Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உங்கள் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தின் அளவு என்ன?

Posted: 25 Aug 2014 01:43 PM PDT

பயன்படுத்தப்பட்ட செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரித்தெடுப்பதன் மூலம் மின்னணுக் கழிவுகளில் இருந்து செல்வத்தை உருவாக்க முடியும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் சுற்றுச்சூழல் ஆணையர் ஜெனஸ் பொடோக்நிக் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். உங்கள் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தின் அளவு என்ன? அதைத்தொடர்ந்து செல்பேசிகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது தொடர்பான விவாதம் மின்னணு தொழில்நுட்பத் துறையில் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது. சரி இந்த பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போன்களில் இருந்து ...

சிலேடை சிரிப்புகள்

Posted: 25 Aug 2014 12:55 PM PDT

எங்கே விழுது? கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன. இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர். பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் ...

மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்

Posted: 25 Aug 2014 12:48 PM PDT

கோவை மாவட்டத்தில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், 12 ஆயிரம் பேருக்கு ஆறு வாரங்களாக சம்பளம் வழங்கவில்லை. நிதி நெருக்கடியால், இத்திட்டத்தை முடக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கிராம ஊராட்சிகளில், தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு, 100 நாள் வேலை தரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (என்.ஆர்.ஜி.எஸ்.,) 2006ம் ஆண்டு சில மாவட்டங்களில் துவங்கியது. படிப்படியாக நாட்டிலுள்ள, 650 மாவட்டங்களிலும் 2008 முதல் செயல்படுகிறது. இதில் இயந்திரங்களை பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க ...

சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப்

Posted: 25 Aug 2014 12:44 PM PDT

சீனாவில் உள்ள ஒரு உணவகத்தில் சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை, 20 நிமிடங்கள் கழித்து உணவக ஊழியரைக் கடித்ததால் அவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு சீனாவில் உள்ள குவாங்க்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பாம்பு உணவு தயாரிக்க, ஊழியர் ஒருவர் ராஜநாகத்தின் தலையை துண்டித்தார். பாம்பின் தலையை அகற்றிய அவர் அதன் உடல் பகுதியை சமைத்த பிறகு மீதமிருந்த தலை மற்றும் பிற கழிவுகளை எடுத்து குப்பையில் வீசவதற்காக பாம்பின் தலையைத் தொட்டார். அப்போது எதிர்பாராத விதமாக துண்டிக்கப்பட்டு ...

எங்கடா இருக்க?

Posted: 25 Aug 2014 12:43 PM PDT

( தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்...)
"டேய் மச்சான்... எங்கடா இருக்க?"

"வீட்லதான்டா இருக்கேன்..."

"அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!"

"ஏன்டா? என்ன விஷயம்??"

"அதில்லடா..... காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்-காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தோ போயிட்டேன்....."

அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா?

Posted: 25 Aug 2014 12:42 PM PDT

சீனாவின், சென்யான் நகரத்தை சேர்ந்த வாங் மேன் என்ற ஓட்டல்காரரின் வியாபார தந்திரத்தை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்... இவரின் ஓட்டலில், கட்டுமஸ்தான உடற்கட்டு உடைய ஜான் என்பவரை பீட்சா, பர்கர் தயாரிக்கும் வேலைக்கு அமர்த்தியுள்ளார். கடையின் முன் பகுதியில், சட்டையில்லாமல் அவரை நிறுத்தி, உணவுப் பொருட்களை தயாரிக்கும்படி கூறியுள்ளார். கட்டுமஸ்தான அந்த சமையல்காரரை பார்ப்பதற்கும், அவர் தயாரிக்கும் உணவை சாப்பிடுவதற்கும் ஏராளமான பெண்கள் குவிகின்றனர். கல்லாப் பெட்டி நிரம்பி வழிவதால் சந்தோஷத்தில் திளைக்கிறார் ...

ரைஸ் பக்கெட் சேலஞ்ச்

Posted: 25 Aug 2014 12:37 PM PDT

சில நாட்களாக இணையதளத்தில் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்ற வீடியோ வைரலாக பரவி வந்தது. ஏஎல்எஸ் நோய்க்கு நிதி திரட்ட ஆரம்பிக்கப்பட்ட சேலஞ்ச் சுய விளம்பரமாகவும், வைரல் பொழுதுபோக்காகவும் மாறியது. உலக பிரபலங்கள் தொடங்கி உள்ளூர் பிரபலம் வரை அனைவரது ஐஸ் பக்கெட் வீடியோக்களும் யூடியூபில் வழிந்தன. இந்நிலையில் இந்தியாவில் ரைஸ் பக்கெட் சேலஞ்ச் வைரலாக தொடங்கியுள்ளது. ரைஸ் பக்கெட் சேலஞ்ச் என்றால் என்ன? இந்தியாவில் பல ஏழை மக்கள் உணவுக்காக தடுமாறுவதால் அதனை தடுக்கும் நோக்கத்துடன் அருகில் இருக்கும் உணவு தேவைப்படும் ...

காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை

Posted: 25 Aug 2014 12:19 PM PDT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திங்கள்கிழமை பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பலால் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காரைக்குடி அருகே உஞ்சனை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் என்பவர் மகன் ராம் கணேஷ் (23). தொழிற்கல்வி பட்டதாரி. இவர், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளார். இவர் திங்கள்கிழமை ரயில் நிலையம் அருகில் முத்துநகரில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு சென்று விட்டு, அங்கிருந்து இலுப்பக்குடி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை பின் தொடர்ந்து காரில் வந்த ...

எபோலா நோய்க்கான சோதனை மருந்தைப் பெற்ற லைபீரிய மருத்துவர் மரணம்

Posted: 25 Aug 2014 12:19 PM PDT

கடந்த பிப்ரவரி மாதம் கினியாவில் தொடங்கிய எபோலா விஷத் தொற்றுநோய் அண்டைநாடுகளான லைபீரியா, சியரா லியோனிலும் பரவியதில் இதுவரை 1427 பேரைப் பலி வாங்கியுள்ளது. லைபீரியாவில் இதன் பாதிப்பு அதிகம் உள்ளதால் அரசு அங்கு அவசர நிலை பிரகடனம் செய்து இந்த நோயைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றது. இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதியன்று இந்த நோய்க்கான அரிய சிகிச்சை மருந்தான ZMAPPன் மூன்று அளவுகள் லைபீரியாவிற்கு வந்தது. இந்த மருந்து எபோலா நோய்த்தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அயர்லாந்து மருத்துவர் சுகுனிஸ், ...

ரோமானியப் பேரரசன் நீரோ: நல்லவனா, கெட்டவனா?

Posted: 25 Aug 2014 12:13 PM PDT

(நீரோ மன்னன் சிலையும் இன்றைய சுதந்திர தேவி சிலையும். அக்காலத்தில் நீரோவின் சிலைக்கு ஒப்பான எந்தச் சிலையும் உலகில் இல்லை. பின்னாட்களில் இச்சிலை அழிக்கப்பட்டது) வரலாற்று ஆசிரியர்களால் நீரோ மன்னன் (Nero Germanicus AD 54- AD 68) பெரும் தீங்குகள் இழைத்தவனாகக் கருதப்படுகிறான். சிலர் ஆர்வக் கோளாறு காரணமாக அவனை ஹிட்லர், ஸ்டாலினுக்கு ஒப்பான கொடூரமான மன்னனாகச் சித்தரிக்கிறார்கள். ஆனால் இப்போது நீரோவின் வரலாறு, மறுவாசிப்புக்கு உள்ளாகி வருகிறது. அவன் தனக்கு முன்னும் பின்னும் ஆண்ட மன்னர்களை விட நல்லவனும் ...

RAM மற்றும் ROM

Posted: 25 Aug 2014 12:08 PM PDT

கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு அதன் அனைத்து தொழில் நுட்பச் சொற்களைத் தெரிந்து கொள்வது அவசியமில்லை; என்றாலும் ஒரு சிலவற்றின் அடிப்படைப் பண்புகளைத் தெரிந்து கொள்வது, நாம் கம்ப்யூட்டரைக் கையாள்வதனை எளிதாக்குவதனுடன், பயனுள்ளதாகவும் மாற்றும். அவ்வகையில் கம்ப்யூட்டரில் உள்ள இருவகையான அடிப்படை மெமரி எனப்படும் நினைவகங்களைத் தெரிந்து கொள்ளலாம். கம்ப்யூட்டர் தன்னிடம் இடும் தகவல்களை 0 மற்றும் 1 என்ற இரு இலக்கங்களின் கூட்டு அமைப்பில்தான் நினைவில் கொள்கிறது. எனவே தான் இந்த இரண்டையும் பைனரி (இரண்டு) ...

அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா

Posted: 25 Aug 2014 11:45 AM PDT

அம்மா, இந்த மூன்று எழுத்தில்தான் எத்தனை சத்தி! கருவறையில் என்னை சுமந்த சுமைதாங்கியே, என்னை சுமக்கும் முன்னே குடும்பதிற்காய், உன் சுமை தூக்கும் படலமும் ஆரம்பமானதே!! விளையாடும் வயதில் விசைத்தறி கூடத்தில் நீ பட்ட பாட்டை நீயே என்னிடம் சொன்னபோது, வாழ்க்கையில் ஜெயிக்க கஷ்டப்படணும் - நான் கற்றுக் கொண்டேன் அம்மா!! வாரம் பூரா வேலை செய்து வார இறுதியில் வாங்கும் பணத்தை குடித்தேன் அழிப்பான் தகப்பன், சோறாக்க அரிசியில்லை - அதை தாங்கிக் கொண்டு, ரேசன் அரிசியில் இட்லி ...

'Duck Tour ' போட்டோக்கள் !

Posted: 25 Aug 2014 11:30 AM PDT

'Duck Tour ' போனா கிருஷ்ணாவும் ஆர்த்தியும் அப்போ எடுத்த போட்டோக்களை இங்கே பகிறுகிறேன் உங்களுக்கு தெரிந்திருக்கலாம், இந்த டூரில் 45 நிமிடம் எந்த பஸ் இல் ரோடில் போகிறோமோ அதுவே தண்ணீரிலும் மிதக்கும் படகாகும். அதனால் தான் அதன்பேர் "duck ''

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

Posted: 25 Aug 2014 11:15 AM PDT

* கொழுக்கட்டைக்குப் பூர்ணம் கிளறும்போது பாகு அதிகமாகிவிட்டால் பருப்பு பூர்ணமாக இருந்தால் கடலைமாவைப் பொன்னிறமாக வறுத்துச் சேர்க்கவும். தேங்காய் பூர்ணமாக இருந்தால் அரிசிமாவை கலக்கவும். இதனால் பூர்ணம் கெட்டியாவதுடன் உதிராமல் உருட்ட வரும். * கொழுக்கட்டைகளை இட்லித்தட்டில் வைப்பதற்கு பதில் மூங்கில் தட்டின் மீது இலை அல்லது துணி விரித்து அதன் மீது கொழுக்கட்டைகளை வைத்து வேகவிட்டால் சீக்கிரமாக வேகும். * கடலைப் பூர்ணம் அரைக்கும் போது அதை மசிய அரைக்காமல் ஒன்றிரண்டாக அரைப்பதுடன் அதை சுருளும் அளவிற்கு ...

1000 பதிவுகள் கடந்த அகிலன்....

Posted: 25 Aug 2014 11:04 AM PDT

1000 பதிவுகள் கடந்த அகிலனை வாழ்த்துவோம் வாங்க இன்னும் பல ஆயிரம் பதிவுகள் கடக்க வாழ்த்துகள் அகிலன்

பேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா?

Posted: 25 Aug 2014 11:04 AM PDT

இரு வாரங்களுக்கு முன்னால், பேஸ்புக் தன் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதியை, மொபைல் சாதனங்களில் தனித்து பிரித்து பயன்படுத்துவதனை அறிமுகப்படுத்தியது குறித்து எழுதி இருந்தோம். அது வசதியாக இருப்பதாகப் பல வாசகர்கள் கருத்து தெரிவித்தனர். மிக எளிதாக மெசேஜ்களை அனுப்ப முடிகிறது என்றும், இணையத்தில் இணைத்தவுடன், மெசஞ்சர் அப்ளிகேஷனில் அனைத்து மெசேஜ்களும் அப்டேட் செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர். இது வசதியாக இருப்பதற்குக் காரணம், அதில் உள்ள தகவல்களை நினைத்த நேரத்தில் படித்து தெரிந்து கொள்ள இயல்வதுதான். எடுத்துக் ...

கைவிடப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்!!

Posted: 25 Aug 2014 10:46 AM PDT

மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் பிரவுசரான, இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பழைய பதிப்புகளுக்கான சப்போர்ட்டினை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது. படிப்படியாக, வரும் 18 மாதங்களில் இது முழுமை அடையும். தன்னுடைய தற்போது நடை முறையில் இருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 ஐ, அனைவரும் பயன்படுத்தும் வகையில் நுழைத்திட முயற்சிக்கிறது, மைக்ரோசாப்ட். நீங்கள் பழைய பெர்சனல் கம்ப்யூட்டரில், புதிய பதிப்பிற்கு மாறுவதற்கு எதிர்ப்பாக இருந்தால், மைக்ரோசாப்ட் தன் நடவடிக்கை மூலம், உங்களைப் பணிய வைத்திடும். வரும் 2016, ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே!

Posted: 25 Aug 2014 10:43 AM PDT

புதுடெல்லி: இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து, சிவசேனாவின் 'சாம்னா'வில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், ''பாகிஸ்தான் ராணுவம் சமீபத்தில் 13 இந்திய எல்லைப் புற கிராமங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 22 இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. 2003க்குப் பிறகு பாகிஸ்தான் நடத்தியுள்ள மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். கடந்த ஒரு ...

நீல நிற மல்லிகை - ராஜேஷ்குமார் க்ரைம் நாவல் .

Posted: 25 Aug 2014 10:27 AM PDT

யார் இவர்? - மைக்கேல் பாரடே!

Posted: 25 Aug 2014 10:27 AM PDT

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ...

இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள்

Posted: 25 Aug 2014 10:26 AM PDT

திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகஸ்ட் 25, 1906 - நவம்பர் 7, 1993) நகைச்சுவையையும், உருக்கும் பக்திச் சுவையையும் தமிழ் உலகிற்கு வாரி வாரித் தந்தவர் வாரியார். "அன்பாய் அரும்பி, தமிழாய் மலர்ந்து, இசையாய் மணம் வீசி, அறமாய்க் காய்த்து, அருளாய்க் கனிந்தவர் - பாமரன் உள்ளத்தில் பரமனைப் பதித்தவர், ஆன்மிகப் பெருவீட்டின் பூட்டைத் தமிழ்ச் சாவியால் எளியவர்களுக்கும் திறந்து காட்டியவர்; - பக்திச் சுவை ஊட்டியவர் -நகைச்சுவையால் உள்ளத்தைத் தொட்டவர். - அதில் உயர்கருத்தை நட்டவர். -தமிழே முருகன், முருகனே ...

வழி !

Posted: 25 Aug 2014 10:26 AM PDT

என் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொள்ள தீர்மானித்து விட்டேன்.வாழ்க்கையில் பல்வேறு தோல்விகளை கண்டவன் நான்! ஆறு ஆண்டாய் வேலை தேடி அலைகிறேன்; ஒரு வேலையும் கிடைத்தபாடில்லை. குடும்பத்திலோ பணப் பிரச்னை, காதல் தோல்வி, வீட்டில், 'தண்டச்சோறு' அர்ச்சனை. அதனால் தான், இதற்கெல்லாம் ஒரே முடிவு, உயிரை முடித்துக் கொள்வது தான். படித்தது பி.எஸ்சி., கணிதம்; மேலே படிப்பதற்கு வீட்டில் பண வசதி இல்லை. இதை படிக்க வைப்பதற்கே அப்பாவும், அம்மாவும் படாதபாடு பட்டு விட்டனர். வேலை தேடுவதையே வேலையாக ஏற்று, நான் ஏறி, இறங்கிய ...

சிந்து மருமகள் அல்ல...

Posted: 25 Aug 2014 10:26 AM PDT

மாப்பிள்ளை வீட்டுகாரர்கள் வந்து போன பரபரப்பு மறைந்து, சிந்துவின் வெட்கமும் குறைந்திருந்தது. ''அம்மா சிந்து... வர்ற புதன்கிழம நிச்சயதார்த்தம் இருக்குறதால சொந்த பந்தங்களுக்கெல்லாம் சொல்லணும்; தூரத்துல இருக்கிறவங்களுக்கு போன் போட்டு விஷயத்த சொல்லிட்டாலும், மத்தவங்களுக்கு நேர்ல போய் சொல்றதுதான் முறை; இப்பக் கிளம்புனாத்தான் எல்லாருக்கும் சொல்லிட்டு, மத்த வேலைகள பாக்க முடியும்,'' என்று கிளம்பிக் கொண்டே மகளிடம் சொன்னார் நடராஜன். ''சரிப்பா... போய்ட்டு வாங்க.'' நிச்சயதார்த்த விழாவிற்கு தன் கல்லூரி ...

தேவையற்ற தேவை !

Posted: 25 Aug 2014 10:23 AM PDT

காற்றில் அலையும் சொற்கள்! தேவையற்ற தேவை என்றாகிவிட்ட அலைபேசியில் அன்றாடம் ஏதேனும் சங்கடம்... பெரியப்பா செத்துப்போன இரவில் விவரம் தெரியாத நண்பன் அடுத்த மாதப் பொங்கலுக்கு இனிப்பான வாழ்த்துக்கள் அனுப்புகிறான். அலுவல்களின் மும்முரங்களிலும் பதில் சொல்ல வேண்டியதாயிருக்கிறது தவறான அழைப்புகளுக்கு. கடன் தருவதாகச் சொல்லும் முகம் பார்க்காமல் நட்புறவாகும் பெண்களைச் சபிக்க வேண்டியதாயிருக்கிறது. மருத்துவமனை பிணவறையிலும் கேட்க நேரிடுகிறது புதுப்படப் பாடலின் ரிங்டோனை. இத்தனைக்கு ...

உன் விழி சுடரில்... என் கவிதைகள்!

Posted: 25 Aug 2014 10:20 AM PDT

தெரிஞ்சுக்கோங்க!......சொந்தமாக பீர் தயாரிக்கலாம்!

Posted: 25 Aug 2014 10:18 AM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

'ஐஸ் பக்கெட் சவால்' - 'ஹன்சிகாவின்' வீடியோ !

Posted: 25 Aug 2014 09:51 AM PDT

நியூயார்க்: ஐஸ் பக்கெட் சவால் என்பது அமெரிக்காவை தவிர்த்து தற்போது இந்தியாவிலும் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இந்த சவாலை பல பிரபலங்களும் ஏற்று கொண்டுள்ளனர். ஐஸ் பக்கெட் சவால் என்று குரல் எழுப்பிக் கொண்டு பிரபலங்கள் தங்களது தலை மேல் ஒரு பக்கெட் ஐஸ் நீரை ஊற்றிக் கொண்டு ஐஸ் பக்கெட் சவாலை பிரபலமாக்கி வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஏன் அவர்கள் அப்படி செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு சம்பந்தமான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்காக ...

படித்ததில் பிடித்தது :) -'உறுதி கொண்ட நெஞ்சினாய் வா... வா... வா!

Posted: 25 Aug 2014 09:45 AM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Posted: 25 Aug 2014 09:11 AM PDT



நன்றி புரட்சி

This posting includes an audio/video/photo media file: Download Now

எல்லாம் சாத்தியமே - நீ காதலிக்கத் தொடங்கினால்...!

Posted: 25 Aug 2014 08:37 AM PDT

- - புதுமை - தங்கத்தில் நீர் கசியுமா? என்னவள் உடம்பில் வியர்வைதுதுளிகள்...! - ------------------ - மாற்றம் - மீன் சிறகடித்துப் பறக்குமா? நானை புல் அழிக்காமல் நடக்குமா? கண், பா2ர்வையை மறைக்குமா? எல்லாம் சாத்தியமே - நீ காதலிக்கத் தொடங்கினால்...! - ---------------------- - புதுக்கவிதை - இரவிலும் வானவில் என்னவள் மொட்டை மாடியில்..! - ---------------- >பாரீஸ் பார்த்தசாரதி

தமிழ் சினிமாவுக்கு 'அஞ்சான்' கற்று தரும் பாடம் என்ன?

Posted: 25 Aug 2014 07:17 AM PDT

'தமிழ் சினிமா படைக்கும் நல்லுலகம் இதுவரை மொக்கைப் படத்தையே ரசிகர்களுக்குத் தந்தது இல்லையோ?!' என்ற ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறது, லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த 'அஞ்சான்' படமும், அதற்கு சமூக வலைதளத்தில் குவிந்த 'கழுவி ஊற்றல்' எதிர்வினைகளும்! இப்படிப்பட்ட கலாய்ப்பு விமர்சனங்களை எள்ளளவும் எதிர்பார்த்திடாத நடிகர் சூர்யா, இணையத்தில் தனது படம் மீதான தொடர் தாக்குதல்களால் அதிர்ச்சியுற்று, "தியேட்டரில் படம் தொடங்குவதற்கு முன்பே, சீட்டில் இருந்தபடி ட்விட்டர், ஃபேஸ்புக்கில் விமர்சனங்களை ...

'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார்

Posted: 25 Aug 2014 06:59 AM PDT

அரசமரத்தடியில் தியானத்தில் இருந்த பெரியவரிடம், 'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' என்று கேட்டான் ஒரு மாணவன். - "உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?" - "ஆம். நன்றாகத் தெரிகின்றது." - "அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?" - "என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?" - "அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?" - "ஆம்! தெரிகின்றன." - "முழுவதும் தெரிகின்றதா?" - அவன் சற்று ...

அதிகம் உண்பதில்லை ஆனால் உடல் பருத்துக்கொண்டு போகிறது, என்று கவலையா?

Posted: 25 Aug 2014 06:34 AM PDT

அதிகம் உண்பதில்லை ஆனால் உடல் பருத்துக்கொண்டு போகிறது, என்று பலர் கவலைப்படுகிறார்கள். அதற்குக்காரணம் அவர்களுடைய உணவு அல்ல, அவர்கள் உண்ணும் ஒழுங்கற்ற முறையே. உடல் ப்ருத்துக்கொண்டு போவதை தடுக்க வேண்டுமென்றால், 1) பட்டினி இருப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். இது உடல் ஆரோக்கியத்துக்கு பாதகமானது. 2) தினமும் ஒரே நேரத்தில் உண்ணும் முறையை பின்பற்றுங்கள். அதாவது காலை உணவு 8மணிக்கு, மதிய உணவு 12.30க்கு, ...

வயோதிப பெற்றோர்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டவர்களா? அல்லது உங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்களா?

Posted: 25 Aug 2014 06:34 AM PDT

உங்கள் பெற்றோருக்கு நீங்கள் எப்போதும் பிள்ளைகள்தான் என்பதை மறந்து விடாதீர்கள், அவர்கள் எப்போதும் உங்களை தங்களுடைய பிள்ளைகளாகத்தான் நினைத்து நடப்பார்கள். இன்று உங்கள் பெற்றோர்கள் உங்களில் தங்கியிருக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் அவர்களை கட்டுப்படுத்த நினைக்காதீர்கள்.அதை பெற்றோர்கள் விரும்பமாட்டார்கள். இந்த உண்மையை பிள்ளைகள் புரிந்து கொள்ளாததினால்தான் பிரச்சனைகள் வருகிறது. பின்விளைவு பெற்றோர்கள் வயோதிப இல்லங்களுக்கு கடத்தப்படுகிறார்கள். நாங்கள் எம் பெற்றோர்களுக்கு எப்பவும் பிள்ளைகள்தான், அவர்கள் ...

படம் பார்த்து சிரியுங்கள்...

Posted: 25 Aug 2014 06:27 AM PDT

22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி

Posted: 25 Aug 2014 06:20 AM PDT

22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி: 7 பேர் படுகாயம் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம் பாகிஸ்தான் ராணுவம் நேற்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தந்தையும், மகனும் பலியானார்கள். படை வீரர் ஒருவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து எல்லையோர கிராமங்களில் வசிக்கும் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். பாகிஸ்தான் அத்துமீறல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைக் கட்டுப்பாடு ...

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி - திரைவிமர்சனம்

Posted: 25 Aug 2014 06:17 AM PDT

இன்றைய நவீன யுகத்தில் கல்வியறிவு இல்லையென்றால் தினசரி வாழ்க்கை பெரும் திண்டாட்டமாகிவிடும் என்று - சித்த மருத்துவத்தின் மகத்துவத்தைக் கலந்து - சொல்ல முயல்கிறது படம். பாரம்பரியம் மிக்க சித்த வைத்தியக் குடும்பம் ஒன்றின் ஐந்தாவது தலைமுறை வாரிசு சிகாமணி (பரத்). முதல் வகுப்பில் ஆசிரியர் அடித்துவிட்டார் என்ற கடுப்பில், அதன் பிறகு மழைக்குக்கூடப் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கவில்லை. அவனுக்கு, படித்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைக்க நினைக்கிறார் அம்மா. ஆனால் யாரும் பெண் கொடுக்கத் தயாராக இல்லை. படித்த ...

வெளி மாநிலக் கொள்ளையர்களின் சொர்க்கபூமியா தமிழகம்?- ராமதாஸ்

Posted: 25 Aug 2014 06:00 AM PDT

உத்தரபிரதேசம், பிகார், மேற்குவங்கம், மத்திய பிரதேசம், வட கிழக்கு மாநிலங்கள் என ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள கொள்ளையர்கள் தமிழகத்தை தங்களின் சொர்க்கபூமியாக மாற்றிக் கொண்டு குற்றங்களைச் செய்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: "என்றைக்கு ஓர் இளம்பெண் நகைகளை அணிந்து கொண்டு நள்ளிரவில் அச்சமின்றி தனியாக நடமாட முடிகிறதோ அன்று தான் நாம் முழுமையான விடுதலை அடைந்தவர்களாவோம் என தேசத் தந்தை மகாத்மா காந்தி கூறினார். ஆனால், பட்டப்பகலில் கூட ...

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :)

Posted: 25 Aug 2014 05:02 AM PDT



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

முன்னாள் நெகிரி செம்பிலான் மஇகா தலைவர் ராஜகோபாலு மரணம்!

Posted: 25 Aug 2014 05:00 AM PDT

சிரம்பான், ஆகஸ்ட் 25 – முன்னாள் நெகிரி செம்பிலான் மஇகா தலைவரும், ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ டி.ராஜகோபாலு இன்று காலை மாரடைப்பால் காலமானார். மாநில செயற்குழு உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்த ராஜகோபாலு, மஇகாவின் பொதுச்செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், நேற்று இரவு இருதய கோளாறு காரணமாக மாவார் ரெனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சில மணி நேரங்களில் மரணமடைந்தார். வழக்கறிஞரான ராஜகோபாலுவிற்கு வயது 63 ஆகும்.

இடைத்தேர்தல்: கர்நாடகாவிலும் பா.ஜ.வுக்கு பின்னடைவு

Posted: 25 Aug 2014 04:43 AM PDT

பெங்களூரு: பீகாரை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலிலும்,பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் பா.ஜனதாவுக்கு வலுவான தொகுதியாக கருதப்பட்ட கனிம வளங்கள் நிரம்பிய பெல்லாரி தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. அதேப்போன்று இடைத்தேர்தல் நடைபெற்ற சிக்கொடி என்ற தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று, அத்தொகுதியை தக்கவைத்துக்கொண்டுள்ள நிலையில், ...

தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள்

Posted: 25 Aug 2014 04:29 AM PDT

புதுடில்லி: மத்தியில் புதிய ஆட்சி அமைந்த பின்னர் கவர்னர்களை மாற்றுவது, குற்றச்சாட்டுக்கள் இருந்தால் கவர்னர்களை பதவியில் இருந்து நீக்குவது என்பது ஆட்சிகள் மாறும் போது நடக்கத்தான் செய்யும். சுப்ரீம் கோர்ட் அறிவுரையின்படி கவர்னர்கள் மாற்றத்தில் அரசு தானாக எந்தவொரு முடிவும் எடுக்க முடியாது என்றாலும் மாற்றம் செய்ய முடியும். ஆனால் மோடி அரசின் முடிவை கண்டு மாற்றத்தை ஏற்று கொள்ளாமல், மேலும் மோடி அரசின் கீழ் பணியாற்ற விரும்பாமல் தங்களுக்கு பதவியே வேண்டாம் என துறந்து கவர்னர்கள் தாங்களாகவே ஓடி செல்லும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™