Tamil News | Online Tamil News |
- தடையை மீறி குட்கா, ஜர்தா விற்பனை அமோகம்: நடவடிக்கை எடுக்க ஒருங்கிணைப்பு குழு தயக்கம்
- மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி பயிற்சி?மிரளும் தமிழக - கேரள போலீஸ்: நீலகிரி எல்லையில் நடப்பது என்ன?
- தேசிய நெடுஞ்சாலைகளில் 'அம்மா' உணவகம்?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
- 23ல் கோடநாடு செல்கிறார் முதல்வர்? அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் 'கிலி'
- 'உண்மையான இந்தியர் யார்?'
- 'இலங்கை சிறைகளில் இந்திய மீனவர்கள் இல்லை'
- காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்ன?அந்தோணி குழு அறிக்கையால் சலசலப்பு
- பட்ஜெட் கூட்ட தொடரில் பா.ஜ., நடவடிக்கைகளுக்கு வெற்றி: முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றி சாதனை
- உ.பி., பீகார், உத்தரகண்டில் மழை வெள்ளத்தால் பல லட்சம் பேர் தவிப்பு: 200 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது; 50க்கும் மேற்பட்டோர் பலி
| தடையை மீறி குட்கா, ஜர்தா விற்பனை அமோகம்: நடவடிக்கை எடுக்க ஒருங்கிணைப்பு குழு தயக்கம் Posted: உணவு பாதுகாப்பு துறையுடன், பிற துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படாததால், தமிழகத்தில் தடையை மீறி, குட்கா, ஜர்தா விற்பனை அமோகமாக நடக்கிறது.புகையிலைப் பொருட்களால், புற்று நோய் பாதிப்பு வருவதைக் கருத்தில் கொண்டு, குட்கா, ஜர்தா வகைகளுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. 'தடையை மீறி விற்றால், 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்' என, எச்சரித்துள்ளது.பறிமுதல்:தடை, இரண்டாவது ஆண்டாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆரம்பத்தில் ஆர்வம் காட்டிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், ஆங்காங்கே திடீர் சோதனைகள் நடத்தி, குட்கா, ஜர்தாவை பறிமுதல் செய்தனர்; ... |
| மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி பயிற்சி?மிரளும் தமிழக - கேரள போலீஸ்: நீலகிரி எல்லையில் நடப்பது என்ன? Posted: நீலகிரி மாவட்டத்திலுள்ள, தமிழக - கேரள எல்லை வனப்பகுதியில், மாவோயிஸ்ட்கள் காலுான்ற துடிப்பது, சமீபத்திய நிகழ்வுகளின் மூலம் அம்பலமாகியுள்ளது. ஆதிவாசி கிராமங்களில் பெண் உள்ளிட்ட ௭ பேர் துப்பாக்கிகளுடன் நடமாடுவதாக கிடைத்த உறுதியான தகவலையடுத்து, இரு மாநில வனத்துறையினரும், போலீசாரும் உஷாரடைந்துள்ளனர்.'கேரளா - கர்நாடக மாநில எல்லையான திருநெல்லி வனத்தில், மாவோயிஸ்ட் நடமாட்டமிருப்பதாக, கடந்த 2013, ஆகஸ்ட்டில், கேரள உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில், கேரள மாநிலம் கண்ணனுார் மாங்குண்டி தோட்டத்தில், சிலர் துப்பாக்கியுடன் ... |
| தேசிய நெடுஞ்சாலைகளில் 'அம்மா' உணவகம்?பொதுமக்கள் எதிர்பார்ப்பு Posted: தமிழகத்தில், அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும், 'அம்மா' உணவகம் துவங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சென்னையில், 2013, பிப்., 19ம் தேதி, 15 இடங்களில் அம்மா உணவகங்களை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். தொடர்ந்து,தமிழகத்தில், இதுவரை, 294 அம்மா உணவகங்கள் துவங்கப்பட்டுள்ளன.மேலும், சென்னை மாநகராட்சி வார்டு களில், 200ம், தமிழகம் முழுவதும், 350க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்களை துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. உணவகங்களில், காலையில், இட்லி சாம்பார், 1 ரூபாய்க்கும், பொங்கல் சாம்பார், 5 ரூபாய்க்கும், மதியம், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை சாதம், 5 ரூபாய்க்கும், ... |
| 23ல் கோடநாடு செல்கிறார் முதல்வர்? அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் 'கிலி' Posted: வரும், 23ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா, கோடநாடு புறப்பட்டு செல்கிறார். அங்கு சென்ற பின், கட்சியின் கொள்கை பரப்பு செயலர் பதவியில் யாரை நியமிப்பது, மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் சிலருக்கு, 'கல்தா' கொடுப்பது உட்பட, சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக, ஆளும் கட்சி வட்டாரத்தில், தகவல் பரவி உள்ளது.சுணக்கம் காட்டிய...: இதனால், தங்கள் பதவிகள் தப்புமா? என்ற அச்சத்தில், சில அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.லோக்சபா தேர்தலில், தேர்தல் பணிகளில், சரிவர ஈடுபடாமல், சுணக்கம் காட்டிய அமைச்சர்களையும், மாவட்ட செயலர்களையும், ... |
| Posted: புதுடில்லி: 'இந்துக்களும், முஸ்லிம்களும் உண்மையான இந்தியர்களாக இருக்க விரும்பினால், முதலில் அவர்களின் மன நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, பிரஸ் கவுன்சில் தலைவரும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான கட்ஜு தன் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இந்துக்களை, மற்ற இந்துக்கள் சமமாக நடத்த வேண்டும். அவர்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இந்துக்களுடன், மற்ற வகுப்பை சேர்ந்த இந்துக்கள் திருமணம் ... |
| 'இலங்கை சிறைகளில் இந்திய மீனவர்கள் இல்லை' Posted: புதுடில்லி: 'தமிழக மீனவர்கள், 94 பேர் விடுவிக்கப்பட்டதை அடுத்து, இலங்கை சிறைகளில், ஒரு இந்திய மீனவர் கூட இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:வங்கக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால், அனைத்து மீனவர்களையும் விடுவிக்கும்படி, இலங்கை அதிபர் ராஜபக் ஷே உத்தரவிட்டார். இதையடுத்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, தமிழகத்தை சேர்ந்த, 94 மீனவர்கள் ... |
| காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்ன?அந்தோணி குழு அறிக்கையால் சலசலப்பு Posted: புதுடில்லி:நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது. இதனால், லோக்சபாவில் எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்தை கூட பெற முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில், தொடர்ந்து, 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசின் மோசமான தோல்விக்கு, கட்சியின் துணைத் தலைவர் ராகுலின் மோசமான அணுகுமுறையும், திட்டமிடப்படாத தேர்தல் பிரசாரமுமே காரணம் என, கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். இது, கட்சித் தலைமைக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.இதையடுத்து, கட்சியின் தோல்விக்கான ... |
| பட்ஜெட் கூட்ட தொடரில் பா.ஜ., நடவடிக்கைகளுக்கு வெற்றி: முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றி சாதனை Posted: புதுடில்லி: சமீபத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில், பா.ஜ., அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது. எதிர்க்கட்சிகளுடன் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி, முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றி, சாதித்துள்ளது.மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு பதவியேற்றதும், முதல் முறையாக, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த மாதம் 7ல் துவங்கியது. இம்மாதம், 14ல் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தது.இதற்கு முந்தைய காங்., ஆட்சி காலத்தில், பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, எதிர்க்கட்சிகள் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ... |
| Posted: புதுடில்லி: வட மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், உ.பி., பீகார், உத்தரகண்ட் மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது; 200 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிஉள்ளன. 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்; லட்சக்கணக்கானோர், வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.வட மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பை, டில்லி உள்ளிட்ட பெருநகரங்களை நொறுக்கிய மழை, தற்போது, உ.பி., பீகார் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் வெளுத்து வாங்குகிறது.உத்தர பிரதேசத்தில், இதுவரை இல்லாத அளவு மழைப்பொழிவு காணப்படுவதால், முக்கிய நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 18,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |