Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சாதனை ஒரே நாளில் 1.5 கோடி பேருக்கு புதிதாக வங்கி கணக்கு... மெகா திட்டத்தை டில்லியில் துவக்கினார் பிரதமர் மோடி

Posted:

புதுடில்லி:உலகிலேயே முதல் முறையாக, ஒரே நாளில், 1.5 கோடி பேருக்கு புதிய வங்கிக் கணக்கு துவக்கும் சாதனை திட்டமான, மக்கள் செல்வ திட்டம் என பொருள்படும், 'ஜன் தன் யோஜனா' நேற்று வெற்றிகரமாக துவக்கப்பட்டது. இதை, டில்லியில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். நாடு முழுவதும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பொதுமக்களுக்கு வங்கிக் கணக்குகளை துவக்கினர்.மத்தியில், பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, கடந்த மே 26ல் பொறுப்பேற்றது. ஆட்சிக்கு வந்து, மூன்று மாதங்களில், 'மெகா' திட்டமான, 7.5 கோடி பேருக்கு வங்கிக் கணக்கை ...

லோக்சபாவில் காங்., சோனியாவும், அ.தி.மு.க., வேணுகோபாலும்...அருகருகே!: புதுவித ஒதுக்கீட்டால் மற்ற கட்சி எம்.பி.,க்கள் திணறல்

Posted:

காங்கிரஸ் தலைவர், சோனியாவும், அ.தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர், வேணுகோபாலும் லோக்சபாவில் அடுத்தடுத்து அமரும் வகையில் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கட்சி எம்.பி.,க்களுக்கு ஒரே இடத்தில் இருக்கைகள் ஒதுக்கப்படாத தால், திணறும் சூழ்நிலை அனைத்து கட்சி, எம்.பி.,க்களுக்கும் ஏற்பட்டுள்ளது.நடப்பு, 16வது லோக்சபாவில், எம்.பி.,க் களுக்கு இருக்கைகளை ஒதுக்கும் பணியில், லோக்சபா செயலகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கட்சித் தலைவருக்கு முன்வரிசை இருக்கை எனில், அவருக்கு பின், அந்த கட்சி எம்.பி.,க் களுக்கு, இருக்கைகள் ஒதுக்கப்படும்.இதனால், கட்சித் தலைவர்களுடன், ...

'நீதித்துறைக்கு பின்பற்றப்படும் அளவுகோல்: அமைச்சர்கள் நியமனத்தில் அவசியம் தேவை'

Posted:

புதுடில்லி:'நீதித்துறை மற்றும் சிவில் சர்வீசஸ் பணி நியமனங்களுக்கு பின்பற்றப்படும் அளவுகோல், அமைச்சர்கள் நியமனத்திலும் பின்பற்றப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சுப்ரீம் கோர்ட் ஆலோசனை:'குற்றப் பின்னணி உடையவர்களையும், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்களையும், அமைச்சர்களாக நியமிப்பதை, பிரதமரும், மாநில முதல்வர்களும் தவிர்க்க வேண்டும். இதற்கான பொறுப்பு, அவர்களுக்கு உண்டு' என, உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம், மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியது.ஐந்து நீதிபதிகள் அடங்கிய, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு,இந்த ஆலோசனையை ...

சொத்து குவிப்பு வழக்கில் செப்டம்பர்20ல் தீர்ப்பு ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் ஆஜராக நீதிபதி உத்தரவு

Posted:

பெங்களூரு:கடந்த, 17 ஆண்டுகளாக நடந்து வந்த, தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை முடிந்தது. வரும்,செப்., 20ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக, நீதிபதி அறிவித்துள்ளார். அன்று, ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த, 1996 ல், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் , ஜெயலலிதா, 1991 முதல், 1996 வரை முதல்வராக இருந்த காலத்தில், ஊழல் செய்து, 66.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்தார் என, லஞ்ச ஒழிப்பு போலீசார், குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்தனர்.பல இடங்களில் சோதனை:ஜெயலலிதாவின், 36, போயஸ் கார்டன் வீடு, 31, போயஸ் கார்டன் அலுவலகம், ஐதராபாத், ...

தி.மு.க.,வில் அழகிரி? கருணாநிதி

Posted:

சென்னை:''அழகிரியை மீண்டும் தி.மு.க., வில், இணைத்துக் கொள்வது தொடர்பாக, பத்திரிகையாளர்களுக்கு தீனி போட நான் விரும்பவில்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.அவரது பேட்டி:பெங்களூரில் நடைபெறும் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், 18 ஆண்டுகளுக்கு பின், அடுத்த மாதம் 20ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என, நீதிபதி தெரிவித்துள்ளார். என் மனநிலை எப்போதும் போலத்தான் இருக்கிறது.தீர்ப்பு, தமிழக அரசியலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ, இல்லையோ; மன மாற்றத்தை ஏற்படுத்தும்.தீர்ப்புக்கான தேதியை, நீதிபதி அறிவித்துள்ள நாளில், முதல்வர் ஜெயலலிதாவை, ...

2ஜி விவகாரமே தோல்விக்கு முக்கிய காரணம்: ஸ்டாலின் ஆதங்கம்

Posted:

திருப்பூர்:'லோக்சபா தேர்தலில் தி.மு.க., தோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அதில், 2ஜி விவகாரமே முக்கிய காரணம்' என, திருப்பூரில் நடந்த கூட்டத்தில், ஸ்டாலின், தனது ஆதங்கத்தை கட்சியினர் மத்தியில் வெளிப்படுத்தினார்.திருப்பூர் காங்கயம் ரோடு வேலன் ஓட்டலில், தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம் நேற்று நடந்தது; இதையொட்டி, தி.மு.க., நிர்வாகிகளுடன் ஆய்வு கூட்டம் நடப்பட்டது. இளைஞரணி, மாணவரணி, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வார்டு செயலாளர்கள், பாராளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி உறுப்பினர்கள், ஒன்றிய மற்றும் நகர செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை ...

தொடரும் ராஜினாமா படலம்: மணிப்பூர் கவர்னர் ராஜினாமா

Posted:

புதுடில்லி: சொந்த காரணங்களுக்காக தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்வதாக மணிப்பூர் கவர்னர் வி.கே.துகால் கூறினார். மத்தியில் கடந்த மே மாதம் பா.ஜ. தலைமையிலானதேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்றது. பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். இதையடுத்து மாநில கவர்னகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். சில மாநில கவர்னர்கள் ராஜினாமா செய்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிரா கவர்னர் சங்கரநாராயணன் மிசோரம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். அம்மாநிலம் செல்ல மறுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கேரள கவர்னராக உள்ள ஷீலா தீட்சித்தும் ராஜினாமா ...

அதிகாரிகள் வெளிநாட்டு பயணம்: வருகிறது கட்டுப்பாடு

Posted:

புதுடில்லி:'மத்திய அரசு அதிகாரிகள், வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் எனில், பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சரவை செயலர்கள் அடங்கிய பரிசீலனை கமிட்டியின் ஒப்புதலைப் பெற வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதுதொடர்பாக, மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:மத்திய அரசு அதிகாரிகள், வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் எனில், பிரதமர் அலுவலகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். அத்துடன், வெளிநாட்டுப் பயணத்திற்கு, அமைச்சகத்தின் உரிய அதிகார அமைப்பிடம் இருந்து ஒப்புதல் பெறும் முன், அந்தப் பயண திட்டமானது, ...

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் விளையாட்டு யோகாவுக்கு சேவை வரி: பெற்றோர் எதிர்ப்பு

Posted:

சென்னை: 'சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கற்றுத் தரப்படும் விளையாட்டு மற்றும் யோகா போன்ற உடற்பயிற்சிகளுக்கு, சேவை வரி செலுத்த வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளதற்கு, பெற்றோரிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.மத்திய பள்ளிக்கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படுகிறது. இவ்வாரியத்தின், அங்கீகாரம் பெற்ற சி.பி.எஸ்.இ., பள்ளிகள், நாடு முழுவதும் உள்ளன. இவற்றில், லட்சக்கணக்கான மாணவர் படிக்கின்றனர்.இப்பள்ளிகளின், கட்டட வாடகை மற்றும் பாடத் திட்டத்தைத் தவிர, மாணவர்களுக்கு போதிக்கப்படும், யோகா, கர்நாடக சங்கீதம், நடனம், கிரிக்கெட், ...

9 அணைகளின் கொள்ளளவு பாதியாக குறைந்தது!:நீர்வளத்துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Posted:

தமிழகத்தின், ஒன்பது அணைகளில், நீர்வளத்துறை நடத்திய ஆய்வில், அவற்றின் கொள்ளளவு பாதியாகக் குறைந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.பொதுப்பணித் துறையின், நீர்வள ஆதாரத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 66 அணைகள்; மின் வாரிய கட்டுப்பாட்டில் உள்ள, 38 அணைகள் என, 104 அணைகளை புனரமைக்க, 2012 - -13ல், தமிழக அரசு முடிவு செய்தது.இப்பணியை, நான்கு கட்டங்களாக, 745 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள, ஏற்பாடு செய்யப்பட்டது.இதில், 8௦ சதவீதம், உலக வங்கி கடனுதவி மற்றும் 20 சதவீதம், நீர்வள ஆதாரத் துறை, மின் வாரியம், வேளாண் பொறியியல் துறையின் பங்களிப்பாகும்.'அணைகள் புனரமைப்பு மற்றும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™