ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்
- நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்
- கவிதைகள் .
- இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக பார்ப்பவர்களுக்கு ஒரு குறும்படம் - மதசார்பின்றி அனைவரும் அவசியம் பாருங்கள் - சிந்தனை செய்
- காதில் பூச்சி நுழைந்தால் ... எடுப்பது எப்படி?
- டூத் பேஸ்ட்
- தடுப்பூசி ரகசியங்கள்-தொடர்
- வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்!
- இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
- யோகாசனம் பற்றிய பயனுள்ள பீடிஎப் புத்தகம்
- முத்திரைகளின் செயல்பாடுகள்
- ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
- புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : பேராசிரியர் ,கவிஞர் மித்ரா !
- இன்று 35வது திருமண நாள் விழா காணும் Dr.சுந்தரராஜ் தயாளன் தம்பதிகளை வாழ்த்தலாம் வாங்க
- உணவுகளின் போட்டோகள் - விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் 2014
- விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !
- வளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்
- இனியதோர் உதயம் - மாணிக்
- பாமரர் தேவாரம்
- ரமணியின் கவிதைகள்
- ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
| நலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ் Posted: 29 Aug 2014 10:13 AM PDT நலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ் ஆபீஸ் இடைவேளை நேரத்தில் பசிக்கும்போதெல்லாம் பஜ்ஜி, சாட்டிங் டைமில் சமோசா என ஏதேனும் நொறுக்குத்தீனியுடன், டீ காபி சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. இந்த ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகள் ஒட்டுமொத்த உடல் நலத்துக்கும் தீங்கு. இதற்கு மாற்றாக, உலர் பழங்கள் மற்றும் கொட்டை வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் பெறலாம். இவை ஒவ்வொன்றுமே ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களின் சுரங்கங்களாக விளங்குகின்றன. பாதாம், பிஸ்தா, ... |
| நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் Posted: 29 Aug 2014 10:00 AM PDT நலம் 360' - 1 மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான் குந்தா மலைக்கிராமத்தின் சாலையோரத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பு, என் வாழ்வின் மறக்க முடியாத ஒரு தருணத்தைப் பரிசளித்தது! ''எனக்கு 71 வயசு. 40 வருஷ விகடன் வாசகன். 'ஆறாம்திணை' முடிஞ்சிருச்சுனு படிச்சப்ப, மனசு பாரமாயிடுச்சு. நெஜமா சொல்றேன் தம்பி... கண்ணீர் வந்திருச்சு! ரெண்டு வருஷத்துல என் வீடே வேற மாதிரி ஆகிருக்கு. எல்லாரும் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிறாங்க. உளுந்தங்களி திரும்ப வந்திருக்கு. மருமக முடக்கறுத்தான் ... |
| Posted: 29 Aug 2014 09:57 AM PDT தமிழ் சினிமா . சாதிக்க வருபவர்களை சோதித்துப் பார்க்கும் மசாலாக்களின் ஆதிக்கம் . ரகசியம் . ஜாதிகளை அடியோடு ஒழிக்க தடித்த குரலில் முழங்கிக் கொண்டிருந்தார் மேடையில் தலைவர் . விசாரித்ததில் தெரிந்தது தொகுதியில் அவர் ஜாதி ஓட்டுகள் ரொம்ப கம்மியாம் . அதற்கு முன்பு ... வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டியதுதான் . சுற்றுச் சூழலுக்கு நன்மையே . ஆனால் முதலில் அனைவருக்கும் ஒரு வீட்டைத் தர முயல்வோம் . |
| Posted: 29 Aug 2014 09:54 AM PDT இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக பார்ப்பவர்களுக்கு ஒரு குறும்படம் - மதசார்பின்றி அனைவரும் அவசியம் பாருங்கள் - சிந்தனை செய் லிங்க் https://www.youtube.com/watch?v=WaE-K9diYpM |
| காதில் பூச்சி நுழைந்தால் ... எடுப்பது எப்படி? Posted: 29 Aug 2014 09:50 AM PDT காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும். தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும். பூச்சி வெளியே தெரிந்தாலும், ... |
| Posted: 29 Aug 2014 09:48 AM PDT நாம் காலையில் விழிப்பதே டூத் பேஸ்ட் முன்னால் தான். டூத் பேஸ்ட் பற்களை வெண்மையாக்கும். வாய் துர்நாற்றம் போக்கும். ஈறுகளை பலப்படுத்தும் என்பது போன்ற பயன்கள் நாம் அறிந்ததே. நாம் அறியாதது அல்லது அறிய வேண்டியது:- 1. பூச்சிக்கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம், கொப்புளங்கள், அரிப்பு போன்றவற்றை போக்க சிறிது டூத் பேஸ்ட்டை தடவுங்கள். வீக்கம் குறைவதுடன் சீக்கிரம் குணமாகும். 2. சிறிய தீக்காயங்களுக்கு டூத் பேஸ்ட் தற்காலிகமாக கூலிங் எபெக்ட் கொடுக்கும். 3. முகப்பருக்கள் வேகமாக மறைய தூங்க போகும் ... |
| Posted: 29 Aug 2014 09:29 AM PDT தடுப்பூசி ரகசியங்கள்-1 நம்மைச் சுற்றி எண்ணிலடங்கா எதிரிகள் இருக்கிறார்கள் என்றால், நம்புவீர்களா? ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். நம்மைச் சூழ்ந்திருக்கும் கண்ணுக்கே தெரியாத, பலதரப்பட்ட, தீமை தரும் கிருமிகள்தான் நம் எதிரிகள்! உடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து ஆக்கிரமிக்கும் கோடிக்கணக்கான நுண்கிருமிகள் எந்த நேரமும் நம்மை ஆட்டிப்படைக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. மிகுந்த எச்சரிக்கை உணர்வு உள்ள ஒரு தற்காப்புப் படை மட்டும் நம் உடலில் இல்லாமல்போனால், கிருமிகள் நடத்தும் வேட்டையில் ... |
| வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்! Posted: 29 Aug 2014 09:28 AM PDT வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்! யாராவது உங்களை 'அங்கிள்' என்றோ 'ஆன்ட்டி' என்றோ கூப்பிட்டால், நீங்கள் வருத்தப்படத் தொடங்குகிறீர்களா? ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். ஆனாலும் வயதாவதை ஒப்புக்கொள்ளாமல் மனசு மல்லுக்கட்டும். ''சான்ஸே இல்லை, அன்னைக்குப் பார்த்த மாதிரியே நதியா இன்னைக்கும் இருக்காங்க' என்று பெருமூச்சுவிடாத பெண்களோ, ''சரத்குமாருக்கு 60 வயசு ஆச்சாம். எப்படிய்யா உடம்பை மெயின்டெய்ன் பண்றாரு' என்று பொறாமையோடு புலம்பாத ஆண்களோ இருக்கிறார்களா என்ன? அவர்களுக்காக மூப்பைத் ... |
| இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' Posted: 29 Aug 2014 09:17 AM PDT இன்றைய சிந்தனைத் துளிகள் பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன் துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும். இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல். நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும். கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள். |
| யோகாசனம் பற்றிய பயனுள்ள பீடிஎப் புத்தகம் Posted: 29 Aug 2014 09:02 AM PDT பலவித ஆசனங்களை குறத்த சிறந்த புத்தகம் பீடிஎப் வடிவில் உங்களுக்காக நன்றி தினமலர் http://www.4shared.com/office/4U1Jy8dt/Yogaasanam.html |
| Posted: 29 Aug 2014 08:31 AM PDT நாம் பயன்படுத்தும் பெரும்பாலான தந்திர யோக முத்திரைகளும் மூன்று நிலைகளில் செயல்படுகின்றன. * உடல் சார்ந்த நிலை * மனம், எண்ணம் சார்ந்த நிலை * ஆன்மிக நிலை ஒரு முத்திரையைச் செய்யத் துவங்கும்போது முதலில் அதன் பலன்களை நமது பருவுடலில் மட்டுமே உணரமுடியும். இதையே உடல் சார்ந்த நிலை செயல்பாடு என்கிறோம். அதே முத்திரையை மேலும் பல வாரங்கள் அல்லது மாதங்கள் தொடர்ந்து செய்துவரும்போது, நமது எண்ணங்களிலும் உணர்வு நிலைகளிலும் பல மாற்றங்களை உணரமுடியும். இதையே மனம் சார்ந்த நிலை செயல்பாடுகள் என்கிறோம். ... |
| Posted: 29 Aug 2014 03:10 AM PDT ஆறுகள் அழுகின்றன….!! * மனிதனின் உழைப்பையே அன்று செழிக்க வைத்தன ஆற்றுநீர் பாசனம். * ஆறுகளின் அடையாளம் அழித்து வருகின்றது மணல் வியாபாரம். * ஆறுகள் படுகொலை மனிதர்கள் நரபலி மணல் கொள்ளையர் வேட்டை. * |
| புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : பேராசிரியர் ,கவிஞர் மித்ரா ! Posted: 29 Aug 2014 02:00 AM PDT 'புத்தகம் போற்றுதும்' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : பேராசிரியர் ,கவிஞர் மித்ரா ! வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150. ***** விமர்சன வேள்வி ***** 'புத்தகம் போற்றுதும்' என்னும் தலைப்பில் 50 நூல்களின் விமர்சனங்களை இரா. இரவி தொகுத்தளித்துள்ளார். விமர்சனம் என்பதும் சீரிய நேரிய ஆய்வே. சமன் செய்து சீர்தூக்கும் துலாக்கோல் போல் நடுநிலையில் இருந்து ... |
| இன்று 35வது திருமண நாள் விழா காணும் Dr.சுந்தரராஜ் தயாளன் தம்பதிகளை வாழ்த்தலாம் வாங்க Posted: 29 Aug 2014 01:24 AM PDT இனிய வாழ்த்துகள் . ![]() |
| உணவுகளின் போட்டோகள் - விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் 2014 Posted: 29 Aug 2014 12:09 AM PDT நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ... |
| விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! Posted: 28 Aug 2014 11:08 PM PDT இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 1 ம தேதி வருகிறது. அந்த நன்னாளில் செய்யவேண்டிய நைவேத்தியங்கள் பற்றி இங்கு பார்போம். |
| வளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம் Posted: 28 Aug 2014 11:04 PM PDT விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான். ... |
| Posted: 28 Aug 2014 10:46 PM PDT அன்பு நண்பர்களுக்கு உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்......... அனைவருக்கும் ஒரு நற்செய்தி..... ஆகஸ்ட் 27ம் தேதியன்று புதன்கிழமை திருப்பத்தூரில் GKM இன்டர்நெட் சென்டர் புதிதாக திறக்கப்பட உள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி அன்போடு வரவேற்கிறேன். வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய அனுபவம் நிறைய இருந்தாலும் சில அனுபவங்களை கற்று தேர்ந்து அதில் வெற்றியும் பெற்று (அப்படித்தான் நினைக்கிறேன்) சற்று முன்னேற்றம் அடைந்து இன்னுமொரு சேவை மையத்தை திறக்க போகிறேன்........ அனைவரும் ... |
| Posted: 28 Aug 2014 10:21 PM PDT பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| Posted: 28 Aug 2014 10:02 PM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| Posted: 28 Aug 2014 08:48 PM PDT * அவனுக்கென்னவாயிற்று? * அறிவாளி, ஆற்றல், துணிவு மனிதநேயமிக்கவன் என்று பலராலும் பாராட்டப்பட்டவன் சிறந்த நிர்வாகி என்று பெயரெடுத்தவனாயிற்றே… அவனுக்கென்னவாயிற்று? * ஐந்தாண்டுகளாக அவனுக்கு நேர்ந்தக் குடும்பப் பிரச்சினையின் மையக் கரு எது? மனக்குழப்பமா? மனச்சிதைவா? எது அவனுள்ளிருந்து ஆட்டிப்படைகின்றது? எல்லோராலும் நேர்மையானவனென்று மதிக்கப்பட்டவனுக்கு என்னவாயிற்று? * எவரிடமும் மனம்விட்டுப் பேசிப் பகிர்ந்துக் கொள்ளக்கூட துணிவின்றி மனக்குகைக்குள் அடைத்து வைத்து வைத்து நோய்க்கு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
