Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தேறுமா 'நூறு?': மூடு விழாவை நோக்கி அரசு திட்டம்: 12,000 பேர் சம்பளத்துக்காக 'தவம்'

Posted:

அன்னுார்:கோவை மாவட்டத்தில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், 12 ஆயிரம் பேருக்கு ஆறு வாரங்களாக சம்பளம் வழங்கவில்லை. நிதி நெருக்கடியால், இத்திட்டத்தை முடக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.கிராம ஊராட்சிகளில், தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு, 100 நாள் வேலை தரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (என்.ஆர்.ஜி.எஸ்.,) 2006ம் ஆண்டு சில மாவட்டங்களில் துவங்கியது. படிப்படியாக நாட்டிலுள்ள, 650 மாவட்டங்களிலும் 2008 முதல் செயல்படுகிறது. இதில் இயந்திரங்களை பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க தொழிலாளர்கள் மூலம் குளம், குட்டை துார் வாருதல், சாலை ...

அண்ணாதுரைக்கு 'பாரத ரத்னா': கருணாநிதி

Posted:

சென்னை: 'மிகப்பெரிய சமூக சீர்த்திருத்தவாதி அண்ணாதுரைக்கு, இந்த ஆண்டின், 'பாரத ரத்னா' விருது அளிக்க வேண்டும்' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக, இருவருக்கும் அவர் எழுதியுள்ள கடிதம்:இந்திய பேரரசின் பாரத ரத்னா விருது, இந்திய நாட்டில் உள்ள மூத்த தலைவர்களுக்கு, ஆண்டு தோறும் வழங்குவதை ஒட்டி, தென்னகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான அண்ணாதுரைக்கு, இந்த ஆண்டு வழங்க வேண்டும்.தி.மு.க., நிறுவனரும், மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதியும், எழுத்தாளரும், இலக்கியவாதியும், ...

தி.மு.க.,- - தே.மு.தி.க.,வில் நெருக்கடி: பிறந்த நாளில் தீர்வு கிடைக்குமா?

Posted:

லோக்சபா தேர்தலுக்கு பிறகு, தி.மு.க.,- - தே.மு.தி.க.,வில் அதிகரித்துள்ள உட்கட்சி பிரச்னைக்கு, விஜயகாந்தின் பிறந்த நாளான இன்று, தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் எழுந்துஉள்ளது.லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, அ.தி.மு.க., - தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிட்ட, தே.மு.தி.க.,வுக்கு கிடைத்த பலன், படுதோல்வி.தவிடுபொடி:அதனால், 2016 சட்டசபை தேர்தலில், முதல்வர் நாற்காலியை கைப்பற்றும் எண்ணத்துடன், விஜயகாந்த் போட்டு வைத்து இருந்த திட்டம், தவிடு பொடி ஆகிஉள்ளது. மேலும், கட்சியில் இருந்து பலர் வெளியேறும் சூழ்நிலையும் உருவாகி ...

கோவைக்கு ரூ.2,378 கோடியில் புதிய திட்டங்கள்: ஜெ., அறிவிப்பு

Posted:

சென்னை: கோவையின் வெள்ளலுாரில், புதிய பேருந்து நிலையம் உட்பட பல திட்டங்களுக்கு, 2,378 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாநகராட்சியில், கடந்த மூன்றாண்டுகளில், அடிப்படை வசதிப் பணிகளுக்கு, 309 கோடி ரூபாய், மருத்துவப் பணிகள், குடிநீர் திட்டம் மற்றும் சாலைப் பணிகளுக்காக, 695 கோடி ரூபாய் என, 1,004 கோடி ரூபாய் ஒதுக்கி, பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், பழைய நகர்ப்புற சுகாதார மையங்களுக்கு, 7.04 கோடி ரூபாயில் புதிய கட்டடங்கள், 20 புதிய சுகாதார மையங்கள் மற்றும் புதிய நகர்ப்புற சுகாதார மையம் ...

பாக்., ராணுவம் மீண்டும் அட்டூழியம்: கிராமங்களை குறிவைத்து தாக்குதல்

Posted:

ஜம்மு: எல்லை பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தின் அட்டூழியம் நேற்றும் தொடர்ந்தது. எல்லையோர கிராமப் பகுதிகளை குறிவைத்து, அவர்கள் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.இரண்டு வாரங்களாக...:இந்தியா - பாகிஸ்தான் இடையே, போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறை அமலில் உள்ளது. ஆனால், பாக்., ராணுவம், இந்த விதிமுறைகளை மதிக்காமல், தொடர்ந்து, அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.கடந்த இரண்டு வாரங்களாக, இடைவிடாமல், இந்திய எல்லை பகுதிக்குள் பாக்., ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில், எல்லையோர கிராமத்தில் ...

காகித பயன்பாட்டை குறைக்கும்படி அமைச்சகங்களுக்கு அரசு உத்தரவு

Posted:

புதுடில்லி:''அலுவல் பணிகளுக்கு தேவையின்றி, காகிதங்கள் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். கூடியவரை, அனைத்து தகவல் மற்றும் குறிப்புகளையும், மின்னணு சாதனங்கள் மூலம் மேற்கொள்ளவும்' என, அனைத்து அமைச்சகங்களுக்கும், மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.மத்திய நிதி அமைச்சகத்தின், செலவுப் பிரிவு சார்பில், அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:அலுவலக பணிகளுக்கு, காகிதங்கள் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. இதனால், செலவு அதிகரிப்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. காகிதங்களை அதிகம் பயன்படுத்துவதில், அரசுத் துறைகள் ...

வெளியிடத்தில் மலம் கழிக்கும் பெண்கள் கற்பழிக்கப்பட வாய்ப்பு: மத்திய அரசு தயாரித்த சுற்றறிக்கையில் தகவல்

Posted:

புதுடில்லி: 'வெளியிடங்களில் மலம் கழிக்கச் செல்லும் பெண்கள் தான், கற்பழிக்கப்படும் அபாயத்திற்கு பெரும்பாலும் ஆளாகுகின்றனர்' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.கடந்த 15ல், டில்லியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, செங்கோட்டை கொத்தளத்தில் உரையாற்றிய பிரதமர், நரேந்திர மோடி, 'பெண்களை கண்ணியமாக வாழ விடுங்கள்; இயற்கை உபாதைகளை தணிக்கக் கூட அவர்கள், இரவு வரை காத்திருக்க வேண்டியுள்ளது; இதனால், பல விதமான உடல் உபாதைகளுக்கு ஆளாகுகின்றனர்' என, தெரிவித்திருந்தார்.அதே போல், 'பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு என தனியாக கழிப்பறை கட்ட வேண்டும்; இதனால், ...

மகாராஷ்டிர கவர்னர் சங்கர நாராயணன் ராஜினாமா: மிசோரமுக்கு மாற்றப்பட்டதால் அதிருப்தி

Posted:

புதுடில்லி: மகாராஷ்டிர மாநில கவர்னராக நான்காண்டுகளாக இருந்த, கே.சங்கர நாராயணனை, 82, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமுக்கு மத்திய அரசு இடமாற்றம் செய்தது. இதனால் அதிருப்தி அடைந்த அவர், 'என்னால் மிசோரம் செல்ல முடியாது; தீவிர அரசியலில் ஈடுபட போகிறேன்' என தெரிவித்து, பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தைஜனாதிபதிக்கு நேற்று அனுப்பினார்.மத்தியில் ஆட்சி மாறும் போது, முக்கிய அதிகாரிகள், முக்கிய மாநிலங்களின் கவர்னர்கள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். முந்தைய, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலும் இது போன்ற இடமாறுதல்கள் ...

ஊழல் தலைவர்களை பாதுகாக்க காங்., நிர்பந்தம் செய்தது அம்பலம்:'மாஜி' ஆடிட்டர் ஜெனரல் ராய் பரபரப்பு குற்றச்சாட்டு

Posted:

புதுடில்லி: 'முந்தைய காங்., ஆட்சி காலத்தில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் நடந்த ஊழல்களில் தொடர்புடைய நபர்களை பாதுகாப்பதற்காக, எனக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது' என, முன்னாள் மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியான, சி.ஏ.ஜி., வினோத் ராய், பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.முந்தைய காங்., ஆட்சி காலத்தில், மத்திய தலைமை கணக்கு அதிகாரியாக பதவி வகித்தவர், வினோத் ராய். இவரின் பதவிக் காலத்தில் தான், '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு போன்றவற்றில் நடந்த முறைகேடுகளும், அதனால் அரசுக்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™