Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஈகரை நண்பர்களுக்கு விநாயகர்சதுர்த்தி வாழ்த்துக்கள்

Posted: 28 Aug 2014 02:43 PM PDT

நான் புதிதாக இணைந்துள்ளேன்

Posted: 28 Aug 2014 02:39 PM PDT

எல்லோருக்கும் வணக்கம்

விடுகதை

Posted: 28 Aug 2014 12:05 PM PDT

1.    பிறை போல இருக்கும் அண்ணன், பயிர்பச்சை அறுத்திடுவான் – 2.      ரீங்காரப் பாட்டுப்பாடி ஊசி போட்டு ஓடிடுவான் –   3.      மரக்கிளையில் தறியோட்டும் சின்னப்பொன்னு நான்  – 4.      தலை சாய்க்க மடி தருவான் பஞ்சு நண்பன் – 5.      ஊர் சுற்றக் கூட வருவான் ஆனால் வீட்டுக்குள்ளே வரமாட்டான்  –6.      கிண்ணம் போல் பூ பூக்கும், பானை போல் காய் காய்க்கும் – 7.      பாட்டி வீட்டுத் தோட்டத்தில் தொங்குகின்ற பாம்புகள் –

ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை

Posted: 28 Aug 2014 11:18 AM PDT

தேவையானவை: - ஓட்ஸ் - ஒரு கப் சீனி - முக்கால் கப் நெய் - அரை கப் ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி காய்ச்சிய பால் - ஒரு கப் கேசரி கலர் - தேவைக்கேற்ப விரும்பிய நட்ஸ் - சிறி செய்முறை : - கடாயில் ஓட்ஸைப் போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். அத்துடன் பாலை ஊற்றி நன்கு கிளறிவிட்டு வேகவிடவும். வெந்ததும் கேசரி கலர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறவும். பிறகு அதனுடன் நெய் சேர்த்துக் கிளறவும். கடைசியாக சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து ...

மீண்டும் சந்திப்போம்...! விமந்தனி

Posted: 28 Aug 2014 11:03 AM PDT

ஈகரை உறவுகளுக்கு வணக்கம்.

குடும்ப ஷேமத்திற்காக நாளை வைதீஸ்வரன் கோயில் செல்ல இருப்பதால், மீண்டும் திங்களன்று சந்திப்போம்.

அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி....

Posted: 28 Aug 2014 11:02 AM PDT

79000 பதிவுகள் கடந்த ஈகரையின் நிறுவனர் சிவா தம்பியை வாழ்த்தலாம் வாங்க... இப்போது தான் கவனித்தேன் மன்னிக்கவும் இன்னும் லட்சம் பதிவுகள் தொட வாழ்த்துகள் தம்பி

நிலாக் காலம்..!

Posted: 28 Aug 2014 10:57 AM PDT

வாடி வா வானத்து முழுமதியே வா பகல் பொழுதுகளில் இயற்கை தன் கூந்தலை அவிழாமல் முடிந்து வைத்திருந்து அந்தியை வானம் முத்தமிடும் நேரம் கூந்தலை அவிழ்த்து விடும் நேரம் விண்மீன்களின் வெளிச்சங்கள் பூமிக்கு விழுதாய் வந்தே சேர்ந்து இயற்கையோடு இணைந்த குளிர்ந்த இரவில் நிலவு மகள் நீயோ சௌந்தர்யமாய் நகரும் போது நிலாக்காலத்தை வானம் மண்ணுக்கு பருகத் தந்திடும் காலமது

மூணு பாடத்துல முட்டை வாங்கி இருக்கிறியே வெட்கமா இல்லே?

Posted: 28 Aug 2014 10:42 AM PDT

- வேலை கிடைச்சா சாமிக்கு 108 தேங்காய் உடைக்கிறதா... வேண்டிக்கிட்டயே! எங்கே வேலை கிடைச்சுது? - '108' டிரைவரா இருக்கேன்..! - >இப்ராகிம் - ----------------------------------- - கண்டாடி டம்ளர், சரக்கு, வாட்டர் பாட்டிலோட தலைவர் மேடைக்குப் போறாரே..? - மேடையில செமையா கலக்குங்கன்னு தலைவர்கிட்டே சொன்னோம் இல்ல...! - .ஹரிஹரன் - --------------------------------- - ஆறுக்கு மூணு பாடத்துல முட்டை வாங்கி இருக்கிறியே வெட்கமா இல்லே? - பத்துக்கு ஆறு டக்-அவுட் ஆகி இருக்காங்களே...அதுக்கு என்ன ...

ஓயாத அலைகள் .

Posted: 28 Aug 2014 10:38 AM PDT

அலைகள் ஓய்வதற்காக
காத்திருக்கிறேன்
ஆனால்  
அலைகள் நான்
ஓய்வதற்காக
இயங்கிக் கொண்டே இருக்கின்றன .

நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்

Posted: 28 Aug 2014 10:24 AM PDT

இந்த வீடியோ உதவி ராஜா இந்த வீடியோ வில் சொல்லியுள்ள காயத்ரி மந்திரங்களை கிழே போட்டுள்ளேன் பாருங்கள். ஒருவேளை அது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால்.................நல்ல தமிழில் இருக்கும் நவகிரக ஸ்லோகம் போட்டிருக்கேன்...........அதுவும் சொல்லலாம்

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் :)

Posted: 28 Aug 2014 10:13 AM PDT

அனைவருக்கும் என் மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி!

Posted: 28 Aug 2014 10:00 AM PDT

புதுடில்லி : 'அடுத்த மாதம், 15க்குள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும், தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் சொந்தமான சொத்து மதிப்பை, தாக்கல் செய்ய வேண்டும்' என, மத்திய அரசு, உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:மத்தியில், பா.ஜ., தலைமையிலான புதிய அரசு, நேர்மையான நிர்வாகத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊழலுக்கு எதிரான லோக்சபால் சட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில், தீவிரம் காட்டி வருகிறது.இதன்படி, மத்திய அரசின் பல்வேறு ...

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Posted: 28 Aug 2014 09:43 AM PDT

அன்பு உறவுகளே ஈகரை தமிழ் களஞ்சியத்தில் மீண்டும் மீண்டும் புதியவராக (எப்படி என்று யாரும் கேட்ககூடாது)வருபவர்களுக்கான பயனுள்ள குறிப்புகளை நமது ஈகரையின் மிக முக்கிய புள்ளி ஒருவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பினார் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் 1. வித்தியாசமான பெயர்களை கொண்டு பதிவு செய்யவேண்டும் , உதா : அவந்திகா , முருகனடிமை , இறைவனடிமை , கபாலி , பெருச்சாளி .... etc 2. பின்னூட்டமிடும் முறைகளில் வித்தியாசம் காண்பிக்க வேண்டும் , அதாவது அதிகமாக கமா , ஃபுல் ஸ்டாப் , ஸ்மைலி பயன்படுத்த வேண்டும் ...

பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது

Posted: 28 Aug 2014 09:39 AM PDT

பெரியகுளம் அருகே அதிசய பறவை பிடிபட்டது தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேனி-வத்தலக்குண்டு சாலையில், பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே புறாவின் இறக்கைகள் மற்றும் கழுகு கழுத்துடன் கூடிய அதிசய பறவை ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அந்த பறவையை சமூக ஆர்வலர் எட்வர்டு என்பவர் பிடித்து, பதுகாப்பாக கொண்டுவந்து பெரியகுளம் தீயணைப்புதுறை அலுவலர் அற்புதத்திடம் ஒப்படைத்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்து பறவையை பெற்றுகொண்ட பெரியகுளம் வனக்காப்பாளர் ...

விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' !

Posted: 28 Aug 2014 09:37 AM PDT

விருந்துகளில் அசைவ உணவுக்கு 'தடா' : பிரதமர் நரேந்திர மோடி அதிரடி உத்தரவு! புதுடில்லி: 'பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் விருந்துகளில், அசைவ உணவுகள் தயார் செய்யவோ, பரிமாறவோ கூடாது' என, பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது. பிரதமர் அலுவலகம் சார்பில், அனைத்து அமைச்சகங்கள், உயர்அலுவலகங்கள், வெளிநாடுகளில்உள்ள இந்திய துாதரக அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு, ஒரு குறிப்பு அனுப்பப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:எந்த காரணத்தாலும், பிரதமர் பங்கேற்கும் விருந்துகளில், அசைவ உணவுகளை பரிமாறக் கூடாது. ...

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Posted: 28 Aug 2014 09:08 AM PDT

ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம், இருபத்தொண்ணுல இருந்து திண்டாட்டம்... கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய இந்தப் பாடல் வெளிவந்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அந்தப் பாடலின் கருத்து இன்றைக்கும் நூறு சதவிகிதம் நமக்குப் பொருந்தி வருகிறது. ஒன்றாம் தேதி வாங்கும் சம்பளத்தைப் பார்த்துப் பார்த்துச் செலவு செய்தாலும் 20 தேதிக்குமேல் திண்டாட்டமாகவே இருக்கிறது நம்மில் பலருக்கு. 'கையில வாங்கினேன். பையில போடல; காசு போன இடம் தெரியலை' என்று திருச்சி லோகநாதன் பாடிய பாடலை ...

விசித்திர மனிதர்கள் - எழில் காமிக்ஸ்.

Posted: 28 Aug 2014 08:06 AM PDT

தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .

Posted: 28 Aug 2014 08:05 AM PDT

நான் என்னை தேடுகிறேன் - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .

Posted: 28 Aug 2014 08:04 AM PDT

கொன்றை மலர்க் குமரி -விக்கிரமன் நாவல் .

Posted: 28 Aug 2014 08:03 AM PDT

மற்றவை நள்ளிரவு 1.05 க்கு - ராஜேஷ்குமார் நாவல் .

Posted: 28 Aug 2014 08:02 AM PDT

இந்த ரோஜாவுக்கு நிறமில்லை - ராஜேஷ்குமார் நாவல் .

Posted: 28 Aug 2014 08:01 AM PDT

இப்படிக்கு ஓர் இந்தியன் - ராஜேஷ்குமார் நாவல் .

Posted: 28 Aug 2014 08:00 AM PDT

கிலி கிளி கிழி - ராஜேஷ்குமார் நாவல் .

Posted: 28 Aug 2014 07:59 AM PDT

பிள்ளையார் ஸ்லோகங்கள்

Posted: 28 Aug 2014 07:30 AM PDT

"பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா" குள்ள குள்ளனை குண்டு வயிரனை வெள்ளைக்கொம்பனை விநாயகனைத்தொழ தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி) தேவரும் தொழும் தெய்வம் " பெரியவா " ளின் பிள்ளையார் ச்லோகம் அப்யந்யாமரம் ஆரிராதயிஷதாம் யத் பாத பங்கேருஹ- த்வந்த்வாராதநம் அந்தராயஹதயே கார்யம் த்வவச்யம் ...

குறுகிய காலத்தில் 1000 மதிப்பீடுகள் கடந்த விமந்தினி...

Posted: 28 Aug 2014 07:07 AM PDT

குறுகிய காலத்தில் மதிப்பு வாய்ந்த பதிவுகளால் 1000 மதிப்பீடுகள் பெற்ற ஈகரை சிறப்புப் பதிவாளர் விமந்தினியை வாழ்த்துவோம் வாங்க... ஈகரையில் தொடர்ந்து இணைந்திருந்து இன்னும் பல ஆயிரம் மதிப்பீடுகள் பெற வாழ்த்துகள் விமந்தினி அக்கா

பப்பாளி பழத்தின் நன்மைகள்

Posted: 28 Aug 2014 06:40 AM PDT

பப்பாளி பழத்தின் நன்மைகள் குறித்த தகவல்கள் தேவை

இளம் பெண்களே... எங்கே போகிறீர்கள் ?????????

Posted: 28 Aug 2014 06:21 AM PDT

இளம் பெண்களே... எங்கே போகிறீர்கள்! சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில், வளர்ந்து வரும் இளம் நடிகர் ஒருவரின் பேட்டியும், அதைத் தொடர்ந்து ரசிக, ரசிகைகளின் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது. அதில் சில இளம் பெண் ரசிகைகள், 'வெவ்வேறான கதா பாத்திரங்களில் நடிக்க வேண்டும்...' என்று தங்கள் ஆசையை தெரியப்படுத்தினர். ஆனால், இன்னும் சில ரசிகைகள் சொன்ன ஆசைகளை கேட்ட போது மிகவும் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது. ஒரு இளம் ரசிகை, அந்த நடிகரின் கன்னங்களை பிடித்து கிள்ள வேண்டும் என்றும், அதேமாதிரி ...

உற்சாகமாக பணியாற்ற முட்டை சாப்பிடுங்கள்

Posted: 28 Aug 2014 05:58 AM PDT

பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் எப்போதும் தூங்கி வழிகிறீர்களா… உடல் எப்போதும் சோர்வாக இருப்பதாக உணர்கிறீர்களா? சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் ஆம் என்பது பதில் என்றால், உங்கள் உணவில் முட்டையை சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆம் முட்டையில் அதுவும் வெள்ளைக் கருவில் உள்ள புரதச் சத்து உங்களை மிகவும் உற்சாகமாக வைத்துக் கொள்ளும். உடனடியாக உடலுக்கு சக்தியை வழங்கும் சாக்கலேட், பிஸ்கெட், இனிப்புப் பண்டங்களில் உள்ள கார்போஹைட்ரேட்டை ...

மறந்து ...!

Posted: 28 Aug 2014 04:57 AM PDT

மறந்து ...! காற்றை அடைத்த சந்தோசத்தில் சிரிக்கிறது பலூன் தான் விழப்போவதை மறந்து ...! மது அருந்திய சந்தோசத்தில் பறக்கிறது மனது தான் அழியப்போவதை மறந்து ....! புயல் அடித்த சந்தோசத்தில் கரை புரண்டது அலை தந்தான் சுனாமி என்பதை மறந்து ...! மழை அடித்த சந்தோசத்தில் இளைப்பாறும் தொழிலாளி தான் மண்ணோடு மண்ணாகப் போவதை மறந்து ...! வெயில் அடித்த சந்தோசத்தில் தேன் கொடுக்கும் பூக்கள் தான் உதிர்ந்து போவதை மறந்து ...!

வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு

Posted: 28 Aug 2014 04:47 AM PDT

வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு – கடந்த ஏழு மாதங்களில் 929 முறைப்பாடுகள் இலஞ்ச ஊழல்களுக்கு எதிரான இலவச சட்ட ஆலோசனை நிலையத்தின் வடபிராந்திய அலுவலகத்தில் 929 முறைப்பாடுகள் கடந்த ஏழு மாதங்களில் கிடைத்துள்ளதாக வடபிராந்திய இணைப்பாளர் ரவீந்திர டி சில்வா தெரிவித்துள்ளார். நில அபகரிப்பு, இந்திய வீட்டமைப்புத் திட்டத்தில் முறைகேடுகள், அரசு நிறுவனங்களில் ஊழல் மோசடி, நிதிப் பிரச்சினைகள் தொடர்பாக வடபகுதி மக்களினால் குற்றச்சாட்டுகள் அதிகமாக முன் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ...

வீட்டிற்குள் ஒரு பாடகன்

Posted: 28 Aug 2014 04:45 AM PDT

பிரான்சின் இருக்கும் தமிழீழ கலைஞன் இந்திரநாதன் அவர்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வெளிநாட்டிற்கு வர விரும்பாதே?

Posted: 28 Aug 2014 04:20 AM PDT

பிரான்சில் இருக்கும் தமிழர்களின் நகைச்சுவை காட்சி.

பைத்தியமாகவில்லை ...!

Posted: 28 Aug 2014 04:13 AM PDT

வாங்கிய பூக்களை எல்லாம் நீ வரும் பாதையில் தூதுவிட்டேன் பூ மனம் அறிந்தாவது இந்த பூவையை தேடி வருவாய் என்று ஓரப்பார்வையில் ஒதுங்கி நின்று பார்க்கிறேன் மல்லு வேட்டி மைனரின் அழைகை ரசிக்க ...! ************************************** நீ கிடைக்க மாட்டாய் என தெரிந்தும் இனிக்கிறது நினைவு சுகரர் இல்லை உவர்க்கிறது கனவு பிரஷர் இல்லை கசக்கிறது பிரிவு பி.பி இல்லை புளிக்கிறது மறதி காய்ச்சல் இல்லை உரைக்கிறது விழிகள் ஈரமம் இல்லை ...

நான் மட்டுமே ரசித்ததால் ...!

Posted: 28 Aug 2014 04:05 AM PDT





நாவில் வடித்தக்

கவிதை ருசிக்கிறது  

நான் மட்டுமே

ரசித்ததால் ...!

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...!

Posted: 28 Aug 2014 04:01 AM PDT

விதை இல்லா விழுதொன்று
வேரூன்றியது மண்ணில்
அதற்கு ...
மழையெனப் பெயரிட்டேன்

நன்றிக் கடனாக ...

கிளையற்ற தாகம்
மதமற்ற சேவை
இனமற்ற பஞ்சம்
மொழியற்ற பசி

இவைகளை தாண்டி வாழும்
காற்றையும் வளர்த்தது

மனிதா ?
கருணைக்கு இலக்கணமான
நீ
என்ன செய்தாய் இந்த பூமிக்கு !

ஜலதோஷத்தை விரட்டும் தும்பைப் பூ!

Posted: 28 Aug 2014 03:56 AM PDT

மழைக்காலத்தில் சர்வ சாதாரணமாக ஜலதோஷதம் பிடித்துக்கொள்ளும். அதனை விரட்ட வீட்டிலேயே செய்யக் கூடிய எளிய மருந்து கஷாயம்தான். அதும் தும்பை பூவை பாலில் போட்டு காய்ச்சி குடிக்கனும்னா சொல்லவா வேனும்.. ஜலதோஷதம் நம்மள விட்டே ஓடிப்போகும். செய்துதான் பாருங்களேன். அப்புறம் சொல்லுவீங்க பாட்டியோட வைத்தியத்தப்பத்தி..... தும்பைப் பூ தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பையின் பூவை பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்தோடி விடும். தும்பைப் பூவைச் சுமார் இருபதிலிருந்து ...

காட்கோபரில் துணிகரம் தனியார் வங்கியில் புகுந்து ரூ.54 லட்சம் கொள்ளை மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு

Posted: 28 Aug 2014 03:49 AM PDT

காட்கோபரில் துணிகரம் தனியார் வங்கியில் புகுந்து ரூ.54 லட்சம் கொள்ளை மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு மும்பை, காட்கோபரில், தனியார் வங்கியில் புகுந்து கள்ளச்சாவி மூலம் பெட்டகத்தை திறந்து ரூ.54 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பணம் கொள்ளை மும்பை காட்கோபர் மேற்கு பகுதியில் ஒரு தனியார் வங்கி உள்ளது. சம்பவத்தன்று வங்கி ஊழியர் ஒருவர் பரிவர்த்தனை தேவைக்காக பணம் எடுப்பதற்காக வங்கி ரகசிய அறையில் உள்ள பணப்பெட்டகத்தை திறந்தார். அப்போது, அதில் பணம் ...

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள தூண் சிற்பம் - சிற்பியின் திறமையும்.. அற்பனிப்பையும்!

Posted: 28 Aug 2014 03:47 AM PDT

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள தூண் சிற்பம்.இந்த பெண் சிற்பத்தில் மூன்று குழந்தைகளை தாங்கி கொண்டு நடக்கிறது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது, சிற்பியின் கற்பனை திறமையா? இல்லை தெருகூத்தடிகளின் வாழ்க்கை முறையா என்பது தெரிவில்லை, அவள் கையில் ஒரு பனை ஓலையில் செய்யப்பட்ட கூடை போன்று வைத்துள்ளாள் அதில் அந்த கூடையை எங்கள் ஊரில் கடகா பெட்டி என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள், அதில் பனைஓலையின் வடிவம் செதுக்கப்பட்ட விதம் சிற்பியின் பொறுமையை என்னவென்று பாராட்டுவது வார்த்தைகளே ...

priods problem

Posted: 28 Aug 2014 03:37 AM PDT

எனக்கு மாதவிடாய் 2 நாட்கள் மட்டுமே வருகிறது இதற்கு என்ன காரணம் ? என்று எனக்கு தெரிய வில்லை. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ப்ளீஸ் ஹெல்ப் மீ

இனிக்கிறது மழைத்துளி ...!

Posted: 28 Aug 2014 03:36 AM PDT

அழுவதை மறைத்து
இனிக்கிறது
மழைத்துளி
அளவுக்கு மீறினால்
அமுதமும் (அகிலமும்)
நஞ்சென்று ...!

அறிமுகம்

Posted: 28 Aug 2014 03:34 AM PDT

பெயர்:அஞ்சலி சொந்த ஊர்:சென்னை ஆண்/பெண்:பெண் ஈகரையை அறிந்த விதம்:அணைத்து விதமான சந்தேகங்களும் , தகவல்களும் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் ஒரு இனைய தளம் எனக்கான சந்தேகங்களை எப்படி தெரிந்து கொள்வது என்று தேடிய போது எதிர்சையாக பார்த்தேன் பொழுதுபோக்கு: பாட்டு , நடனம் , விளையாட்டு தொழில்: தனியார் கம்பனில் வேலை பார்கிறேன் மேலும் என்னைப் பற்றி: என்னை பற்றி சொல்ல ஏதும் இல்லை எனக்கு அப்பா இல்லை அம்மா மற்றும் அக்கா மட்டும் தான் மிகவும் ஏழ்மையான குடும்பம் . நான் என் அக்கா என் அம்மா இது தான் ...

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட்

Posted: 28 Aug 2014 03:10 AM PDT

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 1 கிமு 33 - ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாண்டிரியா ந்கரைக் கைப்பற்றி ரோமக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான். 527 - முதலாம் ஜஸ்டீனியன் பைசண்டைன் பேரரசன் ஆனான். 1291 - சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 1461 - நான்காம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். 1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கலைக்கப்பட்டனர். 1498 - கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார். 1619 - முதலாவது ஆபிரிக்க அடிமைகள் வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரை அடைந்தனர். 1774 ...

ஹிஷாலியின் ஹைக்கூ

Posted: 28 Aug 2014 02:48 AM PDT

பாட்டி அம்மாவசை

படையலுடன்

தாத்தாவின் கண்ணீர் ...!


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™