Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தேர்தலில் ஓட்டளிப்பது கட்டாயமாக்கப்படுமா? : மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் 'நோட்டீஸ்'

Posted:

புதுடில்லி : 'தேர்தலின் போது, வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் ஓட்டளிப்பதை உறுதி செய்யும் வகையில், வழிகாட்டிக் குறிப்புகளை உருவாக்க, உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த, உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும், 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தில், சத்திய பிரகாஷ் என்பவர், பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், அவர் கூறியிருந்ததாவது:வாக்காளர்கள் அனைவரும், தேர்தலில் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும் என்பது, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம் மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில், ...

சட்டசபை தேர்தலில் போட்டியில்லை : ராஜ் தாக்கரே அறிவிப்பு

Posted:

நாக்பூர் : ''மகாராஷ்டிராவில், விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், நான் போட்டியிடப் போவதில்லை. ஒரு தொகுதிக்குள் என்னை கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை,'' என, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே தெரிவித்தார்.தோல்வி : மகாராஷ்டிராவில் நடந்த லோக்சபா தேர்தலில், ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி, படுதோல்வியை சந்தித்தது. இதை யடுத்து பேசிய ராஜ் தாக்கரே, 'மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்' என, அறிவித்தார். தேர்தலில், தங்கள் கட்சி வெற்றி பெற்றால், முதல்வர் பதவி ஏற்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.ஆனால், தற்போது ...

பெல்லாரி ரூரல் தொகுதி வெற்றி : சித்தராமையாவுக்கு தர்ம சங்கடம்

Posted:

பெங்களூரு : பெல்லாரி ரூரல் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், ரெட்டிகளின் சாம்ராஜ்யத்தை தகர்த்தெறிந்து, காங்., வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி, முதல்வர் சித்தராமையாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது.ஆளும் கட்சி வெற்றி பெற்றால், முதல்வர் மகிழ்ச்சியடைய வேண்டும். பெல்லாரி வெற்றியை கொண்டாட முதல்வர் சித்தராமையாவால் சாத்தியமாகாது. ஏனென்றால், ஸ்ரீராமுலுவின் செல்வாக்கை உடைத்து, காங்., வேட்பாளரை வெற்றி பெற வைத்த பெருமை, இத்தொகுதியின் தேர்தல் பொறுப்பை ஏற்றிருந்த அமைச்சர் சிவகுமாரையே சேரும். இதனால், கட்சியில் அவரது, 'இமேஜ்' அதிகமாகும் என்பது, ...

மேயர் தேர்தலுக்காக புதிய திட்டங்கள் அறிவிப்பு : எதிர்க்கட்சிகள் கடும் அதிர்ச்சி

Posted:

சென்னை : மூன்று மாநகராட்சி மேயர் பதவிக்கு, இடைத்தேர்தல் வர உள்ளதால், அந்த மாநகராட்சி மக்களை கவரும் வகையில், முதல்வர் ஜெயலலிதா, புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். இது எதிர்க்கட்சிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜினாமா : தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பா, திருநெல்வேலி மேயர் விஜிலா சத்தியானந்த், ஆகியோர், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வானதால், தங்கள் மேயர் பதவியை ராஜினாமா செய்தனர். கோவை மேயர் வேலுசாமி, கட்சி தலைமை உத்தரவை ஏற்று, தன் பதவியை ராஜினாமா செய்தார்.காலியாக உள்ள, மூன்று மாநகராட்சி மேயர் பதவிக்கு, சட்டசபை கூட்டத் தொடர் ...

நன்றி மறக்காத பா.ஜ., கூட்டணி தலைவர்கள்: விஜயகாந்த் திருப்தி

Posted:

பிரதமர் நரேந்திர மோடி உட்பட, பா.ஜ., கூட்டணி தலைவர்கள் பலரும், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததால், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நெகிழ்ச்சியில் உறைந்திருப்பதாக, கட்சி வட்டாரங்களில் தெரிவித்தனர். லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, தே.மு.தி.க., போட்டியிட்டு தோல்வியடைந்தது. இதனால் தனக்கு, பா.ஜ., தரப்பில் மரியாதை குறைந்து விட்டதாக, விஜயகாந்த் கருதினார். இதற்கிடையில், பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வுடன் நெருங்கி வருவதாக, தகவல் பரவ, தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி தொடருகிறதா என்ற கேள்விஎழுந்தது. ஆனால், நேற்று நடந்த விஜயகாந்த் பிறந்த நாள் விழாவில், இக்கூட்டணியை பா.ஜ., ...

மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டட விபத்து இயற்கை பேரிடரா? : நடைமுறைகளை மாற்ற விசாரணை கமிஷன் பரிந்துரை

Posted:

சென்னை, மவுலிவாக்கத்தில், 61 பேரை பலி கொண்ட அடுக்குமாடி கட்டட விபத்தை, இயற்கை பேரிடராக வகைப்படுத்தும் விதமாக, விசாரணை கமிஷனின் பரிந்துரைகள் அமைந்துஉள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சென்னை, போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் தனியார் நிறுவனத் தால் கட்டப்பட்ட, 11 மாடி கட்டடம், ஜூன், 28ம் தேதி இடிந்து விழுந்ததில், கட்டுமான பணியாளர்கள், 61 பேர் உயிரிழந்தனர். இதில் சிக்கிய, 27 பேர், உயிருடன் மீட்கப்பட்டனர்.விசாரணை கமிஷன் : இந்த விபத்துக்கான காரணங்கள், தவறுகளுக்கு பொறுப்பானவர்கள், வருங்காலங்களில் இத்தகைய விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான ...

சென்னையில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை : அதிகபட்சமாக 10 செ.மீ., பதிவு

Posted:

சென்னை : அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் காற்று மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், சென்னையில் நேற்று முன்தினம் இரவு, இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. வெப்ப சலனம் : தென்மேற்கு பருவமழை, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில், களைகட்டி வருகிறது. இது தவிர, அவ்வப்போது வளி மண்டலத்தில் ஏற்படும் மாற்றம் மற்றும் வெப்பச் சலனத்தால், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.தென்மேற்கு பருவமழை துவங்கிய ஜூன் முதலே, தமிழகத்தின் பெரும்பாலான பகுதி களில், வெப்பச்சலனத்தால் மழை பெய்தது. ...

ஆந்திரா, தெலுங்கானா வரி சலுகைகளால் சிக்கல் : பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம்

Posted:

சென்னை : 'ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் என்ற பெயரில், வரிச் சலுகைகள் அளிக்கும் விஷயத்தை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்' என, பிரத மருக்கு எழுதிய கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து உள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது:. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு, ஏராள மான நிதி மற்றும் பொருளாதாரப் பலன்கள் கிடைக்க, அரசியல் சட்டத்தின், 13வது அட்டவணை, 94வது பிரிவு வழி செய்கிறது. 94வது பிரிவின்... : இதனால், அண்டை மாநிலம் என்ற அடிப்படையில், பொறாமை கொள்ளவில்லை. எனினும், 94வது பிரிவின், உட்பிரிவு ...

பெரியாறு அணை பிரச்னை: மனம் மாறிய கேரள அரசியல்வாதிகள் : தேனி- இடுக்கி மக்கள் நிம்மதி

Posted:

தேனி : முல்லை பெரியாறு அணை பிரச்னையில் இதுவரை வீண் பிடிவாதம் காட்டி பிரச்னையை கிளப்பி வந்த கேரள அரசியல்வாதிகள் உண்மை நிலையை உணர்ந்து தங்கள் நிலையை மாற்றிகொண்டுள்ளனர். இதனால் தேனி- , இடுக்கி மாவட்ட மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.முல்லை பெரியாறு அணை பிரச்னையை பொறுத்தவரை ஆரம்பம் முதல் தற்போது வரை கேரள மக்கள் எந்த பிரச்னையும் செய்யவில்லை. ஆனால் கேரள காங்., மற்றும் கம்யூ., அரசியல்வாதிகள் இதனை வைத்தே கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் நடத்தி வந்தனர். இதனால் தேனி, இடுக்கி மாவட்ட மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகினர்.கலவரம் வெடித்தது. தமிழக அரசு முல்லை ...

நான்கு மாநில இடைத்தேர்தலில் காங்., கூட்டணி அமோகம் : எட்டு இடங்களை பிடித்தது பாரதிய ஜனதா அணி

Posted:

புதுடில்லி: பீகார் உட்பட, நான்கு மாநிலங்களில் உள்ள, 18 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில், நிதிஷ்குமார் - லாலு மற்றும் காங்கிரஸ் கூட்டணி, 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது; பா.ஜ., கூட்டணி, எட்டு தொகுதிகளைப் பிடித்துள்ளது.உறுப்பினர்கள் இறப்பு உட்பட, எம்.எல்.ஏ.,க்களாக இருந்தவர்கள், லோக்சபா எம்.பி.,க்களாக தேர்வானது உட்பட, பல காரணங்களால் காலியான, பீகாரில், 10, கர்நாடகம் மற்றும் மத்திய பிரதேசத்தில், தலா மூன்று, பஞ்சாபில் இரண்டு என, மொத்தம், 18 சட்டசபை தொகுதிகளில், இம்மாதம், 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. பீகாரில், பரம எதிரிகளாக இருந்த, அம்மாநில முன்னாள் ...

நாளுக்கு நாள் தாக்குதலை விரிவுபடுத்தும் பாக்., படை : அசராமல் பதிலடி கொடுத்து வருகிறது பி.எஸ்.எப்.,

Posted:

ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சர்வதேச எல்லையை ஒட்டிய, இந்திய ராணுவத்தினரின், 40 நிலைகள் மற்றும் 24 கிராமங்கள் மீது, பாகிஸ்தான் படையினர், நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், மூன்று பேர் காயமடைந்தனர். அத்துமீறி தாக்குதல் : இந்தியா பாகிஸ்தான் இடையே, போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனாலும், மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சர்வதேச எல்லைப் பகுதியில் இருக்கும், இந்திய ராணுவத்தினரின் நிலைகள் மற்றும் எல்லையை ஒட்டிய கிராமங்களை நோக்கி, பாக்., படையினர், அடிக்கடி ...

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் சிக்கப்போவது யார் யார்? சுப்ரீம் கோர்ட் உத்தரவால் காங்., தலைவர்கள், அதிகாரிகள் பீதி

Posted:

புதுடில்லி: 'கடந்த 1993ல் இருந்து, 2010 வரை வழங்கப்பட்ட, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்துமே, சட்ட விரோதமானவை. எந்தவித பொறுப்புணர்வும் இல்லாமல், அவசர கோலத்துடனும், அலட்சியமாகவும் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன' என, சுப்ரீம் கோர்ட், நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, இந்த காலத்தில் சுரங்க ஒதுக்கீடுகளுக்கு காரணமாக இருந்த, காங்., கட்சியைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பீதி அடைந்து உள்ளனர்.முந்தைய காங்., ஆட்சிக் காலத்தில், தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், முறைகேடு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™