Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அறிமுகம்

Posted: 20 Aug 2014 01:25 PM PDT

பெயர்:ஸ்ரீ 

சொந்த ஊர்:சென்னை

ஆண்/பெண்:பெண்

ஈகரையை அறிந்த விதம்: தேடல்

பொழுதுபோக்கு:என் குழந்தை

தொழில்:இல்லத்தரசி

டிப்ஸ்... டிப்ஸ்...

Posted: 20 Aug 2014 01:17 PM PDT

தெரியுமா?

Posted: 20 Aug 2014 01:09 PM PDT

உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்... 1)உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு என்ணை எடுக்கவும் 2)அதை இரண்டால் பெருக்கவும்.. 3)அதனுடன் ஐந்தை (5) கூட்டவும் 4)கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும் 5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும் 6)அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (1985,1987,1956 etc) இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்...அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்... மற்ற (2 digit) எண் உங்களின் வயது....

17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014

Posted: 20 Aug 2014 01:03 PM PDT

நகரம்: இஞ்சியோன், தென் கொரியா குறிக்கோள் வசனம்: பன்மயம் இங்கே ஒளிர்கிறது நிகழ்வுகள்: 36 விளையாட்டுகளில் 439 போட்டிகள் துவக்க விழா : செப்டம்பர் 19 நிறைவு விழா : அக்டோபர் 4 முதன்மை அரங்கம் : இஞ்சியோன் ஆசியட் முதன்மை விளையாட்டரங்கம் 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக XVII ஆசியட், செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4, வரை தென் கொரியாவில் இஞ்சியோனில் நடைபெறுகிறது. ஆசியாவில் ஆசிய ஒலிம்பிக் மன்றத்தால் (OCA) கட்டுப்படுத்தப்படும் மிகப்பெரும் பல்விளையாட்டுப் போட்டியாகும். 36 விளையாட்டுகளில் ...

காந்தியை இடதுசாரிகள் ஏன் வெறுக்கிறார்கள்?

Posted: 20 Aug 2014 12:58 PM PDT

இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் மற்றும் கலாசார நாயகனாக திகழ்ந்த (சிலர் மனிதகுல வரலாற்றிலேயே சிறந்த நாயகன் என்றும் சொல்வார்கள் ) மோகன்தாஸ் கரம்சந்த் 'மகாத்மா' காந்தி மீதான தாக்குதல்கள் இதற்கு முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வருகிறது. வன்முறையில்லாமல் ஆங்கிலேய அரசை காந்தி எதிர்த்த போராட்ட முறை நெல்சன் மண்டேலா முதல் பராக் ஒபாமா வரை எல்லாரையும் ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது. நாடுகளின் எல்லைகளை கடந்து குறிப்பிடப்படுகிற கலாசார எடுத்துக்காட்டாக இருக்கிற அளவுக்கு ...

அதிமுக பொதுச்செயலர் தேர்தல்: ஜெயலலிதா சார்பாக அமைச்சர்கள் மனு தாக்கல்!

Posted: 20 Aug 2014 12:55 PM PDT

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி மற்றும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர் ஜெயலலிதாவின் சார்பாக மனு தாக்கல் செய்தனர். அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட இம்மாதம் 24 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 27 ஆம் தேதி நடைபெறும் என்றும், 29 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும் ...

சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்

Posted: 20 Aug 2014 12:53 PM PDT

விநாயகர் சதுர்த்தியன்று மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வந்து பூஜையறையில் வைத்து, அவருக்கு மிகவும் பிடித்த உணவுப் பொருட்களையும், பழங்களையும் வைத்து பூஜை செய்வோம். அதோடு, விநாயகர் ஸ்லோகங்களையும், அவரது திருநாமங்களையும் சொல்லி வழிபட்டால் நல்ல பலனைப் பெறலாம். விநாயகப் பெருமானை சதுர்த்தியன்று அஷ்டோத்ர நாமாக்கள் (108 பெயர்கள்) சொல்லி வழிபடுவது மரபு. அது எல்லோராலும் முடியாது. என்றாலும் பரவாயில்லை. 16 நாமாக்கள் கொண்ட எளிய ஸ்லோகம் ஒன்றைச் சொன்னாலே அஷ்டோத்ரம் சொன்ன பலன் கிடைக்கும். அதாவது, ""ஸுமுகச்ச ...

தமிழகத்தில் மதுபானம் விலை இன்று முதல் உயர்வு

Posted: 20 Aug 2014 12:44 PM PDT

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானம் விலை இன்று முதல் உயர்கிறது என்று அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து தமிழ்நாடு மாநில வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:- சட்ட திருத்தம் தமிழக சட்டசபையில் கடந்த 11-ந்தேதி சட்ட திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ஒன்று, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு விதிக்கப்படும் ஆயத்தீர்வையை உயர்த்துவதாகும். இந்த சட்ட திருத்தத்தால், இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களின் விலை உயருகிறது. தமிழகத்தில், 29-11-2003 முதல் டாஸ்மாக் ...

நட்பு....

Posted: 20 Aug 2014 12:39 PM PDT



தாலிக்கொடியில்
தந்தை தாய் உறவு!
தொப்பிள் கொடியில்
தாய் சேயின் உறவு!
பாசக்கொடியில்
சகோத(ர)ரி உறவு!
காதல் கொடியில்
காத(லன்)லி உறவு!
உறவினை கடந்து
உணர்வினில் உறைந்து
நம்பிக்கையில்
நட்பெனும் உறவு!

திருடன் தந்த இதிகாசம்.

Posted: 20 Aug 2014 12:17 PM PDT

ராமாயணம் எழுதுவதற்கு முன் வால்மீகி திருடனாக இருந்திருக்கிறார் என்பதை நம்ப முடிகிறதா? காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் வால்மீகியின் வரலாற்றின் உள்ளர்த்தம் உணரத்தக்கது. வால்மீகியின் இயற்பெயர் ரத்னாகர். குடும்ப வறுமை காரணமாகத் திருட்டுத் தொழிலுக்குப் போனார். காடுகளில் பதுங்கியிருந்து வழிப்போக்கர்களிடம் பணம், நகை பறித்து தன்னுடைய குடும்பத்துக்கு உதவிசெய்து வந்தார். ஒருநாள் அந்தக் காட்டின் வழியாக ஒரு முனிவர் போனார். அவரையும் வால்மீகி வழிமறித்தார். அப்போது அந்த முனிவர், 'எதற்காகத் திருடுகிறாய்?' ...

உலக புகைப்பட தினம்

Posted: 20 Aug 2014 12:00 PM PDT

புகைப்படம் என்பது ஒரு படம் அல்ல. அது ஒரு கலை. புகைப்படத்துக்கு பெரிய வலிமை உள்ளது. உலகளவில் புகைப்படம், பல வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. புகைப்படம் நாம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்தது. அனைத்து இடங்களிலும் புகைப்படத்தின் பயன் உள்ளது. வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்னைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், மாநாடு, பொதுக்கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம். ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவுவதும் புகைப்படம் தான். ...

ஆரோக்கிய சமையல் - சுரைக்காய் கேசரி

Posted: 20 Aug 2014 11:55 AM PDT

தேவையானவை: - தோல் நீக்கி துருவிய சுரைக்காய் - ஒரு கப் ரவை - 2 மேசைக்கரண்டி சர்க்கரை - அரை கப் ஏலக்காய்ப் பொடி - சிறிது நெய் - கால் கப் நட்ஸ் - தேவையான அளவு பச்சை ஃபுட் கலர் - சிறிதும்   செய்முறை : - தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். சுரைக்காயுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி மைக்ரோவேவ் அவனில் வைத்து 4 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி ரவையை வறுக்கவும். அதனுடன் வேக வைத்த சுரைக்காயைச் சேர்த்துக் கிளறவும். நன்கு கிளறிவிட்டு அரை கப் ...

இரண்டு மனம் வேண்டும்.....!

Posted: 20 Aug 2014 11:53 AM PDT

இமைகள் எனும் போர்வை  போர்த்திருக்கும் பாவை கண்கள் தரும் பார்வை கானலே தீர்வை.....! இதழைப் பார்த்தேன் இடையைப் பார்த்தேன் இதற்கும் மேலே விழிகள் பார்த்தேன் என்ன பார்த்து பலனும் என்ன இதயம் பார்க்க தவறி விட்டேன் நிலவே என் மேல் என்ன பழி நீ அறிவாய் எனது உயிரின் வலி...! மௌனம் தானா எனது வழி இனி அழுகை தானா எனது மொழி பார்தேன் அவளை எனது பிழை பாசம் காதல் உலகில் பிழை படைத்தாய் என்னை உனது பிழை இன்னும் உயிரும் இருக்கு கடவுள் பிழை.....!

பல்லுக்கும் கலை இருக்கு

Posted: 20 Aug 2014 11:49 AM PDT

வேலன்:-எளிய முறையில் தமிழ்,ஆங்கிலம். இந்தி மற்றும் தெலுங்கு மொழி கற்க

Posted: 20 Aug 2014 11:39 AM PDT

குழந்தைகள் எளிய முறையில் தமிழ்.தெலுங்கு.இந்தி ஆஙகிலம் அறிந்துகொள்ள இந்த இணையதளம் பெரிதும் உதவுகின்றது. உயிர் எழுத்துக்கள்.மெய் எழுதத்துக்கள்.இலக்கணங்கள் என முப்பதுக்கும்மேற்பட்ட டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.இந்த இணையதளம் காண இங்கு கிளிக் ;செய்யவும்.உயிரேழுத்துக்கள் பற்றிய விளக்கம் கீழே காணவும். ஒவ்வொரு டேபிலும் நிறைய உதாரணங்கள்கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். இதன் வலதுபுறம் வேண்டிய தலைப்புகள் கொடுத்துள்ளார்கள். இது எதுதேவையோ அதனை மட்டும் கிளிக்செய்து பார்க்கலாம். ...

நெடுநாள் பிள்ளை வரம் இல்லாதவர்கள் சொல்லவேண்டிய மந்திரம்!

Posted: 20 Aug 2014 11:13 AM PDT

சேய்த்தொண்டர் புராணத்தில், நாகனார், எட்டாத தம் மகவு நோக்கை எட்டவேண்டுமென முருகனிடம் குறையிரந்ததாக எட்டுப்பாடல்களை அமைத்துள்ளார் தேனூர் வரகவி வே.ச.சொக்கலிங்கம் பிள்ளை, இவற்றை நிதம் பாராயணம் செய்தால் பிள்ளை வரம் வேண்டுவோர் அனைவருக்கும் சட்டிப்பெருமான் இட்டத்தை நிறைவேற்றுவான் என்பது திண்ணம்! திண்ணம்!! – செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார். பிள்ளைமுகம் பாராப் பெருமலடர் என்றுலகோர் எள்ளிநகை யாட எளியோமை விட்டனையோ வெள்ளி மலை அத்தன் விழிகுளிறு மாறுதினம் துள்ளி விளை யாடுசுயஞ் ...

இவர் பக்கத்து வீட்டுக்காரரு

Posted: 20 Aug 2014 11:07 AM PDT

"ஞாபக மறதியால தப்ப செய்துட்டேன் டாக்டர்", "அப்படி என்ன தப்பு செய்தீங்க"...?? ராத்திரியெல்லாம் "ஒரு நல்ல டாக்டர்கிட்ட போகனும்னு" நினைச்சேன்..." இப்ப மறந்துட்டு உங்கிட்ட வந்துட்டேன் டாக்டர்".... என்ன வேணாலும் திருடிட்டு போ!!! ஆனா.. போறதுக்கு முன்னாடி இவர் கயிரை மட்டும் அவுத்து விட்ரு!! "ஏன்" இவர் பக்கத்து வீட்டுக்காரரு!!!........ "ஆடு வாங்க லோன் கேட்கிறீங்களே...முன் அனுபவம் இருக்கா"? "இருக்கு மேடம்" "வாரம் மூணு முறை மட்டன் சாப்பிடுற பழக்கம் இருக்கு!!!!!!!!

உலக கொசு ஒழிப்பு தினம் - இன்று

Posted: 20 Aug 2014 11:05 AM PDT

உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசு, மனிதர்களுக்கு பல நோய்களை பரப்புவதில் முதல்வனாக இருக்கிறது. கொசுக்களில் 3000 வகை இருந்தாலும், மலேரியாவை உருவாக்கும் "அனாபெலஸ்', டெங்குவை உருவாக்கும் "ஏடிஸ்', யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சலை உருவாக்கும் "குளக்ஸ்' ஆகிய மூன்றும் தான் கொடியவை. இதன் பாதிப்புகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆக.,20ம் தேதி உலக கொசு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இங்கிலாந்து டாக்டர் ரொனால்டு ரோஸ் என்பவர், 1897ம் ஆண்டு, "அனாபெலஸ்' ...

துன்பத்திலிருந்து விடுதலை..

Posted: 20 Aug 2014 11:04 AM PDT

துன்பம் என்பது, தன்னுணர்வற்ற மனதின் ஒரு நிலை. நாம் என்ன செய்கிறோம், நாம் என்ன நினைக்கிறோம், நாம் என்ன உணர்கிறோம் என்கின்ற விழிப்புணர்வு இல்லாததால், நாம் துன்பம் அடைகிறோம். அதனால்தான் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் நம்முடனேயே முரண்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமது செயல் ஒரு திசையில் செல்கிறது, சிந்தனை மற்றொரு திசையில் செல்கிறது, உணர்வுகள் வேறு எங்கோ செல்கிறது. நாம் பிரிந்து பிரிந்து செல்கிறோம். நாம் மேலும் மேலும் பிளவுபட்டுச் செல்கிறோம். அதுதான் துன்பம் ஆகும். நாம் நமக்குள் ஒருங்கிணைந்து இருப்பதில்லை. ...

உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது.

Posted: 20 Aug 2014 11:03 AM PDT

உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்து கொண்டு இருந்தார். விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் கடைக்கு சென்று படிக்க புத்தகமும், சாப்பிட பிஸ்கட்டும் வாங்கி வர சென்றார். ஒரு இருக்கையில் அமர்ந்து தான் வாங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.அவருக்கு அருகில் ஒரு வாட்ட சாட்டமான ஒருவர் உட்கார்ந்து இருந்தார். சிறிது நேரத்தில் அந்த நபர் குட் டே பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு காலியாக ...

ரசித்தவை!

Posted: 20 Aug 2014 11:01 AM PDT

யார் எப்படி பேசுவார்கள்??

Posted: 20 Aug 2014 10:57 AM PDT

யார் எப்படி பேசுவார்கள்.. கிரிக்கெட் வீரர் --ஓவரா பேசுவார் . போட்டோகிராபர் -- டெவலப் பண்னி பேசுவார் . ரவுடி -- அடிச்சுப் பேசுவார் . ஹோட்ட்ல் சர்வர் --' சூப்'பரா பேசுவார் . வக்கீல் -- ' மெய் ' மறந்து பேசுவார் . ஃபாஸ்ட் ஃபுட் ஓனர் -- காரசாரமா பேசுவார் . பூக்கடைக்காரர் -- வார்த்தையை அளந்து பேசுவார் . டயட்டீஷியன் -- உப்பு சப்பில்லாமல் பேசுவார் .

வெற்றிக்கு முதல் படி...! எது முக்கியம், தம்பி?

Posted: 20 Aug 2014 10:57 AM PDT

வாழ்வில் எது முக்கியம் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! யாராவது புதிய மனிதர்களை எங்காவது சந்தித்தோமானால் முதலில் நமது பெயரைக் கேட்கிறார்கள். அடுத்து அவர்கள் என்ன கேட்கிறார்கள்? "என்ன செய்கிறீர்கள்? எங்கே வேலை பார்க்கிறீர்கள்?" என்பதைத்தான். 'என்ன வேலை செய்கிறோம், எங்கே வேலை பார்க்கிறோம்' என்பதிலிருந்து நம்மைப் பற்றி ஒரு அனுமானத்திற்கு வர முயல்கிறார்கள். நாம் செய்யும் வேலை - தொழில் - நம்மை அடையாளம் காட்டுகிறது. ஏதாவது தொழில் செய்தால்தான் நாம் பிழைக்கலாம். நமக்கு வயிறு இருக்கிறது. ...

முதல்வர் சொன்ன கதைகள்

Posted: 20 Aug 2014 10:56 AM PDT

சென்னையில் சிறந்த காவலர்களுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் மற்றும் தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா கூறிய நீதிக்கதைகள் வருமாறு:- ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் நாள்தோறும் அதிகாலையில் மாறு வேடத்தில் சென்று யாராவது ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்டி அந்த வீட்டின் உரிமையாளருக்கு பரிசுப் பொருள் வழங்குவது வழக்கம். ஒரு நாள் விவசாயி ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்டினார் ராஜா. தூக்கத்தில் விவசாயி கதவைத் திறந்தவுடன் அவருக்கு கை ...

ஆங்கிலம் தந்த கவிதை!

Posted: 20 Aug 2014 10:49 AM PDT

உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவன் ஆங்கில மொழி பாடத்தின்போது விட்டுச் சென்ற காகிதத் துண்டு தந்த கவிதை ( தம்பிக்கு ஆங்கிலப் பாடம் கடினம் போல ) ஐவிரல்களும் அசைந்தன விடையளிப்பதற்கல்ல விழித்தெழுந்த என் கண்களைத் துடைப்பதற்கு பதிலறிய அழைப்பதற்கு துணியவில்லை தெரியாதே எனக்கு என்ன வினாவென்று தாய் மொழியில் எழுதக் கூட சோம்பல் எனக்கு எப்படி ஆங்கிலத்தில்? கருணை காட்ட நோக்குனர் என்ன கடவுள் அவதாரமா? முயற்சிக்கவில்லை அதனால் களைப்பை ஏற்படுத்திய மூன்று பாடங்களுக்குமாய் ஓய்வெடுக்க ...

உழைக்காமல் சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆவதற்கான யோசனைகள் !

Posted: 20 Aug 2014 10:49 AM PDT

முல்லா நசுருதீன் ஊர்மக்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தார். வெளியூரில் இருந்து வந்த பெரியவர் ஒருவர் அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அருகில் அமர்ந்தார். முல்லாவின் காதருகே சென்று ஏதோ சவால் விட்டார். முல்லா கலகல என்று சிரித்து விட்டு "ஆஹா… வெகு சுலபம்… கொஞ்ச நேரத்தில் சொல்லுகிறேனே… பொறுங்கள்" என்றார். பிறகு அருகிலிருந்த சிலரைப் பார்த்து…" உழைக்காமல் சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆவதற்கான யோசனைகள் சில எனக்குத் தோன்றி உள்ளன. அவற்றை இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து இங்கே வெளியிடப் போகிறேன். யார் ...

தென்திசை நாடுகளில் தமிழ், தமிழர் மொழி, கலை, பண்பாடு மற்றும் நாகரிகம்

Posted: 20 Aug 2014 10:46 AM PDT

தமிழரின் மொழி, கலை, சமயம், பண்பாடு, கிறித்தவ, சகாப்தத்திற்கு முன்னரே உலகளாவிய முறையில் பரவி இருந்தன என்பதற்குச் சான்றுகள் பல இருக்கின்றன. குறிப்பாகத் தென்திசை நாடுகளில் புராதனத் தமிழரின் கலையும் பண்பாடும் இன்றும் பரவலாக இருப்பதைக் காணலாம். திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற பழமொழி இருந்தாலும், தமிழ் நாட்டின் நாகப்பட்டினம், பூம்புகார், மாமல்லபுரம், சென்னை ஆகிய துறைகளிலிருந்து தமிழர்கள் சென்ற நாடுகளிலிருந்து கொண்டு வந்த திரவியத்தைவிட, தமிழ்நாட்டின் கலைச் செல்வங்களுடன் தங்கள் உழைப்பையுமே ...

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Posted: 20 Aug 2014 10:28 AM PDT



நன்றி புரட்சி

This posting includes an audio/video/photo media file: Download Now

உங்களை நீங்களே சரிபார்க்க…

Posted: 20 Aug 2014 10:24 AM PDT

தொழிலில் ஏற்படுகிற ஏற்றத்தாழ்வுகளால் உங்கள் உறுதியும் தடுமாறுகிறதா? உங்களை நீங்களே சரிபார்க்க… இதோ சில அடிப்படை அவசியங்கள்! வார்த்தைகளில் உண்மை: சொன்ன வார்த்தைகளுக்கு உண்மையாக இருங்கள். சொன்ன நேரத்திற்கு எதையும் முடித்துத் தருவதில் உறுதியாய் இருங்கள். தவிர்க்க முடியாத தாமதங்களையும் முன் கூட்டியே கணித்து, முன்னதாகவே அறிவித்து, கூடுதல் அவகாசத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இது எப்போதாவது தான். எப்போதும் செய்யக் கூடியதல்ல. எந்த சமயத்திலும் நீங்கள் தந்த வார்த்தையின் தரத்தை தரைமட்டமாக்காதீர்கள். நேர ...

அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள்

Posted: 20 Aug 2014 10:18 AM PDT

அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள்: எல்லை பாதுகாப்புப் படை சாதனை இந்திய- வங்கதேசம், இந்திய- பாகிஸ்தான் எல்லையில் அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகளை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை நட்டுள்ளது. சீனா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் 15,106 கி.மீ. தொலைவுக்கு இந்தியா எல்லையைப் பகிர்ந்து கொண் டுள்ளது. இதில், 4,096 கி.மீ. தொலைவு இந்தியா வங்கதேச எல்லையாகவும், 3,323 கி.மீ தொலைவு இந்தியா- பாகிஸ்தான் எல்லையாகவும் உள்ளது. இந்த எல்லைப் பகுதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படை பாதுகாப்புப் ...

அதிசயங்கள் நிறைந்த சாக்கடல் (Dead Sea)

Posted: 20 Aug 2014 10:15 AM PDT

அதிசயங்கள் நிறைந்த சாக்கடல் (Dead Sea) சாக்கடல் (Dead Sea) என்று ஏன் அழைக்கப்படுகிறது? சாதாரண கடல் நீரை விடஇங்கு 8.6 மடங்கு உப்புச்செரிவு அதிகமானதால் உயிரினங்களின் குடி நீராகவோ வாழ்விடமாகவோ இது இருப்பதில்லை. அதனால் சாக்கடல் எனப்படுகிறது. பல ஆறுகளில் இருந்து வரும் நீர் இங்கு தேங்கி நிற்கின்றது. ஆனால், இங்கிருந்து வேறு எங்கும் நீர் விரையமாவதில்லை. ஆறுகளின் நீர் இறுதியாக வந்தடையும் இடம் என்பதால் டெட் சீ/ சாக்கடல் எனப்படுகிறது. சாக்கடல் என்ற பெயரைக் கேட்கும்போது எந்த ஒரு உயிரினமும் இல்லாத ...

உணவுகளின் போட்டோகள் - கிருஷ்ண ஜெயந்தி 2014 photots

Posted: 20 Aug 2014 10:15 AM PDT

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை     குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை  & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக  என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ...

உயிர்போன்ற உங்கள்தமிழ் கடவுளுக்கே உவப்பாதல் இல்லை போலும்!

Posted: 20 Aug 2014 10:14 AM PDT

உயிர்போன்ற உங்கள்தமிழ் கடவுளுக்கே உவப்பாதல் இல்லை போலும்! உயிர்போன்ற உங்கள்தமிழ் உரைத்தக்கால் கடவுளதை ஒப்பார் போலும்! பயிரழிக்கும் விட்டிலெனத் தமிழ்மொழியைப் படுத்தவந்த வடம றைதான் செயிர்தீர வாழ்த்துதற்கும் தேவையினைச் சொல்லுதற்கும் உதவும் போலும்! மடிகட்டிக் கோயிலிலே மேலுடையை இடுப்பினிலே வரிந்து கட்டிப் பொடிகட்டி இல்லாது பூசியிரு கைகட்டிப் பார்ப்பா னுக்குப் படிகட்டித் தமிழரெனப் படிக்கட்டின் கீழ்நின்று தமிழ்மா னத்தை வடிகட்டி அவன்வடசொல் மண்ணாங்கட் டிக்குவப்பீர் 'மந்த்ரம்' என்றே. காற்செருப்பைப் ...

ஃப்ரெஞ்சுப் படை...

Posted: 20 Aug 2014 10:14 AM PDT

ஃப்ரெஞ்சுப் படை...   " உருவத்தைப் பார்த்து எடை போடலாமா?" " 1911 -ம் ஆண்டு வியட்நாமை ஆக்ரமித்த ஃப்ரெஞ்சுப் படைகள்,  ' கலகம் செய்தார்கள் ' என்று ஆசிரியர் குடும்பம் ஒன்றை கூண்டோடு வண்டியில் அள்ளிக் கொண்டுபோய் கொலை செய்தது.  வண்டியில் இடம் இல்லாததால்,  ஒல்லியாகவும் பார்க்கப் பரிதபமாகவும் இருந்த அந்த ஆசிரியரின் மகனை அப்படியே விட்டுவிட்டு, " இவன் தானாகவே செத்து விடுவான் " என்று கிண்டல் செய்துவிட்டுச் சென்றனர். பிற்காலத்தில் அந்தச் சிறுவன் ஃபிரெஞ்சுப் படைகளையும் மன்னராட்சியையும் ஒழித்துக்கட்டி மாபெரும் ...

ஹிட்லரின் உயில் !

Posted: 20 Aug 2014 10:13 AM PDT

ஹிட்லரின் உயில் ! வாழ்வின் கடைசி கட்டத்தில் இருந்த ஹிட்லர் திடீரென்று " கோய பெல்ஸ் ....என் உயிலை டிக்டேட் பண்ணப் போகிறேன்....எழுதிக் கொள்ளுங்கள்..." என்றார் . கலங்கியவாறு நின்ற கோயபெல்ஸ் அதற்குத் தயாரானார். ஹிட்லர் சொல்ல ஆரம்பித்தார்: " இத்தனை காலப் போராட்டத்தின் இடையில் திருமணம் என்கிற பொறுப்பையும் என்னால் ஏற்க முடியாமல் போனது. எனக்காகவே வாழ்ந்து , கடைசிவரை என்னைப் பிரியாமல் துணைநிற்கும் ஈவாவை -- இந்த உலகத்திலிருந்து நான் விடைபெற்றுக் கொள்வதற்கு முன்பு -- திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறேன். ...

மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும்

Posted: 20 Aug 2014 10:03 AM PDT

இந்த நூற்றாண்டு மன அழுத்த நூற்றாண்டு. இதில் நம்மை நாம் நிலை நிறுத்தி கொள்ள தினம் தோறும் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். நம்மை சுற்றி நடக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப அதனை எதிர்கொள்ள நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். மனம் என்பது மூளையால் இயங்குவது ஆகும். இதில் செயலாற்றுவது சிந்தனை மற்றும் செயல் ஆகும். சிலர் சிகரெட் குடிப்பதால் மனஅழுத்தம் குறைகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. சிகரெட் குடிக்கும் போது 10 முதல் 20 சதவீதம் மன அழுத்தம் அதிகரிக்கவே செய்கிறது. இது பல ஆய்வுகள் மூலம் ...

கடிகை + ஆரம் = கடிகாரம்

Posted: 20 Aug 2014 09:11 AM PDT

மாத்திரை என்பதை "அளவு' என்னும் பொருளில் சங்க இலக்கியங்கள் குறித்துள்ளன. கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும் காண்டல் செல்லாது யாண்டு பல கழிய (புறநா.216) முலைக்கோள் விடாஅ மாத்திரை (பொ.ஆ.படை141) மிக விரைவில் நிகழும் செயலை "மாத்திரை அளவில்' நிகழ்ந்ததாக உரைத்தல் மரபு. மாத்திரை என்பதை "நொடி', "கணம்' எனவும் வழங்குவர். மனமே வாக்கே கருமமே ஒருமா நொடியும் பிரியான்   (திருவாய்மொழி 10:7-8) "நொடி' என்பது இங்கு மாத்திரை என்னும் பொருளில் வருகிறது. குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் ...

கோத்தர் பழங்குடியினர் வழிபடும் பிரமாண்டமான மரம்: 900 ஆண்டுகள் பழமையானதா?

Posted: 20 Aug 2014 09:07 AM PDT

உதகை அருகே பழமையான ஒரு மரத்தை கோத்தர் இன பழங்குடியின மக்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் 6 பண்டைய பழங்குடியினரில் கோத்தர் இனத்தவரும் ஒரு பிரிவினர். இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் செட்டில்மென்ட்டுகள் என அழைக்கப்படும் 7 பகுதிகளில் வசிக்கின்றனர். இவற்றில் மஞ்சூர் அருகே உள்ள குந்தா கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ள செட்டில்மென்ட்டே இவர்களது தலைமையிடமாகக் கருதப்படுகிறது. இப்பகுதியில் கோத்தர் இன மக்களின் வழிபாட்டு தலம் அமைந்துள்ள இடத்தில் பிரமாண்டமான மரம் ஒன்று ...

அகம், புறம், அந்தப்புரம்

Posted: 20 Aug 2014 08:45 AM PDT

அகம், புறம், அந்தப்புரம் By முகில் இருந்தால் கொடுகவும்

அப்பரின் தலையை விழுங்கும் சிங்கம் - அரிய ஓவியம்

Posted: 20 Aug 2014 08:31 AM PDT

அப்பரின் தலையை விழுங்கும் சிங்கம்: பனையக்கோட்டையில் கண்டறியப்பட்ட அரிய ஓவியம் பனையக்கோட்டை கிராமத்தில் உள்ள தஞ்சை பாணி ஓவியம்தஞ்சாவூர் மாவட்ட சிற்றூர்களில் உள்ள பழமையான வரலாற்றுத் தடயங்கள் குறித்து ஆய்வு செய்துவரும் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதர் மணி.மாறன் மற்றும் பௌத்த வரலாற்று ஆய்வாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம் ஆகியோர் பனையக்கோட்டை கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வில் தேவாரம் பாடிய அப்பர் பெருமானை சிங்கம் விழுங்குவது போன்ற வரலாற்றைக் குறிப்பிடும் தஞ்சை பாணி அரிய ஓவியம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து ...

வள்ளுவரின் பகைவர்!

Posted: 20 Aug 2014 07:44 AM PDT

விருப்பும் வெறுப்பும் அற்ற வள்ளுவருக்குப் பகைவர் இருக்க வாய்ப்பில்லை. பகைவர்களைக் குறித்து வள்ளுவர் கையாண்டுள்ள பல்வேறு சொற்களைப் பற்றிக் காண்போம். "பகைவர்' என்ற சொல்லுக்கு இணையான சொற்கள் தமிழில் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு சொல்லும் வெவ்வேறு நுட்பமான பொருளைத் தருவதால், தமிழ் மொழியின் வளத்தினை அறிந்து மகிழலாம். அபிதானமணிமாலை என்னும் நூல், "பகைவர்' என்னும் சொல்லுக்கு இனமான பல்வேறு சொற்களைப் பட்டியலிட்டுத் தருகிறது. ""பகைவர், அடையவர், பகைஞர், பரர், அண்டர், அகிதர், தொடர்பிலர், அமித்திரர், அமரார், பற்றார், ...

அறியப்படாத மதுரை நூல் ஆசிரியர் : ந. பாண்டுரெங்கன் பேச 9865102051. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Posted: 20 Aug 2014 07:00 AM PDT

அறியப்படாத மதுரை நூல் ஆசிரியர் : ந. பாண்டுரெங்கன் பேச 9865102051. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி.) லிட். 41-B, சிட்கோ இண்ட்ஸ்ட்ரீயல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. விலை : ரூ.165. பேச : 044-26359906, 26251968, 26258410 ***** நூலாசிரியர் கவிஞர் ந. பாண்டுரெங்கன் அவர்கள் மாவட்ட நூலகராக இருந்து ஓய்வு பெற்றவர். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் இலக்கியப் பணியில் ஓய்வின்றி உழைத்து வருகிறார். கலை, இலக்கிய பெருமன்றத்தின் மதுரைக் கிளையில் பொறுப்பு வகித்து ...

மைக்கேல் ஜாக்சன்

Posted: 20 Aug 2014 05:29 AM PDT

மைக்கேல் ஜாக்சன் பற்றிய சில சுவையான தகவல்கள் அவர் இரண்டு லாமா வளர்த்தார், அவற்றின் பெயர் லூயிஸ் மற்றும் லோலா. அவரின் த்ரில்லர் ஆல்பம் தொடர்ந்து 37 வாரங்கள் US Billboardல் இடம் பெற்றது. அவருடைய முதல் பொது இசை அரங்கேற்றம் அவருடைய ஐந்தாம் வயதில் நடை பெற்றது. அவருக்கு மொத்தம் எட்டு உடன் பிறந்தோர் உள்ளனர். அவரின் த்ரில்லர் ஆல்பம் தான் இது வரை உலகில் அதிகம் விற்பனை ஆன இசை ஆல்பம் , இது வரை 5 கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகி விட்டது ! மூன் வாக்[Moonwalk] மற்றும் ரோபாட்[ROBOT] நடன ...

டென்சனுக்கு ஒரு குட்பை ... !

Posted: 20 Aug 2014 05:26 AM PDT

இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லா துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. இதுவே மன அழுத்தத்தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. சக மனிதன் மீதான கரிசனையும், ஆத்மார்த்தமான அக்கறையும் விலகி சுயநலச் சிந்தனைகள் விஸ்வரூபமெடுக்கும் போது இத்தகைய இறுக்கமான சூழல்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™