Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இஸ்ரேல் - பாலஸ்தீனம் சண்டை நிறுத்தம் திடீர் ரத்து

Posted:

ஜெருசலம்: பாலஸ்தீனத்தின், 'ஹமாஸ்' பயங்கரவாதிகள் மீது, 25 நாட்களாக இஸ்ரேல் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல், நேற்று காலை, 8:00 மணியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும், சண்டை நிறுத்தத்தை திடீரென ரத்து செய்து, இருதரப்பினரும் தாக்குதலை தொடர்ந்த தில், ஒரே நாளில், பாலஸ்தீனத்தில், 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.யூத சிறுவர்கள் : இஸ்ரேலின் மூன்று யூதச் சிறுவர்களை, ஹமாஸ் பயங்கரவாதிகள் படுகொலை செய்ததை அடுத்து, கடந்த ஜூலை 8ல், பாலஸ்தீனம் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் பதுங்குமிடங்கள் மீது, இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த துவங்கியது.தொடர்ந்து, 25 ...

போபால் விஷ வாயு கசிவு விவகாரத்தில் திடீர் திருப்பம் : கார்பைட் நிறுவனம் பொறுப்பேற்காது என நியூயார்க் கோர்ட் உத்தரவு

Posted:

நியூயார்க் : மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள, யூனியன் கார்பைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் விஷ வாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து, கைவிடப்பட்ட அந்த நிறுவனத்தால், போபால் நகரின் நிலம் மற்றும் நீர் மாசுபடுவதாக கூறி, அதற்கு அந்த நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிடக் கோரி, அமெரிக்க கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை, கோர்ட் தள்ளுபடி செய்தது. கடந்த 1984, டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவில், போபால் நகரின் மத்தியில் அமைந்திருந்த, அமெரிக்க நிறுவனமான, யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் இருந்து விஷ வாயு கசிந்தது. நகரில் காற்றில் பரவிய விஷ காற்றால், 5,000 பேர் ...

நிதி முறைகேடு வழக்கில் சோனியா, ராகுலுக்கு நெருக்கடி: வழக்கு பதிவு செய்தது அமலாக்க பிரிவு

Posted:

புதுடில்லி: 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையின் சொத்துகளை அபகரிக்க முயன்றதாக, பா.ஜ., தலைவர், சுப்ரமணியசாமி தொடர்ந்த வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா, அவர் மகனும், கட்சியின் துணைத் தலைவருமான, ராகுலுக்கு, டில்லி மெட்ரோபாலிடன் கோர்ட், 'சம்மன்' அனுப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை, அமலாக்கப் பிரிவும் விசாரிக்க துவங்கியுள்ளது. இது, சோனியாவுக்கும், ராகுலுக்கும், புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.நாட்டின் முதல் பிரதமர், ஜவகர்லால் நேரு துவக்கிய பத்திரிகை, நேஷனல் ஹெரால்டு. ஆங்கிலம் மற்றும் இந்தியில் பல ஆண்டுகளாக வெளிவந்த இந்த பத்திரிகைக்கு, டில்லியில் ...

மோடி - ஜெ., குறித்து அவதூறு செய்தி:பலத்த எதிர்ப்பால் இலங்கை மன்னிப்பு

Posted:

கொழும்பு:தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி குறித்து, இலங்கை ராணுவத்தின் இணைய தளம் வெளியிட்ட அவதூறு செய்திகளுக்கு பலத்த கண்டனம் எழுந்ததை அடுத்து, இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது.தமிழக மீனவர் விவகாரம், இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம், கச்சத்தீவு விவகாரம் போன்றவை குறித்து, இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர், ஜெயலலிதா அடிக்கடி கடிதம் எழுதுவதை கிண்டல் செய்து, இலங்கை ராணுவ இணைய தளத்தில், கேலிச் சித்திரத்துடன் சில ஆட்சேபகரமான வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.இதை அறிந்த தமிழக ...

இலங்கை மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

Posted:

சென்னை: 'இலங்கை ராணுவ அமைச்சகத்தின், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான, அவதூறு கட்டுரை தொடர்பாக, இலங்கை அரசிடம் இருந்து, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:இலங்கை ராணுவம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான, அவதூறு கட்டுரை யில் இடம் பெற்றுள்ள படம், மிகவும் ஆட்சேபகரமாக உள்ளது.அவமரியாதை:இது, இந்திய பிரதமரையும், தமிழக முதல்வரையும் சிறுமைப்படுத்தும் வகையில், அவமரியாதை செய்யும் வகையில் உள்ளது. தமிழக ...

ஜான் கெர்ரியிடம் மோடி கண்டிப்பு

Posted:

புதுடில்லி:'வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில், வளர்ச்சி அடைந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு உள்ள பிரச்னைகளை புரிந்து கொள்ள வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ள, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியிடம், பிரதமர் மோடி வலியுறுத்தியதாக, மத்திய அரசு தரப்பில் கூறப்படுவதாவது:உலக வர்த்தக மையமான, டபிள்யூ.டி.ஓ.,வில் அங்கம் வகிக்கும் நாடுகளிடையே, விளைபொருள் வர்த்தகத்தை எளிமைப்படுத்தும் ஒப்பந்தம்,சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினால், இந்தியாவில் ...

உலக வர்த்தக ஒப்பந்தம் தோல்வி: இந்தியா மீது அமெரிக்கா கோபம்

Posted:

வாஷிங்டன்: 'உலக வர்த்தக அமைப்பின், வர்த்தக ஏற்பாடு ஒப்பந்தம் ஏற்படாமல் போனதற்கு, இந்தியா மற்றும் சில நாடுகள் தான் காரணம்' என, அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உலக வர்த்தக அமைப்பு உள்ளது. இதில் அங்கமாக உள்ள நாடுகளுக்கு இடையே, வர்த்தக ஏற்பாடு ஒப்பந்தம் ஏற்பட இருந்தது. இதற்காக கடந்த ஆண்டு, இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற, முந்தைய, மன்மோகன் சிங் அரசின் அமைச்சர் மற்றும் பிரதிநிதிகள், அமெரிக்கா தெரிவித்த அம்சங்களை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இப்போதைய பிரதமர் நரேந்திர மோடி ...

'அம்மா' அமுதம் பல்பொருள் அங்காடிகள்: ஜெ., அறிவிப்பு

Posted:

சென்னை:'அம்மா' உணவகம், 'அம்மா' குடிநீர், 'அம்மா' மருந்தகம், 'அம்மா' உப்பு மற்றும் அதிகாரிகளே மக்களை தேடி சென்று, கிராம மக்களிடம் மனுக்களை பெறும், 'அம்மா' திட்டம் என்ற வரிசையில், தமிழகத்தில் மேலும் ஒரு, 'அம்மா' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ''தமிழகமெங்கும், 300 'அம்மா' அமுதம் பல்பொருள் அங்காடிகள் துவங்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா, நேற்று அறிவித்தார்.சட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:*கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் செயல்படும், பல்பொருள் அங்காடியை விரிவுபடுத்த வேண்டும் என்ற, அவசியத்தைக் கருத்தில் கொண்டு, தமிழகமெங்கும், 300 ...

நரசிம்ம ராவ் - சோனியா பனிப்போருக்கு காரணம் என்ன?

Posted:

புதுடில்லி: முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் இடையே நடந்த பனிப்போர் குறித்த தகவல்களை, காங்., மூத்த தலைவர் நட்வர் சிங், தன் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.காங்., மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான நட்வர் சிங், எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளதாவது:மறைந்த காங்., தலைவர் நரசிம்ம ராவை, பிரதமராக தேர்வு செய்வதற்கு, சோனியா தான் ஒப்புதல் அளித்தார். ஆனாலும், இவர்களுக்கு இடையே, ஒருபோதும் சுமுக உறவு இருந்தது இல்லை.கடைசி வரை, நரசிம்ம ராவ் மீது சோனியாவுக்கு நம்பிக்கை இல்லை. சோனியா, தன்னை ஏன், பகையாளியை போல் ...

டூவீலர்களில் "பறக்கும்' மாணவ, மாணவியர்: காற்றில் பறந்தது, கல்வித்துறை சுற்றறிக்கை: வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து போலீஸ்

Posted:

திருப்பூர்:பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் டூவீலர் ஓட்டி வரக்கூடாது என்ற பள்ளி கல்வித்துறையின் உத்தரவு, திருப்பூரில் அப்பட்டமாக மீறப்படுகிறது. போக்குவரத்து விதிமுறையை மீறி, ஏராளமான மாணவ, மாணவியர், டூவீலர்களில் வந்து செல்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய, பள்ளி நிர்வாகங்கள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.விடலை பருவத்தில் உள்ள மாணவ, மாணவியர், "இளம்கன்று பயம் அறியாது' என்ற பழமொழிக்கு ஏற்ப எதிலும், வேகத்தையும், வீரத்தையும் காட்ட விரும்புகின்றனர். டூவீலர் ஓட்டும்போது, கட்டுப்பாடில்லாத ...

சட்டசபை ஜெ., புகழ் பாடும் இடமாக மாறி விட்டது

Posted:

மதுரை: "தமிழக சட்டசபை ஜெயலலிதாவின் புகழ்பாடும் இடமாக மாறிவிட்டது," என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.மதுரையில் தி.மு.க., சார்பில் 'சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு' என்ற தலைப்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:தமிழக சட்டசபை எதிர்கட்சி, ஆளும் கட்சியின் திட்டங்களை வரவேற்றும், விமர்சித்தும், மக்கள் பிரச்னைகளை பேசும் இடமாகவும் இருந்தது. ஆனால், தற்போது அமைச்சர்கள் முதல்வர் ஜெ.,யை பாராட்டி, பூஜித்து புகழ்ந்து, ஆராதனை செய்யும் இடமாக மாறிவிட்டது. சபாநாயகர் ஒரு சிருஷ்டி பொம்மையாக உள்ளார்.கடந்த 15 நாட்கள் நடந்துள்ள மானியக் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™