு பதிலாக, தினமும் 30 நிமிடத்திற்கு தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடலாம். குனிந்து பாதத்தை பார்க்க முடியாதவாறு தொப்பை வந்துவிட்டதா? கவலைப்படாதீங்க... அதே போல், உடல் எடை மீண்டும் அதிகரித்து விடாமல் இருக்க உண்ணும் உணவின் மீது கூடுதல் கவனம் தேவை. உடல் எடை குறைப்பிற்கு பின் எடையை பராமரிக்க வேண்டுமானால் உங்கள் எடையை சீரான முறையில் சரிப்பார்த்துக் கொள்ள வேண்டும். குறைத்த உடல் எடையை பராமரிப்பதற்கு சிறந்த வழி சமநிலை, அதாவது சமநிலையான உணவு மற்றும் உடற்பயிற்சி. ஆரோக்கியமான உணவுகளுடன் கொழுப்புமிக்க உணவுகளை சமநிலை படுத்துங்கள். சமநிலையுடனான வாழ்க்கைமுறையை தேர்ந்தெடுத்து ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்திடுங்கள். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பொறுமைக்கு கிடைத்த பரிசைப் பார்த்தீர்களா?…. Posted: 21 Aug 2014 02:16 AM PDT |
| வாவ்!… உலகத்துல இப்படியொரு லக்கி மனிதரா? Posted: 21 Aug 2014 02:10 AM PDT |
| மெமரி கார்டு தயாரிக்கும் முறை எப்படினு பார்ப்போமா? Posted: 21 Aug 2014 02:07 AM PDT |
| டோணியின் கேப்டன்ஷிப்: இங். முன்னாள் வீரர் மைக் பிரியர்லி Posted: 21 Aug 2014 01:55 AM PDT
டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன்ஷிப் டோணியிடம் இல்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக் பிரியர்லி கடுமையாக சாடியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடி தோற்றது. டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. இந்த தோல்வியால் கேப்டன் டோணி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் அவரது கேப்டன் பதவி குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். கேப்டன் பதவியில் இருந்து டோனியை நீக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் கூறியுள்ளார். உலக கோப்பை போட்டி தொடங்க இன்னும் 6 மாதம் உள்ளதால் டோணியை நீக்க கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. ஜடேஜா, பின்னி, அஸ்வினை முழுமையாக பயன்படுத்தியிருக்கலாம். புஜாராவும் கோஹ்லியும் படுமோசமாக சொதப்பினர். இந்திய அணியின் பேட்டிங் குறித்து வருத்தம்தான் தெரிவிக்க முடியும் என்றும் பிரியர்லி குறிப்பிட்டிருக்கிறார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இஸ்ரேலின் அட்டூழியம்! தொடரும் தாக்குலில் 18 பாலஸ்தீனர்கள் பலி! Posted: 21 Aug 2014 01:43 AM PDT
பாலஸ்தீனத்தின் காஸாவில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர். இத்தாக்குதலில் 120 பேர் படுகாயமடைந்துள்ளனர். காஸா பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் அங்கு இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். 10 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர். சுமார் 2 லட்சம் பேர் அகதிகளாக தங்களது சொந்த வாழ்விடங்களை விட்டு இடம்பெயர நேரிட்டது. இதனைத் தொடர்ந்து எகிப்தின் முன் முயற்சியில் இஸ்ரேல் மற்றும் காஸாவை ஆட்சி செய்யும் ஹமாஸ் இயக்கத்தினரிடையே யுத்த நிறுத்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும் இஸ்ரேல் தொடர்ந்து மீறுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இஸ்ரேல் நேற்றும் யுத்த நிறுத்தத்தை மீறி நடத்திய கொடூர தாக்குதலில் 18 அப்பாவி பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 120 பேர் படுகாயமடைந்தனர். இதனால் காஸா பகுதியில் மீண்டும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உணவகங்களை இழுத்து மூடிய ரஷ்யா- அமெரிக்காவுக்கு பதிலடி! Posted: 21 Aug 2014 01:38 AM PDT
ரஷ்யாவில் 4 மெக்டொனால்டு உணவகங்களை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த மெக்டொனால்டு உணவகம் 1940ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 119 நாடுகளில் மொத்தம் 35 ஆயிரம் கிளைகளைக் கொண்டுள்ளது. ரஷியாவில் மட்டும் 424 மெக்டொனால்டு உணவகத்தின் கிளைகள் இருக்கின்றன. இவற்றில் மாஸ்கோவில் உள்ள 4 கிளைகளில் ரஷ்யாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உணவகங்களை முறையாக பராமரிக்கவில்லை என்று கூறி இந்த 4 கிளைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு ரஷ்யா அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மெக்டொனால்டு நிறுவனத்தின் இதர கிளைகளிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து இருதரப்பு உறவும் சீர்குலைந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் உணவகங்களை இழுத்து மூடும் நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே ரஷ்யாவில் நடத்தப்பட்ட ஒரு கருத்து கணிப்பில் மெக்டொனால்டு உணவகங்களை இழுத்து மூடுவதற்கு ஆதரவாக 62% பேர் ஆதரவு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆக்ஸிஜன் சப்ளையை துண்டித்து, பயணிகளை கொன்று கடலில் மூழ்கடித்த விமானி! Posted: 21 Aug 2014 01:34 AM PDT
மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ல் பயணம் செய்தவர்கள் பிராண வாயு இல்லாமல் மூச்சுத் திணறி பலியாகியிருக்கலாம் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அந்த விமானத்தின் பைலட் வேண்டுமென்றே பிராண வாயு தொடர்பைத் துண்டித்திருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது. இந்த புதிய ஐயத்தை நியூசிலாந்தில் உள்ள விமான விபத்துக்கள் பற்றிய ஆய்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். டெய்லி மிரர் பத்திரிகையில் இது பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. மார்ச் 8ஆம் தேதி எம்.எச்.370 என்ற போயிங் விமானம் அதன் 239 பயணிகளுடன் மாயமானது. அது பற்றி இன்னமும் தெளிவாக ஒன்றும் கூற முடியவில்லை. ஆனால் அந்த விமானம் மாயமானது பற்றி பல்வேறு கட்டுரைகளும், ஊகச் செய்திகளும் வெளியாகிவருகின்றன. நியூசிலாந்தின் கிவி ஏர்லைன்ஸ் நிறுவனரும், பைலட்டுமான இவான் வில்சன் என்பவர் தற்போது புதிய கோணத்தில் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். விமானத்தின் பைலட் வேண்டுமென்றே பிராண வாயு தொடர்பைத் துண்டித்திருக்கலாம் என்ற ஐயத்தை எழுப்பியுள்ளார். இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம் வெளியிட்டுள்ளப் பார்வையிலும் இதே கருத்தைக் கூறியிருந்தது. மேலும் மலேசிய விமானம் எம்.எச்.370-ன் விமானி அகமது ஷா மீது பெரும் சந்தேகங்களை எழுப்பியிருந்தது. இப்போது இவான் வில்சனும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது கேபினில் பைலட் ஆக்சிஜன் தொடர்பை துண்டித்திருக்கலாம். பயணிகள் தூங்கிக்கொண்டிருந்ததால் ஆக்சிஜன் மாஸ்க்குகளை பயணிகள் பயன்படுத்த வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம் என்கிறார். அதன் பிறகு கட்டுப்பாட்டுடனும், நிபுணத்துவத்துடனும் அவர் கடலில் விமானத்தை இறக்கியிருக்கலாம். அதனால்தான் விமானத்தின் பாகங்கள் எதுவும் கூட கிடைக்கவில்லை என்று அவர் டெய்லி மிரர் கட்டுரையில் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| விருப்புத் தெரிவை நடத்தாமல் மஹிந்த பதவியை நீடித்து கொள்ள முடியும்! Posted: 21 Aug 2014 12:58 AM PDT
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் முதல்கட்ட வாக்கெடுப்பின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெறமாட்டார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இரண்டாவது விருப்புத் தெரிவு வாக்கு கணக்கெடுப்பை நடத்தாமலேயே அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரைக்கும் தமது பதவியில் நீடிக்க முடியும் என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக முதல் கட்ட கணக்கெடுப்பின்போது 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறாவிட்டால் இரண்டாவது கட்டமாக முதல் இரண்டு வேட்பாளர்கள் மத்தியில் விருப்புத் தெரிவு வாக்குகள் கணக்கிடப்படும். இதன்போது அதிக விருப்புத் தெரிவு வாக்குகளை பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். எனினும் அதற்கு மஹிந்த ராஜபக்ச இடம் தரமாட்டார் என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ச குடும்பத்தின் ஊழல் மற்றும் குடும்ப ஆதிக்கம் என்பன அவர்களை வாக்காளர்கள் மத்தியில் இருந்து விலகிசெல்ல செய்துள்ளது. கொழும்பை பொறுத்தவரை மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான அலை அதிகரித்துள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை அகதிகள் 157 பேர் விடயத்தில் ஐ.நா தலையிடும் நிலை! Posted: 20 Aug 2014 11:55 PM PDT
அவுஸ்திரேலியாவினால் நவுரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 157 இலங்கை அகதிகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் தலையிடும் நிலை ஏற்பட்டுள்ளது. மெல்பேர்ன் மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற குறித்த அகதிகள் தொடர்பான வழக்கின் போது, எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் 15ஆம் திகதிகளில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி நீதிபதி கென்னத் கெய்னின் தலைமையில் முழுமையாக கென்பராவில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ஒக்டோபர் விசாரணையின் போது ஐக்கிய நாடுகள் சபையையும் வழக்கில் தொடர்புபடுத்த அகதிகளின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு குறித்த 157 அகதிகளும் இலங்கைக்கு மீண்டும் அனுப்பப்படக்கூடாது என்பதற்காகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஆழ்கடலில் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு இருக்கும் அதிகாரம் குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பையும் தாம் எதிர்பார்ப்பதாக ஜோர்ஜ் நியூகௌஸ் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இந்த வழக்கில் அவுஸ்திரேலியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிடும் என்று அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். 50 சிறுவர்கள் உட்பட்ட குறித்த அகதிகள் 157 பேரும் ஆழ்கடலில் ஜன்னல்கள் அற்ற அறைகளில் 22 மணித்தியாலங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

















