Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வலுக்கட்டாய வெளியேற்றம்: 'சட்டம், ஒழுங்கு பாதிக்கும்' என போலீஸ் விளக்கம்

Posted:

சென்னை:சென்னையில் நடைபெறும், 15 வயதுக்கு உட்பட்டோருக்கான, கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்த, இலங்கை கிரிக்கெட் அணியினர், வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டனர். 'சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்' எனக் கூறி, போலீசார், இந்த அவசர நடவடிக்கையை எடுத்துள்ளனர்.சென்னை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 'தமிழக கிரிக்கெட் கூட்டமைப்பு' சார்பில், 15 வயதுக்கு உட்பட்டோருக்கான, கிரிக்கெட் போட்டி, நேற்று துவங்கி, வரும் 7ம் தேதி வரை நடக்கிறது.இப்போட்டியில், இந்தியா சார்பில், 10 அணிகளும், மலேசியா மற்றும் இலங்கை சேர்ந்த, தலா ஒரு அணியும் பங்கேற்று விளையாடுகின்றன.இலங்கையைச் ...

அடுக்குமாடி இடிந்த சம்பவம்: ஐகோர்ட் அதிரடி நிலவர அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவு

Posted:

சென்னை:'சென்னை, மவுலி வாக்கம், அடுக்குமாடி கட்டடம் இடிந்த சம்பவம் குறித்த, நிலவர அறிக்கையை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே, பல பொறுப்புகளில் உள்ள விசாரணை கமிஷன் நீதிபதிக்கு, முழுமையான விசாரணை நடத்த, நேரம் கிடைக்குமா என்றும், சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது.மவுலிவாக்கத்தில், 11, அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், 61 பேர் இறந்தனர்; 27 பேர் காயமடைந்தனர். கடந்த, ஜூன் மாதம், சம்பவம் நடந்தது.ஸ்டாலின் வழக்குஇச்சம்பவம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., பொருளாளரும், எம்.எல்.ஏ., வுமான, ...

வெளிநாட்டில் பணம் பெறுவதில் முதலிடத்தில் தமிழக நிறுவனங்கள்

Posted:

மத்திய உள்துறை அமைச்சகம் நடத்திய ஆய்வில், தமிழகத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் நிதியைப் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.தொண்டு நிறுவனங்கள்:குழந்தைகள், பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், பணியாளர்கள் என, பலரது மேம்பாட்டிற்கு என, தனித்தனியாக தொண்டு நிறுவனங்கள், நல அமைப்புகள் ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன.இவை, பெரும்பாலும் இங்குள்ள நிலைமையை எடுத்துக் கூறி, வெளிநாட்டில் இருந்து நிதியைப் பெற்று செலவழித்து வருகின்றன.இந்த வகையில், 2012ல், அதிகபட்சமாக, 2,285 கோடி ரூபாய் பெற்று, டில்லி முதலிடத்தையும்; 1,704 ...

கோஷ்டி சண்டையை தவிர்க்க நேர்காணல்:ஸ்டாலின் முயற்சி பலன் அளிக்குமா?

Posted:

உட்கட்சி தேர்தலில் நிலவும் கோஷ்டி சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க, மாவட்ட வாரியாக, நேர்காணல் நிகழ்ச்சியை, நடத்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். வரும் 7ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டத்துக்காக நடக்கும் நேர்காணலுக்கு வரும்படி, அம்மாவட்டத்தின் முக்கியமான, 100 பேருக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார் ஸ்டாலின்.இந்த நேர்காணல் வாய்ப்பை பயன்படுத்தி, தற்போதைய மா.செ.,வான தா.மோ.அன்பரசனுக்கு மீண்டும் அந்த பொறுப்பை வழங்கக் கூடாது என, வலியுறுத்த, எதிர் கோஷ்டியினர் தயாராகின்றனர்.தி.மு.க., உட்கட்சி தேர்தல், ஜனநாயக முறையில் நடைபெறும் என்ற ...

முதல்வர் அறிவிப்பிற்காக மூன்றாண்டாக காத்திருக்கும் முதியோர்:இலவச பஸ் பாஸ் திட்டம் என்னாச்சு?

Posted:

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து, மூன்றாண்டுகள் முடிந்து விட்ட நிலையில், முதியோருக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. சட்டசபையில், முதல்வர் இத்திட்டம் குறித்து அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பில், முதியோர் காத்திருக்கின்றனர்.இலவசமாக...'ஆட்சிக்கு வந்தால், முதியோருக்கு, அரசு பஸ்களில் பயணிக்க, இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்' என, அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. இத்திட்டத்தின் படி, 58 வயதுக்கு மேற்பட்ட முதியோர், அரசு பஸ்களில், பிற நகரம் மற்றும் கிராமங்களுக்கு, இலவசமாக சென்று வர முடியும் என்பதால், முதியோர் மத்தியில் ...

புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை:இம்மாதம் அறிவிக்கப்படுமா?

Posted:

புதுடில்லி:மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், 2014 - 19ம் ஆண்டிற்கான, புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையை (எப்.டி.பி.,), இம்மாதம் இறுதியில் அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து, உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஐந்தாண்டு திட்ட காலத்திற்கான, (2014 - 19), புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கைக்கு, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம், இறுதி வடிவம் கொடுத்து வருகிறது. இதையடுத்து, புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை, இம்மாத இறுதியில் வெளியாகும்' என்று தெரிவித்தார்.ஏற்றுமதி - இறக்குமதி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும், வெளிநாட்டு வர்த்தக கொள்கையை ...

டில்லியில் அனைத்து கட்சி கூட்டம் தோல்வி:இன்சூரன்ஸ் மசோதாவுக்கு ஆதரவில்லை

Posted:

புதுடில்லி:இன்சூரன்ஸ் மசோதா தொடர்பாக, ஒருமித்த கருத்தை உருவாக்க, நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.49 சதவீதம்:இன்சூரன்ஸ் துறையில், தற்போது, 29 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை, 49 சதவீதமாக அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான மசோதா, ராஜ்யசபாவில், நேற்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது.ஆனால், இன்சூரன்ஸ் மசோதாவை, தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என, தி.மு.க., உட்பட, ஒன்பது அரசியல் கட்சிகள், ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரியிடம், 'நோட்டீஸ்' அளித்தன. அதனால், ...

மகனை முன்னிலைப்படுத்திய மேனகாவால் சர்ச்சை: பா.ஜ.,வில் துவங்கியது சலசலப்பு

Posted:

லக்னோ:''என் மகன் வருண், உ.பி., முதல்வரானால், அந்த மாநிலம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாறும்,'' என, மத்திய அமைச்சர் மேனகா பேசியது, பா.ஜ., வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இந்திராவின் இளைய மருமகள் ,பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவர், மேனகா. முன்னாள் பிரதமர் இந்திராவின் இளைய மருமகள். தற்போது, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், உ.பி., மாநிலம் பிலிப்பிட் தொகுதி எம்.பி.,யாகவும் பதவி வகிக்கிறார்.இவரின் மகன் வருண், உ.பி., மாநிலம் சுல்தான்பூர் தொகுதியின் எம்.பி.,யாகவும், பா.ஜ., பொதுச் செயலராகவும் பதவி வகிக்கிறார்.இந்நிலையில் ...

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வில்...மாற்றம்: டூமாணவர்கள் எதிர்ப்பால் ஆங்கிலத்துக்கு 'கல்தா'

Posted:

புதுடில்லி:நாடு முழுவதும், மாணவர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பை அடுத்து, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற பொறுப்புகளுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., நடத்தும், முதல்நிலை தேர்வில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 'முதல்நிலை தேர்வின், திறனறித் தேர்வு - 2ம் தாளில் இடம்பெறும், ஆங்கில மொழிப்புலமை குறித்த கேள்விகளுக்கான மதிப்பெண், தகுதிப் பட்டியல் அல்லது கிரேடு தயாரிக்க சேர்க்கப்படாது. அதே நேரத்தில், 2011ம் ஆண்டில், யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதியவர்களுக்கு, 2015ல் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்' என, மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™