Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அஸ்ஸாமில் ஊரடங்கு தளர்வு

Posted: 22 Aug 2014 12:35 PM PDT

அஸ்ஸாம்-நாகாலாந்து எல்லைப் பகுதியில் வன்முறைகள் ஏற்பட்டதை அடுத்து, கோலாகாட் மாவட்டத்தில் வியாழக்கிழமை விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, வெள்ளிக்கிழமை 12 மணி நேரத்துக்கு தளர்த்தப்பட்டது.

சட்ட விரோதமாக ரூ.50,000 கோடி திரட்டிய பிஏசிஎல் நிறுவனம் மீது செபி நடவடிக்கை

Posted: 22 Aug 2014 12:34 PM PDT

: சட்டவிரோதமாக ரூ.50,000 கோடி மதிப்பிலான முதலீடுகளைத் திரட்டும் திட்டங்களை உடனே நிறுத்துமாறு பிஏசிஎல் நிறுவனத்துக்கு இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) உத்தரவிட்டுள்ளது.

விஜயகாந்த் பிறந்த நாள்: தங்கத் தேர் இழுத்த தேமுதிகவினர்

Posted: 22 Aug 2014 12:32 PM PDT

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, அக்கட்சியினர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு தங்கத் தேர் இழுத்தனர்.

கீழப்பெரம்பலூரில் சாமி சிலைகள் சேதம்

Posted: 22 Aug 2014 12:32 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வியாழக்கிழமை இரவு 4 சாமி கற்சிலைகளை சேதப்படுத்திய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சர்க்கரை இறக்குமதி வரி அதிகரிப்பு

Posted: 22 Aug 2014 12:32 PM PDT

சர்க்கரைக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால், சர்க்கரை விலை உயரலாம் என்று கூறப்படுகிறது.

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் சாவு

Posted: 22 Aug 2014 12:32 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் குன்னுமேடு பகுதியை சேர்ந்த நாகராஜ்

பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு

Posted: 22 Aug 2014 12:31 PM PDT

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி வண்ணாரப்பேட்டை சாலையில் உள்ள செந்தில் நகரைச் சேர்ந்த ராஜரத்தினத்தின் மனைவி வனிதா (57). இவர் வீட்டில் வியாழக்கிழமை அதிகாலை தனியாக

அரியலூரில் பிரதோஷ விழா

Posted: 22 Aug 2014 12:31 PM PDT

அரியலூரில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கும், சிவபெருமானுக்கும் வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

உறியடி திருவிழாவில் பக்தர்கள் மாவிளக்கு வழிபாடு

Posted: 22 Aug 2014 12:31 PM PDT

கரூர் அருகே வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி உறியடி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் மாவிளக்கு வழிபாடு செய்தனர்.

கீழ்பவானி வாய்க்கால்கள் மதகுகளை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

Posted: 22 Aug 2014 12:30 PM PDT

கீழ்பவானி (எல்பிபி) வாய்க்கால்கள் மதகுகளை சீரமைக்க வேண்டுமென கீழ்பவானி முறைப்பாசன விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தடையில்லா தொழில் வளர்ச்சிக்கு கம்பெனிகள் சட்டம் திருத்தப்படும்

Posted: 22 Aug 2014 12:30 PM PDT

நாட்டில் நீடித்த வளர்ச்சி விகிதத்தை உறுதி செய்யவும் தொழில் வளர்ச்சிக்கு எதிராக இருக்கும் தடைகளை அகற்றவும் கம்பெனிகள் சட்டம்-2013இல் சில திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 23 மின் தடை

Posted: 22 Aug 2014 12:30 PM PDT

புதுக்கோட்டை நகர், வல்லத்திராகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 23) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செஸ் போட்டியில் வென்றவர்களுக்குப் பாராட்டு

Posted: 22 Aug 2014 12:30 PM PDT

மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வென்ற கட்டையாண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

பிகார்: கங்கையில் அபாய கட்டத்தை எட்டிய வெள்ளம்

Posted: 22 Aug 2014 12:29 PM PDT

பிகாரில் கங்கையிலும், பிற நதிகளிலும் வெள்ளம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது.

"வேளாண் உற்பத்தியைப் பெருக்க நவீன தொழில்நுட்பங்கள் தேவை'

Posted: 22 Aug 2014 12:29 PM PDT

வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் நவீன தொழில் நுட்பங்களே தற்போதைய தேவை என்றார் ஆட்சியர் செ. மனோகரன்.

வடுகப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Posted: 22 Aug 2014 12:29 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் வடுகப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வலையபட்டி பள்ளியில் விளையாட்டு விழா

Posted: 22 Aug 2014 12:29 PM PDT

பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 38-ம் ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொது நூலகத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

Posted: 22 Aug 2014 12:29 PM PDT

பொது நூலகத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், இளநிலை உதவியாளர், கண்காணிப்பாளர், நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர், முதல்நிலை நூலகர், மாவட்ட நூலக

படித்த இளைஞர்களுக்கு ஆக. 26-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Posted: 22 Aug 2014 12:29 PM PDT

பள்ளி இறுதி வகுப்பில் தோல்வி, பட்டப்படிப்பில் தேர்ச்சி, தொழிற்கல்விப் படிப்பில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் இன்றி இருப்பவர்களுக்கு

குண்டர் தடுப்புசட்டத்தில் ஒருவர் கைது

Posted: 22 Aug 2014 12:28 PM PDT

தஞ்சாவூர் வெங்கடேச பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (53). இவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி. தர்மராஜன் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு ஆட்சியர் என். சுப்பையன் வெள்ளிக்கிழமை ஆணையிட்டார்.

தருண கணபதி கோயில் குடமுழுக்கு

Posted: 22 Aug 2014 12:28 PM PDT

கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் இணை கோயிலான தருண கணபதி கோயிலில் வெள்ளிகிழமை காலை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

குடந்தை பள்ளியில் புத்தகக் கண்காட்சி

Posted: 22 Aug 2014 12:28 PM PDT

கும்பகோணம் அல்அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சென்னை தனியார் பதிப்பகத்தார் நடத்தும் இரண்டு நாள் புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு

Posted: 22 Aug 2014 12:27 PM PDT

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டினுள் தூங்கிக் கொண் டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி

அரசு அதிகாரிகள் நேரம் தவறாமல் வருவதை உறுதிப்படுத்த வேண்டும்

Posted: 22 Aug 2014 12:27 PM PDT

அரசு அலுவலகங்களில் பணிச்சூழலை மேம்படுத்தவும், அதிகாரிகள் சரியான நேரத்தில் அலுவலகம் வருவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துத் துறை பொதுச் செயலர்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி விளையாட்டு விழா

Posted: 22 Aug 2014 12:27 PM PDT

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி சிறுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் விளையாட்டு விழாவும், பள்ளியின் ஆண்டு விழாவும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் தாளாளர் ஏ. பாக்கியசாமி தலைமை வகித்தார்.

பதிவுமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல்

Posted: 22 Aug 2014 12:27 PM PDT

பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்; இல்லாவிடில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அனைத்து பி.எட். பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பெண் சாவில் மர்மம் இருப்பதாக புகார்

Posted: 22 Aug 2014 12:27 PM PDT

நாகை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள அஞ்சவார் தலைப்பகுதியைச் சேர்ந்தவர் சங்கரி (30). இவருக்கும், கும்பகோணம் அருகேயுள்ள சந்தனாள்புரத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள்

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

Posted: 22 Aug 2014 12:26 PM PDT

பாபநாசம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் சங்கிலியை பறித்து சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

Posted: 22 Aug 2014 12:26 PM PDT

தஞ்சாவூர் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை ஒன்றிப்பின் தஞ்சாவூர் சரகம் சார்பில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

மணிப்பூர்: இரோம் ஷர்மிளா மீண்டும் கைது

Posted: 22 Aug 2014 12:26 PM PDT

வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, 14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளா வெள்ளிக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டார்.

பேருந்து மோதி முதியவர் சாவு

Posted: 22 Aug 2014 12:26 PM PDT

பாபநாசம் அருகே பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார்.

தனியார் நிறுவனத்தில் மோசடி: 2 பேர் கைது

Posted: 22 Aug 2014 12:26 PM PDT

தஞ்சாவூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மோசடி செய்ததாக 2 ஊழியர்களை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

செப். 9-ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

Posted: 22 Aug 2014 12:25 PM PDT

நாகை மாவட்ட ஓய்வூதியர் குறைதீர் கூட்டம், செப். 9-ம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.

குறு வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

Posted: 22 Aug 2014 12:25 PM PDT

நாகை மாவட்டம், தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளியில் தரங்கம்பாடி குறு வட்ட அளவிலான கோ - கோ, கபடி விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன

திருவாரூரில் ஆக.26-ல்எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 22 Aug 2014 12:24 PM PDT

திருவாரூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோ

இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு

Posted: 22 Aug 2014 12:24 PM PDT

திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனர்.

காரைக்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

Posted: 22 Aug 2014 12:24 PM PDT

 காரைக்கால் மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற இ. வல்லவன் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

ரூ.57 லட்சம் தங்கம் பறிமுதல்

Posted: 22 Aug 2014 12:23 PM PDT

துபாயிலிருந்து கேரளத்துக்கு தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாக கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.57 லட்சம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

சதுர்த்தி விழா: 208 இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு

Posted: 22 Aug 2014 12:23 PM PDT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கரூர் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் 208 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு மற்றும் விஜர்சன ஊர்வலம் நடைபெற உள்ளது.

108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் குறைகள் களைய சிறப்புக் குழு நியமிக்கக் கோரிக்கை

Posted: 22 Aug 2014 12:23 PM PDT

108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் குறைகளை களைய சிறப்புக் குழு நியமிக்க வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம் குறித்த கருத்து: வருத்தம் தெரிவித்தார் அருண் ஜேட்லி

Posted: 22 Aug 2014 12:23 PM PDT

தில்லியில் நிகழ்ந்த "நிர்பயா' பாலியல் பலாத்காரத்தை "சிறிய சம்பவம்' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அவர் வெள்ளிக்கிழமை வருத்தம் தெரிவித்தார்.

கரூரில் சுகாதாரக்கேடு ஏற்படும் வகையில் அள்ளிச் செல்லப்படும் நகராட்சி குப்பைகள்!

Posted: 22 Aug 2014 12:23 PM PDT

கரூர் நகர் பகுதியில் சேகரமாகும் குப்பைகளை டிராக்டரில் தார்ப்பாய் போட்டு மூடாமல் எடுத்துச் செல்வதால் சுகாதாரக்கேடு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

திமுகவின் செயல்பாடுகளை தெரிவிக்க விரைவில் இணையதளம்: மு.க. ஸ்டாலின்

Posted: 22 Aug 2014 12:23 PM PDT

திமுகவின் கொள்கைகள் மற்றும் கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகளை வெளியிட திமுக இளைஞரணி சார்பில், விரைவில் இணையதளம் வெளியிடப்படும் என்றார் அக்கட்சியின்

கரூர் ரயில் நிலையத்தில்மு.க. ஸ்டாலினுக்கு திமுகவினர் வரவேற்பு

Posted: 22 Aug 2014 12:22 PM PDT

கரூருக்கு வெள்ளிக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மு.க. ஸ்டாலினுக்கு ரயில் நிலையத்தில் திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை ஐஐடிக்கள் உருவாக்க வேண்டும்: நரேந்திர மோடி

Posted: 22 Aug 2014 12:22 PM PDT

பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு சாதனங்களைத் தயாரிப்பதற்கான உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை உருவாக்குமாறு இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை (ஐஐடி) பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

அரவக்குறிச்சியில் "தூய்மை கரூர்' விழிப்புணர்வு பேரணி

Posted: 22 Aug 2014 12:22 PM PDT

திறந்தவெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் தவிர்த்திடவும், அனைத்து வீடுகளில் முழுமையாக கழிப்பறை வசதியை ஏற்படுத்திடவும் "தூய்மை கரூர் மாவட்டம்' என்ற விழிப்புணர்வு பேரணி அரவக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

"உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வங்கிகளில் கடனுதவி'

Posted: 22 Aug 2014 12:22 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க, 25 முதல் 40 வயது வரையுள்ள படித்த இளைஞர்கள் விண்ணப்பித்து, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனுதவி பெற்றுக்கொள்ளலாம் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை.

மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம்

Posted: 22 Aug 2014 12:21 PM PDT

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டி.ஆர். பச்சமுத்துவின் பிறந்த நாளையொட்டி, பெரம்பலூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழர்களின் அடையாளங்களை அழிக்கிறது இலங்கை

Posted: 22 Aug 2014 12:21 PM PDT

இலங்கையில் தமிழர்களின் மொழி, இன, கலாசார அடையாளங்களை அழிக்கும் அந்நாட்டு அரசின் நடவடிக்கையை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (டிஎன்ஏ) தலைவர்கள் வலியுறுத்தினர்.

ரோட்டரி சங்க நிர்வாகிகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

Posted: 22 Aug 2014 12:21 PM PDT

பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்கத்தின் 2014 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் பயன்பெறலாம்: ஆட்சியர்

Posted: 22 Aug 2014 12:21 PM PDT

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பயன்பெற தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இலவச தையல் பயிற்சி பெற்ற 120 மாணவிகளுக்கு சான்றிதழ்

Posted: 22 Aug 2014 12:21 PM PDT

பெரம்பலூர் தந்தை ரோவர் தொழில்நுட்பக் கல்லூரியில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி பெற்ற 120 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புள்ளம்பாடி வாய்க்கால் தண்ணீர் கடைமடை வரை செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

Posted: 22 Aug 2014 12:20 PM PDT

புள்ளம்பாடி வாய்க்காலில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் கடைமடை வரை செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வ

ஆட்சியருடன் விவசாய சங்க பிரதிநிதிகள் வாக்குவாதம்

Posted: 22 Aug 2014 12:20 PM PDT

அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருடன் விவசாய சங்கப் பிரதிநிதிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அனுமதியின்றி மணல் அள்ளிய 9 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 22 Aug 2014 12:20 PM PDT

அறந்தாங்கியில் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 9 மாட்டு வண்டிகளை அறந்தாங்கி வட்டாட்சியர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தார்.

நிலம் விற்கவிரும்புவோர் தனி வட்டாட்சியரை அணுகலாம்

Posted: 22 Aug 2014 12:19 PM PDT

அரசின் நலத் திட்டங்களுக்காக தேவைப்படும் நிலத்தை விற்க விரும்புவோர் புதுக்கோட்டை, அறந்தாங்கியிலுள்ள ஆதிதிராவிடர் நலத் துறை தனி வட்டாட்சியரைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆட்சியர் செ. மனோகரன் வெளியிட்ட தகவல்:

சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 22 Aug 2014 12:19 PM PDT

புதுக்கோட்டை நகராட்சியில் துப்புரவுப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் விடுவதைக் கண்டித்தும், அத்தகைய ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சிஐடியு தொழிற்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை

நிலத்தடி நீரை மாசுபடுத்தும் தனியார் ஆலையை அகற்ற வலியுறுத்தல்

Posted: 22 Aug 2014 12:19 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியிலுள்ள நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. எனவே இந்த தொழிற்சாலையை அகற்ற

மாணவர்கள் மோதல்: கல்லூரி எழுத்தர் கொலை

Posted: 22 Aug 2014 12:19 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சம்பல் மாவட்டத்திலுள்ள தனியார் கல்லூரியில் இரு மாணவர் குழுக்களிடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில், அந்தக் கல்லூரியின் எழுத்தர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக, நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆலங்குடி அருகே சடலமாக மீட்கப்பட்ட பெண் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்தவர்

Posted: 22 Aug 2014 12:19 PM PDT

ஆலங்குடி அருகே தைலமரக்காட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்தவர் என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அன்னவாசலில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

Posted: 22 Aug 2014 12:18 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

ஜம்மு குடியிருப்புப் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: ஒருவர் காயம்

Posted: 22 Aug 2014 12:18 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு மாவட்டத்தில் சர்வதேச எல்லையை ஒட்டிய இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் குடியிருப்புப் பகுதியில் இருந்த வீடுகள் சேதமடைந்தன, ஒருவர் காயமடைந்தார்.

ஊராட்சி நிதியை உயர்த்தி தர வலியுறுத்தல்

Posted: 22 Aug 2014 12:18 PM PDT

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊராட்சி நிதியை உயர்த்தித் தர வேண்டுமென ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்புக்

மேற்குவங்கம்: பாஜக நிர்வாகி சுட்டுக்கொலை

Posted: 22 Aug 2014 12:18 PM PDT

மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார்.

சைக்கிள் மீது பேருந்துமோதிய வழக்கு: பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை

Posted: 22 Aug 2014 12:18 PM PDT

ஆலங்குடி அருகே சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய வழக்கில் பேருந்து ஓட்டுநனருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து ஆலங்குடி நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

பாலியல் புகார்: பாஜக முன்னாள் எம்எல்ஏ மகன் கைது

Posted: 22 Aug 2014 12:17 PM PDT

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த மாநில பாஜக முன்னாள் எம்எல்ஏவின் மகன் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கூடுதல் தண்ணீர் திறப்பு அவசியம்

Posted: 22 Aug 2014 12:17 PM PDT

மேட்டூர் அணை, கல்லணை கால்வாயில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

யுபிஎஸ்சி தேர்வு: பார்வையற்றோருக்கு கூடுதல் நேரம்

Posted: 22 Aug 2014 12:17 PM PDT

மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி) முதல் நிலைத் தேர்வை எழுதும் பார்வையற்றோருக்கு, இரு தேர்வுகளுக்கும் கூடுதலாக தலா 40 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கல்லணை கால்வாயில் மூழ்கியமருத்துவ மாணவரின் சடலம் மீட்பு

Posted: 22 Aug 2014 12:17 PM PDT

தஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வாயில் குளித்தபோது மூழ்கிய மருத்துவக் கல்லூரி மாணவரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

Posted: 22 Aug 2014 12:16 PM PDT

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காகச் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மடிக்கணினி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted: 22 Aug 2014 12:16 PM PDT

மடிக் கணினி வழங்க வலியுறுத்தி, தஞ்சாவூரில் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன் இந்திய மாணவர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடியுடன் ஹூடா சந்திப்பு

Posted: 22 Aug 2014 12:16 PM PDT

"பிரதமர் நரேந்திர மோடியுடன் கூட்டங்களில் கலந்துகொள்ள மாட்டேன்' என்று கூறிய ஹரியாணா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மோடியை தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

செப். 1 முதல் கோமாரி நோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

Posted: 22 Aug 2014 12:16 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோமாரி நோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் செப். 1-ம் தேதி தொடங்கப்படவுள்ளது என்றார் ஆட்சியர் என். சுப்பையன். இந்த முகாம் நடத்துவது தொடர்பாக ஆட்சியரகக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அ

பெருவுடையார் கோயில் தேரில் அச்சு பொருத்தம்

Posted: 22 Aug 2014 12:16 PM PDT

தஞ்சாவூரில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் பெருவுடையார் கோயில் தேருக்கு அச்சு பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டது.

வேகத் தடைகளில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

Posted: 22 Aug 2014 12:15 PM PDT

 தஞ்சாவூர் மாநகரில் உள்ள வேகத் தடைகளில் விபத்து ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி. வலியுறுத்தியுள்ளது.

"நோயற்ற வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம்'

Posted: 22 Aug 2014 12:15 PM PDT

நோயற்ற வாழ்வுக்கு துரித உணவுகளைத் தவிர்த்து, பாரம்பரிய உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி.

சுருள்பாசி வளர்ப்பு,மதிப்பூட்டுதல் பயிற்சி

Posted: 22 Aug 2014 12:15 PM PDT

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஸ்பைருலினா (சுருள்பாசி) வளர்ப்பு மற்றும் மதிப்பூட்டுதல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கழிவுநீர் வாய்க்காலாக மாறி வரும் பாசன வாய்க்கால்கள்

Posted: 22 Aug 2014 12:14 PM PDT

சீர்காழி பகுதியில் உள்ள கழுமலை ஆறு, திருத்தோணிபுரம் பாசன வாய்க்கால்கள் கழிவுநீர் வாய்க்காலாக மாறியும், ஆக்கிரமிக்கபட்டும் உள்ளன. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சீர்காழியில் கழுமலை ஆறு பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் தேனூர் பகுதியில்

அதிமுக பிரமுகருக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட சாலை அகற்றம்

Posted: 22 Aug 2014 12:14 PM PDT

குத்தாலம் வட்டம் பேராவூர் ஊராட்சியில் உள்ள சிற்றிருப்பு காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். விவசாயி. அதிமுக கிளைச் செயலரான இவருக்குச் சொந்தமான நிலத்தில் 114 சதுரமீட்டர் இடத்தை பொதுமக்கள் சிற்றிருப்பில் இருந்து வடக்கு காஞ்சிவாய் செல்வதற்

வீடு கட்ட மானியம்: புதுவை அரசு பாரபட்சம் காட்டுகிறது நாஜிம் புகார்

Posted: 22 Aug 2014 12:14 PM PDT

வீடு கட்டும் மானியத் தொகை வழங்குவதில் புதுச்சேரி, காரைக்கால் இடையே அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம் கூறியுள்ளார்.

அரசம்பட்டி

Posted: 22 Aug 2014 12:13 PM PDT

இஸ்ரேல் தாக்குதலில் இருவர் சாவு

Posted: 22 Aug 2014 12:07 PM PDT

காஸா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் வெள்ளிக்கிழமை காலை நடத்திய தாக்குதலில் இரு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

காஸா: அமைதி காண ஐரோப்பிய நாடுகள் முயற்சி

Posted: 22 Aug 2014 12:07 PM PDT

காஸாவில் அமைதி திரும்புவது தொடர்பான ஐ.நா. பாதுகாப்புக் குழுத் தீர்மானத்தில் சில முக்கிய ஆலோசனைகளை ஐரோப்பிய நாடுகள் அளித்துள்ளன என ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன.

எகிப்தில் இரு பேருந்துகள் மோதல்: 38 பேர் சாவு

Posted: 22 Aug 2014 12:06 PM PDT

எகிப்தில் இரு பேருந்துகள் வெள்ளிக்கிழமை நேருக்கு நேர் மோதியதில் 38 பேர் உயிரிழந்தனர். 41 பேர் பலத்த காயமடைந்தனர்.

தலிபான்களுக்கு பணப் பட்டுவாடா: பாகிஸ்தான் நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை

Posted: 22 Aug 2014 12:06 PM PDT

ஆப்கானிஸ்தான் தலிபான்களுக்கு பணப் பட்டுவாடா செய்து வந்த பாகிஸ்தான் நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இதுவரை காணாத அதிபயங்கர இயக்கம் ஐ.எஸ்.

Posted: 22 Aug 2014 12:05 PM PDT

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) அமைப்பு, வழக்கமான பயங்கரவாத அமைப்புகளையெல்லாம் விட மிகவும் அபாயகரமானது என அமெரிக்கா கூறியுள்ளது.

உதவிப் பொருள்களுடன் உக்ரைனுக்குள் நுழைந்தன ரஷிய லாரிகள்

Posted: 22 Aug 2014 12:03 PM PDT

நிவாரணப் பொருள்களை ஏற்றி கடந்த வாரம் ரஷியாவிலிருந்து புறப்பட்ட வாகனங்கள், வெள்ளிக்கிழமை உக்ரைனுக்குள் நுழைந்தன.

இம்ரான் கட்சி எம்.பி.க்கள் ஒட்டுமொத்த ராஜிநாமா

Posted: 22 Aug 2014 12:02 PM PDT

பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்துள்ளனர்.

களியக்காவிளை சந்தையில் இடையூறாக உள்ள மீன்பெட்டிகளை அகற்ற நாளை வரை கெடு

Posted: 22 Aug 2014 12:02 PM PDT

களியக்காவிளை மீன் சந்தையில் பேரூராட்சி அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறாக சந்தைப் பகுதியை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் மீன் பெட்டிகளை அதன் உரிமையாளர்கள் ஆக. 24 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மீன் சந்தை

விளையாட்டில் மாணவர்களுக்கு முன்னுரிமை

Posted: 22 Aug 2014 12:02 PM PDT

பள்ளிகள் விளையாட்டில் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஒலிம்பிக் வீராங்கனை ஷைனி வில்சன் தெரிவித்தார்.

டி.வி.எஸ் ஸெஸ்ட் ஸ்கூட்டர் அறிமுகம்

Posted: 22 Aug 2014 12:01 PM PDT

டி.வி.எஸ். நிறுவனம் சார்பில் "ஸ்கூட்டி - ஸெஸ்ட்' என்ற புதிய ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. 110 சிசி என்ஜின் திறன் கொண்ட இந்த ஸ்கூட்டர், 5 வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

நாகர்கோவிலில் 26இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 22 Aug 2014 12:01 PM PDT

நாகர்கோவிலில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) நடைபெறுகிறது.

கார்- பைக் மோதிய விபத்தில் விவசாயி சாவு

Posted: 22 Aug 2014 12:01 PM PDT

பூதப்பாண்டி அருகே கார்- பைக் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் வியாழக்கிழமை இறந்தார்.

தலைமைக் காவலர் மகன் கொலை வழக்கு: சரணடைந்த 3 பேர் நாகர்கோவிலில் ஆஜர்

Posted: 22 Aug 2014 12:01 PM PDT

நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற தலைமைக் காவலர் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைந்த மூவரை போலீஸார் வெள்ளிக்கிழமை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களை 3 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

Posted: 22 Aug 2014 12:01 PM PDT

நித்திரவிளை அருகே மின்சாரம் பாய்ந்து வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தார். கலிங்கராஜபுரம் பகுதியில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து உரசியதில் ஒரு கடையில் இரும்பு

ஊட்டுவாழ்மடத்தில் குழந்தைகள் காப்பகம்

Posted: 22 Aug 2014 12:00 PM PDT

ஊட்டுவாழ்மடத்தில் குழந்தைகள் காப்பகத்தை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

சாமிதோப்பு தலைமைப் பதியில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

Posted: 22 Aug 2014 12:00 PM PDT

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கக் கூட்டம்

Posted: 22 Aug 2014 12:00 PM PDT

தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க குமரி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

Posted: 22 Aug 2014 11:59 AM PDT

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குமரி தமிழ்நல எழுத்தாளர் சங்க இலக்கியக் கூட்டம்

Posted: 22 Aug 2014 11:59 AM PDT

குமரி மாவட்ட தமிழ்நல எழுத்தாளர் சங்க இலக்கியக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முனைவர் கு. சுயம்புலிங்கம் தலைமை வகித்தார். பொதுச் செயலர் கவிஞர் சி.பா.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™