மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தெலுங்கானாவில் 2019–ல் ஆட்சியை பிடிப்போம்: அமித்ஷா பேச்சு
- பெங்களூரில் இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த 3 பேர் கும்பல்
- கட்சியை வளர்க்க நேரமில்லை: நடிகர் பவன்கல்யான்
- திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 26-ந் தேதி தொடக்கம்
- கேரள காங்கிரஸ் அரசின் மதுவுக்கு எதிரான புரட்சி: படிப்படியாக மதுக்கடைகளையும், பார்களையும் மூடுகிறது
- ராஜஸ்தானில் அஜ்மீர்-அல்வார் மாவட்டங்கள் புகை பிடிக்காதவர்கள் மாவட்டமாக அறிவிப்பு
- உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் ஷர்மிளா உடல்நிலையை பரிசோதித்து கொள்ள மறுப்பு
- பஞ்சாப் இடைத்தேர்தலில் மும்முனை போட்டி: வெல்லப்போவது யார்?
- அமைதியை நிலை நாட்ட பாதுகாப்பு துறை தயார்படுத்தப்படுகிறது: அருண் ஜெட்லி
- ம.பி.இடைத்தேர்தலில் இழந்த பெருமையை காங்கிரஸ் கட்சி மீட்குமா?
- தயா பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை வழக்கு செப்டம்பர் 8-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
- ஆண்மை பரிசோதனைக்கு எதிராக நித்யானந்தா மேல்முறையீடு: சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு
- எல்லையில் பாக்.கிற்கு இந்தியா பதிலடி: ராணுவ மந்திரி அருண் ஜெட்லி தகவல்
- போலீஸ் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து அசாமில் முழு அடைப்பு போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு இன்று டெல்லி வருகை: நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்கள்
- யோகா குரு பி.கே.எஸ் ஐயங்கார் உடலுக்கு சச்சின் டெண்டுல்கர் அஞ்சலி
- நாக்பூர் மெட்ரோ ரெயில் திட்டம்: பிரதமர் நரேந்திர மோடி துவக்கிவைத்தார்-முதல்வர் சவான் புறக்கணித்தார்
- காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ரகசிய ஆயுத கிடங்கில் ஆயுதங்கள் பறிமுதல்
- பிரதமர் மோடியை ஹிட்லருடன் ஒப்பிடுவதா? சித்தராமையாவுக்கு பா.ஜனதா கடும் கண்டனம்
- விரைவில் சிகரெட்டுக்கு தடை: சட்டங்களை கடுமையாக்குகிறது மத்திய அரசு
| தெலுங்கானாவில் 2019–ல் ஆட்சியை பிடிப்போம்: அமித்ஷா பேச்சு Posted: 21 Aug 2014 10:34 PM PDT பாரதீய ஜனதா தலைவராக பொறுப்பேற்ற அமித்ஷா முதல் முறையாக நேற்று ஐதராபாத் வந்தார். அவருக்கு ஆந்திரா, தெலுங்கானா பா.ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து பேசினார். செப்டம்பர் 19–ந் தேதி 'தெலுங்கானா விமோசன தினத்தை' கொண்டாட உத்தரவிட்டார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் அமித்ஷா பேசியதாவது:– |
| பெங்களூரில் இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த 3 பேர் கும்பல் Posted: 21 Aug 2014 10:27 PM PDT பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண், காய்கறி போன்ற பொருட்களை பெங்களூர் புறநகர் பகுதியில் தெருத் தெருவாக சென்று விற்பனை செய்து வந்தார். வழக்கம் போல் நேற்று முன்தினம் அவர் வியாபாரம் முடிந்து பஸ்சுக்காக காத்து இருந்தார். அப்போது ஒரு கார் அவர் அருகில் வந்து நின்றது. அதில் இருந்த வாலிபர் அந்தப் பெண்ணிடம் எங்கே போக வேண்டும் என்று |
| கட்சியை வளர்க்க நேரமில்லை: நடிகர் பவன்கல்யான் Posted: 21 Aug 2014 10:07 PM PDT முன்னாள் மத்திய மந்திரியும், ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான சிரஞ்சீவியின் தம்பி நடிகர் பவன்கல்யான். இவர் ஜனசேவா என்ற புதிய கட்சியை சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தொடங்கினார். ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். ஆந்திராவில் தெலுங்கு தேசம் பா.ஜனதா கூட்டணி வெற்றிக்கு இவரது பிரசாரம் முக்கிய காரணமாக இருந்தது. |
| திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 26-ந் தேதி தொடக்கம் Posted: 21 Aug 2014 09:05 PM PDT திருமலை-திருப்பதி தேவஸ்தான அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருமலையில் நடந்தது. கூட்டத்தில் சித்தூர் மாவட்ட கலெக்டர் சித்தார்த்ஜெயின், போலீஸ் சூப்பிரண்டுகள் சீனிவாஸ் (சித்தூர்), கோபிநாத்ஜாட்டி (திருப்பதி), தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, கோவில் துணை அதிகாரி சின்னம்காரி ரமணா மற்றும் பலர் கலந்து கொண்டனர். |
| கேரள காங்கிரஸ் அரசின் மதுவுக்கு எதிரான புரட்சி: படிப்படியாக மதுக்கடைகளையும், பார்களையும் மூடுகிறது Posted: 21 Aug 2014 05:40 PM PDT நாட்டில் நாளுக்கு நாள் மது போதைக்கு அடிமையாக வாழ்க்கையை தொலைப்பவர்கள் அதிகரித்து வரும் நிலையில் கேரள அரசு இந்த நிலையை நீடிக்கவிடக்ககூடாது என்று உறுதியான பாராட்டத்தக்க முடிவை எடுத்துள்ளது. அம்மாநில காங்கிரஸ் அரசு அங்கு படிப்படியாக மதுக்கடைகளையும், பார்களையும் மூடி வருகிறது. அரசின் இந்த நடவடிக்கை மூலம் கேரள மக்களின் மகிழ்ச்சி காலம் துவங்கிவிட்டது. அதுமட்டுமல்லாமல் அடுத்த |
| ராஜஸ்தானில் அஜ்மீர்-அல்வார் மாவட்டங்கள் புகை பிடிக்காதவர்கள் மாவட்டமாக அறிவிப்பு Posted: 21 Aug 2014 05:28 PM PDT தமிழர்கள் தான் நாகரீகத்திலும் பண்பாட்டிலும் மேன்மையானவர்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழகம் இவையிரண்டிலும் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. ஆனால் இந்திய நாட்டில் உள்ள மற்ற மாநிலங்கள் மனிதனின் நாகரீக வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்க தொடங்கியுள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளா படிப்படியாக மது என்ற அரக்கனை மாநிலத்தை விட்டு |
| உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் ஷர்மிளா உடல்நிலையை பரிசோதித்து கொள்ள மறுப்பு Posted: 21 Aug 2014 05:14 PM PDT ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை எதிர்த்து நீண்ட காலமாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஐரோன் ஷர்மிளாவை மணிப்பூர் அரசு கைது செய்து 14 வருடங்களாக மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தது. அவரும் மருத்துவமனையில் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து கொண்டு தான் இருந்தார். இந்நிலையில் உண்ணாவிரதம் இருந்த தன்னை கைது செய்த அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஷர்மிளா மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை |
| பஞ்சாப் இடைத்தேர்தலில் மும்முனை போட்டி: வெல்லப்போவது யார்? Posted: 21 Aug 2014 05:10 PM PDT பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தல்வண்டி சபோ மற்றும் பாட்டியாலா தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மும்முனை போட்டியில உள்ள இத்தொகுதிகளில் தல்வண்டி சபோவில் 82.34 சதவிகித வாக்குகளும், பாட்டியாலாவில் 60 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. இதில் வெல்லப்போவது அம்மாநிலத்தை ஆளும் அகாலி தள கட்சியா, |
| அமைதியை நிலை நாட்ட பாதுகாப்பு துறை தயார்படுத்தப்படுகிறது: அருண் ஜெட்லி Posted: 21 Aug 2014 05:04 PM PDT இந்தியாவை சுற்றிலும் உள்ள அண்டை நாடுகளின் தொல்லைகளை கருத்தில் கொண்டு நாட்டில் அமைதியை நிலைநாட்ட நமது பாதுகாப்புத்துறை பலப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட வேண்டியது அவசியம் என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். பாதுகாப்பு கருவிகள் தயாரிப்பை முப்பது வருடங்களுக்கு முன் இந்தியா துவக்கியிருந்தாலும் அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் |
| ம.பி.இடைத்தேர்தலில் இழந்த பெருமையை காங்கிரஸ் கட்சி மீட்குமா? Posted: 21 Aug 2014 04:58 PM PDT மத்தியப்பிரதேசத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் இழந்து போன தங்கள் நிலையை மீண்டும் பெறுமா என்று அரசியல் அரங்கில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் அங்கு நடைபெற உள்ள நகராட்சி தேர்தலுக்கு |
| தயா பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை வழக்கு செப்டம்பர் 8-ந் தேதிக்கு ஒத்திவைப்பு Posted: 21 Aug 2014 02:55 PM PDT மு.க.அழகிரியின் மகனுக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி கடந்த 2010-ம் ஆண்டு மதுரை மாவட்டம் சிவரக்கோட்டை பகுதியில் கட்டப்பட்டது. இந்த கல்லூரி இயங்குவதற்கான உரிய அனுமதியை அண்ணா பல்கலைக்கழகம் வழங்க மறுத்தது. உரிய சான்றிதழ்கள் ஏதுமில்லாமல் கல்லூரியை நடத்துவதாகவும், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர்களுக்குரிய வசதிகள் சரிவர இல்லை என்ற காரணத்தின் |
| ஆண்மை பரிசோதனைக்கு எதிராக நித்யானந்தா மேல்முறையீடு: சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு Posted: 21 Aug 2014 02:01 PM PDT நித்யானந்தாவுக்கு எதிராக அவருடைய முன்னாள் சீடரான ஆர்த்திராவ் அளித்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூர் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் மீது கடந்த 2 நாட்களாக நீதிபதிகள் ரஞ்ஜன் பிரகாஷ் தேசாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன. |
| எல்லையில் பாக்.கிற்கு இந்தியா பதிலடி: ராணுவ மந்திரி அருண் ஜெட்லி தகவல் Posted: 21 Aug 2014 01:52 PM PDT போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி, அடாவடி செய்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று சுற்றுலா மந்திரிகள் மாநாட்டின் இடையே ராணுவ மந்திரி அருண் ஜெட்லி, நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ''எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறதே?'' என கேள்வி எழுப்பப்பட்டது. |
| போலீஸ் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து அசாமில் முழு அடைப்பு போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 21 Aug 2014 01:45 PM PDT நாகாலாந்து எல்லையோரத்தில் அமைந்துள்ள அசாம் மாவட்டமான கோலாகட்டில், நாகாலாந்து தீவிரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசாருக்கு எதிராக ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இவ்வாறு நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். |
| இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு இன்று டெல்லி வருகை: நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்கள் Posted: 21 Aug 2014 01:37 PM PDT இலங்கையில் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும், தமிழர்கள் பகுதியில் இன்னும் ராணுவம் உள்ளது. அதை இலங்கை அரசு வாபஸ் பெற வேண்டும் என்று தமிழர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதியில் இந்தியாவின் உதவியுடன் சில மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. என்றாலும் போரினால் பெரும் பாதிப்புக்கு உள்ளான தமிழர்களின் துயரம் இன்னும் தீரவில்லை. |
| யோகா குரு பி.கே.எஸ் ஐயங்கார் உடலுக்கு சச்சின் டெண்டுல்கர் அஞ்சலி Posted: 21 Aug 2014 11:51 AM PDT உலகப்புகழ் பெற்ற யோகா குருவும் ஐயங்கார் யோகா பள்ளி நிறுவனருமான பி.கே.எஸ். ஐயங்கார் புனேயில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கர் அஞ்சலி செலுத்தினார். 95 வயதான ஐயங்கார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் புனேயில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். டயாலிசிஸ் சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல் நிலை மோசமடைந்தது. கடந்த இரண்டு |
| நாக்பூர் மெட்ரோ ரெயில் திட்டம்: பிரதமர் நரேந்திர மோடி துவக்கிவைத்தார்-முதல்வர் சவான் புறக்கணித்தார் Posted: 21 Aug 2014 11:33 AM PDT நாக்பூரில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கான மெட்ரோ ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி கலந்துகொண்டு துவக்கிவைத்தார். மகாராஷ்டிரா முதல்வராக உள்ள பிரித்விராஜ் சவான் தான் ஏற்கனவே அறிவித்திருந்தபடி மோடி கலந்துகொண்ட விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, |
| காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ரகசிய ஆயுத கிடங்கில் ஆயுதங்கள் பறிமுதல் Posted: 21 Aug 2014 11:24 AM PDT காஷ்மீருக்கு வடக்கே குப்வாரா மாவட்டத்தின் கெரன் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலையில் அப்பகுதியில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது. அப்போது அங்குள்ள ரோத்காலி பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது தானியங்கி துப்பாக்கிகள் மூலம் திடீர் தாக்குதல் |
| பிரதமர் மோடியை ஹிட்லருடன் ஒப்பிடுவதா? சித்தராமையாவுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் Posted: 21 Aug 2014 11:06 AM PDT முதல்–மந்திரி சித்தராமையா ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவில் பேசும்போது பிரதமர் நரேந்திரமோடியை 'ஹிட்லர்' என்று வர்ணித்தார். இதற்கு கர்நாடக பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி சி.டி.ரவி எம்.எல்.ஏ. பெங்களூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– "முதல்–மந்திரி சித்தராமையா மாநில ஆட்சி நிர்வாகம் பற்றி கவலைப்படவில்லை. அதற்கு பதிலாக உட்காரும் இடத்தில், நிற்கும் |
| விரைவில் சிகரெட்டுக்கு தடை: சட்டங்களை கடுமையாக்குகிறது மத்திய அரசு Posted: 21 Aug 2014 10:52 AM PDT புகையிலை மற்றும் சிகரெட்டுகள் மீதான கட்டுப்பாடுகள் இந்தியாவில் கடைசி கட்டத்தை எட்டுகிறது. அண்மையில் புதிய பிரதமராக பதவியேற்ற மோடி முதலில் சிகரெட்டுகளின் விலையை வரலாறு காணாத அளவில் உயர்த்தினார். பிறகு தற்போது நாடு தழுவிய புகையிலை பொருட்களின் தடைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |