Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கல்வித் தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு
- திருவண்ணாமலையில் திமுக பொதுக் கூட்டம்
- மின்துறை பணியாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு
- கோயில் இடிப்பு வழக்கு: 6 பேர் கைது
- மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கல்
- நூலகத்தில் உறுப்பினர்கள் சேர்ப்பு
- ஆதிதிராவிடர் நல அலுவலரை மிரட்டி 10 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
- உயிரி வேதியியல் துறை கருத்தரங்கம்
- பைக் மோதி முதியவர் சாவு
- ஜைன துறவி கேசலோசனத் பெருவிழா
- செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
- "மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தால் 1,779 பேர் பயன்'
- காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸில் வெள்ளிப் பதக்கம் அமல்ராஜின் சொந்த கிராமத்தில் கொண்டாட்டம்
- படவேடு கிராமத்தில் விரைவில் வேளாண் விளைபொருள்களுக்கான கிடங்கு
- ஆரணி நகர, வட்டார வாணியர் பேரவை தொடக்கம்
- பிரதமர், முதல்வர் குறித்து அவதூறு:ராஜபட்ச மன்னிப்பு கோர வேண்டும்
- ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்: மீட்புப் பணிகள் தீவிரம்
- சிவில் லைன்ஸ் பகுதியில் சிசிடிவி கேமராக்கள்
- சார்க் வளர்ச்சி வங்கி அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும்
- கேரள ஆளுநர் பதவியில் இருந்து ஷீலா தீட்சித்தை நீக்க வேண்டும்
- புதுக்கோட்டை
- நீதிபதிகள் நியமன ஆணையத்தின் கட்டமைப்பு: மத்திய அரசு பரிசீலனை
- கர்நாடக பேரவை இடைத் தேர்தல்: காங்கிரஸ்- பாஜக இடையே நேரடிப் போட்டி
- சீனாவில் தீவிரவாதிகள் தாக்குதல்: 37 பேர் பலி
- 157 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகள்: மத்திய அரசு தகவல்
- முசாஃபர்நகர்: குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனு தள்ளுபடி
- பள்ளிகளில் கீதை, மகாபாரதம்: நீதிபதியின் கருத்துக்கு கட்ஜு எதிர்ப்பு
- திருநங்கைகளுக்கு தனி அடையாளம்: ம.பி. அரசு பரிந்துரை
- பசு வதைத் தடுப்பு மசோதா: மத்திய அமைச்சர் மழுப்பல்
- விமானக் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை: விரைவில் மசோதா தாக்கல்
- புணே நிலச்சரிவு: பலி 87ஆக உயர்வு
- காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு கவனத்துடன் கையாள்கிறது: கிரண் ரிஜிஜு
- மழைக் காலத்துக்குள் தொடங்குமா தூர்வாரும் பணி?
- காமநாயக்கன்பட்டியில் புதிய தேர் வெள்ளோட்டம்
- செஸ்: கோவில்பட்டி பள்ளி சாதனை
- தூத்துக்குடியில் கஞ்சிக் கலய ஊர்வலம்
- அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
- ஆடிப் பெருக்கு: பெண்கள் சிறப்பு வழிபாடு
- கோத்ரா: மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றது மத்திய அரசு
- தேனி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை மாற்றியதாக புகார்
- உத்தமபாளையம்: பெண் தற்கொலை
- கரந்தமலை அடிவாரத்தில் காவல்துறையினர் கண்காணிப்பு
- வரி வசூலில் மோசடி: வருவாய் ஆய்வாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு
- ஆகஸ்ட் 5 மின் தடை
- இலக்கியச் சங்கமம்
- பாலிடெக்னிக்கில் அறிவியல் கண்காட்சி
- "தமிழக கல்வெட்டுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்'
- பெட்ரோல் பங்கில் பள்ளி பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதல்
- குடிநீர் பிடிப்பதில் தகராறு: பெண் காவலர் பணியிடை நீக்கம்
- ரயில் நிலையத்தில் துப்புரவுப் பணி
- பெற்றோர், ஆசிரியர் கழகக் கூட்டம்
- ஜனநாயக மாதர் சங்க மாவட்ட மாநாடு
- அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 11 பேர் கைது
- ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு பூஜை
- பெண்ணிடம் நகை பறிப்பு
- சத்துணவு ஊழியர் பேரவைக் கூட்டம்
- பெண் தற்கொலை
- ராமேசுவரத்திலிருந்து கூடுதல் ரயில்களை இயக்கக் கோரிக்கை
- மகளிர் கால்பந்து: மாநில போட்டிக்கு 9 பேர் தேர்வு
- குறுவட்டார சதுரங்கப் போட்டி:1899 மாணவர்கள் பங்கேற்பு
- பள்ளியில் பரிசளிப்பு விழா
- வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் மோசடி
- கொடைக்கானலில் பாமக ஆலோசனைக் கூட்டம்
- கொடைக்கானலில் கஞ்சா செடி பயிரிட்ட இருவர் கைது
- வறட்சியால் கருகும் மரங்கள்: விவசாயிகள் கவலை
- மாணவர்களுக்கான இலக்கியப் போட்டி
- கொலை மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு
- அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: 3 பேர் கைது
- சேதமடைந்துள்ள குழந்தைகள் வளர்ச்சி மையம் சீரமைக்கப்படுமா?
- வீரராகவபுரம் ஏரியில் புதிய ஆக்கிரமிப்புகள்
- 4 மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள வார்டு அலுவலகங்கள்
- ஸ்ரீ பூர்ணா புஷ்கலா ஸமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர சுவாமி திருக்கல்யாணம்
- ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் திரையுலக நூற்றாண்டு விழா
- வரலாற்றில் விழுப்புரம் மாவட்ட ஊர்கள்
- பாண்டி முனீஸ்வரர் கோயில் பால் குட திருவிழா
- அலுவலக உதவியாளர், பண்டக உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை
- தூக்கிலிடுபவரின் குறிப்புகள்
- அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும்: மாவட்டச் செயலாளர்
- தரமான கட்டடங்களுக்கு குஜராத்தை பின்பற்ற கோரிக்கை
- முத்தமிழ் கலை இலக்கிய சங்கக் கூட்டம்
- பசுந்தீவன உற்பத்திக்கு மானியம்: விவசாயிகளுக்கு அழைப்பு
- ஆடி 18-ஆம் பெருக்கு: போடி கொட்டகுடி ஆற்றில் பெண்கள் சிறப்புப் பூஜை
- ஸ்ரீஅரவிந்தர் - ஸ்ரீஅன்னையின் பொன்மொழிகள்
- குறுவட்ட விளையாட்டுப் போட்டி
- விநாயகர் சதூர்த்தி விழாவுக்கு 65 சிலைகள் பிரதிஷ்டை: இந்து முன்னணி முடிவு
- புலியின் நிழலில்
- பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு
- நாகர்கோவில்
- 171 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
- பட்டப்பகலில் வீடு புகுந்து 11 பவுன் தங்கநகை திருட்டு
- அகில இந்திய வர்த்தக தொழில் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
- மதுராந்தகம் காவல் நிலையத்தில் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு
- அம்பத்தூரில் 4 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
- கொலை வழக்கு: குண்டர் சட்டத்தின்கீழ் இளைஞர் கைது
- ஓடும் காரில் சிறுமி பலாத்காரம்: மூவர் கைது
- 5,724 மதுபாட்டில்கள் பறிமுதல்
- மதுபாட்டில் விற்றவர் கைது
- தமிழ்ச் சமூக மரபும் மாற்றமும்
- மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
- தேனி அருகே குப்பை கிடங்கால் சுற்றுச் சூழல் பாதிப்பு: பாலிதீன் காடுகளான விளை நிலங்கள்
கல்வித் தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு Posted: 03 Aug 2014 12:34 PM PDT கல்வித்தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு வருவாய்க் கிராம ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
திருவண்ணாமலையில் திமுக பொதுக் கூட்டம் Posted: 03 Aug 2014 12:34 PM PDT திருவண்ணாமலை, திருவள்ளுவர் சிலை பகுதியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்ற முன்னாள் தலைவர் இரா.ஸ்ரீதரன் தலைமை வகித்தார். கட்சியின் ஒன்றியச் |
மின்துறை பணியாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு Posted: 03 Aug 2014 12:34 PM PDT திருவண்ணாமலையில் மின்சாரத் துறை பணியாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் நடைபெற்றது. |
கோயில் இடிப்பு வழக்கு: 6 பேர் கைது Posted: 03 Aug 2014 12:34 PM PDT திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஸ்ரீரமணாஸ்ரமம் எதிரேயிருந்த ஸ்ரீமார்கண்டேஸ்வரர் கோயில் இடிப்பு வழக்கில் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். |
மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கல் Posted: 03 Aug 2014 12:33 PM PDT திருவண்ணாமலை மாவட்ட தீபம் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் பள்ளி மாணவ-மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டன. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான |
நூலகத்தில் உறுப்பினர்கள் சேர்ப்பு Posted: 03 Aug 2014 12:33 PM PDT திருவண்ணாமலை கானா நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற விழாவில், மாணவர்கள் 24 பேர் திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினர்களாக இணைந்தனர். |
ஆதிதிராவிடர் நல அலுவலரை மிரட்டி 10 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு Posted: 03 Aug 2014 12:33 PM PDT திருவண்ணாமலையில் வீட்டில் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரிடம் இருந்து பத்தரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். |
உயிரி வேதியியல் துறை கருத்தரங்கம் Posted: 03 Aug 2014 12:33 PM PDT திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிரி வேதியியல் துறை சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. |
Posted: 03 Aug 2014 12:32 PM PDT வந்தவாசி அருகே பைக் மோதியதில், நடந்து சென்ற முதியவர் சனிக்கிழமை உயிரிழந்தார். |
Posted: 03 Aug 2014 12:32 PM PDT ஜைன துறவி முனிமகராஜின் தலை மற்றும் முகத்திலுள்ள முடியை கையால் பிடுங்கும் நிகழ்ச்சியான கேசலோசத் பெருவிழா ஆரணி கொசப்பாளையம் ஆதிநாதர் ஜினாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை |
செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா Posted: 03 Aug 2014 12:32 PM PDT வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீசெல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
"மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தால் 1,779 பேர் பயன்' Posted: 03 Aug 2014 12:32 PM PDT திருவண்ணாமலையில் இயங்கி வரும் மகளிர் தையல் மேம்பாட்டு குடிசைக் கூட்டுறவு சங்கம் மூலம் 1,779 பேர் பயன்பெற்று வருகின்றனர் என மாவட்ட சமூக நல அலுவலர் ச.உமையாள் கூறினார். |
காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸில் வெள்ளிப் பதக்கம் அமல்ராஜின் சொந்த கிராமத்தில் கொண்டாட்டம் Posted: 03 Aug 2014 12:31 PM PDT காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அமல்ராஜின் சொந்த கிராமமான தச்சாம்பாடியில் மக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். |
படவேடு கிராமத்தில் விரைவில் வேளாண் விளைபொருள்களுக்கான கிடங்கு Posted: 03 Aug 2014 12:31 PM PDT படவேடு கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண் பொருள்கள் கிடங்கு விரைவில் அமைக்கப்படவுள்ளது என வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறினார். |
ஆரணி நகர, வட்டார வாணியர் பேரவை தொடக்கம் Posted: 03 Aug 2014 12:31 PM PDT ஆரணி நகர, வட்டார வாணியர் பேரவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இப்பேரவையை தமிழ்நாடு வாணியர் பேரவையின் நிறுவனத் தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் துவக்க |
பிரதமர், முதல்வர் குறித்து அவதூறு:ராஜபட்ச மன்னிப்பு கோர வேண்டும் Posted: 03 Aug 2014 12:31 PM PDT பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு செய்தியை வெளியிட்ட இலங்கை அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். இதுதொடர்பாக இலங்கை அதிபர் ராஜபட்ச பகிரங்க |
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்: மீட்புப் பணிகள் தீவிரம் Posted: 03 Aug 2014 12:30 PM PDT கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க தீயணைப்புப் படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். |
சிவில் லைன்ஸ் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் Posted: 03 Aug 2014 12:30 PM PDT தில்லி சிவில் லைன்ஸ் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், இந்தப் பகுதி குடியிருப்புவாசிகளின் உதவியுடன் இவை |
சார்க் வளர்ச்சி வங்கி அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் Posted: 03 Aug 2014 12:30 PM PDT சார்க் வளர்ச்சி வங்கி அமைக்கும் நடைமுறைகளை தெற்காசிய நாடுகள் விரைவுபடுத்த வேண்டும் என்று நேபாளம் கேட்டுக் கொண்டுள்ளது. |
கேரள ஆளுநர் பதவியில் இருந்து ஷீலா தீட்சித்தை நீக்க வேண்டும் Posted: 03 Aug 2014 12:29 PM PDT ஊழல் குற்றம்சாட்டப்பட்டுள்ள தில்லி முன்னாள் முதல்வரான ஷீலா தீட்சித்தை, கேரள மாநில ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தில்லி பிரதேச பாஜக வலியுறுத்தியுள்ளது. |
Posted: 03 Aug 2014 12:29 PM PDT |
நீதிபதிகள் நியமன ஆணையத்தின் கட்டமைப்பு: மத்திய அரசு பரிசீலனை Posted: 03 Aug 2014 12:26 PM PDT நீதிபதிகள் நியமன ஆணையத்தின் கட்டமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. |
கர்நாடக பேரவை இடைத் தேர்தல்: காங்கிரஸ்- பாஜக இடையே நேரடிப் போட்டி Posted: 03 Aug 2014 12:22 PM PDT கர்நாடகத்தில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வருகிற 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ்- பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. |
சீனாவில் தீவிரவாதிகள் தாக்குதல்: 37 பேர் பலி Posted: 03 Aug 2014 12:22 PM PDT சீனாவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஜின்ஜியாங் மாகாணத்தில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் 37 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது. |
157 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகள்: மத்திய அரசு தகவல் Posted: 03 Aug 2014 12:21 PM PDT கடந்த பத்து ஆண்டுகளில் 157 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
முசாஃபர்நகர்: குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனு தள்ளுபடி Posted: 03 Aug 2014 12:20 PM PDT உத்தரப் பிரதேச மாநிலத்தில், முசாஃபர்நகர் கலவரம் தொடர்பான வழக்கில், கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனுவை மாவட்ட நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்துவிட்டது. |
பள்ளிகளில் கீதை, மகாபாரதம்: நீதிபதியின் கருத்துக்கு கட்ஜு எதிர்ப்பு Posted: 03 Aug 2014 12:19 PM PDT "நான் மட்டும் சர்வாதிகாரியாக இருந்திருந்தால், பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் இருந்தே பகவத் கீதை, மகாபாரதம் ஆகியவற்றை கட்டாயப் பாடமாகக் கொண்டு வந்திருப்பேன்' என உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.தவே கூறியதற்கு பிரஸ் கவுன்சில் தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். |
திருநங்கைகளுக்கு தனி அடையாளம்: ம.பி. அரசு பரிந்துரை Posted: 03 Aug 2014 12:18 PM PDT ஆண்கள், பெண்களின் பெயருக்கு முன்பாக மரியாதைக்காக பயன்படுத்தப்படும் "Mr', "Mrs', "Ms' அடையாளங்களைப் போன்று, திருநங்கைகளின் பெயருக்கு முன்பாக "Tgr' (டிரான்ஸ்ஜெண்டர்) என்ற அடையாளத்தை பயன்படுத்த மத்தியப் பிரதேச அரசு பரிந்துரை செய்துள்ளது. |
பசு வதைத் தடுப்பு மசோதா: மத்திய அமைச்சர் மழுப்பல் Posted: 03 Aug 2014 12:17 PM PDT பசுக்களைப் பாதுகாப்பதற்காக "தேசிய கோகுல் மிஷன்' என்ற திட்டத்தை கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங், பசு வதைத் தடுப்பு மசோதா குறித்து மழுப்பலாகப் பதிலளித்தார். |
விமானக் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை: விரைவில் மசோதா தாக்கல் Posted: 03 Aug 2014 12:15 PM PDT விமானக் கடத்தல் தடுப்பு சட்டத்திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. |
புணே நிலச்சரிவு: பலி 87ஆக உயர்வு Posted: 03 Aug 2014 12:13 PM PDT மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் உள்ள மாலின் கிராமத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 87ஆக அதிகரித்தது. |
காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு கவனத்துடன் கையாள்கிறது: கிரண் ரிஜிஜு Posted: 03 Aug 2014 12:13 PM PDT ""காஷ்மீர் விவகாரம் உணர்வுபூர்வமானது, அதனை மத்திய அரசு கவனத்துடன் கையாள்கிறது'' என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். |
மழைக் காலத்துக்குள் தொடங்குமா தூர்வாரும் பணி? Posted: 03 Aug 2014 12:12 PM PDT ஏறத்தாழ 8 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க வசதி உள்ள போதிலும் நீண்ட நாள்களாக தூர்வாரப்படாததால் தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அணையை தூர்வாருவதில் உள்ள பிரச்னைகளை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என விவசாயிகள் |
காமநாயக்கன்பட்டியில் புதிய தேர் வெள்ளோட்டம் Posted: 03 Aug 2014 12:12 PM PDT காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்தில் புதிய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
Posted: 03 Aug 2014 12:11 PM PDT கோவில்பட்டி குறுவட்ட அளவிலான செஸ் போட்டியில் இலக்குமி ஆலை கிழக்கு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியர் சாதனை படைத்துள்ளனர். |
தூத்துக்குடியில் கஞ்சிக் கலய ஊர்வலம் Posted: 03 Aug 2014 12:11 PM PDT தூத்துக்குடியில் ஆடிப்பூர விழாவையொட்டி, மேலூர் சக்தி பீடத்தில் மழைவளம் வேண்டியும், இயற்கைச் சீற்றங்கள் தனிய வேண்டியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கஞ்சிக் கலய ஊர்வலத்தில் |
அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 03 Aug 2014 12:11 PM PDT ஆறுமுகனேரி அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. |
ஆடிப் பெருக்கு: பெண்கள் சிறப்பு வழிபாடு Posted: 03 Aug 2014 12:11 PM PDT உத்தமபாளையம் முல்லைப்பெரியாற்றின் கரையில் ஆடி 18 ஆம் பெருக்கை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். |
கோத்ரா: மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றது மத்திய அரசு Posted: 03 Aug 2014 12:10 PM PDT குஜராத் மாநிலம், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் தொடர்பாக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றது. |
தேனி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை மாற்றியதாக புகார் Posted: 03 Aug 2014 12:10 PM PDT தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழுந்தையை மாற்றி வழங்கியதாக புகார் கூறியவர் மருத்துவமனை நிர்வாகத்தின் விசாரணைக்கு பின் குழந்தை தன் குழந்தைதான் என ஏற்றுக்கொண்டார். |
Posted: 03 Aug 2014 12:10 PM PDT உத்தமபாளையம் அடுத்துள்ள வாய்க்கால்பட்டியில் பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். ராஜபாளையம் அருகே மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் ஞானகுருசாமி மனைவி |
கரந்தமலை அடிவாரத்தில் காவல்துறையினர் கண்காணிப்பு Posted: 03 Aug 2014 12:10 PM PDT நத்தம் அருகே கரந்தை மலைப்பகுதியில் மர்மக்கும்பல் நடமாட்டைத்தையடுத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். |
வரி வசூலில் மோசடி: வருவாய் ஆய்வாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு Posted: 03 Aug 2014 12:09 PM PDT வரி வசூல் செய்வதில் மோசடி செய்ததாக, பழனி நகராட்சி வருவாய் ஆய்வாளர் உள்பட 4 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
Posted: 03 Aug 2014 12:09 PM PDT வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி, செவ்வாய்க்கிழமை மின்விநியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார். |
Posted: 03 Aug 2014 12:09 PM PDT மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா-2014 - சிந்தனை அரங்க சிறப்பு நிகழ்ச்சிகள். 4.8.14 பங்கேற்பு: புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி; 5.8.14 பங்கேற்பு: |
பாலிடெக்னிக்கில் அறிவியல் கண்காட்சி Posted: 03 Aug 2014 12:09 PM PDT திண்டுக்கல் ஸ்ரீரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரி அறிவியல் மன்றம் சார்பில், 2 நாள் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. |
"தமிழக கல்வெட்டுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்' Posted: 03 Aug 2014 12:08 PM PDT தமிழகத்தில் காணப்படும் கல்வெட்டுகள் அனைத்தையும் மறுஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் என பேராசிரியர் க. திருமாறன் தமிழ் ஆர்வலர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் கேட்டுக் கொண்டார். |
பெட்ரோல் பங்கில் பள்ளி பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதல் Posted: 03 Aug 2014 12:08 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை ஆம்னி பேருந்து, பெட்ரோல் நிரப்பும் நிலையத்துக்குள் புகுந்து அங்கு நின்று கொண்டிருந்த தனியார் பள்ளி பேருந்து மீது மோதியது. இதில் இரு பேருந்துகளும் சேதம் அடைந்தன. |
குடிநீர் பிடிப்பதில் தகராறு: பெண் காவலர் பணியிடை நீக்கம் Posted: 03 Aug 2014 12:07 PM PDT விருதுநகர் அருகே சூலக்கரையைச் சேர்ந்தவர் லட்சுமணன் (42). இவர் மதிமுக மாவட்ட துணைச் செயலராக உள்ளார். இவரது மனைவி ஞானமணிக்கும் (40), பக்கத்து வீட்டைச் சேர்ந்த |
ரயில் நிலையத்தில் துப்புரவுப் பணி Posted: 03 Aug 2014 12:07 PM PDT சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் சிவகாசி ரயில் நிலையத்தில் துப்புரவுப் பணி நடைபெற்றது. ரயில் நிலைய கண்காணிப்பாளர் ஆர். ராதாகிருஷ்ணன் பணியை |
பெற்றோர், ஆசிரியர் கழகக் கூட்டம் Posted: 03 Aug 2014 12:07 PM PDT திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை பாரதமணி |
ஜனநாயக மாதர் சங்க மாவட்ட மாநாடு Posted: 03 Aug 2014 12:06 PM PDT அருப்புக்கோட்டை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 14ஆவது மாவட்ட மாநாடு வெள்ளைக்கோட்டை பகுதில் உள்ள ராஜா மகாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் குழு |
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 11 பேர் கைது Posted: 03 Aug 2014 12:06 PM PDT விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சுப்பிரமணியாபுரம் பகுதியில் உள்ள தாற்காலிகமாக பட்டாசு தயாரிக்க அனுமதி ரத்து செய்யப்பட்ட பட்டாசு தொழிற்சாலையில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக, |
ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு பூஜை Posted: 03 Aug 2014 12:06 PM PDT மழை பெய்ய வேண்டி, கமுதி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப் பெருக்கு சிறப்பு பூஜைகள், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. சிறப்பு வேள்வி பூஜைகளும், அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு |
Posted: 03 Aug 2014 12:05 PM PDT திருவாடானை பாரதி நகரைச் சேர்ந்தவர் டானியா(30). இவர் சனிக்கிழமை மாலை திருவாடானை நீதிமன்றத்திற்குச் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். திருவாடானை தெப்பக்குளம் |
சத்துணவு ஊழியர் பேரவைக் கூட்டம் Posted: 03 Aug 2014 12:05 PM PDT சத்துணவு மைய ஊழியர்களுக்கு ஒட்டு மொத்த ஓய்வூதியத்தை, ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஊழியர் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
Posted: 03 Aug 2014 12:05 PM PDT கமுதி பேரையூர் காவல் நிலைய சரகம், செங்கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி வெள்ளையம்மாள்(35). பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் வீட்டில் |
ராமேசுவரத்திலிருந்து கூடுதல் ரயில்களை இயக்கக் கோரிக்கை Posted: 03 Aug 2014 12:04 PM PDT மதுரையிலிருந்து வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களை ராமேசுவரத்திலிருந்து இயக்க வேண்டும் என ராமேசுவரம் யாத்திரைப் பணியாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தில் |
மகளிர் கால்பந்து: மாநில போட்டிக்கு 9 பேர் தேர்வு Posted: 03 Aug 2014 12:04 PM PDT மகளிர் கால்பந்துப் போட்டியில் மாநில அளவில் விளையாட ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 9 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் தபசம்.பர்வீன் சனிக்கிழமை தெரிவித்தார். |
குறுவட்டார சதுரங்கப் போட்டி:1899 மாணவர்கள் பங்கேற்பு Posted: 03 Aug 2014 12:04 PM PDT ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 இடங்களில் நடந்த குறுவட்டார சதுரங்கப் போட்டியில் மாணவ-மாணவிகள் 1899 பேர் பங்குபெற்றனர் என மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ். பிரசாத் தெரிவித்தார். |
Posted: 03 Aug 2014 12:04 PM PDT பெரியபட்டிணத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பெரியபட்டிணம் அல்கலம் பள்ளியில் நடைபெற்றது. |
வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் மோசடி Posted: 03 Aug 2014 12:03 PM PDT வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3.30 லட்சம் மோசடி செய்ததாக, சென்னையைச் சேர்ந்த 3 பேர் மீது திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். |
கொடைக்கானலில் பாமக ஆலோசனைக் கூட்டம் Posted: 03 Aug 2014 12:03 PM PDT கொடைக்கானலில் பாமக புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகரச் செயலர் முருகன் தலைமை வகித்தார். மாநில சிறுபான்மை பிரிவு பொதுச் செயலர் |
கொடைக்கானலில் கஞ்சா செடி பயிரிட்ட இருவர் கைது Posted: 03 Aug 2014 12:03 PM PDT கொடைக்கானலில் கஞ்சா செடி பயிரிட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்; மேலும் தலைமறைவான 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். |
வறட்சியால் கருகும் மரங்கள்: விவசாயிகள் கவலை Posted: 03 Aug 2014 12:02 PM PDT திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே விருவீடு பகுதியில் தொடரும் வறட்சியியால் மரங்கள் கருகிவருகின்றன. |
மாணவர்களுக்கான இலக்கியப் போட்டி Posted: 03 Aug 2014 12:02 PM PDT திமுக சார்பில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள் வேடசந்தூரில் சனிக்கிழமை நடைபெற்றன. |
கொலை மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு Posted: 03 Aug 2014 12:02 PM PDT பழனியில் இஸ்லாமிய இளைஞர் பேரவையை கலைக்க கொலைமிரட்டல் விடுத்த நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பழனி அருகே எம்ஜிஆர் நகரில் மதினா மஸ்ஜித் செயல்பட்டு வருகிறது. |
அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: 3 பேர் கைது Posted: 03 Aug 2014 12:02 PM PDT அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியதாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அதில் மூவரை கைது செய்துள்ளனர். |
சேதமடைந்துள்ள குழந்தைகள் வளர்ச்சி மையம் சீரமைக்கப்படுமா? Posted: 03 Aug 2014 12:01 PM PDT திருவள்ளூர் அருகே கடுமையாக சேதமடைந்துள்ள குழந்தைகள் வளர்ச்சி மையத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
வீரராகவபுரம் ஏரியில் புதிய ஆக்கிரமிப்புகள் Posted: 03 Aug 2014 12:01 PM PDT திருவள்ளூர் அருகே உள்ள வீராகவபுரம் ஏரியில் புதிதாக உருவாகும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். |
4 மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள வார்டு அலுவலகங்கள் Posted: 03 Aug 2014 12:01 PM PDT சென்னை அம்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு அலுவலகங்கள் கடந்த 4 மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளன. |
ஸ்ரீ பூர்ணா புஷ்கலா ஸமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர சுவாமி திருக்கல்யாணம் Posted: 03 Aug 2014 12:01 PM PDT பரமக்குடி தரைப்பாலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா கோயிலில் சென்னையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களின் சார்பில் ஸ்ரீ பூர்ணா புஷ்கலா ஸமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர சுவாமி திருக்கல்யாணம் வைபவம் ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ ஹரிஹரபுத்ரன் ஸ்ரீ ஐயப்ப பெருமானுடைய திவ்யகுண லீலைகளை சம்பிரதாய பஜனை |
ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் திரையுலக நூற்றாண்டு விழா Posted: 03 Aug 2014 12:00 PM PDT ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் திரையுலக நூற்றாண்டு விழா கனகமணி வாகன வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை கவிஞர் இரா.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் தலைவர் மை.அப்துல்சலாம் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் வைகிங்.எம்.எஸ்.கருணாநி |
வரலாற்றில் விழுப்புரம் மாவட்ட ஊர்கள் Posted: 03 Aug 2014 12:00 PM PDT வரலாற்றில் விழுப்புரம் மாவட்ட ஊர்கள் - கோ.செங்குட்டுவன்; பக்.258; ரூ.200; பி.எஸ்.பப்ளிகேஷன், 20-5.சி.கந்தசாமி லே -அவுட், 2 வது தெரு, கன்னியாகுளம் சாலை, விழுப்புரம்-605 046. |
பாண்டி முனீஸ்வரர் கோயில் பால் குட திருவிழா Posted: 03 Aug 2014 12:00 PM PDT திருவாடானை தாலுகா திருவிடைமருதூர் பாண்டி முனீஸ்வரர் கோயில் ஆடித்திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். |
அலுவலக உதவியாளர், பண்டக உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை Posted: 03 Aug 2014 12:00 PM PDT புள்ளியியல் அலுவலகத்துக்கு அலுவலக உதவியாளர் பணிக்கும், சென்னையில் உள்ள மத்திய பண்டக சாலை அலுவலகத்துக்கு பண்டக உதவியாளர் பணிக்கும் பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதாக ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் |
Posted: 03 Aug 2014 12:00 PM PDT தூக்கிலிடுபவரின் குறிப்புகள் - சசி வாரியர்; தமிழில்: இரா.முருகவேள்; பக். 272; ரூ.220; எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி- 642002. |
அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும்: மாவட்டச் செயலாளர் Posted: 03 Aug 2014 12:00 PM PDT அதிமுக அரசின் நல்ல திட்டங்களைப் பார்த்து இந்த ஆட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே, அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக மீண்டும் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதற்கான அறிகுறி என மாவட்டச் செயலர் சிறுணியம் பலராமன் பேசினார். |
தரமான கட்டடங்களுக்கு குஜராத்தை பின்பற்ற கோரிக்கை Posted: 03 Aug 2014 11:59 AM PDT தமிழகத்தில் தரமான கட்டடங்கள் உருவாக குஜராத் மாநில அரசு பின்பற்றும் திட்டங்களை தமிழக அரசு பின்பற்ற வேண்டும் என்று கட்டுமானப் பொறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
முத்தமிழ் கலை இலக்கிய சங்கக் கூட்டம் Posted: 03 Aug 2014 11:59 AM PDT முத்தமிழ் கலை இலக்கிய சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது. |
பசுந்தீவன உற்பத்திக்கு மானியம்: விவசாயிகளுக்கு அழைப்பு Posted: 03 Aug 2014 11:59 AM PDT பசுந்தீவன உற்பத்திக்கு மானியம் அறிவித்துள்ள நிலையில் பயிரிட விருப்பமுள்ள விவசாயிகள் கால்நடை உதவி மருத்துவரைத் தொடர்பு கொள்ளலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் அறிவித்துள்ளார். |
ஆடி 18-ஆம் பெருக்கு: போடி கொட்டகுடி ஆற்றில் பெண்கள் சிறப்புப் பூஜை Posted: 03 Aug 2014 11:59 AM PDT ஆடி 18-ஆம் பெருக்கு தினத்தை முன்னிட்டு போடி கொட்டகுடி ஆற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சிறப்புப் பூஜை செய்து வழிபட்டனர். |
ஸ்ரீஅரவிந்தர் - ஸ்ரீஅன்னையின் பொன்மொழிகள் Posted: 03 Aug 2014 11:59 AM PDT ஸ்ரீஅரவிந்தர் - ஸ்ரீஅன்னையின் பொன்மொழிகள் - தொகுப்பு: காந்திமதி கிருஷ்ணன்; பக்.208; ரூ.100; நர்மதா பதிப்பகம், சென்னை-17; )044- 2433 4397. |
Posted: 03 Aug 2014 11:59 AM PDT தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை பள்ளிக் கல்வித்துறை சார்பில் பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டி நடைபெற்றது. |
விநாயகர் சதூர்த்தி விழாவுக்கு 65 சிலைகள் பிரதிஷ்டை: இந்து முன்னணி முடிவு Posted: 03 Aug 2014 11:59 AM PDT தேனி பகுதியில் ஆக. 29-ஆம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 65 இடங்களில் சுவாமி சிலைகளை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. |
Posted: 03 Aug 2014 11:59 AM PDT புலியின் நிழலில் - நாம்தேவ் நிம்கடே; தமிழில்: எம்.எஸ்.; பக்.352; ரூ.280; காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., நாகர்கோவில்; )04652- 278525. |
பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு Posted: 03 Aug 2014 11:58 AM PDT தேனி அருகே ஞாயிற்றுக்கிழமை பேருந்தில் சென்று கொண்டிருந்த பெண் பையில் வைத்திருந்த தங்க நகை திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
Posted: 03 Aug 2014 11:58 AM PDT |
171 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி Posted: 03 Aug 2014 11:58 AM PDT ஆறுமுகனேரி கா.ஆ. மேனிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. |
பட்டப்பகலில் வீடு புகுந்து 11 பவுன் தங்கநகை திருட்டு Posted: 03 Aug 2014 11:58 AM PDT திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சியில் பட்டப்பகலில் வீடு புகுந்து 11 பவுன் தங்கநகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
அகில இந்திய வர்த்தக தொழில் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு Posted: 03 Aug 2014 11:58 AM PDT அகில இந்திய வர்த்தக தொழில் சங்க தூத்துக்குடி கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். |
மதுராந்தகம் காவல் நிலையத்தில் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு Posted: 03 Aug 2014 11:58 AM PDT மதுராந்தகம் காவல் நிலையத்தின் அனைத்து பதிவேடுகளையும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். மதுராந்தகம் துணைக் கண்காணிப்பாளர் செயல்பாட்டில், இயங்கி வரும் காவல் நிலையங்களில் ஒ |
அம்பத்தூரில் 4 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் Posted: 03 Aug 2014 11:58 AM PDT அம்பத்தூரில் கார்களில் கடத்திச் செல்லப்பட்ட 4 டன் செம்மரக்கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
கொலை வழக்கு: குண்டர் சட்டத்தின்கீழ் இளைஞர் கைது Posted: 03 Aug 2014 11:58 AM PDT காஞ்சிபுரத்தில் பல்வேறு கொலை, கூட்டுக் கொள்ளை வழக்குகள் தொடர்புடைய குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். |
ஓடும் காரில் சிறுமி பலாத்காரம்: மூவர் கைது Posted: 03 Aug 2014 11:58 AM PDT தில்லியில் ஓடும் காரில் சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது பக்கத்து வீட்டுக்கார இளைஞர் உள்பட மூவரை போலீஸார் கைது செய்தனர். |
Posted: 03 Aug 2014 11:58 AM PDT தில்லியில் சட்ட விரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட 5,724 மதுபாட்டில்களை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர். |
Posted: 03 Aug 2014 11:58 AM PDT வைகை அணை சாலையில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் உள்ள தனியார் பாரில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாக மதுபானங்கள் |
Posted: 03 Aug 2014 11:58 AM PDT தமிழ்ச் சமூக மரபும் மாற்றமும் - பதிப்பாசிரியர்கள்: சு.சதாசிவம், க.பூபதி, ஆ.அறிவழகன், பா.சம்பத்குமார், ச.வீரபாபு மற்றும் அறுவர்; பக்.560; ரூ.500; செம்மூதாய் பதிப்பகம், எ3, அபிராமி நிவாஸ், 43, வால்மீகி தெரு, கிழக்குத் தாம்பரம், சென்னை-59. |
Posted: 03 Aug 2014 11:58 AM PDT ஆண்டிபட்டி அருகே லாடசன்னாசிபுரம் அகஸ்தியர் சித்தர் பீடத்தில் ஆடி 18ஐ முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை குருபூஜை நடைபெற்றது. |
தேனி அருகே குப்பை கிடங்கால் சுற்றுச் சூழல் பாதிப்பு: பாலிதீன் காடுகளான விளை நிலங்கள் Posted: 03 Aug 2014 11:57 AM PDT தேனி அருகே நகராட்சி, பேரூராட்சி குப்பைக் கிடங்கு சுற்றுச் சூழலை பாதிப்பதுடன், கிடங்கில் இருந்து காற்றில் பரவும் பாலிதீன் பொருள்கள் விளை நிலங்களில் தேங்கி மண் வளம் மற்றும் நிலத்தடி நீராதாரத்தை பாதித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |