Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சுப்பிரமணிய சுவாமிகள் யாழ்ப்பாணத்திற்கு இரகசிய விஜயம்!

Posted: 18 Aug 2014 11:33 PM PDT

supramani

supramaniஇலங்கையில் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள சுப்ரமணிய சுவாமிகள் இரகசியமாக யாழ் குடாநாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். குடாநாட்டிற்கு விஜயத்தை மேற்கொண்டேன் என தனது சுயவிளம்பரத்தை அதிகரித்துக் கொள்வதற்கே இவ்வாறான இரகசிய விஜயத்தை சுப்பிரமணிய சுவாமிகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். சுப்பிரமணிய சுவாமிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொள்வதால் தமிழ் மக்களின் வாழ்வில் எவ்வித மாற்றமும் ஏற்பட போவதில்லை. குடாநாட்டிற்கு சென்றேன் என தனது சுயவிளம்பரத்தை அதிகரிப்பதற்கான ஒரு நாடகமாகும். இவரின் அண்மைய செயற்பாடுகளை இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் சரி, தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்களும் சரி நன்கு அறிவார்கள். அவர் இலங்கையின் உத்தியோகப் பற்றற்ற தூதுவர் போலவே அண்மைக் காலங்களில் செயற்பட்டு வருகின்றார். இவருடைய யாழ்ப்பாண விஜயம் குறித்து இலங்கை அதிகாரிகள் தவிர வேறு யாருக்கும் தெரியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தங்கத் துடுப்பு வழங்கி மஹேலவுக்கு ஜனாதிபதி கெளரவம்!

Posted: 18 Aug 2014 11:24 PM PDT

mahela-mahinda

mahela-mahindaஇலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன தமது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று அவருக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கொழும்பு எஸ். எஸ். ஸி. மைதானத்திற்கு நேற்று திடீரென விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த மஹேல ஜயவர்தனவை வாழ்த்தியதுடன் அவருக்குத் தங்கத் துடுப்பொன்றையும் பரிசளித்தார். தாய்நாட்டுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மூலம் பெற்றுக் கொடுத்துள்ள புகழுக்கும் பெருமைக்கும் தமது பாராட்டைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்காலத்தில் தேவையான சகல உதவிகளையும் செய்யத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார். பாகிஸ்தான் மற்றும் இலங்கைக் கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நேற்று கொழும்பு எஸ். எஸ். சி. மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியில் இலங்கை 105 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்தப் போட்டியை நேரடியாகக் கண்டுகளித்த ஜனாதிபதி வெற்றிக்களிப்புடன் மைதானத்திலிருந்து வெளியேறிய துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தனவை கைலாகு கொடுத்து வரவேற்று வாழ்த்தினார். தொடரை வெற்றிகொண்ட இலங்கை கிரிக்கெட் அணியை வாழ்த்திய ஜனாதிபதி, நினைவுச் சின்னமாக மஹேல ஜயவர்தனவுக்கு தங்கத் துடுப்பொன்றை வழங்கி கெளரவித்தார். மஹேல ஜயவர்தன மொத்தம் 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 சதங்கள், 50 அரைச்சதங்களை பெற்றதுடன் 11,814 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ. எச். எம். அஸ்வர், ஸ்ரீரங்கா, இலங்கை கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜயந்த தர்மதாச, செயலாளர் நிசாந்த ரணதுங்க போன்றோரும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சந்திரிக்காவை விட சம்பந்தனுக்கு இந்திய அரசாங்கம் முன்னுரிமை!

Posted: 18 Aug 2014 11:18 PM PDT

sambanthan

sambanthanமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை விடவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு இந்திய அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த மூன்று தலைவர்களும்ää இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விருப்பம் வெளியிட்டிருந்தனர். எனினும், முதலாவது சந்தர்ப்பம் இரா.சம்பந்தனுக்கு கிடைத்துள்ளது. சம்பந்தன் நாளை இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சம்பந்தன் நாளை இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமசந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பிரதிநிதிகள் நாளை மறுதினம் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர். கூட்டமைப்பின் இந்திய விஜயம் குறித்து அண்மையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 4ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அந்த திட்டம கைவிடப்பட்டது. சந்திப்பு நடாத்த பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும் நேரத்தை ஒதுக்காமையே விஜயம் ஒத்தி வைக்கப்பட்டமைக்கான காரணம் என சில ஊடகங்கள் செயதி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிறந்தநாள் பார்ட்டியில் எதிர்பாராத விதமாக சுட்டுக்கொல்லப்பட்ட கர்ப்பிணி பெண் !

Posted: 18 Aug 2014 11:09 PM PDT

Pregenant

Pregenantஅமெரிக்காவில் உள்ள Houston, Texas என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை இரவு 1 மணியளவில் 15 வயது சிறுமி ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டி ஒன்று நடந்தது.

இதில் Dixie Mendez என்ற 24 வயது பெண் ஒருவர் கலந்து கொண்டார். இவர் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சிறிதுநேரம் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட பின்னர் மிகவும் களைப்பாக இருப்பதாக கூறி அங்குள்ள அறை ஒன்றில் தூங்கிவிட்டார். அந்த அறை மரக்கட்டைகளால் ஆனது.

இந்நிலையில் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட இருவர் போதை அதிகமானதால் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்துகொண்டு இருந்தனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் அதில் ஒருவர் தன்னுடைய பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டார். ஆனால் அந்த குறி தவறி கர்ப்பிணிபெண் தூங்கிக்கொண்டிருந்த அறையின் சுவற்றில் பட்டது.

துப்பாக்கி குண்டு மரச்சுவரின் வழியே துளைத்து சரியாக அந்த பெண்ணின் தலையில் பட்டதால் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் பிறந்தநாள் பார்ட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த களேபரத்தில் துப்பாக்கியால் சுட்டநபர் தப்பித்து ஓடிவிட்டார்.

போலீஸார் இதுகுறித்து விசாரணை செய்துவருகின்றனர். தப்பியோடிய துப்பாக்கியால்சுட்ட நபரை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தங்கக் காருடன் பிரித்­தா­னி­யா­வுக்கு சுற்­றுலா

Posted: 18 Aug 2014 08:16 AM PDT

GoldAuto-1

GoldAuto-2சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்த நப­ரொ­ருவர் தங்கக் காருடன் பிரித்­தா­னி­யா­வுக்கு சுற்­றுலா சென்று அங்­குள்­ள­வர்­களை வாயைப் பிளக்­கு­ம­ள­வுக்கு ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். செல்­வந்­த­ரான மேற்­படி சவூதி சுற்­றுலாப் பயணி பிரித்­தா­னி­யாவின் நைட்ஸ்­பிரிட்ஜ் நக­ரி­லுள்ள அல்ட்ரா – லூக்ஸ் வெலெஸ்லி ஹோட்­டலில் தங்­கி­யுள்ளார். இந்த ஹோட்­ட­லுக்கு வெளி­யிலே தனது 'தங்கக் கார்' நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. இக்­கா­ரினைப் பார்­வை­யிட அப்­ப­கு­தியை சேர்ந்த பிரித்­தா­னிய மக்கள் பலரும் ஆர்வம் காட்­டு­கின்­றனர். அத்­துடன் அதனைப் புகைப்­ப­ட­மெ­டுத்து இணை­யத்­த­ளத்தில் தர­வேற்றி மகிழ்ந்­துள்­ளனர். பல­ரையும் ஈர்த்­துள்ள இக்­காரின் பெறு­மதி சுமார் 32 கோடி ஆகும். ரேன்ஜ் ரோவர் காரின் சாதார மாதிரி ஒன்­றினை வெளிப்­பு­ற­மாக தங்க முலாம் மற்றும் கறுப்பு வர்­ணத்தில் அலங்­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் காரின் சக்­க­ரத்தின் சில்­லுகள், பொனட் மற்றும் பம்பர் போன்­ற­னவும் வீதிக்கு வெளி­யிலும் ஓடக்­கூ­டி­ய­வாறு 'ஓப் ரோட்' வாக­ன­மாக மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளது. த மிஸ்­டெயார் என்று அழைக்­கப்­படும் இந்த ரேன்ஜ் ரோவர் மாதி­ரியை உரு­வாக்க ஒரு கோடி ரூபா­வுக்கும் அதி­க­மான தொகை செல­வி­டப்­பட்­டுள்­ளதாம். பார்ப்­ப­வர்­களை ஈர்க்கும் த மிஸ்­டெயார் மாதிரி கார் குறித்து பிரித்­தா­னிய நபர் ஒருவர் கூறு­கையில், இக்­கா­ருக்கு அரு­கி­லேயே ரோல்ஸ் ரோய்ஸ் கோஸ்ட் கார் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் அது பார்­வைக்கு தரம் குறைந்த கார் போன்று உள்­ளது' எனத் தெரி­வித்­துள்ளார். 666′ எனும் இலக்­கத்தைக் கொண்ட இக்­கா­ரினை செல்­வந்­த­ரான சவூதி சுற்­றுலாப் பயணி தனது விடு­முறைக்­காக பிரித்­தா­னியா செல்லும் போது கப்பலில் கொண்டு சென்றுள்ளார். இக்கார் வீதியில் செல்லும்போதும் தரித்திருக்கும் போதும் ஆச்சரியமாக பார்வையிட்டு வருகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நுவரெலியா: மனிதனின் முகம் போல வித்தியாசமான வண்டு

Posted: 18 Aug 2014 08:15 AM PDT

vandu

asasaநுவ­ரெ­லியா ஆவா­எ­லிய எனும் இடத்­தி­லுள்ள மரக்­கறி தோட்­ட­மொன்றில் வித்­தி­யா­ச­மான வண்­டொன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இது ஒரு புறம் தாடி வைத்த மனி­த னின் முகம் போலவும் மறு­பக்கம் பார்க்கும் பொழுது சாதா­ரண மனி­தனின் முகம் போலவும் தென்­ப­டு­கி­றது. இது­போன்ற வண்டை இது­வ­ரையில் தாம் எங்கும் பார்த்­த­தில்லை என இவ்­வண்டை பிடித்து வைத்­துள்­ளவர் குறிப்­பி­டு­கின்றார். தனது மரக்­கறி தோட்­டத்தில் தான் விவ­சாய நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­ட­வேளை தனது விவ­சாயக் காணியில் இருந்தே இந்த வண்டு கிடைத்தது என அவர் தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

டெஸ்ட் போட்டியில் வெற்றியுடன் விடை பெற்ற ஜெயவர்த்தனே

Posted: 18 Aug 2014 08:04 AM PDT

Jayawardane

Jayaபாகிஸ்தானுக்கு எதிரான 2–வது மற்றும் கடைசி டெஸ்டில் இலங்கை அணி 105 ரன்னில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மகிளா ஜெயவர்த்தனேவுக்கு இது கடைசி டெஸ்ட் போட்டியாகும். இந்த தொடரோடு டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். வெற்றியுடன் அவர் விடை பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம் இலங்கை 2–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

This posting includes an audio/video/photo media file: Download Now

10 இன்னிங்சில் 134 ரன்கள் அடித்து மோசமான சராசரியில் 2-வது இடம் பிடித்த வீராட் கோலி

Posted: 18 Aug 2014 07:53 AM PDT

virat-kohli1

koliஇந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்தியா 1-3 என்ற கணக்கில் இழந்தது. அதோடு கடைசி இரண்டு போட்டிகளில் படுதோல்வி அடைந்தது. இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4-வது வீரராக களம் இறங்கிய வீராட் கோலி மொத்தம் 10 இன்னிங்சில் 134 ரன்களே எடுத்துள்ளார். நாட்டிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 1, 8 ரன்களும், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் 25, 0 ரன்களும், சவுத்ஆம்ப்டனில் நடைபெற்ற 3-வது போட்டியில் 39, 28 ரன்களும், மான்செஸ்டரில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் 0, 7 ரன்களும், ஓவலில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் 6, 20 ரன்களும் எடுத்தார். இவர் 10 இன்னிங்சில் மொத்தம் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். கோலியின் சராசரி 13.4 ஆகும். இதற்கு முன் 1947-48-ம் ஆண்டு சந்து சர்வத் 10 இன்னிங்சில் விளையாடி 100 ரன்கள் எடுத்தார். இவரது சராசரி 10 ஆகும். இதுவே டெஸ்ட் போட்டியில் 4-வது வீரராக களம் இறங்கில் இந்திய வீரர் எடுத்த குறைவான சாராசரியாகும் இந்த மோசமான சாதனைக்கு அடுத்தப்படியாக கோலி 134 ரன்கள் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். 67 வருடங்களாக 4-வது விக்கெட்டுக்கு இறங்கும் முன்னணி வீரர் இவ்வளவு மோசமாக விளையாடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 3-வது நபராக களம் இறங்கிய புஜாரா 5 இன்னிங்சிற்கு மேல் விளையாடி குறைந்த சாராசரி (22.2) என்ற மோசமான சாதனையை பெற்றுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிதிலமடைந்து வரும் சீனப் பெருஞ்சுவர்: கவலையில் தொல்பொருள் ஆர்வலர்கள்

Posted: 18 Aug 2014 07:50 AM PDT

china

t_logoஉலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் சிதிலமடைந்து வரும் நிலையில் அதைப் பாதுகாக்க வேண்டும் என்று தொல்பொருள் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ள சீனப் பெருஞ்சுவர் கி.பி. 3 ஆம் ஆண்டில் இருந்து 17 ஆம் ஆண்டு வரை சுமார் 1400 ஆண்டு காலம் அந்நாட்டை எதிரிகளின் படையெடுப்பில் இருந்து காக்கும் தடுப்பு அரணாகக் கட்டப்பட்டது. 20 ஆயிரம் கிலோ மீட்டருக்ககும் மேற்பட்ட நீளம் கொண்டது இந்தப் பெரும் சுவர். இந்த சுவரை உலகின் தொன்மை வாய்ந்த கலாச்சார சின்னமாக 'யுனெஸ்கோ' 1987 ஆம் ஆண்டில் அறிவித்தது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சீனப் பெருஞ்சுவரை ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் வெளிநாட்டு பயணிகள் கண்டு களிப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், மிங் வம்சத்தினரின் ஆட்சிக்காலத்தில் (1368-1644) கட்டப்பட்ட இந்த சுவற்றின் ஒரு பகுதியில் சுமார் 90 சதவீதம் சிதிலமடைந்து வருவதாக தெரிய வந்துள்ளது. இயற்கை சீற்றங்களைத் தாங்கிக் கம்பீரமாக நின்ற இப்பகுதியில் உள்ள சுவற்றின் கற்களைப் பலர் பெயர்த்தெடுத்து சென்று விட்டதாகவும், சுவற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் பலர் மரம், செடிகளை வளர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள சுற்றுச்சூழல் மற்றும் தொல்பொருள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இயக்கத்தின் அமைப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சீனப் பெருஞ்சுவரை பார்க்க வரும் ஒவ்வொரு வெளிநாட்டு சுற்றுலா பயணியிடமும் 17 அமெரிக்க டாலர்களை கட்டணமாக வாங்கும் அரசாங்கம் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த கலைச் சின்னத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அந்த இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இயற்கை மருத்துவம் – ரத்த விருத்தி தரும் வாழைக்காய்

Posted: 18 Aug 2014 07:33 AM PDT

101_2180

Planவாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தை தான் சமைப்பது வழக்கம். அதற்காக மற்ற வகை வாழைக்காய்களை சாப்பிடக் கூடாது என்பது கிடையாது. அவைகள் பரவலாக கிடைப்பதில்லை. மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிறது. இதனால் உடல் பருக்கும். உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். பசியை அடக்கும். இதனுடன் மிளகு சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாயால் ரத்தம் கக்குபவர்களுக்கும், கிராணி, நீரழிவு உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் பயன்படும். வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும். உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். பொதுவாக கேரளத்தில் இந்தப் பழக்கம் அதிகம் இருக்கிறது. இப்படி துவையலாக செய்து சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், பலமும் உண்டாகும். வாழைக்காய் சாப்பிடு வதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் ஆகியவையும் நீங்கும். ஆனால் வாய்வு மிகும். அதுபோல வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றதுதான் என்றாலும் மலத்தை இறுக்கி விடும். பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில்; உலர்த்தி மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வாட்ஸ்ஆப்-யை வீழ்த்திய டெலிகிராம்

Posted: 18 Aug 2014 07:24 AM PDT

wh

m1xhas10144zk8tfp6ad_400x400முகநூலுக்கு அடுத்த படியாக மக்களை அதிகம் கவர்ந்தது வாட்ஸ்ஆப் என்னும் மென்பொருள். இந்த வாட்ஸ்ஆப் மென்பொருளின் அதிவேக வளர்ச்சியை கண்ட பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப் நிறுவனத்தை சத்தமில்லாமல் விலைக்கு வாங்கியது. இந்த வாட்ஸ்ஆப் மென்பொருளை வீழ்த்த டெலிகிராம் என்ற புதிய மென்பொருள் சந்தைக்கு வந்துள்ளது. வாட்ஸ்ஆப்பில் இருக்கும் பயன்களைவிட இதில் அதிகம் உள்ளது. மேலும் பாதுகாப்பு வசதிகளும் இதில் அதிகம் காணப்படுகின்றது. வாட்ஸ்ஆப் மென்பொருள் முதல் வருடம் மட்டுமே இலவசம். ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டால் இந்த மென்பொருளை உபயோகப் படுத்த கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் டெலிகிராம் மென்பொருளை லைஃப்லாங் முற்றிலும் இலவசமாக வழங்கியுள்ளனர். வாட்ஸ்ஆப் மென்பொருளில் அனுப்பபட்ட தகவல்களை அனுப்பியவர் அழித்தால், அனுப்பப்பட்டவரின் மொபைல் போனில் அப்படியே இருக்கும். ஆனால் டெலிகிராமில் ஒருவர் அழித்த செய்தி, மற்றொருவர் மொபைலிலும் அதே நேரத்தில் அழிந்துவிடும். இதனால் தவறாக அனுப்பப்பட்ட செய்தியை அவர்கள் பார்பதற்கு முன்னரே அழித்துவிடலாம். வாட்ஸ்ஆப்பில் உள்ள குரூப்பில் 50 நபர்களுக்கு மட்டுமே செய்தி அனுப்ப முடியும். ஆனால் டெலிகிராமில் 200 நபர்களுக்கு குரூப் மூலம் செய்திகள் அனுப்பிக்கொள்ளலாம். வாட்ஸ் ஆப்பில் வீடியோ, ஆடியோ, போட்டோஸ் ஆகியவற்றை மட்டும் தான் அனுப்பமுடியும். ஆனால் டெலிகிராமில் எல்லா விதமான பைல்களையும் அனுப்பிக்கொள்ளலாம். வாட்ஸ்ஆப் மென்பொருளை மொபைல் போன்களை தவிர கணினியில் நேரடியாக பயன்படுத்த முடியாது. ஆனால் டெலிகிராம் மென்பொருளை மொபைல், டேப்லெட்கள் மற்றும் கணினியில் விண்டோஸ், மேக் இயங்குதளங்களில் நேரடியாக உபயோகப்படுத்திக்கொள்ளலாம். வாட்ஸ்ஆப் மென்பொருள் பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப்-யை வாங்கிய பின் இருந்த கொஞ்ச நஞ்ச பாதுகாப்பையும் பின்வாங்கிகொண்டது. ஆனால் டெலிகிராம் மென்பொருள் உங்களுடைய புகைப்படங்களை உங்கள் விருப்பம் இல்லாமல் வேறு யாரும் பார்க்கமுடியாது. மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை அளித்துள்ளனர். வாட்ஸ்ஆப் மென்பொருள் ஆங்கில மொழியில் மட்டுமே உருவாகப்பட்டுள்ளது. ஆனால் டெலிகிராம் மென்பொருள் ஆங்கிலம், ஸ்பானிஸ், அரபிக் ஆகிய மூன்று மொழிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பேஸ்புக் கணக்குகளை தாக்கும் புதியவகை வைரஸ் !

Posted: 18 Aug 2014 07:18 AM PDT

fb_virus_02

fb_icon_325x325பேஸ்புக் கணக்கு பக்கத்தில் நிறம் மூலம் புதிய வைரஸ் உலா வந்து கொண்டிருக்கிறது, உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10,000 பேரின் பேஸ்புக் கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை பேஸ்புக் நிறுவனம் பலமுறை சரிசெய்தாலும், மீண்டும் மீண்டும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த வைரஸ், பயனீட்டாளர்கள் தங்களது கணக்கின் நிறத்தை மாற்றமுடியும் என்ற செய்தியுடன் இருக்கும் செயலியின் விளம்பரமாக தொடங்குகிறது. இதனை பதிவிறக்கம் செய்தபின், வைரஸுடன் கூடிய வலைதளத்திற்கு திசை திருப்பப்படுகிறது. கணக்கில் எப்படி நிறம் மாற்றுவது என்பதை விளக்கும் வீடியோவைப் பார்க்குமாறு கூறும் இந்த வலைதளம், பயனீட்டாளர்களின் கணக்கையும், பயன்பாட்டையும் திருடுகிறது. ஒருவேளை பயனீட்டாளர் இந்த வீடியோவை பார்க்கவில்லையெனில், இந்த வலைதளம் அவர்களை வைரஸுடன் கூடிய செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு தெரிவிக்கிறது. எனவே உடனடியாக இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தால் அழித்துவிட்டு, பேஸ்புக்கின் பாஸ்வோர்ட்டை மாற்றவும் என்று சீனாவில் இணையம் நிறுவனமான சீட்டா மொபைல் தகவல் வெளியிட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™