Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தயாநிதி மாறனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தடை இல்லை

Posted: 28 Aug 2014 12:57 PM PDT

ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது தொடர்பான விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) தடை விதிக்க முடியாது உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

14,700 ஆசிரியர்களுக்கு நாளை முதல் பணி நியமனக் கலந்தாய்வு

Posted: 28 Aug 2014 12:56 PM PDT

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 14,700 ஆசிரியர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக.30) தொடங்குகிறது.

கலாநிதி மாறனின் கேபிள் நிறுவன விவகாரம்: மத்திய அரசின் முன்னறிவிப்புக்கு இடைக்காலத் தடை

Posted: 28 Aug 2014 12:54 PM PDT

கலாநிதி மாறன் நிறுவன கேபிள் உரிமம் ரத்து விவகாரத்தில் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின் ஒரு பகுதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக அதிகாரிகளுக்கு மிரட்டல்: கேரளத்துக்கு கருணாநிதி கண்டனம்

Posted: 28 Aug 2014 12:52 PM PDT

தமிழகப் பொதுப் பணித்துறை அதிகாரிகளை, கேரள வனத் துறை அதிகாரிகள் மிரட்டியதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.

மக்கள் நலப் பணியாளர்களுக்கு ஐந்து மாத ஊதியம் வழங்க வேண்டும்

Posted: 28 Aug 2014 12:52 PM PDT

மக்கள் நலப் பணியாளர்களைப் பணியிலிருந்து நீக்கியபோது நிறுத்தி வைக்கப்பட்ட ஐந்து மாத ஊதியத் தொகையை நான்கு வாரங்களுக்குள் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு செப்டம்பர் 18-இல் இடைத் தேர்தல்

Posted: 28 Aug 2014 12:50 PM PDT

தமிழகத்தில் காலியாகவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.

மோடி நாளை ஜப்பான் பயணம்

Posted: 28 Aug 2014 12:49 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி, ஐந்து நாள் பயணமாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) ஜப்பானுக்குச் செல்கிறார்.

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்: முதல்வர் ஜெயலலிதாவிடம் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தல்

Posted: 28 Aug 2014 12:46 PM PDT

பள்ளிகளில் அகண்ட அலைவரிசை இணைப்பு, மின்னணு சாதனங்களின் உற்பத்தியில் தன்னிறைவு உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழகம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவிடம் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார்.

முசாஃபர்நகர் கலவரம்: மூவருக்கு முதலாம் நினைவஞ்சலி

Posted: 28 Aug 2014 12:27 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

ராஜஸ்தானில் போலீஸார் மீது கிராம மக்கள் தாக்குதல்: 5 பேர் காயம்; 10 பேர் கைது

Posted: 28 Aug 2014 12:27 PM PDT

ராஜஸ்தான் மாநிலம் லாபுவா கிராமத்தில், போலீஸார் மீது அந்தக் கிராம மக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

Posted: 28 Aug 2014 12:26 PM PDT

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை மத்திய அரசு மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஜம்மு-காஷ்மீர் மாநில சட்ட மேலவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொடியமர்வுப் பேச்சுவார்த்தையை மீறி பாகிஸ்தான் தாக்குதல்

Posted: 28 Aug 2014 12:25 PM PDT

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்காக இந்தியா-பாகிஸ்தான் இடையே புதன்கிழமையன்று கொடியமர்வுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட சில மணி நேரத்தில் பாகிஸ்தான் படையினர் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர்.

ஐ.மு.கூ. ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட ஐ.ஓ.சி. இயக்குநர்கள் 4 பேர் நீக்கம்

Posted: 28 Aug 2014 12:25 PM PDT

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் (ஐ.ஓ.சி.) நிறுவனம் சாரா இயக்குநர்களாக நியமிக்கப்பட்ட 4 பேரை மத்திய அரசு பதவி நீக்கம் செய்துள்ளது.

தாத்ரா வாகன பேர வழக்கு: தேஜிந்தர் சிங்குக்கு சிபிஐ சம்மன்

Posted: 28 Aug 2014 12:24 PM PDT

தாத்ரா ராணுவ வாகனங்கள் வாங்குவதற்காக, ரூ.14 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக, ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி தேஜிந்தர் சிங் மீது தொடரப்பட்ட வழக்கில், அவர் அடுத்த மாதம் 1-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஆந்திரம்: விநாயகர் சதுர்த்திக்கு 7.5 டன் எடையில் லட்டு

Posted: 28 Aug 2014 12:23 PM PDT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஆந்திர மாநிலத்தில் 7,500 கிலோ எடையிலும், 5,000 கிலோ எடையிலும் இரண்டு பெரிய லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

தலைமை நீதிபதி நியமன விவகாரம்: கட்ஜுவின் கருத்துக்கு வழக்குரைஞர்கள் எதிர்ப்பு

Posted: 28 Aug 2014 12:21 PM PDT

"உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தகுதி அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டுமே தவிர, பதவி மூப்பு அடிப்படையில் அல்ல' என்ற இந்தியப் பத்திரிகை கவுன்சில் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்துக்கு அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்: தற்கொலைக்கு தூண்டியதாக இரு ஆசிரியர்கள் கைது

Posted: 28 Aug 2014 12:21 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், விரார் பகுதியில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில், மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டியதாக ஆசிரியர்கள் 2 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அஸ்ஸாம் முன்னாள் அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ சோதனை

Posted: 28 Aug 2014 12:20 PM PDT

சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக அஸ்ஸாம் மாநில முன்னாள் அமைச்சர்கள் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அஞ்சன் தத்தா ஆகியோரது வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 22 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம்: அஸ்ஸாம் முன்னாள் அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ சோதனை

Posted: 28 Aug 2014 12:19 PM PDT

சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக அஸ்ஸாம் மாநில முன்னாள் அமைச்சர்கள் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அஞ்சன் தத்தா ஆகியோரது வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 22 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

70 வயதானதும் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும்: ஜனார்தன் துவிவேதி

Posted: 28 Aug 2014 12:19 PM PDT

70 வயதானதும், தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்தன் துவிவேதி தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் உள்ளவரை பாலியல் பலாத்காரமும் இருக்கும்: திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கருத்தால் மீண்டும் சர்ச்சை

Posted: 28 Aug 2014 12:18 PM PDT

"உலகம் உள்ள வரை பாலியல் பலாத்காரமும் இருக்கும்' என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ தீபக் ஹல்தர் தெரிவித்த கருத்தால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சதுர்வேதி நீக்கப்பட்ட விவகாரம்: மருத்துவ மாணவர்கள் பிரதமருக்கு கடிதம்

Posted: 28 Aug 2014 12:14 PM PDT

அண்மையில் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமைக் கண்காணிப்பு அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதியை, மீண்டும் அதே பதவியில் அமர்த்தக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

குமரி மாவட்டத்தில்45 போலி குடும்ப அட்டைகள் பறிமுதல்

Posted: 28 Aug 2014 12:14 PM PDT

குமரி மாவட்ட நியாயவிலைக் கடைகளில் அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் 45 போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

டிடிசி பஸ்களில் இடிஎம் மூலம் பயணச் சீட்டு வழங்கத் திட்டம்

Posted: 28 Aug 2014 12:13 PM PDT

தில்லி போக்குவரத்து கார்ப்பரேஷன் (டிடிசி) பஸ்களில் எலெக்ட்ரானிக் டிக்கெட் இயந்திரங்கள் (இடிஎம்) மூலம் பயணச் சீட்டு வழங்கும் முறை 6 மாதங்களுக்குள் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டு பணிப்பெண் தற்கொலை

Posted: 28 Aug 2014 12:13 PM PDT

தெற்கு தில்லியில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டுப் பணிப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

7 ஆண்டுகள் வாடகை பாக்கி: கடைகளில் உள்ள பொருள்கள் ஜப்தி

Posted: 28 Aug 2014 12:13 PM PDT

நாகர்கோவில் நகராட்சி வணிக வளாகத்தில் 7ஆண்டுகள் வாடகை பாக்கிக்காக சீல் வைக்கப்பட்ட கடைகளில் இருந்த பொருள்களை அதிகாரிகள் வியாழக்கிழமை ஜப்தி செய்தனர்.

சிறுபான்மையின மாணவிகள் மெüலானா ஆசாத் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 28 Aug 2014 12:13 PM PDT

கல்வியைத் தொடர வசதி இல்லாத சிறுபான்மையின மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

பிரதமரின் "ஜன்-தன்' திட்டம் ஒரே நாளில் 15 ஆயிரம் பேர் வங்கிக் கணக்கு தொடக்கம்

Posted: 28 Aug 2014 12:12 PM PDT

பிரதமரின் "ஜன்-தன்' திட்டத்தின் கீழ், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேர் புதிய வங்கி சேமிப்புக் கணக்கை வியாழக்கிழமை தொடங்கினர்.

பத்மநாபபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 28 Aug 2014 12:12 PM PDT

தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவமுகாம் பத்மநாபபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மகன் மீது புகார் கூறியது யார்? பதிலளிக்க ராஜ்நாத் சிங் மறுப்பு

Posted: 28 Aug 2014 12:11 PM PDT

காவல் துறை அதிகாரியிடம் லஞ்சம் வாங்கியதாக, தனது மகன் மீது புகார் கூறியது யார்? என்பதைத் தெரிவிப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டார்.

ரப்பர் கழகத் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தக் கோரிக்கை: சென்னையில் செப்.1 இல் பேச்சுவார்த்தை

Posted: 28 Aug 2014 12:11 PM PDT

குமரி மாவட்டம் அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தக் கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை வரும் செப். 1 ஆம் தேதி சென்னையில் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.

வீடு இடிக்கப்பட்ட சம்பவம்:அதிமுக நிர்வாகி உள்பட 5 பேர் கைது

Posted: 28 Aug 2014 12:10 PM PDT

ஈத்தாமொழியில் வீடு இடிக்கப்பட்ட வழக்கில் அதிமுக நிர்வாகி உள்பட 5 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். ஈத்தாமொழியைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி செல்வம் (60). இவர் உய

விநாயகர் சதுர்த்தி, ஓணம்: பூக்கள் விலை உயர்வு!

Posted: 28 Aug 2014 12:10 PM PDT

விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை (அக். 29) விநாயகர் சதுர்த்தி விழாவும், செப். 6ஆம் தேதி திருவோண பண்டிகையும்

பாகிஸ்தான் அணியை ஆதரித்து கோஷம்: மாணவர்களிடையே மோதல்

Posted: 28 Aug 2014 12:10 PM PDT

பஞ்சாப் மாநிலத்தில் தனியார் கல்லூரி விடுதியில், கிரிக்கெட் விளையாட்டை தொலைக்காட்சியில் பார்த்தபோது பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் கோஷமிட்டதை அடுத்து இரு குழுக்களிடையே நிகழ்ந்த மோதலில் 12 பேர் காயமடைந்தனர்.

ஓணம் பண்டிகையை வரவேற்கத் தயாராகும் குமரி மக்கள்

Posted: 28 Aug 2014 12:10 PM PDT

கேரளத்தின் தேசிய விழாவான ஓணம் பண்டிகையை வரவேற்க கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தயாராகியுள்ளனர். இதன் முன்னோடியாக அத்தப்பூ கோலமிடுதல் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது.

தக்கலை சரக அறிவியல் கண்காட்சி: 57 பள்ளிகள் பங்கேற்பு

Posted: 28 Aug 2014 12:10 PM PDT

தக்கலை மருத்துவமனை வட்டார அரசு ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற தக்கலை சரக அறிவியல் கண்காட்சியில் 57 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் பங்கேற்றன.

சதானந்த கௌடா மகன் மீதான வழக்கில் சட்டப்படி நடவடிக்கை: சித்தராமையா

Posted: 28 Aug 2014 12:09 PM PDT

ரயில்வே அமைச்சர் சதானந்தா கௌடாவின் மகன் கார்த்திக் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரத்தில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா வியாழக்கிழமை தெரிவித்தார்.

புகைப்பட கலைஞர்கள் நலச் சங்கக் கூட்டம்

Posted: 28 Aug 2014 12:09 PM PDT

மார்த்தாண்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞர்கள் நலச் சங்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிலம் மோசடி புகார்:விவசாயி கைது

Posted: 28 Aug 2014 12:09 PM PDT

குமரி மாவட்டம் பாகோடு பகுதியில் போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி செய்ததாக விவசாயி தங்கராஜ் (52) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

மின்வாரிய ஊழியரை தாக்கிய இருவர் மீது வழக்கு

Posted: 28 Aug 2014 12:09 PM PDT

மார்த்தாண்டம் அருகே மின்வாரிய ஊழியரை தாக்கியதாக இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். மார்த்தாண்டம் அருகேயுள்ள இரவிபுதூர்கடை மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர் வின்செ

வல்லநாடு அருகே இளைஞர் வெட்டிக் கொலை

Posted: 28 Aug 2014 12:09 PM PDT

வல்லநாடு அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வல்லநாடு அருகேயுள்ள சென்னல்பட்டியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பூல்பாண்டி (55). இவருக்கும்

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஹரியாணா ஜன்ஹித் காங்கிரஸ்

Posted: 28 Aug 2014 12:08 PM PDT

ஹரியாணாவில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த குல்தீப் பிஷ்ணோய் தலைமையிலான ஹரியாணா ஜன்ஹித் காங்கிரஸ் (ஹெச்.ஜே.சி.-பி.எல்) கட்சி, அக்கூட்டணியில் இருந்து திடீரென விலகியுள்ளது.

பைக்கில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு

Posted: 28 Aug 2014 12:08 PM PDT

சாத்தான்குளம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த விவசாயி வியாழக்கிழமை இறந்தார். பழனியப்பபுரத்தைச் சேர்ந்தவர் யோ. தாவீது (46). விவசாயியான இவர் புதன்கிழமை அவர் தோட்ட

தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்புக் குழும ஏடிஜிபி ஆய்வு

Posted: 28 Aug 2014 12:08 PM PDT

தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்புக் குழும ஏடிஜிபி சைலேந்திரபாபு வியாழக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில்பிரதமரின் ஜன் தன் திட்டத்தில் 20 ஆயிரம் பேர் வங்கிக் கணக்கு தொடக்கம்

Posted: 28 Aug 2014 12:08 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் ஜன் தன் திட்டத்தில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் வங்கிக் கணக்குத் தொடங்கியுள்ளனர்.

திருச்செந்தூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

Posted: 28 Aug 2014 12:07 PM PDT

திருச்செந்தூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பேரூராட்சிப் பணியாளர்கள் பறிமுதல் செய்தனர்.

வல்லநாடு அருகே இளைஞர் வெட்டிக் கொலை

Posted: 28 Aug 2014 12:07 PM PDT

வல்லநாடு அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வல்லநாடு அருகேயுள்ள சென்னல்பட்டியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பூல்பாண்டி (55). இவருக்கும்

வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல்: டாஸ்மாக் விற்பனையாளர் கைது

Posted: 28 Aug 2014 12:07 PM PDT

கோவில்பட்டி வழக்குரைஞர் பார் அசோஸியேஷனுக்குள் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்த டாஸ்மாக் விற்பனையாளரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

பைக் திருட்டு: தொழிலாளி கைது

Posted: 28 Aug 2014 12:06 PM PDT

கோவில்பட்டியில் பைக் திருடிய கூலித் தொழிலாளியை போலீஸார் வியாழக்கிழமை கைதுசெய்தனர். காவல் உதவி ஆய்வாளர் கணேசன் தலைமையில் போலீஸார் வியாழக்கிழமை எட்டயபுரம் சாலையில் வாகனச்

கோவில்பட்டி கல்லூரியில் தொழில்நுட்பப் பயிலரங்கம்

Posted: 28 Aug 2014 12:06 PM PDT

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான 3 நாள் தொழில்நுட்பப் பயிலரங்கம் நடைபெற்றது.

ஆக்ஸிலியம் பள்ளி விளையாட்டு விழா

Posted: 28 Aug 2014 12:06 PM PDT

கீழஈரால் ஆக்ஸிலியம் மெட்ரிக் பள்ளி 9 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிச் செயலர் ஆஞ்சலா தலைமை வகித்தார். காவல் உதவி ஆய்வாளர் மாரியப்பன் முன்னிலை

மணப்பாடு திருச்சிலுவை ஆலயத் திருவிழா:செப். 4இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்

Posted: 28 Aug 2014 12:06 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தின் 435ஆவது திருவிழா செப். 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தூத்துக்குடியில் அரசுப் பொருள்காட்சி செப். 20இல் தொடக்கம்

Posted: 28 Aug 2014 12:06 PM PDT

தூத்துக்குடியில் அரசுப் பொருள்காட்சி செப். 20 ஆம் தேதி தொடங்கி 45 நாள்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிந்தலக்கரை பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா

Posted: 28 Aug 2014 12:05 PM PDT

சிந்தலக்கரை எஸ்ஆர்எம்எஸ் மெட்ரிக் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தாளாளர் ஸ்ரீராமமூர்த்தி சுவாமிகள் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் திருக்குமரன்

பனைவிளையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

Posted: 28 Aug 2014 12:05 PM PDT

சாத்தான்குளம் அருகே பனைவிளை செல்வ விநாயகர் கோயிலில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

துபை: போலி இந்திய ரூபாய் நோட்டுகளை விற்க முயன்ற 4 பேர் கைது

Posted: 28 Aug 2014 12:05 PM PDT

துபையில் தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.47.2 லட்சம் முகமதிப்பு கொண்ட இந்திய கள்ள நோட்டுக்களை விற்க முயன்ற 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

"அரசுத் துறைகளில் தமிழில் கோப்புகள் இருக்க வேண்டும்'

Posted: 28 Aug 2014 12:05 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில்÷அரசின் அனைத்துத் துறைகளிலும் தமிழ் மொழியில் கோப்புகள் இருக்க வேண்டும் என ஆட்சியர் ம. ரவிக்குமார் அறிவுறுத்தினார்.

ஜன் தன் திட்டம்: கோவில்பட்டியில் தொடக்கம்

Posted: 28 Aug 2014 12:04 PM PDT

ஏழைக் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கும் பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடக்க விழா கோவில்பட்டியில் ஆந்திரா வங்கி மற்றும் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளைகளில் வியாழக்கிழமை நடைபெற்றது.

164 பேருக்கு சைக்கிள்கள் அளிப்பு

Posted: 28 Aug 2014 12:04 PM PDT

தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஐ.எஸ். எதிர்ப்பு: அஸாதுடன் கைகோக்க பிரான்ஸ் மறுப்பு

Posted: 28 Aug 2014 12:04 PM PDT

இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் சிரியா அதிபர் அல்-அஸாதுடன் இணைந்து செயல்படப் போவதில்லை என பிரான் அறிவித்துள்ளது.

மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

Posted: 28 Aug 2014 12:04 PM PDT

கோவில்பட்டியில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞர் இறந்தார். கோவில்பட்டி தெப்பக்குளத் தெருவைச் சேர்ந்தவர் பிச்சையா மகன் கருப்பசாமி (23). இவர், வீட்டில் உள்ள

பைக்கில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு

Posted: 28 Aug 2014 12:04 PM PDT

சாத்தான்குளம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த விவசாயி வியாழக்கிழமை இறந்தார். பழனியப்பபுரத்தைச் சேர்ந்தவர் யோ. தாவீது (46). விவசாயியான இவர் புதன்கிழமை அவர் தோட்டத்தில்

பைக்கில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு

Posted: 28 Aug 2014 12:04 PM PDT

சாத்தான்குளம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த விவசாயி வியாழக்கிழமை இறந்தார். பழனியப்பபுரத்தைச் சேர்ந்தவர் யோ. தாவீது (46). விவசாயியான இவர் புதன்கிழமை அவர் தோட்டத்தில்

"ஆசிய ஓட்டுநர்களுக்கு சாலை விதிகள் தெரியாது'

Posted: 28 Aug 2014 12:03 PM PDT

"ஆசிய ஓட்டுநர்களுக்கு சாலை விதிகளைப் புரிந்து கொள்ளும் திறன் கிடையாது' என ஆஸ்திரேலிய எம்.பி. வாகன் ஜான்சன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விளாத்திகுளம் அருகே விபத்து: திருச்சியைச் சேர்ந்தவர் சாவு

Posted: 28 Aug 2014 12:03 PM PDT

விளாத்திகுளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் வியாழக்கிழமை அதிகாலை மோதியதில் திருச்சியைச் சேர்ந்தவர் இறந்தார்.

கல்விக் கடன் சிறப்பு முகாம் செப். 6 ஆம் தேதிக்கு மாற்றம்

Posted: 28 Aug 2014 12:03 PM PDT

தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற இருந்த கல்விக் கடன் வழங்கும் முகாம் செப். 6 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மின்கம்பத்தில் கார் மோதி 7 பேர் காயம்

Posted: 28 Aug 2014 12:03 PM PDT

விளாத்திகுளம் அருகே கீழசண்முகபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் புதன்கிழமை இரவு சாலையோர மின்கம்பத்தின் மீது கார் மோதிய விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

மணல் கடத்தல்: மினிலாரி பறிமுதல்

Posted: 28 Aug 2014 12:03 PM PDT

சாத்தான்குளம் அருகே மணல் கடத்திய மினிலாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

"காஸாவை மீண்டும் கைப்பற்ற பரிசீலித்தது இஸ்ரேல்'

Posted: 28 Aug 2014 12:03 PM PDT

காஸா பகுதியை மீண்டும் ராணுவத்தை அனுப்பிக் கைப்பற்றுவது குறித்து இஸ்ரேல் அரசு தீவிரமாக பரிசீலித்ததாக இஸ்ரேல் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்கள் நல வாரியத்தில் சேர, புதுப்பிக்க கோவில்பட்டியில் சிறப்பு முகாம்

Posted: 28 Aug 2014 12:03 PM PDT

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் உடல் உழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்ய மற்றும் புதுப்பிப்பதற்கான சிறப்பு முகாம் கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கராத்தே பயிற்சி முகாம்

Posted: 28 Aug 2014 12:02 PM PDT

நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி சார்பில் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி முகாம் நடைபெற்றது.

கொலைப் புகாரில் நவாஸூக்கு எதிராக எஃப்.ஐ.ஆர்.

Posted: 28 Aug 2014 12:02 PM PDT

பாகிஸ்தானில் அரசுக்கு எதிராகப் போராடி வரும் மதகுரு தாஹிருல் காத்ரியின் கோரிக்கையை ஏற்று,

உலக விளையாட்டு தினவிழா போட்டிகள்

Posted: 28 Aug 2014 12:01 PM PDT

சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் உலக விளையாட்டு தினவிழாவை யொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

ரோட்ராக்ட் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 28 Aug 2014 12:01 PM PDT

காரைக்குடி அருகே திருமயம் அடுத்துள்ள மௌண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் ரோட்ராக்ட் சங்கத்தின் 2014-15ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

Posted: 28 Aug 2014 12:01 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் சாக்கோட்டை, கண்ணங்குடி ஒன்றியங்களில் உள்ள 9-ஆம் வகுப்பு அறிவியல், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் ஆசிரி யர்களுக்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பற்றிய புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.

"தெற்கு சூடானில் ஐ.நா. ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது'

Posted: 28 Aug 2014 12:01 PM PDT

சுட்டு வீழ்த்தப்பட்டதனாலேயே, தெற்கு சூடானில் ஐ.நா. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

அரசனூரில் சிறப்புப் புகைப்படக் கண்காட்சி

Posted: 28 Aug 2014 12:01 PM PDT

சிவகங்கை மாவட்டம் அரசனூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த சிறப்புப் புகைப் படக் கண்காட்சி நடைபெற்றது.

நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 28 Aug 2014 12:01 PM PDT

சிவகங்கையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலை பராமரிப்பை தனியாருக்கு கொடுக்கக்கூடாது.

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு நேரடிப் பங்கு: அமெரிக்கா குற்றச்சாட்டு

Posted: 28 Aug 2014 12:01 PM PDT

உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் ரஷியா நேரடியாகப் பங்கேற்றுள்ளதாக அமெரிக்கா வியாழக்கிழமை குற்றம் சாட்டியது.

வைகையில் தண்ணீர் திறக்க நடவடிக்கை: ஆட்சியர் உறுதி

Posted: 28 Aug 2014 12:00 PM PDT

சிவகங்கை மாவட்ட விவசாயத் தேவைக்கும், குடிநீருக்கும் வைகையாற்றில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் உறுதி அளித்தார்.

பிள்ளையார்பட்டியில் தேரோட்டம்

Posted: 28 Aug 2014 12:00 PM PDT

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் சதுர்த்தி பெருவிழாவையொட்டி 9 ஆம் திருநாள் விழாவாக தேரோட்டம் நடைபெற்றது.

பள்ளியில் இலக்கிய மன்றம் துவக்கம்

Posted: 28 Aug 2014 12:00 PM PDT

பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் 62-ஆவது இலக்கிய மன்ற துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விதை சுத்திகரிப்பு நிலையத்தில் அதிகாரி ஆய்வு

Posted: 28 Aug 2014 11:59 AM PDT

ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் உள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தில் விதைச்சான்று இயக்குநர் ர.பழனிச்சாமி புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார். அங்கு விதைகள் சுத்திகரிப்பு செய்து சான்றட்டை கட்டப்பட்ட விதை மூடைகளில், அட்டையின் விவ

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

Posted: 28 Aug 2014 11:59 AM PDT

முதுகுளத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் வட்டார வள மைய அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் கிராம ஊராட்சிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது.

அரசு மருத்துவமனை ஊழியர் மீது தாக்குதல்

Posted: 28 Aug 2014 11:59 AM PDT

ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ உதவியாளரை தாக்கியவரை பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

பரமக்குடி வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க கோரிக்கை

Posted: 28 Aug 2014 11:58 AM PDT

பரமக்குடி நகர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால், பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையை போக்க வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தான நிலையிலுள்ள பாலம் சீரமைக்கப்படுமா?

Posted: 28 Aug 2014 11:58 AM PDT

திருவாடானை தாலுகா தொண்டி அருகே மேல சேந்தனேந்தல் கிராமத்தில் தடுப்புச் சுவர் இடிந்து ஆபத்தான நிலையிலுள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஆகஸ்ட் 30 மின் தடை

Posted: 28 Aug 2014 11:58 AM PDT

பரமக்குடி 110 கேவி உபமின் நிலையத்தில் சனிக்கிழமை(ஆக.30) மாதாந்திர மின்பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் அன்றைய தினம் காலை 9 முதல் மாலை 3 மணிவரை சத்திரக்குடி, பரமக்குடி,

கீழக்கரையில் புத்தக வெளியீட்டு விழா

Posted: 28 Aug 2014 11:58 AM PDT

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் கூட்டமைப்பு துவக்க விழா மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

அதிமுக நன்றி அறிவிப்பு கூட்டம்

Posted: 28 Aug 2014 11:57 AM PDT

கீழக்கரையில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

பாம்பனில் சாலை மறியல்:500 மீனவர்கள் மீது வழக்கு

Posted: 28 Aug 2014 11:57 AM PDT

மண்டபம் கடலில் மாயமான 3 மீனவர்களை தேட வலியுறுத்தி, பாம்பன் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 500 மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகள் சமரச பேச்சு: ம.ம.க. போராட்டம் வாபஸ்

Posted: 28 Aug 2014 11:57 AM PDT

இளையான்குடியில் புதிய பேருந்துநிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தேவகோட்டை நகராட்சியில் கொசு ஓழிப்பு பணிகள்

Posted: 28 Aug 2014 11:56 AM PDT

தேவகோட்டை நகராட்சியில் மூன்று வார்டுகளில் கொசு ஓழிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேவகோட்டை நகராட்சியில் உள்ள 22, 23, 26ஆவது வார்டு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் பழைய டயர்கள் மூடப்படாத பழைய பொருள்கள் ஆகியவற்றின் மூலம் கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில்,

கானாவில் யூரியா உர ஆலை: திட்டத்தைப் புதுப்பிக்க இந்தியா-கானா முடிவு

Posted: 28 Aug 2014 11:56 AM PDT

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் யூரியா உர ஆலை அமைப்பது தொடர்பான திட்டத்தை மறு ஆய்வு செய்ய இந்தியாவும் கானாவும் முடிவு செய்துள்ளன.

பாம்பன் கடலில் சூறாவளிக் காற்று: ரயில்கள் நிறுத்தம்

Posted: 28 Aug 2014 11:56 AM PDT

பாம்பன் கடலில் சூறாவளி காற்று வீசியதையடுத்து, ரயில் பாலத்தை கடந்து செல்ல ரயில்களுக்கு அனுமதி வழங்கப்படாததையடுத்து, அனைத்து ரயில்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

சிறப்பு முகாமில் 16 வங்கிகள் பங்கேற்பு

Posted: 28 Aug 2014 11:56 AM PDT

ஏழைக் குடும்பங்களுக்கு தலா 2 வங்கிக் கணக்கு தொடங்கும், பிரதமரின் மக்கள் நிதி (ஜன் தன்) திட்டத்தின் துவக்க விழா வியாழக்கிழமை திண்டுக்கல்லில் நடைபெற்றது.

2 பெண்களிடமிருந்து13 பவுன் நகை பறிப்பு

Posted: 28 Aug 2014 11:55 AM PDT

திண்டுக்கல் ராஜீவ் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் மனோகரனின் மனைவி வசந்தா (60), வியாழக்கிழமை காலை ரவுண்ட் ரோடு புதூர் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது, இரு சக்கர

பேரூராட்சி கூட்டத்தில் பேச அனுமதி மறுப்பு:துணைத் தலைவர் உள்பட 10 பேர் வெளிநடப்பு

Posted: 28 Aug 2014 11:55 AM PDT

வேடசந்தூர் பேரூராட்சிக் கூட்டத்தில், உறுப்பினர்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, துணைத் தலைவர் உள்பட 10 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பழனி அருகே ரூ.1.37 கோடியில் கட்டப்பட்ட சிறு பாலம்: காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறப்பு

Posted: 28 Aug 2014 11:55 AM PDT

பழனி அருகே மானூரில் ரூ.1.37 கோடியில் கட்டப்பட்டுள்ள சிறு பாலத்தை, தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

தனியார் நிதி நிறுவனத்தில் கையாடல்

Posted: 28 Aug 2014 11:55 AM PDT

 கூடலூரில் செயல்பட்டு வரும் கொசமற்றம் நிதி நிறுவனப் பணியாளர்கள் 6 பேர் சேர்ந்து, ரூ.4,66,062-ஐ கையாடல் செய்து விட்டதாக, கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™