Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மோடி அலையை மட்டுமே நம்பி இருக்க வேண்டாம்: பாஜகவினருக்கு நிதின் கட்காரி அறிவுரை

Posted: 18 Aug 2014 11:28 PM PDT

மகாராஷ்ட்டிரம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் புனேவில் நேற்றிரவு நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.வின் முன்னாள் தேசிய தலைவரும் மத்திய போக்குவரத்து துறை மந்திரியுமான நிதின் கட்காரி நேற்று பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள்: பா.ஜனதா தலைவர்களுக்கு வாய்ப்பு

Posted: 18 Aug 2014 11:02 PM PDT

மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட கவர்னர்களை மாற்றி வருகிறது. இதற்காக கவர்னர்களை பதவி விலகுமாறு உள்துறை அமைச்சகம் நெருக்கடி கொடுத்தது. கேரள கவர்னர் ஷீலா தீட்சித், குஜராத் கவர்னராக இருந்த கமலா பெனிவால், புதுவை கவர்னர் கட்டாரியா உள்ளிட்ட சிலர் பதவி விலக மறுத்து விட்டனர்.

இந்திரா கொலை பற்றிய சினிமாவுக்கு எதிர்ப்பு: இளைஞர் காங். போராட்டம்

Posted: 18 Aug 2014 11:01 PM PDT

இந்திரா கொலை பற்றிய பஞ்சாபி சினிமாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31–ந் தேதி காலை சுட்டுக்கொலை செய்யப்பட்டார். தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்ற போது அவரது மெய்க்காப்பாளர்களே அவரை சுட்டனர். இந்திராவை சுட்ட இருவரும் சீக்கியர்கள். ஒருவர் பெயர் சத்வந்த் சிங், மற்றொருவர் பியாந்த் சிங். இதில் பியாந்த் சிங் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் கொலைச்சதியில் ஈடுபட்ட சேகர் சிங்கும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சத்வந்த் சிங், சேகர்சிங் இருவரும் திகார் ஜெயிலில் தூக்கிலிடப்பட்டனர்.

தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி: மோடி பாதுகாப்புக்கு மாற்று ஏற்பாடு

Posted: 18 Aug 2014 10:56 PM PDT

பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு தீவிரவாத குழுக்களால் அச்சுறுத்தல் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அவருக்கு அதிக மிரட்டல்கள் வந்தன. அவர் பேசிய பாட்னா பொதுக்கூட்டத்தில் தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்தனர். நரேந்திர மோடி உயிருக்கு தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதை கண்டறிந்து உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் மோடி பிரதமரானதும் அவரது பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது.

மணிப்பூரில் பெண் உள்பட 2 போராளிகள் கைது: ஏராளமான வெடிகுண்டுகள் பறிமுதல்

Posted: 18 Aug 2014 10:41 PM PDT

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பத்துக்கும் மேற்பட்ட போராளிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. அவ்வப்போது, அரசு அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தி வரும் இந்த குழுவினர் ஆட்சியாளர்களுக்கு பெரும் சவாலாக விளங்குகின்றனர்.

கேரளாவில் 2 இளம்பெண்கள் கற்பழிப்பு: காதலனை நம்பிச்சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்

Posted: 18 Aug 2014 10:32 PM PDT

கேரள மாநிலம் வர்கலை பகுதியைச் சேர்ந்தவர் நிஷாத். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது பெண்ணை காதலித்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நிஷாத் தனது காதலியிடம் தான் வேலைக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கு முன்பு 2 பேரும் சந்தித்து மனம் விட்டு பேச ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார். காதலனின் பேச்சை நம்பி அந்த 17 வயது பெண் தனது உறவினரான 24 வயது பெண் ஒருவரை அழைத்துக் கொண்டு காதலன் நிஷாத் குறிப்பிட்டு சொன்ன இடத்திற்கு சென்றார். அங்கு காதலன் நிஷாத் தனது நண்பர் ஒருவரின் ஆட்டோவுடன் அங்கு தயாராக நின்றார்.

மனைவி, கள்ளக்காதலன் தலையை துண்டித்த கணவன்

Posted: 18 Aug 2014 10:26 PM PDT

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கோபால பாளையத்தைச் சேர்ந்த தம்பதிகள் குண்டண்ணா, ஜானகியம்மா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஜானகியம்மாவுக்கும், அவரது உறவினருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இதனை கணவர் குண்டண்ணா கண்டித்தார். ஆனாலும் ஜானகியம்மா கேட்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜானகியம்மா வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கள்ளக்காதலனுடன் குடித்தனம் நடத்த தொடங்கினார். இது குண்டண்ணாவுக்கு ஆத்திரமூட்டியது. மனைவியை பழி வாங்க முடிவு செய்தார்.

கேரளாவில் மீண்டும் கனமழை: இடிதாக்கி 2 பேர் பலி

Posted: 18 Aug 2014 10:22 PM PDT

கேரளாவில் இந்த ஆண்டு தாமதமாக தொடங்கிய பருவ மழை கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் பரவலாக பெய்தது. கடந்த 4 நாட்களாக ஓய்ந்திருந்த மழை மீண்டும் கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளது. இடுக்கி, கோழிக்கோடு, பாலக்காடு, வயநாடு, மலப்புரம் போன்ற இடங்களில் நேற்று கனமழை கொட்டியது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் இடி–மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்தது. இடுக்கி அணைக்கு சுற்றுலா சென்ற கோழிக்கோட்டைச் சேர்ந்த 2 பேர் இடி தாக்கி இறந்துள்ளனர்.

தெலுங்கானாவில் குடியுரிமை கணக்கெடுப்பு தொடங்கியது

Posted: 18 Aug 2014 10:15 PM PDT

ஆந்திராவில் இருந்து பிரிந்து நாட்டின் 29–வது மாநிலமாக தெலுங்கானா கடந்த ஜூன் மாதம் உதயமானது. மாநில பிரிவினைக்கு பின் இங்கு நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி கட்சி வெற்றி பெற்று அதன் தலைவர் சந்திரசேகரராவ் முதல்– மந்திரியாக பதவி ஏற்றார். கடந்த 3 மாத காலத்தில் அரசு ஊழியர் பிரச்சினை, மாணவர்களின் கல்வி உதவித் தொகை, மின்சாரம், சட்டம்– ஒழுங்கு என பல்வேறு பிரச்சினைகளை இம்மாநில அரசு எதிர்கொண்டது. இதற்கு தீர்வு காண ஆந்திரா– தெலுங்கானா முதல்– மந்திரிகளை சந்தித்து பேசுவதற்கு கவர்னர் நரசிம்மன் ஏற்பாடு செய்தார்.

டெல்லி சட்டசபைக்கு மறுதேர்தல்: மெட்ரோ ரெயில் பயணிகளிடம் ஆம் ஆத்மி கையொப்ப வேட்டை

Posted: 18 Aug 2014 10:15 PM PDT

டெல்லி முதல் மந்திரியாக பொறுப்பேற்ற 49 நாட்களில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டதால் அந்தப் பதவியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, டெல்லியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வினர் முயற்சி செய்து, அதற்கான குதிரை

70 அடுக்குகளுடன் உலகின் மிக உயரமான இந்து ஆலயம்: மதுராவில் அடிக்கல் நாட்டப்பட்டது

Posted: 18 Aug 2014 10:06 PM PDT

கீதை என்ற தர்ம போதனையை உலகிற்கு உபதேசித்த கிருஷ்ண பரமாத்மா தனது இளம்பருவத்தில் விளையாடி மகிழ்ந்ததாக நம்பப்படும் தற்போதைய உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா நகரில் 'சந்திரோதயா மந்திர்' என்ற பெயரில் 70 அடுக்குகளை கொண்ட உலகின் மிக உயரமான இந்து ஆலயத்தை கட்ட ஸ்ரீல பிரபுபாதா என்பவர் விரும்பினார். 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம்' என்றறியப்படும் 'இஸ்கான்' அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தற்போதைய

பாகிஸ்தானுடன் பேச்சு ரத்து: மோடி அதிரடி முடிவு எடுத்தது எப்படி?

Posted: 18 Aug 2014 10:05 PM PDT

மும்பையில் கடந்த 2008–ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது. அதன்பிறகு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் சுமூக உறவு ஏற்படவில்லை. இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி கடந்த மே மாதம் பதவி ஏற்றபோது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் கலந்து கொண்டார். அப்போது இருதரப்பு உறவை மேம்படுத்த மோடியும், நவாஸ்செரீப்பும் ஆலோசித்தனர்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஒரு ஹிட்லர்: திக்விஜய் சிங்

Posted: 18 Aug 2014 08:36 PM PDT

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மும்பையில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது "இந்தியா ஒரு இந்து நாடு. இந்துத்வா (இந்து மதம்) அதன் அடையாளம். இந்து மதம் மற்றவர்களையும் உள்ளடக்கிய மதம். அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து இந்துக்களிடமும் சமத்துவத்தை ஏற்படுத்தவேண்டும். எல்லா இந்துக்களும் ஒரே இடத்தில் குடிநீர் பருகவேண்டும். ஒரே இடத்தில் பிரார்த்தனை செய்யவேண்டும். அவர்கள்

பிரதமர் அறிவித்த கழிவறை திட்டத்திற்கு குவிகிறது நிதி: டி.சி.எஸ்-பாரதி ரூ.200 கோடி வழங்குகிறது

Posted: 18 Aug 2014 05:22 PM PDT

நாட்டில் உள்ள பள்ளிகளில் கழிவறை கட்ட நிதியுதவி செய்யுங்கள் என்று பெருநிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்த நான்கு நாட்களில் டாடா கன்சல்டன்சியும், பாரதி அறக்கட்டளையும் இணைந்து 200 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளன. பிரதமரின் தனது சுதந்திர தின உரையின் போது இந்த அழைப்பை விடுத்த நிலையில், முதன் முதலாக அன்றைய தினமே ஓரியண்டல் வர்த்தக வங்கி

லஞ்சம் அதிகம் புழங்குவதால் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் மொத்தமாக மூடப்படும்: கட்காரி பேச்சு

Posted: 18 Aug 2014 05:11 PM PDT

மத்திய தரைவழி போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரியான நிதின் கட்காரி புனேவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது; நாட்டிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களை மூட மத்திய அரசு சட்டம் இயற்ற உள்ளது. நாட்டில் காலவாதியான சட்டங்களும், அமைப்பும் மாற்றப்படவேண்டும். அதில் முக்கியமான ஒன்று வட்டார போக்குவரத்து

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறுவர்களின் பங்கு அதிகரிப்பு: தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம்

Posted: 18 Aug 2014 04:42 PM PDT

கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந்தேதி தெற்கு டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைதானபோது அதில் 16 வயது சிறுவன் ஒருவனும் இருந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

வானவெளியில் கருந்துளை கண்டுபிடிப்பு: இந்திய விஞ்ஞானிகள் சாதனை

Posted: 18 Aug 2014 02:55 PM PDT

வானவெளியில் அடர்த்தியும், ஈர்ப்பு சக்தியும் அதிகமான 'கருந்துளை' உண்டு என்று கூறப்படுவது உண்டு. ஆனால் இதை யாரும் பார்த்தது இல்லை. கருந்துளை என்று எதுவும் இல்லை என்று கூறுபவர்களும் உண்டு. நட்சத்திரக் கூட்டங்கள் அழியும் போது இந்த கருந்துளை உருவாகிறது என்றும், அது தன்னை நோக்கி வரும் எல்லா பொருளையும் உள்ளே ஈர்த்துக்கொள்ளும் சக்தி கொண்டது என்றும், அதில் இருந்து எதுவும் தப்ப

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நித்யானந்தா கோர்ட்டில் ஆஜர்: விசாரணை 23-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

Posted: 18 Aug 2014 02:35 PM PDT

பெங்களூர் அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா. இவர் மீது முன்னாள் சீடரான ஆர்த்தி ராவ் அளித்த பாலியல் புகாரின் பேரில் பிடதி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நித்யானந்தா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார்.

டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் நர்சு கற்பழிப்பு: 2 ஊழியர்கள் கைது

Posted: 18 Aug 2014 02:22 PM PDT

டெல்லியின் தென்கிழக்கு பகுதியான ஹஸ்ரத் நிசாமுதீனில், 5 நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டல் உரிமையாளரின் தாய் நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் ஓட்டலில் வைத்தே 24 மணி நேரமும் கவனிக்கப்பட்டு வருகிறார். இந்த பணியை அங்குள்ள பிரபல மருத்துவமனை நிர்வாகம் செய்து வருகிறது.

ஒடிசாவில் மின்னல் தாக்கி மூன்று பேர் பலி

Posted: 18 Aug 2014 01:25 PM PDT

ஒடிசாவில் உள்ள பலாசோர் மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்னல் தாக்கியதால் மூன்று பேர் பலியானதுடன், மேலும் ஒரு பெண் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரம்மானிசாஹி கிராமத்தை சேர்ந்த 45 வயதான பாகிரதி பாரிக், தெந்துலிமட்டி கிராமத்தை சேர்ந்த 40 வயதான சம்புநாத் லெங்கா ஆகியோர் தங்கள் நெல்வயல்களில் நின்றிருந்தபோது மின்னல் தாக்கியதில் சம்பவ


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™