Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மது - இது அழிவை நோக்கிய பயணம்

Posted: 03 Aug 2014 03:01 PM PDT

மதுவுக்கு ஏன் 'மது' என்று பெயர் வைத்தார்களோ?! ஒருவேளை 'ம'கிழ்ச்சியில் தொடங்கி 'து'ன்பத்தில் முடிவதால்கூட இருக்கலாம். என்னதான் 'மது உடலுக்கு கேடு விளைவிக்கும்... உயிரைப் பறிக்கும்' என்று மதுக்கடைகள் தொடங்கி... சினிமா தியேட்டர் வரை போகிற இடமெல்லாம் எச்சரிக்கை விடுத்தாலும், சிலர் அதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. மது என்ற விஷயம் குடிப்பவரை மட்டுமல்ல... அவரது குடும்பத்தையும் சேர்த்தே துன்பத்துக்கு ஆளாக்குகிறது. 'சும்மா ஜாலிக்காக குடிக்கிறேன்' என்று சொல்பவர்களில் தொடங்கி, 'விளையாட்டா ஆரம்பிச்சேன். ...

தாய்ப்பாலே தடுப்பூசிதான்!

Posted: 03 Aug 2014 02:59 PM PDT

பெற்ற குழந்தைக்கு உற்ற மருந்தென்று தாய்ப்பால் மிஞ்சிடத் தரணியில் ஏதும் உண்டோ? தாய்க்கும் சிசுவுக்குமான தன்னிகரில்லா உறவுப் பிணைப்பான தாய்ப்பாலின் சிறப்புகளையும், மருத்துவப் பலன்களையும் விரிவாகப் பேசுகிறார், மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் பொன்னி. 'தன் குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பதுதான் எல்லாத் தாய்மார்களின் பிரார்த்தனையும். பெண் கருத்தரித்தவுடன், தாய்ப்பாலின் மகத்துவம் பற்றி அறிவுறுத்துவதுடன், ஒவ்வொரு மாதப் பரிசோதனையின்போதும், அதன் முக்கியத்துவத்தைப் புரியவைப்பது எங்கள் ...

முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

Posted: 03 Aug 2014 02:49 PM PDT

இலங்கை பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் ஒரு பதிவு இடப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி வரும் கடிதங்களை கொச்சைப்படுத்தும் வகையில் அந்தப் பதிவிற்கு தலைப்பு ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. (How meaningful are Jayalalitha's love letters to Narendra Modi?) ஷெனாலி டி வடுகே என்பவர் எழுதியுள்ள அந்தப் பதிவின் சாரம்சம்: "இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு கவுன்சிலில் ...

யுத்தத்தை கைவிட்டு புத்தரின் பாதையில் நேபாளம் செல்கிறது: மோடி

Posted: 03 Aug 2014 02:47 PM PDT

நேபாள நாட்டிற்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். நேபாள மொழியில் ஆரம்பிக்கப்பட்ட அவரின் உணர்வுப்பூர்வமான உரைக்கு ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கைதட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர். அழகிய நாடான நேபாளத்திற்கு நண்பனாகவும், இந்திய தேசத்தின் பிரதமராகவும் நான் இங்கு வந்துள்ளேன் என்று நேபாள மொழியில் பேசிய மோடி பின்னர் இந்தி மொழியில் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது: இந்திய நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற நாள் முதல் நேபாள நாட்டுடனான ...

சாதிய உணர்வை தூண்டினார் காந்தி: அருந்ததிராய்

Posted: 03 Aug 2014 02:46 PM PDT

சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர் அருந்ததி ராய். இவர் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தின் 'மகாத்மா அய்யங்காளி இருக்கை' நடத்திய சர்வதேச கருத்தரங்கில் (கடந்த மாதம் 17 ஆம் தேதி) கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "காந்திஜி எப்போதுமே சாதிய மனப்பான்மையைத் தூண்டும் விதமாக பேசி வந்துள்ளார். அய்யங்காளி போன்ற புரட்சியாளர்களின் சேவைகளை ஒப்பிடுகையில் இது மிகவும் தெளிவாகிறது" என கூறினார். மேலும் காந்தி பெயரால் அமைந்த நிறுவனங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ...

தமிழகமெங்கும் 300 ‘அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள்’

Posted: 03 Aug 2014 02:42 PM PDT

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 37 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 300 'அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள்' தமிழகமெங்கும் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ், 2014 ஆகஸ்டு 1ஆம் தேதி அவர் அறிவித்ததாவது: பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தமிழக மக்களுக்கு உணவுப் பாதுகாப்பினை வழங்குவதிலும், நுகர்வோருக்குத் தேவையான பொருட்கள் சரியான அளவில், நியாயமான விலையில், தரமானதாகக் கிடைப்பதை உறுதி செய்வதிலும், நுகர்வோரின் ...

பிளாஸ்டிக் கப்களில் புற்று நோய் ஏற்படுத்தும் வேதிப்பொருள்

Posted: 03 Aug 2014 02:34 PM PDT

உணவு பொருட்கள், தேநீர், காபி போன்றவை பரிமாறப்படும் பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் பாத்திரங்களின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருளில் புற்று நோய் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய தன்மை உள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கோப்பைகளின் தயாரிப்பில் ஸ்டைரென் என்னும் வேதிப்பொருள் உபயோகப்படுத்தப்படுகிறது. இது குறித்து அண்மையில் அமெரிக்காவின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில், ...

இந்திய நெடுஞ்சாலைகளில் 100 கி.மீ. வேகத்தில் காரில் செல்லலாம்

Posted: 03 Aug 2014 02:25 PM PDT

கடந்த 1989-ம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்ட விதிகளின்படி சரக்கு வாகனங்கள் மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும், இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ., கனரக வாகனங்கள் 65 கி.மீ. வேகத்திலும் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வேகக்கட்டுப்பாடு தொடர்பாக எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. இது தொடர்பாக 2006-ம் ஆண்டு மத்திய அரசு அமைத்த குழு தற்போது புதிய பரிந்துரைகளை அளித்துள்ளது. அதில், நெடுஞ்சாலைகளில் ஆட்டோ உள்ளிட்ட மூன்று சக்கர வாகனங்கள் மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும், இருசக்கர வாகனங்கள் 80 கி.மீ. ...

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Posted: 03 Aug 2014 02:21 PM PDT

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. பாராளுமன்ற கட்சி கூட்டம் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு ...

உலகச் செய்திகள்!

Posted: 03 Aug 2014 02:17 PM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் குழந்தைகளை கண்டுணர்ந்து செயல்படுவது எப்படி?

Posted: 03 Aug 2014 01:53 PM PDT

எப்போதும் 90 சதவீத மதிப்பெண் வாங்கும் 12 வயது சிறுமி பத்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த இரண்டு தேர்வுகளில் பாஸ்மார்க் கூட வாங்கவில்லை. எப்போதும் அமைதியாக இருக்கும் அச்சிறுமி, சென்ற இரண்டு வாரமாக எல்லாவற்றுக்கும் சண்டை போடுகிறாள். ஒரு வேலை அந்தக் குழந்தை பாலியல் தொந்தரவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து, அந்தச் சிறுமியை ஒன்பதாம் வகுப்பு பள்ளி ஆசிரியர் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார். பத்மாவிடம் நம்பிக்கையை வரவழைத்து பேச்சுகொடுத்தபோது, 'என் நெருங்கிய உறவினர் ஒருவர் ...

வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம்

Posted: 03 Aug 2014 01:49 PM PDT

பாட்னா: பூடானில் இருந்து, நேபாளம் வழியாக இந்தியாவின் பீகார் மாநிலத்துக்கு பாயும் கோசி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பீகாரின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பாதுகாப்பு நடவடிக்கையாக ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து கடந்த 2008ல் கோசி நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக் கால் 434 பேர் உயிரிழந்தது போன்ற விபரீதம் தவிர்க்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் சிந்துபால்சோக் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மிகப் பெரிய நிலச் சரிவு ஏற்பட்டது. இது கோசி நதியின் பாதையை அடைத் தது. சில இடங்களில் ...

JE (Japanese Encephalitis) வைரஸ்!

Posted: 03 Aug 2014 01:48 PM PDT

பினாங்கு மாநிலம் தாசேக் கெலுகொர் பகுதியில் 12 வயது மாணவன் ஒருவனுக்கு கொசுக்களின் மூலம் பரவும் ஜேஇ (Japanese Encephalitis) என்ற ஒருவகை காய்ச்சல் ஏற்பட்டு, சுயநினைவு இன்றி ஆபத்தான நிலையில் தற்பொழுது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த மே 18 -ம் தேதி காய்ச்சல் அதிகமாகி, கப்பளா பத்தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு, தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இது குறித்து பினாங்கு சுகாதாரதுறை இயக்குனர் டத்தோ டாக்டர் லைலானோர் இப்ராஹிம் கூறுகையில், "அச்சிறுவன் ...

2014 காமன்வெல்த் போட்டிகள்

Posted: 03 Aug 2014 01:44 PM PDT

2014 காமன்வெல்த் போட்டிக்கு 224 விளையாட்டு வீரர்களை களமிறக்குகிறது இந்தியா 2014 காமன்வெல்த் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 3 வரை கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு 14 வெவ்வேறு விளையாட்டுக்களில் இருந்து 224 இந்திய விளையாட்டு வீரர்களை அரசின் சொந்த செலவில் அனுப்ப விளையாட்டு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 17 விளையாட்டுகள் அடங்கிய 261 பதக்கங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவிலிருந்து நெட்பால், ரக்பி செவன்ஸ் மற்றும் ட்ரையத்லான் விளையாட்டுகளுக்கு ...

ஜிகர்தண்டா - திரை விமர்சனம்

Posted: 03 Aug 2014 01:25 PM PDT

முதல் காட்சியில் 'மலர்ந்தும் மலராத பாதி மலர்போல' பாட்டின் பின்னணியில் டுமீல் வெடிக்கும்போதே பசங்க என்னமோ செய்யப்போறாங்க என்பது தெரிந்துவிடுகிறது. ஊரே நடுங்கும் அதிபயங்கர ரவுடிக்கு நடிப்புக் கலை மீது திடீர் ஆசை வருவதால் விளையும் ரகளைதான் 'ஜிகர்தண்டா'.கார்த்திக்குக்கு (சித்தார்த்) சினிமா இயக்குநராக வேண்டும் என்பது கனவு. ரத்தம் தெறிக்கும் க்ரைம்கதையை எடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. மதுரையில் உள்ள அதிபயங்கர ரவுடியான 'அசால்ட்' சேதுவின் (பாபி சின்ஹா) வாழ்க்கையைப் படமாக்க வேண்டுமென்று நினைக்கிறான். அவன் ...

வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன் படிக்க வேண்டியது 'கீதை'

Posted: 03 Aug 2014 09:49 AM PDT

பகவத் கீதையைப் புனித நூலாக்கியதுதான் நாம் செய்த மிகப் பெரிய தவறு. இன்று பல வீடுகளில் பூஜையறைகளில் அந்தப் புனித நூல் இருக்கிறது என்பது உண்மைதான். - செய்தித்தாள்கள், வார இதழ்கள் வரவேற்பு அறையிலும், படுக்கையறையிலும் சிதறிக் கிடக்கின்றன. ஆனால் நாம் பத்திரிகைகளைப் பக்கம்விடாமல் வாசித்து வருகிறோம். பகவத் கீதையைப் பிரித்துக் கூடப் பார்க்காமல் பூஜை செய்கிறோம். அதன்மேல் மலர் தூவுகிறோம். அதற்குத் தீப ஆரத்தி காண்பிக்கிறோம். - புனித நூல்களைப் படிக்கக் கூடாது என்று எழுதப் படாத ...

அழுகையை ரசித்தல்

Posted: 03 Aug 2014 09:46 AM PDT

அழுகையை ரசித்தல் அபத்தம் என்பர்
அம்பி வளர்ந்தால், அழகு அழிந்திடும் என
அழுதிடும் அழகு சிலையின்  
அழுகையை ரசிக்காது இருப்போமா?



ரமணியன்

This posting includes an audio/video/photo media file: Download Now

அவருக்கு "நடந்த'தெல்லாம் மறந்து போயிடுது

Posted: 03 Aug 2014 09:46 AM PDT

"நான் ஒரு படம் எடுக்கப்போறேன். நல்ல டைட்டிலா ஒண்ணு சொல்லுங்க!'' - "வேறவேலை இல்லையா உங்களுக்கு!'' - "அட இது கூட நல்ல டைட்டிலா இருக்கே!'' - >பி.கவிதா, - --------------------------------------- - நம்ம கட்சி தேர்தலில் தோல்வியடைஞ்சதுக்கு தலைவரோட பேச்சுதான் காரணமா... எப்படி? - க்களிக்கும் முன்னர் நன்றாக சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும்னு சொன்னதுதான்! - >ஜி.சுந்தரராஜன், - --------------------------------------- - "இவர்தான் மிஸ்டர். கேசவன்...'' - "ஏற்கெனவே ஒருத்தரை, ...

ஒரு கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்...

Posted: 03 Aug 2014 09:38 AM PDT

- உங்களைக் கல்யாணம் பண்ணதுக்கு, ஒரு கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... - ஆடித் தள்ளுபடியில், நீ இப்படி ஷாப்பிங் பண்ணுற ஏகப்பட்ட பொருள்களை, "பொதி' சுமக்கவா? - >கீதா கிருஷ்ணரத்னம், - ------------------------------------- - கணவன்: இங்க ஒருத்தன் நாயா கத்திகிட்டு இருக்கேன், எங்கடி போன...? மனைவி: உங்களுக்கு பிஸ்கட் வாங்கத்தான் போனேன்... - >க.நாகமுத்து, - ------------------------------------ - "எனக்கு தியேட்டர்ல வேலை கெடைச்சிருக்கு...'' - நல்லதாப் போச்சு... புதுப்படம் ...

நண்பர்களே... உங்கள் பார்வைக்கு...

Posted: 03 Aug 2014 09:35 AM PDT



நண்பர்களே... உங்கள் பார்வைக்கு...



முன்னாள் மற்றும் இந்நாள் தமிழக முதல்வர்களுடன்
நம் "கலையுலக முதல்வர்" சிவாஜி கணேசன் அவர்கள்.

படித்ததில் பிடித்தது :) - சபாஷ்... சரியான நெத்தியடி!

Posted: 03 Aug 2014 09:33 AM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

ஜோக்கு Sir ஜோக்கு ... (ஹா... ஹா... ஹா... )

Posted: 03 Aug 2014 09:24 AM PDT

ஜோக்கு sir ஜோக்கு ... (ஹா... ஹா... ஹா... ) செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது . --- தீவிரமாக யோசிப்போர் சங்கம். (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ) - - - --  - - - -- - -  - -- - - - - - - - - - - - - -- - - -- - - - -- - - -- - - -- - - - - இட்லி மாவை வச்சு இட்லி போடலாம். சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்... ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா? --- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம் -------------------------------------------------------------------------------------------- என்னதான் ...

சங்கரநாராயணன்!

Posted: 03 Aug 2014 09:20 AM PDT

தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து, கோவிலுக்கு சென்று, கோமதியம்மன், சங்கரலிங்க சுவாமியுடன் பள்ளியறை ஊஞ்சலில் ஒன்று சேர்ந்திருக்கும் காட்சியைக் கண்டு உருகி, கண்ணீர் மல்க வழிபட்டு வருவார் திருநாவுக்கரசு. 'பள்ளியறை தீப ஆராதனைய பாத்துட்டா போதும்... பிறவிப் பயனயே அடைஞ்சுரலாம். இத விட, வாழ்க்கையில நமக்கு வேற என்ன வேணும்...' என்று, கோவிலிலிருந்து வெளி வரும்போது, தன் நண்பர்களிடம் அவர் சிலாகிப்பது உண்டு. ஆனால், வீடு வந்து சேர்ந்ததும், தன் தங்கை கோமதியை முதலில் பார்ப்பதை, மிகக் கவனமாய் தவிர்த்து ...

வரதட்சணை! - சிறுகதை

Posted: 03 Aug 2014 09:14 AM PDT

பெண் பார்க்க வந்திருந்தார்கள். ஜாதகங்கள் ரொம்பப் பிரமாதமாகப் பொருந்தியிருந்தன. தரகர் மூலமான ஏற்பாடுதான் என்றாலும், ஏதோ கடனே என்றில்லாமல், கடமையே என்று தன் பொறுப்பை நிறைவேற்றியிருந்தார் தரகர். அவர் கொடுத்த பையனின் ஜாதகத்தை தங்களுடைய குடும்ப ஜோதிடரிடம் கொண்டு காண்பித்தபோது, ஜோதிடர் துள்ளி குதிக்காத குறைதான். ''கிரிதரன், அற்புதமான பொருத்தம் சார். இந்த வாய்ப்பை நழுவ விட்டிடாதீங்க. ரெண்டு பேருக்கும் அன்யோன்யம், ரெண்டு பேரோட நீடித்த கல்யாண ஆயுள், அவங்களோட வாரிசுகள் எல்லாமே அமர்க்களமா அமையும்னு ...

எல்லாம் குழந்தை வந்த வேளை! - சிறுகதை

Posted: 03 Aug 2014 09:13 AM PDT

தெற்குப்புற ஜன்னலண்டை வந்து எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கரி. "என்னம்மா, கண்ணனைத்தானே எதிர்பார்க்கறே! அவன் என்னிக்குத்தான் பொழுதோட வீட்டுக்கு வந்திருக்கான்? ஆபீஸ், ஆபீஸ், வேலை, வேலை... என்னதான் வெட்டி முறிப்பானோ?" என்று அலுத்துக்கொண்டார் ரிடையராகி வீட்டில் இருக்கும் சங்கரியின் மாமனார். "ஹும்; கல்யாணத்துக்கு முன்னாலேதான் ஆபீஸைக் கட்டிண்டு அழுதான், அப்புறமாவது குடும்பம் பொறுப்புன்னு ஏற்பட்டா காலாகாலத்திலே வீட்டுக்கு வருவான்னு நெனைச்சேன்; அட, ஒரு குழந்தை பிறந்து மூணு மாசமாறது, ...

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !

Posted: 03 Aug 2014 09:10 AM PDT

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ந‌ட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆ‌ண்டு ஆகஸ்ட் 2ஆ‌ம் தேதி  உலக ந‌ட்பு ‌தின‌மாகும் நட்பு கவிதை ( நெட்லிருந்து சுட்டது ) எங்களை நட்பு என்ற பாசத்தால் இணைத்த நட்பே ! தனி மனிதர்களாய் பிறந்தோம். இணையத்தால் இணைந்தோம் , எங்களுக்குள் பலர் சந்தித்ததில்லை !! பலர் எழுத்துகளின் இதயங்களால் இணைந்தோம். எங்களுக்குள் ஜாதி ,மதம்,வயது , ஏழை ,பணக்காரன்,வகுப்பு ,பேதம் துறந்தோம், , நட்பால் இணைந்தோம் ...

சுட்டது நெட்டளவு

Posted: 03 Aug 2014 09:02 AM PDT

சுட்டது நெட்டளவு அது ஒரு மனநல மருத்துவமனை....அங்கே சிகிச்சை பெற்று வந்தார் ஒரு பட்டதாரி வாலிபர். ஒரு நாள் சக நோயாளி ஒருவன் கிணற்றில் குதித்துவிட, தன் உயிரை துச்சமென நினைத்து கிணற்றுக்குள் குதித்து அந்த நோயாளியை காப்பாற்றி விட்டார். அவரின் இந்த வீரதீரச் செயல் மருத்துவமனை முழுக்க பரவிவிட்டது. அதைக் கேள்விப்பட்ட மருத்துவ நிபுணர் அந்த பட்டதாரி வாலிபரை அழைத்து, " உனக்கு ஒரு நல்ல செய்தியும், ஒரு துக்கமான செய்தியும் சொல்லப்போகிறேன்" என்றார். " சொல்லுங்க டாக்டர் ." " நீ உனது நண்பனைக் காப்பாற்றியபடியால் ...

தெரிந்து கொள்வோம்...

Posted: 03 Aug 2014 06:56 AM PDT

தெரிந்து கொள்வோம்... சின்னப்பிள்ளை அம்மாள்..! அன்றாடம் கூலி வேலையும், விவசாயமும் செய்து கொண்டிருந்த சின்னபிள்ளை, சரியான கூலி தராமல் ஏமாற்றும் பண்ணை முதலாளிகளை தட்டி கேட்கலானார். அவருடைய தைரியத்தின் மூலம் அவருக்கு சரியான கூலி தரப்பட்டது. ஆகவே இவரின் கூட இருந்தால், நமக்கும் சரியான கூலி கிடைக்கும் என்று பல பெண்கள் அவருடன் இணைந்தனர், இவ்வாறு அவர்களுக்கெல்லாம் சிறு தலைவியாக விளங்கினார். பின்பு "Dhan Foundation" எனும் சேவை அமைப்பின் மூலம் உருவான "களஞ்சியம்" எனும் அமைப்பில் 1989 ஆம் ஆண்டு ...

எதிர்ப்பார்க்கிறேன்! - கவிதை

Posted: 03 Aug 2014 04:37 AM PDT

- எதிர்பார்ப்புகள் இல்லாத உன் நட்பை எதிர்பார்க்கிறேன்! - என் குறைகளைக் கிழித்து மனதை ரணப்படுத்தாமல் குறைகளைக் குணப்படுத்தும் மூலிகை வார்த்தைகளை எதிர்பார்க்கிறேன்! - உலகமே என்னை ஒதுக்கினாலும் நான் ஒதுங்க நிழல் கொடுக்கும் உன் அரவணைப்பை எதிர்பார்க்கிறேன்! - கணத்திற்கு கணம் கணக்குப் பார்த்தே வாழும் மனிதர்களுக்கு மத்தியில் கணக்கில்லாமல் பழகும் உன்னை எதிர்பார்க்கிறேன்! - வெல்கிற போது தட்டுவதற்காக அல்ல, நான் வீழ்கிற போது தாங்குவதற்காக உன் கைகளை எதிர்பார்க்கிறேன்! - எதிர்பார்ப்புகளில் ...

காதலுக்கு பொய் அழகு...! - (தொடர் பதிவு)

Posted: 03 Aug 2014 03:52 AM PDT


-
வெள்ளை மீன்களெல்லாம்
வண்ண மீன்களாகிவிட்டன
நீச்சலடித்துக் குளிக்க
நீ
கண்மாய்க்கு
இறங்கியதும்...!
-
-----------------------------
>பொன்.ரவீந்திரன்

அம்மா உணவகத்தில் சமையலுக்கு உயிரி எரிவாயு: சோதனை முயற்சி

Posted: 03 Aug 2014 01:35 AM PDT

உயிரி எரிவாயு (பயோ கேஸ்) மூலம் சமையல் செய்யும் திட்டம் சோதனை முயற்சியாக சென்னை அம்மா உணவகத்தில் தொடங்கப்பட்டது. சென்னை முழுவதும் 203 அம்மா உணவகங்கள் உள்ளன. இவற்றில் சமையல் எரிவாயு வாங்குவதற்காக மட்டும் அதிக செலவு ஆகிறது. செலவைக் கட்டுப்படுத்தவும், அழுகும் குப்பைகளை மீண்டும் பயன்படுத்தும் வகையிலும், உயிரி எரிவாயு பயன்படுத்தும் திட்டம் உத்தேசிக்கப்பட்டது. அதன்படி, திரு.வி.க. நகர் 67-ஆவது கோட்டத்தில் உள்ள அம்மா உணவகத்தில் உயிரி எரிவாயு மூலம் சமையல் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது ...

பூவில் பிறக்கும், நாவில் சுவைக்கும் - விடுகதைகள்

Posted: 03 Aug 2014 12:47 AM PDT

- - 1) பிடிக்கவே முடியாத கள்வன் அவன் யார்? - 2) பூவில் பிறக்கும், நாவில் சுவைக்கும் - அது என்ன? - 3) மொட்டைப் பாறையில் மூடிய கண்கள் மூன்று - அது என்ன? - 4) கொடுக்க முடியும், எடுக்க முடியாது - அது என்ன? 5) அண்ணன் தம்பி சேராவிட்டால் ஊருக்கெல்லாம் கொண்டாட்டம் - அது என்ன? - 6) சிவப்புப் பெட்டிக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது - அது என்ன? - 7) மூன்று கண்கள் இருக்கும், இவனால் பார்க்க முடியாது - அது என்ன? - 8) நெருப்பு பட்டால் அழுவான் - அவன் யார்?   -   9) அடியில் உள்ளவன் ...

அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு!

Posted: 02 Aug 2014 11:54 PM PDT

* அயர்ன் செய்யும் போது முதலில் குறைந்த வெப்பத்தில் அயர்ன் செய்யும் துணிகளைத் தேய்த்து, பிறகு அதிக வெப்பம் வேண்டிய ஆடைகளை அயர்ன் செய்தால் மின் செலவு குறைவாகும். * அயர்ன் பாக்ஸிற்கு "த்ரீ பின் பிளக்'தான் முழுமையான பாதுகாப்பு. * துணிகளைத் தேய்த்த பிறகு அயர்ன் பாக்ஸை மூலையில் சூடு ஆறும் வரை நிமிர்த்தி வைக்க வேண்டும். * "ஹீட்டிங் எலிமென்டை' வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். * அயர்ன் பாக்ஸின் அடிப்பாகத்தில் பழுப்பு நிறமான கறை இருந்தால் சோடா மாவை ஈரத்துணியில் தொட்டுக் ...

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Posted: 02 Aug 2014 11:53 PM PDT

மகிழும் தவளைகள்….!!
*
விளையாட்டு காட்டுகிறது பூக்களுக்கு
இரவில் ஒளி சிந்தி மின்மினிகள்
*
இருளில் எவரை வேவு பார்க்கின்றன
இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள்.
*
காதல் கிளிகளின் கூடுகளை
எட்டி.ப்பார்க்கின்றன காக்கைகள்.
*
இரவுமில்லை பகலுமில்லை
நீரில் வாழும் மீன்களுக்கு…
*
மழை நின்றபின் இரவெல்லாம்
கொண்டாட்டம் கத்தி மகிழும தவளைகள்.
*

வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு

Posted: 02 Aug 2014 11:52 PM PDT

- வலைக்கு வழி! - சர்தார் வல்லபாய் படேல் ஆங்கிலேயர் ஆட்சியில் சிறைச்சாலையில் இருந்தபோது நடந்த நிகழ்ச்சி இது. சிறையில் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருந்ததால், அரசியல் கைதியாக இருந்த படேலுக்குக் கொசு வலை கொடுத்திருந்தார்கள். - அந்தக் கொசு வலை கிழிந்து, நைந்து போய்விட்டதால், வேறு கொசு வலை உடனே கிடைக்க வழி இல்லை என்று சிறை அதிகாரி தெரிவித்தார். - "வேறு புதிய கொசு வலை தருவதில் உங்களுக்கு என்ன சிரமம்? கடைவீதிக்குச் சென்றால் புதிதாக ஒன்று வாங்கி வரலாமே?'' என்று படேல் கேட்டார். - அதற்கு ...

செ செ வின் நண்பர்கள் தின வாழ்த்து

Posted: 02 Aug 2014 11:35 PM PDT

வாழ்த்துக்கள்

நம்மை விட்டு
நம் பெற்றோர்கள்
என்றும்
விலகிச் செல்வதில்லை....
அப்படி விலகினால்
நம் குழந்தைக்கு  
நம்மை விட
ஒரு நல்ல நண்பன்
கிடைத்து விட்டான்  
என்பதால் தான்...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்களுடன்

         செ செ

திருக்குறளில் நட்பு....!!!

Posted: 02 Aug 2014 11:22 PM PDT

திருக்குறளில் நட்பு....!!! 1. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. Translation : What so hard for men to gain as friendship true? What so sure defence 'gainst all that foe can do? Explanation : What things are there so difficult to acquire as friendship ? What guards are there so difficult to break through by the efforts (of one's foes) ? எழுத்து வாக்கியம் : நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் ...

பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். - விடுகதைகள்

Posted: 02 Aug 2014 11:15 PM PDT

1)ஒன்றும் இரண்டும் சேரில் செல்வம் மூன்றும் நான்கும் சேரில் குளம் மூன்றும் ஐந்தும் ஒன்றும் சேரில் கங்கை மூன்றும் ஆறும் சேரில் பெருமை ஏழும் எட்டும் சேரில் பருகு அஃது என்ன? - -------------------------------- - 2)சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அது என்ன? - 3)ஆயிரம் தச்சர் கூடி, அழகான மண்டபம் கட்டி, ஒருவன் கண்பட்டு, உடைந்ததாம் மண்டபம். அது என்ன? - 4)ஒத்த கால் குள்ளனுக்கு எட்டு கைகள்.அவன் யார்? - 5)பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. ...

இன்றைய சிந்தனைத் துளிகள்

Posted: 02 Aug 2014 11:14 PM PDT

இன்றைய சிந்தனைத் துளிகள் துாய உள்ளம், தொண்டு செய்யும் ஆர்வம், பிறருக்கு ஆதரவாக இருப்பது, இரக்கம் காட்டுவது, இவை நிம்மதியளிக்கும். துாய உள்ளம், தொண்டு செய்யும் ஆர்வம், பிறருக்கு ஆதரவாக இருப்பது, இரக்கம் காட்டுவது, இவை நிம்மதியளிக்கும். துன்பத்தையோ, தோல்வியையோ ஒரு போதும் கண்டிராத மனிதனை நம்பாதே. அவனை பின்பற்றாதே அவன் கொடியின் கீழ் போரிடாதே. விடா முயற்சி வெற்றியைத் தேடித் தரும். உயர்ந்த சிந்தனையில் இருந்துதான் உயர்ந்த எண்ணம் உருவாகும்.

காது கேட்காதவர் வீட்டில திருடப்போனது தப்பா போச்சு...!

Posted: 02 Aug 2014 10:40 PM PDT

- "அந்த ஆளுக்கு காது கேட்காதுங்கிறது தெரிஞ்சிருந்தா அவன் வீட்டுக்குத் திருடவே போயிருக்க மாட்டேன்" - "ஏண்ணே? என்னாச்சு?" - "பீரோ சாவியை எடுடான்னு சொல்லி அவனுக்கு புரியவைக்கிறதுக்குள்ள அக்கம்பக்கத்துல இருந்தவங்க என்னைப் பிடிச்சிட்டாங்களே" - ------------------------------------------ - "உங்க வீட்டுல சிரிப்பு சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கே?" - "என் மனைவி அடிக்க கை ஓங்குவா அடி விழுந்தா அவ சிரிப்பா… விழலைன்னா நான் சிரிப்பேன்" - ------------------------------- - போதை ஏறிட்டுதுன்னா ...

போளி'த்தனமான நட்புன்னு சொல்லு..'' - கடி ஜோக்ஸ்

Posted: 02 Aug 2014 10:37 PM PDT

- ""டேபிள் எப்போ வெட்கப்படும்?'' - ""அதன் டிராயரைப் பிடிச்சி இழுக்கும்போது...'' - ""!!!!!'' - -எஸ்.சடையப்பன், - -------------------------------------- - "இதுவரை நமது மன்னர் எந்தப்போரிலும் பின் வாங்கியதே இல்லை'' - ""நிஜமாவா?'' - ""ஆமாம்... பின்னே சண்டை நடக்கும்போது "பின்' கேட்டால் யார் தருவார்கள்?'' - -ம.அக்ஷயா, - ------------------------------------------ - "கோழி ஏன் முட்டை போடுது?'' - ""அதுக்கு 1,2,3,4 போடத்தெரியாது..'' - -ஜி.எஸ்.கார்த்திக், - --------------------------------------- - "பூனை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™