Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


tamil audio books தந்துதவ முடியுமா?

Posted: 30 Aug 2014 01:40 PM PDT

யாரிடமாவது தமிழ் ஆடியோ புக்ஸ் இருந்தால் தந்துதவமுடியுமா நண்பர்களே ?

தத்துவங்கள் !

Posted: 30 Aug 2014 01:17 PM PDT

காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?...... சீனாவுல தான் பிறந்தது..... ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY. காலேஜ் படிக்கிறப்ப கேட்டுக்கு வெளியே நின்னா சஸ்பெண்டு'ன்னு அர்த்தம், கல்யாணமானதுக்கப்புறம்வீட்டுக்கு வெளிய நின்னா ஹஸ்பென்டு'ன்னு அர்த்தம் மெக்கானிக்கல் இன்ஜீனியர் மெக்கானிக் ஆகலாம்................. ஆனா சாப்ட்வேர் இன்ஜீனியர் சாப்ட்வேர் ஆக முடியாது. பாக்கு மரத்துல பாக்கு இருக்கும். தேக்கு மரத்துல தேக்கு இருக்கும்.. ........... ஆனா பனை மரத்துல பனை ...

அன்புதம்பி ஜேன் செல்வகுமார் அவர்களின் புதல்வி எங்கள் தேவதை ஜோவிதாவுக்கு இனிய பிறந்தநாள் - வாழ்த்தலாம் வாங்க

Posted: 30 Aug 2014 12:59 PM PDT

நேற்று(28-08-2014) தனது ஆறாவது பிறந்தநாளை கொண்டாடிய எங்கள் அன்புதம்பி ஜேன் செல்வகுமார் அவர்களின் புதல்வி நமது ஈகரை குடும்பத்தின் தேவதை ஜோவிதாவுக்கு ஈகரை தமிழ்க்களஞ்சியத்தின் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

சில குறியீடுகளின் விளக்க படங்கள்

Posted: 30 Aug 2014 12:24 PM PDT

சைகை மொழியில் ஆங்கில எழுத்துக்கள்



ஒரு நாளாவது பாட்டுப்பாடி தூங்கவையேன் சரசு..!

Posted: 30 Aug 2014 12:20 PM PDT

-[b] பை நிறைய காய்கறியோட போறவன்கிட்ட பர்ஸை அடிச்சது தப்பாப் போச்சு...! - ஏன்? - காலியாயிருக்கு பர்ஸ்..! - >சி.ஆர்.ஹரிஹரன் - ------------------------------------- - ஒரு நாளாவது பாட்டுப்பாடி தூங்கவையேன் சரசு..! - பாட்டு வாங்காம நீங்க தூங்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்..! - >ஆர்.சம்பத் - ---------------------------------- - ஆபரேஷனுக்குப் பிறகு செலவு அதிகமிருக்காதே, டாக்டர்..? - உங்க குல வழக்கம் எப்படின்னு தெரியாதே, எனக்கு..! - >வி.ரேவதி - ------------------------------------- - எப்படியாச்சும் ...

சந்தோஷத்தை வெளில காட்டாம அடக்கிக்கிட்டேன்டி..!

Posted: 30 Aug 2014 12:16 PM PDT

உன் மாமியாரைத் தேள் கொட்டிடுச்சாம்! என்னடி பண்ணீங்க? - என்ன பண்றது? சந்தோஷத்தை வெளில காட்டாம அடக்கிக்கிட்டேன்டி..! - >இக்பால் - ———————————— - கடந்த சில நாட்களாக எனக்கு டெலிபோனில் மிரட்டல் வருகிறது இன்ஸ்பெக்டர் சார்..! - என்ன சொல்லி? - டெலிபோன் கட்டணத்தை செலுத்தாவிட்டால் இணைப்பைத் துண்டித்து விடுவதாக மிரட்டுகிறாரகள் சார்..! - >ஹரிஹரன் - ———————————— - டாக்டர்,உங்களை என் தெய்வமாக நினைக்கிறேன்,..! - அப்ப பீஸை அந்த உண்டியலில் போட்டு விபூதி, குங்குமம் எடுத்துட்டுப் போங்க…! - >ஜி.மஞ்சரி - ———————————– - - எவ்வளவு ...

கணவன் - மனைவி ஜோக்ஸ் !

Posted: 30 Aug 2014 12:12 PM PDT

மனைவி: என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல.............. கணவன்: அதனால தாண்டி அது சொர்க்கம் ...........! மனைவி: . . . . ???? .................................................................... மனைவி: உங்க பிரண்ட் உங்ககிட்ட கடன் வாங்க வந்து இருக்கார் போலிருக்கு கணவன்: எப்படி சொல்ற ராதா மனைவி: என் சர்க்கரை போடாத காபியை இப்படி புகழ்றாரே. ................................................................... கணவன்: அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். ...

ஆசிரியர் - மாணவன் jokes :)

Posted: 30 Aug 2014 12:09 PM PDT

மாணவன்: செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்? ஆசிரியர்: தரமாட்டேன். ஏன்? மாணவன்: நான் HOME WORK செய்யலை சார்! ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்... மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்... ஆங்கில ஆசிரியர்: இந்த வரியை தமிழ்ல மொழிப்பெயர்ச்சி பண்ணு "I SAW A FILM YESTERDAY" மாணவன்: நான் நேத்து 'ஏ' படம் பார்த்தேன் ஆசிரியர்: நீ எதுவரைக்கும் படிக்கு ஆைசபடுர மாணவன்: ஸ்கூல் பெல் அடிக்கர வரைக்கும் சார் ஆசிரியர்: ...

மீண்டும் இணைவதில் மிக்க மகிழ்ச்சி

Posted: 30 Aug 2014 12:04 PM PDT

நண்பர்களே நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஈகரையில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 30 Aug 2014 12:03 PM PDT

மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும்

Posted: 30 Aug 2014 11:50 AM PDT

அனைவருக்கும் வணக்கம்

         ஒரு விழாவிற்கு சிறப்புரையாற்ற "மூடும் பொய்மை இருள்" என்ற தலைப்பில் பேச சொல்லியிருக்கிறார்கள் (எனக்கு இல்லங்க நண்பனுக்கு). நானும் நெட்டுல தேடி தேடி பாத்துட்டேன் கிடைக்கவே மாட்டேங்குது. உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் அதற்கான தகவலை கொடுத்து உதவுங்களேன்.........

இப்படிக்கு,
உங்கள் மாணிக் நன்றி

3000 மதிப்பீடுகள் கடந்த கிருஷ்ணாம்மா...

Posted: 30 Aug 2014 11:37 AM PDT

3000 மதிப்பீடுகள் கடந்த நம் ஈகரை சமையல் ராணி கிருஷ்ணாம்மாவை வாழ்த்துவோம் வாங்க மென்மேலும் பல்லாயிரம் மதிப்பீடுகள் பெற மனமார்ந்த வாழ்த்துகள் கிருஷ்ணாம்மா

ஆண்டிராய்டு ஒன் - கூகுளின் மலிவு விலை ஸ்மார்ட் ஃபோன்கள்

Posted: 30 Aug 2014 11:15 AM PDT

இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தையைக் குறி வைத்து, ஆண்டிராய்டு ஒன் என்ற பெயரில் மலிவு விலை ஸ்மார்ட் ஃபோன்களைக் கூகுள் தயாரிக்கிறது. இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் சுந்தர் பிச்சை கூறும்போது, ஆண்டிராய்டு இயங்கு தளம் கொண்ட இந்த ஃபோன்கள் இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஃபோன்களின் திரை அளவு 4.5 அங்குலம் இருக்கும். இதில் இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்த இயலும். குறு நினைவகங்கள் (microSD card) வசதியுடன் பண்பலை வானொலிகளைக் கேட்கும் ...

மானிய சிலிண்டர்களை எந்த நேரத்திலும் வாங்கலாம்: கட்டுப்பாட்டை நீக்கியது மத்திய அரசு!

Posted: 30 Aug 2014 08:11 AM PDT

(28/08/2014) புதுடெல்லி: ஓராண்டுக்குரிய 12 சிலிண்டர்களை எந்த நேரத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், மாதத்துக்கு ஒரு சிலிண்டர்தான் வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் அரசு, ஆண்டுக்கு மானிய விலை சமையல் கேஸ் சிலிண்டர்கள் ஒன்பதுதான் வழங்கப்படும் என்று அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி சிலிண்டர்கள் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தியது. அதே சமயத்தில், ஒரு மாதத்துக்கு ஒரு சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும் ...

வாலிபரை கத்தியால் குத்தி செல்போன் பணம் பறிப்பு

Posted: 30 Aug 2014 04:01 AM PDT

வாலிபரை கத்தியால் குத்தி செல்போன் பணம் பறிப்பு பதிவு செய்த நேரம்:2014-08-30 12:47:19 மதுரை, : வாலிபரை கத்தியால் குத்தி செல்போன், பணத்தை பறித்துச் சென்ற, மர்ம நபர்களை தல்லாகுளம் போலீசார் தேடி வருகின்றனர். நரிமேடு மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த ரகுமான் (17). இவர், தனது நண்பர்கள் செல்வகுமார், பிரசாந்த், ரகுமான் ஆகியோருடன், நேற்று முன்தினம் இரவு தல்லாகுளத்தில் உள்ள தியேட்டருக்கு சினிமா பார்க்கச் சென்றார். படம் முடிந்து மூவரும், தியேட்டர் அருகில் உள்ள சந்தில் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது, ...

எபோலா மருத்துவ பரிசோதனை வெற்றி: குரங்கு பூரண குணமடைந்ததாக அறிவிப்பு!

Posted: 30 Aug 2014 03:56 AM PDT

(30/08/2014) கனடா: உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் எபோலா நோயை குணப்படுத்த கண்டறியப்பட்ட மருந்தை குரங்குக்கு செலுத்தி பரிசோதித்ததில் அது முழுமையாக குணமடைந்ததாகவும், மருத்துவ பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாகவும் மருத்துவ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். எபோலா நோய் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா, லைபீரியா, சியர்ராலோன், கினியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 1400 பேர் பலியாகி உள்ளனர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தாக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ...

கேள்விக்குறி-எஸ்.ராமகிருஷ்ணன்

Posted: 30 Aug 2014 03:47 AM PDT

ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சிரிக்கவும் பேசவும் அடையாளம் கண்டுகொள்ளவும் கற்றுக்கொள்கிற குழந்தை, அடுத்து ஆரம்பிப்பது கேள்வி கேட்பதைத்தான். வயது வளரவளர கேள்விகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. ஒரு யாத்ரீகன் தன் பயணவெளியில் தேடியடைந்ததை பதிவு செய்து வைக்கும்போது, காலத்தின் சித்திரக் கோடுகளை நமது பார்வைக்கு வைத்துவிடுகிறான். அந்தச் சித்திரம் விசித்திரமானதாக இருக்கும். ...

பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Posted: 30 Aug 2014 03:22 AM PDT

பதிவிறக்க கீழே உள்ள லிங்கை அழுத்துங்கள் 01 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 01 02 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 02 03 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 03 04 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 04 05 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 05 தொடரும்.... தமிழ்நேசன்

விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் விட்டவர்களையே உலகம் கண்டுகொள்கிறது...

Posted: 30 Aug 2014 02:54 AM PDT

கடும் கோபத்துடன் காணப்பட்டார் காலையில் நான் சந்தித்த நண்பர் ஒருவர் .... "என்ன?" வென்று கேட்டேன் .. நண்பர்கள் சிலர் அவரைக் கடுமையாக விமரிசித்து விட்டார்களாம்..அதனால்தான் இந்தக் கோபமாம்...!!! ...நான் அவரை அமைதிப்படுத்தினேன் ...நண்பர் கொந்தளிப்போடு கூறினார்... "அமைதியாக இருப்பதற்கு நான் ஒன்றும் அன்னை தெரசா அல்ல..".... நான் சிரித்தபடி கூறினேன்..."அன்னை தெரசா சந்திக்காத விமரிசனங்களா ..அவமானங்களா..?" நண்பர் அமைதியாய் என்னை உற்றுப் பார்த்துக் கேட்டார்.."மதர் தெரசா பற்றி விமரிசனங்களா..?" "வீட்டுக்குப் ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (305)

Posted: 30 Aug 2014 01:01 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Posted: 30 Aug 2014 01:00 AM PDT

கண்ணீர் அஞ்சலி .... ஒவ்வொரு முறையும் ஜோவிதாவிற்கு வாழ்த்து சொல்ல திரி துவங்கும் போதெல்லாம் அடுத்த வினாடி , பாலாஜியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில் கேட்ட அம்மாவின் விபத்து செய்தி தான் ஞாபகத்துக்கு வருகிறது .... இதோ இன்றுடன் இரண்டு வருடம் ஆகிவிட்டது இன்று ஜேன் அம்மாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் தனது தாயாரை இழந்து வாடும் அன்பு தம்பி ஜேனுக்கு & குடும்பத்தினர்களுக்கு  எங்களின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம். கால சக்கரம் எத்தனை வேகமாக சுழல்கிறது .... இதோ ...

ஈஸியா செய்யலாம் யோகா

Posted: 30 Aug 2014 12:55 AM PDT

தடாசனம் பாய் அல்லது கம்பள விரிப்பின் மீது கால்களை அரை அடி இடைவெளி விட்டு நிற்கவும். மெதுவாக குதிகால்களை உயர்த்தியபடி, கைகளை தலைக்கு மேல் உயர்த்திக் குவிக்கவும். முழங்கையை வளைக்கக் கூடாது. 10 எண்ணும் வரை இந்த நிலையில் நின்றுவிட்டு, பழைய நிலைக்கு வரவும். இப்படி ஆறு முறை செய்யவும். பிறகு, சிறிது நேரம் ஓய்வு எடுக்கவும். பலன்கள்: குதிகால் வலி நீங்கும். முதுகுவலி குணமாகும். கண்களுக்கு நல்லது. நினைவுத் திறன் அதிகரிக்கும். தொடர்ந்து செய்துவந்தால், உயரமாக வளரலாம். விரிக்சாசனம் பாய் ...

மறந்து ...!

Posted: 29 Aug 2014 08:50 PM PDT

மறந்து ...! காற்றை அடைத்த சந்தோசத்தில் சிரிக்கிறது பலூன் தான் விழப்போவதை மறந்து ...! மது அருந்திய சந்தோசத்தில் பறக்கிறது மனது தான் அழியப்போவதை மறந்து ....! புயல் அடித்த சந்தோசத்தில் கரை புரண்டது அலை தந்தான் சுனாமி என்பதை மறந்து ...! மழை அடித்த சந்தோசத்தில் இளைப்பாறும் தொழிலாளி தான் மண்ணோடு மண்ணாகப் போவதை மறந்து ...! வெயில் அடித்த சந்தோசத்தில் தேன் கொடுக்கும் பூக்கள் தான் உதிர்ந்து போவதை மறந்து ...!

மலை மேலே மந்திரப்பானை

Posted: 29 Aug 2014 07:16 PM PDT

மலை அடிவாரத்தில் அந்தச் சிறுவனின் வீடு இருந்தது. அவனுக்கு அப்பா இல்லை. அவர் இருந்தபோது நிறையச் சொத்துக்கள் இருந்தன. அந்தச் சொத்துக்களை, மலை உச்சியில் இருந்த ஒரு பணக்காரன் ஏமாற்றி எடுத்துக்கொண்டான். இப்போது, அவர்களிடம் இருப்பது, ஒரு பசு மட்டுமே. அம்மாவும் மகனும் சாப்பாட்டுக்கே மிகவும் சிரமப்பட்டனர். மகனை அழைத்த அம்மா, ''இந்தப் பசுவைப் பக்கத்தில் உள்ள நகரத்தில் விற்றுவிட்டு வா'' என்று அனுப்பினார். மாட்டின் கழுத்தில் கயிற்றைக் கட்டிகொண்டு சிறுவனும் கிளம்பினான். வழியில் ஓருவரைச் சந்தித்தான். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™