மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பாலக்காடு அருகே ரெயில் முன் பாய்ந்து காண்டிராக்டர் மகன் தற்கொலை
- ராஜினாமா செய்ய மத்திய அரசு உத்தரவு: உத்தரகாண்ட் கவர்னர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
- ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் விற்பனை தொடங்கியது
- கறுப்பு பண மீட்பு நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு திருப்தி
- கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள தெற்கு ஆஸ்திரேலியா
- தலையை விட பெரிதாக உள்ள கைகளால் அவதிப்படும் சிறுவன்
- ஒடிசாவில் மதிய உணவை சாப்பிட்ட 300 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு
- மேற்கு வங்கத்தில் சாரதா சிட்பண்ட் மோசடி: கால்பந்து கிளப் அதிகாரியை கைது செய்தது சி.பி.ஐ
- காஷ்மீரில் ராணுவத்தினருடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் இரு தீவிரவாதிகள் பலி
- இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கேத்லின் ஸ்டீபன்ஸ் குஜராத் முதல்வருடன் முக்கிய சந்திப்பு
- அசாம்-நாகாலாந்து எல்லையில் கலவரத்திற்கு சொத்து பிரச்சனை தான் காரணம்: மத்திய அரசு
- பீகாரில் இடைத்தேர்தலில் லாலு-நிதிஷின் புதிய கூட்டணிக்கு முதல் சோதனை
- மும்பை சகோதரிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை: மும்பை உயர்நீதிமன்றம்
- பாராளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வற்புறுத்துவோம்: சோனியா பேச்சு
- சிவில் சர்வீசஸ் தேர்வு முறைக்கு எதிரான மனுவை ஏற்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு
- வெங்காயத்தின் ஏற்றுமதி விலை குறைப்பு: மத்திய மந்திரிசபை முடிவு
- கூட்டுச்சதி என்ற வார்த்தையை நீக்கக்கோரிய ஜெயலலிதா மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு: பெங்களூர் தனிக்கோர்ட்டு
- ஆண்மை பரிசோதனைக்கு தயங்குவது ஏன்? நித்யானந்தாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி
- உ.பி.யில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது
- அரியானாவை தொடர்ந்து மகாராஷ்டிரா முதல்வரும் மோடி பங்கேற்கும் விழாவை புறக்கணிக்க முடிவு
| பாலக்காடு அருகே ரெயில் முன் பாய்ந்து காண்டிராக்டர் மகன் தற்கொலை Posted: 20 Aug 2014 11:05 PM PDT கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள பரளி செக்டேம் பகுதி ரெயில் தண்டவாளத்தில் ஒரு வாலிபர் உடல் துண்டாகி இறந்து கிடப்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்தனர். இது குறித்து மங்கரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும், ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தண்டவாளத்தில் கிடந்த தலை முதல் இடுப்பு வரையுள்ள பாகத்தை மீட்டனர். பின்னர் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதியை தேடினர். |
| ராஜினாமா செய்ய மத்திய அரசு உத்தரவு: உத்தரகாண்ட் கவர்னர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு Posted: 20 Aug 2014 10:54 PM PDT மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட கவர்னர்களை மாற்ற முடிவு செய்தது. உள்துறை செயலாளர் பல்வேறு மாநில கவர்னர்களுடன் போனில் தொடர்பு கொண்டு ராஜினாமா செய்யுமாறு கூறினார். இதை ஏற்க சில கவர்னர்கள் மறுத்து விட்டனர். உத்தரகாண்ட் மாநில கவர்னராக இருக்கும் அசிஸ் குரேசிக்கும் உள்துறை செயலாளர் |
| ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் விற்பனை தொடங்கியது Posted: 20 Aug 2014 10:37 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் விற்பனை நேற்றிலிருந்து தொடங்கியதாக திருமலை–திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. என்.சந்திரபாபுநாயுடு, ஆந்திர மாநில முதல்–மந்திரியாக பதவியேற்கும் முன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். |
| கறுப்பு பண மீட்பு நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு திருப்தி Posted: 20 Aug 2014 09:06 PM PDT வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் சிலர் போட்டு வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கறுப்பு பண வழக்குகளின் விசாரணைக்கு வழிகாட்டுவதற்காக, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. |
| கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள தெற்கு ஆஸ்திரேலியா Posted: 20 Aug 2014 08:54 PM PDT நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்றபோது இந்துக்களின் புனித நதியாக விளங்கும் கங்கையை சுத்தப்படுத்துவதை தனது லட்சிய திட்டமாக அறிவித்தார். அவரது அரசு இணையதளத் தகவலில் இதற்கான ஆலோசனைகளையும் அவர் கேட்டிருந்தார். கங்கையை சுத்தப்படுத்தி அந்த நதியின் நிலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த மோடி அரசு முனைப்புடன் இருக்கின்றது. தெற்கு ஆஸ்திரேலியப் பிரதமரான ஜே வெதர்ஹில் பெரு |
| தலையை விட பெரிதாக உள்ள கைகளால் அவதிப்படும் சிறுவன் Posted: 20 Aug 2014 05:30 PM PDT இந்தியாவை சேர்ந்த சிறுவனான எட்டு வயது சிறுவனான கலீமுக்கு அவனது தலையை விட கைகள் பெரிதாக உள்ளது வருத்தத்தை தருகிறது. மருத்துவத்துறையோ அவனது கைகளின் வளர்ச்சியை பார்த்து குழம்பிப்போய் கிடக்கிறது. பிறக்கும்போதே இயல்பான குழந்தைகளின் விரல்களை விட இரு மடங்கு பெரிதாக கலீமின் விரல்கள் இருந்துள்ளது. தொடர்ந்து நாளுக்கு நாள் விரல்களின் வளர்ச்சி மேலும் மேலும் பெரிதானது. அவனது |
| ஒடிசாவில் மதிய உணவை சாப்பிட்ட 300 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு Posted: 20 Aug 2014 04:39 PM PDT ஒடிசாவில் ஆந்திர எல்லையோரம் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் மதிய உணவை சாப்பிட்ட 300 மாணவர்களுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். கஞ்சம் மாவட்டத்தில் உள்ள சனாக்கமுண்டி ஒன்றியத்தில் உள்ள அடப்பாடா என்ற கிராமத்தில் ஆரம்ப பள்ளி ஒன்றில் சுய உதவிக்குழுவினர் சமைத்த மதிய உணவை அருந்திய 300 மாணவர்கள் உடல்நிலை |
| மேற்கு வங்கத்தில் சாரதா சிட்பண்ட் மோசடி: கால்பந்து கிளப் அதிகாரியை கைது செய்தது சி.பி.ஐ Posted: 20 Aug 2014 04:35 PM PDT கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் மேற்குவங்காளம், ஜார்க்கண்ட், அசாம் உள்ளிட்ட வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமான கிளைகளை தொடங்கியது. இந்த நிறுவனத்தை பிரபல தொழில் அதிபர் சுதிப்தா சென் நடத்தி வந்தார். இவருக்கு "சிட்பண்ட்" தவிர சாரதா ரியால்டி உள்பட 100-க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் உள்ளன. இதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. |
| காஷ்மீரில் ராணுவத்தினருடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் இரு தீவிரவாதிகள் பலி Posted: 20 Aug 2014 04:31 PM PDT காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அடையாளம் தெரியாத இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குப்வாரா மாவட்டத்தின் புர்கியான் கிராமத்தில் தான் இரு தரப்பிற்கும் இடையே இந்த துப்பாக்கி சண்டை நடைபெற்றதாக ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். தீவிரவாதிகளின் அங்க |
| இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கேத்லின் ஸ்டீபன்ஸ் குஜராத் முதல்வருடன் முக்கிய சந்திப்பு Posted: 20 Aug 2014 04:24 PM PDT இந்தியாவுக்கான அமெரிக்க தூதரான கேத்லின் ஸ்டீபன்ஸ் குஜராத் முதல்வர் ஆனந்தி பென்ணை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் குறித்தும், பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் மின் ஆற்றல் துறை எப்படி செயல்படுகிறது என்பது பற்றியும் இரு தலைவர்களும் பேசியதாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. |
| அசாம்-நாகாலாந்து எல்லையில் கலவரத்திற்கு சொத்து பிரச்சனை தான் காரணம்: மத்திய அரசு Posted: 20 Aug 2014 04:16 PM PDT அசாம் மற்றும் நாகாலாந்து மாநில எல்லையில் உள்ள கொலாகட் பகுதியில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இரு மாநில எல்லைப்பகுதியில் உள்ள ஏழு கிராமங்களில் வசிக்கும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் 15 பேர் நாகாலாந்தில் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து அசாம் ஆதிவாசிகள் மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் இதர அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். |
| பீகாரில் இடைத்தேர்தலில் லாலு-நிதிஷின் புதிய கூட்டணிக்கு முதல் சோதனை Posted: 20 Aug 2014 04:07 PM PDT பீகார் மாநிலத்தில் காலியாக உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு இம்மாதம் 21ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தும் வண்ணம் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரியா ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் லாலுவும் நிதிஷும் இணைந்து இரு கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். மொத்தமுள்ள 10 தொகுதிகளில் தலா நான்கில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய |
| மும்பை சகோதரிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை: மும்பை உயர்நீதிமன்றம் Posted: 20 Aug 2014 04:00 PM PDT மராட்டிய மாநிலம் கோலாப்பூரை சேர்ந்தவர்கள் ரேணுகா, சீமா சகோதரிகள். இவர்கள் தங்கள் தாயார் அஞ்சனா பாய், தந்தை கிரண் ஷிண்டே ஆகியோருடன் சேர்ந்து குழந்தைகளை கடத்தும் துணிகர தொழிலில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் அந்த குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்து, அதில் வரும் சம்பாத்தியத்தை வைத்து ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்து வந்தனர். இவ்வாறு 13 குழந்தைகளை அவர்கள் கடத்தினர். இந்த |
| பாராளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வற்புறுத்துவோம்: சோனியா பேச்சு Posted: 20 Aug 2014 01:56 PM PDT புதுடெல்லியில் மகளிர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பெண்களுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்க வேண்டும் என்று ராஜீவ்காந்தி பாடுபட்டார். அவர் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக ஊராட்சிகள் |
| சிவில் சர்வீசஸ் தேர்வு முறைக்கு எதிரான மனுவை ஏற்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு Posted: 20 Aug 2014 01:13 PM PDT சிவில் சர்வீசஸ் தேர்வில், ஆங்கில மொழிப்புலமை பற்றிய தேர்வு முறைக்கு எதிராக தேர்வர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கத் தேவையில்லை என்றும், அது கணக்கில் சேர்க்கப்படாது என்றும் தேர்வை நடத்தும் மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) அறிவித்தது. |
| வெங்காயத்தின் ஏற்றுமதி விலை குறைப்பு: மத்திய மந்திரிசபை முடிவு Posted: 20 Aug 2014 01:03 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்ற பிறகு, கடந்த ஜூன் மாதவாக்கில் வெங்காயம் விலை அதிகரித்தபடியே இருந்தது. அதனால், வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயிக்கும் முறை, மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, டன்னுக்கு 300 டாலராக விலை நிர்ணயிக்கப்பட்டது. ஜூலை மாதம், அது 500 டாலராக உயர்த்தப்பட்டது. |
| Posted: 20 Aug 2014 12:55 PM PDT தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு, ஜெயலலிதா, சசிகலா தரப்பு இறுதி வாதம் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது. இந்த நிலையில் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் அவரது வக்கீல் ஆஜராகி வாதிட்டு வருகிறார். |
| ஆண்மை பரிசோதனைக்கு தயங்குவது ஏன்? நித்யானந்தாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி Posted: 20 Aug 2014 12:38 PM PDT கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் அருகே உள்ள பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தா மீது முன்னாள் பெண் சீடரான ஆர்த்திராவ் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில், அவர் மீது பிடதி போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நித்யானந்தா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய ராம்நகர் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து நித்யானந்தா சார்பில் பெங்களூர் |
| உ.பி.யில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது Posted: 20 Aug 2014 11:28 AM PDT உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அபாயத்தால் 1000க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரால் சூழப்படும் அபாயத்தில் இருந்து வருகின்றது. அங்குள்ள பல நதிகளில் அபாய கட்டத்தை தாண்டி நீர் வெள்ளம் போல் திரண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த வெள்ளத்தால் நேற்று வரை அம்மாநிலத்தில் 63 பேர் பலியான நிலையில் இன்று அந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து 80 ஆனது. |
| அரியானாவை தொடர்ந்து மகாராஷ்டிரா முதல்வரும் மோடி பங்கேற்கும் விழாவை புறக்கணிக்க முடிவு Posted: 20 Aug 2014 10:39 AM PDT நாளை நாக்பூரில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். மோடி கலந்துகொள்ள உள்ள இந்த விழாவில் மகாராஷ்டிரா முதல்வராக உள்ள பிரித்விராஜ் சவான் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்மாநிலத்தில் உள்ள ராய்காட்டில் நடைபெற்ற விழாவில் கடந்த வாரம் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |