Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மின்னணு ஓட்டு இயந்திரத்தின் மீது முழு நம்பிக்கை: சம்பத் பேட்டி

Posted:

புதுச்சேரி: ''மின்னணு இயந்திரங்கள் மூலமாக நடத்தப்படும் ஓட்டுப் பதிவில், இந்திய தேர்தல் ஆணையம் முழு நம்பிக்கை வைத்துள்ளது,'' என, தலைமை தேர்தல் ஆணையர், சம்பத் தெரிவித்தார்.புதுச்சேரியில் நடந்த, தென் மாநில தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த சம்பத், நிருபர்களிடம் கூறியதாவது:இந்தியாவில், 2004, 2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக, அரசியல்வாதிகள் குறை கூறினர். அவ்வாறு குறை கூறியவர்களே, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் ...

கற்பழிப்புக்கு தண்டனை 'அறை': உ.பி., பஞ்சாயத்து வினோத தீர்ப்பு

Posted:

லக்னோ:உத்தர பிரதேசத்தில், கற்பழிக்கப்பட்ட, 14 வயது சிறுமியை, போலீசில் புகார் அளிக்க விடாமல் தடுத்த பஞ்சாயத்து நிர்வாகிகள், கற்பழிப்புக்கு தண்டனையாக, கற்பழித்த இளைஞனை, கன்னத்தில் அறையச் சொல்லிய கொடுமை நிகழ்ந்துள்ளது.சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி.,யின் பிஜ்னோர் பகுதியில், கிராமம் ஒன்றில், 14 வயது சிறுமியை, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் சில நாட்களுக்கு முன் கற்பழித்து விட்டான்.'வெளியே சொன்னால் கொன்று விடுவேன்' என அவன் மிரட்டியதால், அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை, பிறருக்கு சொல்லவில்லை. மீண்டும் ...

திருவள்ளூர் மாவட்ட குவாரிகளில் முறைகேடு: குவியும் புகார்களால் பொதுப்பணி துறை அதிர்ச்சி

Posted:

சுற்றுச்சூழல் துறை அனுமதியை மீறி, திருவள்ளூர் மாவட்ட மண் குவாரிகளில் முறைகேடு அதிகரித்துள்ளது குறித்து, புகார்கள் குவிகின்றன. இதனால், பொதுப்பணித் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பசுமை தீர்ப்பாயம்: திருவள்ளூர் மாவட்டத்தில், சோழவரம், புதுார், கும்மனுார், ஆவடி, பெருங்காவூர் உள்ளிட்ட பல இடங்களில், பொதுப்பணித் துறை மூலம் மண்குவாரி திறக்கப்பட்டு உள்ளது. இந்த குவாரிகளில், குறிப்பிட்ட ஆழம் வரை சவுடு மண், செம்மண்ணும், அதற்கு கீழ், மணலும் கிடைக்கிறது.பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி, சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற்று, இந்த குவாரிகள் ...

ஆளும்கட்சியின் ஊழலை தெரியப்படுத்த இணையதளம்: கரூர் தி.மு.க., கூட்டத்தில் ஸ்டாலின் தகவல்

Posted:

கரூர்: ""ஆளும் கட்சியினரின் ஊழல்களை உடனுக்குடன் தெரியப்படுத்த, தி.மு.க., சார்பில் இன்டர்நெட் துவங்கப்படும்,'' என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.கரூர் மாவட்ட, தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து, ஐந்தாவது மாவட்டமாக, கரூர் மாவட்டத்தில் ஆய்வு பணி நடக்கிறது. மாதந்தோறும், 10 மாவட்டங்களில் ஆய்வு பணி நடத்த, தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.இயக்கத்தின் அடித்தள நிர்வாகிகளின் உணர்வுகளை புரிந்துகொள்ள ஆய்வு பணி நடக்கிறது. ...

கருணாநிதியுடன் கே.பி.ராமலிங்கம் எம்.பி., திடீர் சந்திப்பு: சமரச பேச்சு முடிவுக்கு வந்தது; அழைப்புக்காக அழகிரி காத்திருப்பு

Posted:

அழகிரியின் தீவிர ஆதரவாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான, கே.பி.ராமலிங்கம், சென்னையில், நேற்று முன்தினம் இரவு, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, சி.ஐ.டி., காலனியில் உள்ள வீட்டில் சந்தித்துப் பேசினார்.கட்சியை விட்டு நீக்கப்பட வேண்டியவர்கள் என, தயாரிக்கப்பட்ட, 33 பேர் பட்டியலில், முக்கியமான இடத்தில் இருந்தவர், கே.பி.ராமலிங்கம். அவர் மீதான நடவடிக்கை கைவிடப்பட்ட நிலையில், நீண்ட நாட்களுக்கு பின், கருணாநிதியை அவர் சந்தித்துப் பேசி உள்ளார். சொல்லப்படவில்லைகட்சி பொருளாளர் ஸ்டாலின், ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, கரூர் சென்றுள்ள நிலையில், சென்னையில் இந்த ...

மேற்கு வங்கத்தை குறி வைக்கும் அமித் ஷா: 2016ல் பா.ஜ., ஆட்சி அமைக்க திட்டம்

Posted:

கோல்கட்டா: பீகார், ம.பி., உள்ளிட்ட, நான்கு மாநில சட்டசபை இடைத்தேர்தல் நிறைவடைந்துள்ளதை அடுத்து, விரைவில் மேற்கு வங்கத்தில் நடக்கவுள்ள இடைத் தேர்தலில் வெற்றி பெற, அமித் ஷா தலைமையிலான, பா.ஜ.,வினர் தயாராகி வருகின்றனர்.திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, மேற்கு வங்கத்தில், இரு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. மாநிலத்தில், ஆளும் கட்சி முழு பலத்துடன் இருந்தாலும், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., இதுவரை இல்லாத அளவு குறிப்பிடத் தகுந்த ஓட்டுகளை பெற்றது. இது, அக்கட்சியினரிடையே நம்பிக்கை ...

வளர்ச்சிக்கு உள்நாட்டு தொழில்நுட்பம் அவசியம்: மோடி

Posted:

புதுடில்லி: ''நாட்டின் வளர்ச்சிக்கு, உலகளாவிய அறிவியலும், உள்நாட்டு தொழில்நுட்பமும், மிகவும் அவசியம்,'' என, பிரதமர் மோடி பேசினார்.டில்லியில், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன (ஐ.ஐ.டி.,) இயக்குனர்கள் மாநாட்டில், பிரதமர் மோடி பேசியதாவது:நாட்டின் வளர்ச்சியிலும், புதிய கண்டுபிடிப்புகளிலும், ஐ.ஐ.டி., மாணவர்களின் பங்கு அளப்பரியது. இன்னமும் இறக்குமதி: நம் நாட்டில், எத்தனையோ திறமை வாய்ந்த பொறியாளர் கள் உள்ளபோதும், ராணுவம், மருத்துவம் போன்ற முக்கிய துறைகளில் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை, நாம் இன்னமும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி ...

கேரளாவில் மதுபான கடைகளுக்கு 'பூட்டு': 5 சதவீத கூடுதல் வரி விதித்து முதல்வர் உத்தரவு

Posted:

திருவனந்தபுரம்: 'கேரளாவில், ஐந்து நட்சத்திர அந்தஸ்து உள்ள ஓட்டல்களில் மட்டும் தான், மதுபானங்கள் விற்கப்படும்; பிற இடங்களில் விற்கப்படாது' என, நேற்று முன்தினம், அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டு, 700 மதுபான பார்களை மூட உத்தரவிட்ட முதல்வர் உம்மன் சாண்டி, நேற்று, புதிய மதுபான கொள்கையை வெளியிட்டு, மதுபானங்கள் மீது கூடுதலாக, 5 சதவீத வரியும் விதித்தார்.முதல்வர் சாண்டியின் இந்த நடவடிக்கைக்கு, அம்மாநில பெண்கள் வெகுவாக ஆதரவு அளித்துள்ளனர்.தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான அரசு ...

எதிர்க்கட்சி தலைவர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையீடு: 2 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

Posted:

புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் நேற்று தலையிட்டது. லோக்பால் உட்பட, சில அரசியல் சட்ட அமைப்பு களுக்கு, தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில், எதிர்க்கட்சித் தலைவர் இடம் பெற வேண்டியது மிகவும் அவசியமானது.அதனால், லோக்சபாவில், எந்தக் கட்சிக்கும் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படாத நிலையில், இந்தப் பிரச்னையில், மத்திய அரசின் நிலை என்ன என்பதை, இரண்டு வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழங்க முடியாது: லோக்சபாவில், ஒரு கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™