Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !

Posted: 01 Aug 2014 12:40 PM PDT

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ந‌ட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆ‌ண்டு ஆகஸ்ட் 2ஆ‌ம் தேதி  உலக ந‌ட்பு ‌தின‌மாகும் நட்பு கவிதை ( நெட்லிருந்து சுட்டது ) எங்களை நட்பு என்ற பாசத்தால் இணைத்த நட்பே ! தனி மனிதர்களாய் பிறந்தோம். இணையத்தால் இணைந்தோம் , எங்களுக்குள் பலர் சந்தித்ததில்லை !! பலர் எழுத்துகளின் இதயங்களால் இணைந்தோம். எங்களுக்குள் ஜாதி ,மதம்,வயது , ஏழை ,பணக்காரன்,வகுப்பு ,பேதம் துறந்தோம், , நட்பால் இணைந்தோம் ...

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட்

Posted: 01 Aug 2014 11:46 AM PDT

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 1 கிமு 33 - ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாண்டிரியா ந்கரைக் கைப்பற்றி ரோமக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான். 527 - முதலாம் ஜஸ்டீனியன் பைசண்டைன் பேரரசன் ஆனான். 1291 - சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 1461 - நான்காம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். 1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கலைக்கப்பட்டனர். 1498 - கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார். 1619 - முதலாவது ஆபிரிக்க அடிமைகள் வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரை அடைந்தனர். 1774 ...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 01 Aug 2014 10:57 AM PDT

my introduction

Posted: 01 Aug 2014 10:42 AM PDT

பெயர்:க.முரூகேசன்
சொந்த ஊர்:திரூவாரூர
ஆண்/பெண்:ஆ ண்
ஈகரையை அறிந்த விதம்:
பொழுதுபோக்கு:
தொழில்:
மேலும் என்னைப் பற்றி:

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்ப இதெல்லாம் வைத்து பூஜை செய்யுங்க...

Posted: 01 Aug 2014 10:19 AM PDT

பணமும் செல்வமும் பெருகி ஓட யாருக்கு தான் ஆசை இருக்காது? சொல்லப்போனால், நம் அனைவருக்கும் அந்த ஆசை இருக்கிறது. நாம் வாழ்வதற்கு பணம் தேவைப்படுவதால், அதனை சம்பாதிப்பதற்காக அன்றாடம் அயராது வேலை பார்க்கிறோம். பணம் சம்பாதிப்பது குதிரை கொம்பென்றால், சம்பாதித்த பணத்தை கட்டிக் காப்பது அதை விட கடினமான ஒன்றாகும். லட்சுமி தேவியை சந்தோஷமாக வைத்துக் கொண்டால், உங்கள் வீடு லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என பெருவாரியான இந்துக்கள் நம்புகின்றனர். இதனால் உங்களை வந்தடையும் செல்வமும், பொருட்களும் என்றென்றும் உங்களிடம் ...

‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர்,

Posted: 01 Aug 2014 10:10 AM PDT

'புத்தகம் போற்றுதும்' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், நிறுவனர், முத்தமிழ் அறக்கட்டளை, பதிவு எண் : 999, 10, ராமமூர்த்தி ரோடு, சின்ன சொக்கிகுளம், மதுரை – 625 002. வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150. ***** விமர்சனமல்ல – நிதர்சனமான உண்மை ***** "மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்" - அறிஞர் அண்ணாவின் அறிவு சார்ந்த பொன்மொழிக்கேற்ப, ...

திருக்கழுக்குன்றம்:-சங்கு தீர்த்த குளம் அன்றும் இன்றும்.

Posted: 01 Aug 2014 10:08 AM PDT

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பகவான் கன்னிராசியில் பிரவேசிக்கும் லட்சதீபமும்;.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கடலிலே பிறக்கும் சங்கு இந்த குளத்தில் பிறப்பதும் விஷேம்.தமிழ்நாட்டில் உள்ள குளங்களிலே   இரண்டாவது  பெரிய குளம் (பரப்பளவு சுமார் 13 ஏக்கர் என பெயர் பெற்றது திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளம்.சஞ்சீவி மூலிகை கலந்த தண்ணீர் இந்த குளத்தில் கலப்பதால் இதில் ஒரு மண்டலம் காலையில் குளித்து மலையை சுற்றி வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நடைமுறை உண்மை. இவ்வளவு பெறுமை ...

தமிழா! தமிழா!

Posted: 01 Aug 2014 10:08 AM PDT

எந்நாட்டிலும் தமிழருக்கு மதிப்பில்லை இழிநிலையை மாற்றவொரு வழியுமில்லை! சொன்னாலும் புரியாத இனமானான் சோற்றுக்கு அலைகின்ற ஜடமானான் உழைப்புக்கு ஏற்றதோர் ஊதியமில்லை உதைபடும் தருணத்திற்கு அளவில்லை பிழைப்புக்கு வழிதெரியாப் பேதையானான் போதையில் தடுமாறி வீழ்ந்துபோனான் தன்னாற்றல் வளர்த்திடத் தெரியவில்லை தகுதியோடு வாழுகின்ற நிலையுமில்லை சொந்தமொழி உறவுக்கே பகையானான் வேற்றுமொழி மோகத்திற்கு விலைபோனான் ஏற்றமிகு வாழ்வுபெறும் நிலையுண்டா? இனிவரும் தலைமுறைக்கு விடிவுண்டா? தூற்றுகின்ற நிலைமாறும் ...

பயம்!

Posted: 01 Aug 2014 09:14 AM PDT

ஒரு காட்டில் ஆண்சிங்கமும், பெண் சிங்கமும் குடும்பமாக வாழ்ந்தன. ஒருநாள் பெண்சிங்கம் இரண்டு குட்டிகள் ஈன்றது. தினமும் ஆண் சிங்கம் காட்டிலே வேட்டையாடி பெண் சிங்கத்துக்கு உணவு கொண்டு வந்தது. ஒருநாள் உணவு எதுவும் கிடைக்காமல், ஆண் சிங்கம் குகைக்குத் திரும்பியது. வழியில் ஒரு நரிக்குட்டி அகப்பட்டது. குட்டியாக இருந்ததால் அதன்மீது இரக்கப் பட்டு அதைக் கொல்லாமல் கவ்விக் கொண்டு வந்தது. அதைப் பெண் சிங்கத்திடம் கொடுத்தது. ""இது குட்டி என்பதால் இதைக் கொல்ல எனக்கு மனம் வரவில்லை. இன்று காடு முழுவதும் மாலை ...

"ஜில்லு இல்ல "சுடச்சுட' ஊற்று!

Posted: 01 Aug 2014 09:05 AM PDT

வெந்நீர் நீருற்றுகள்-ஆவி பறக்கும் தண்ணீர் பெரும்பாலும் தாதுக்கள் அல்லது பாசியால் லேசான சிவப்பு, மஞ்சள், பச்சை அல்லது நீல வண்ணத்தில் காணப்படும். இவை கெய்சர் (வெந்நீர் வைக்கும் கருவி) போலவே செயல்படுகிறது. குளிர்வான மழை நீர், பாறைகள் வழியாக துளி, துளியாக ஒழுக, அவை எரிமலை குழம்பால் உஷ்ணப்படுத்தப்படுகிறது. இந்த சூடான தண்ணீர் தாதுக்களையும், மற்ற சேர்மானங்களையும் தன்னுள் உள்வாங்கியபடி தரைமட்டத்திலிருந்து பீறிட்டு வெளிவருகிறது. பூமியின் கீரல் அல்லது வெடிப்பு ஏற்பட்ட பகுதியிலிருந்து சூடான குமிழிகளாய் ...

அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு!

Posted: 01 Aug 2014 09:03 AM PDT

* அயர்ன் செய்யும் போது முதலில் குறைந்த வெப்பத்தில் அயர்ன் செய்யும் துணிகளைத் தேய்த்து, பிறகு அதிக வெப்பம் வேண்டிய ஆடைகளை அயர்ன் செய்தால் மின் செலவு குறைவாகும். * அயர்ன் பாக்ஸிற்கு "த்ரீ பின் பிளக்'தான் முழுமையான பாதுகாப்பு. * துணிகளைத் தேய்த்த பிறகு அயர்ன் பாக்ஸை மூலையில் சூடு ஆறும் வரை நிமிர்த்தி வைக்க வேண்டும். * "ஹீட்டிங் எலிமென்டை' வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். * அயர்ன் பாக்ஸின் அடிப்பாகத்தில் பழுப்பு நிறமான கறை இருந்தால் சோடா மாவை ஈரத்துணியில் தொட்டுக் ...

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

Posted: 01 Aug 2014 08:49 AM PDT

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! நகைக்கடை விளம்பரம் சுத்தத் தங்கம் சுத்தப் பொய் ! எல்லா வண்ணங்களும் ஒரே வண்ணம்தான் பார்வையற்றோர்களுக்கு ! சேலை சுடிதார் மிடி எதுவும் அழகு அவளுக்கு ! விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் பாவையர் பார்வையில் உள்ளது மின்சாரம் ! அன்றும் இன்றும் உயிர் பலி வாங்குகின்றது காதல் ! உணர்ந்திடுக காட்டுமிராண்டித்தனம் கௌரவக்கொலை ! வசதிகள் இருந்தால் வழிமொழிகின்றனர் காதல் ! முக்காலமும் தொடரும் மூன்று ...

கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!

Posted: 01 Aug 2014 07:24 AM PDT

கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! நன்கொடை : ரூ. 30 பாபுஜி நிலையம், 39A/48, மரக்கடை சாலை, இராணி தோட்டம், நாகர்கோவில்-629 001. ***** முனைவர் வ. அருள்ராஜ் அவர்களின் பதிப்புரை மிக நன்று. அவர் கேட்கும் கேள்விகள் நியாயமானதாக உள்ளது. கச்சத்தீவு என்பது தமிழகத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. தமிழகத்தின் அனுமதி பெறாமலே நடுவணரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது. நம்மால் இலவசமாக வழங்கப்பட்ட கச்சத்தீவு ...

மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...!

Posted: 01 Aug 2014 07:21 AM PDT

- மன்னருக்கு புகழ்ச்சி பிடிக்காது...! - ஆனால், இந்த விஷயத்தை நாடுமுழுவதும் பரப்ப வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளாரே...! - >அ,ரியாஸ் - ----------------------------------- - கொன்று புதைத்து விடுவதாக எதிரி அனுப்பிய ஓலைக்கு பதில் அனுப்பி விட்டீர்களா? - நமது குலவழக்கப்படி 'பிணத்தை எரிக்கத்தான் வேண்டும்'என்று தெவித்து விட்டேன் மன்னா..! - >அ.ரியாஸ் - ---------- ------------------------------------- - கால்கள் திராணி இழந்து விட்டன அமைச்சரே... ஏதாவது பிராணியை பிரியாணி ஆக்குங்கள்..! - >சோலை ...

நிறக்குருடு

Posted: 01 Aug 2014 06:58 AM PDT

மனிதர்களிடையே நிறம்பிரித்து பழகும் பழக்கம் நன்றாக கைகூடிவிட்டன - ஏதும் பார்க்காமல் பழக எங்கோ ஓரிடத்தில நானும் இதை தவற விட்டு விடுகிறேன் - வெளிப்படையாக சொல்ல அரூபமாய் இருக்கிறது - கொஞ்சம் யோசித்தால் சரியாகவே தோன்றுகிறது என்ன சொல்ல - நானாவது இருந்திருக்கலாம் நிறக்குறடாய்,,, - ------------------------------- >அ.விஜய் நிவாஸ் ந.பிச்சமூர்த்தி நினைவாக ...*(கவிதை தொகுப்பு)

உணவே…உணவே! - கவிதை

Posted: 01 Aug 2014 06:57 AM PDT

- அக்டோபர் 16 – உலக உணவு தினம் - நல்ல உணவு உட்கொண்டால் நீண்ட ஆயுள் பெற்றிடலாம் காய்ச்சிய நீரைப் பருகி வந்தால் நோய்கள் இன்றி வாழ்ந்திடலாம் - சுத்தமற்ற உணவுகளை என்றும் உண்ணக்கூடாது அப்படி நாமும் உண்டு விட்டால் நோயை ஒதுக்க முடியாது - சுவைக்கு நாவை அடிமையாக்கி தெருக்களில் விற்கும் உணவுகளை உண்டு நாமும் பழகி விட்டால் கொடிய நோய்கள் தொற்றிடுமே - சத்தான உணவை அன்றாடம் தினமும் சாப்பிட்டுப் பழகி விட்டால் நோயாளி என்றே யாரும் மருத்துவமனை செல்லவேண்டாம்! - ======================================= >ச.பவித்ரா நன்றி; ...

அழகு

Posted: 01 Aug 2014 06:55 AM PDT

-
அனன்யா அம்மா
என்றழைத்த பெண்ணிடம் திரும்பி
ஏதோ சொல்ல வாயெடுத்து
நிறுத்திக் கொண்டேன்
இதைவிட அழகாய்
வேறெப்படி
அழைத்து விட முடியும்?

-
--------------------
>அனிதா (ஆனந்த விகடன்)
-

நீ என்ன தேவதை?

Posted: 01 Aug 2014 06:54 AM PDT

- குரல் வளையில் கால் வைத்து அழுத்தி கோடரியால் அவ்வுடலைத் துண்டாடுவதாக பாவித்து பதறுகிறேன் - உயிர் இருந்தும் எவ்விதத் துடிப்புமின்றி சயனித்துக் கிடக்கிறது அந்த மரம் - தங்கம், வெள்ளி, இரும்புக் கோடரிகளை அவனுக்கே பரிசாகத் தந்த வன தேவதையை நேரில் பார்த்தால் கேட்டிருப்பேன் - கோடரிகளே இல்லாத மனிதனாக அவனை மாற்றிடும் மதிக்கூர்மை இல்லாத நீயெல்லாம் என்ன தேவதை..? - ------------------------- >இரா.பூபாலன் (ஆனந்த விகடன்)

திருவிழாவில் தொலைந்தவன்...

Posted: 01 Aug 2014 06:53 AM PDT

திருவிழாக்கு வந்த ஒரு தேவதைதான் அவளா...? தாவணிக்குள் புகுந்துகொண்ட செந் தாமரை மலரா...? கால்முளைத்து நடந்துவரும் மின்னும் தங்கத் தேரா...? என் இளமை வெல்லத் திட்டமிடும் மன்மதனின் போரா...? படையெடுக்கும் அவளழகால்... என்னை வெல்லுவாள் ! உடையுடுத்த முழுநிலவே... மண் வந்த சேதி சொல்லுவாள் !! சிறுகுழந்தைப் புன்னகையால்... என் மனதை அள்ளுவாள் ! தன் கன்னக் குழிக்குள் செல்லமாக.... என்னைத் தள்ளுவாள் !! அவள் வதனம் பார்த்து நாணி... பூக்களும் தலையைக் கவிழ்க்கும் ! தென்றல் கூட கயிறு திரித்து... ...

ஞானம்

Posted: 01 Aug 2014 06:50 AM PDT

ஞானம் சித்தார்த்தனைப் போல் மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு நடுராத்திரியில் வீட்டைவிட்டு ஓடிப்போக முடியாது என்னால் முதல் காரணம் மனவியும்,குழந்தையும் என்மேல்தான் கால் போட்டுக்கொண்டு தூங்குவார்கள் அவர்கள் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல அப்படியே தப்பித்தாலும் எங்கள் தெரு நாய்கள் எமன்கள் லேசில் விடாது என்னைப் போன்ற அப்பாவியைப் பார்த்து என்னமாய் குரைக்கிறதுகள் மூன்றாவது ஆனால் மிக முக்கியமான காரணம் ராத்திரியே ...

நான் இல்லாத என் வீடு

Posted: 01 Aug 2014 06:33 AM PDT

வெறிச்சோடிக் கிடக்கிறது என்வீடு நீரின்றி இறந்துகொண்டிருக்கும் மரங்களின் இலைகளால் நிறைந்து கிடக்கிறது வாசல். கூரை களவாடப்பட்டு....மழைநீரில் கரைந்துகொண்டிருக்கின்றன சுவர்கள். ஆளுயரத்துக்கு புற்றெடுத்துக் கிடக்கிறது வீட்டின் பின்புறம்.. பழுத்து விழுந்த பழங்களின் விதைகள் முளைத்து நிற்கின்றன பற்றையாய்.... நாய்கள் வந்து சுதந்திரமாய் மலங்கழித்துப் போகின்றன தரையில். எவரையும் காணாத துயரத்தில் இரவு முழுவதும் அழுதுவிட்டு போகிறது நிலவு. அவ்வப்போது அடிக்கும் காற்றில் மூக்கைத்துளைக்கிறது அழுகிய ...

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு)

Posted: 01 Aug 2014 06:30 AM PDT


-

--
"ஏங்க…உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே
கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொல்றாருங்க...!
-
"அதெல்லாம் சும்மாடி"
-
"எதை வச்சி சொல்றீங்க?"
-
"அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற‌
மாப்ள பாக்குறாரு..?"
-
----------------------------------------

ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை

Posted: 01 Aug 2014 05:06 AM PDT

* குழந்தை வளர்ப்பில் பொறுமை மிகவும் அவசியம். நல்லவற்றை திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுக்க வேண்டும். * உன்னையே நீ அடக்கியாள கற்றுக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு கோபத்திற்கு ஆளாவது கூடாது. * கொடுமைக்கு ஆளாகும் போது, நியாயம் உன் பக்கம் இருந்தாலும் கூட பொறுமையை இழந்து விடாதே. * கள்ளம் கபடம் இல்லாத மனதுடன் செய்யும் வழிபாட்டை தெய்வம் ஏற்க மறுப்பதில்லை. * மனிதனின் உள்ளம் முழுமையும் தெய்வ வடிவம் ஏற்கட்டும். அதனால், வாழ்வு புனிதமாகட்டும். - ஸ்ரீஅன்னை

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Posted: 01 Aug 2014 04:40 AM PDT

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா ! அன்பு  நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  ! இவை எல்லாமே ...

மன அழுத்தம் எப்படி உண்டாகிறது?

Posted: 01 Aug 2014 03:41 AM PDT

1936-ல் டாக்டர்.ஹான்ஸ் செல்யி என்பவர் மன அழுத்தத்தால் ஏற்படுகின்ற மாற்றத்தை அறிவியல் பூர்வமாக நிரூபித்தார். அவருடைய பரிசோதனைகளின்படி எலிகளை ஆய்வு கூடத்தில் வைத்து பல்வேறு மன அழுத்தங்களை உண்டாக்குகின்ற சூழ்நிலைகளை அவற்றுக்குக் கொடுத்தார். உதாரணத்திற்கு குளிர் மிகுதியான இடத்தில் விடுதல், மோட்டார் ஓடுகின்ற பெட்டிக்குள் வைத்தல், அதைக் கொல்லப் போவதாக மிரட்டுகிற சூழ்நிலைகளைக் காட்டுதல் போன்ற பரிசோதனைகளை நிகழ்த்தி, அதன் முடிவில் அந்த எலிகள் இறந்ததும் அவற்றைப் பிரேத பரிசோதனை செய்தார். மன அழுத்தம் ...

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Posted: 01 Aug 2014 03:32 AM PDT

மகிழும் தவளைகள்….!!
*
விளையாட்டு காட்டுகிறது பூக்களுக்கு
இரவில் ஒளி சிந்தி மின்மினிகள்
*
இருளில் எவரை வேவு பார்க்கின்றன
இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள்.
*
காதல் கிளிகளின் கூடுகளை
எட்டி.ப்பார்க்கின்றன காக்கைகள்.
*
இரவுமில்லை பகலுமில்லை
நீரில் வாழும் மீன்களுக்கு…
*
மழை நின்றபின் இரவெல்லாம்
கொண்டாட்டம் கத்தி மகிழும தவளைகள்.
*

சுவையான தேனீர்...!!

Posted: 31 Jul 2014 11:17 PM PDT

* சுவையான தேனீர்…!! * இந்திய தேசம் பழம்பெரும் தேசம். இந்தியாவின் ஆட்சி அதிகாரம் முழுமையும் அரசர்களின் கீழ் தான் நடைபெற்று வந்துள்ளன. அக்காலத்திய அரசர்களின் அரண்மனைக் கட்டிடங்கள் மிகுந்த கலைநய வேலைப்பாடுடன், கட்டிடக்கலை நுணுக்கங்களுடன் கட்டப்பட்டுள்ளது. கோட்டையைச் சுற்றி நீர் நிறைந்த அகழி, வலிமையான கற்களால் கட்டப்பட்ட மதில் சுவர்கள், நான்குப் புறமும் வாயில்கள், உள்ளே அகன்ற வீதிகள், அரசபை மண்டபம், அரசருக்காக ஆலோசனைக்கூடம், அரசர், ராணிகள் மற்றவர்க்கென்று தனித்தனி படுக்கையறைகள், தேரோடும் வீதிகள், ...

பாமரர் தேவாரம்

Posted: 31 Jul 2014 09:09 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Posted: 31 Jul 2014 08:57 PM PDT

1.புத்திலிபாய் போர்பந்தர் சமஸ்தானத்தில் திவான் பதவி வகித்தவர் உத்திமசந்திர காந்தி. அவருடைய ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் பிறந்தவர் கரம்சந்திர காந்தி என்று அவரை அழைப்பது வழக்கம். காபா காந்தி ராஜ்காட்டில் திவானாக இருந்தார். புத்திலிபாயை மணந்துகொண்டார். புத்திலிபாய்க்கு ஒரு பெண்ணும் மூன்று பிள்ளைகளும் பிறந்தார்கள். 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம நாளன்று காபா காந்தி–புத்திலிபாயின் கடைசி மகனாகத் தோன்றியவர் மோகன்தாஸ் கரம்சந்திர காந்தி. காபா காந்தி நாணயமும் நேர்மையும் மிகுந்த திவானாக ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (279)

Posted: 31 Jul 2014 08:39 PM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

புகைப்படம் - கவிதை

Posted: 31 Jul 2014 07:27 PM PDT

- - புகைப்படம் எடுத்துக் கொள்வதில் அப்பாவுக்கு அவ்வளவு பிரியம் இருந்தது இல்லை பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தில் கூட அவரைப் பார்த்ததாக நினைவு இல்லை - அவரின் சிறுவயது புகைப்படங்களில் வேறு யாரோ போல இருக்கிறார் - ஃபேஸ்புக்கில் நண்பர்கள் அவரவர் அப்பாக்களுடனான புகைப்படங்களை பகிரும்போது எங்களுக்கு அப்பிடிஒன்று இருந்ததே இல்லை தோன்றுகிறது - அப்பா இறந்து போன மூன்றாம் நாள் அண்ணன் கொண்டு வந்த கண்ணாடி பிரேமுக்குள் சிரிப்பவர் அவ்வளவு நெருக்கமாக இல்லை அப்பாவைப் போல - ------------------------------- >வே.சத்யா ...

என் காதல் சரியோ தவறோ

Posted: 31 Jul 2014 05:17 PM PDT

- படம்: குட்டி இசை: தேவிஸ்ரீ பிரசாத் பாடியவர்: கேகே - ========================== என் காதல் சரியோ தவறோ என் காதல் முள்ளோ மலரோ என் காதல் முதலோ முடிவோ சகியே Feel my love என் காதல் வெயிலோ நிழலோ என் காதல் இனிப்போ கசப்போ என் காதல் நிறையோ குறையோ சகியே Feel my love என் காதல் சிலையோ கல்லோ என் காதல் சிறகோ சருகோ என் காதல் வலியோ சுகமோ வெறுத்தோம் பிடித்தோம் அடித்தோம் அணைத்தோம் Feel my love Feel my love Feel my love Feel my love - (என் காதல்..) - நான் தந்த பூவை எல்லாம் வீசும்போது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™