Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அசாம் - நாகாலாந்து கலவரம் தீவிரமடைகிறது: அறிக்கை கேட்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

Posted:

புதுடில்லி: அசாம் - நாகாலாந்து மாநிலங்களிடையே ஏற்பட்டுள்ள, எல்லை பிரச்னை தொடர்பான கலவரம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.எல்லை பிரச்னை:அசாம் - நாகாலாந்து மாநிலங்களிடையே, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, எல்லை பிரச்னை இருந்து வருகிறது. சமீபத்தில், அசாமின் உரிம்காட் பகுதிக்குள் ஊடுருவிய, நாகாலாந்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய கும்பல், அங்கு வசித்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில், ஏராளமான வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.பதிலுக்கு, அசாம் மாநிலத்தை ...

மன்மோகன் மீது வழக்கு தொடர அனுமதி

Posted:

வாஷிங்டன்: 'பிரதமராக மன்மோகன் சிங் இருந்த காலகட்டத்தில் அவர் மீது அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாத அளவிற்கு தடையாணை இருந்தது. அவர் நிதியமைச்சராக இருந்த காலகட்டத்திற்கு அத்தகைய சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது' என, அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்தியாவில், 1980ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சீக்கிய தீவிரவாதம் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களில், ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.அந்த பிரச்னைகளை இப்போது எழுப்பி, அமெரிக்க நீதிமன்றங்களில், அமெரிக்காவாழ் சீக்கியர்கள், வழக்கு தொடர்ந்து வருகின்றனர். 1984ல் நடைபெற்ற ...

மின்வாரிய அனல் மின் நிலையங்களில் தொடர் பழுது: கள ஆய்வு செய்ய உயர் அதிகாரிகள் முடிவு

Posted:

அனல் மின் நிலையங்களில் ஏற்படும் தொடர் பழுது குறித்து, அங்கு நேரடியாக சென்று, கள ஆய்வு செய்ய, மின்வாரிய உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு மின் வாரியத்திற்கு சொந்தமாக, திருவள்ளூர் மாவட்டம் - எண்ணுார், 340; வடசென்னை, 630; சேலம் மாவட்டம் - மேட்டூர், 840; துாத்துக்குடி, 1,050 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் உள்ளன.இவற்றுடன், வடசென்னை விரிவாக்கம், 1,200; மேட்டூர் விரிவாக்கம், 600 மெகாவாட், புதிய அனல் மின் நிலையங்களும் துவக்கப்பட்டுள்ளன. மின்வாரிய அனல் மின் நிலையங்களின், மொத்த மின் உற்பத்தித்திறன், 4,660 மெகாவாட் என்றளவில் உள்ளது.அனல் மின் நிலையங்கள், ...

ரயில்களில் கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு: என்ன செய்ய போகிறது நிர்வாகம்?

Posted:

அரக்கோணம் அருகே, ஓடும் ரயிலில், பெண் பயணிகளை தாக்கி, நகைகளை பறித்த சம்பவம், ரயில்களில், பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. 'இதற்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்' என, பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.ஏப்ரல், 27ம் தேதி, மயிலாடுதுறையில் இருந்து மைசூர் சென்ற ரயிலில், பயணிகளின், 17 சவரன் நகைகளை பறித்து, மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.மே, 1ம் தேதி, சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்றிருந்த பெங்களூரு கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், அடுத்தடுத்து, இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன.இந்த கொடூர சம்பவத்தை அடுத்து, எக்ஸ்பிரஸ் ...

திறமை மீது முழு நம்பிக்கை வையுங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவுரை

Posted:

சென்னை: 'கடவுள் மீதும், உங்கள் திறமை மீதும், முழு நம்பிக்கை வைத்தால், துன்பங்களை முறியடித்து, வெற்றியை எட்டுவது நிச்சயம்' என, முதல்வர் ஜெயலலிதா, கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார்.சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், அமைச்சர் செந்துார்பாண்டியன், வீட்டு வசதி வாரியத் தலைவர் முருகையாபாண்டியன், அண்ணா தொழிற்சங்க பேரவைத் தலைவர் ராசு, நெல்லை எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன், திருவொற்றியூர் எம்.எல்.ஏ., குப்பன், நுகர்வோர் கூட்டுறவு இணையத் தலைவர் உமாதேவன், திருப்பத்துார் தொகுதி செயலர் வெங்கடேஸ்வரன்; விழுப்புரம் வடக்கு மாவட்ட, பாசறை செயலர் ...

பா.ஜ., முதல்வர் வேட்பாளர் நடிகர் ரஜினி?அமித் ஷா பேச்சுக்கு பின் பரபரப்பு

Posted:

நடிகர் ரஜினிகாந்துடன் பா.ஜ., அகில இந்திய தலைவர், அமித் ஷா, போனில் தொடர்பு கொண்டு பேசிய தகவல், வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகி இருக்கிறது.மும்முரமாக...: நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகவிருக்கும், 'லிங்கா' படத்தின் சூட்டிங், கர்நாடகாவில் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக, கர்நாடகாவில் தங்கியிருக்கும் நடிகர் ரஜினிகாந்தை, இரண்டு வாரத்துக்கு முன், பா.ஜ., தலைவர் அமித் ஷா, போனில் தொடர்பு கொண்டு பேசினார்.அதன் தொடர்ச்சியாக, நடிகர் ரஜினியை முன் வைத்து, பல்வேறு விதமான செய்திகள், அரசியல் அரங்கில் பேசப்படுகின்றன. தமிழக பா.ஜ.,வை, அடுத்த ...

கருணாநிதி மனைவி தயாளுவுக்கு ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவு

Posted:

புதுடில்லி: நாட்டையே உலுக்கிய, பல லட்சம் கோடி ரூபாய், '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் தொடர்புடைய, 'கலைஞர் டிவி'க்கு, 200 கோடி ரூபாய் சட்டவிரோதமாக வழங்கிய விவகாரத்தில், டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள, தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மனைவி, தயாளு, 83, மகள் கனிமொழி, முன்னாள் அமைச்சர், ராஜா உட்பட அனைவருக்கும் ஜாமின் வழங்கி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நேற்று உத்தரவிட்டது. முதலில் நேற்று காலை, தயாளுவுக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி, ஓ.பி.சைனி, உடல் நலம் மோசமாக இருப்பதால், வழக்கில்இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்ற, தயாளுவின் ...

மோடி விழாவில் பங்கேற்க காங்., முதல்வர்களுக்கு தடை

Posted:

புதுடில்லி : 'பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் அரசு விழாக்களில் கலந்து கொள்ள வேண்டாம்' என, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு, அந்த கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது:அரியானாவில், நேற்று முன்தினம் நடந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அரசு விழா என்பதால், காங்கிரஸ் மூத்த தலைவரும், அரியானா முதல்வருமான, பூபிந்தர் சிங் ஹூடாவும், அந்த விழாவில் பங்கேற்றார்.அப்போது, கூட்டத்தில் இருந்தவர்கள், காங்கிரஸ் மற்றும் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். ...

திட்டங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க டி.ஆர்.டி.ஓ.,வுக்கு பிரதமர் மோடி ஆலோசனை

Posted:

புதுடில்லி: ''இந்த உலகம், எதற்காகவும் காத்துக் கொண்டிருக்காது. எனவே, ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம், தன் திட்டப் பணிகளை, குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.டில்லியில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமான, டி.ஆர்.டி.ஓ., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:இந்த உலகம், மிக வேகமாக நவீனமயமாகி வருகிறது. அதற்கேற்ப, நாமும் ஈடு கொடுக்க வேண்டும். யாருக்காகவும், எதற்காகவும், இந்த உலகம் காத்துக் கொண்டிருக்காது. எனவே, டி.ஆர்.டி.ஓ., அதிகாரிகள், தங்களின் திட்டங்களையும், ...

பிரிவினைவாதிகளுடன் பேசியது தவறில்லையாம்: இந்திய வீரர்கள் மீதும் பாக்., ஐ - கமிஷனர் அபாண்டம்

Posted:

புதுடில்லி: ''காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் பிரிவினைவாதிகளை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை; காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்பது தான், இந்த சந்திப்பின் உள்நோக்கம். இது வழக்கமான மரபு தான்; தொடர்ந்து சந்திப்போம்,'' என, இந்தியாவுக்கான பாகிஸ்தான் ஐ - கமிஷனர், அப்துல் பாசித் நேற்று கூறினார்.மேலும், எல்லையில், இந்திய ராணுவம் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், இதனால், பல முறை இந்தியாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.நாடு சுதந்திரம் அடையும் முன், 1947 வரை, ஒரே நாடாக இருந்த இந்தியாவும், பாகிஸ்தானும், சுதந்திரத்திற்குப் பிறகு ...

சுவிஸ் நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்கும் வாய்ப்பு பிரகாசம்: புதிய மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்றது சுப்ரீம் கோர்ட்

Posted:

புதுடில்லி: இந்தியாவில் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை, சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளில் பதுக்கியுள்ள இந்தியர்களின் வங்கிக் கணக்குகளையும், அது தொடர்பான விவரங்களையும் ஆராய்ந்து வரும், சிறப்பு விசாரணை குழு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில் திருப்தி அடைந்த கோர்ட், 'இந்த விவகாரத்தில், சில குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது' என, தெரிவித்தது.இதனால், வெளிநாடுகளில் பதுக்கியுள்ள பணத்தை இந்தியா கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.கோடிக்கணக்கில் பணம்: சுவிட்சர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™