Tamil News | Online Tamil News |
- தேனி மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி: பிழைப்பு தேடி வெளியூர் செல்லும் விவசாயிகள்
- மின்னணு சேவைகளை பயன்படுத்துவதில் தமிழகம் மூன்றாமிடம்: கடந்த ஆண்டை விட 10 இடங்கள் முன்னேறியது
- முரண்டு பிடித்த கருணாநிதி: ஆசி பெற போராடிய ஸ்டாலின்
- தே.ஜ., அணியில் அதிர்வை ஏற்படுத்திய அ.தி.மு.க., உறவு: கூட்டணி கட்சிகள் குமுறல்; தமிழக பா.ஜ., நழுவல்
- மீண்டும் இரண்டு மணி நேர மின்வெட்டு : கோவை, திருப்பூரில் திணறும் தொழில் நிறுவனங்கள்
- செப்., 1 முதல் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் வரி உயர்வு: ஆம்னி பஸ்கள், டாக்சிகளின் கட்டணம் அதிகரிக்கும்
- சாலையில் செல்லும் வாகனங்களின் வேக உச்சவரம்பு 100 கி.மீ.,: 25 ஆண்டுகளுக்கு பின் உயர்த்தி மத்திய அரசு உத்தரவு
- பாக்., அத்துமீறலால் எல்லையில் ராணுவம் குவிப்பு: பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க திட்டம்
- தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.,க்களிடம் பிரதமர் மோடி உறுதி: இலங்கை தமிழர்களுக்கு அதிகாரம் கிடைக்க நடவடிக்கை
- சி.ஏ.ஜி. அறிக்கையில் அரசியல்புள்ளிகளின் பெயரை நீக்க எனக்கு நெருக்கடி: மாஜி சி.ஏ.ஜி. பகீர் குற்றச்சாட்டு
| தேனி மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி: பிழைப்பு தேடி வெளியூர் செல்லும் விவசாயிகள் Posted: தேவதானப்பட்டி: தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் விவசாயப்பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. தென்னை, மா, சப்போட்டா, கரும்பு, வாழை, வெற்றிலைக் கொடிக்கால்கள் காய்ந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களும் பிழைப்புக்காக வெளியூர் செல்கின்றனர்.பெரியகுளம் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் வராகநதியாக பாய்கிறது. வடுகபட்டி, மேல்மங்கலம், சில்வார்பட்டி, ஜெயமங்கலம், நல்லகருப்பன்பட்டி, சிந்துவம்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், மருகால்பட்டி கிராமங்களில் உள்ள ... |
| மின்னணு சேவைகளை பயன்படுத்துவதில் தமிழகம் மூன்றாமிடம்: கடந்த ஆண்டை விட 10 இடங்கள் முன்னேறியது Posted: சென்னை: தேசிய அளவில், அரசு சேவைகளை கணினி மூலம் பெறும் மாநிலங்களில், கடந்த ஆண்டு, 12வது இடத்தில் இருந்த தமிழகம் இந்த ஆண்டு, மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மத்திய அரசின், மின்னணு பரிமாற்றங்களை ஆய்வு செய்யும், 'இ தால்' புள்ளி விவரங்கள், இதை தெளிவுபடுத்தியுள்ளது.குறிப்பாக, தமிழக சுகாதாரத்துறை, கல்வித்துறை ஆகியவை, இப்பிரிவில், அபரிமிதமான வளர்ச்சி பெற்றுள்ளன.தொழில் நுட்ப வளர்ச்சியால், மக்கள் இருந்த இடத்தில் இருந்தே, அரசின் பல்வேறு சேவைகளை பெற முடியும்.குறிப்பாக, கட்டணங்கள் செலுத்துதல், பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பித்தல் போன்றவை, கணினி வாயிலாக, ... |
| முரண்டு பிடித்த கருணாநிதி: ஆசி பெற போராடிய ஸ்டாலின் Posted: அழகிரியை கட்சியில் சேர்க்கும் விஷயத்தில் முரண்டு பிடித்த ஸ்டாலினை, தி.மு.க., தலைவர் கருணாநிதி வழிக்குக் கொண்டு வந்த விவரங்கள் வெளியாகி, கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.லோக்சபா தேர்தலுக்கு முன், கட்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, அழகிரியை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது தி.மு.க., தலைமை. அவருடைய ஆதரவாளர்கள் பலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.கோபம்:அதனால், கோபமடைந்த அழகிரி, கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் ஆதிக்கத்தால்தான், தான் நீக்கப்பட்டிருப்பதாகவும், அதனால், லோக்சபா தேர்தலில் கட்சி தோல்வியடையும் என்றும் ... |
| தே.ஜ., அணியில் அதிர்வை ஏற்படுத்திய அ.தி.மு.க., உறவு: கூட்டணி கட்சிகள் குமுறல்; தமிழக பா.ஜ., நழுவல் Posted: நரேந்திர மோடி பிரதமரான பிறகு, மத்திய அரசுடன் இணக்கமான போக்கை, அ.தி.மு.க., கடைபிடித்து வருகிறது. அரசுக்கு ஆதரவாக, ராஜ்யசபாவில் ஆதரவுக்கரம் நீட்ட காத்திருப்பதன் காரணமாக, அ.தி.மு.க.,வுக்கு, லோக்சபாவில் துணை சபாநாயகர் பதவியை தந்து, பா.ஜ., கவுரவித்திருக்கிறது.இதன்மூலம், சத்தமின்றி, மத்திய பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இடம் பிடித்திருக்கிறது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள, துணை சபாநாயகர் தம்பிதுரை, 'லோக்சபா துணை சபாநாயகர் பதவியை நாங்கள் ஏற்றுக்கொண்டதில் இருந்தே, மத்திய அரசில், அ.தி.மு.க.,வும் பங்கு பெறத் துவங்கி விட்டது' என்று ... |
| மீண்டும் இரண்டு மணி நேர மின்வெட்டு : கோவை, திருப்பூரில் திணறும் தொழில் நிறுவனங்கள் Posted: கோவை: தொழில் நகரான கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கடந்த ஞாயிறு முதல், பகல் நேரங்களில் அதிகபட்சமாக, இரண்டு மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் தொழில்துறையினர் அதிருப்தியடைந்துள்ளனர்.கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். டெக்ஸ்டைல், மெஷினரி, கார்மென்ட், பம்ப், பவுண்டரி, கிரைண்டர் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளில், இவ்விரு மாவட்டங்களும் சிறந்து விளங்குகின்றன.பாதிப்பு:தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக ... |
| Posted: தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும் சுங்கச்சாவடிகளில், செப்., 1ம் தேதி முதல் வாகனங்களின் கட்டணம், 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கிறது. ஏப்ரல் மாதம் தமிழகத்தில், பல சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்ட நிலையில், கடும் எதிர்ப்பை மீறி மீதமுள்ள, 21 சுங்கச்சாவடிகளிலும், இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வரவுள்ளது.நாடு முழுவதும், 20 ஆயிரம் கி.மீ.,க்கும் மேற்பட்ட சாலைகள், தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம், நான்கு மற்றும் ஆறு வழிச்சாலைகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தனியாரிடம் ஒப்படைப்பு : தமிழகத்தில், 4,974 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை ... |
| Posted: புதுடில்லி: இந்திய சாலைகளில் செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களின் வேகத்தை அதிகரித்து, மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் படி, கார்களில் அதிகபட்சம், மணிக்கு, 100 கி.மீ., வேகத்தில் பயணிக்கலாம்; இருசக்கர வாகனங்களில், மணிக்கு, 80 கி.மீ.,யில் பறக்கலாம்.இதற்கு முன், 1989 ஜூன் 9ல், வாகனங்களில் வேகம் மாற்றியமைக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.நகர சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே நிற்கும் போக்குவரத்து காவலர்கள், வாகனங்களை ஓட்டி வருபவர்களை ... |
| பாக்., அத்துமீறலால் எல்லையில் ராணுவம் குவிப்பு: பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க திட்டம் Posted: ஜம்மு:ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இந்திய ராணுவ முகாம்களை நோக்கியும், கிராமங்களை நோக்கியும், பாகிஸ்தான் படையினர், நேற்று தாக்குதல் நடத்தியதில், அப்பாவிகள் இருவர் கொல்லப்பட்டனர்; எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உட்பட, ஆறு பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் கூடுதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவ அதிகாரிகளும் எல்லை பகுதிக்கு விரைந்துள்ளனர்.இந்தியா - பாகிஸ்தான் இடையே, 2003ம் ஆண்டில், போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனாலும், இந்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைப் பகுதிகளில், பாக்., படையினர் அவ்வப்போது ... |
| Posted: 'இலங்கை அரசின், 13வது சட்ட திருத்தத்தில் கூறப்பட்டு உள்ளதை காட்டிலும், அதிகமான அதிகாரங்களை தமிழர் களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்துவோம்; இலங்கை தமிழர் பிரச்னையில், தொடர்ந்து அக்கறையாக செயல்படுவோம்' என, தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.,க் களிடம், பிரதமர் நரேந்திர மோடி உறுதிஅளித்துள்ளார்.இலங்கையைச் சேர்ந்த, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில், எம்.பி.,க்கள் சுரேஷ் பிரமேச்சந்திரன், சேனாதி ராஜா, செல்வம் அடைக்கலநாதன், செல்வராசா, சுமந்திரன் ஆகியோர் நேற்று டில்லியில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர்.பிரதமரின் ரேஸ்கோர்ஸ் ... |
| Posted: புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, 2-ஜி ஸ்பெக்ட்ரம்ஒதுக்கீடு, காமன்வெல்த் ஆகியவற்றில் நடந்த முறைகேடு ஆகியவற்றால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு தொடர்பான தணிக்கை அறிக்கையில் சிக்கியுள்ள சில அரசியல் தலைவர்களின் பெயர்களை நீக்க கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசு தனக்கு நெருக்கடி கொடுத்தது என முன்னாள் கணக்கு தணிக்கை ஜெனரல் ( சி.ஏ.ஜி).தலைவர் குற்றச்சாட்டை சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அதிர்வலை ஏற்படுத்திய அறிக்கைஉபி.யை ச் சேர்ந்தவர் வினோத்ராய் (66) இவர் சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய கணக்குதணிக்கை ஜெனரல் தலைவராக பணியாற்றி கடந்த (2013)ஆண்டு மே ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 24,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |