Tamil News | Online Tamil News |
- வீட்டு மின் கட்டணம் மாதந்தோறும் வசூலிக்கப்படுமா?
- காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தில் மாற்றம்: சொந்த நிதி பயன்படுத்த அரசு பரிசீலனை
- எல்லை பகுதியில் மேலும் சுரங்கங்கள்?: ஊடுருவலுக்காக பாக்., ராணுவம் விஷமம்
- 'எபோலா' வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு? மருத்துவ பரிசோதனையில் குரங்கு பிழைத்தது
- 'டாஸ்மாக்' மது விலை உயர்வு ஏன்? கருணாநிதி விளக்கம்
- ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு : 'திக்... திக்...' காத்திருப்பு
- வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் சாலைகள் தாங்குமா? தமிழகத்தில் எட்டு ஆண்டுகளில் 2 மடங்காக உயர்வு
- மூத்த தலைவர்களை ஓரங்கட்ட ராகுல் திட்டம்?அமித் ஷா வழியில் காங்கிரசிலும் களையெடுப்பு
- 'ஸ்மார்ட் சிட்டி' ஆகிறது வாரணாசி நகரம் நவீனம்: ஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பில் ஒப்பந்தம்
| வீட்டு மின் கட்டணம் மாதந்தோறும் வசூலிக்கப்படுமா? Posted: தொழிற்சாலைகளுக்கு, மாதந்தோறும், மின் கட்டணம் வசூலிப்பது போல், வீட்டு மின் இணைப்புகளுக்கும், மாதம் தோறும் மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது.தமிழகத்தில், வீடு, 1.72 கோடி; விவசாயம், 20.47 லட்சம்; வணிகம், 32.87 லட்சம்; தொழிற்சாலை, 5.98 லட்சம்; குடிசை, 11.82 லட்சம்; இதர பிரிவு, 8.95 லட்சம் என, மொத்தம், 2.52 கோடி மின் நுகர்வோர் உள்ளனர்.வீடுகளில், இரண்டு மாதங்களுக்கு, ஒரு முறை; தொழிற்சாலைகளுக்கு, மாதம் தோறும், மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது.வீட்டு மின் கட்டண விவரம், கணக்கு எடுக்கப்பட்டதில் இருந்து, 20 நாட்களுக்குள், கட்டண தொகையை செலுத்த வேண்டும்.வீட்டு ... |
| காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தில் மாற்றம்: சொந்த நிதி பயன்படுத்த அரசு பரிசீலனை Posted: காவிரி - -வைகை- - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு, நிதி வழங்க, மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது. எனவே, சொந்த நிதியை பயன்படுத்தி, இப்பணியை துவங்க, அரசு பரிசீலித்து வருகிறது. மேலும், மத்திய அரசிடம் கொஞ்சம் கொஞ்சமாக நிதி பெற்று, இதற்கான செலவை ஈடுகட்டவும் ஆலோசிக்கப்படுகிறது.தமிழகத்தின், ஓராண்டு சராசரி மழையளவு, 911 மி.மீட்டர்; மொத்த நீர்வள ஆதாரம், 853 டி.எம்.சி., இதில், அண்டை மாநிலங்கள் மூலம் கிடைக்க வேண்டிய, 275 டி.எம்.சி., நீரும் அடக்கம்.உபரி நீர்:பருவமழை மூலமும், அண்டை மாநிலங்களில் இருந்தும் கிடைக்கும் தண்ணீரை, முறையாக சேமித்து வைத்து ... |
| எல்லை பகுதியில் மேலும் சுரங்கங்கள்?: ஊடுருவலுக்காக பாக்., ராணுவம் விஷமம் Posted: ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இந்திய எல்லைக்குள் பயங்கர வாதிகளை ஊடுருவ வைப்பதற்காக, பாக்., ராணுவத்தினர் அதிநவீன சுரங்கங்களை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்பு படையினர் சமீபத்தில் நடத்திய சோதனையில், சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பாக்., எல்லைக்குள் இருந்து, பயங்கரவாதிகளை ஊடுருவ வைப்பதற்காக, இந்த சுரங்கம் அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இதுகுறித்து, ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில், மேலும் பல சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கலாம் என, உளவுத் ... |
| 'எபோலா' வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு? மருத்துவ பரிசோதனையில் குரங்கு பிழைத்தது Posted: டொரன்டோ : மருத்துவத் துறைக்கு பெரும் சவாலாக விளங்கும், 'எபோலா' நோய் கிருமியை அழிக்கும் மருந்தை, ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டில் உள்ள நுண் உயிரியல் பூங்காவில், எபோலா நோய் பாதிப்பிற்கு உள்ளான, 18 குரங்குகள், இந்த மருந்தின் மூலம் உயிர் பிழைத்துள்ளன.அதிகரிப்பு: மேற்கு ஆப்ரிக்க நாடுகளான, லைபீரியா, கினியா உள்ளிட்ட நாடுகளில், எபோலா நோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கிருந்து, உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ள இந்த நோயால், ஏராளமானோர் பலியாகியுள்ளனர். எபோலாவால் பாதிக்கப்பட்ட பலருக்கும், ... |
| 'டாஸ்மாக்' மது விலை உயர்வு ஏன்? கருணாநிதி விளக்கம் Posted: சென்னை : 'டாஸ்மாக் மூலம், கடந்தாண்டு எதிர்பார்த்த வருவாய், கிடைக்கவில்லை என்பதால், மது விலையை அரசு, திடீரென்று உயர்த்தி உள்ளது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:டாஸ்மாக் மூலம், கடந்தாண்டு 23,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் என, அரசு எதிர்பார்த்தது. ஆனால், எதிர்பார்த்த வருவாயில், 40 கோடி ரூபாய்க்கு மேல் குறைந்துவிட்டது. ரூ.600 கோடி நிலுவை: டாஸ்மாக் வருவாயை நம்பி, இலவச பொருட்களை ஏராளமாக வாங்கியதில், 600 கோடி ரூபாய் நிலுவை உள்ளதாம். இதைச் சமாளிக்கவே, திடீரென்று மது விலையை அரசு உயர்த்தி உள்ளது. ... |
| ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு : 'திக்... திக்...' காத்திருப்பு Posted: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அடுத்த மாதம், 20ம் தேதி, தீர்ப்பு வழங்கப்படும் என, நீதிபதி அறிவித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, ஆளும் கட்சியினரும், 'திக்... திக்...' மனதுடன், தீர்ப்பு நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.அ.தி.மு.க., பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா, 1991ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்ததாக, அடுத்து ஆட்சிக்கு வந்த, தி.மு.க., சார்பில், வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கு, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, ... |
| வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் சாலைகள் தாங்குமா? தமிழகத்தில் எட்டு ஆண்டுகளில் 2 மடங்காக உயர்வு Posted: தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை, எட்டு ஆண்டுகளில், இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், போதுமான அளவு, தரமான சாலை வசதி இல்லாததால், தற்போதுள்ள சாலை தாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.போக்குவரத்து நெரிசல்:தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தனியார் மட்டுமின்றி, அரசு சார்பில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, போதுமான அளவு சாலை வசதி செய்து கொடுக்கப்படாததால், அனைத்து நகரங்களுமே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் ... |
| மூத்த தலைவர்களை ஓரங்கட்ட ராகுல் திட்டம்?அமித் ஷா வழியில் காங்கிரசிலும் களையெடுப்பு Posted: தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறும் விஷயத்தில், வயது வரம்பை நிர்ணயிப்பது தொடர்பாக, காங்கிரசுக்குள் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ராகுலின் வசதிக்காக, மூத்த தலைவர்கள் அனைவரையும் ஓரங்கட்டச் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பா.ஜ., தலைவராக, அமித் ஷா பொறுப்பேற்றபின் கட்சியின் அதிகாரம் மிக்க அமைப்பான, பார்லிமென்ட் போர்டில் இருந்து, வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய மூவரையும் நீக்கம் செய்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.'சராசரியாக, 75 வயதுக்கு மேல் உள்ள தலைவர்கள், கட்சிக்கு ஆலோசனை கூறட்டும்; ... |
| 'ஸ்மார்ட் சிட்டி' ஆகிறது வாரணாசி நகரம் நவீனம்: ஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பில் ஒப்பந்தம் Posted: கியோட்டா : வாரணாசியை, 'ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்றுவதற்கான ஒப்பந்தம், ஜப்பான் பயணம் மேற்கொண்டு உள்ள, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே முன்னிலையில் நேற்று, கையெழுத்தானது.ஐந்து நாள் அரசு முறைப்பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று, ஜப்பான் சென்றார். ஜப்பானின் பொருளாதார மையமாகவும், பரப்பளவில் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ள, ஒசாகா நகரின், கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த அவர், அங்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிகளுக்குப் பின், அருகேயுள்ள கியோட்டா நகருக்கு காரில் சென்றார்.வரவேற்பு:ஜப்பான் பிரதமர் ஷின்சோ ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 31,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |