Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இந்த நாளில் அன்று (25.8.1961); சென்னை சர்வகலாசாலை பட்டமளிப்பு விழா; கே. பாலசுப்ரமணிய அய்யர் உரை
- மகளிருக்கு இடம் கொடுப்போம்
- புதிய பூதம் வந்துவிடக் கூடாது!
- இனியுமா தயக்கம்?
- 31-ஆவது நாளாக நீடிக்கும் ராமேசுவரம் மீனவர்களின் வேலைநிறுத்தம்
- தமிழகம் முழுவதும் இன்று முதல் மக்கள் சந்திப்பு இயக்கம்: ஜி.ராமகிருஷ்ணன்
- அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: கருணாநிதி
- மது விலக்கை அமல்படுத்த தேசிய அளவில் கொள்கை: திருமாவளவன் வலியுறுத்தல்
- தமிழக அரசுப் பணிக்குத் திரும்புகிறார் ஐஏஎஸ் பெண் உயரதிகாரி சுப்ரியா சாஹு
- நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை சந்திரயான்-2 ஆய்வு செய்யும்: மயில்சாமி அண்ணாதுரை
- கருப்புப் பணம் பதுக்கியுள்ள 100 இந்தியர்கள் குறித்த தகவல்கள்
- 7ஆம் முறையாக அதிமுக பொதுச் செயலராகிறார் ஜெயலலிதா
- இலங்கைக் கடல் பகுதியில் இந்தியர்கள் மீன் பிடிக்க அனுமதி: சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கை நிராகரிப்பு
- ஒடிஸாவில் மீண்டும் உருளைக்கிழங்கு பிரச்னை
- நான்கு மாநில இடைத்தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை
- ஆந்திரத்தில் யானைகளை விரட்ட புதிய வகை துப்பாக்கி அறிமுகம்
- ராமர் கோவில் விவகாரத்தை கைவிட மாட்டோம்: விசுவ ஹிந்து பரிஷத்
- மோடி முன்னிலையில் அவமதிக்கப்பட்டதற்கு தேர்தலில் பாஜகவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்
- பள்ளி மாணவர்களுக்கு ஆக.28இல் கேரம் போட்டி துவக்கம்
- மின்னியல் மாணவர் சங்க துவக்க விழா
- கோபால்பட்டியில் தேங்காய் விலை உயர்வு
- வான் சாகச பயிற்சி மழையால் ரத்து: மாணவர்கள் ஏமாற்றம்
- கல்வி ஊக்கப் பரிசளிப்பு விழா
- கரந்தமலையில் வனத்துறையினர் ஆய்வு
- மாணவி தீக்குளித்து தற்கொலை:கேலி செய்தவர் கைது
- மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ரூ.6.89 லட்சம் வசூல்
- தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்படுமா?
- வெங்காயம் விளைச்சல் அமோகம்: விலை வீழ்ச்சி
- "புதிய மதுபானக் கொள்கை தீவிரமாக அமல்படுத்தப்படும்'
- ஆக.27-இல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- எத்தனாலில் இயங்கும் பேருந்து: இந்தியாவில் முதல்முறையாக தொடக்கம்
- ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
- நோட்டுப் புத்தகங்கள் வழங்கல்
- திருந்திய நெல் சாகுபடி: வேளாண் மாணவர்கள் செயல் விளக்க பயிற்சி
- மாடுகளால் இடையூறு: நகராட்சி எச்சரிக்கை
- நிலத்தை சேதப்படுத்தியவர்கள் மீது வழக்கு
- பொறியியல் கல்லூரி வகுப்புகள் தொடக்க விழா
- தேனீ வளர்ப்பு: வேளாண் மாணவிகளுக்குப் பயிற்சி
- கல்லூரியில் கூட்டமைப்பு தொடக்க விழா
- தேங்கும் மழை நீரை அகற்றக் கோரிக்கை
- அரியலூர் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை தேவை பி.எஸ். மீனாட்சிசுந்தரம்
- ஆக. 27-ல் கூட்டுறவு குறைதீர் நாள் கூட்டம்
- இலவச சைக்கிள்கள்
- செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களுக்கான பயிற்சி நிறைவு
- மகளிருக்கான இலவச மருத்துவ முகாம்
- விஜயகாந்த் பிறந்த நாள் : வெள்ளித்தேர் இழுத்த தேமுதிகவினர்
- உரிமமின்றி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்
- பேருந்து பயணியிடம்16 பவுன் நகைகள் திருட்டு
- மாநில ஹாக்கி போட்டி: கோவில்பட்டி அணி முதலிடம்
- யுபிஎஸ்சி தேர்வு: 4.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
- மத்திய அதிவிரைவுப் படை தகவல் சேகரிப்பு
- தேனிமலை பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி
- கணவர் கொலை: மனைவி கைது
- தேசிய திறனாய்வுத்தேர்வு: ஆக. 28-க்குள் விண்ணப்பிக்கலாம்
- மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தில் ஐம்பெரும் விழா
- அமைச்சர் மகன் தற்கொலை முயற்சி விவகாரம்: தகவல் கோருகிறது குழந்தைகள் உரிமை ஆணையம்
- பெண் டெய்லர் கழுத்தறுத்துக் கொலை
- குருங்குளத்தில் 37 மி.மீ. மழை
- தகுதி அடிப்படையிலேயே தலைமை நீதிபதி நியமனம்: கட்ஜு வலியுறுத்தல்
- பூண்டி கல்லூரியில்விளையாட்டுப் போட்டிகள்
- மண்டல செஸ் போட்டி: குடந்தை அரசு பொறியியல் கல்லூரி சிறப்பிடம்
- காப்பீட்டுச் சட்டத் திருத்த முன்வரைவை கைவிட வேண்டும்
- நெசவாளர்களுக்கு ஜக்காட் பெட்டி,தார் சுற்றும் இயந்திரம்
- பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி
- பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி.
- "விலையில்லா கால்நடைகள் திட்டத்தால் ஏழைகளின் குடும்ப வருமானம் உயர்ந்துள்ளது'
- ஜம்முவில் மோதல்: 4 தீவிரவாதிகள், 2 பாதுகாப்புப் படை வீரர்கள் சாவு
- டிராக்டர் மோதியதில் காயமடைந்த மூதாட்டி சாவு
- "மரங்களை பாதுகாப்போம்; மழை பெறுவோம்'
- நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
- ஆர்ப்பாட்டம் : மருந்தாளுநர்கள் முடிவு
- வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
- நடந்து சென்றவர் பேருந்து மோதி சாவு
- மன அழுத்தம் நீங்க நகைச்சுவை உணர்வு அவசியம்
- கரூர் யூனியன் பொன்விழா சிறப்புக் குழுக் கூட்டம்ஸ்
- கரூரில் பெண் டெய்லர் கழுத்தறுத்துக் கொலை
- அரவக்குறிச்சி அருகே ஆடு திருடிய 2 பேர் கைது
- செல்போன்களை அளவோடு பயன்படுத்த வலியுறுத்தல்
- பிரதமர் மோடிக்கு தில்லி எய்ம்ஸில் மருத்துவப் பரிசோதனை
- கூட்டுறவுச் சங்க சார்பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு
- மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் : 10 ஜோடிகள் தேர்வு
- மகாராஷ்டிரம், ஹரியாணா: பேரவைத் தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு?
- விநாயகர் சிலைகளை காவிரியில் மட்டுமே கரைக்க வேண்டும்
- விடுதி மாணவர்கள் சிறப்பிடம் பெற வேண்டும்
- தெலங்கானா, ஆந்திரத்துக்கான குடிமைப் பணி அதிகாரிகள் ஒதுக்கீடு
- கண்காட்சியில் மான்ட்போர்ட் பள்ளி முதலிடம்
- பொறியியல் கல்லூரியில் புத்தகத் திருவிழா
- சிஏஜி அறிக்கையில் சில பெயர்களை நீக்க நெருக்கடி கொடுக்கப்பட்டது: வினோத் ராய்
- வீடு இல்லாத கோயில் பூசாரிகளுக்கு பசுமைவீடுகள் திட்டத்தில் முன்னுரிமையளிக்க வலியுறுத்தல்
- அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞர் கைது
- புதுகையில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க வலியுறுத்தல்
- பொன்னமராவதியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள்கள்
- பூஜாலயா சார்பில் இசை விழா
- ஆலங்குடி அருகே ஆஸ்திரேலிய ஆந்தை மீட்பு
- புதுகை அருகே பெண் தீக்குளித்துதற்கொலை
- கட்டடக்கலைக்குச் சான்றாகத் திகழும் கொடும்பாளூர் சுற்றுலாத் தலமாக்கப்படுமா
- அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது; மாட்டு வண்டி பறிமுதல்
- ஆகஸ்ட் 26 மின் தடை
- அனுமதியின்றிமதுபானம் விற்ற 7 பேர் கைது
- கெண்டை மீன்குஞ்சு உற்பத்தி: விவசாயிகளுக்கு பயிற்சி
| இந்த நாளில் அன்று (25.8.1961); சென்னை சர்வகலாசாலை பட்டமளிப்பு விழா; கே. பாலசுப்ரமணிய அய்யர் உரை Posted: 24 Aug 2014 01:25 PM PDT சென்னை சர்வகலாசாலை பட்டமளிப்பு விழா; கே. பாலசுப்ரமணிய அய்யர் உரை |
| Posted: 24 Aug 2014 01:20 PM PDT அந்த விரைவுப் பேருந்தின் பெரும்பகுதி ஆண் பயணிகளால் நிறைந்திருந்தது. பேருந்தின் பின்பகுதியில் சில இருக்கைகள் காலியாக இருந்தன. |
| புதிய பூதம் வந்துவிடக் கூடாது! Posted: 24 Aug 2014 01:19 PM PDT சுதந்திர நாள் அன்று தில்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி பேசும்போது, திட்டக்குழுவை கலைத்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். |
| Posted: 24 Aug 2014 01:17 PM PDT கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையின் கிளைச் சாலையான ரங்கநாதன் தெருவில் இருக்கும் ஜெயச்சந்திரன் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருக்கிறது. |
| 31-ஆவது நாளாக நீடிக்கும் ராமேசுவரம் மீனவர்களின் வேலைநிறுத்தம் Posted: 24 Aug 2014 01:13 PM PDT இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வைத்துள்ள தங்களது படகுகளை விடுவிக்கக் கோரி, காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ராமேசுவரம் மீனவர்களின் போராட்டம், 31-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடித்தது. |
| தமிழகம் முழுவதும் இன்று முதல் மக்கள் சந்திப்பு இயக்கம்: ஜி.ராமகிருஷ்ணன் Posted: 24 Aug 2014 01:13 PM PDT தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25) முதல், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறவுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். |
| அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: கருணாநிதி Posted: 24 Aug 2014 01:12 PM PDT மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவுக்கு, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். |
| மது விலக்கை அமல்படுத்த தேசிய அளவில் கொள்கை: திருமாவளவன் வலியுறுத்தல் Posted: 24 Aug 2014 01:10 PM PDT மது விலக்கை அமல்படுத்த தேசிய அளவில் கொள்கைத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். |
| தமிழக அரசுப் பணிக்குத் திரும்புகிறார் ஐஏஎஸ் பெண் உயரதிகாரி சுப்ரியா சாஹு Posted: 24 Aug 2014 01:09 PM PDT மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறையில் இணைச் செயலராகப் பணியாற்றி வரும் ஐஏஎஸ் பெண் அதிகாரி சுப்ரியா சாஹு வரும் அக்டோபரில் தமிழக அரசுப் பணிக்குத் திரும்புகிறார். |
| நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை சந்திரயான்-2 ஆய்வு செய்யும்: மயில்சாமி அண்ணாதுரை Posted: 24 Aug 2014 01:07 PM PDT நிலவில் நீர் இருப்பதை சந்திரயான்-1 கண்டறிந்துள்ள நிலையில், அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து சந்திரயான்-2 ஆய்வு செய்யும் என்று சந்திரயான், மங்கள்யான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். |
| கருப்புப் பணம் பதுக்கியுள்ள 100 இந்தியர்கள் குறித்த தகவல்கள் Posted: 24 Aug 2014 01:03 PM PDT கருப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் 100 பேர் குறித்த தகவல்களை இந்தியாவிடம் சுவிட்ஸர்லாந்து நாட்டு வங்கிகள் அளித்துள்ளன. |
| 7ஆம் முறையாக அதிமுக பொதுச் செயலராகிறார் ஜெயலலிதா Posted: 24 Aug 2014 01:00 PM PDT அதிமுக பொதுச் செயலாளராக ஏழாவது முறையாக முதல்வர் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். |
| Posted: 24 Aug 2014 12:56 PM PDT இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் பகுதியில் மீன் பிடிக்க 3 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் பரிந்துரையை அந்நாடு நிராகரித்தது. |
| ஒடிஸாவில் மீண்டும் உருளைக்கிழங்கு பிரச்னை Posted: 24 Aug 2014 12:55 PM PDT ஒடிஸாவுக்கு உருளைக்கிழங்கை அனுப்புவதில் அறிவிக்கப்படாத கட்டுப்பாடுகளை மேற்கு வங்க அரசு மீண்டும் விதித்துள்ளதால், மாநிலத்தில் உருளைக்கிழங்கு தட்டுப்பாடு மீண்டும் உருவெடுத்திருக்கிறது. |
| நான்கு மாநில இடைத்தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை Posted: 24 Aug 2014 12:45 PM PDT கர்நாடகம், பிகார், மத்தியப் பிரேதசம், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில், கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற சட்டப் பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25) நடைபெறுகிறது. |
| ஆந்திரத்தில் யானைகளை விரட்ட புதிய வகை துப்பாக்கி அறிமுகம் Posted: 24 Aug 2014 12:45 PM PDT ஆந்திர எல்லையோர வனப் பகுதியில், விவசாய நிலங்களை அழித்து வரும் யானைகளை விரட்ட, புதிய வகைத் துப்பாக்கியை வனத் துறையினர் அறிமுகம் செய்துள்ளனர். |
| ராமர் கோவில் விவகாரத்தை கைவிட மாட்டோம்: விசுவ ஹிந்து பரிஷத் Posted: 24 Aug 2014 12:44 PM PDT ""ராமர் கோவில் விவகாரத்தைக் கைவிட மாட்டோம்'' என்று விசுவ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி.) அமைப்பு அறிவித்துள்ளது. |
| மோடி முன்னிலையில் அவமதிக்கப்பட்டதற்கு தேர்தலில் பாஜகவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் Posted: 24 Aug 2014 12:44 PM PDT ""பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாஜகவினர் எனக்கு எதிராக கோஷம் எழுப்பியதன் மூலம், ஹரியாணா மாநிலத்தை அவமதித்துவிட்டனர். |
| பள்ளி மாணவர்களுக்கு ஆக.28இல் கேரம் போட்டி துவக்கம் Posted: 24 Aug 2014 12:43 PM PDT பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கேரம் போட்டிகள் ஆகஸ்ட் 28ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. |
| மின்னியல் மாணவர் சங்க துவக்க விழா Posted: 24 Aug 2014 12:43 PM PDT பழனி ஸ்ரீசுப்ரமண்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்களின் சங்க துவக்க விழா நடைபெற்றது. |
| கோபால்பட்டியில் தேங்காய் விலை உயர்வு Posted: 24 Aug 2014 12:42 PM PDT திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி பகுதியில் வரத்து குறைந்துள்ளதால் தேங்காய் விலை உயர்ந்துள்ளது. நத்தம் அருகே உள்ள வேம்பார்பட்டி, அஞ்சுகுழிபட்டி, செங்குறிச்சி, அதிகாரிபட்டி உள்ளிட்ட பல்வேறு |
| வான் சாகச பயிற்சி மழையால் ரத்து: மாணவர்கள் ஏமாற்றம் Posted: 24 Aug 2014 12:42 PM PDT கொடைக்கானல் அருகே கிளைடர் வான் சாகச பயிற்சி மழை பெய்ததால் ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். |
| Posted: 24 Aug 2014 12:42 PM PDT பழனி அடிவாரப் பகுதியில், கல்வி ஊக்கப் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பழனி நகர செங்குந்தர் நலப் பேரவை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அச்சங்கத்தின் தலைவர் |
| கரந்தமலையில் வனத்துறையினர் ஆய்வு Posted: 24 Aug 2014 12:42 PM PDT நத்தம் கரந்த மலை சுற்றுப்பகுதிகளில் ஏற்கெனவே மரக்கன்றுகள் நடப்பட்டு இருந்தன. தற்போது பெய்து வரும் மழையினால் அந்த கன்றுகள் அங்கு செழிப்புடன் காணப்படுகிறது. மேலும் சிற்றோடைகளில் நீரூற்று |
| மாணவி தீக்குளித்து தற்கொலை:கேலி செய்தவர் கைது Posted: 24 Aug 2014 12:41 PM PDT கேலி செய்ததால் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியை கேலி செய்த ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ரூ.6.89 லட்சம் வசூல் Posted: 24 Aug 2014 12:41 PM PDT வேடசந்தூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தின் மூலம் இந்தியன் வங்கியின் 18 வராக் கடன்களுக்கு, ரூ.6.89 லட்சம் வசூலிக்கப்பட்டது. |
| தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்படுமா? Posted: 24 Aug 2014 12:41 PM PDT உத்தமபாளையம், சின்னமனூர் வழியாகச் செல்லும் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் குண்டும் குழியுமாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| வெங்காயம் விளைச்சல் அமோகம்: விலை வீழ்ச்சி Posted: 24 Aug 2014 12:40 PM PDT ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சிறிய வெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். |
| "புதிய மதுபானக் கொள்கை தீவிரமாக அமல்படுத்தப்படும்' Posted: 24 Aug 2014 12:40 PM PDT கேரளத்தில் 5 நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே மது அருந்தும் கூடங்களை அனுமதிக்கும் வகையில், புதிய மதுபானக் கொள்கை தீவிரமாக அமல்படுத்தப்படும் என்று அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார். |
| ஆக.27-இல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 24 Aug 2014 12:40 PM PDT தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆக.27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. |
| எத்தனாலில் இயங்கும் பேருந்து: இந்தியாவில் முதல்முறையாக தொடக்கம் Posted: 24 Aug 2014 12:40 PM PDT இந்தியாவிலேயே முதல்முறையாக எத்தனாலில் இயங்கும் பேருந்தை மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் மத்திய சாலைப்போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். |
| Posted: 24 Aug 2014 12:40 PM PDT பெரியகுளம் தென்கரை முதலிக்கோட்டை தெருவில் வசிப்பவர் செந்தில்குமார். இவரது மனைவி ராஜேஸ்வரி(47). ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர் சனிக்கிழமை இரவு பலசரக்கு |
| Posted: 24 Aug 2014 12:39 PM PDT பெரியகுளத்தில் கல்விக்கண் அறக்கட்டளை சார்பில் ஏழை,எளிய மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| திருந்திய நெல் சாகுபடி: வேளாண் மாணவர்கள் செயல் விளக்க பயிற்சி Posted: 24 Aug 2014 12:39 PM PDT போடியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் திருந்திய நெல் சாகுபடி குறித்து செயல்விளக்க பயிற்சி பெற்றனர். |
| மாடுகளால் இடையூறு: நகராட்சி எச்சரிக்கை Posted: 24 Aug 2014 12:39 PM PDT நகரில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பெரியகுளம் நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி தெரிவித்துள்ளார். |
| நிலத்தை சேதப்படுத்தியவர்கள் மீது வழக்கு Posted: 24 Aug 2014 12:39 PM PDT உத்தமபாளையம் அடுத்துள்ள அனுமந்தன்பட்டியை சேர்ந்த சின்னவீரணத்தேவர் மகன் ஜெயவீரன்(54). இவர் தன்னுடைய தோட்டத்தை இதே பகுதியே சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கத்தில் |
| பொறியியல் கல்லூரி வகுப்புகள் தொடக்க விழா Posted: 24 Aug 2014 12:39 PM PDT பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி விபிவி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. |
| தேனீ வளர்ப்பு: வேளாண் மாணவிகளுக்குப் பயிற்சி Posted: 24 Aug 2014 12:38 PM PDT குள்ளப்புரம் வேளாண்மை தொழில் நுட்பக் கல்லூரி மாணவிகளான அனாராஜ், ஆட்லின், மணிமாலா, பிரியங்கா, தனலெட்சுமி, அறிவுமதி, காவியா, வினிதா மற்றும் கிரிஷ்மாமது ஆகியோருக்கு கிராமத்தங்க |
| கல்லூரியில் கூட்டமைப்பு தொடக்க விழா Posted: 24 Aug 2014 12:38 PM PDT தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை கூட்டமைப்பு தொடக்க விழா கல்லூரி செயலர் பி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. |
| தேங்கும் மழை நீரை அகற்றக் கோரிக்கை Posted: 24 Aug 2014 12:38 PM PDT ஆண்டிபட்டி பேரூராட்சிப் பகுதியில் தேங்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும்,அதனை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் இப்பகுதி மக்கள் கோ |
| அரியலூர் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை தேவை பி.எஸ். மீனாட்சிசுந்தரம் Posted: 24 Aug 2014 12:37 PM PDT அரியலூர் மாவட்டத்துக்குள்பட்ட கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். |
| ஆக. 27-ல் கூட்டுறவு குறைதீர் நாள் கூட்டம் Posted: 24 Aug 2014 12:36 PM PDT அரியலூர் ஆட்சியரக வளாகத்தில் இயங்கும் அரியலூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஆக. 27 காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் கூட்டுறவுச் |
| Posted: 24 Aug 2014 12:36 PM PDT அரியலூர் மாவட்டம், திருமானூர் அரசுப்பள்ளியில் 128 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் அண்மையில் வழங்கப்பட்டன. |
| செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களுக்கான பயிற்சி நிறைவு Posted: 24 Aug 2014 12:36 PM PDT பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், இளையோர் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| மகளிருக்கான இலவச மருத்துவ முகாம் Posted: 24 Aug 2014 12:35 PM PDT பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான இலவச மருத்துவ முகாமில் 350 பேர் பயன் பெற்றனர். |
| விஜயகாந்த் பிறந்த நாள் : வெள்ளித்தேர் இழுத்த தேமுதிகவினர் Posted: 24 Aug 2014 12:35 PM PDT தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி செட்டிக்குளம் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயிலில், அக்கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளித்தேர் இழுத்தனர். |
| உரிமமின்றி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் Posted: 24 Aug 2014 12:35 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் உரிமமின்றி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| பேருந்து பயணியிடம்16 பவுன் நகைகள் திருட்டு Posted: 24 Aug 2014 12:34 PM PDT தஞ்சாவூர் அருகே பேருந்தில் பயணம் செய்தவரிடம் 16 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மாநில ஹாக்கி போட்டி: கோவில்பட்டி அணி முதலிடம் Posted: 24 Aug 2014 12:34 PM PDT தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை தொடங்கி, இரு நாள்கள் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் கோவில்பட்டி அணி முதலிடம் பெற்றது. |
| யுபிஎஸ்சி தேர்வு: 4.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு Posted: 24 Aug 2014 12:34 PM PDT நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் 4.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். |
| மத்திய அதிவிரைவுப் படை தகவல் சேகரிப்பு Posted: 24 Aug 2014 12:34 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்த பதற்றமான சம்பவங்களின் தகவல்களை மத்திய அதிவிரைவுப் படை போலீஸார் சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். |
| தேனிமலை பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி Posted: 24 Aug 2014 12:34 PM PDT பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை எஸ்எஸ்ஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 24 Aug 2014 12:33 PM PDT கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள தெற்கு மாடுவிழுந்தான்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ரா. நடராஜன் (50). இவர் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார். |
| தேசிய திறனாய்வுத்தேர்வு: ஆக. 28-க்குள் விண்ணப்பிக்கலாம் Posted: 24 Aug 2014 12:33 PM PDT மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு வரும் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்டக் கல்வித் துறை அறிவித்துள்ளது. |
| மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தில் ஐம்பெரும் விழா Posted: 24 Aug 2014 12:33 PM PDT புதுக்கோட்டையில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஐம்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| அமைச்சர் மகன் தற்கொலை முயற்சி விவகாரம்: தகவல் கோருகிறது குழந்தைகள் உரிமை ஆணையம் Posted: 24 Aug 2014 12:32 PM PDT பிகார் அமைச்சரின் மகன் தற்கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் சமர்ப்பிக்குமாறு, சிந்தியா பள்ளியிடம் மத்தியப் பிரதேச குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையும் கோரியுள்ளது. |
| பெண் டெய்லர் கழுத்தறுத்துக் கொலை Posted: 24 Aug 2014 12:32 PM PDT கரூரில் பெண் டெய்லர் ஞாயிற்றுக்கிழமை கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் உள்ள விராலிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன், |
| Posted: 24 Aug 2014 12:32 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்குளத்தில் 37 மி.மீ. மழை பெய்தது. |
| தகுதி அடிப்படையிலேயே தலைமை நீதிபதி நியமனம்: கட்ஜு வலியுறுத்தல் Posted: 24 Aug 2014 12:32 PM PDT பணி மூப்புக்கு முன்னுரிமை கொடுக்காமல், தகுதியின் அடிப்படையிலேயே உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்று இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். |
| பூண்டி கல்லூரியில்விளையாட்டுப் போட்டிகள் Posted: 24 Aug 2014 12:32 PM PDT தஞ்சாவூர் அருகே பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் அ. வீரையா வாண்டையார் நினைவு விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. |
| மண்டல செஸ் போட்டி: குடந்தை அரசு பொறியியல் கல்லூரி சிறப்பிடம் Posted: 24 Aug 2014 12:31 PM PDT அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான செஸ் போட்டியில் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் இரண்டாமிடம் பிடித்தனர். |
| காப்பீட்டுச் சட்டத் திருத்த முன்வரைவை கைவிட வேண்டும் Posted: 24 Aug 2014 12:31 PM PDT காப்பீட்டுச் சட்டத் திருத்த முன்வரைவை மத்திய அரசு கைவிட வேண்டும் எனக் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| நெசவாளர்களுக்கு ஜக்காட் பெட்டி,தார் சுற்றும் இயந்திரம் Posted: 24 Aug 2014 12:31 PM PDT கும்பகோணம் துவரங்குறிச்சி வடக்குத் தெருவில் நெசவாளர்களுக்கு ஜக்காட் பெட்டி மற்றும் தார்சுற்றும் இயந்திரம் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி Posted: 24 Aug 2014 12:31 PM PDT சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கொடிவயல் மரக்காவலசை நடுநிலைப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. |
| பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. Posted: 24 Aug 2014 12:31 PM PDT ஹரியாணா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மற்றொரு முன்னாள் எம்.பி.யான ஜிதேந்திர சிங் மாலிக், பாஜகவில் இணைந்தார். |
| "விலையில்லா கால்நடைகள் திட்டத்தால் ஏழைகளின் குடும்ப வருமானம் உயர்ந்துள்ளது' Posted: 24 Aug 2014 12:30 PM PDT தமிழக அரசின் விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டத்தால் ஏழைகளின் குடும்ப வருமானம் உயர்ந்துள்ளது என்றார் மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால். |
| ஜம்முவில் மோதல்: 4 தீவிரவாதிகள், 2 பாதுகாப்புப் படை வீரர்கள் சாவு Posted: 24 Aug 2014 12:30 PM PDT ஜம்மு -காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். |
| டிராக்டர் மோதியதில் காயமடைந்த மூதாட்டி சாவு Posted: 24 Aug 2014 12:30 PM PDT குத்தாலம் காவல்சரகம் மல்லியம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதாம்பாள் (70). இவர் கடந்த 18-ம் தேதி சாலையோரம் இருந்த மரத்தடி நிழலில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் மருதாம்பாள் மீது ஏறி இறங்கியது. |
| "மரங்களை பாதுகாப்போம்; மழை பெறுவோம்' Posted: 24 Aug 2014 12:30 PM PDT மரங்களை பாதுகாப்போம், மழை பெறுவோம் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். காளிராஜ் மகேஷ்குமார். திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற |
| நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தல் Posted: 24 Aug 2014 12:30 PM PDT காரைக்கால் பகுதியில் அதிகரித்து வரும் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். |
| ஆர்ப்பாட்டம் : மருந்தாளுநர்கள் முடிவு Posted: 24 Aug 2014 12:29 PM PDT காப்பீட்டுத் திட்டத்தில் ஊக்கத்தொகை, பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப். 25-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் ம. தேவேந்திரன். |
| வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வலியுறுத்தல் Posted: 24 Aug 2014 12:29 PM PDT வறட்சி பாதித்த மாவட்டமாக கரூரை அறிவித்து நிவாரணமாக ரூ. 10,000 வழங்கிட வேண்டும் என கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| நடந்து சென்றவர் பேருந்து மோதி சாவு Posted: 24 Aug 2014 12:29 PM PDT குளித்தலை அருகே ஞாயிற்றுக்கிழமை, நடந்து சென்றவர் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தார். |
| மன அழுத்தம் நீங்க நகைச்சுவை உணர்வு அவசியம் Posted: 24 Aug 2014 12:28 PM PDT மன அழுத்தத்தில் இருந்து விடுபட நகைச்சுவை உணர்வு மிகவும் அவசியம் என்றார் கரூரைச் சேர்ந்த மனநல மருத்துவர் கா. செந்தில்வேலன். |
| கரூர் யூனியன் பொன்விழா சிறப்புக் குழுக் கூட்டம்ஸ் Posted: 24 Aug 2014 12:28 PM PDT கரூர் ஒன்றிய அலுவலகத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவர் எஸ். திருவிகா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு துணை |
| கரூரில் பெண் டெய்லர் கழுத்தறுத்துக் கொலை Posted: 24 Aug 2014 12:28 PM PDT கரூரில் பெண் டெய்லர் ஞாயிற்றுக்கிழமை கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் உள்ள விராலிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன், |
| அரவக்குறிச்சி அருகே ஆடு திருடிய 2 பேர் கைது Posted: 24 Aug 2014 12:27 PM PDT அரவக்குறிச்சி பகுதியில் ஆடு திருடுய 2 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| செல்போன்களை அளவோடு பயன்படுத்த வலியுறுத்தல் Posted: 24 Aug 2014 12:27 PM PDT செல்போன்களை தேவைக்கு மீறி பயன்படுத்தினால் மன அழுத்தம் உருவாகும் என்றார் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி. |
| பிரதமர் மோடிக்கு தில்லி எய்ம்ஸில் மருத்துவப் பரிசோதனை Posted: 24 Aug 2014 12:27 PM PDT தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார். |
| கூட்டுறவுச் சங்க சார்பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு Posted: 24 Aug 2014 12:27 PM PDT அரவக்குறிச்சி அருகே ஆண்டிபட்டிக்கோட்டையில் நடைபெற்ற தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்க தேர்தலில் மோசடியாக முடிவுகளை அறிவித்ததாக மாவட்ட கூட்டுறவு சங்க சார்பதிவாளர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. |
| மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் : 10 ஜோடிகள் தேர்வு Posted: 24 Aug 2014 12:26 PM PDT பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் சுயம்வரத்துக்கான நேர்காணல் நிகழ்ச்சியில் 10 ஜோடிகள் இணைந்தனர். |
| மகாராஷ்டிரம், ஹரியாணா: பேரவைத் தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு? Posted: 24 Aug 2014 12:26 PM PDT மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் அறிவிக்கும் என்று தெரிகிறது. |
| விநாயகர் சிலைகளை காவிரியில் மட்டுமே கரைக்க வேண்டும் Posted: 24 Aug 2014 12:26 PM PDT சதுர்த்தியின்போது பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் மட்டுமே கரைக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| விடுதி மாணவர்கள் சிறப்பிடம் பெற வேண்டும் Posted: 24 Aug 2014 12:26 PM PDT விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளில் அரசுப் பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| தெலங்கானா, ஆந்திரத்துக்கான குடிமைப் பணி அதிகாரிகள் ஒதுக்கீடு Posted: 24 Aug 2014 12:26 PM PDT ஆந்திர மாநிலத்துக்கும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தெலங்கானா மாநிலத்துக்குமான குடிமைப் பணி அதிகாரிகளின் ஒதுக்கீட்டை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. |
| கண்காட்சியில் மான்ட்போர்ட் பள்ளி முதலிடம் Posted: 24 Aug 2014 12:25 PM PDT வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி என்ற தலைப்பில் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். |
| பொறியியல் கல்லூரியில் புத்தகத் திருவிழா Posted: 24 Aug 2014 12:25 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லெனாவிலக்கு மவுன்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் புத்தகத் திருவிழா அண்மையில் நடைபெற்றது. |
| சிஏஜி அறிக்கையில் சில பெயர்களை நீக்க நெருக்கடி கொடுக்கப்பட்டது: வினோத் ராய் Posted: 24 Aug 2014 12:25 PM PDT மத்தியில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான சிஏஜி அறிக்கைகளில் இருந்து, சிலரின் பெயர்களை நீக்குமாறு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் தனக்கு நெருக்கடி கொடுத்ததாக முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் கூறினார். |
| வீடு இல்லாத கோயில் பூசாரிகளுக்கு பசுமைவீடுகள் திட்டத்தில் முன்னுரிமையளிக்க வலியுறுத்தல் Posted: 24 Aug 2014 12:25 PM PDT வீடு இல்லாத கோயில் பூசாரிகளுக்கு பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் முன்னுரிமை அளித்து வீடு வழங்க வேண்டுமென கோயில் பூசாரிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞர் கைது Posted: 24 Aug 2014 12:25 PM PDT புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| புதுகையில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க வலியுறுத்தல் Posted: 24 Aug 2014 12:24 PM PDT புதுக்கோட்டையில் மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டுமென இந்திய முன்னாள் படைவீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. |
| பொன்னமராவதியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள்கள் Posted: 24 Aug 2014 12:24 PM PDT பொன்னமராவதியில் வட்டாராத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 24 Aug 2014 12:24 PM PDT புதுக்கோட்டை பூஜாலயா சார்பில் நான்காம் ஆண்டு இசை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ஆலங்குடி அருகே ஆஸ்திரேலிய ஆந்தை மீட்பு Posted: 24 Aug 2014 12:24 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே காயங்களுடன் மீட்கப்பட்ட ஆஸ்திரேலியா ஆந்தை வன அலுவலர்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. |
| புதுகை அருகே பெண் தீக்குளித்துதற்கொலை Posted: 24 Aug 2014 12:23 PM PDT புதுக்கோட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் பெண் ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். |
| கட்டடக்கலைக்குச் சான்றாகத் திகழும் கொடும்பாளூர் சுற்றுலாத் தலமாக்கப்படுமா Posted: 24 Aug 2014 12:23 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கட்டடக்கலைக்குச் சான்றாகத் திகழும் கொடும்பாளூரை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டுமென அப்பகுதிமக்கள் எதிர்பார்க்கின்றனர். |
| அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது; மாட்டு வண்டி பறிமுதல் Posted: 24 Aug 2014 12:23 PM PDT திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் சனிக்கிழமை அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது செய்யப்பட்டார். அவரது மாட்டு வண்டியை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| Posted: 24 Aug 2014 12:22 PM PDT குடவாசல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து குடவாசல் மின்வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: |
| அனுமதியின்றிமதுபானம் விற்ற 7 பேர் கைது Posted: 24 Aug 2014 12:22 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த 7 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| கெண்டை மீன்குஞ்சு உற்பத்தி: விவசாயிகளுக்கு பயிற்சி Posted: 24 Aug 2014 12:21 PM PDT காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் நவீன மீன் குஞ்சு பொறிப்பகம் மூலம் கெண்டை மீன்குஞ்சு உற்பத்தி செய்வது குறித்து சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |