Tamil News | Online Tamil News |
- ஊடுருவ காத்திருக்கும் பாக்., பயங்கரவாதிகள்
- பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக அதிகரிப்பு
- 'ஏர்செல் - மேக்சிஸ்' முறைகேடு வழக்கு: தயாநிதி, கலாநிதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
- மழை புண்ணியத்தால் நிரம்பிய 2,000 நீர்நிலைகள்: நீர்வள ஆதார துறை அதிகாரிகள் திருப்தி
- மலையூர் மலைக்கிராமத்தில் சாதனை மாணவர்கள்: பள்ளிக்கு செல்ல தினமும் 10 கி.மீ., நடை பயணம்
- இந்தியர்களை எப்படி அழைப்பது? நஜ்மா பேச்சால் எழுந்தது சர்ச்சை
- அரசியல் களத்தில் எதிரிகளை காணோம்: தொண்டர்களிடம் ஜெ., பெருமிதம்
- உள்ளாட்சி இடைத்தேர்தல்: தி.மு.க., திடீர் புறக்கணிப்பு
- உள்ளாட்சி இடைத்தேர்தலில் முதன்முறையாக பா.ஜ., களமிறங்குகிறது: தி.மு.க., புறக்கணிப்பை பயன்படுத்த வியூகம்
- பாக்., மீது பிரதமர் மோடி பாய்ச்சல்
- பிரதமர் - உள்துறை அமைச்சர் இடையேயான பிரச்னை தீர்ந்தது: ராஜ்நாத்திடம் பொறுப்பை ஒப்படைத்து ஜப்பான் கிளம்புகிறார் மோடி
| ஊடுருவ காத்திருக்கும் பாக்., பயங்கரவாதிகள் Posted: ஜெய்ப்பூர் : பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தான் வழியாக, இந்திய எல்லைக்குள் ஊடுருவ, 15க்கும் மேற்பட்ட பயங்கர வாதிகள் காத்திருப்பதாக, ராஜஸ்தான் மாநில, பயங்கர வாத எதிர்ப்பு படை போலீசார், எச்சரிக்கை விடுத்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே, 3,323 கி.மீ., நீள எல்லையில், ராஜஸ்தான் மாநிலத்தின் அருகே, பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக, பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அவர்கள், ராஜஸ்தான் மற்றும் அண்டை மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதையடுத்து, அந்த பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில், ... |
| பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக அதிகரிப்பு Posted: புதுடில்லி:மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதை எடுத்துக்காட்டும் வகையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஏப்ரல் முதல், ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த இரண்டரை ஆண்டுகளில் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், பொருளாதார வளர்ச்சி, 4.7 சதவீதமாக இருந்தது என, மத்திய புள்ளியியல் அலுவலகம் (சி.எஸ்.ஓ.,) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டு காலாண்டில், சுரங்கம், தயாரிப்பு மற்றும் சேவை ஆகிய துறைகள் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளன.குறிப்பாக, தயாரிப்பு துறையின் ... |
| 'ஏர்செல் - மேக்சிஸ்' முறைகேடு வழக்கு: தயாநிதி, கலாநிதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் Posted: புதுடில்லி: 'ஏர்செல்' நிறுவனத்தின் பங்குகளை, மலேசியாவின், 'மேக்சிஸ்' நிறுவனம் வாங்கியது தொடர்பான வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி, அவரின் சகோதரர் கலாநிதி மற்றும் ஆறு பேர் மீது, சி.பி.ஐ., நேற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தி.மு.க.,வைச் சேர்ந்த தயாநிதி, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தார்.அப்போது, சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் சிவசங்கரனை மிரட்டி, அவரின் ஏர்செல் நிறுவனத்தை, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க செய்ததாக, 2011ல், சி.பி.ஐ., ... |
| மழை புண்ணியத்தால் நிரம்பிய 2,000 நீர்நிலைகள்: நீர்வள ஆதார துறை அதிகாரிகள் திருப்தி Posted: தமிழகத்தில், பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையால், மாநிலம் முழுவதும் உள்ள, 2,000க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.தமிழகத்தில், 34 ஆறுகள்; 17 ஆற்றுப் படுகைகள்; 100க்கும் மேற்பட்ட அணைகள்; 39,202 ஏரிகள்; ஆயிரக்கணக்கான குளங்கள், திறந்தவெளி கிணறுகள், குழாய் கிணறுகள் உள்ளன. மாநிலத்தின் மொத்த பாசன பரப்பு, 72 லட்சம் ஏக்கர். இதில், 18 லட்சம் ஏக்கர், கால்வாய்கள் மூலமும்; 12 லட்சம் ஏக்கர், ஏரிகள் மூலமும்; 38 லட்சம் ஏக்கர், திறந்தவெளி மற்றும் குழாய் கிணறுகள் மூலமும் பாசனவசதி பெறுகின்றன.கர்நாடகா, கேரளா மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால், கோவை, தேனி, ... |
| மலையூர் மலைக்கிராமத்தில் சாதனை மாணவர்கள்: பள்ளிக்கு செல்ல தினமும் 10 கி.மீ., நடை பயணம் Posted: மதுரை:பாட்டன் காலத்தில் 'தினமும் 10 கி.மீ., நடந்து போய் நான் படித்து வளர்ந்தவன்,' என்று பல கதைகளை முன்னோர் குரல்களில் நம் காதுகள் கேட்டிருக்கும். இப்போதும் இது போல் பயணித்து பள்ளி செல்வோர் இருக்கலாம். மறுப்பதற்கில்லை. ஆனால் கரடுமுரடான ஒரு மலைப்பாதையில் தினமும் 10 கி.மீ., நடந்து, அதன் பின் பஸ்சில் பயணித்து படிக்கிறார்கள் ஒரு மலைக்கிராமத்து மாணவர்கள் 60 பேர்.மதுரை மாவட்டம் பாலமேட்டில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் வலையபட்டி கிராமத்தை கடந்து, 3 கி.மீ., பயணித்தால் எல்லைப்பாறை என்ற இடம் வரும். அந்த இடத்தில் இருந்து மலைப்பாதையில் 5 கி.மீ., நடந்தால் அழகிய மலை ... |
| இந்தியர்களை எப்படி அழைப்பது? நஜ்மா பேச்சால் எழுந்தது சர்ச்சை Posted: புதுடில்லி : ''இந்தியர்கள் அனைவரையும், 'இந்துக்கள்' என, அழைக்க வேண்டும் என, நான் கூறவில்லை. நான் கூறியதை தவறாக புரிந்து கொண்டு, சர்ச்சையை கிளப்பியுள்ளனர்,'' என, மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சருமான, நஜ்மா ஹெப்துல்லா, 'இந்தியாவைச் சேர்ந்த அனைவருக்கும் பொதுவான அடையாளம் வேண்டும். வெளிநாடுகளில், நம்மை, இந்தி என்றும், இந்துஸ்தானி என்றும். இந்தியன் என்றும், மூன்று விதமாக அழைக்கின்றனர். எனவே, பொதுவான அடையாளமாக, இந்தியர்கள் அனைவரையும், இந்து என, ... |
| அரசியல் களத்தில் எதிரிகளை காணோம்: தொண்டர்களிடம் ஜெ., பெருமிதம் Posted: ''இன்று அரசியல் களத்தில், எதிரிகளையே காணவில்லை. நம்முடைய பகைவர், எங்கோ மறைந்தார். நாம் ஒற்றுமையாக இருந்து மக்கள் பணியாற்றினால், இனி நம்மை வீழ்த்த, எந்த சக்தியும் இல்லை,'' என, கட்சி தொண்டர்கள் மத்தியில், முதல்வர் ஜெயலலிதா பேசினார்.மகத்தான வெற்றி:அ.தி.மு.க., பொதுச் செயலராக, ஏழாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, கட்சி அலுவலகம் வந்தார். அங்கு பால்கனியில் நின்றபடி, தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:அனைவரும் ஒருமனதாக, என்னை பொதுச் செயலராக தேர்வு செய்ததற்காக, எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.கால் ... |
| உள்ளாட்சி இடைத்தேர்தல்: தி.மு.க., திடீர் புறக்கணிப்பு Posted: சென்னை: உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தல்களை, தி.மு.க., திடீரென புறக்கணித்துள்ளது.இது தொடர்பாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:உள்ளாட்சி இடைத்தேர்தல், அடுத்த மாதம், 18ம் தேதி நடக்கும்; அதற்கான மனு தாக்கல், தேர்தல் அறிவிக்கப்பட்ட, 28ம் தேதி துவங்கும்; மனு தாக்கல் செய்ய இறுதி நாள், அடுத்த மாதம், 4ம் தேதி என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.எதிர்க்கட்சிகள் சார்பில், இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்க நேரம் கொடுக்காமல், தேர்தல் தேதியை, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.மனு தாக்கல் செய்ய, இறுதி நாள், 4ம் தேதி எனும்போது, மற்ற ... |
| Posted: தமிழகத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தலை சந்திக்க, பா.ஜ., தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க., புறக்கணிப்பு மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு ஆகியவற்றை மையமாக வைத்து, இம்முடிவு எடுக்கப்பட இருப்பதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில், மூன்று மாநகராட்சி மேயர்கள், எட்டு நகராட்சி தலைவர்கள் உட்பட, 1,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல், செப்., 18ம் தேதி நடக்கிறது .இத்தேர்தலில், போட்டியிட மனு தாக்கல் செய்ய, வரும் 4ம் தேதி இறுதி நாளாகும். லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, இத்தேர்தலை சந்திக்க, அ.தி.மு.க., தலைமை தயாராகி ... |
| பாக்., மீது பிரதமர் மோடி பாய்ச்சல் Posted: புதுடில்லி: ''பிரிவினைவாதிகளுடன், பாகிஸ்தான் பேச்சு நடத்தியது, பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.ஜப்பானை சேர்ந்த செய்தியாளர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டி: பாகிஸ்தானுடன் மட்டு மல்லாமல், அனைத்து அண்டை நாடுகளுடனும், இணக்கமாக செயல்படுவதையே இந்தியா விரும்புகிறது. குறிப்பாக, பாகிஸ்தானுடன், நட்பு ரீதியாகவும், இணக்கமாகவும், அமைதி பேச்சு நடத்துவதில், இந்தியா ஆர்வமாக உள்ளது. ஆனால், பாகிஸ்தான் அரசின் நடவடிக்கைகள் முறையாக இல்லை.இரு நாட்டு வெளியுறவு செயலர்களுக்கு இடையேயான பேச்சு நடக்கவிருந்த ... |
| Posted: புதுடில்லி: பிரதமர், நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் இடையே நிலவியதாக கூறப்பட்ட பிரச்னை தீர்ந்தது. ஐந்து நாள் பயணமாக, இன்று ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, பொறுப்புகளை தனக்கு அடுத்த இடத்தில் உள்ள, ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைத்துள்ளார்.பா.ஜ., தலைமையிலான, மத்தியில் ஆளும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, கடந்த மே 26ல் பொறுப்பேற்றது. மோடி, பிரதமரானார். அடுத்ததாக, உள்துறை அமைச்சராக, ராஜ்நாத் சிங் பொறுப்பேற்றார். இதன் மூலம், மத்திய அரசின், 'நம்பர் - 2' அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றார். சுற்றுப்பயணம்:இதை உறுதி செய்வது போல, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 30,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |