Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


33 சதவீதம் : போலீஸ் படையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு...: மாநில முதல்வர்களுக்கு மத்திய அரசு கடிதம்

Posted:

புதுடில்லி:போலீஸ் படையில், பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும்படி, அனைத்து மாநில முதல்வர்களுக்கும், மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்கார புகார்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை திறம்பட கையாளுவதற்கு, போலீஸ் துறையில் பெண்களின் பங்கு அவசியம் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.சமீபகாலமாக, பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
உ.பி., உள்ளிட்ட வட மாநிலங்களில், இத்தகைய சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள், ...

நேபாளத்தில் பிரதமர் நரேந்திர மோடி...உற்சாகம்: பாரம்பரிய உறவு குறித்து பார்லி.,யில் உரை

Posted:

காத்மாண்டு:அண்டை நாடான நேபாளத்திற்கு நேற்று சென்ற, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் விமான நிலையத்தில், பிரதமர் சுஷில் கொய்ராலா தலைமையில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேபாள பார்லிமென்டில் உற்சாகமாக, மகிழ்ச்சியாக உரையாற்றிய மோடி, 'இருநாட்டுக்கும் இடையேயான பாரம்பரிய உறவு, இமய மலையை விட பழமையானது' என, குறிப்பிட்டார்.கடந்த மே 26ல், பிரதமராக பொறுப்பேற்ற, நரேந்திர மோடி, தன் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக, அண்டை நாடுகளில் ஒன்றான பூடான் சென்றார். அதன் பின், தன் இரண்டாவது வெளிநாட்டு சுற்றுப்பயணமாக, மற்றொரு மிக நெருங்கிய அண்டை நாடான ...

கலக்கத்தை ஏற்படுத்தும் இன்சூரன்ஸ் மசோதா:பார்லி.,யில் மோடி அரசுக்கு முதல் நெருக்கடி

Posted:

பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசுக்கு, இன்சூரன்ஸ் மசோதா விஷயத்தில், முதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்சூரன்ஸ் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது.விரைவில் மசோதா:இன்சூரன்ஸ் துறையில், தற்போது 26 சதவீதம் வரை மட்டுமே, வெளிநாட்டு முதலீடு களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை, 49 சதவீதமாக உயர்த்தும் மசோதா, பார்லிமென்டில் கொண்டு வரப்படவுள்ளது.ராஜ்யசபாவில், இன்று, ...

துணை சபாநாயகர் பதவியை ஏற்க அ.தி.மு.க., மறுப்பு?:பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்

Posted:

லோக்சபா துணை சபாநாயகர் பதவியை, அ.தி.மு.க.,வுக்கு கொடுக்க, பா.ஜ., தரப்பு முன்வந்தும், அதை ஏற்க, அ.தி.மு.க., தரப்பு மறுத்து விட்டதாக, பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.பெரும்பான்மை இல்லாததால்...இது தொடர்பாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்ததாவது:லோக்சபா தேர்தலில், பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கு அடுத்ததாக, எம்.பி.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், மூன்றாவது இடம் பிடித்துள்ளது அ.தி.மு.க.,வே. அதே நேரத்தில், ராஜ்யசபாவில், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இல்லாததாலும், அ.தி.மு.க.,வுக்கு, 12 உறுப்பினர்கள் இருப்பதாலும், அ.தி.மு.க., உடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க, பா.ஜ., தலைவர் ...

சட்டசபையில் சிறப்பாக பேசிய எம்.எல்.ஏ.,க்களுக்கு பரிசு:வீட்டிற்கு அழைத்து கவுரவித்த விஜயகாந்த்

Posted:

சட்டசபையில் சிறப்பாக செயல்படும், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை, தன் வீட்டிற்கு அழைத்து, பணப்பரிசு வழங்கி, விஜயகாந்த் கவுரவித்து உள்ளார்.அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணியில் பிளவு ஏற்பட்ட பின், சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை, விஜயகாந்த் தவிர்த்து வருகிறார். சட்டசபை நடக்கும் ஏதாவது ஒரு நாளில், அங்கு சென்று கையெழுத்திட்டு விட்டு செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளார். அதே நேரத்தில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என, விரும்புகிறார்.விவாதம்:தற்போது, சட்டசபையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதில், ...

மா.செ.,க்கள் வீட்டில் கட்சி தேர்தல்:அறிவாலயத்தில் குவியுது புகார்

Posted:

தி.மு.க.,வில் நடந்து வரும் உள்கட்சித் தேர்தலில், மாவட்ட செயலர்கள் வைத்தது தான் சட்டம் என்ற நிலை காணப்படுவதால், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், திருச்சி, விருதுநகர், துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து, ஏராளமான புகார் மனுக்கள், அறிவாலயத்திற்கு வந்து குவிந்துள்ளன.ஒன்றிய, நகரச் செயலர் பதவிகளுக்கு யார் யாரை நியமிக்க வேண்டும் என்பதை, முடிவு செய்துள்ள மாவட்ட செயலர்கள், அதற்கான பட்டியலை தயாராக வைத்துள்ளனர். கட்சிப் பொருளாளர் ஸ்டாலின் ஒப்புதலுடன், இந்த பட்டியல் படி நிர்வாகிகள் தேர்வு நடத்தப்படுவதாக, தி.மு.க.,வினர் குற்றம் ...

மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண ரூ.500 கோடி திட்டம்:மாதிரி வரைவு சமர்ப்பிப்பு: செயல்படுத்துமா மத்திய அரசு?

Posted:

'தமிழக மீனவர்களை சிறைபிடிக்கும் நிகழ்வுக்கு தீர்வு காண, ஆழ்கடல் மீன்பிடித்தலை ஊக்கப்படுத்தும் வகையில், 500 கோடி ரூபாயில், சிறப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்' என, தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான திட்ட வரைவும், அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே, பிரச்னை துவங்கிய போதே (1983), தமிழக மீனவர்களின் நிம்மதி பறிபோனது. புலிகளுக்கு டீசல், ஆயுதம் சப்ளை செய்வதாக தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்தது. போர் முடிவுக்கு வந்த பின் (2009), இப்பிரச்னை, வேறு மாதிரியாக திசை ...

திடுக்கிட வைக்கும் திருப்பூர்; ஆறு மாதத்தில் 135ர் தற்கொலை!

Posted:

திருப்பூர்:திருப்பூரில், கடந்த ஆறு மாதத்தில், ௯௦ ஆண்கள், ௩௯ பெண்கள் உள்பட 135 பேர் தற்கொலை செய்துகொண்டனர். வந்தாரை வாழவைக்கும் திருப்பூர், தமிழக அளவில் தற்கொலை துயரில் முதல் நகரமாக மாறிவிட்டது.வேலைவாய்ப்பின்றி திக்கற்று அலையும் எண்ணற்ற வெளிமாநிலத்தவருக்கும் தமிழகத்தின் பிற மாவட்டத்தினருக்கும், வாழ்வளித்து, வந்தாரை வாழ வைக்கும் நகரமாக விளங்குகிறது திருப்பூர்.இதனால், நாள்தோறும் பல ஆயிரம் பேர் புதிது புதிதாக இந்நகரை நோக்கி படையெடுக்கின்றனர். அதற்கேற்ப, குற்றம் மற்றும் பிரச்னைகளும் திருப்பூரில் அதிகரித்துள்ளன. குறிப்பாக, தற்கொலைச் சாவுகள் ...

ரயில் சாப்பாட்டில் கரப்பான் பூச்சி:ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு ரூ.௧ லட்சம் அபராதம்

Posted:

புதுடில்லி:கோல்கட்டா ராஜதானி ரயிலில், பயணிக்கு வழங்கப் பட்ட உணவில் கரப்பான் பூச்சி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஐ.ஆர்.சி.டிசி.,க்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கடுமையான நடவடிக்கை:ரயில் பயணிகளுக்கு உணவு தயாரித்து வழங்கும் பணி, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. ரயில்களில் வழங்கப்படும் உணவுகள், தரமற்றவையாக இருப்பதாக புகார்கள் வந்ததை அடுத்து, தற்போது பொறுப்பேற்றுள்ள பா.ஜ., தலைமையிலான அரசு, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.ரயில்களில் பயணிகளுக்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™