Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஹரி ஆனந்தசங்கரி வென்றார்! கனடாவில் தமிழர்களிற்கான புதிய களம் திறக்கப்பட்டது!

Posted: 20 Aug 2014 11:10 PM PDT

Gary

Garyபலத்த எதிர்பார்ப்புக்களிற்கிடையே இடம்பெற்ற ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதிக்கான லிபரல் கட்சியின் வேட்பாளர் தெரிவிற்கான போட்டியில் ஹரி ஆனந்தசங்கரி பெரும்பாண்மை வாக்குகளைப் பெற்று மக்களின் பேராதரவைப் பெற்ற வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார். சுமார் ஆயிரம் பேர் அடங்கக்கூடிய மண்டபத்தில் பெருந்திரளான மக்கள் திரண்டு பொறுமையுடன் காத்திருந்து தமது கட்சியின் உள்ளகத் தேர்தலிற்கான வாக்களிப்பில் கலந்து கொண்டதோடு மண்டபம் நிறைந்த, மண்டபத்தின் வெளியரங்கு நிறைந்த ஆர்வலர்கள் முடிவுகளை அறிவதற்காக காத்திருந்தது இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தைக் எடுத்துக் காட்டியது. குறிப்பாக ஹரி அவர்களிற்கான ஆதரவாளர்கள் பட்டியலில் வயது முதிர்ந்தவர்கள், இடைவயதினர், இளையோர் என வயது வேறுபாடற்ற தொண்டரணி இடம்பெற்றிருந்ததோடு, அவர்களே இந்த வெற்றிக்கான அடித்தளமாகவும் அமைந்திருந்தனர். ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் வெற்றி வாய்ப்பை தடுக்குமுகமான நேரடிப் பிரச்சாரங்கள் அவரை இழிநிலையாகக் குறிவைத்த அதேவேளை தொடர்ச்சியாக ஒவ்வொரு தினமும் ஹரிக்கு "மொட்டைக் கடிதங்கள்" "அநாமதேய துண்டுப்பிரசுரங்கள்" என்பன அத் தொகுதியிலுள்ள வாக்களர்களின் வீடுகளில் இரவுவேளைகளில் போடப்பட்டன. இருந்தும், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை சம்பந்தமான கவனத்தை ஐக்கிய நாடுகளவையின் மனிதவுரிமை அமைப்பின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக கனடிய மனிதவுரிமை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதியாகவும், தனிப்பட்ட ரீதியிலும் 36 தடவைகளிற்கு மேல் தனது சொந்தச் செலவில் சுவிற்சலாந்தின் ஜெனிவா நகர் சென்று ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஹரி ஆனந்தசங்கரி அவர்களை தமிழ் மக்கள் பூரணமாக ஏற்றுக் கொண்டனர். தனக்கு எதிரான மலினமான பிரச்சாரங்களை மதிநுட்பத்தோடும், நேரடித் தொடர்பாடலினூடாகவும் முறியடித்த ஹரி ஹரி ஆனந்தசங்கரி, இந்த உள்ளகத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் கனடியத் தமிழர்களிற்கு புதியதொரு களத்தினையும், ஆரோக்கியமான அரசியற் தலைமைத்துவத்தையும் ஏற்படுத்தியுள்ளார். ஹரி ஆனந்தசங்கரி அவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உலகத்தமிழர் பேரவை உள்ளிட்ட 85ற்கும் மேற்பட்ட கனடிய தமிழ்ச் சமூகம்சார் தலைவர்களும், கனடியத் தமிழ்க் காங்கிரஸ், அவுஸ்திரேலியத் தமிழ்க் காங்கிரஸ், நாடு கடந்த அரசு, போன்ற அமைப்புக்களின் இந்நாள் மற்றும முந்நாள் தலைவர்களும் ஆதரவளித்து ஹரியை தேர்வு செய்யுமாறு இந்தத் தொகுதியில் மேற்படி கட்சியின் அங்கத்துவம் பெற்ற தமிழ் மக்களைக் கோரியிருந்தனர். அடுத்த ஆட்சியை அமைக்கும் என எதிர்பார்க்கப்படும் லிபரல் கட்சியின் தலைவரான ஜஸ்ரின் ரூடோவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ள ஹரி ஆனந்தசங்கரி பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், லிபரல் கட்சி ஆட்சியமைத்தால் அமைச்சரவாதற்கான வாய்ப்புக்கள் மிக மிக அதிகமாக உள்ளதாக ஹரியின் தொண்டர்கள் தெரிவித்தனர். ஹரி ஆனந்தசங்கரி வெற்றி பெற்ற செய்தியை லிபரல் கட்சியின் உத்தியோகபூர்வ டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் கனடியத் தமிழர்களிற்கான தலைமைத்துவத்தை இந்தக் கட்சி எவ்வளவு தூரம் உண்ணிப்பாக கவனிக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டியது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பொங்குதமிழென அணிதிரளத் தயாராகும் வட அமெரிக்கத் தமிழர்கள்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

Posted: 20 Aug 2014 10:59 PM PDT

pongutamil

pongutamilஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்ற இருக்கும் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் எதிராக, வட அமெரிக்கத் தமிழர்களை அணிதிரட்டி மாபெரும் நிகழ்வொன்றுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தயாராகி வருகின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் 25ம் நாளன்று சிறிலங்கா அரசுத் தலைவர் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நியூ யோர்க் ஐ.நாவின் முன் *'பொங்குதமிழ்' ஒன்றுகூடலாக இந்த நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. இந்தியாவில் புதிதாக ஆட்சிப்பீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமரான நரேந்திர மோடி அவர்களும், சபையில் பங்கெடுக்க இருப்பதனால், முக்கியத்துவம் கொடுத்து இந்த எழுச்சி ஒன்றுகூடலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துவருகின்றது. தமிழர்களுக்கான எதிரான சிறிலங்கா அரசின் இனவழிப்பினை அம்பலப்படுத்தி, சிறிலங்கா அரசுத் தலைவருக்கு எதிரான வலுவான குரலினை பதிவு செய்வதோடு, ஈழத்தமிழர்களுக்கான பரிகார நீதியினை அனைத்துல சபையின் முன் உறுதிபடக் கோருவதற்குமாக இந்த எழுச்சி ஒன்றுகூடல் அமையவிருக்கின்றது. அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து மக்கள் பங்குபற்றுவதற்கான வழிமுறைகளோடு, கனடாவில் இருந்தும் மக்கள் பங்கெடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன. இதேவேளை செப்ரெம்பர் 15ம் நாள் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைசபையின் முன் அணிதிரள்வதற்கு ஐரோப்பிய தமிழர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிறந்த கல்விதகைமை, கண்கவரும் கவின்மிகு பல்கலைக்கழகங்கள் கனடாவில்!

Posted: 20 Aug 2014 10:49 PM PDT

canada-university

canada-university2014-ன் உலக பல்கலைக்கழகங்களின் கல்வி மதிப்பீட்டில் தெரிவுசெய்யப்பட்ட 100-சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் கனடாவில் உள்ள 4-பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இவை ரொறொன்ரோ பல்கலைக்கழகம், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், மக்கில் பல்கலைக்கழகம் மற்றும் மக்மாஸ்ரர் பல்கலைக்கழகம் ஆகும். கல்வித்தகைமை மட்டுமின்றி உலகில் மிகச்சிறந்த கண்கவர் கவின்மிகுந்த பல்கலைக்கழகங்களும் கனடாவில் உள்ளன என காணப்பட்டுள்ளது. கனடிய பல்கலைக்கழகங்கள் சில மிகவும் அழகான இயற்கை காட்சிகள் நிறைந்தவைகளாகவும் அழகான கட்டிட கலைவண்ணம் கொண்டனவாகவும் அமைந்துள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now

உடலுறவு எப்படி உடலை வலுவாக்குகிறது?

Posted: 20 Aug 2014 06:37 AM PDT

sex

sexகாலையில் ஜிம் சென்று உடற்பயிற்சியை செய்யவில்லையா? கவலை கொள்ளாதீர்கள். உங்கள் கலோரிகளை குறைக்க பல வழிகள் உள்ளது. உடலுறவில் ஈடுபடுவது உங்களை திடமாக வைத்து, உங்கள் தசைகளை ஆரோக்கியமாக்குவதால், உடலுறவு கூட ஒரு சிறந்த உடற்பயிற்சி வகை தான் என கூறப்படுகிறது. ஒரு மணிநேர உடலுறவு த்ரெட்மில்லுக்கு மாற்றாக அமையாவிட்டாலும் கூட, அது சில பயனை கண்டிப்பாக அளிக்கவே செய்யும். தினசரி உறவு வச்சுக்கிட்டா.. எவ்ளோ லாபம் கிடைக்குது பாருங்க! உடலுறவு என்பது ஆக்கத்திறனை ஊக்குவிக்கும். ஒரு மணிநேர உடலுறவினால் நீங்கள் 500 கலோரிகள் வரை குறைக்கலாம். மேலும் உங்கள் தசைகளையும் அது டோன் செய்யும். உடலுறவு கொள்ளும் போது, நிமிடத்திற்கு கிட்டத்தட்ட 5 கலோரிகள் பயன்படுத்தப்படுகிறது. வெறுமனே அமர்ந்து உங்களுக்கு பிடித்த தொலைக்காட்சி சேனலை பார்ப்பதோடு ஒப்பிடுகையில் இது நான்கு கலோரிகள் அதிகமாகும். உங்கள் உடலும் தசைகளும் வலுவடைவதோடு மட்டுமல்லாது உடலுறவினால் உங்கள் இதய துடிப்பு வீதமும் அதிகரிக்கும். இதனால் உங்கள் இதயம் ஆரோக்கியத்துடன் செயல்படும். பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்!!! வாரத்திற்கு மூன்று முறை அல்லது அதற்கு மேலாக உடலுறவு வைத்து கொள்ளும் தம்பதிகளுக்கு பல பயன்கள் கிட்டும். நல்ல தூக்கம், வயதாகும் அறிகுறிகளை குறைத்து அதனுடன் சண்டையிடுதல், நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை ஊக்குவித்தல் போன்ற பல பயன்களை அளிக்கிறது. உடலுறவு கொண்டால் எப்படி நம் உடல் வலுவாகும் என்பது வியப்பாக உள்ளதா? அப்படியானால் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் இந்த ஆரோக்கியத்திற்கான டிப்ஸ்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள். வலுவை பெற வேண்டுமானால் ஆரோக்கியமான உடலுறவில் ஈடுபடுங்கள். ஆம், உடலுறவு உங்கள் வலுவை அதிகரிக்கும். இதனால் ஜிம்மில் நீண்ட நேர பயிற்சியில் ஈடுபடலாம். இதன் பயனாக உங்கள் உடல் எடையை குறைக்கவும் செய்யலாம். அதனால் உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாக செயல்படுகிறது. பிரசவத்திற்கு பிறகு யோனியின் சுவர்கள் தளர்ந்திருக்கும். யோனி தசைகள் இறுக்கமாவதற்கு வாரம் ஒரு முறையாவது ஆரோக்கியமான உடலுறவில் ஈடுபட வேண்டும். புணர்ச்சி பரவச நிலையில், யோனியின் சுவர்கள் அனைத்தும் ஒன்றாக இழுக்கப்படும். அதனால் யோனி தசைகள் இறுக்கமடையும். நீங்கள் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உடலுறவு உதவுகிறது. உடலுறவு கொள்ளும் போது உங்கள் மூட்டில் வலி எடுக்கலாம். ஆனால் உங்கள் தசைகள் திறம்பட செயல்பட இது ஒரு சிறந்த உடற்பயிற்சியாக விளங்கும். பைசெப்ஸ் வளர்ச்சிக்கு சில நிலைகள் உதவி புரியும். உங்கள் பைசெப்ஸ் தசைகளை வளர்க்க வேண்டுமானால் குறிப்பிட்ட சில நிலைகளே உதவிடும் - தள்ளுவண்டி நிலையிலான உடலுறவு.

This posting includes an audio/video/photo media file: Download Now

5 இன்ச் எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே கொண்ட ஷார்ப் AQUOS கிரிஸ்டல் அறிமுகம்!

Posted: 20 Aug 2014 06:27 AM PDT

samsung

samsungஷார்ப் நிறுவனம் செவ்வாய்க்கிழமை AQUOS கிரிஸ்டல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த ஸ்மார்ட்போனை பிரத்தியேகமாக ஒப்பந்தம் இல்லாமல் அமெரிக்காவில் ஸ்பிரிண்ட் வழியாக $ 239.99 (சுமார் ரூ. 14,500) விலையில் விற்பனை செய்யப்படும். ஷார்ப் Aquos கிரிஸ்டல் ஸ்மார்ட்போன்களான, ஸ்பிரிண்டின் ப்ரீபெய்ட் பிராண்டு விர்ஜின் மொபைல் (பிளாக்) பூஸ்ட் மொபைல் (ஒயிட்) ஆகிய இரண்டுமே $ 149.99 (சுமார் ரூ. 9,100) விலையில் கிடைக்க இருக்கும். ஷார்பின் புதிய AQUOS கிரிஸ்டல் ஸ்மார்ட்போன் சிறப்பம்சமாக, கிட்டத்தட்ட பெசல் ஃப்ரீ டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. மேலும் ஸ்மார்ட்ஃபோனில் ஹர்மன் கர்டன் ஆடியோ தொழில்நுட்பங்கள் கொண்டுள்ளது. AQUOS கிரிஸ்டல் ஸ்மார்ட்போன், 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் எஸ்-சிஜி சிலிக்கான் எல்சிடி எச்டி எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. ஸ்மார்ட்ஃபோனில் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்குகிறது. ரேம் 1.5GB மற்றும் Adreno 305 உடன் இணைந்து ஒரு 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 400 (MSM8926) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது microSD அட்டை வழியாக 128GB வரை மேலும் விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. ஸ்மார்ட்ஃபோனில் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 1.2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. பின்புற கேமராவில் ஸ்னீனேரி மோட்ஸ், ஃப்ரேமிங் அட்வைசர், நைட் கேட்ச், HDR, பனோரமா, சீக்வன்சியல் ஷாட்ஸ், மற்றும் ஷட்டர் டிடேக்ட் போன்ற அம்சங்கள் வருகிறது. ஷார்ப்பின் AQUOS கிரிஸ்டல் ஸ்மார்ட்போன், ஒரு 2040mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. இது 131x67x10mm நடவடிக்கைகள் மற்றும் 141 கிராம் எடையுடையது. ஸ்மார்ட்ஃபோனில், Wi-Fi 802.11b/g/n, ப்ளூடூத் 4.0, மைக்ரோ-USB, சிடிஎம்ஏ, ஜிபிஎஸ், எ-ஜிபிஎஸ், 3ஜி மற்றும் 4ஜி LTE இணைப்பு விருப்பங்கள் துணைபுரிகிறது. AQUOS கிரிஸ்டல் ஸ்மார்ட்போனில், ஆக்சிலரோமீட்டர் சென்சார் மற்றும் காம்பஸ் சென்சார் ஆகிய இரண்டு சென்சார்கள் உள்ளன. ஷார்ப் AQUOS கிரிஸ்டல் ஸ்மார்ட்போன் அம்சங்கள்: 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் எஸ்-சிஜி சிலிக்கான் எல்சிடி எச்டி எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே, ரேம் 1.5GB, Adreno 305, 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 400 (MSM8926) ப்ராசசர், microSD அட்டை வழியாக 128GB வரை மேலும் விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடங்கிய சேமிப்பு, 8 மெகாபிக்சல் பின்புற கேமரா, 1.2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, Wi-Fi 802.11b/g/n, ப்ளூடூத் 4.0, மைக்ரோ-USB, சிடிஎம்ஏ, ஜிபிஎஸ், எ-ஜிபிஎஸ், 3ஜி, 4ஜி LTE, ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட், 2040mAh பேட்டரி, 141 கிராம் எடை..

This posting includes an audio/video/photo media file: Download Now

இனி குழந்தைகளைப் பராமறிக்க பெற்றோர் எதற்கு?

Posted: 20 Aug 2014 06:11 AM PDT

DOG-BABY-FUNNY

DOG-BABY-FUNNY

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐ போன் வைச்சிருக்கீங்களா?… அப்போ இவரிடம் ஏமாந்திடாதீங்க!

Posted: 20 Aug 2014 06:06 AM PDT

Notification-Trolling

Notification-Trolling

This posting includes an audio/video/photo media file: Download Now

மேஜிக் வித்தையால் நடுவர்களையே கட்டிப்போட்ட மனிதர்!

Posted: 20 Aug 2014 06:00 AM PDT

Orlando-Magic-Magician-Team

Orlando-Magic-Magician-Team

This posting includes an audio/video/photo media file: Download Now

காமடினா இதுதாங்க காமெடி…. பார்த்தால் சும்மா அசறாமல் சிரிப்பீங்க!

Posted: 20 Aug 2014 05:55 AM PDT

Abs-Slap

Abs-Slap

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்திய வீரர்களிடம் முத்கல் கமிட்டி விசாரணை நடத்தவில்லை: பிசிசிஐ

Posted: 20 Aug 2014 05:25 AM PDT

dhoni

dhoniஐ.பி.எல். பிக்ஸிங் விவகாரம் தொடர்பாக இங்கிலாந்தில் இந்திய வீரர்களிடம் முத்கல் கமிட்டி விசாரணை எதுவும் நடத்தவில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற பிக்ஸிங் முறைகேடு தொடர்பாக விசாரணை செய்ய உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இக் குழுவில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஸ்வர ராவ், அஸ்ஸாம் கிரிக்கெட் சங்க உறுப்பினர் நிலாய் தத்தா, மூத்த ஐபிஎஸ் அதிகாரி பி.பி. மிஸ்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் ஐ.பி.எல். போட்டியில் நடந்த பிக்ஸிங் முறைகேடு குறித்து விசாரணை செய்து வருகிறது. பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள், இது தொடர்பான வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள், வழக்கின் சாட்சிகள் ஆகியோரிடம் பல கட்டங்களாக முத்கல் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையை அண்மையில் முடித்த முத்கல் குழு, அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து அடுத்த கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னைக்கு சில நாட்களுக்கு முன்பு முத்கல் குழுவினர் வந்தனர். இக் குழுவினர், தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இங்கிலாந்தில் உள்ள இந்திய வீரர்களிடமும் முத்கல் கமிட்டி விசாரணை நடத்தியதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்கல் கமிட்டி கடந்த 15-16ஆம் தேதி சென்னையில் முகாமிட்டு விசாரணை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. அதே நேரத்தில் என்.சீனிவாசன் மற்றும் மெய்யப்பனிடம் எந்த ஒரு விசாரணையையும் முத்கல் கமிட்டி நடத்தவில்லை. அத்துடன் ஊடகங்களில் வெளியானது போல் எந்த ஒரு நாட்டுக்கும் முத்கல் கமிட்டி சென்று இந்திய வீரர்களிடம் விசாரணை எதனையும் நடத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பேசாம விட்ருங்க.. கவாஸ்கர்!

Posted: 20 Aug 2014 05:20 AM PDT

gavaskar

gavaskarஇந்திய அணியின் கேப்டனாக டோணியே தொடர வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். நல்ல தலைமைத்துவத்தின் உதாரணமாக டோணி திகழ்வதால் அவரை மாற்றத் தேவையில்லை என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தோல்விக்கு டோணியைக் குறை சொல்லக் கூடாது என்றும், அது தவறு என்றும் கூறியுள்ளார் கவாஸ்கர். இதுகுறித்துக் கவாஸ்கர் கூறுகையில், அணியை சீரிய முறையில்தான் வழி நடத்தி வருகிரார் டோணி. கடினமான சூழல்களில் அவர் பொறுப்புடன் ஆடியுள்ளார். முன்னுதாரணமாக திகழ்கிறார். அவரைப் பின்பற்றி அணியினர் ஆடாவிட்டால், செயல்படாவிட்டால், டோணியைக் குறை சொல்லி என்ன பயன் உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. இப்போதைக்கு டோணிக்கு மாற்று வீரர் யாரும் இல்லை. எனவே அவர் கேப்டனாக தொடர வேண்டும் என்பதே எனது கருத்தாகும் என்றார் கவாஸ்கர். ஏற்கனவே இந்திய அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரிக்கும், மற்ற புதியவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள கவாஸ்கர், இவர்களால் உடனடியாக மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என்றும், போகப் போகத்தான் மாற்றங்களைக் காண முடியும் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிறை பிடியுங்கள்.. போராட்டக்காரர்களுக்கு பாக். மத குரு உத்தரவு!

Posted: 20 Aug 2014 05:03 AM PDT

pakistan-flag

pakistan-flagபிரதமர் நவாஸ் ஷெரீப் ராஜினாமா செய்யும் வரை நாம் ஓயக் கூடாது. அவருக்கு நெருக்கடி தருவதற்காக, கையில் கிடைக்கும் எம்.பிக்களையெல்லாம் சிறை பிடியுங்கள் என்று இம்ரான் கானுடன் சேர்ந்து தலைநகர் இஸ்லாமாபாத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மத குரு முகம்மது தாஹிர் அல் குவாத்ரி தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இவரும் இம்ரான் கானும் சேர்ந்து தலைநகர் இஸ்லாமாபாத்தை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றனர். நாடாளுமன்றத்திற்கு வெளியே பல்லாயிரக்கணக்கானோருடன் சேர்ந்து முற்றுகையிட்டுள்ளனர். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இருக்கும் எம்.பிக்களை வெளியேற விடாமல் சிறை பிடிக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு மத குரு உத்தரவிட்டுள்ளார். சுதந்திரப் பேரணி என்ற பெயரில் நடந்து வரும் இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்களையும், குழந்தைகளையும் முன்வரிசையில் நிறுத்தி போராடி வருகின்றனர். இதனால் போலீஸாரும், ராணுவத்தினரும் நடவடிக்கை எடுக்க முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில் இன்று தனது ஆதரவாளர்களிடையே பேசிய குவாத்ரி, உள்ளே இருந்து யாரும் வெளியேறக் கூடாது. வெளியே இருந்து யாரும் போகக் கூடாது. ஒரு கொசு கூட நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற விடாதீர்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கேடயமாக பயன்படுத்தும் இம்ரான் கட்சி – நவாஸ் மகள் வேதனை!

Posted: 20 Aug 2014 03:55 AM PDT

maryam-nawaz-sharif

maryam-nawaz-sharifஇம்ரான் கான் கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்தில் முன் வரிசையில் பெண்களையும், குழந்தைகளையும் நிறுத்தி வைத்துள்ளனர். எனவே போலீஸார் போராட்டக்காரர்கள் மீது எந்தவிதமான தாக்குதலையும் பயன்படுத்த வேண்டாம் என்று தனது தந்தை பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளதாக நவாஸின் மகள் மரியம் நவாஸ் ஷெரீப் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ரெட் ஸோன் என்று அழைக்கப்படும் அதிக உயர் பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் தடையை மீறி இம்ரான் கட்சியினர் புகுந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே குழுமியுள்ளனர். இப்பகுதியின் பாதுகாப்பை ராணுவத்திடம் ஒப்படைத்துள்ள போதிலும் ராணுவம் எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. இந்த நிலையில் போலீஸார் எந்தவிதமான தாக்குதலையும் மேற்கொள்ள வேண்டாம் என்று ஷெரீப் உத்தரவிட்டுள்ளதாக அவரது மகள் மரியம் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், பேரணியில் பெண்களும், குழந்தைகளும் முன்வரிசையில் பங்கேற்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே போலீஸார் எந்தவிதமான தாக்குதலையும் மேற்கொள்ள வேண்டாம் என்று பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார். இதற்கிடையே, நவாஸ் ஷெரீப் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் ரெட் ஸோன் பகுதியை ராணுவத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது. பிரதமரின் இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள், ராணுவத் தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீப் ஆகியோரும் கலந்து கொண்டனர். ரெட் ஸோன் பகுதியில்தான் பாகிஸ்தான் அதிபரின் இல்லம், பிரதமரின் இல்லம் உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், தூதரக அலுவலகங்கள் என அனைத்து முக்கிய கட்டடங்களும் உள்ளன. முன்னதாக இன்று மாலை வரை இம்ரான் கான், ஷெரீப்புக்குக் கெடு விதித்துள்ளார். மாலைக்குள் ஷெரீப் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம், நாடாளுமன்றத்துக்குள் நுழைவோம் என்று இம்ரான் கான் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்கா அளித்த மருந்து நன்றாக வேலை செய்கிறது: லைபீரிய அரசு

Posted: 20 Aug 2014 03:47 AM PDT

ebola

ebolaஎபோலா காய்ச்சலுக்கு அமெரிக்கா லைபீரியாவுக்கு அளித்த இசட்மாப் மருந்து சோதனை அடிப்படையில் 3 டாக்டர்களுக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக லைபீரிய அரசு தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உயிர் கொல்லியான எபோலா வைரஸ் பரவி வருகிறது. அதில் குறிப்பாக லைபீரியாவில் தான் எபோலாவின் தாக்கம் அதிகம் உள்ளது. லைபீரியாவில் எபோலா வைரஸ் தாக்கி 413 பேர் பலியாகினர். இந்நிலையில் வைரஸால் புதிதாக தாக்கப்பட்ட 101 பேரில் 53 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் லைபீரியாவில் எபோலா காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 466 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் லைபீரிய அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீஃபின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்கா எபோலா காய்ச்சலுக்கு தான் தயாரித்த மருந்தான இசட்மாப்பை அனுப்பி வைத்தது. அந்த மருந்து சோதனை அடிப்படையில் எபோலா காய்ச்சலால் அவதிப்படும் 3 லைபீரிய டாக்டர்களுக்கு அளிக்கப்பட்டது. மருந்தை எடுத்துக் கொண்ட டாக்டர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக லைபீரிய அரசு தெரிவித்துள்ளது. எபோலா காய்ச்சலுக்கு மருந்தே இல்லை என்பதால் பீதியில் உள்ள மக்களுக்கு இந்த தகவல் ஆறுதல் அளித்துள்ளது. எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 1, 299 பேர் பலியாகியுள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: பான் கீ மூன் கோரிக்கை!

Posted: 20 Aug 2014 03:41 AM PDT

ban-ki-moon

ban-ki-moonஇலங்கை தொடர்பில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார். இலங்கையில் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகளின் மூலம் அங்கு நல்லிணக்கத்துக்கு வழியேற்படுத்தும். எனவே அதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகளால் அமைக்கப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைக்குழுவின் விசாரணைகளை பான் கீ மூன் ஊக்கப்படுத்தி வருகிறார். இந்தநிலையில் இலங்கை அரசாங்கமும் மக்களும் ஐக்கிய நாடுகளின் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பை வழங்கி மனித உரிமைகளை பாதுகாப்பதுடன் இறுதி சமாதானத்துக்கும் வழியேற்படுத்த வேண்டும் என்று டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சர்வதேசத்தின் கவனம் இன்னும் இலங்கையின் பக்கம்!

Posted: 20 Aug 2014 03:35 AM PDT

asylum-seekers

asylum-seekersசர்வதேசம் தொடர்ந்தும் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் பெற்றுள்ள இலங்கை அகதிகள் மீண்டும் திருப்பியனுப்பப்படுவார்கள் என்ற அச்சம் மற்றும் இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய அகதிகள் திருப்பியனுப்பப்படுதல் போன்ற விடயங்களும் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தநிலையில் நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி, இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டும். அத்துடன் தமது சொந்த மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் உள்ளூர் விசாரணைகள் வரவேற்கக் கூடியவை எனினும் ஏற்கனவே இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அரசாங்கத்துக்கு சார்பானவர்களுக்கு வாய்ப்பான வகையில் நீதி முடிவுகள் வந்தமை கவனிக்கத்தக்கது என்று மீனாட்சி குறிப்பிட்டுள்ளார். எனவே இலங்கை அரசாங்கம் சர்வதேச மனித உரிமை நியமங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று மீனாட்சி தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நிறுவனங்கள் குறித்து கண்காணிக்கப்படும்!- பிரசாத் காரியவசம்

Posted: 20 Aug 2014 03:18 AM PDT

prasad-kariyawasam

prasad-kariyawasamநாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட உள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகளில் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடியள வகையில் அரச சார்பற்ற நிறுனங்கள் செயலாற்றுகின்றன. இவ்வாறு பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் குறித்து இலங்கை மிக உன்னிப்பாக கண்காணித்து வருகின்றது.   தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளினால் நாடு பாரியளவிலான அழுத்தங்களை எதிர்நோக்கியது. இவ்வாறான அமைப்புக்கள் தொடர்ந்தும் நாட்டில் அழுத்தங்களை பிரயோகிக்க ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. பயங்கரவாத அமைப்புக்கள் பல்வேறு வழிகளில் நாடுகளில் குழப்பங்ளை விளைவித்து வருகின்றன. நாடொன்றின் வீழ்ச்சிக்கு பயங்கரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் ஏதுவாகின்றது. பாதுகாப்புப் படையினர் பாரிய தியாகங்களைச் செய்து போர் வெற்றியை ஈட்டிக் கொடுத்தனர். போரின் பின்னர் நாட்டில் பாரியளவில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்று வரும் பாதுகாப்பு கருத்தரங்கில் உரையாற்றிய போது பிரசாத் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகையுடன் குத்தாட்டம் அம்பலம்!

Posted: 20 Aug 2014 02:04 AM PDT

mahinda

mahindaமஹிந்த ராஜபக்சவின் புத்திரன் ஒழுக்கம் பாற்பதற்கு அருவருப்பாக இருந்தாலும் பல சிக்கல்களில் சிக்குவது வழக்கமாக உள்ள நிலையில் இது நாட்டிற்கு நல்லதல்ல என கூறும் அவதானிகள் இவருடன் உள்ள நடிகையை பற்ற நாம் கூற வேண்டியதில்லை உங்களால் ஊகிக்க முடிகிறதா!

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™