Tamil News | Online Tamil News |
- தமிழக அணைகளுக்கு நீர்வரத்து...அதிகரிப்பு பக்கத்து மாநிலங்களில் கொட்டுது மழை
- ஜெ., - மோடி பற்றி வெளியான கட்டுரைக்கு ராஜபக் ஷே...வருத்தம் விசாரணைக்கு உத்தரவிட்டு அறிக்கை கேட்கிறார்
- 'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு அறிவுரை
- தமிழக பொறுப்பாளராக்க வேண்டும்:பிரியங்காவுக்காக குரல் கொடுக்கும் காங்கிரசார்
- கச்சத்தீவு விவகாரம் குறித்து ஐகோர்ட் விளக்கம்
- இந்தி மொழிக்கு எதிராக எம்.பி.,க்கள்:'சிசாட்' விவகாரத்தில் திடீர் திருப்பம்
- சமரச கொடி விரைவில் பறக்குமா?:கருணாநிதியுடன் அழகிரி மகள் திடீர் சந்திப்பு
- இப்படியும் ஒரு புறக்கணிப்பு! கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு..... விரிவாக்கமும் இல்லை; விமான சேவையுமில்லை!
- எந்த கட்சியில் இளைஞர்கள் அதிகம்:தே.மு.தி.க., - அ.தி.மு.க., மோதல்
| தமிழக அணைகளுக்கு நீர்வரத்து...அதிகரிப்பு பக்கத்து மாநிலங்களில் கொட்டுது மழை Posted: பக்கத்து மாநிலங்களில், தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து, மழை கொட்டுவதால், தமிழக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசன நீர் வழங்கும் மேட்டூர் அணை, விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும் நிலை, உருவாகி உள்ளது.தமிழகத்தில், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, போதுமான அளவில் பெய்யவில்லை. இதனால், அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பவில்லை. கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், கோடை வெயில் கொளுத்தியதால், நீராதாரங்களில், நீர் இருப்பு கணிசமாக குறைந்தது.இதனால், பல மாவட்டங்களில், தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்தது. ... |
| Posted: கொழும்பு:தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் அவதுாறாக சித்தரித்து, இலங்கை ராணுவ இணையதளம் வெளியிட்ட செய்திக்கு, அந்நாட்டின் அதிபர், ராஜபக் ஷே நேற்று வருத்தம் தெரிவித்துள்ளார். ''அதற்காக நான் வருந்துகிறேன்; அது குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்,'' என, அவர் கூறினார்.இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால், இந்திய மீனவர்கள், குறிப்பாக, தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை சுட்டிக் காட்டி, தமிழக முதல்வர், ஜெயலலிதா, அடிக்கடி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறார்.அதுபோல, பல ஆண்டு ... |
| 'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு அறிவுரை Posted: 'தமிழர்கள் அனைவரும் இந்தி கற்க வேண்டும்' என, இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் இருந்தவர் மார்கண்டேய கட்ஜு. இவர், தற்போது, இந்திய பிரஸ் கவுன்சில் தலைராக உள்ளார்.பரபரப்பு :தன், 'பேஸ்புக்' பக்கத்தில், திடீர் திடீரென பல கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருபவர்.இவர் நேற்று தன், 'பேஸ் புக்' பக்கத்தில், தமிழர்கள் இந்தி கற்பது குறித்து, ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார்.அக்கட்டுரையில் கூறியிருப்பதாவது:அனைத்து தமிழர்களும் இந்தி மொழி கற்க ... |
| தமிழக பொறுப்பாளராக்க வேண்டும்:பிரியங்காவுக்காக குரல் கொடுக்கும் காங்கிரசார் Posted: தமிழக பொறுப்பாளராக்க வேண்டும்:பிரியங்காவுக்காக குரல் கொடுக்கும் காங்கிரசார்காங்., தலைவி சோனியாவின் மகள் பிரியங்கா, தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று, தொண்டர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்திருக்கிறது. அவரை உ.பி., தலைவராக்கி, கட்சியை அம்மாநிலத்தில் பலப்படுத்த வேண்டும் என, கட்சித் தலைவர்கள் பலரும், தலைமையை வலியுறுத்துகின்றனர். இதற்கிடையில், தமிழகத்தை மையமாக வைத்து, அவர் அரசியல் செய்ய வேண்டும் என்கிற கருத்து, தமிழக தலைவர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.பெற முடியவில்லை:லோக்சபா தேர்தலில் காங்., படுதோல்வி அடைந்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி ... |
| கச்சத்தீவு விவகாரம் குறித்து ஐகோர்ட் விளக்கம் Posted: சென்னை:'மீனவர்கள் பிரச்னைக்கு, மத்திய அரசு, நியாயமான தீர்வு காணும்' என, சென்னை உயர் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், மீனவர்கள் நல அமைப்பின் தலைவர், பீட்டர் ராயன் என்பவர், தாக்கல் செய்த மனு:பாதுகாப்பு :இந்தியா - இலங்கை இடையே மீன் பிடிக்கும், தமிழக மீனவர்களுக்கு, மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்களுக்கு எதிராக நடத்தப்படும், மனித உரிமை மீறல் புகார்களை, நீதிபதி தலைமையிலான குழு, விசாரிக்க வேண்டும்.இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ... |
| இந்தி மொழிக்கு எதிராக எம்.பி.,க்கள்:'சிசாட்' விவகாரத்தில் திடீர் திருப்பம் Posted: மத்திய பணியாளர் தேர்வாணையம், யு.பி.எஸ்.சி., நடத்தும், 'சிவில் சர்வீசஸ்' தேர்வுகளில், இந்தி மொழி பேசும், வட மாநில தேர்வர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதை அடுத்து, இந்தி மொழி பேசாத மற்ற மாநிலங்களை சேர்ந்த எம்.பி.,க்கள், இந்திக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.தேர்வர்கள் எதிர்ப்பு:யு.பி.எஸ்.சி., நடத்தும் முதல்நிலைத் தேர்வின் திறனறித் தேர்வு, இரண்டாம் தாளில் ஆங்கில மொழிப்புலமை குறித்த கேள்விகள் இடம்பெற்றுள்ளதற்கு, இந்தி மொழி பேசும் மாநிலங்களை சேர்ந்த தேர்வர்கள் மட்டுமின்றி, அப்பகுதி எம்.பி.,க்களும், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களை ... |
| சமரச கொடி விரைவில் பறக்குமா?:கருணாநிதியுடன் அழகிரி மகள் திடீர் சந்திப்பு Posted: தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான, சமரச பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது. அதன் ஒரு கட்டமாக, சென்னையில் நேற்று முன்தினம், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அழகிரி யின் மகள் சந்தித்து பேசி உள்ளார்.தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பெங்களூருவுக்கு சென்றிருந்த நேரத்தில், இந்த சந்திப்பு சென்னையில் நடந்துள்ளது. இந்த சந்திப்பு நடந்தபோது, அழகிரியும் சென்னையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தாயார் தயாளுவை சந்திக்க, அழகிரி சென்னை வரும் தகவல், 2ம் தேதி வெளியாகியது. அதன்படி, 3ம் தேதி இரவு, 10:00 ... |
| Posted: கோவை:விரிவாக்கம் தாமதமாகி வருவதோடு, நிர்வாக ரீதியான புறக்கணிப்பு காரணமாக, கோவை விமான நிலையத்தை சர்வதேச விமானங்கள் புறக்கணிப்பது தொடர்ந்து, கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாகி வருகிறது.கோவை நகரில், டூவீலர்களிலிருந்து, பல வகை வாகனங்கள், ரயில்கள் மற்றும் விமானங்கள் வரையிலான உதிரிபாகங்கள், கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. உற்பத்தித்துறையில் மட்டுமின்றி, ஐ.டி., ஜவுளித்தொழில், உயர் மருத்துவம் மற்றும் உயர் கல்வி என பல்வேறு துறைகளிலும் கோவை, பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.ஆனால், கடந்த சில ... |
| எந்த கட்சியில் இளைஞர்கள் அதிகம்:தே.மு.தி.க., - அ.தி.மு.க., மோதல் Posted: சென்னை:எந்த கட்சியில், இளைஞர்கள் அதிகமாக உள்ளனர் என்பது குறித்து, தே.மு.தி.க., மற்றும் அ.தி.மு.க.,வினரிடையே, சட்டசபையில், நேற்று, சூடான விவாதம் நடந்தது.சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத் துறைகள் மானியக் கோரிக்கை மீதான விவாதம்:தே.மு.தி.க., தினகரன்: இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுத்த என் கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு நன்றி.அமைச்சர் வளர்மதி: அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா தான், அதிகளவு இளைஞர்களை, எம்.பி., எம்.எல்.ஏ.,க்களாக்கி உள்ளார். இளைஞர், இளம்பெண்கள் பாசறையைத் துவக்கி, 35 லட்சம் இளைஞர்களை, உறுப்பினராக்கி உள்ளார்.தே.மு.தி.க., சந்திரகுமார்: விஜயகாந்த், 2005ல், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 06,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |